இங்கு அர்ஜுனின் வீட்டில்...
அர்ஜுன் சந்ராவை காணாமல் பதற்றத்துடன், சந்ராவின் மொபைலுக்கு 30 முறைக்கு மேல் கால் செய்துக்கொண்டிருந்தான். ஆனால் ஒரு முறைக்கூட அவள் எடுக்காமல் இருக்க, அவனுக்கோ பதற்றம் அதிகரித்துக்கொண்டே சென்றது. அப்போதே சரியாக அவன் மொபைலுக்கு அழைப்பு வர, அவற்றை எடுத்து பார்த்தவன் சந்ரா என்று தெரிந்ததும் உடனே அட்டன் செய்து, "சந்ரா நீ எங்க இருக்க? உனக்கு நா எத்தன தெடவ கால் பண்றது? எங்கிட்ட ஒரு வார்த்தக்கூட சொல்லாம தனியா எங்கதா போன? இப்ப நீ எங்க இருக்க?" என்று தன் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக,
இங்கு ஒரு ஆட்டோவில் வந்துக்கொண்டிருந்த சந்ரா, "அர்ஜுன் எனக்கு எல்லாமே நியாபகம் வந்திருச்சு அர்ஜுன். இனிமே நம்பள யாராலையும் பிரிக்க முடியாது." என்று ஆனந்த கண்ணீருடன் கூற,
அதை கேட்டு குழம்பியவன், "சந்ரா நா என்ன கேட்டுகிட்டிருக்கேன், நீ என்ன சொல்லிகிட்டிருக்க? இப்போ நீ எங்க இருக்க? தனியா எதுக்காக வெளிய போன?" என்று பதறி கேட்க,
அதற்கு பதில் கூறாதவள், "அவன் வர போறான் அர்ஜுன். அவன் வந்துட்டா இந்த ஜென்மத்துலையும் நம்பள பிரிச்சிருவான். அவன் வர்றதுக்குள்ள நாம ஒன்னு சேந்தாகணும்." என்று பித்து பிடித்தவள் போல கூற,
அதை கேட்ட அர்ஜுன் புரியாமல், "யாரு வர போறா? என்ன பேசிகிட்டிருக்க? மொதல்ல ரிலேக்ஸ். உனக்கு என்ன ஆச்சு? மொதல்ல நீ எங்க இருக்கன்னு சொல்லு. நா ஒடனே வர்றேன்." என்று கூற,
அதற்கு சந்ரா, "நா சொல்றது உனக்கு புரியலையா? ஏ நா சொல்றத புரிஞ்சுக்க மாட்டிங்குற?" என்று ஆதங்கத்தில் கத்த,
அர்ஜுன், "நீதா புரியிற மாதிரி பேச மாட்டிங்குறியே சந்ரா. அப்றம் எப்பிடி புரிஞ்சுக்க முடியும்? யாரோ வர போறாங்குற, பிரிச்சிருவான் இங்குற, என்ன ஆச்சு உனக்கு? எதுக்கு என்னென்மோ ஒளறிகிட்டிருக்க? மொதல்ல நீ எங்க இருக்கன்னு சொல்லு." என்று கூற,
அதை கேட்ட பிறகே நிதானத்திற்கு வந்தவள், இப்போது அவனிடம் என்ன கூறியும் பயனில்லை என்று உணர்ந்துக்கொண்ட சந்ரா, மனதில் ஒரு முடிவை எடுத்தபடி, "இல்ல அர்ஜுன். நா வீட்டுக்கு வர மாட்டேன்." என்றாள்.
அதை கேட்டு பதறியவன், "என்ன? சந்ரா என்ன பேசிகிட்டிருக்க? நீ வெளியில இருக்குறது சேஃப் இல்ல. நீ எங்க இருக்கன்னு தயவுசெஞ்சு சொல்லு." என்று கூற,
சந்ரா, "இல்ல அர்ஜுன். இப்ப நா வீட்டுக்கு வர்றதும், வராததும் நீ சொல்ல போற பதில்லதா இருக்கு." என்று நிதானமாக கூறினாள் சந்ரா.
அதை கேட்டு மேலும் பதறியவன், "சந்ரா ஏ இப்பிடியெல்லா பேசிகிட்டிருக்க? எதுக்காக வீட்ட விட்டு வெளிய போன? இப்ப ஏ வரமாட்டன்னு சொல்லி பயமுறுத்துகிட்டிருக்க?" என்று புரியாமல் கேட்க,
"நாம கல்யாணம் பண்ணிக்கலாம் அர்ஜுன்." என்றாள் சந்ரா.
அதை கேட்டு அதிர்ந்தவன், "என்ன?" என்று கேட்க,
சந்ரா, "இப்பவே ஒடனே நாம கல்யாணம் பண்ணியாகணும். அப்பதா நா வீட்டுக்கு வருவேன். இல்லன்னா அப்பிடியே எங்கயாவது போயிருவேன்." என்றாள்.
அதை கேட்டு மேலும் குழம்பி பதறியவன், "சந்ரா நீ என்ன பேசிகிட்டிருக்க? திடீர்னு உனக்கு என்ன ஆச்சு? ஏ இப்பிடி லூசு மாதிரி பேசிகிட்டிருக்க? இப்பிடி பிளேக் மெயில் பண்ணதா வெளிய போனியா?" என்று கேட்க,
அதற்கு சற்றும் அசராத சந்ரா, "என்ன இப்பவே கல்யாணம் பண்ண முடியுமா முடியாதா அர்ஜுன்?" என்று அழுத்தமாக கேட்க,
அதை கேட்டு சற்று நிதானத்துடன் நெற்றியை சொரிந்தவன், "இங்க பாரு சந்ரா, நா ஏற்கனவே சொல்லிட்டேன். நாம மொதல்ல ஒருத்தருக்கு ஒருத்தர் அன்டர்ஸ்டேன்ட் பண்ணிக்கணும்." என்று கூறி முடிக்கும் முன், "கல்யாணத்துக்கு அப்றங்கூட நாம ஒருத்தர ஒருத்தர் அன்டர்ஸ்டேன்ட் பண்ணிக்கலாம் அர்ஜுன்" என்று கத்தினாள்.
அதை கேட்டு திடுக்கிட்டு அமைதியடைந்தவன், பிறகு பொறுமையாக, "செரி ஓகே. நாம அத பத்தி வீட்டுக்கு வந்து பேசிக்கலாம். நீ இப்ப எங்க இருக்கன்னு மட்டும் சொல்லு." என்று கூற,
சந்ரா, "மொதல்ல நாம கல்யாணம் பண்ணிக்கலான்னு சொல்லு. அப்பதா நா எங்க இருக்கன்னு சொல்லுவேன்." என்றாள் அழுத்தமாக.
அதை கேட்டு பொறுமையிழந்தவன், "செரி கல்யாணம் பண்ணிக்கலாம். நீ மொதல்ல எங்க இருக்கன்னு சொல்லு." என்று கூற,
சந்ரா, "அப்போ என்மேல சத்தியம் பண்ணி சொல்லு." என்று கூற,
அர்ஜுன், "சந்ரா இத நம்ப வீட்டுல வெச்சுக்கூட பொறுமையா பேசிக்கலாம். நீ மொதல்ல எங்க இருக்கன்னு சொல்லு ப்ளீஸ்." என்று கெஞ்ச,
சந்ரா, "முடியாது அர்ஜுன். நீ சத்தியம் பண்ணாம, நா வீட்டுக்கு வர மாட்டேன்." என்றாள்.
அர்ஜுன், "சந்ரா கல்யாணம் இங்குறது ஒன்னும் வெளையாட்டு இல்ல. எப்பிடியும் நா உன்ன கல்யாணம் பண்ணதா போறேன். என்மேல உனக்கு நம்பிக்க இல்லையா?" என்று கேட்க,
சந்ரா, "எனக்கு அந்த விதிமேலதா நம்பிக்க இல்ல அர்ஜுன். போன தெடவ நம்பள பிரிச்ச மாதிரி இந்த தெடவையும் பிரிச்சிருமோன்னு எனக்கு பயமா இருக்கு. அதனாலதா நாம ஒடனே கல்யாணம் பண்ணிக்கணுன்னு சொல்றேன்." என்று மனதிற்குள் எண்ணியவள், "உனக்கு நா என்ன சொன்னாலும் புரிய போறதில்ல. ப்ளீஸ் எனக்கு சத்தியம் பண்ணிக்குடு அர்ஜுன்." என்று அழ ஆரம்பித்தாள்.
அவள் அழுவதை உணர்ந்தவன், "ஹேய் சந்ரா! என்ன ஆச்சு? இப்ப எதுக்காக அழற?" என்று கேட்க,
சந்ரா, "புது வாழ்க்கைய ஆரம்பிக்கலான்னுதான என இங்க கூட்டிட்டு வந்த அர்ஜுன்? அப்றம் ஏ என்ன கல்யாணம் பண்ணிக்க சொன்னா மட்டும் எதாவது சாக்கு சொல்ற? என் அப்பவோட கடைசி ஆசைய மறந்துட்டியா?" என்று கேட்க,
அர்ஜுன், "அப்பிடியெல்லா இல்ல சந்ரா. நா கண்டிப்பா அவரு ஆசைய நெறவேத்துவேன். ஆனா அதுக்குன்னு ஒரு நேரம் வரணுமில்ல? கல்யாணம் ஒன்னும் வெளயாட்டில்ல. அதுக்கு நமக்குள்ள ஒரு அன்டர்ஸ்டேன்டிங் வரணும், பான்டிங் வரணும், முக்கியமா காதல் வரணும். அது இல்லாம ஆரம்பிக்குற உறவுக்கு அர்த்தமே இருக்காது." என்று கூற,
சந்ரா, "அது எல்லாத்தையும் கல்யாணத்துக்கு அப்றங்கூட நாம வர வெக்க முயற்சி பண்ணலாம். அதுல ஒன்னும் தப்பில்ல. இப்ப இப்பிடி வெயிட் பண்றதுக்கு பதிலா, கல்யாணம் பண்ணிகிட்டுக்கூட அதுக்காக நாம வெயிட் பண்ணலாம். கண்டிப்பா நமக்குள்ள ஒரு பான்டிங் வரும்." என்று கூற, அதை கேட்ட அர்ஜுன் யோசிக்க ஆரம்பிக்க, அவன் அமைதியை வைத்தே அவன் யோசிக்கிறான் என்பதை புரிந்துக்கொண்ட சந்ரா, "யோசிக்காத அர்ஜுன். இதே வார்த்தைய என் அப்பா சொல்லியிருந்தா என்ன பண்ணியிருப்ப?" என்று கேட்க,
அதை கேட்டு திடுக்கிட்டவன், லிங்கேஷ்வரன் கூறிய ஒற்றை வார்த்தைக்காக அவளை திருமணம் செய்ய சம்மதித்தை நினைத்து பார்க்க, அப்போது சந்ரா, "என் அப்பா என்ன கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லும்போது, நீ இப்பிடிதா யோசிச்சுகிட்டிருந்தியா? அவரு சொன்னவொடனே அவருக்காக என்ன கல்யாணம் பண்ணிக்க ரெடியாதான இருந்த? அப்போ இந்த பான்டிங், அன்டர்ஸ்டேன்டிங் இத பத்தியெல்லா யோசிக்காமதான அவருக்கு சத்தியம் பண்ணி குடுத்த?" என்று கேட்க, அதை கேட்ட அஜுன் மேலும் யோசிக்க ஆரம்பித்துவிட்டு பிறகு, "இதெல்லா வீட்டுக்கு வந்து பேசுனா ஆகாதா சந்ரா? ஏ இப்பிடி பண்ற?" என்று கேட்க,
சந்ரா, "காரணம் இல்லாம நா எதுவும் பண்ணல அர்ஜுன். ப்ளீஸ் புரிஞ்சுக்க முயற்சி பண்ணு. மொதல்ல கல்யாணம் பண்ணிக்கலாம். அப்றம் நீ சொல்ற எல்லாத்துக்கும் நா ஒத்துக்குறேன். மெதுவா நம்ப உறவ ஸ்டார்ட் பண்ணலாம். ஆனா மொதல்ல கல்யாணம் பண்ணிக்கலாம்." என்று கூற, அவனுக்கும் அது சரியென்றே பட, "இது என் அப்பாவோட கடைசி ஆச அர்ஜுன்." என்றாள் சந்ரா.
அதை கேட்ட அர்ஜுன், "செரி நாம கல்யாணம் பண்ணிக்கலாம். நீ எங்க இருக்கன்னு சொல்லு. நா வந்து உன்ன பிக் பண்ணிக்கிறேன்." என்று கூற,
சந்ரா, "அப்போ மொதல்ல சத்தியம் பண்ணு." என்று கூற,
அதை கேட்டு தடுமாற்றத்துடன் யோசித்தவன், சற்று கண்களை மூடி லிங்கேஷ்வரனின் வார்த்தைகளை நினைவுக்கூர்ந்துவிட்டு, இவள் கூறிய வார்த்தைகளை கண்முன் நிறுத்திவிட்டு, "செரி சந்ரா. நாம ஒடனே கல்யாணம் பண்ணிக்கலாம். எனக்கு சம்மதம். இது உன்மேல சத்தியம்." என்றான்.
அதை கேட்ட பிறகே நிம்மதியுடன் ஆனந்த கண்ணீர்விட்டவள், "ஐயம் சாரி அர்ஜுன். நா உன்ன ரொம்ப ஃபோர்ஸ் பண்றேன்னு எனக்கு புரியுது. பட் எனக்கு வேற வழி தெரியல. உனக்கு புரிய வெக்கிற அளவுக்கு எங்கிட்ட டைமும் இல்ல. இங்க நடக்குற அடுத்தடுத்த மரணம், நீ செத்து பொழச்சது, திடீர்னு எனக்கு பூர்வ ஜென்மம் நியாபகம் வந்தது, இதெல்லாமே உதயா நம்ப வாழ்க்கைக்குள்ள வர போறாங்குறதுக்கான அறிகுறி. அத சிவப்பெருமான்தா எனக்கு உணர்த்திகிட்டிருக்காரு. ஆனா இந்த தெடவ அவன் நம்ப வாழ்க்கைக்குள்ள வர்றதுக்கு முன்னாடி, நாம ஒன்னு சேந்தாகணும். அதுக்கு எனக்கு வர வழி தெரியல அர்ஜுன்." என்று மனதிற்குள் கூறிக்கொண்டவள், எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, "ஹலோ! சந்ரா! லைன்ல இருக்கியா? இப்பவாவது எங்க இருக்கன்னு சொல்லு." என்று அர்ஜுன் பதறி கேட்க,
அதற்கு சந்ரா, "நீ ஒன்னும் டென்ஷன் ஆகாத அர்ஜுன். நா இப்போ வீட்டுக்குதா வந்துகிட்டிருக்கேன். எனக்கு ஒன்னும் இல்ல நா சேஃபாதா இருக்கேன்." என்றாள்.
அர்ஜுன், "என்ன சந்ரா நீ. தனியா எதுக்காக போன? நீ இப்ப எங்க இருக்கன்னு கரைக்ட்டா சொல்லு. நானே அங்க வர்றேன்." என்றான்.
சந்ரா, "இல்ல இல்ல நானே பக்கத்துல வந்துட்டேன். இன்னும் டென் மினின்ட்ஸ்ல வீட்டுல இருப்பேன். நீ டென்ஷன் ஆகாத." என்றான்.
அர்ஜுன், "அப்பிடி சொல்லாம கொல்லாம எங்கதா போன? தனியா போக வேண்டிய அவசியம் என்ன?" என்று கேட்க,
சந்ரா, "நா எல்லாத்தையும் வந்து தெளிவா சொல்றேன் அர்ஜுன்." என்று கூற,
அர்ஜுன், "செரி பத்தரமா வந்திருவல்ல?" என்று பதற்றத்துடனான பயத்துடன் கேட்க,
சந்ரா, "ம்ம் வந்திருவேன். நீ டென்ஷன் ஆகாத." என்றாள்.
அதை கேட்ட அவனும், "செரி டேக் கேர். நா வெயிட் பண்றேன்." என்று கூற,
சந்ரா, "ம்ம்" என்று கூறி இணைப்பை துண்டித்தாள். இப்போதுதான் அவளால் நிம்மதியா மூச்சுவிடவே முடிந்தது. எப்படியோ ஆயிரம் வருடங்களுக்கு பிறகு, தன் காதலனுடன் கை சேர போகிறோம் என்று நிம்மதியே மனதில் நிறைய, அந்த உதயாவால இனி தங்களை பிரிக்கவே முடியாது என்று பெரும் நிம்மதியடைந்தபடி, ஆட்டோவின் இருக்கையில் சாய்ந்தமர்ந்தபடி ஜன்னல் வழி தெரியும் காட்சியை அமைதியாக இரசித்துக்கொண்டு வந்தாள்.
இங்கு வீட்டில் தன்னுடைய அறையின் முன்னே உள்ள காரிடோரில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடியே, சந்ரா கூறியவற்றை யோசித்துக்கொண்டிருந்தான் அர்ஜுன். அதை யோசிக்க யோசிக்க, அவள் எதற்காக காலையிலேயே வெளியில் செல்ல வேண்டும்? அதுவும் தனியாக, தன்னிடம்கூட கூறாமல் எங்கு சென்றாள், எதற்காக சென்றாள்? திடீரென கால் செய்து கல்யாணம் பண்ணிக்கலாம் என்று ஏன் அடம்பிடிக்கிறாள்? என்று பல கேள்விகள் அவனுக்குள் ஓடிக்கொண்டிருக்க, அவள் வந்தவுடனே முதல் வேலையாக அனைத்தையும் விசாரித்து தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று காத்துக்கொண்டிருந்தான்.
அப்போதே வீட்டிற்குள் நுழைந்த சந்ரா, மேலே காரிடோரில் நடந்துக்கொண்டிருந்த அர்ஜுனை பர்த்ததும் கண்ணீரும் மகிழ்ச்சியுமாக, "அர்ஜுன்...!" என்று கத்தி அழைக்க,
அவள் குரல் கேட்டதும் சட்டென்று திரும்பியவன், கீழே ஹாலில் நின்றிருந்த சந்ராவை பார்த்ததும் நிம்மதியடைந்து, "சந்ரா!" என்று கூறி வேகமாக கீழே இறங்கி செல்ல, அவளும் அவனை நோக்கி வேகமாக ஓடி வந்தாள்.
பிறகு இருவரும் ஓடி வந்து ஒருவரையொருவர் கட்டிக்கொள்ள, அவளை பார்த்த பிறகே நிம்மதியடைந்தவன், "நீ எங்க போயிட்ட சந்ரா? ஏ சொல்லாம கொல்லாம இங்கிருந்து போன?" என்று கேட்க, கண்ணீருடன் அவனை அணைத்திருந்த சந்ராவோ அமைதியாக எதையோ யோசித்துக்கொண்டிருக்க, அவனை அணைத்த நொடியே திடீரென்று உதயா தன் கரம் பற்றும்போது வந்த அதே உணர்வுதான் தோன்றியது. அர்ஜுன் அவளை இறுக அணைத்திருக்க, அந்நிலையில் உதயாவின் முகமும், அவனின் நினைவுகளுமே அவள் கண்முன் ஓடிக்கொண்டே இருக்க, இறுதியாக தன்னை காப்பாற்ற இடையில் வந்து உதயா கத்தி குத்தை வாங்கிய நிமிடம் கண்முன் தெரிய, அதை தொடர்ந்து தனக்காக அர்ஜுனும் இடையில் வந்து குண்டடி வாங்கியதும் கண்முன் வந்தது. அப்போதே அதிர்ந்து அவனைவிட்டு விலகி நின்றவள், அவனை அதிர்ச்சியுடன் பார்க்க, அவனோ அவளை கேள்வியுடன் பார்த்தபடி, "என்ன ஆச்சு சந்ரா? ஏ என்ன இப்பிடி பாக்குற?" என்று கேட்க,
அப்போதே அனைத்தையும் மீண்டும் யோசித்து பார்த்தவள், மீண்டும் ஒருமுறை பதற்றத்துடன் உதயா தன்னை காப்பாற்றிய நொடி, மற்றும் அர்ஜுன் தன்னை காப்பாற்றி நொடி ஆகிய இரண்டையும் ஒப்பிட்டு பார்க்க, இரண்டும் ஒரேபோல் தான் தெரிந்தது. அடுத்த நொடி மேலும் அவனைவிட்டு விலகி நின்றவள், "அப்பிடின்னா..." என்று அதிர்ச்சியுடன் மெல்ல நிமிர்ந்து அர்ஜுனை பார்த்து அதே அதிர்ச்சியுடன், "உதயா!" என்று மனதிற்குள் கூறியபடியே மயங்கி விழ, அவளை தன் மார்பில் தாங்கிக்கொண்டவன், "சந்ரா என்ன ஆச்சு? சந்ரா!" என்று அவள் கன்னத்தை உலுக்கினான்.
அப்போது அரை மயக்கத்துடன் மெல்ல கண் திறந்தவள், இவ்வளவு நாள் தான் இருந்தது, தான் முற்றிலுமாக வெறுக்கும் உதயாவுடன்தானா? அவனை காப்பற்றவா இவ்வளவு பாடுபட்டோம்? இறுதியில் உதயாவிற்கு பயந்து, உதயாவிடமே தன்னை திருமணம் செய்துக்கொள்ள சொல்லி சத்தியம் வாங்கியதை எண்ணியவளுக்கு, முழுவதுமாகவே மயக்கம் வந்து அவன் மார்பில் சரிந்தாள்.
- ஜென்மம் தொடரும்...

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-16
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.