Chapter 16

Bhavani Varun

Member
Jan 23, 2025
45
0
6
சரவணன் மற்றும் விக்ரம் இருவரும் பிரஷ் அப் ஆகி வருவதாக கூறி கீழே செல்லவும் சனந்தா மாடியில் நின்று கொண்டு அவர்களின் வீட்டிற்கு ஃபோன் செய்து பேசினாள்.

“எனக்கு இங்க எல்லாம் ஓகே தான் மா தேவையானது எல்லாம் கூட இன்னிக்கு போய் வாங்கிட்டு வந்துட்டேன் மருந்து மாத்திரை எல்லாம் நான் கரெக்டா சாப்பிடுறேன் நீங்களும் உங்கள பார்த்துக்கோங்க… அப்பாவையும் பார்த்துக்கோங்க… அப்பா நான் உடம்பு சரியில்லாம இருந்த நேரத்துல செய்ய வேண்டிய வேலை எல்லாம் இப்ப சேர்த்து வெச்சு செய்வாரு…. அதனால நீங்க அவரையும் பார்த்துக்கோங்க… என்னை பத்தி கவலைப்படாதீங்க” என்று சனந்தா கூறவும், “சரி டா நாங்க பார்த்துக்குறோம் நீயும் உன் உடம்பையும் பார்த்துக்கோ” என்று லக்ஷ்மி கூறி ஃபோனை வைத்தார்.

“ஏய் இப்ப தான் அம்மா கிட்ட பேசிட்டு வெச்சேன் நீ ஃபோன் பண்ற டா” என்று சனந்தா கூற, “அப்படியா!!! நீ அங்க ஊருக்கு போயிட்டு ஃபோன் பேசவே இல்ல…. அங்க சிக்னலாவது இருக்குமா என்னன்னு வேற தெரியல அதான் எதுக்கும் கூப்பிட்டு பார்ப்போமேன்னு உனக்கு கூப்பிட்டேன்” என்று விகாஷ், சனந்தாவின் தம்பி வீடியோ காலில் கூறினான்.

“இங்க சிக்னல் எல்லாம் இருக்கு டா… ஆனா, ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு போயிட்டா அங்க தான் கிடைக்க மாட்டேங்குது மத்தபடி ஓரளவுக்கு எல்லா வசதிகளோட தான் இருக்குடா இந்த கிராமம்… அதுவும் இல்லாம இங்க எல்லாமே அழகா இருக்கு நிறைய மரம் செடி ஆறு எல்லாம் பார்க்கவே ரொம்ப மனசுக்கு நிம்மதியா இருக்கு விக்கி” என்று சனந்தா கூறினாள்.

“மூணு மாசத்துக்கு முன்னாடி மூச்சு கூட விட முடியாம பொழப்பியான்னு தெரியாம இருந்த, இப்ப என்னடான்னா அங்க போயிட்டு இது நல்லா இருக்கு அது நல்லா இருக்குன்னு சொல்லிட்டு இருக்க” என்று விகாஷ் கேலியாக கூற, “அது உண்மையிலேயே கிராமம் நல்லா இருக்கு டா… அது மட்டும் இல்லை இங்க இருக்குறவங்க கூட ரொம்ப அமைதியா இருக்காங்க…. நம்மளா இருந்தா என்ன பண்ணுவோம், “ஐயோ இது வேணும் அது இருக்கணும் இது நடக்கணும்” அப்படின்னு நம்ம பரபரப்பா இருப்போம்ல அது இங்க இல்லவே இல்ல விக்கி… அமைதியா இருக்கு எனக்கு அது ரொம்ப புடிச்சிருக்கு…. இங்க வந்து ரெண்டு நாள் தான் ஆனாலுமே… எனக்கு அது என்னமோ தெரியல ரொம்ப நல்லா இருக்கு இங்க” என்று சனந்தா கூறினாள்.

“நீ பேசறத பார்த்தா அங்கேயே செட்டில் ஆயிருவ போலயே” என்று விகாஷ் கூற, “வாய்ப்பு கிடைச்சா செட்டில் ஆயிருவேண்டா கண்டிப்பா…. ரொம்ப நல்லா இருக்கு இங்க” என்று சனந்தா கூறினாள். “ஏய் நீ உண்மைய சொல்லு ஊட்டியில அந்த ஸ்கூல் பிரச்சனையினால தான அந்த கிராமத்துக்கே போயிருக்க, அங்கிருந்து உன் வேலைய பார்த்துக்கலாம்னு தானே போன…. அம்மா அப்பா உன்ன கண்டிப்பா இப்போதைக்கு எந்த இன்ஸ்பெக்ஷனுக்கும் அனுப்ப மாட்டாங்கனு தெரியும், அதனால தானே இப்படி ஒரு சேன்ஸ யூஸ் பண்ண” என்று விகாஷ் பேசவும், சனந்தா பதில் அளிப்பதற்குள் அங்கு விக்ரம் அவளை தீயாய் முறைத்துக் கொண்டு இருந்தான்.

சனந்தா அவனைப் பார்த்து உறைந்து இருந்தாள். சனந்தா ஒரு அடி எடுத்து அவனிடம் பேச போவதற்குள் விக்ரம் கீழே இறங்கி சென்று விட்டான். “ஆனா இப்ப என்னடான்னா அங்கேயே செட்டில் ஆகலாம்ன்ற அளவுக்கு பேசுற நீ” என்று விகாஷ் பேசி முடித்தான். “விக்கி நான் அப்புறம் உன்கிட்ட பேசுறேன் நானே திருப்பி கூப்பிடுறேன் உனக்கு” என்று கூறி சனந்தா ஃபோனை வைத்து, வேகமாக கீழே இறங்கி சென்றாள்.

விக்ரம் வீட்டினிலும் இல்லை வெளியே திண்ணையிலும் இல்லை வள்ளி மற்றும் ஸ்ரீனிவாசனிடம் எப்படி கேட்பது என்று தெரியாமல் வெளியே வாசலுக்கு செலவும் சரவணன் வந்து கொண்டு இருந்தான். “சரவணா விக்ரம் சார பார்த்தீங்களா” என்று சனந்தா பதற்றத்துடன் கேட்க, “இப்ப தான் வண்டி எடுத்துட்டு போனான்…. என்ன ஏதாவது வேணுமா என்ன ஆச்சு?” என்று சரவணன் கேட்டான்.

சனந்தா ஒன்னும் இல்லை என்று கண்களை மூடி மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள். “ஏன் சனா?? என்ன ஆச்சு?? ஏதாவது பிரச்சனையா??” என்று சரவணன் கேட்க, “உள்ள ஆன்ட்டி அங்கிள் இருக்காங்க கொஞ்சம் உங்க வீட்டு பக்கமா நடந்துட்டு பேசுவோம்” என்று சனந்தா கூறவும், சரவணன் ஆமோதித்து அவளுடன் நடக்க சென்றான்.

“என்னோட தம்பி ஃபோன் பண்ணி இருந்தான், அவனுக்கு நான் இங்க வந்தது எல்லாம் தெரியும், அதே மாதிரி என்னுடைய வேலை, என்னுடைய ரீசர்ச் வொர்க் அப்புறம் இன்ஸ்பெக்ஷன் போறது, எல்லாமே அவனுக்கு ஒர் அளவுக்கு தெரியும்… கடைசியா ஊட்டில ஒரு ஸ்கூல்ல மட்டும் கொஞ்சம் பிரச்சனையாவே இருக்கு அத பத்தி நான் ஹாஸ்பிடல் இருக்கும் போதே அப்பா கிட்ட பேசினாலும் அவர் இப்போதைக்கு அதெல்லாம் நீ மண்டையில போட்டுக்காத சொல்லிட்டாரு… அம்மாவும் அதே தான் சொன்னாங்க”.

“அப்புறம் வீட்டுக்கு வந்து ஒரு ரெண்டரை மாசத்துல எங்களோட ஃபேமிலி ஃபிரண்டு பிரகாஷ் அங்கிள் வந்து இந்த மாதிரி நான் வேலை செஞ்ச கிராமத்தில ஒரு வாலன்டியர தேடிட்டு இருக்காங்க அப்படின்னு சொன்னாரு…. எனக்கு அது தெரிஞ்சதும் நான் போறேன்னு சொல்லி ஒத்துக்கிட்டேன்…. அம்மா அப்பா முதல்ல வேண்டாம்ன்னு சொன்னாங்க… அப்புறம் அப்பா கூட சரின்னு விட்டாரு… ஆனா, அம்மா வேண்டவே வேண்டாம் அப்படின்னு உறுதியா இருந்தாங்க…. ஆனா, எனக்கு முதல்ல வீட்ல இருந்து வெளியில வரர்த்துக்கான வழியா இந்த வாலண்டியர் வேலை தெரிஞ்சுது…. அதனால நான் அம்மாவை கன்வின்ஸ் பண்ணி ஒத்துக்க வெச்சேன்… அவங்களும் ஒத்துக்கிட்டாங்க”.

“இப்போ விகாஷ் பேசும் போது இந்த கிராமத்தை பத்தி எல்லாம் கேட்கும் போது நான் சொல்லிட்டு இருந்தேன் எனக்கு ரொம்ப புடிச்சிருக்குன்னு சொன்னேன்.. அதுக்கு விகாஷ், “நீ உண்மைய சொல்லு நீ போனதே இந்த ஊட்டி ஸ்கூல் பிரச்சனைக்காக தானே இது ஒரு ஆப்பர்ச்சினிடியா யூஸ் பண்ணிக்கிட்ட” அப்படின்னு அவன் கேட்டான்… நான் பதில் சொல்லவும் இல்ல என்ன ஏதுன்னு என்கிட்ட கேட்கவும் இல்ல விக்ரம் சார் வந்து நின்னுட்டு இத கேட்டுட்டு அவர் ரொம்ப கோவமா இறங்கி போயிட்டாரு” என்று ஆதங்கத்துடன் சனந்தா கூறினாள்.

“நான் உண்மைய ஒத்துக்குறேன் வீட்ல இருந்து எனக்கு வெளியில வரர்த்துக்கான ஒரு வழியை நான் தேடிட்டு தான் இருந்தேன்… இங்க இல்லனாலும் வேற எந்த இடமா இருந்தாலும் நான் ஒத்திட்டு தான் இருந்து இருப்பேன்… ஏன்னா, அப்பா அம்மா ரெண்டு பேரும் என்னை வெளியே விடறதுக்கு ரெடியாவே இல்ல…. நான் வீட்டை விட்டு வெளியில வரனும்ன்றது தான் என்னோட முதல் குறிக்கோளா இருந்துது…. அதிர்ஷடமா எனக்கு இது ஊட்டிக்கு பக்கமாக அமைஞ்சதுனால என்னால அந்த வேலையும் சேர்த்து பார்க்க முடியும்னு நம்பி நான் வந்தேன்…. நான் அந்த வேலைனால தான் வாலன்டியர் வேலைய எடுத்தேன் அப்படின்னு இல்லை…. எனக்கு இப்படி நிறைய விஷயம் பண்ண பிடிக்கும்…. அதே மாதிரி நான் செஞ்சிட்டு இருக்குற வேலை பாதியில நின்னாலும் எனக்கு பிடிக்காது… அப்படித் தான் அந்த ஊட்டி ஸ்கூல் பாதிலயே நிக்குது… அந்த வேலையும் முடிக்கணும்னு என் மண்டையில இருக்கு… ஆனா, நான் அதுக்காக மட்டுமே இங்க வரல சரவணன்” என்று சனந்தா கூறி முடித்தாள்.

“இத நானும் பாதி கேட்டு இருந்தனா உன் மேல எனக்கு வேற ஜட்ஜ்மெண்ட் வந்து இருக்கலாம்…. இப்ப நீ வந்து முழுசா சொன்னதுனால எனக்கு புரியுது உன்னோடய நிலைமை… உங்க அப்பா அம்மா விடல சோ வெளியில வரணும்னா ஒரு வாய்ப்பு கிடைக்கணும் அந்த வாய்ப்பு கிடச்சதும் பயன்படுத்திகிட்டு வெளியில வந்து இருக்க…. அதுக்காக இந்த வேலைய நீ ஏனோ தானோன்னு நினைக்கல… உன்னோட முழு எஃபர்ட் போட்டு பண்றதுக்கும் ரெடியா இருக்க…. இதெல்லாம் நீ எனக்கு எக்ஸ்ப்ளைன் பண்ண போய் புரியுது” என்று சரவணன் கூறினான்.

“இதே தான் அவர் கிட்ட சொல்லனும்னு வந்தேன்… ஆனா, அவர் என்கிட்ட பேசவும் மாட்டேன்றாரு… என்ன ஏதுன்னு கேட்கவும் மாட்டேன்றாரு…. எல்லாத்துக்குமே அவர் கிட்ட இருந்து கோபம் மட்டும் தான் பதிலா வருது எனக்கு” என்று ஆதங்கத்துடன் சனந்தா பேசினாள்.

“அவன் கொஞ்சம் அப்படித் தான் இருப்பான்.... ஆனா, எதுவும் ரொம்ப நாளைக்கு மனசுல வெச்சுக்க மாட்டான்…. இப்ப கோவப்படுறான்னா நாளைக்கு அவன் அதுலிருந்து சரியாயிடுவான்… இப்ப அவன் இருக்குற நிலைமையும் அவன் கோபத்துக்கு காரணம்… அவன் சரி ஆகிருவான்” என்று சரவணன் விக்ரம்காக பரிந்து பேசினான்.

“என்னமோ தெரியல அவருக்கு நான் வந்த நாளிலிருந்து என்னை புடிக்கல…. அதுக்கு காரணம் என்னவா வேணா இருக்கலாம்…. நானும் அத பெருசா கண்டுக்கல…. இப்ப நான் பேசிட்டு இருந்தத ஒரே ஒரு லைன் மட்டும் கேட்டுட்டு அப்படியே கோபத்துல என்னை பார்த்திட்டு போயிட்டாரு…. ஏன்னு தெரியல ஒரு மாதிரி இருக்கு” என்று சனந்தா கூறவும், சரவணன் புன்னகைத்து, “வந்துருவான் எங்கேயும் போக மாட்டான்… கீழ ஆஃபீஸ்ல தான் இருப்பான், வந்துருவான்” என்று சரவணன் கூறினான்.

இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் விகாஷ் அழைக்கவும், “திருப்பி விகாஷ் தான் கூப்பிடறான்” என்று வீடியோ காலை அட்டென்ட் செய்து, “என்ன ஆச்சு நீ பாட்டுக்கு திடீர்னு கட் பண்ணிட்டு போயிட்ட என்னவோ ஏதோன்னு பயந்திட்டேன்… என்ன ஆச்சு உனக்கு” என்று விகாஷ் கேட்க, “ஒன்னும் இல்லடா நான் மேல நின்னுட்டு இருந்தேன்… சும்மா கீழே வரலாம்… வந்துட்டு பேசலாம்னு” என்று சனந்தா கூற, “ஆனா, இவ்வளவு கேவலமா சமாளிப்பன்னு நான் நினைக்க கூட இல்லை” என்று விகாஷ் கூறவும், சரவணன் சிரித்து விட்டான்.

சனந்தா பேச்சை மாற்றும் விதமாக, “இரு நான் உனக்கு ஒருத்தர இன்ட்ரடியூஸ் பண்றேன்” என்று சரவணனை அறிமுகப்படுத்தி வைத்தாள். விகாஷ் மற்றும் சரவணன் இருவரும் அறிமுகப்படுத்திக் கொண்டு சிறிது நேரம் பொதுவாக பேசினர். “இவளுக்கெல்லாம் ஃப்ரெண்ட்ஸ் கிடைக்கவே மாட்டாங்க… நீங்க இந்த ரெண்டு நாள்ல இவ கூட நல்லா பேசுற அளவுக்கு ஃபிரண்டா இருக்கீங்கனு நினைக்கும் போது எனக்கு கொஞ்சம் நிம்மதியா தான் இருக்கு” என்று விகாஷ் கூறவும், சரவணன், சனந்தாவை கேள்விக்குறியாக பார்த்தான்.

“அவ அப்படி தான் பெருசா யார் கிட்டயும் பேச மாட்டா என்னன்னா என்னன்னு இருப்பா…. எங்க கிட்ட மட்டும் தான் கொஞ்சம் நல்ல பேசுவா மத்தபடி கொஞ்சம் ரிசார்வ்டு டைப்… இன்ட்ரோவர்ட் கூட” என்று விகாஷ் கூறவும், சரவணன் தலையை அசைத்து, “இங்க அப்படி இல்ல எல்லார் கிட்டயும் நல்லா தான் பேசி பழகுறா… நீங்க சொல்லுற மாதிரி தெரியலையே” என்று சரவணன் கூறினான்.

“அது தான் சார் எனக்கும் தெரியல இப்ப பேசும் போது கூட அங்கேயே செட்டில் கூட ஆயிருவேன் நானுன்னு சொல்றா…. அப்படி அந்த ஊர்ல என்ன இருக்குன்னு எனக்கும் பார்க்கணும்னு ஆசையா இருக்கு… நான் இந்தியாவுக்கு வரும் போது கண்டிப்பா உங்க ஊருக்கு வரேன்” என்று விகாஷ் கூறவும், “கண்டிப்பா வாங்க விகாஷ்” என்றான் சரவணன்.

சிறிது நேரம் பேசி விட்டு விகாஷ் ஃபோனை வைக்கவும், “நீ தான் நல்ல பழகுறன்னு நினைச்சா உன் தம்பி உன்ன மாதிரியே இல்லை இன்னும் ரொம்ப நல்ல பேசுறான்…. சீக்கிரமா பழகுவான் போல” என்று சரவணன் கூற, “ஆமா… அவன் அப்படித் தான்… எல்லார் கிட்டயும் சீக்கிரம் பழகுவான் சீக்கிரமா ஃபிரண்ட்ஸ் எல்லாம் சேர்த்திடுவான்” என்று சனந்தா கூறினாள்.

“ஆமா உனக்கு ஏன் அப்படி ஃபிரண்ட்ஸ் எல்லாம் இல்ல…. எதனால?” என்று சரவணன் கேட்க, “ம்ம்…உங்களுக்கு ரொம்ப க்ளோல் ஃபிரண்ட் யாரு? ஏன்?” என்று சனந்தா கேட்க, “என்ன நீ... நான் கேட்டா என்னையே திருப்பி கேள்வி கேட்குற??” என்று சரவணன் கூற, “கொஞ்சம் சொல்லுங்களேன்” என்று சனந்தா கேட்க, “எனக்கு விக்ரம் தான்… ஒரு சில விஷயத்தை ஒரு சிலர் கிட்ட சொல்ல முடியும் இல்ல சொல்ல முடியாம கூட இருக்கும்… ஆனா, விக்ரம் கிட்ட அப்படி இல்ல என்ன வேணா சொல்லிடலாம்… என்னை ஜட்ஜ் பண்ண மாட்டான்…. என்னோட உணர்வு அவனுக்கு புரியும்… ஒரு வேவ்லென்த் இருக்கு… யாரு வந்தாலும் போனாலும் நாங்க ரெண்டு பேர் எங்களுக்காக இருப்போம்னு ஒரு நம்பிக்கை இருக்கு” என்று சரவணன் கூறினான்.

சனந்தா தலையை அசைத்து, “ம்ம்… எனக்கு எப்படின்னா, ரெண்டு பேர் மட்டும் காலேஜ்லிருந்து இப்ப வரைக்கும் பேசிட்டு இருக்காங்க…. ஓரளவுக்கு ஃபிரெண்ட்ஸ் அவங்க தான் அதுக்காக அவங்க கிட்ட எல்லாம் சொல்லி ஷேர் பண்ணுவேன்னு இல்ல…. அது ஏன்னு தெரில…. ஒருத்தர் கிட்ட நான் எல்லாத்தையும் நம்பி சொல்ற அளவுக்கு எனக்கு அப்படி ஒரு ஃபிரண்ட்ஷிப் பாண்ட் எனக்கு கிடைச்சதில்லை…. சில பேர் இருக்காங்க, காலேஜ் சீனியர்ஸ் அக்கா… பிரகாஷ் அங்கிளோட பையன் கௌதம் இருக்கான் அவனும் எனக்கு ஒரு நல்ல ஃபிரண்ட்….. இன்னும் சொல்லப் போனா என் தம்பியையே எனக்கு ஒரு ஃபிரண்டு தான்… சோ, அவனும் நானும் நிறைய பேசுவோம் ஷேர் பண்ணிப்போம்…. இருந்தாலும் நீங்க எப்படி விக்ரம் சார சொன்னீங்க…. அப்படி என்னுடைய ஒன் ஸ்டாப் இவங்க தான் அப்படின்னு ஒரு ஆள் கிடைக்கல…. நானும் ஒர் அளவுக்கு கம்ஃபர்ட்டபிள் ஆகிட்டேன்னா நானும் பழகுவேன் நானும் நல்லா பேசுவேன்…. இருந்தாலும் அதுக்கு கொஞ்சம் டைம் ஆகும் எனக்கு” என்று சனந்தா கூறினாள்.

“ம்ம்… அதுவும் சரி தான்… இப்ப நீ கேட்க போய் தான் தெரியுது எனக்கு விக்ரம் எவ்வளவு க்ளோஸ்… எவ்வளவு நம்பிக்கை அவன் மேல இருக்குன்னு…. சரி வா சாப்பிட போலாம் சாப்பிடுறதுக்கு தான் நான் வீட்டுக்கு வந்தேன்… அதுக்குள்ள தான் நீ இப்படி கூட்டிட்டு வந்துட்ட…. சாப்பிட்டு போய் தூங்கு….. காலையில பசங்கள எல்லாரையும் வர சொல்லி இருக்கல…. நீ இன்னிக்கு ஆவது நேரத்தோட போய் தூங்கு” என்று சரவணன் கூற, இருவரும் சென்று உணவருந்தி விட்டு உறங்க சென்றனர்.

கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல
 

Author: Bhavani Varun
Article Title: Chapter 16
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.