CHAPTER-17

Oviya Blessy

Member
Jan 4, 2025
46
0
6
ம‌ய‌க்க‌த்திலிருந்து க‌ண்விழித்த‌ ச‌ந்ரா, த‌ன்னுடைய‌ அறையின் மெத்தையில் ப‌டுத்திருப்ப‌தை உண‌ர்ந்து மெல்ல‌ பார்வையை சுழ‌ல‌விட‌, த‌ன் அருகில் த‌ன்னுடைய‌ க‌ர‌ம் ப‌ற்றி அம‌ர்ந்திருந்த‌ அர்ஜுனை பார்த்த‌தும் அதிர்ந்து எழுந்து அம‌ர்ந்தாள்.

அதை பார்த்து திடுகிட்ட‌ அர்ஜுன், "ச‌ந்ரா என்ன‌ ஆச்சு?" என்று அவ‌ள் க‌ன்ன‌ம் தொட‌ வ‌ர‌, உட‌னே வில‌கி அம‌ர்ந்த‌வ‌ள் ப‌ய‌த்துட‌ன் அவ‌னை பார்க்க‌, அதில் புரியாம‌ல் அவ‌ளை பார்த்த‌ அர்ஜுன், "என்ன‌ ஆச்சு ச‌ந்ரா? ஏ இப்பிடி ப‌ய‌ப்ப‌டுற‌?" என்று அவ‌ள் க‌ன்ன‌ங்க‌ளில் ப‌ட‌ர்ந்திருந்த‌ முடியை வில‌க்கி அவ‌ள் க‌ன்ன‌ம் ப‌ற்ற‌, அப்போதும் அவ‌னைவிட்டு வில‌க‌வே எண்ணிய‌வ‌ள், "அர்ஜுன் நா இங்கிருந்து போக‌ணும்." என்று கூறி எழுந்து செல்ல‌, ச‌ட்டென்று அவ‌ள் க‌ர‌ம் ப‌ற்றிய‌வ‌ன், "எங்க‌ போக‌ணும்?" என்று அழுத்த‌மாக‌ கேட்டான்.

அதை கேட்டு அதிர்ந்து திரும்பிய‌வ‌ள், அவ‌ன் முக‌ம் பார்க்க‌, அவ‌ளின் க‌ர‌த்தை இறுக‌ ப‌ற்றிக்கொண்ட‌ப‌டி த‌ன் ப‌க்க‌ம் இழுத்த‌ அர்ஜுன், அதில் முன் வ‌ந்த‌ அவ‌ள் கூந்த‌லை மெல்ல‌ வில‌க்கி ஒதுக்கிய‌ப‌டி, அவ‌ளை இர‌ச‌னியாய் பார்த்து, "என்ன‌விட்டு எங்க‌ போக‌ணுன்னு நெனைக்கிற‌ ச‌ந்ரா?" என்று கேட்க‌,

அதை கேட்டு உத‌ற‌ல் எடுத்த‌வ‌ள், "அ..அது வ‌ந்து நா.." என்று கூறிய‌ப‌டி மீண்டும் எழுந்து செல்ல‌, அவ‌ளின் க‌ர‌த்தை வேக‌மாக‌ த‌ன் ப‌க்க‌ம் இழுத்த‌வ‌ன், "என்ன‌விட்டு உன்னால‌ எங்க‌யும் போக‌ முடியாது. இது என்னோட‌ எட‌ம். இங்க‌ நா ராஜா, நீதா என்னோட‌ ராணி." என்று அவ‌ள் க‌ன்ன‌ம் த‌ட்டி கூற‌, "என்கூட‌ வா. என்னோட‌ எட‌த்துல‌ உன்ன‌ ராணியாக்குறேன்." என்று கூறிய‌ உத‌யாவின் வார்த்தைக‌ளே அவ‌ள் நினைவ‌டுக்கில் வ‌ந்து நின்ற‌து.

மேலும் அர்ஜுன், "இங்க‌ என்னோட‌ அனும‌தி இல்லாம‌, உன்னால‌ எங்க‌யும் போக‌ முடியாது. போக‌வும் விட‌மாட்டேன்." என்றான் அழுத்த‌மாக‌.

அதை கேட்டு அவ‌ளின் ப‌ய‌ம் அதிக‌ரிக்க‌, இப்போது த‌ன் முன் இருப்ப‌வ‌ன் முழு உத‌யாவாக‌வே அவ‌ள் க‌ண்க‌ளுக்கு தெரிந்தான்.

அப்போது அர்ஜுன், "க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌ணுன்னு ஆச‌ப்ப‌ட்ட‌ல்ல‌? வா ப‌ண்ணிக்க‌லாம். ஒட‌னே ப‌ண்ணிக்க‌லாம்." என்று கூறி எழ, அவ‌ளோ அதை கேட்டு மேலும் ப‌த‌றி அவ‌னை பார்ப்ப‌த‌ற்குள், அவ‌ளை தூக்கி த‌ன் கையில் ஏந்தியிருந்தான் அர்ஜுன்.

அதில் அதிர்ந்த‌வ‌ள், "அர்ஜுன் என்ன‌ கீழ‌ விடு." என்று துள்ளி கூற‌,

அவ‌னோ ச‌த்த‌மாக‌ சிரித்த‌ப‌டி, "நீதான‌ க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌ணுன்னு ஆச‌ப்ப‌ட்ட‌? வா ஒட‌னே ப‌ண்ணிக்கலாம்." என்று அடாவ‌டியாய் அவ‌ளை தூக்கிக்கொண்டு சென்றான்.

அதில் அவ‌னிட‌மிருந்து த‌ப்பிக்க‌ போராடிய‌வ‌ள், "அர்ஜுன் என்ன‌ விடு. அர்ஜுன் விடு." என்று துள்ள‌, அவ‌னோ ச‌ற்றும் அவ‌ள் க‌த‌ற‌லை க‌ண்டுக்கொள்ளாம‌ல் அவ‌ளை தூக்கி செல்ல‌, "என்ன‌ விடு அர்ஜுன்...!" என்று க‌த்திய‌ப‌டி எழுந்து அம‌ர்ந்தாள் ச‌ந்ரா.

அப்போதே தான் இன்னும் மெத்தையில் இருப்ப‌தை உண‌ர்ந்த‌வ‌ள், ப‌ய‌த்துட‌ன் மூச்சு வாங்கிய‌ப‌டி பார்வையை சுழ‌ல‌விட‌, அப்போதே அந்த‌ அறை க‌த‌வை திற‌ந்த‌ப‌டி உள்ளே நுழைந்த‌ அர்ஜுன், "என்ன‌ ஆச்சு ச‌ந்ரா? ஏ க‌த்துன‌?" என்று ப‌த‌ற்ற‌த்துட‌ன் அவ‌ள் அருகில் வ‌ர‌, அவ‌ளோ ப‌ய‌ந்து பின்னால் த‌ள்ளி அம‌ர்ந்துக்கொண்டு, இத‌ற்கு முன்பு ந‌ட‌ந்த‌ அனைத்தும் க‌ன‌வா என்று யோசிக்க‌, அத‌ற்குள் அவ‌ள் அருகில் வ‌ந்து அம‌ர்ந்த‌வ‌ன், "ச‌ந்ரா என்ன‌ ஆச்சு?" என்று அவ‌ள் க‌ன்ன‌ம் தொட‌ முய‌ற்சிக்க‌, அதில் ப‌ய‌ந்து வில‌கிய‌வள், க‌ன‌வில் வ‌ந்த‌துப்போல‌வே ந‌ட‌க்கிற‌தென்று மேலும் ப‌ய‌ந்தாள்.

அவ‌ள் செய‌லில் மேலும் குழ‌ம்பிய‌வ‌ன், "என்ன‌ ஆச்சு ச‌ந்ரா? ஏ திடீர்னு ம‌ய‌ங்கி விழுந்த‌? இப்ப‌ எதுக்கு இப்பிடி பிஹேவ் ப‌ண்ற‌?" என்று கேட்க‌,

அத‌ற்கும் ப‌ய‌ந்து ந‌டுங்கிய‌ப‌டி பின்னே சென்று க‌ட்டிலின் சாய்வில் சாந்துக்கொண்ட‌வ‌ள், அவ‌ன் முக‌ம் பார்க்க‌ ம‌றுக்க‌, அதை பார்த்து மேலும் அவ‌ள் அருகில் வ‌ந்து அம‌ர்ந்த‌ அர்ஜுன், "ச‌ந்ரா! என்ன‌ ஆச்சு? ஏ இப்பிடி ப‌ய‌ப்ப‌டுற‌?" என்று அவ‌ளை தொட‌ முய‌ற்சிக்க‌, "என்ன‌ தொடாத‌ அர்ஜுன்." என்று ந‌டுங்கிய‌ப‌டியே கூறினாள்.

அதை கேட்டு த‌ன் கையை வில‌க்கிய‌வ‌ன், "செரி தொட‌ல‌. நீ மொத‌ல்ல‌ ரிலேக்ஸ் ஆகு." என்று கூறி குழ‌ப்ப‌த்துட‌ன் வில‌கி அம‌ர்ந்தான்.

அப்போதே அவ‌ளின் ப‌த‌ற்ற‌ம் ச‌ற்று குறைய‌, அதை பார்த்த‌வ‌ன், "இப்ப‌வாவ‌து சொல்லு. உன‌க்கு என்ன‌ ஆச்சு? எங்க‌ போயிருந்த‌? எதுக்காக‌ இப்பிடி பிஹேவ் ப‌ண்ற‌?" என்று புரியாம‌ல் கேட்க‌,

அத‌ற்கு அவ‌ள் ப‌தில் கூறாம‌ல் ப‌த‌ற்ற‌த்துட‌னே அம‌ர்ந்திருக்க‌, "ச‌ந்ரா என்ன‌ ஆச்சு? எதையாவ‌து பாத்து ப‌ய‌ந்திட்டியா?" என்று அவ‌ள் அருகில் வ‌ர‌, மேலும் வில‌கி அம‌ர்ந்துக்கொண்டாள் ச‌ந்ரா.

அதை பார்த்து மீண்டும் வில‌கிய‌வ‌ன், "செரி நீ எதையோ பாத்து ப‌ய‌ந்திருக்க‌ன்னு நெனைக்கிறேன். நீ மொத‌ல்ல‌ ரிலேக்ஸா ரெஸ்ட் எடு. நா உங்கிட்ட‌ அப்ற‌ம் வ‌ந்து பேசுறேன்." என்று கூறி எழ‌, அப்போதும் அவ‌ள் ப‌த‌ற்ற‌த்துட‌னே அம‌ர்ந்திருப்ப‌தை பார்த்த‌வ‌னுக்கு, ஏனோ இப்ப‌டியே விட்டு செல்ல‌ ம‌ன‌ம் வ‌ர‌வில்லை.

மீண்டும் அவ‌ள் அருகில் அம‌ர்ந்து, "உன‌க்கு என்ன‌ ஆச்சு ச‌ந்ரா? எதாவ‌து பிர‌ச்ச‌னையா? எதா இருந்தாலும் எங்கிட்ட‌ சொல்லு." என்றான் அக்க‌றையாக‌.

அதை கேட்ட‌ அவ‌ளோ ப‌த‌ற்ற‌த்துட‌ன் எதையோ யோசித்துக்கொண்டே இருக்க‌, அதை பார்த்த‌வ‌ன், "ஏ இப்பிடி ந‌டுங்குற‌? ஒட‌ம்பு எதாவ‌து செரியில்லையா?" என்று அவ‌ள் நெற்றி தொட‌ முய‌ற்சிக்க‌, ச‌ட்டென‌ அவ‌ன் க‌ர‌த்தை த‌ட்டிவிட்ட‌ப‌டி ப‌த‌ற்ற‌த்துட‌ன் அம‌ர்ந்திருக்க‌, அவ‌ளின் இந்த‌ வில‌க‌ல் அவ‌னுக்கு ஏதோ நெருட‌லாக‌வே இருந்த‌து. ஆனாலும் இப்பொதைக்கு த‌ன் அருகாமை அவ‌ளுக்கு பிடிக்க‌வில்லை என்ப‌து ம‌ட்டும் புரிய‌, அவ‌ளை த‌னிமையில் விட்டுவிட‌ எண்ணி அமைதியாக‌ அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டான்.

அதை பார்த்த‌ ச‌ந்ராவிற்கோ, ச‌ற்று முன் தான் க‌ன‌வில் க‌ண்ட‌வ‌னுக்கும் இவ‌னுக்கும் ப‌ல‌ வித்தியாச‌ங்க‌ள் தெரிய‌, இவ‌ன் உண்மையிலேயே உத‌யாதான‌ என்ற‌ ச‌ந்தேக‌மும் எழுந்த‌து. அன்று அசுர‌னாக‌ இர‌த்த‌ வெள்ள‌த்தை ஓட‌ வைத்த‌ அவ‌னா இன்று அமைதியின் ரூப‌மாய் இருக்கிறான் என்ற‌ குழ‌ப்ப‌த்தில் யோசித்த‌வ‌ளுக்கு ஏனோ த‌ன் க‌ண்முன்னே இற‌ந்துப்போன‌ ஆதியின் முக‌ம் வ‌ந்து நிற்க‌, அப்போதே அனைத்து ச‌ந்தேக‌ங்க‌ளையும் தூக்கி தூர‌ போட்ட‌வ‌ள், "இல்ல‌. நா தேவ‌ல்லாம‌ எதையும் யோசிக்க‌வே கூடாது. இவ‌ந்தா உத‌யா. இவ‌ந்த‌ என் ஆதியை கொன்ன‌வ‌ன். அப்ற‌ம் இவ‌ந்தா என் காத‌ல‌ எங்கிட்ட‌ இருந்து பிரிச்ச‌வ‌ன். அத‌ ம‌ட்டும் ம‌ற‌ந்துறாத‌ ச‌ந்ரா." என்று த‌ன‌க்குள்ளே கூறிக்கொண்ட‌வ‌ள், "ஆனா விதி ஏ என்ன‌ இப்பிடி ஒரு நெல‌மைக்கு கொண்டு வ‌ந்து விட்டிருக்கு? என் வாழ்க்கையில‌ நா யார‌ அதிக‌மா வெறுக்குற‌னோ, அவ‌னையே எதுக்காக‌ நா காப்பாத்த‌ணும்? யாருகிட்ட‌ இருந்து ஓடணுன்னு நென‌ச்ச‌னோ, அவ‌ன்கிட்டையே எதுக்காக‌ வ‌ந்து சேர‌ணும்? அந்த‌ சாமிஜி எதுக்காக‌ அப்பிடி சொன்னாரு? இவ‌ன‌ எதுக்காக‌ என‌க்கான‌ உயிருன்னு சொன்னாரு? இல்ல‌ நாந்தா அப்பிடி த‌ப்பா புரிஞ்சுகிட்ட‌னா?" என்று த‌ன‌க்குள் ப‌ல‌ கேள்விக‌ளை எழுப்பிக்கொண்டிருந்தவ‌ளுக்கு த‌லையே வ‌லிக்க‌ ஆர‌ம்பிக்க‌, அவ‌ளின் அறை க‌த‌வை த‌ட்டிக்கொண்டு உள்ளே நுழைந்தாள் வேலைக்கார‌ பெண் க‌ம‌லா.

அவ‌ளை பார்த்த‌தும் அனைத்து குழ‌ப்ப‌ங்க‌ளையும் ஓர‌ம் போட்டுவிட்டு நேராக‌ அம‌ர்ந்துக்கொண்ட‌வ‌ள், அந்த‌ பெண்ணை கேள்வியுட‌ன் பார்க்க‌, அப்போது அந்த‌ பெண், "அர்ஜுன் த‌ம்பி இத‌ உங்க‌கிட்ட‌ குடுக்க‌ சொன்னாருமா." என்று கூறி அவ‌ளுக்கு மாற்றிக்கொள்ள‌ உடையும் பேஸ்ட் பிர‌ஷ் ம‌ற்றும் அணிக‌ல‌ங்க‌ளையும் அவ‌ள் முன் வைத்தார்.

அதை பார்த்த‌ ச‌ந்ராவிற்கு அர்ஜுனுடைய‌ இந்த‌ அக்க‌றையும் எரிச்ச‌லையே தூண்ட‌, அதை ச‌ற்றும் முக‌த்தில் காட்டாம‌ல் சிறு புன்ன‌கையுட‌ன், "செரி நா பாத்துக்குறேன்." என்றாள்.

அதை கேட்ட‌ அவ‌ளும் ச‌ரியென்று கூறிவிட்டு செல்ல‌ முய‌ற்சிக்க‌, பிற‌கு மீண்டும் திரும்பி அவ‌ளை பார்த்து, "வேற‌ எதாவ‌து வேணுமாம்மா?" என்று கேட்க‌,

அத‌ற்கு அவ‌ளும், "ம்ம் ஆமா. என‌க்கு த‌ல‌ ரொம்ப‌ வ‌லிக்குது. காபி ம‌ட்டும் போட்டு கொண்டு வ‌ர்றீங்க‌ளா?" என்று க‌னிவாக‌ கேட்க‌,

அத‌ற்கு அவ‌ளும், "ம்ம் செரிம்மா. இதோ போட்டு கொண்டு வ‌ர்றேன். நீங்க‌ ஃபிர‌ஷ் ஆகிட்டு வாங்க‌." என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

பிற‌கு அவ‌ள் வைத்துவிட்டு போன‌ உடையை எடுத்துக்கொண்டு குளிய‌ல‌றைக்குள் நுழைந்த‌வ‌ள், அடுத்த‌ 15 நிமிட‌த்தில் குளித்துவிட்டு வெளியில் வ‌ந்தாள். அப்போது க‌ண்ணாடியின் முன்பு வ‌ந்து நின்ற‌வ‌ள் அன்னிச்சையாக‌ த‌ன்னை மேலும் கீழுமாக‌ பார்க்க‌, இந்த‌ சிக‌ப்பு நிற‌ சுடிதாரில் த‌ன்னை பார்த்த‌வ‌ளுக்கு, அன்று பூர்வ‌ ஜென்ம‌த்தில் த‌ன் திரும‌ண‌த்தின் போது ஆதி த‌ன‌க்காக‌ வாங்கி வ‌ந்த‌ சிவ‌ப்பு நிற‌ புட‌வையே நினைவிற்க் வ‌ந்த‌து. ஆதிக்கு மிக‌வும் பிடித்த‌ நிற‌ம் சிவ‌ப்பு. அதோடு அமிர்த்தாவை சிவ‌ப்பு நிற‌ ஆடையில் பார்த்துவிட்டால் போதும், அவ‌ன் க‌ண்க‌ள் என்றுமே வேறு ப‌க்க‌ம் திரும்பாது. த‌ன் ஆசை தீர‌ த‌ன்ன‌வ‌ளை இர‌சித்துக்கொண்டே இருப்பான்.

அவ‌ற்றை நினைத்து பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவ‌ளின் இத‌ழ்க‌ள் தானாய் புன்ன‌கைக்க‌, அடுத்த‌ நொடி அந்த‌ நினைவிலிருந்து வெளி வ‌ந்து அது க‌ன‌வென்று உண‌ர்ந்த‌தும் அவ‌ள் க‌ண்க‌ள் க‌ல‌ங்கிய‌து. அப்ப‌டியே த‌ன் க‌ண்க‌ளை மூடிக்கொண்டு ஆதியின் முக‌த்தை நினைத்து பார்த்த‌வ‌ள், "நீ எங்க இருக்க‌ ஆதி? நா உன்ன‌ எப்ப‌ பாப்பேன்? நீன்னு நென‌ச்சு இந்த‌ உத‌யாகிட்ட‌ வ‌ந்து மாட்டிகிட்டேன். இவ‌ங்கிட்ட‌ இருந்து எப்பிடி த‌ப்பிக்க‌ போற‌ன்னு என‌க்கு தெரிய‌ல‌. த‌ப்பிக்க‌ முடியுமான்னுக்கூட‌ தெரிய‌ல‌. ஆனா உன்ன‌ ஒரு தெட‌வ‌ ம‌ட்டும் பாத்துட்டா போதும். அதுக்க‌ப்ற‌ம் எல்லாத்தையும் நா ச‌மாளிச்சிருவேன்னு தோனுது." என்று கூறிய‌ப‌டி க‌ண்க‌ளை திற‌க்க‌, அப்போது அவ‌ள் முன் காபியுட‌ன் நின்றாள் க‌ம‌லா.

அவ‌ளை பார்த்து ந‌ன்றி என்று க‌ண்க‌ளாலே கூறிவிட்டு, அந்த‌ காபியை எடுத்து மெல்ல‌ குடித்தாள். அப்போது அவ‌ள் முக‌ம் பார்த்தே அவ‌ளின் ம‌ன‌தை ப‌டித்த‌வ‌ர், "என்ன‌மா? உன‌க்குன்னு இப்போ யாருமே இல்ல‌னு க‌வ‌ல‌ப்ப‌டுறியா?" என்று அவ‌ள் த‌லையை ஆத‌ர‌வாக‌ கோத, அதை கேட்டு அவ‌ரை அதிர்ச்சியுட‌ன் பார்த்தாள் ச‌ந்ரா.

அத‌ற்கு க‌ம‌லா, "எல்லாம் கேள்விப்ப‌ட்டேன்மா. ரொம்ப‌ வ‌ருத்த‌மா இருந்துச்சு. ஆனா நீ ஒன்னு க‌வ‌ல‌ப்ப‌டாத‌. உன‌க்கு தொணையா அந்த‌ காளி தேவி எப்ப‌வும் இருப்பாங்க‌. நா உங்க‌ளுக்காக‌ வேண்டிக்கிறேன்." என்றாள்.

அதை கேட்டு திடுக்கிட்ட‌வ‌ள், "என்ன‌? இப்ப‌ என்ன‌ சொன்னீங்க‌?" என்று கேட்க‌,

க‌ம‌லா, "நா கும்புடுற‌ காளி தேவி உன்ன‌ கைவிட‌மாட்டாங்க‌ன்னு சொன்னேன். உன்னோட‌ எல்லா ச‌ந்தோஷ‌மும் சீக்கிர‌மே திரும்ப‌ வ‌ரும்." என்று கூற‌, அதை கேட்ட‌ பிற‌கே பூர்வ‌ ஜென்ம‌த்தில் ஆதியை முத‌லில் பார்த்த‌ நிக‌ழ்வு அவ‌ள் நினைவிற்கு வ‌ந்த‌து. ஒரு விசேஷ‌ பூஜைக்காக‌ அமிர்த்தாவின் அம்மாவுடைய‌ தோழி, அவ‌ளின் குடும்ப‌த்தையே அந்த‌ கோவிலுக்கு அழைத்து சென்றிருந்தார். அந்த‌ பூஜையில் ஒவ்வொருவ‌ராக‌ அம்ம‌னுக்கு ஆர‌த்தி எடுத்துக்கொண்டிருக்க‌, இறுதியில் அமிர்த்தா எடுக்கும்போது கை த‌வ‌றி அவ‌ற்றை விட்டுவிடும் வேளையில், ச‌ரியாக‌ அவ‌ற்றை தாங்கி பிடித்து மேலே தூக்கி கொடுத்தான் ஆதி. அப்போதுதான் அவ‌னை முத‌ல் முத‌லாக‌ பார்த்தாள் அமிர்த்தா.

அவ‌ற்றை நினைவுக்கூர்ந்த‌வ‌ளுக்கு மேலும் க‌ண்க‌ள் க‌ல‌ங்கிவிட‌, அவ‌ள் க‌ண்ணீரை துடைத்துவிட்ட‌ க‌ம‌லா, "க‌வ‌ல‌ப்ப‌டாத‌ம்மா. இன்னிக்கு ப‌க்க‌த்துல‌ இருக்குற‌ காளி தேவி கோவில்ல‌ ஒரு பெரிய‌ பூஜை இருக்கு. அங்க‌ போனா உன் ம‌ன‌சுல‌ இருக்குற‌ பார‌மெல்லாம் கொற‌ஞ்சு, ம‌ன‌சு லேசாயிரும். நீ முய‌ற்சி ப‌ண்ணி பாரு." என்று கூற‌, அதை கேட்ட‌ ச‌ந்ராவிற்கு ஏனோ இது சிவ‌ப்பெருமான் த‌ன‌க்காக‌ காட்டும் வ‌ழி என்றே தோன்றிய‌து. அங்கு ஆதியை நிச்ச‌ய‌ம் ச‌ந்திக்க‌ முடியும் என்றும் அவ‌ள் ஆழ் ம‌ன‌து ஆணித்த‌ன‌மாய் ந‌ம்பிய‌து.

என‌வே ம‌கிழ்ச்சியுட‌ன் க‌ம‌லாவை பார்த்து, "என‌க்கும் அங்க‌ போக‌ணும் போல‌தா இருக்கு. நீங்க‌ என்ன‌ அங்க‌ கூட்டிட்டு போவீங்க‌ளா?" என்று கேட்க‌,

அதை கேட்டு ம‌கிழ்ந்த‌வ‌ர், "நிச்ச‌ய‌மாம்மா. இருங்க‌ நா போய் அர்ஜுன் த‌ம்பிகிட்ட‌ கேட்டுட்டு வ‌ர்றேன்." என்று கூறி செல்லும்போது, ச‌ரியாக‌ எதிரில் வ‌ந்து நின்றான் அர்ஜுன்.

அவ‌னை பார்த்த‌ ச‌ந்ராவிற்கு அதிர்ச்சியாக‌ இருக்க‌, அவ‌ர்க‌ள் இருவ‌ரையும் கேள்வியுட‌ன் பார்த்த‌ அர்ஜுன், "என்ன‌ எங்கிட்ட‌ கேக்க‌ணும்?" என்று கேட்க‌,

அத‌ற்கு க‌ம‌லா, "இல்ல‌ த‌ம்பி, ச‌ந்ரா காளி தேவி கோவிலுக்கு போக‌ணுன்னு ஆச‌ப்ப‌டுறாங்க‌, நா அவ‌ங்க‌ள் கூட்டிட்டு போயிட்டு வ‌ர‌ட்டுமா?" என்று கேட்க‌,

அத‌ற்கு அவ‌ன், "இல்ல‌ இல்ல‌. அவ‌ எங்கையும் வ‌ர‌மாட்டா. ஏற்க‌ன‌வே வெளிய‌ போயிட்டு வ‌ந்துதா, இவ‌ ரொம்ப‌ ஸ்ட்ரேஞ்சா பிஹேவ் ப‌ண்றா. திரும்ப‌வும் வெளிய‌ போற‌து என‌க்கு செரியா ப‌ட‌ல‌." என்றான்.

அதை கேட்டு ப‌த‌றி முன் வ‌ந்த‌ ச‌ந்ரா, "இல்ல‌ அர்ஜுன். ஐய‌ம் ஓகே. என‌க்கு ஒன்னும் இல்ல‌. நா இவ‌ங்க‌க்கூட‌ போயிட்டு வ‌ந்த‌ர்ற‌னே?" என்று ம‌ன‌தில் கொழுந்துவிட்டு எரியும் கோப‌த்தை ம‌றைத்துக்கொண்டு கெஞ்சினாள்.

அதை கேட்டு அவ‌ளை புரியாம‌ல் பார்த்த‌ அர்ஜுன், "ச‌ந்ரா நீ இதுக்கு முன்னாடி எங்க‌ போயிட்டு வ‌ந்த‌ன்னே இன்னும் எங்கிட்ட‌ சொல்ல‌ல‌. அதுவும் இல்லாம‌ நீ வெளிய‌ போயிட்டு வ‌ந்த‌துல‌ இருந்து உன் பிஹேவிய‌ரே செரியில்ல‌. அப்பிடி இருக்கும்போது திரும்ப‌ நா எப்பிடி வெளிய‌ அனுப்புவ‌ன்னு நெனைக்கிற‌?" என்று கேட்க‌,

ச‌ந்ரா, "நீ யாருடா என‌க்கு அனும‌தி குடுக்குற‌துக்கு?" என்று ம‌ன‌திற்குள் எண்ணிய‌வ‌ள், பிற‌கு அவ‌னிட‌ன், "இல்ல‌ அர்ஜுன். நா ப‌க்க‌த்துல‌ இருக்குற‌ கோவிலுக்குதா போயிருந்தேன். வ‌ர்ற‌ வ‌ழியில‌ ஒரு ஏக்ஸிட‌ன்ட்ட‌ பாத்துட்ட‌னா, அதா அந்த‌ மாதிரி பிஹேவ் ப‌ண்ணிட்டேன். ஐய‌ம் சாரி. ப்ளீஸ் என்ன‌ இவ‌ங்க‌க்கூட‌ போக‌ விடேன்?" என்று கெஞ்சி கேட்க‌,

அப்போது அர்ஜுன் க‌ம‌லாவை ஒரு பார்வை பார்க்க‌, அதை புரிந்துக்கொண்ட‌ அவ‌ரும், "செரி நீங்க‌ பேசிகிட்டிருங்க‌, என‌க்கு கொஞ்ச‌ம் வேலை இருக்கு." என்று கூறி அங்கிருந்து சென்றுவிட்டார்.

அதை பார்த்த‌ ச‌ந்ரா அவ‌ரை அழைக்க‌ கையை உய‌ர்த்தும் முன் அவ‌ற்றை த‌ன் ப‌க்க‌ம் இழுத்தவ‌ன், "எங்கிட்ட‌ பேசு ச‌ந்ரா. உன‌க்கு என்ன‌ ஆச்சுன்னு சொல்லு. கால‌ங்காத்தால‌ சொல்லாம‌ கொல்லாம‌ எங்க‌ போன‌?" என்றான்.

அவ‌ன் த‌ன்னை தொட்ட‌வுட‌ன் தீயால் சுட்ட‌துப்போல் உண‌ர்ந்த‌ ச‌ந்ரா, அவ‌ற்றை க‌டின‌ப்ப‌ட்டு த‌ன‌க்குள் ம‌றைத்து, "நா ஏற்க‌ன‌வே சொல்லிட்டேன் அர்ஜுன். நா கோவிலுக்குதா போயிருந்தேன், அதோட‌ வ‌ர்ற‌ வ‌ழியில‌ ஒரு ஏக்ஸிட‌ன்ட்ட‌ பாத்த‌துனால‌தா அப்பிடி ந‌ட‌ந்துகிட்டேன்." என்று கூற‌,

அர்ஜுன், "அப்போ க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌லான்னு சொன்ன‌து?" என்று கேட்க‌,

அதை கேட்டு திடுகிட்ட‌வ‌ள் அமைதியாக‌ அவ‌னை பார்க்க‌, அத‌ற்கு அர்ஜுன், "சொல்லு ச‌ந்ரா. எதுக்கு அவ்ளோ அவ‌ச‌ர‌மா நாம‌ க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌லான்னு சொன்ன‌?" என்று கேட்க‌,

அத‌ற்கு ச‌ந்ரா, "அ..அது.. வ‌..வ‌ந்து..." என்று த‌டுமாற‌,

அர்ஜுன், "வீட்டுக்கு வ‌ந்து எல்லாத்தையும் தெளிவா சொல்ற‌ன்னு சொன்ன‌. ஆனா வ‌ந்த‌வொட‌னே ம‌ய‌ங்கி விழுந்த‌, இப்போ திரும்ப‌ எங்க‌யோ போக‌ணுன்னு அட‌ம்புடிக்கிற‌. ஆக்ச்சுவ‌லா உன‌க்குள்ள‌ என்ன‌தா ஓடிகிட்டிருக்கு? நீ என்ன‌ யோசிக்கிற‌?" என்று கேட்க‌,

"உன்ன‌ கொல்ல‌ணும்னுதா யோசிக்கிறேன்." என்று அவ‌ள் ம‌ன‌தில் எண்ண‌, அவ‌ள் தோள்க‌ளை ப‌ற்றி உலுக்கி, "என‌க்கு ப‌தில் சொல்லு. உன் ம‌ன‌சுல‌ என்ன‌தா ஓடிகிட்டிருக்கு? எதுக்காக‌ இப்பிடி அட‌ம்புடிச்சுகிட்டிருக்க‌? என்ன‌ சாதிக்க‌ணுன்னு நெனைக்கிற‌?" என்று கேட்க‌,

அத‌ற்கு ச‌ந்ரா த‌ன‌க்குள் உள்ள‌ அத்த‌னை கோப‌த்தையும் க‌டின‌ப்ப‌ட்டு அட‌க்கிக்கொண்டிருந்த‌ப‌டி, இப்பொதைக்கு இவ‌னை எவ்வாறு ச‌மாளிப்ப‌து என்றே யோசித்தாள். ஆனால் அவ‌னோ விடாம‌ல் த‌ன‌க்கான‌ ப‌திலை கேட்டுக்கொண்டிருக்க‌, அவ‌ன் க‌ர‌ங்க‌ளை தட்டிவிட்ட‌ப‌டி, "என் அப்பாவுக்காக அர்ஜுன்." என்றாள் ச‌த்த‌மாக‌.

அதை கேட்டு அவ‌ளை கேள்வியுட‌ன் பார்த்த‌வ‌ன், "புரிய‌ல‌." என்றான்.

ச‌ந்ரா, "கால‌ங்காத்தால‌ சொல்லாம‌ கொல்லாம‌ எதுக்கு போன‌ன்னு கேட்ட‌ல்ல‌? ஏன்னா என் க‌ன‌வுல‌ என் அப்பா வ‌ந்தாரு அர்ஜுன். உன் ச‌த்திய‌த்த‌ எப்ப‌ காப்ப‌த்துவ‌ன்னு கேட்டாரு. அத‌ ப‌த்தி யோசிச்சு கொழ‌ம்பி போய்தா, நிம்ம‌திக்காக‌ கோவிலுக்கு போனேன். அப்போ நீ தூங்கிக்கிட்டிருந்த‌. அத‌னால‌தா உன்ன‌ எழுப்ப‌ல‌." என்று பொய்க‌ளை அடுக்கினாள்.

அதை கேட்டுக்கொண்டிருந்த‌ அர்ஜுனும், "அப்போ ஃபோன்ல‌ பேசும்போது, யாரோ வ‌ர‌ போறாங்க‌, ந‌ம்ப‌ள‌ பிரிச்சிருவாங்க‌ன்னு சொன்ன‌?" என்று கேட்க‌,

அத‌ற்கு ச‌ந்ரா, "அ..அது... ஏற்க‌ன‌வே ந‌ம்ப‌ள‌ சுத்தியிருக்குற‌ எல்லாரையும் யாரோ ஒருத்த‌ன் கொன்னுகிட்டிருக்கான். அவ‌ன்தா வ‌ந்திருவான்னு சொன்னேன். அதுக்குள்ள‌ நாம‌ க‌ல்யாண‌ம் ப‌ண்ணிகிட்டாக‌ணுன்னு சொன்னேன் அவ்ளோதா." என்று ச‌மாளித்தாள்.

அவ‌ள் பொய்க‌ளை ந‌ம்பிய‌ அர்ஜுனும், "செரி அப்போ அதுக்காக‌தா ஒட‌னே க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌லான்னு அட‌ம்புடிச்சியா?" என்று கேட்க‌,

ச‌ந்ரா, "ஆமா. நா வ‌ர்ற‌ வ‌ழியில‌ அந்த‌ ஏக்சிட‌ன்ட்ட‌ பாத்த‌தும், என‌க்கு என் அப்பாவோட‌ ஏக்சிட‌ன்ட்டுதா க‌ண்ணு முன்னாடி வ‌ந்துச்சு. அத‌னால‌தா நா ரொம்ப‌ ப‌ய‌ந்துட்டேன். அத‌ன‌லாதா உன‌க்கு கால் ப‌ண்ணி உன்ன‌ அப்பிடி ஃபோர்ஸ் ப‌ண்ணேன்." என்றாள்.

அதையும் ந‌ம்பிய‌ அர்ஜுன், "செரி அதா கோவிலுக்கு போயிட்டு வ‌ந்துட்டியே. இப்போ திரும்ப‌ எதுக்காக‌ கோவிலுக்கு போக‌ணுன்னு அட‌ம்புடிக்கிற‌?" என்று கேட்க‌,

அத‌ற்கு என்ன‌ கூறி ச‌மாளிப்ப‌தென்று தெரியாம‌ல் அவ‌ள் திண‌ற‌, "அங்க‌ போனா நென‌ச்ச‌தெல்லாம் ந‌ட‌க்கும்னு க‌ம‌லாக்கா சொன்னாங்க‌ளா?" என்று அர்ஜுனே எடுத்து கொடுக்க‌, அதை கேட்ட‌வ‌ளும் உட‌னே ஆம் என்று த‌லையாட்டிவிட்டாள்.

அதை கேட்டு அவ‌ள் க‌ன்ன‌ம் ப‌ற்றிய‌வ‌ன், "இப்ப‌ எதுக்கு ச‌ந்ரா தேவ‌ல்லாம‌ இதெல்லாம்? நாந்தா உன்ன‌ க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்கிற‌ன்னு ச‌த்திய‌ம் ப‌ண்ணிட்ட‌ல்ல‌? இன்னும் இந்த‌ க‌ல்யாண‌ம் ந‌ட‌க்குமா ந‌ட‌க்காதான்னு ப‌ய‌ப்ப‌டுறியா? மொத‌ல்ல‌ ரிலேக்ஸா இரு. உன் அப்பாவுக்கு நாம‌ குடுத்த‌ ச‌த்திய‌த்த க‌ண்டிப்பா நெற‌வேத்துவோம். அதுல‌ எந்த‌ பிர‌ச‌னையும் வ‌ராது. அதுவும் உன் ஆச‌ப்படி உட‌னே நாம‌ க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌லாம்." என்று கூற‌, அவ‌ளுக்கே ப‌கீரென்றுதான் இருந்த‌து.

"அப்போ உன‌க்கு ச‌ந்தோஷ‌ந்தான‌? ரிலேக்ஸா இருப்ப‌ல்ல‌? மொத‌ல்ல‌ ந‌ம்ப‌ க‌ல்யாண‌த்த‌ ப‌த்தி அதிக‌மா யோசிக்கிற‌த‌ விடு. அது க‌ண்டிப்பா ந‌ல்ல‌ப‌டியா ந‌ட‌க்கும்." என்று கூற‌, "அதுதான் என்னோட‌ ப‌ய‌மே." என்று எண்ணிய‌ப‌டி அவ‌ள் அவ‌னை பார்க்க‌, அவ‌ள் பார்வையில் உள்ள‌ ப‌ய‌த்தை உண‌ர்ந்த‌ அர்ஜுன், "என்ன‌ ச‌ந்ரா? இன்னும் ப‌ய‌ப்ப‌டுறியா? செரி உன் ஆச‌ப்ப‌டியே, அந்த‌ காளி கோவிலுக்கு போ." என்று கூறிய அடுத்த‌ நொடி ம‌கிழ்ந்த‌வ‌ள், "ஆனா த‌னியா இல்ல‌ நானும் வ‌ருவேன்." என்று அவ‌ன் கூறிய‌தும் முக‌ம் வாடுனாள். ஆனால் எப்ப‌டியோ போனால் ச‌ரியென்றுதான் அவ‌ளுக்கு நிம்ம‌தியாக‌ இருந்த‌து.

"அதோட‌ ந‌ம்ப‌ க‌ல்யாண‌ தேதியையும் அங்க‌யே வெச்சு குறிச்சுட்டு வ‌ந்த‌ர‌லாம்." என்றான் அர்ஜுன்.

அதை கேட்ட‌ அவ‌ளுக்கோ ப‌த்து இடிக‌ள் மொத்த‌மாக‌ அவ‌ள் மேல் இற‌ங்கிய‌துப்போல் இருக்க‌, அவ‌னை அதிர்ந்து பார்த்தாள். அப்போது அர்ஜுன், "இப்ப‌ ச‌ந்தோஷ‌ந்தான‌? இனிமே அத‌ நென‌ச்சு ப‌ய‌ப்ப‌ட‌ மாட்டியே?" என்று கேட்க‌, அத‌ற்கு அவ‌ளின் த‌லை தானாக‌ இட‌ வ‌ல‌மாக‌ ஆடிய‌து.

அதை பார்த்து நிம்ம‌தியுட‌ன் புன்ன‌கைத்த‌வ‌ன், "செரி ரெடியாயிட்டு கீழ‌ வா. நாம‌ போலாம்." என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.

அதை கேட்டு இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாத‌ ச‌ந்ரா, "ஆர‌ம்ப‌த்துல‌ தெரியாம‌ த‌ப்பு ப‌ண்ணேன், இப்போ தெரிஞ்சே த‌ப்பு ப‌ண்ணிகிட்டிருக்கேன். எல்லாம் என்னோட‌ ஆதி வ‌ர்ற‌ வ‌ரைக்கும் ம‌ட்டுந்தா. அதுக்க‌ப்ற‌ம் நா யாருன்னு உன‌க்கு காட்டுறேன் அர்ஜுன்." என்று த‌ன‌க்குள் கூறிக்கொண்டாள்.

பிற‌கு ச‌ந்ரா கோவிலுக்கு செல்ல‌ தயாராகி வ‌ந்தாள். அர்ஜுனும் த்யாராகிவிட‌, இருவ‌ரும் சேர்ந்து அருகில் உள்ள‌ காளி கோவிலுக்கு சென்ற‌ன‌ர். அங்கே பூஜை ஆர‌ம்ப‌ம் ஆகும் முன், அர்ஜுனும் ச‌ந்ராவும் காளியின் த‌ரிச‌ன‌த்திற்க்காக‌ க‌ருவ‌றை முன் சென்று, க‌ண்க‌ளை மூடி ம‌ன‌திற்க்குள் வேண்டிக்கொண்டார்க‌ள்.

அப்போது அர்ஜுன் க‌ண்க‌ளை மூடிய‌ப‌டி, "எங்க‌ வாழ்க்கையில‌ எவ்வ‌ள‌வோ புய‌ல் வீசிருச்சு. அதுல‌ இருந்து மீண்டு வ‌ர‌ நீங்க‌தா எங்க‌ளுக்கு ச‌க்தி குடுக்க‌ணும்." என்று வேண்டிக்கொண்டிருக்க‌,

இங்கு ச‌ந்ரா, "என் வாழ்க்கையில‌ வீசுன‌ அந்த‌ புய‌லுக்கு நா நிச்ச‌ய‌ம் ப‌ழி வாங்குவேன். அதுக்கு நீங்க‌தா என‌க்கு ச‌க்தி குடுக்க‌ணும்." என்று வேண்டிக்கொண்டாள்.

அப்போது அர்ஜுன், "வாழ்க்கையில‌ முத‌ல் முறையா ஒரு பொண்ண‌ காத‌லிக்க முய‌ற்சி ப‌ண்ண‌ போறேன். அதுவும் உங்க‌ முன்னாடி இந்த‌ நிமிஷ‌த்துல‌ இருந்து. அவ‌ளுக்கு என்னோட‌ காத‌ல் எப்ப‌வும் ச‌ந்தோஷ‌த்த‌ ம‌ட்டுந்தா குடுக்க‌ணும். அவ‌ளுக்கு வ‌ர்ற‌ எல்லா க‌ஷ்ட‌மும் என‌க்கே வ‌ந்து சேர‌ணும்." என்று வேண்டிக்கொண்டான்.

இங்கு ச‌ந்ரா, "என்னோட‌ இந்த‌ காத‌ல் ப‌ய‌ண‌ம். இந்த‌ ஜென்ம‌த்துலையாவ‌து நிறைவ‌டைய‌ணும். நா என்னோட‌ ஆதிய‌ ச‌ந்திக்க‌ணும். அதுக்கு நீங்க‌தா அருள் புரிய‌ணும்." என்று வேண்டிக்கொண்டு க‌ண்க‌ளை திற‌க்க‌, அதே நேர‌ம் அர்ஜுனும் க‌ண்க‌ளை திற‌ந்தான்.

அப்போது அர்ஜுன் வ‌ர‌வ‌ழைத்திருந்த‌ ப‌ண்டித‌ர் அங்கு வ‌ந்து, "ந‌ல்ல‌ நேர‌ம் ஆர‌ம்பிச்சிருச்சு, நாம‌ க‌ல்யாண‌த்துக்கு தேதி குறிச்சிற‌லாமா?" என்று கேட்க‌,

அர்ஜுன், "ஹா ச‌ரி." என்றான்.

பிற‌கு மூவ‌ரும் ஒரு விரிப்பில் அம‌ர‌, அங்கு அக்க‌ம் ப‌க்க‌ம் இருந்த‌ அர்ஜுனுக்கு தெரிந்த‌ சில‌ பெரிய‌வ‌ர்க‌ள் ம‌ற்றும் பூஜைக்கு வ‌ந்த‌ பெரிய‌வ‌ர்க‌ள் ஆசீர்வாத‌த்துட‌ன் அர்ஜுன் ம‌ற்றும் ச‌ந்ராவின் திரும‌ண‌ தேதி குறித்தாயிற்று. இந்த‌ மாத‌மே திரும‌ண‌ம் என்று முடிவாயிற்று. ச‌ந்ராவிற்கு அதுதான் வேண்டும் என்று அர்ஜுன் நினைத்தான். ஆனால் ச‌ந்ராவோ ச‌ற்றும் இங்கு க‌வ‌ன‌ம் இல்லாம‌ல் சுற்றியும் பார்வையை சுழ‌ல‌விட்ட‌ப‌டி யாரையோ தேடிக்கொண்டே இருந்தாள்.

அத‌ன் பிற‌கு ம‌கா பூஜை ஆர‌ம்ப‌ம் ஆக‌, ஆர‌த்தி பாட‌லும் ஆர‌ம்ப‌ம் ஆன‌து. அப்போது ஒவ்வொருவ‌ராக‌ காளி தேவிக்கு ஆர‌த்தி காட்டிக்கொண்டிருக்க‌, அடுத்த‌தாக‌ ஆர‌த்தியை ச‌ந்ரா வாங்கினாள். அப்போதே க‌ண்க‌ளை மூடி ந‌ன்கு வேண்டிக்கொண்ட‌வ‌ள், "பூர்வ‌ ஜென்ம‌த்துல‌ என் ஆதிய‌ ச‌ந்திக்க‌ வெச்ச‌து நீங்க‌தா. அதே மாதிரி இன்னிக்கும் என் ஆதிய‌ என் க‌ண்ணுல‌ காட்டுங்க‌ காளி தாயே! உங்க‌ள‌ ந‌ம்பித்தா நா இவ்ளோ தூர‌ம் வ‌ந்திருக்கேன். என்ன‌ ஏமாத்திராதீங்க‌." என்று கூறி ஆர‌த்தி எடுக்க‌ துவ‌ங்கினாள்.

அப்போது பூர்வ‌ ஜென்ம‌த்தில் இதேப்போல் காளி தேவிக்கு ஆர‌த்தி எடுத்த‌ நிக‌ழ்வு அவ‌ள் க‌ண்முன் வ‌ர‌, அதில் குழ‌ம்பிப்போய் த‌டுமாறிய‌வ‌ளின் கைக‌ள் ந‌டுங்கி அந்த ஆர‌த்தி த‌ட்டை த‌வ‌ர‌விடும் முன், அவ‌ற்றை தாங்கி தூக்கி பிடித்த‌து ஒரு க‌ர‌ம்.

அதை பார்த்த‌வ‌ளுக்கோ அன்று தூக்கிய‌ அதே க‌ர‌ம் மீண்டும் க‌ண்முன் தெரிய‌, அதே ச‌ம்ப‌வ‌ம் மீண்டும் ந‌ட‌க்கின்ற‌தென்று ம‌கிழ்ந்த‌வ‌ளின் பார்வை மெல்ல‌ உய‌ர‌, அப்போதே தெரிந்த‌து அர்ஜுனின் முக‌ம்.

அதை பார்த்து எரிச்ச‌ல‌டைந்த‌வ‌ள், "இவ‌ன் எதுக்காக‌ எடையில‌ வ‌ர்றான்?" என்ற‌ப‌டி முணுமுணுக்க‌, அவ‌ள் கையிலிருந்த‌ ஆர‌த்தி த‌ட்டை வாங்கிக்கொண்ட‌ அர்ஜுன், "விடு இப்ப‌ நா காட்டுறேன்." என்று கூறி அவ‌ற்றை த‌ன் கையில் வாங்கினான்.

அப்போது அவ‌ற்றை அவ‌னிட‌ம் எரிச்ச‌லுட‌ன் கொடுத்துவிட்டு, "எல்லாம் முடிஞ்ச‌து. இவ‌ன் இருக்குற‌ வ‌ரைக்கும் என் ஆதிய‌ நா பாக்க‌ முடியாது." என்ற‌ வாட‌லுட‌ன் அவ‌ள் திரும்ப‌, திடீரென்று அவ‌ள் மீது மோதினான் ஒருவ‌ன்.

அதில் த‌டுமாறிய‌வ‌ள், "ஐய‌ம் சோ சாரி." என்ற‌ப‌டி வில‌குவ‌த‌ற்குள், அவ‌ள் க‌ண்க‌ளுக்கு ஆதியின் நினைவுக‌ள் அத்த‌னையும் க‌ண்முன் வ‌ர‌, அதில் திடுக்கிட்டு நின்ற‌வ‌ளை மேலும் தாங்கி பிடித்து, "ஆர் யூ ஓகே? நீங்க‌ ஓகேதான‌?" என்றான் அவ‌ன்.

அதை கேட்டு ஆதியின் நினைவுக‌ள் அனைத்தையும் க‌ண்முன்னே பார்த்துக்கொண்டிருந்த‌வ‌ள், மிகுந்த‌ அதிர்ச்சியுட‌ன் த‌ன் பார்வையை நிமிர்த்த, அப்போதே தெரிந்த‌து அவ‌ன் முக‌ம்.

அப்போதே தான் எடுத்து முடித்த‌ ஆர‌த்தியை ம‌ற்றொருவ‌ர் கையில் கொடுத்த‌ அர்ஜுன், திரும்பி ச‌ந்ராவை பார்த்து, "ச‌ந்ரா! போலாமா?" என்று கேட்க‌,

அதில் அனைத்தும் சித‌றி திடுக்கிட்ட‌ ச‌ந்ரா அவ‌னை பார்க்க‌, அவ‌ள் குழ‌ப்ப‌ முக‌ம் பார்த்த‌ அர்ஜுன், "என்ன‌ ஆச்சு?" என்று கேட்க‌,

அவ‌ளோ த‌ன்னை மோதிய‌ அவ‌னுடைய‌ முக‌த்தையே விய‌ப்புட‌ன் பார்த்துக்கொண்டிருக்க‌, அவ‌னை திரும்பி பார்த்த‌ அர்ஜுன், "ஹலோ எக்ஸ்கியூஸ் மீ?" என்று கூற‌,

அதில் திடுக்கிட்ட‌வ‌ன் அவ‌னை பார்க்க‌, ச‌ந்ராவும் அர்ஜுனை பார்த்தாள்.

அப்போது அர்ஜுன், "என்ன‌ ஆச்சு ச‌ந்ரா? போலாமா?" என்று அவ‌ளை பார்த்து கேட்க‌, அவ‌ளும் அதே அதிர்ச்சி மாறாம‌ல், "ம்ம்" என்று கூறி திரும்பி த‌ன்ன‌ மோதிய‌ அவ‌னையே பார்த்தாள்.

அதை பார்த்து அவ‌ன் ப‌க்க‌ம் திரும்பிய‌ அர்ஜுன், "கொஞ்ச‌ம் வ‌ழி விடுறீங்க‌ளா மிஸ்ட‌ர்.." என்று கூறும் முன்,

"அபி. அபிஷேக்" என்றான் அவ‌ன்.

அதை கேட்ட‌ அர்ஜுன், "வாட்டெவ‌ர். கொஞ்ச‌ம் வ‌ழிவிடுங்க‌ ப்ளீஸ்." என்று கூறி ச‌ந்ராவின் க‌ர‌ம் ப‌ற்றி அவ‌ளை அழைத்துக்கொண்டு அவ‌னை க‌ட‌ந்து செல்ல‌, அப்போதும் அபிஷேக்கையே விய‌ப்புட‌ன் பார்த்த‌ ச‌ந்ரா, "இவ‌ந்தா என்னோட‌ ஆதி." என்றாள்.

- ஜென்ம‌ம் தொட‌ரும்...
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-17
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.