Chapter-16

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
163
0
16
www.amazon.com
இரண்டு நாட்களுக்கு பிறகு..

கடந்த இரண்டு நாட்களாக சின்ன சின்னதாக இசையின் ரெஸ்டாரண்டில் ‌சில மாற்றங்களை செய்த பிரியா,

மொத்தமாக அதன் தலையெழுத்தையே மாற்றி இருந்தாள்.

வந்திருக்கும் கஸ்டமர்கள் அனைவரையும் எக்ஸ்ட்ராவாக ராகுல் உதவியும் கூட,

சமாளிக்க முடியாமல் அவர்கள் திண்டாடிக் கொண்டு இருந்தார்கள்.

அதனால் ஃபிரைட் ரைஸ், நூடுல்ஸ் போன்ற துரித உணவுகளை செய்வதற்காக ஒரு நார்த் இந்திய இளைஞனை வேலைக்கு சேர்த்த இசை,

ஒரு பக்கம் ருசிக்காக அதன் சேல்ஸ் அதிகமாகி இருக்கும்போது,

மற்றொரு பக்கம் தங்களது உடல் நலத்தின் மீது ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் பிரியாவின் சத்தான உணவு வகைகளை பெருமளவில் வாங்கி சுவைக்க தொடங்கி இருந்தார்கள்.

அதனால் ஏற்கனவே ஃப்ரீயா ஐடியா கொடுத்ததை போலவே கடந்த இரண்டு நாட்களில் வந்த பெரும் வருமானத்தை இன்வெஸ்ட் செய்து,

தங்களது ரெஸ்டாரண்டின் முன்னே இருந்த பார்க்கிங் ஏரியாவின் ஒரு ஓரமாக சத்தான உணவுகளுக்கு என்று தனியாக ஒரு ஹெல்த்தி உணவகம் என்ற பெயரில் குட்டி ஸ்டாலை உருவாக்கினான். ‌

அதில் இந்த துறையில் நல்ல எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவர்களை தான் பணி அமர்த்த வேண்டும் என்று பிரியா சொல்லி இருந்ததால்,

நாட்டு மருந்துகளை தயாரிக்கும் ஒருவரை அழைத்து வந்து பிரியாவின் கண்காணிப்பிற்கு கீழ் அவருக்கு சில உணவு வகைகளை சொல்லிக் கொடுத்து தயார் செய்ய வைத்து அந்த ஹெல்த்தி உணவுகள் கொண்ட ஸ்டாலையும் ஒரு பக்கம் வெற்றிகரமாக நடத்த தொடங்கி விட்டார்கள்.

இயற்கையாகவே பிசினஸ் செய்து பழகியவர்களின் ரத்தம் ஓடுவதாலோ என்னவோ..

இந்த சிறு வயதிலும் கூட பிரியா பிசியாக இருக்கும்போது அவளது இடத்தில் இருந்து ராகுல்,

ஆன்லைன் மூலமாக வந்து குவியும் ஆடர்களை கவனித்து கவிதா அக்காவை வைத்து அனைத்தையும் சரியாக பேக் செய்து அனுப்பினான்.

அதை கவனித்த இசை இவனுக்கும் அனைத்தையும் நிர்வகிக்கும் திறமை இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு,

“இனிமே நீ தான் டா நம்ம ரெஸ்டாரண்டுக்கு அசிஸ்டன்ட் மேனேஜர்.

நீ பார்ட் டைம் ஜாப் போகணும்னு சொன்னில..

நான் கூட உன்னை எங்க வேலைக்கு அனுப்புறதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன்.

உனக்கு எல்லாமே நல்லா வருது. பேசாம உங்க அக்காவுக்கு அசிஸ்டன்ட்டா நீ இங்கயே இருந்துரு.

பட் உனக்கு என்ன சேலரி குடுக்கணும்னு மேனேஜரா உங்க அக்கா தான் டிசைட் பண்ணனும்.

நீ இங்க வேலை செய்யும்போது அவள் எதுவும் சொல்லல.

ஆனா உன்னை அசிஸ்டன்ட் மேனேஜரா ஜாயின் பண்ண சொன்னா, அவ என்ன சொல்லுவான்னு தெரியல.

இன்னைக்கு நைட் இதை பத்தி அவ கிட்ட பேசி பார்க்கலாம்.” என்று சொல்ல,

தனக்கு ஒரு வேலை கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் அவனை அணைத்துக்‌ கொண்ட ராகுல் அவன் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து,

“தேங்க்ஸ் அண்ணா, நீங்க எங்களுக்கு பண்ணி இருக்கிற இந்த ஹெல்ப்பை கண்டிப்பா நாங்க சாகுற வரைக்கும் மறக்கவே மாட்டோம்.” என்றான்.‌

“இந்த மாதிரி உங்க அக்கா எனக்கு உம்மா குடுத்திருந்தா நல்லா இருந்திருக்கும்..

இருந்தாலும் மச்சான் கிட்ட இருந்து அன்போட சும்மா இப்படி கிடைக்கிற உம்மாவும் நல்லாதான் இருக்கு..!!”

என்று நினைத்த இசை எங்கே அவன் அதை வெளியில் சொல்லிவிட்டால் தன்னிடம் நல்ல முறையில் பேசிக் கொண்டிருக்கும் ராகுல்,

மீண்டும் வேதாளம் முருங்க மரத்தில் ஏறிய கதையாக அவனிடம் சண்டை போடத் தொடங்கி விடுவானோ என்று நினைத்து,

“பரவால்ல பரவால்ல இதெல்லாம் என் கடமை.

நான் உங்க அக்கா கிட்ட பேசி பாக்கிறேன்.

நீயும் என் கூட சேர்ந்து அவளை கன்வின்ஸ் பண்ற மாதிரி பேசு.

அப்ப‌ தான் அவ ஓகே சொல்லுவா.” என்றான் இசை.

அப்போது அங்கே உள்ளே கிச்சனில் பெரிய அண்டாவை வைத்து பிரியாணியை கிண்டிக் கொண்டு இருந்த ஜீவா உள்ளே இருந்து அவனை வர சொல்லி குரல் கொடுத்ததால்,

“ஓகே ஓகே மச்சான், வேலை முடியட்டும். நம்ம ஃப்ரீ ஆகிட்டு அப்புறம் பேசிக்கலாம்.

வேலை செஞ்சுகிட்டே இருக்கிறதுல சாப்பிட மறந்துறாத.

பிரியாவையும் கூப்ட்டு சாப்பிட சொல்லு.” என்ற இசை வேகமாக,

“டேய் வரேன் டா! கத்தாத இரு.” என்றபடி உள்ளே சென்றான்.‌

அன்று இரவு இசை ராகுலுக்கு வாக்கு கொடுத்ததை போலவே அவனது வேலையை பற்றி பிரியாவிடம் பேசினான்.

அவர்கள் இங்கே வந்ததில் இருந்து இலவசமாக அங்கே தங்குவதையும், சாப்பிடுவதையும், விரும்பாத ராகுல் தங்களுடன் சேர்ந்து வேலை செய்வதை எல்லாம் நினைத்து பார்த்த பிரியா;

“இவன் இங்க கில்ட்டி ஃபீலிங் ஓட நம்ம கூட சேர்ந்து வேலை செய்வதற்கு பதிலா அவனுக்கும் இங்க ஒரு ஜாஃப் இருக்குன்னு திருப்தியா வேலை செய்யட்டும்.

இதுல அவனுக்கு சேலரியும் வரப்போகுது.

அதனால அவனுக்கு ஒரு கான்ஃபிடன்ஸ் கிடைக்கும்னா அது நல்லது தானே..!!

அவனும் இங்க ஒர்க் பண்ணட்டும்.

மந்த் எண்ட்ல இவன் பெர்ஃபார்மன்ஸ் எப்படி இருக்குன்னு பார்த்துட்டு சேலரிய டிசைட் பண்ணிக்கலாம்.” என்றாள்.

“ஆனாலும் இவ ரொம்ப ஸ்ட்ரிக்ட் தான்.

சொந்த தம்பிக்கு கூட பெர்ஃபார்மன்ஸ் பாக்காம சேலரி டிசைட் பண்ண மாட்டேன்னு சொல்றா!

ஆனா இந்த மாதிரி ஒரு பொண்ணு தான் நமக்கு வேணும்.

இவ ஒரு ரேரான டைமண்ட்.

எப்பயும் இவளை பத்திரமா கைக்குள்ள வச்சுக்கணும்.” என்று நினைத்தான் இசை.

மறுநாள் காலை..

காரில் சென்று கொண்டு இருந்த நடுத்தர வயது ஆண் ஒருவர் அருகில் இருந்தவரிடம்,

“என்ன ராமசாமி இந்த ரோட்ல எப்பயும் இல்லாம இன்னிக்கு கூட்டம் ரொம்ப அதிகமா இருக்கு?” என்று குழப்பமாக கேட்க,

“ஐயா.. நேத்து நம்ம தம்பி வச்சிருக்க ஹோட்டல்ல ஒரு பொண்ணு புதுசா வந்து வேலை செய்யுது..

அவள தம்பி மாடியில இருக்கிற வீட்ல தங்க வச்சிருக்காரு.

அவ கூட ஒரு சின்ன பையன் ஒருத்தன் வேற இருக்கான்னு சொன்னேன்ல..” என்று அந்த எடுப்பு கொஞ்சம் இழுத்து இழுத்து பேச,

கடுப்பான அந்த நடுத்தர வயது கொண்ட ஆண் “ஆமா டா அதுக்கு என்ன இப்ப?

இங்க எதுக்கு கூட்டமா இருக்குன்னு கேட்டா, நீ தலைய சுத்தி மூக்க தொட்டுட்டு இருக்க?

நேரா விஷயத்துக்கு வா!” என்றார்.

உடனே அந்த ஆணின் அசிஸ்டன்ட் போன்று இருந்த அந்த நபர்,

“அந்த பொண்ண நம்ம இசை தம்பி கடைக்கு மேனேஜரா வச்சிருக்கிறாராம்.‌

அவ வந்ததுல இருந்து அங்க கடையில வியாபாரம் பிச்சுக்கிட்டு போகுதுன்னு நம்ம பசங்க எல்லாம் சொன்னாங்க.

இங்க நிற்கிற கூட்டம் எல்லாம் நம்ம தம்பி கடைக்கு சாப்பிட வந்தவங்க தான்.‌

முன்னாடி இருந்ததை விட சாப்பாடு சூப்பரா இருக்குதாம்..

விதவிதமா நிறைய குடுக்குறாங்கன்னு என் பொண்ணு கூட நேத்து இங்க அவ ஃபிரண்ட்ஸ் கூட இங்க சாப்பிட்டுட்டு வீட்ல வந்து சொல்லிட்டு இருந்தா!” என்று சொல்ல,

“வேற பொண்ண பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு நான் சொன்னதை கூட கேட்காம அந்த யாழினிய பத்தியே நெனச்சுக்கிட்டு தேவதாஸ் மாதிரி திரிஞ்சுகிட்டு இருந்தவன்..

திடீர்னு ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்து கூடவே வச்சுக்கிட்டு அவள வச்சு இவ்வளவு தூரம் பிசினஸ் டெவலப் பண்ணிக் கிட்டு போறான்னா,

ஏதோ ஒன்னு சரியில்லையே...!!” என்று நினைத்த அந்த நடுத்தர வயது ஆண்,

“இவ்ளோ கூட்டத்தை தாண்டிக்கிட்டு கார்ல இந்த பக்கம் போக முடியாது.

நீ காரை ஓரமா நிறுத்திட்டு வா. நான் அங்க போய் என்ன நடக்குதுன்னு பாக்குறேன்.” என்று சொல்லிவிட்டு தனது கரை வேட்டியை சரி செய்தபடி காரில் இருந்து இறங்கி நடந்து உள்ளே செல்ல தொடங்கினார்.

அவர் அந்த ரெஸ்டாரண்டிற்குள் நுழையும்போது அங்கே புதிதாக சிலர் வேலை பார்ப்பதையும்,

அங்கே திடீரென முளைத்திருந்த குட்டி ஹெல்த்தி ஃபுட் ஸ்டாலையும், மக்கள் அங்கே இருக்கும் உணவுகளை விரும்பி வாங்கி சாப்பிடுவதையும் பார்த்தபடி அவர் உள்ளே சென்றார்.

அப்போது ஒரு தட்டில் அங்கே பிரியாணியை கொண்டு வந்து ஒருவனின் டேபிளில் வைத்த ஜீவா தன் எதிரில் வந்தவரை பார்த்துவிட்டு ஷாக்காகி,

“அப்பா. வாங்கப்பா..!! உள்ள வாங்க..

எல்லாமே சூடா இருக்கு. வந்து சாப்பிடுங்க.” என்று சொல்லி அவரை அழைத்து வந்து காலியாக இருந்த ஒரு டேபிளில் அமர வைத்தான்.‌

பின் “டேய் இசை.. இசை அப்பா வந்திருக்கா டா..!!” என்றபடி ஜீவா கிச்சனுக்குள் செல்ல,

அப்பா என்ற பெயரை கேட்டவுடன் ஆடிப்போன இசை “இப்ப அந்த ஆளு எதுக்கு டா இங்க வந்தாரு?” என்று கேட்டபடி வெளியில் எட்டிப் பார்த்தான்.

அவர் தன் அசிஸ்டன்ட் சொன்ன இசையுடன் சுற்றிக் கொண்டிருக்கும் புதிய பெண் யார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் சுற்றி முற்றி பார்த்துக் கொண்டிருந்தார்.‌

அதை கவனித்த இசை “போச்சு.. இப்ப பிரியா அவரு கண்ணுல பட்டா அவ்ளோ தான்.

அவளைப் பார்த்துட்டு கண்டிப்பா இவர் யாழினின்னு தான் நினைப்பாரு.

இவருக்கு தான் யாழினியை கண்டாலே பிடிக்காதே..‌

நான் போய் இவ யாழினி இல்ல பிரியான்னு சூடம் அடிச்சு சத்தியம் பண்ணி சொன்னா கூட இந்த ஆளு நம்ப மாட்டாரு.

இப்ப என்னடா பண்றது?” என்று ஜீவாவிடம் புலம்ப,

“அதுக்கு என்ன டா பண்ண முடியும்?

இந்த ஊர்ல உங்க அப்பாவுக்கு தெரியாம எதாவது பண்ண முடியுமா?

நீ போய் அவர்கிட்ட உண்மையை சொல்லு.

அவர் உன்ன நம்பாம வேற யாரை நம்பப் போறாரு?” என்று ஜீவா அவனிடம் கேட்டுக் கொண்டு இருக்கும்போதே ராகுலிடம் பேசியபடி மேல் வீட்டில் இருந்து படி வலியாக கீழே இறங்கி வந்த‌ பிரியாவை பார்த்துவிட்டார் இசையின் அப்பா நடேசன்.

அதனால் ஒரு பக்கம் அவர் ஷாக்காகி கிச்சன் பக்கம் திரும்பி தன் மகனை பார்க்க,

அவனும் அதே அதிர்ச்சியுடன் தான் அவரை பார்த்துக் கொண்டிருந்தான்.

-மீண்டும் வருவாள் 💕
 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-16
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.