பிரியா போட்டுக் கொடுத்த மூலிகை டீயை குடித்துவிட்டு கவிதா அக்கா வந்தவுடன் தங்களது அன்றாட வேலைகளை ஜீவாவும், இசையும் பார்க்க தொடங்கி விட்டார்கள்.
அதனால் குளிப்பதற்காக தங்களது வீட்டிற்கு சென்ற பிரியா தயாராகி கையில் இசையின் லேப்டாப்பை எடுத்துக் கொண்டு கீழே வந்தாள்.
அவளை திரும்பிப் பார்த்த ஜீவா, “என்ன மா நேத்து நம்ம ரெஸ்டாரன்ட் இம்ப்ரூவ்மென்ட்காக ரெண்டு பேரும் சேர்ந்து நிறைய பண்ணியிருப்பீங்க போல..
அத எல்லாம் எக்ஸிக்யூட் பண்ணி பாக்குறதுக்கு எனக்கு ரொம்ப க்யூரியஸா இருக்கு.
நாங்க இங்க ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்கும் போது ஃபர்ஸ்ட் நிறைய பேரு இங்க கூட்டமா வந்தாங்க.
எங்க மூணு பேரால இருக்கிற கூட்டத்தை சமாளிக்கவே முடியாது.
இன்னும் புதுசா ரெண்டு பேரை வேலைக்கு எடுக்கலாமேன்னு நினைச்சிட்டு இருந்தோம்.
அதுக்குள்ள போட்டிக்கு அந்த ரெஸ்டாரன்ட்காரன் இங்க ஒரு பிரான்ச் ஓப்பன் பண்ணிட்டான்.
அவ்ளோ தான், அதோட எங்க சோலி முடிஞ்சுது.” என்று சோகமாக சொல்ல,
“நம்ம குடுக்கிற ஃபுட் ஹெல்தியாகவும், டேஸ்டியாவும், குவாலிட்டியாகவும் இருந்துச்சுன்னா கண்டிப்பா இங்கயும் நிறைய பேர் வந்து சாப்பிடுவாங்க அண்ணா.
நேத்து நானும் இசையும் சேர்ந்து மெனுல நிறைய சேஞ்சஸ் பண்ணி இருக்கோம்.
நான் இன்னும் கொஞ்ச நேரத்துல ஃபுட் ஐட்டம்ஸ் பிரைஸ் ஃபைனல் பண்ணிடுவேன்.
இங்க பக்கத்துல மார்க்கெட் இருக்கே அங்க கூட wholesaleல கிரசரி ஐட்டம்ஸ் ஆர்டர் பண்ணி வாங்கிக்கலாம்.” என்றாள் பிரியா.
“நீ சொன்ன எல்லா ஐட்டத்தையும் இன்னைக்கே மெனுல ஆட் பண்ணி நம்ம குக் பண்ண ஸ்டார்ட் பண்ணிடலாம்.
நீ என்ன சொன்னாலும் அது கரெக்டா தான் இருக்கும்னு எனக்கு ஸ்ட்ராங்கா தோணுது.” என்று வேகமாக இசை சொல்ல,
“நோ நோ அப்படியெல்லாம் எதையும் அவசரப்பட்டு பண்ணிடாதீங்க.
முதல்ல இன்னைக்கு நீங்க என்ன பண்றிங்கனு உங்க பக்கத்துல இருந்து நான் அப்சர்வ் பண்றேன்.
நம்ம கொஞ்சம் கொஞ்சமா சேஞ்சஸ் பண்ணலாம்.
இந்த ஏரியா பிப்பில்ஸ் கிட்ட அதோட ரியாக்ஷன் எப்படி இருக்குன்னு பார்க்கலாம்.
எல்லாமே நம்ம expect பண்ற மாதிரி போச்சுன்னா,
நம்ம மெனுல ஒவ்வொரு ஐட்டமா ஆட் பண்ணிக்கலாம்.
இப்ப நான் ரெடி பண்ணி இருக்கிறது எல்லாமே ஃபர்ஸ்ட் லெவல் மெனு தான்.
இதுல பார்த்துட்டு கஸ்டமர் யாராவது ஆர்டர் பண்ணாங்கன்னா,
இத ஒரு 10 டு 15 மினிட்ஸ்ல ரெடி பண்ணிடலாம்.
அந்த மாதிரி ஐட்டம்ஸ் மட்டும்தான் ஆட் பண்ணி இருக்கேன்.
போகப்போக பாத்துட்டு பண்ணிக்கலாம்.” என்றாள் பிரியா.
அவள் எந்த சின்ன விஷயமாக இருந்தாலும் அதை தெளிவாக யோசித்து நிதானமாக முடிவு எடுப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்ட இசை,
“இதுதான் ஒரு புத்திசாலிக்கும் ஆர்வக்கோளாறோட இருக்கிற முட்டாளுக்கும் இருக்கிற டிஃபரென்ஸ் போல.
இனிமே இவகிட்ட கேக்காம எதையும் செய்யக்கூடாது.” என்று நினைத்து அனைத்தையும் அவளுடன் சேர்ந்து டிஸ்கஸ் செய்து செய்ய தொடங்கினான்.
அந்த ரெஸ்டாரன்ட்டின் ஒரு ஓரமாக சேர் போட்டு கல்லாவின் அருகே அமர்ந்து கொண்ட பிரியா,
ஒரு பக்கம் வரவு செலவு கணக்கையும் பார்த்துக் கொண்டு, மற்றொரு பக்கம் அங்கே வருபவர்கள் என்னென்ன ஆர்டர் செய்கிறார்கள் என்றும் கவனித்துக் கொண்டாள்.
இதற்கிடையில் ஆன்லைன் ஃபுட் டெலிவரி அப்ளிகேஷன்களில் அவர்களது ரெஸ்டாரண்டையும் இணைத்து இருந்ததால் அதன் மூலமாகவும் அவர்களுக்கு ஓரிரு ஆர்டர்கள் வந்தது.
அதை பேக்கிங் செய்து அனுப்புவதற்கும் கவிதாவிற்கு உதவினாள் பிரியா.
தூங்கி எழுந்து கீழே வந்த ராகுல் அவளோடு சேர்ந்து பேக்கிங் வேலைகளில் உதவி செய்ய,
அவள் மட்டும் தான் இங்கே வேலை செய்ய வந்திருக்கிறாள்.
ஆனால் ராகுலுக்கும் இங்கே அவர்கள் இலவசமாக உணவு கொடுத்து தங்கும் இடமும் கொடுத்திருக்கிறார்கள் என்பதால்,
பிரியாவிற்கு அவனை வேலை செய்யாதே என்று சொல்லி தடுக்கவும் மனம் வரவில்லை.
அதேசமயம் காலேஜுக்கு சென்று படிக்கும் வயதில் இவன் இப்படி வேலை பார்த்துக் கொண்டு இருப்பதும் அவளுக்கு பிடிக்கவில்லை.
அதனால் அவள் தன் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு வேலை பார்த்தபடி இருக்க,
கிச்சனில் இருந்த இசை வெளியே வந்து ராகுல் வேலை செய்வதை கண்டான்.
அவன் ராகுலை தன் சொந்த மச்சானாகவே முடிவு செய்து விட்டான்.
பிரியாவே அந்த ஹோட்டலில் மேனேஜ்மென்ட் செய்வதை தவிர,
இறங்கி மற்ற சில வேலைகளை செய்வது அவனுக்கு பிடிக்கவில்லை.
இதில் அவளுடன் சேர்ந்து இவனும் இப்படி எல்லாம் செய்து கொண்டிருப்பதை பார்க்கவே அவனுக்கு கஷ்டமாக இருக்க,
அவன் அருகில் சென்று “மச்சான் இங்க என்ன பண்ணிட்டு இருக்க நீ?
மேல உங்க வீட்ல ஒரு டிவி இருக்குல.. அதுக்கு கேபிள் கனெக்சன் குடுக்க சொல்லி கேபிள் ஆபரேட்டர் கிட்ட சொல்லி இருக்கேன்.
இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்க வந்து கனெக்சன் குடுத்துட்டு போயிருவாங்க.
நீதான் சாப்டில.. மேல போய் கேம் விளையாடிட்டு இரு.
இங்க எல்லாம் வராத.” என்று சொல்லி தனது மொபைல் ஃபோனை அவனிடம் கொடுத்தான்.
“இல்ல வேண்டாம் பரவாயில்ல.
எனக்கு கேம் விளையாட பிடிக்காது.
அங்க தனியா மேல இருந்தா போர் அடிக்குது.
அதான் கீழ வந்தேன். எனக்கு குக்கிங் பத்தி எதுவும் தெரியாது.
ஆனா சொல்லிக் குடுத்தா ஏதாவது சின்ன சின்ன வேலை செய்வேன்.
நீங்க நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்க..
எதுவா இருந்தாலும் பண்றேன்.” என்று ராகுல் திட்டவட்டமாக சொல்லிவிட,
அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை கவனித்தபடி வேலை பார்த்துக் கொண்டு இருந்தாள் பிரியா.
“டேய் படிக்கிற வயசுல என்ன டா பேசிட்டு இருக்க நீ?
முதல்ல நீ என்ன படிச்சிருக்க?"
என்று கேட்ட இசை அவன் தோள்களில் கை போட்டு அவனை வெளியே அழைத்து சென்றான்.
“நான் இப்ப தான் 12த் முடிச்சேன்.
இன்னும் கொஞ்ச நாள்ல எக்ஸாம் ரிசல்ட் வந்துரும்.” என்று ராகுல் சொல்ல,
“அப்ப ரிசல்ட் வந்துட்டா அடுத்து காலேஜ் சேரணுமே..
அதுவரைக்கும் ஃப்ரீயா இருந்தா நீ வேணா ஏதாவது கிளாஸ் போ.
இங்க பக்கத்துல பஸ் ஸ்டாண்ட் கிட்ட ஒரு கம்ப்யூட்டர் கிளாஸ் இருக்கு.
உனக்கு ஓகேன்னா சொல்லு.. நான் அங்க கூட சேர்த்து விடுறேன்.
நீ காலேஜ்ல எந்த குரூப் எடுத்து படிக்கலாம்னு இருக்க?”
என்று அக்கறையுடன் விசாரித்தான் இசை.
சோகமாக தன் தலையை கீழே குனிந்து கொண்ட ராகுல்,
“எனக்கு கம்ப்யூட்டர் ஆப்ரேட் பண்றதுக்கு எல்லாம் நல்லாவே தெரியும்.
அதுக்கெல்லாம் கிளாஸ் போகணும்னு அவசியமில்லை.
இதுக்கு மேல நான் படிச்சு என்ன பண்ண போறேன்?
எனக்கு படிக்கிற இன்ட்ரஸ்ட் இல்ல.
பிரியா மாதிரி நானும் ஏதாவது வேலைக்கு போய் அவளுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு பார்க்கிறேன்.
பட் எனக்கு இன்னும் 18 வயசு ஆகாததனால எங்காவது போனா வேலை குடுப்பாங்களான்னு தெரியல.
அதான் என்ன பண்றதுன்னு தெரியாம யோசிட்டு இருக்கேன்.” என்று சோகமாக சொன்னான்.
“என்ன டா இந்த வயசுல போய் படிக்கிறதுல இன்ட்ரஸ்ட் இல்லனு சொல்ற?
எனக்கு உன் சுச்சுவேஷன் புரியுது.
அதுக்காக இப்பவே படிக்கவே வேண்டாம் வேலைக்கு போகணும்னு எல்லாம் யோசிக்க கூடாது.
ஆமா நீ டென்த்ல எவ்வளவு மார்க் வாங்குன?” என்று இசை கேட்க,
“493” என்றான் ராகுல்.
பிரியா அவ்வளவு புத்திசாலியாக இருக்கும்போது அவளுடன் பிறந்த ராகுல் நன்றாக படிப்பவனாக இருப்பதில் அவனுக்கு ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
“493 வாங்கறது எல்லாம் எவ்ளோ கஷ்டம்..
இவ்ளோ நல்லா படிக்கிற பையன் படிக்காம இருக்கலாமா?
உனக்காகவும் உங்க அம்மாவுக்காகவும் தானே உன் அக்கா இவ்வளவு கஷ்டப்படுறா..
நீ இப்படி பேசினா அவளுக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்?
உனக்கு நாங்க இருக்கோம்.. சரியா..??
உங்க அப்பாவும் அம்மாவும் உன்னை எந்த குரூப் எடுத்து படிக்க வைக்க ஆசைப்பட்டாங்களோ எனக்கு தெரியல.
எங்க அப்பாவோட ஃபிரண்டு ஒருத்தர் arts and science காலேஜ் வச்சிருக்காரு.
நான் தான் அவர் காலேஜ்ல போய் சேராம கேட்டரிங் காலேஜ்ல ஜாயின் பண்ணிட்டேன்.
நீயாவது அங்க போய் படி. நான் அவர் கிட்ட பேசுகிறேன்.
ரிசல்ட் வரட்டும். நானும், உங்க அக்காவும் உனக்கு காலேஜ்ல அட்மிஷன் வாங்கி குடுக்குறோம்.
நீ படிக்கிறதை பத்தி மட்டும் யோசி.” என்று இசை சொல்ல,
உடனே அவன் கைகளைப் பிடித்துக் கொண்ட ராகுல்,
“உண்மைய சொல்லணும்னா எனக்கு ஒன்னும் படிக்கவே கூடாதுன்னு எல்லாம் ஆசை இல்லை அண்ணா.
பட் நான் பிரியாவுக்கு பாரமா இருக்க விரும்பல.
எனக்கு இந்த கில்ட்டி ஃபீலிங்ல காலேஜ் போய் படிச்சா கூட,
ஒழுங்கா படிக்கிறது கூட மண்டையில ஏறாது.
ப்ளீஸ் எனக்காக ஒரே ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணுங்க..
எனக்கு செட் ஆகற மாதிரி ஏதாவது ஒரு பார்ட் டைம் ஜாப் அரேஞ்ச் பண்ணி குடுங்க.
எல்லாத்துக்கும் உங்க கிட்டயே வந்து நிற்கிறது எனக்கே ஒரு மாதிரி கஷ்டமா தான் இருக்கு.
இப்போதைக்கு உங்களையும் எங்க அக்காவையும் விட்டா எனக்கு யாருமே இல்ல.
பட் வேற யார் கிட்ட ஹெல்ப் கேக்குறதுன்னும் தெரியல.
நான் பிரியா கிட்ட கேட்டா, அவ என்ன பார்ட் டைம் ஜாப் போறதுக்கு எல்லாம் அலோ பண்ண மாட்டா.
எனக்காக நீங்க தான் அவ கிட்ட பேசணும்.
அவளை கன்வின்ஸ் பண்ணுங்க ப்ரோ ப்ளீஸ்..!!
எனக்கு இந்த லீவ் முடியறதுக்குள்ள பார்ட் டைம் ஜாப் கிடைச்சதுனா தான் நான் காலேஜ் போவேன்.
இல்லனா அப்படியே இங்க வேலை பார்த்துட்டு இங்கயே இருந்துடறேன்.” என்று உறுதியாக சொல்லிவிட,
“பிடிவாதம் பிடிக்கிறதுல அக்காவும், தம்பியும் ஒரே மாதிரி தான் இருக்கீங்க.
நான் அவ கிட்ட பேசுறேன். பார்ட் டைம் ஜாப் தானே..
அரேஞ்ச் பண்ணிக்கலாம் ஒன்னும் பிரச்சன இல்ல.
இப்ப எல்லாம் நிறைய பசங்க காலேஜ் படிக்கும்போது பார்ட் டைம் ஜாப் போகிறாங்க.
அதெல்லாம் நார்மல் ஆயிடுச்சு. உனக்கு போகணும்னு ஆசையா இருந்தா நீ போ.
நான் உங்க அக்கா கிட்ட பேசுறேன்.” என்றான் இசை.
உடனே சந்தோஷப்பட்ட ராகுல் அவனை கட்டிப்பிடித்து “தேங்க்ஸ் ப்ரோ” என்றான்.
இசைக்கு தன்னுடன் பிறந்த தம்பி இல்லை என்பதால்,
இப்படி ஒரு தம்பி இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவன் எப்போதும் நினைத்ததுண்டு.
அதனால் அவன் ராகுலை தன் சொந்த தம்பியாகவே பார்த்தான்.
தானும் அவனை அணைத்துக் கொண்ட இசை, “நீ என்ன வேணாலும் சொல்லு.. பட் இந்த ப்ரோ மட்டும் வேண்டாம் டா.
யாரோ தேர்ட் பர்சென் கிட்ட பேசுற மாதிரி இருக்கு.
உனக்கு ஓகேன்னா இனிமே நீ என்ன இசைன்னு கூட கூப்பிடலாம்.
ஆனா நீ என்ன மாமான்னு கூப்பிட்டியான்னா நான் இன்னும் ரொம்ப சந்தோஷப்படுவேன்.”
என்று சொல்லிவிட்டு சிரிக்க,
“சாரி, எனக்கு மாமான்னு மட்டும் யாரையும் சொல்லி கூப்பிட பிடிக்காது.
உங்களை பேர் சொல்லி கூப்பிட்டா மரியாதையாவும் இருக்காது.
நான் இனிமே உங்களை அண்ணன்னே கூப்பிடுகிறேன் ஒன்னும் பிரச்சனை இல்ல.” என்றான் ராகுல்.
இப்படி அவர்கள் இருவரும் சண்டை எல்லாம் போடாமல் கட்டிப்பிடித்து ஒருவரின் மீது ஒருவர் அன்பைப் பொழிந்து பேசிக் கொண்டு இருப்பதை உள்ளே இருந்தவாறு கவனித்த ப்ரியா,
“இந்த இசை ஈசியா எல்லாரையும் கரெக்ட் பண்ணிடுவான் போல!
நேத்து வரைக்கும் ராகுலுக்கு இவன பிடிக்கவே பிடிக்காது.
இன்னைக்கு இவனுங்க ரெண்டு பேரும் என்னமோ அண்ணன் தம்பி மாதிரி ஜாலியா சிரிச்சு பேசிட்டு இருக்கானுங்க!
இப்படியே விட்டா பேசிப்பேசியே இந்த இசை நம்மளையும் க
ரெக்ட் பண்ணிடுவானோ?” என்று ஒரு நொடி யோசித்துப் பார்த்தவள்,
“சேச்சே..!! அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை.
இந்த பிரியாவை யாராலயும் கரெக்ட் பண்ண முடியாது.
அதுவும் இவனை பார்த்து எல்லாம் நாம் மயங்க மாட்டேன்.” என்று நினைத்துக் கொண்டாள்.
- மீண்டும் வருவாள் ❤️🥳

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-15
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.