மகேஷிடம் எப்படியாவது நன்றாக பேசி பழகி அவனை வைத்து வெளியில் செல்லவோ அல்லது வெளி உலக நபர்களை தொடர்பு கொள்ளவோ ஏதாவது வழி கிடைக்கும் என்று நினைத்த தேன்மொழிக்கு இறுதியில் ஏமாற்றம் மட்டுமே கிட்டியது.
அதனால் அவள் சோகமாக உள்ளே செல்ல, அவளுக்கு எதிரில் வந்த ஜானகி அவள் தனியாக எங்கேயோ சென்று விட்டு வருவதால்,
“எங்க வெளிய இருந்து வர்ற?
போர் அடிக்குதுன்னு இந்த பேலசை சுத்தி பாக்க போனியா மா?” என்று கேட்க,
“இல்ல மேடம், மகிழன் கூட கார்டன் ஏரியால விளையாடிட்டு இருந்தேன்.
அவன் பல்லு விழுந்துருச்சுன்னு ஃபீல் பண்ணிட்டு இருந்தான்.
சும்மா மண்ணுல புதைத்து வச்சா சீக்கிரம் வளர்ந்திடும்ன்னு சொன்னேன்.
அதான் உடனே நான் சொன்ன மாதிரி புதைச்சு வச்சுட்டு சாமி கிட்ட வேண்டுகிறேன் என்று கோயிலுக்கு போய் இருக்கான்.” என்று சிறு புன்னகையுடன் சொன்னாள் தேன்மொழி.
அதனால் சரி என்ற ஜானகி உள்ளே செல்ல போக, திடீரென தேன்மொழியின் மண்டையில் ஒரு ஐடியா பளிச்சிட்டது.
அதனால் உடனே “ஒரு நிமிஷம் மேடம்!” என்று சென்று கொண்டிருந்த ஜானகியை அவள் அழைக்க, என்ன என்பதைப் போல அவளை திரும்பி பார்த்தாள் ஜானகி.
“இந்த வீடு.. இல்ல இல்ல பேலஸ் ரொம்ப அழகா இருக்கு.
நான் இனிமே எப்படியும் இங்க தான் இருக்க போறேன்னு முடிவாயிடுச்சு.
அதான் அட்லீஸ்ட் இந்த இடத்தையாவது சுத்தி பார்த்து இங்க வாழ்றதுக்கு பழகிக்கலாமேன்னு தோணுது.
பட்.. எங்க பார்த்தாலும் பாடி கார்ட்ஸ்சா இருக்காங்களா.. சோ தனியா யார் கிட்டயும் சொல்லாம இந்த வீட்டுக்குள்ள சுதந்திரமா நடமாடறதுக்கு கூட எனக்கு பயமா இருக்கு.
நீங்க எனக்கு பர்மிஷன் கொடுத்தீங்கன்னா நான் இந்த பேலஸை full ஆ சுத்தி பார்க்கலாமா?” என்று அவள் தயக்கத்துடன் கேட்க,
அவளைப் பார்த்து அன்புடன் புன்னகைத்த ஜானகி “நான் தான் ஆல்ரெடி சொன்னேன்ல இது உன் வீடு மா.
நீ இந்த வீட்டோட மூத்த மருமக. உனக்கு இந்த வீட்டுக்குள்ள எங்க வேணாலும் போறதுக்கு ரைட்ஸ் இருக்கு.
அதுக்கெல்லாம் நீ யார் கிட்டயும் பர்மிஷன் கேட்கணும்னு அவசியமில்லை.
புதுசா நீ இங்க வந்திருக்கிறதால உனக்கு கொஞ்சம் awkwardஆ feel ஆச்சுன்னா, நீ உன் கூட கிளாராவை கூட்டிட்டு போ.
இரு, ஒரு நிமிஷம்.. நானே அவள வர சொல்றேன்.” என்ற ஜானகி ஹாலில் இருந்த இன்டர்காம் ஒன்றை எடுத்து கிளாராவின் அறைக்கு கால் செய்தாள்.
அதை பார்த்துக் கொண்டு இருந்த தேன்மொழி “ஓஹோ.. இது தான் இன்டர்காமா!
இன்னைக்கு தான் இதையெல்லாம் நான் கண்ணுல பார்க்கிறேன்.
இந்த அம்மாவுக்கு அந்த கிளாராவை தவிர வேற யாரும் கண்ணுக்கு தெரிய மாட்டாங்க போல.
இவளுக்கு அந்த நான்சியே பரவால்ல. எனக்கு இவ மூஞ்சிய பாத்தாலே அப்படியே அடிக்கலாம் போல இருக்கு.
ஆனா அவ பார்க்கவே நல்லா ஜிம் பாடியா இருக்கா.
நான் அடிச்சா, கடுப்பாகி கண்டிப்பா அவளும் என்னை திருப்பி அடிச்சுருவா.
நம்ம இங்க ஏற்கனவே கூண்டுக்குள்ள கிளி மாதிரி தான் இருக்கோம்.
இதுல அவ கையால வேற அடி வாங்கி சாகனுமா?” என்று நினைத்த தேன்மொழி கிளாராவை பற்றி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்து விட்டாள்.
ஜானகி கால் செய்த அடுத்த இரண்டாவது நிமிடத்தில் அங்கே வந்த கிளாரா மரியாதையுடன் தேன்மொழியை பார்த்து
“உங்க ரூம்லயும் இதே மாதிரி ஒரு இன்டர்காம் இருக்கு மேடம்.
நீங்க என் கூட வாங்க, முதல்ல அதை யூஸ் பண்ணி எப்படி மத்தவங்களுக்கு கால் பண்றதுன்னு நான் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறேன்.
அண்ட் அங்க ஒவ்வொரு ரூமோட நம்பரும் ஒரு கார்ட்ல எழுதி இருக்கும். நீங்க தேவைப்பட்டா அதை ரெஃப்பர் பண்ணிக்கலாம்.” என்று சொல்லி அவளை நேராக அர்ஜுனனின் அறைக்கு அழைத்து சென்றாள்.
அங்கே அர்ஜுனுக்கு ட்ரெஸ்ஸிங் செய்து அந்த நாளுக்கான ஜெனரல் செக்கப் எல்லாம் செய்து முடித்தாகி இருக்க,
டாக்டர் ஒருவர் அங்கே இருந்த ஒரு ஆண் மற்றும் பெண் நர்சுகளிடம் அன்றைய நாளுக்கான இன்ஸ்ட்ரக்ஷன்களை கொடுத்துக் கொண்டிருந்தார்.
அதை கவனித்தபடி கிளாராவுடன் தேன்மொழி உள்ளே செல்ல,
அவளைப் பார்த்து மரியாதையுடன் புன்னகைத்த டாக்டர் “Happy married life Mrs Arjun!
நீங்க வந்த நேரம் அவருக்கு சீக்கிரம் சரியாயிடும்னு நாங்க நம்புறோம்.
நீங்க தான் எங்க எல்லாரோட கடைசி நம்பிக்கை.” என்று ஆங்கிலத்தில் சொல்ல,
இருந்த கோபத்தில் தேன்மொழிக்கு அவரிடம் பதில் பேசக் கூட பிடிக்கவில்லை.
அதனால் ஒரு formalityக்கு அவரைப் பார்த்து சிரித்துவிட்டு இன்னும் கோமாவில் அசைவின்றி கிடந்த அவளது கணவன் என்ற அதிகாரத்துடன் இருக்கும் அர்ஜுனை பார்த்தாள்.
இப்போது அவன் பேஷண்டுகள் உடுத்தும் லூசான சாதாரண ஆடையைத்தான் அணிந்திருந்தான்.
ஆனால் அப்போதும் கூட அவனது கரிஷ்மா குறையாமல் அப்படியே இருக்க, “யாருயா நீ? கோமால இருக்கும்போது கூட இப்படி இருக்க!
இந்த மாதிரி ஒரு ட்ராஜடிக்கு நடுவுல நான் உங்க லைஃப்ல வராம இருந்திருந்தா, கண்டிப்பா நான் உங்களை பார்க்கிற பார்வையே வேற மாதிரி இருந்திருக்கும்.
மேபி நீங்க கட்டாம என் கழுத்துக்கு வந்த இந்த தாலி, நீங்க யாருன்னு எனக்கு தெரிஞ்சதுக்கு அப்புறம், நான் உங்களை பத்தி புரிஞ்சுகிட்டதுக்கு அப்புறமா..
நம்ம ரெண்டு பேரோட சம்மதத்தோட உங்க கையால என் கழுத்துல நீங்க கட்டியிருந்தா, ஒருவேளை இந்த கல்யாணத்தை நான் ஏத்துக்க ஒரு சான்ஸ் இருந்திருக்கும்.
ஆனா இனிமே அதுக்கெல்லாம் வாய்ப்பில்லை. நான் என்னமோ அனிமல் மாதிரியும், உங்க வீட்ல இருக்கிறவங்க உங்களை எனக்கு ஓனர் ஆக்?கி இங்க வச்சு வளக்கறதுக்கு முடிவு பண்ணி யாருக்கும் தெரியாம தூக்கிட்டு வந்த மாதிரியும் தான் இருக்கு எனக்கு.
இவங்க எல்லாரும் நீங்க கோவமாவுல இருந்து எந்திரிச்சிட்டா எல்லாம் சரியாயிடும்னு நினைக்கிறாங்க.
ஆனா எனக்கு என்னமோ இப்ப நீங்க நார்மல் ஆனதுக்கு அப்புறம் தான் ரியல் பிராப்ளமே ஸ்டார்ட் ஆகும்னு தோணுது.
என்ன மாதிரியே நீங்களும் இந்த ரிலேஷன்ஷிப் வேண்டாம் என்று நினைச்சா கூட, இவங்க யாரும் கேட்க மாட்டாங்க.
அப்ப கண்டிப்பா இங்க ஒரு பிராப்ளம் வரும். ஆனா அந்த மாதிரி எல்லாம் நடக்குறதுக்கு முன்னாடியே நான் இங்க இருந்து வெளிய போயிடனும்னு நினைக்கிறேன் அர்ஜுன்.” என்று நினைத்த தேன்மொழி கிளாராவை பார்த்தாள்.
அந்தப் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்த கிளாரா தேன் மொழியை அழைத்து சென்று இன்டர்காமை எப்படி பயன்படுத்துவது என்று சொல்லிக் கொடுத்தாள்.
பின் அவளை தன்னுடனே அழைத்துச் சென்று கிட்டத்தட்ட 20 அடுக்குகள் கொண்ட அந்த பல்லாயிர ஸ்கொயர் மீட்டர் அளவு கொண்ட பிரம்மாண்ட பேலஸை அவளுக்கு சுற்றி காட்டினாள்.
அதன் அழகும் ஆடம்பரமும் இந்த உலகத்தில் அழகான இடங்கள் என்று சொல்லப்படும் எதனுடனும் ஒப்பிட முடியாத அளவிற்கு பார்ப்பதற்கே கண்களை பறித்து அவளை வியப்பிற்கு உள்ளாகும் விதத்தில் இருந்தது.
அந்த வீட்டின் தலைமை எஜமானரின் மனைவியாக அந்த வீட்டில் தங்க இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது, கண்டிப்பாக யாராக இருந்தாலும் அதை ஏற்றுக் கொண்டால் தான் என்ன? என்று ஒரு நொடியேனும் யோசிப்பார்கள்.
ஆனால் நாம் தேன்மொழி மிகவும் சாதாரணமானவள். அவளது ஆசைகளும் சரி, எதிர்பார்ப்புகளும் சரி எப்போதும் சாதாரணமாக தான் இருந்திருக்கிறது.
அந்த எதிர்பார்ப்புகளுக்குள் அவள் தன்னையும் மீறி தனது குடும்பத்தை தான் எப்போதும் முன்னிலைப்படுத்தி இருக்கிறாள்.
அப்படி இருக்கும்போது அவர்கள் இல்லாத இந்த இடத்தில், தன்னை நினைத்து அவர்கள் இப்போது வருந்தி கொண்டு இருப்பார்கள் என்று தெரிந்தும், இந்த ஏகபோகத்தை எல்லாம் எப்படி அவள் அனுபவிக்க முடியும் ?
அதனால் தன்னை தங்க குண்டிற்குள் ஒரு கிளியாகவே உணர்ந்த தேன்மொழி “நான் நெனச்சதை விட இந்த இடம் ரொம்ப பெருசா இருக்கு.
இங்க மட்டும் சுத்தி கேமரா இல்லன்னா, இந்த பேலஸ்குள்ளயே நான் யாருக்கும் தெரியாம ஒரு இடத்துல போய் ஒளிஞ்சிகிட்டா யாராலும் என்னை கண்டுபிடிக்க முடியாது.
ஆனா என்ன பண்றது? எப்படியோ நான் இவங்க கிட்ட வந்து கைதியா சிக்கிட்டேன்.
என்ன இவங்க கல்யாணம் என்ற பேர்ல அர்ஜுன் தலையில கட்டி வச்சு, இந்த வீட்டு மருமகள்னு ஒரு டேக் லைன் கொடுத்து டீசன்டான கைதியா எல்லா வசதிகளோட என்ன இங்க அடைச்சு வச்சிருக்காங்க.
இதுல அந்த ஜானகி அம்மா வேற.. இது என் வீடு இங்க நான் சுதந்திரமா எல்லா பக்கமும் போலாம்னு சொல்லி கடுப்பேற்றறாங்க.
இங்க இந்த வீட்டுக்குள்ள எங்க வேணாலும். ஆனா இந்த வீட்டை விட்டு போகணும்னு நான் நினைக்க கூடாது அப்படித் தானே!
ச்சே.. இதெல்லாம் என்ன வாழ்க்கையோ!
தெரு நாயை பார்க்கும்போது எல்லாம், பணக்கார வீட்ல வளர்க்கிற நாய் எவ்ளோ சந்தோஷமா இருக்கு..
அதுக்கு எல்லாமே டைமுக்கு கிடைச்சிடுது. எதுக்காகவும் அது கஷ்டப்படத் தேவையில்லை என்று இத்தனை நாளா நினைச்சுட்டு இருந்தேன்.
ஆனா இப்ப தான் அதோட கஷ்டம் எனக்கு புரியுது.
இப்படி மத்தவங்க டிசைன் பண்ணி வெச்ச லைஃபை அவங்களுக்கு பிடிச்ச மாதிரி நம்ம வாழ்றதுக்கு,
கிடைச்சதை தின்னுட்டு தெரு நாயாளவே வாழலாம். என்ன விட அந்த நாயோட நிலைமை பெட்டர் தான்.” என்று நினைத்து பெருமூச்சு விட்டாள்.
அங்கே சென்னையில் போலீஸ் ஸ்டேஷனிற்கு தேன் மொழியை காணவில்லை என்று சொல்லி கம்ப்ளைன்ட் கொடுக்க வந்திருந்தவர்களிடம் அனைத்தையும் விசாரித்துவிட்டு அவர்களை அனுப்பி வைத்த சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் உடனே தன் பைக்கை எடுத்துக் கொண்டு பிரபல ரவுடி ஒருவனை காண சென்றான்.
இதற்கிடையில் விஜயாவையும், ஆதவனையும் அழைத்துச் சென்று அவர்களது வீட்டில் விட்டுவிட்டு நேராக கோவிலுக்கு சென்ற உதையா அங்கிருந்த தெய்வங்களிடம் தேன் மொழியை பத்திரமாக தன்னிடம் திருப்பி தரச் சொல்லி பிரார்த்தித்துக் கொண்டு இருந்தான்.
அப்போது அவனுக்கு கால் செய்த அவன் அம்மா “டேய் என்ன டா பண்ணிட்டு இருக்க?
நைட் கூட வீட்டுக்கு வரல! ஆபீஸ் போற ஐடியா இல்லையா உனக்கு?
நீ வீட்டுக்கு வந்த உடனே கிளம்பி ஆபீஸ் போவேன்னு நான் சமைச்சு வச்சுட்டு உனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தா, என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம நீ பாட்டுக்கு மறுபடியும் வெளியே கிளம்பி போயிருக்க!
என்ன நெனச்சிட்டு இருக்க நீ? உன் இஷ்டத்துக்கு வர்ற..
உன் இஷ்டத்துக்கு வீட்டை விட்டு வெளியே போற.. இதுல நீ என்ன பண்ணாலும் உங்க அப்பா வேற என்ன தான் திட்டுறாரு.” என்று தன் கணவனின் மீது இருந்த கோபத்தையும் அவன் மீது கொட்டினாள்.
“அம்மா அப்படியே எதுவும் தெரியாத மாதிரி நடிக்காதீங்க ப்ளீஸ்!
நான் ஏன் இன்னும் வீட்டுக்கு வரல, இப்ப என்ன பண்ணிட்டு இருப்பேன்னு உங்களுக்கு நிஜமா தெரியாதா சொல்லுங்க?
நான் தேன் மொழியை பத்தி அத்தை வீட்டுக்கு போய் விசாரிச்சிட்டு வந்த உடனே எப்படியும் அவங்க உங்களுக்கு கால் பண்ணி சொல்லி இருப்பாங்கன்னு எனக்கு தெரியும்.” என்று சலிப்புடன் சொன்னான் உதையா.
“ஆமா உங்க அத்தை அந்த பொண்ண காணோம்னு சொன்னா.
அதுக்கு நம்ம என்ன பண்றது? அவங்க வீட்டு பொண்ணை காணேம்னா, அவங்கள போய் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுக்க சொல்லு.
போலீஸ்காரங்க என்ன ஏதுன்னு விசாரிச்சு அவளை கண்டுபிடிச்சு கொடுப்பாங்க.
அந்த புள்ள எப்ப கிடைக்குமோ கிடைக்கும். அதுக்கு நம்ம என்ன பண்ண முடியும்?
அந்த பொண்ணு கிடைக்கறதுக்கு இன்னும் ஒரு வாரம் இல்லனா ஒரு மாசம் கூட ஆகும்.
அதுவரைக்கும் அந்த வீடே கதீன்னு உட்கார்ந்து இருப்பியா நீ?
இங்க பாரு உதையா.. நீ பண்றது எதுவும் எனக்கும் உங்க அப்பாவுக்கும் சுத்தமா பிடிக்கல.
அந்த பொண்ணு எல்லாம் ஒரு ஆளுன்னு இத்தனை நாளா நீ அவ பின்னாடி சுத்திட்டு இருந்ததே வேஸ்ட்டு.
நாங்க சொன்னாலும் நீ கேக்கல. இப்ப அவளே காணாம போய் எங்கயோ தொலைஞ்சுட்டா.
போனவ எப்படியோ போய் தொலையட்டும்ன்னு நெனச்சு அவளை தலை முழுக்கிட்டு நான் சொன்ன மாதிரி ஆம்பூர் பக்கத்துல இருக்க ஜுவல்லரி ஷாப் ஓனர் பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆகுற வழிய பாரு.
இந்த மாதிரி சான்ஸ் எல்லாம் எப்பயாவது தான் கிடைக்கும்.
கிடைக்கும்போதே அதை அமைச்சுக்கணும். ஒரு பொண்ணு தனியா போனா, அவளுக்கு என்ன வேணாலும் நடக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கு.
அந்த பொண்ணு காணாம போய் இவ்வளவு நேரம் ஆகுது!
இன்னுமா அவளுக்கு எதுவும் நடக்காம இருக்கும்?
இப்படி ஒரு பொண்ணை லவ் பண்ணனும்னு உனக்கு என்ன தலையெழுத்தா?
எங்க பேச்சைக் கேட்டு இதுதான் சாக்குன்னு அப்படியே அவளையும் அவ குடும்பத்தையும் மறந்துட்டு வந்துறு.” என்று அவன் அம்மா சொல்ல,
மற்ற அனைத்தையும் விட, தேன்மொழிக்கு ஏதாவது தவறாக இந்நேரம் நடந்திருக்கும் என்று தன் அம்மா சொன்னதைத் தான் உதயாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அதனால் ஆத்திரம் பொங்க “ப்ளீஸ் மா, நான் உங்க மேல நிறைய மரியாதை வைத்திருக்கிறேன்!
அதை நீங்களே இப்படி எல்லாம் பேசி கெடுத்துக்காதீங்க.
நம்ம வீட்டிலயும் ஒரு பொண்ணு இருக்கா. நீங்களும் ஒரு பொண்ணுக்கு அம்மாவா இருந்து எப்படி உங்களால இப்படியெல்லாம் பேச முடியுது?
இதுவே நம்ம மகாவுக்கு இப்படி எல்லாம் நடந்திருந்தா அப்ப கூட நீங்க இப்படித்தான் பேசுவீங்களா?
மனுஷங்கண்ணா கொஞ்சமாவது மனசாட்சியோட இருக்கணும் மா.” என்று கோபமாக உதையா சொல்ல,
“டேய் மொதல்ல வாய கழுவு.
அவ உன் கூட பொறந்த தங்கச்சி. அவளுக்கு ஏன் டா இப்படி எல்லாம் நடக்க போகுது?
நீயே உன் வாயால இப்படி எல்லாம் சொல்லலாமா?
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்னு நடக்குதுன்னா சும்மா நடக்கிறது இல்ல.
அவளும் அவள பெத்தவங்களும் என்னென்ன பாவம் பண்ணினார்களோ!
யாருக்கு தெரியும்? அதான் அவளுக்கு இப்படி நடக்குது. என் பொண்ணை நான் என் கண்ணுக்குள்ள வச்சு வளர்த்துட்டு இருக்கேன்.
கண்டவங்க மாதிரி அவளை நான் வேலைக்கு எல்லாம் அனுப்ப மாட்டேன்.
அப்படி அனுப்பனும்ன்னு எனக்கு அவசியமும் இல்ல.” என்று பதிலுக்கு தானும் கோபமாக சொன்னார் அவன் அம்மா.
அவன் அம்மா பேசுவதை கேட்க கேட்க அவனுக்கு கோபம் அதிகமானது.
“இப்படிப்பட்டவங்க கிட்ட நம்ம என்ன பேசினாலும் யூஸ் இல்ல.
தேவை இல்லாம பேசி நம்ம எதுக்கு டைம் வேஸ்ட் பண்ணனும்?
இருந்த டென்ஷன்ல ஆபீஸ்ல வேற லீவ் சொல்லாம விடடுட்டேன். சோ அங்க போய் தான் ஆகணும்.
ஈவினிங் ஆபீஸ்ல இருந்து சீக்கிரமா வந்து தேனை பத்தி ஏதாவது தெரிஞ்சுதான்னு போய் போலீஸ் ஸ்டேஷன்ல விசாரிக்கணும்.” என்று நினைத்த உதையா அவன் அம்மா பேச பேச அந்த அழைப்பை துண்டித்து விட்டான்.
தொடரும்..
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
facebook.com

Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-17
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.