Chapter-15

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
163
0
16
www.amazon.com
மகிழனிடம் தன்னை அவள் நூறு எண்ணி முடிப்பதற்குள் அவன் பிடித்துவிட்டால் தான் அவன் ஆசைப்பட்டதை போல அவனுக்கு புது பல் வரும் என்று சொல்லியிருந்த தேன்மொழி சுற்றி முற்றி என்ன இருக்கிறது, யார் யார் இருக்கிறார்கள் என்று நோட் செய்தபடி கார்டன் ஏரியாவில் ஓடிக் கொண்டே இருந்தாள்.

“ஆஆஆ.. நில்லுங்க.. எனக்கு புது பல்லு சீக்கிரமா வேணும்.

நீங்க இவ்ளோ வேகமா ரன்னிங் ரேஸ்ல ஓடுற மாதிரி ஓடினா, என்னால எப்படி உங்களை பிடிக்க முடியும்?

நில்லுங்க big மம்மீ.. மெதுவா போங்க...

என்னால உங்கள புடிக்கவே முடியல...!!” என்ற மகிழன் மூச்சு வாங்க அவளை பின் தொடர்ந்து ஓட,

அவனைத் திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு தொடர்ந்து “27, 28, 29, 30..” என்று எண்ணிய தேன்மொழி,

“நீ சீக்கிரமா வந்து என்ன புடிக்கணும் என்பதற்காக நான் வேணும்னே மெதுவாக ஓடினா நான் சொன்ன மேஜிக் ட்ரிக் ஒர்க் ஆகாது.

சோ நான் எப்பயும் போல வேகமாக தான் ஓடணும்.

உனக்கு சீக்கிரம் பல்லு வளரனும்னா, நீதான் வேகமாக ஓடி வந்து என்ன பிடிக்கும் மகிழ்.

Come on.. வேகமா வா..!!” என்று சொல்லிவிட்டு, தொடர்ந்து அந்த இடத்தை நோட்டமிட்டபடி அங்கே ஓடிக் கொண்டே இருந்தாள்.

அவள் நூறு எண்ணி முடிப்பதற்குள் இந்த இடத்தை ஓடி கவர் செய்து விட வேண்டும் என்ற எண்ணம் அவளுக்குள் இருந்ததால், அவளும் மெதுவாகவே “31... 32... 33..!!” என்று வெளியில் சத்தமாக சொன்னபடி,

“என்ன எங்க பாத்தாலும் எல்லாரும் பிளாக் கலர்ல யூனிஃபார்ம் போட்டுட்டு பாடிகார்ட்ஸ் மாதிரியே இருக்காங்க...

நேத்து அந்த கிளாரான்றவ இவனுங்கள மாதிரி இருக்கிறவங்க கூட தானே வந்து என்ன அசால்டா கடத்திட்டு போயிட்டா..

சோ என்ன ஆனாலும் இவனுங்க கிட்ட மட்டும் நம்மை எதுவும் கேட்கவே கூடாது. எப்படியும் இவங்க எல்லாரும் அவங்களுக்கு தான் விசுவாசமா இருப்பாங்க.

சோ இவங்கள நம்பி சொந்த செலவுல நம்மளே சூனியம் வச்சுக்க கூடாது.

ஆனா இங்க இவனுங்கள தவிர வேற யாரும் இருக்கிற மாதிரியே தெரியலையே..!!

ஐயோ கடவுளே‌... நீயும் எனக்கு ஹெல்ப் பண்ண மாட்டேங்குற..

நானே ஏதாவது யோசிச்சு ஒரு பிளான் போட்டாலும் அதுக்கும் சப்போர்ட் பண்ண மாட்டேங்குற..

உனக்கு என் மேல கொஞ்சம் கூட கருணையே இல்லையா..??” என்று தனக்குள் புலம்பி கொண்டு இருந்தாள்.

அப்போது பகல் நேரத்திலும் பணி படர்ந்து மிதமான வெயிலுடன் இருந்த அந்த அழகிய கார்டன் ஏரியாவில் இருந்த பயத்தில் வியர்க்க விறுவிறுக்க ஓடிக்‌ கொண்டு இருந்த தேன்மொழி கீழே இருந்த ஒரு கல்லை கவனிக்காமல் வேகமாக சென்றதில் கால் தடுக்கி கீழே விழப் போனாள்.

அப்போது பார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்திவிட்டு வெளியில் வந்த ஒருவன், அவளை சரியாக கவனித்ததால் அவள் கீழே விழுவதற்குள் அவள் இடுப்பில் தன் இரு கைகளையும் வைத்து அப்படியே அவளை தாங்கி பிடித்தான்.‌

அவர்கள் இருவரின் கண்களும் மோதிக் கொண்டன. அதுவரை வெறும் கருப்பு யூனிபார்ம் அணிந்தவர்களாகவே அவள் கண்களில் பட்டிருக்க,

சாதாரண ஆடையில் பார்க்க தமிழ்நாட்டுக்காரனை போல இருந்த அந்த ஆண் மகனை பார்த்தவுடன் இங்கே இருக்கும் பணக்காரர்களுக்கு நடுவில் தன்னை போல ஒரு சாதாரண மனிதனா? என்று ஆச்சரியமாக பார்த்த தேன்மொழிக்கு அவன் என்னவோ அன்னியனாக தெரியாமல்,

அவனை பார்க்கும்போது அவன் ஏதோ தனது பக்கத்து வீட்டில் இருக்கும் சராசரி இளைஞனை போல அவள் கண்களுக்கு தெரிந்தான்.

அதனால் விழிகள் விரிய அவள் ஆச்சரியமாக அவனை பார்த்துக் கொண்டிருக்க, அவனும் அவளது மான் விழிகளில் ஒரு நொடி மயங்கி அவளை கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவர்கள் இருவரும் அதே பொசிஷனில் அப்படியே சில நொடிகள் நிற்க,

நடுவில் குட்டி கரடியாக அங்கே தேன்மொழியை பின் தொடர்ந்து ஓடி வந்த மகிழன் நேராக வந்து அவளுடைய குர்தாவின் நுனியை பிடித்துக் கொண்டு,

“big மம்மீ.. நான் உங்களை பிடிச்சுட்டேன்.

ஐயா ஜாலி.. நீங்க சொன்ன மாதிரி முழுசா நீங்க 100 கவுன்ட் பண்ணி முடிக்கறதுக்கு முன்னாடியே உங்கள 87லயே புடிச்சிட்டேன்.

எனக்கு நாளைக்கே புது பல் வந்துரும். ஆஹா.. சூப்பர்.. ஜாலி.. ஜாலி..!!” என்று உற்சாகமான குரலில் கத்தி சொன்னான்.

அவனது குரல் அவர்கள் இருவரின் கவனத்தையும் பெற்றது.

அதனால் அவளை விட்டு விலகி நின்ற அந்த இளைஞன் “இவங்க தான் chiefஐ இரண்டாம் தரமா கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்த பொண்ணா?

கிளாரா மேடம் சொன்ன மாதிரி பார்க்க ரொம்ப சின்ன பொண்ணா தான் இருக்காங்க.

chief ஓட ஃபர்ஸ்ட் லைஃப் ஐ நான் பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சு.

அவங்க இறந்து போனதுக்கு அப்புறம் நான் அவங்கள ஃபோட்டோல தான் பார்த்தேன்.

பட் நான் லாஸ்ட்டா அவங்களை எப்படி பார்த்தனோ, அதே மாதிரி தான் இந்த பொண்ணும் இருக்காங்க.” என்று யோசித்துக் கொண்டிருக்க,

அவனையே பார்த்துக் கொண்டிருந்த தேன்மொழி “இவன் தான்.. இவனே தான்..

நான் தேடிட்டு இருந்து ஆளு. எஸ் தேன்மொழி..‌

இவன் மட்டும் தான் பார்க்க நம்மளை மாதிரி சாதாரண ஆளா இருக்கான்.

உன்ன மாதிரி இருக்கிற ஒருத்தனால தான் உன் கஷ்டத்தை புரிஞ்சுக்க முடியும்.

நீ எப்படியாவது பேசி இவனை கன்வின்ஸ் பண்ணிட்டா கண்டிப்பா இவன் உனக்கு ஹெல்ப் பண்ணுவான்.

இவன மட்டும் விட்டுறவே கூடாது. இவன விட்டா இங்க இருந்து நம்ம வெளிய போக நமக்கு வேற சான்சே இல்ல.

எப்படியாவது நல்லா பேசி பழகி முதல்ல இவன் கிட்ட ஃப்ரெண்ட் ஆகணும்.” என்று நினைத்தாள்.

அங்கே சென்னையில் அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் எல்லாம் தேன்மொழியைப் பற்றி சொல்லி விஜயாவும் அவளுடன் சென்ற உதையாவும், ஆதவனும் அவர்களது வீட்டின் சிசிடிவி கேமரா ஃபுட்டேஜ்களை பார்த்தார்கள்.

அதில் ஓரிரு வீடுகளின் வாசலில் உள்ள கேமராவில் தேன்மொழி அந்த வீட்டைக் கடந்து செல்வது ரெக்கார்டாகி இருந்தது.

தொடர்ந்து அவர்கள் விசாரித்து பார்த்ததில் ஒரு வீட்டில் உள்ள கேமராவில் தேன்மொழியை கிளாராவும் அவளுடன் வந்தவர்களும் காரில் மயக்க மருந்து கொடுத்து கடத்திச் செல்வது தெளிவாக பதிவாகி இருந்தது.

அதை பார்த்தவுடன் உதையாவின் உறவுக்கார சிறுவன் சொன்னது உண்மை தான் என்று உறுதியாகி விட்ட நிலையில், “என் புள்ளைய கார்ல கடத்திக்கிட்டு எங்கே போனாங்கன்னு தெரியலையே.. பாவி பசங்க...

நாசமா போறவனுங்க..

அவனுங்க கை, கால் எல்லாம் விளங்காம போக..!! அவங்க எல்லாரும் கட்டையில போக..!!” என்று சொல்லிவிட்டு தன்னையும் மீறி அங்கேயே அழுதாள் விஜயா.

“அழாதீங்க மா. இந்த வீடியோவை கொண்டு போய் போலீஸ் ஸ்டேஷன்ல காட்டுவோம்.

அப்பையாவது அவங்க தேன்மொழியை கண்டுபிடிப்பதற்கு உடனே ஏதாவது ஆக்சன் எடுக்கிறார்களான்னு பார்க்கலாம். நீங்க வாங்க..!!” என்ற உதையா ‌ விஜயாவையும், ஆதவனையும் அழைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றான்.

அங்கே இன்ஸ்பெக்டர் அவருக்கு நேற்று நைட் ஷிப்ட் என்பதால் காலையில் வீட்டிற்கு செல்வதற்கு முன் நிறைய இட்லி தோசை என்று வாங்கி சாப்பிட்டு தன் வயிற்றை நிரப்பிக் கொண்டு இருந்தார்.

இவர்கள் அங்கே செல்லவும், வெளியில் இருந்த கான்ஸ்டபிள் ‌“சார் நாங்க இன்ஸ்பெக்டரை உடனே பாக்கணும்.

நேத்து வந்து தேன்மொழின்னு ஒரு பொண்ணை காணோம்னு கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு போனோமே..

அவளை ஒரு கருப்பு கலர் கார்ல வந்தவனுங்க நாலு அஞ்சு பேரு இன்னொரு பொண்ணோட சேர்ந்து கடத்திட்டு போறது அங்க இருந்த வீட்ல உள்ள சிசிடிவி கேமரால ரெக்கார்டு ஆயிருக்கு.

நாங்க அதை இந்த பென்டிரைவ்ல காப்பி பண்ணி எடுத்துட்டு வந்திருக்கோம்.‌

இத உடனே இன்ஸ்பெக்டர் சார் கிட்ட கொடுத்து அவளை கடத்தினவங்க யாருன்னு விசாரிச்சு பார்க்க சொல்லுங்க சார்.

நாங்க பார்த்த வரைக்கும் அந்த கார்ல நம்பர் பிளேட் இல்ல.

அந்த மாதிரி ஒரு காரை நான் இங்க பார்த்ததும் இல்ல. எங்களுக்கு ரொம்ப பயமா இருக்கு சார். ப்ளீஸ் ஏதாவது பண்ணுங்க.” என்று பதட்டமாக சொன்னான் உதையா.

“அதெல்லாம் சரி தான் தம்பி, ஆனா இப்ப இன்ஸ்பெக்டர் சார் பிஸியா இருக்காரு.

இப்ப யாரும் அவரை பார்க்க முடியாது. நீங்க வேணும்னா அந்த பென்டிரைவை என் கிட்ட கொடுத்துட்டு போங்க.

கொஞ்ச நேரம் கழிச்சு அவர் கிட்ட நான் அத கொடுத்து நீங்க வந்து சொன்னதை சொல்றேன்.

எப்படியாவது அந்த பெண்ணை தேடி கண்டுபிடிச்சிடலாம்.

அப்புறம் வயசான காலத்துல எதுக்கு இந்த அம்மாவை சும்மா சும்மா ஸ்டேஷனுசக்கு கூட்டிட்டு வரீங்க?

அதான் கம்ப்ளைன்ட் கொடுத்துட்டீங்க இல்ல.. அதுக்கப்புறம் இனிமே அந்த பொண்ண கண்டுபிடிக்கிறது எங்க பொறுப்பு.

நீங்க முதல்ல இவங்க ரெண்டு பேரையும் கூட்டிக்கிட்டு இங்க இருந்து கிளம்புங்க தம்பி.

ஏற்கனவே நைட் ஷிப்ட் ஃபுல்லா ரவுண்ட்ஸ் போயிட்டு வந்து இன்ஸ்பெக்டர் செம கடுப்புல இருக்காரு.

இப்ப காலங்காத்தால அவர் உங்கள பார்த்தாருன்னா இன்னும் கடுப்பாயிடுவாரு.

நான் உங்க நல்லதுக்கு தான் சொல்றேன் முதல்ல இங்கிருந்து கிளம்புங்க.” என்று சொல்லி அவர்களை அங்கே இருந்து அனுப்புவதிலேயே குறியாக இருந்தான் கான்ஸ்டபிள்.

அதனால் எரிச்சல் அடைந்த உதையா “என்ன சார் பேசிட்டு இருக்கீங்க?

ஒரு பொண்ண நேத்துல இருந்து காணோம்னு சொல்லிட்டு இருக்கோம். இவ்ளோ அசால்டா இந்த விஷயத்தை டீல் பண்ணிட்டு இருக்கீங்க?

இதே உங்க இன்ஸ்பெக்டர் சார் அவர் பொண்ணு காணாம போயிருந்தா இப்படித் தான் கூலா இருக்கிற வேலையை எல்லாம் பாத்துட்டு அப்புறமா அவளை பத்தி யோசிக்கலாம்னு எப்பவும் பிசியாவே இருப்பாரா?

கொஞ்சமாவது மனசாட்சியோட நடந்துக்கோங்க.

இதே எவனாவது பணக்காரன் வந்து அவன் வீட்டில நாய்க்குட்டி காணாம போயிடுச்சுன்னு கம்ப்ளைன்ட் கொடுத்து இருந்தா கூட, உடனே என்ன ஏதுன்னு விசாரிச்சு 24 மணி நேரத்துல கண்டுபிடிச்சு கொண்டு போய் வீட்டில கொடுத்து இருக்க மாட்டீங்க?

உங்கள மாதிரி போலீஸ்.. கவர்மெண்ட் போடுற ரூல்ஸ் எல்லாமே எங்கள மாதிரி இல்லாதபட்டவங்களுக்கு என்னைக்கு சார் நல்லது பண்ணிருக்கு?

நீங்க எல்லாருமே பணக்காரங்களுக்கு வேலை செய்றதுக்காக தானே இருக்கீங்க..!!” என்று கோபத்தில் கத்தி பேசி சண்டை போடும் நோக்கில் சீறி கொண்டு இருந்தான்.

“இங்க பாருங்க தம்பி.. நீங்க பேசறது ரொம்ப தப்பா இருக்கு.

போலீஸ் ஸ்டேஷன்ல நின்னுகிட்டு போலீஸ்காரங்களையே குறை சொல்லிட்டு இருக்கீங்க...!

இது மட்டும் இன்ஸ்பெக்டர் காதுல விழுந்து இருந்துச்சுன்னா, உடனே அவர் உங்களை தூக்கி லாக்கப்ல போட்டு முட்டிக்கு முட்டி தட்டி இருப்பாரு.

போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து பிரச்சனை பண்றீங்கன்னு உங்க மேல எஃப் ஐ ஆர் போட்டா என்ன பண்ணுவீங்க?

ஒன்னும் பண்ண முடியாது. நான் பொறுமையா சொல்லும்போதே இங்க இருந்து போயிருங்க.

எனக்கும் ஒரு பொண்ணு இருக்கு. வீட்ல இருக்குற பொம்பள புள்ளைய காணோம்னா, எல்லாருக்கும் பதட்டமா தான் இருக்கும்.

அதுக்காக உங்களுக்கு சப்போர்ட் பண்ண வேண்டிய போலீஸ்காரங்களையே நீங்க பகைச்சுக்கலாமா?

எங்க ஹெல்ப் இல்லாம உங்களால தனியாவே அந்த பொண்ணை கண்டுபிடிச்சிட முடியுமா?” என்று கான்ஸ்டபிளும் கோபத்தில் பேசிக் கொண்டு இருக்க,

அப்போது அங்கே நன்றாக அயன் செய்யப்பட்டிருந்த காக்கி யூனிபார்ம் அணிந்து மிடுக்கான தோற்றத்துடன் உள்ளே வந்த 27 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் அவர்களைப் பார்த்து,

“இங்கே என்ன சத்தம்? இது போலீஸ் ஸ்டேஷன்னு நினைச்சீங்களா இல்ல வேற ஏதாவதுன்னு நெனச்சீங்களா?

என்ன பிரச்சனை இங்க? இவங்க யாரு அண்ணே?” என்று தனது கம்பீரமான குரலில் கேட்டான்.

அவன் வந்தவுடன் பலத்த மரியாதையுடன் அவனுக்கு கும்பிடு போட்ட கான்ஸ்டபிள்,

“சார் நேத்து ஒரு பொண்ணு.. அதான் ஸ்கூல் டீச்சர்.. மிஸ்ஸிங் கம்ப்ளைன்ட் வந்திருக்குது உங்க கிட்ட சொன்னேனே..

அவங்க வீட்ல இருந்து தான் வந்து தேவையில்லாம பிரச்சனை பண்ணிட்டு இருக்காங்க.

இன்ஸ்பெக்டர் பிஸியா இருக்காரு. கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்கன்னு சொன்னா கேக்க மாட்டேங்கிறாங்க.

அவங்களுக்கு இப்பவே அவங்க பொண்ணை கண்டுபிடித்து கொடுக்கணுமாம்.

அதுக்காக இவங்க வந்து கம்ப்ளைன்ட் கொடுத்த உடனே அந்த பொண்ண மந்திரம் போட்டா கண்டுபிடிக்க முடியும்? சொன்னா புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க சார்.” என்று அவனை ஏற்றி விடும் படி பேசினான்.

அதனால் விஜயாவையும் அவளுடன் வந்திருந்த இரண்டு இளைஞர்களையும் உற்றுப் பார்த்த அந்த போலீஸ்காரன் “இவங்கள நான் எங்கையோ பார்த்த‌ மாதிரி இருக்கே..!!” என்று யோசித்தவாறு “அந்த பொண்ணோட கேஸ் பயலை எடுத்துட்டு வாங்க.” என்றபடி தனது இருக்கையில் சென்று அமர்ந்தான்.

செல்லும் கான்ஸ்டபளிடம் “இவர் யாரு?” என்று ஆதவன் மெல்லிய குரலில் கேட்க,

“இவர் தான் சப் இன்ஸ்பெக்டர்.. சதீஷ்குமார் சார்.‌

இன்ஸ்பெக்டர் சார் மாதிரி இல்ல தம்பி இவர் ரொம்ப நல்லவரு.

சீரியஸான கேஸ் எல்லாத்தையும் இன்ஸ்பெக்டருக்கு கூட தெரியாம ஸ்டேசனுக்கு வெளிய வெச்சே அவர் நிறைய முடிச்சு விட்டிருக்காரு.

உங்க அக்காவை பத்தி விசாரிக்கத் தான் என்னை கேஸ் பைலை எடுத்துட்டு வர சொல்லி இருக்காரு.

இவர் கிட்ட உங்க அக்காவை கண்டபிடித்து தர சொல்லி கேளுங்க. அந்த பொண்ணு சீக்கிரம் கெடச்சிடும்.” என்று சொல்லிவிட்டு சென்றார் கான்ஸ்டபிள். அதனால் நம்பிக்கையுடன் ஆதவன் சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாரை பார்த்தான்.

- மீண்டும் வருவாள்..

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்:
 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-15
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.