CHAPTER-14

Oviya Blessy

Member
Jan 4, 2025
92
1
8
"என் ப‌ர்மிஷ‌ன் இல்லாம‌ வெல‌குனா என‌க்கு சுத்த‌மா பிடிக்காது." என்று அவ‌ன் கூறியிருந்தும், இவ‌ள் மீண்டும் வில‌கி எழுந்திருக்க‌, அவ‌ள் ந‌டு வ‌யிற்றில் அழுத்தி க‌ர‌த்தை ப‌தித்து மீண்டும் ப‌டுக்க‌ வைத்த‌வ‌ன், மெதுவாய் அவ‌ள் முக‌ம் நெருங்கி த‌ன் விழியில் அழுத்த‌ம் கொடுத்து அவ‌ளை எச்ச‌ரித்துவிட்டு அப்ப‌டியே அவ‌ள் இதழை க‌வ்வ‌ வ‌ர‌, ச‌ட்டென்று அவ‌ன் வாயில் க‌ர‌த்தை ப‌தித்து த‌டுத்தாள் அவ‌ள்.

அதில் அவ‌ன் கோப‌ம் தாறுமாறாய் ஏற‌ அவன் விழிகள் அனலானது. அதில் அவ‌ளின் விழிக‌ளோ க‌ல‌ங்கி நிற்க‌, "இது எந்த‌ மாதிரி உற‌வு?" என்று கேட்டாள் அவ‌ள்.

அதில் ச‌ட்டென்று அவ‌ன் புருவ‌ங்க‌ள் விரிய‌, இவ‌ளோ க‌ண்ணீருட‌ன் அவ‌ன் ப‌திலை எதிர்பார்த்தாள்.

இப்போதெல்லாம் இவனின் அத்து மீற‌லிலும் அதிகார‌த்திலும் மோக‌த்தையும் தாண்டி வேறு ஒன்றை உண‌ர்ந்த‌வ‌ள், அத‌ற்கான‌ பெயரை அவனிடமே எதிர்பார்க்க‌, அவ‌னோ த‌ன் வாயிலிருந்த‌ அவ‌ள் க‌ர‌த்தை மெல்ல‌ வில‌க்கினான். அதில் அவ‌ள் த‌டுமாறி த‌ன் க‌ர‌த்தை பார்த்துவிட்டு அவ‌னை பார்க்கும் முன், அவ‌ள் மேனியில் ப‌ட‌ர்ந்த‌து அவ‌ன் விர‌ல்க‌ள். அதில் அவ‌ள் திடுக்கிட்டு அவ‌ன் க‌ர‌த்தை த‌டுத்து பிடிக்க‌, அவ‌னோ நிமிர்ந்து அவ‌ள் விழியை பார்த்தான். அதில் அவ‌ளும் ப‌த‌ற்ற‌மாய் அவ‌ன் விழிகளை பார்க்க‌, அவ்விழிக‌ளை பார்த்த‌ப‌டியே அவ‌ள் தேக‌ம‌ல்ல‌ அவ‌ள் ச‌ட்டையை இழுத்து மூடிவிட்டு எழுந்தான் ருத‌ன்.

அதில் புரியாது த‌ன் ச‌ட்டையை இறுக்கி பிடித்துக்கொண்டு அவ‌ளும் மெதுவாய் எழுந்து அம‌ர, அவ‌னோ எதுவும் பேசாம‌ல் திரும்பி, அங்கிருந்த‌ த‌ன‌க்கான‌ பால் க்ளாஸை எடுத்து வேக‌மாய் குடித்தான்.

அதில் இவ‌ளோ புரியா ப‌த‌ற்ற‌மாய் மெல்ல‌ டேபிளைவிட்டு இற‌க்க‌ போக‌, குடித்த‌ க்ளாசை ப‌ட்டென்று வீசி உடைத்திருந்தான். அதில் அவ‌ள் திடுக்கிட்டு அதிர்ந்து த‌ன் கால்க‌ளை மேலே இழுத்துக்கொள்ள‌, அவ‌னோ வீசிய‌ வேக‌த்தில் விறுவிறுவென்று வெளியில் சென்றிருந்தான்.

அதில் புரியா ப‌த‌ற‌லாய் த‌ன் வெறும் கால்க‌ளை குறுக்கிக்கொண்டு அவ‌னையே பார்த்த‌வ‌ளுக்கோ, திடீரென்று இவ‌னுக்கு என்ன‌வாயிற்று என்று புரிய‌வே இல்லை.

இங்கே விறுவிறுவென்று ஹாலுக்கு வ‌ந்த‌வ‌ன், அங்கிருந்த‌ சோஃபாவில் பொத்தென்று அம‌ர்ந்து, முன்னிருந்த‌ teapot டேபிளில் ஒற்றை காலை தூக்கி வைத்தான்.

அவ‌ன் பாத‌த்தில் சுற்றியிருந்த‌ இர‌த்த‌ பேண்டேஜ்க‌ள் பிய்ந்து வ‌ந்து க‌ச‌க‌ச‌வென்று இருக்க‌, அதை வேக‌மாய் உருவி வீசினான். அதுவோ இங்கு நின்றிருந்த‌ அவ‌ளின் கால‌டியில் வ‌ந்து விழ‌, அதில் திடுக்கிட்டு நிமிர்ந்து அவ‌னை பார்த்தாள்.

அவ‌னோ அடுத்த‌ காலையும் எடுத்து வைத்து அவ்வாறே பேண்டேஜை உருவி வீச, இன்னுமே அதிக‌ இர‌த்த‌ம் வ‌ழிந்த‌து. தாறுமாறாய் கிழிந்திருந்த‌ அவ‌ன் உள்ள‌ங்கால்க‌ளில் நிற்காம‌ல் வ‌ழிந்த‌ இர‌த்த‌ம் அந்த‌ டீபாயில் ஒழுகி நிறைந்த‌து.

அதே அள‌வு இங்கே இவ‌ள் க‌ண்ணீரும் பெருகி வ‌ழிய‌, அப்ப‌டியே அந்த‌ தூணில் அணைவாய் சாய்ந்தவ‌ளுக்கோ, அவ‌ன் சிந்தும் ஒவ்வொரு துளி இர‌த்த‌மும் த‌ன்னால்தான் என்று நினைக்க‌ நினைக்க‌ வெகுவாய் வ‌லித்த‌து.

இங்கே இவ‌னோ குனிந்து அதன் ட்ராய‌ரை திற‌ந்து ம‌ருந்து பெட்டியை எடுத்து வைத்து, அதிலிருந்த‌ காட்ட‌னால் த‌ன் இர‌த்த‌த்தை அழுத்தி சுத்த‌ம் செய்துக்கொண்டிருக்க‌, ப‌ய‌ங்க‌ர‌மாய் வ‌லித்த‌து அவ‌னுக்கு. ஆனாலும் ப‌ல்லை க‌டித்த‌ப‌டி அவ‌ன் வேண்டுமென்றே வேக‌மாய் செய்ய‌, இவ‌ளுக்கோ ம‌ன‌ம் ப‌த‌றிய‌து. உட‌னே முன்னால் செல்ல‌ முய‌ல‌, அவ‌னின் கைப்பேசி ஒலித்த‌து.

"ச்ச்" என்ற‌ப‌டி காட்ட‌னை வீசிய‌வ‌ன், த‌ன் கைப்பேசியை அட்ட‌ன் செய்து காதில் வைத்து, "முடிஞ்ச‌தா?" என்று கேட்டான்.

"எஸ் பாஸ். ப‌ட் டாக்ட‌ர் என்ன‌ சொல்றாருன்னா.." என்று யோகி த‌ய‌ங்க‌, "சொன்ன‌த‌ ம‌ட்டும் செய்." என்று அழுத்தி கூறினான் ருத‌ன்.

அதில் முக‌த்தை தொங்க‌ போட்ட‌வ‌ன், "ஓகே பாஸ்" என்றான் யோகி.

அதில் வேக‌மாய் இணைப்பை துண்டித்த‌வன், திடுக்கிட்டு குனிந்து பார்த்தான் ருத‌ன்.

அவ‌ன் பாத‌த்தை பூவாய் பிடித்து, பூவைவிட‌ மென்மையாய் அந்த‌ காய‌ங்க‌ளை சுத்த‌ம் செய்த‌ப‌டி க‌ண்ணீருட‌ன் அவ‌ன் கால‌டியில் அம‌ர்ந்திருந்தாள் அவ‌ள். அதில் வெடுக்கென்று காலை உருவிய‌வ‌ன், வேக‌மாய் வில‌கி எழுந்துவிட்டான். அதில் திடுக்கிட்டு ப‌த‌றிய‌வ‌ள், நிமிர்ந்து அவ‌னை பார்க்க‌, அவ‌னோ அந்த‌ கால்க‌ளோடே வேக‌மாய் ப‌டிக‌ள் ஏறியிருந்தான்.

அதில் அவ‌ளும் ப‌த‌றி எழுந்து, "நில்லுங்.." என்று கூறும் முன் அவ‌ன் சென்றிருக்க‌, இவ‌ளும் கையிலிருந்த‌தை வீசிவிட்டு அவ‌ன் பின்னே வேக‌மாய் ப‌டிக‌ள் ஏறினாள். அப்ப‌டியே வேக‌மாய் படிக‌ளை க‌ட‌ந்து மேலே சென்ற‌ நொடி, தரையிலிருந்த‌ அவ‌ன் இர‌த்த‌ம் வ‌ழுக்கிவிட்டு, "அ..!" என்றபடி பின்னால் சாய‌ போக‌, இறுக்கி விழி மூடினாள்.

அடுத்த‌ நொடி அவ‌ள் உட‌ல் அந்த‌ர‌த்தில் இருக்க‌, மெதுவாய் இமைக‌ளை பிரித்தாள். அவ‌ள் க‌ர‌த்தை இறுக்கி பிடித்திருந்த‌து அவ‌ன் க‌ர‌ம். அதில் அவ‌ள் திடுக்கிட்டு முழுதாய் இமை பிரிக்க‌, அவ‌ன் முக‌த்தில் எந்த‌ ஒரு ப‌த‌ற்ற‌மும் இல்லாது இறுக்க‌மாய் நின்றிருந்தான்.

அதில் இவ‌ள் புரியாது விழித்த‌ப‌டி அப்ப‌டியே திரும்பி பார்க்க‌, அவ‌ளின் க‌ர‌ம் ம‌ட்டுமே அவ‌னிட‌ம் இருக்க‌, உட‌ல் மொத்த‌மும் ப‌டிக‌ளில் உருண்டு விழ‌ வ‌ச‌தியாய் சாய்ந்திருந்த‌து. அதில் அவ‌ள் இத‌ய‌ம் அத்த‌னை ப‌ல‌மாய் துடிக்க‌, அதில் விய‌ர்த்துவிட்ட‌ அவ‌ள் உள்ள‌ங்கையை அழுத்தி பிடித்து ச‌ட்டென்று இழுத்திருந்தான் அவ‌ன்.

அதில் திடுக்கிட்டு இறுக்கி விழி மூடிய‌வ‌ள், அடுத்த‌ சில‌ நொடிக‌ளில் ஆண‌வ‌னின் ஸ்ப‌ரிச‌த்தில் மெதுவாய் இமைக‌ளை பிரிக்க‌, அவ‌ன் மார்புக்குள் இருந்தாள் அவ‌ள்.

அதில்தான் நிம்ம‌தியாய் மூச்சுவிட்ட‌வ‌ள், ப‌த‌ற்ற‌ம் குறைய‌ அவ‌னுள் புதைந்து மூச்சு வாங்கினாள். ஆனால் அவ‌னோ அவ‌ளை திருப்பிக்கூட‌ அணைக்க‌வில்லை. அதை உண‌ரும் நிலையிலும் அவ‌ள் இல்லை. அவ‌ன் மார்புக்குள் மெல்ல‌ அவ‌ளின் ப‌த‌ற்ற‌ம் அட‌ங்க‌ ஆர‌ம்பித்திருக்க‌, ப‌ல‌மாய் துடித்துக்கொண்டிருந்த‌ அவ‌ள் இத‌ய‌ம் மெல்ல‌ மெல்ல‌ சீராக‌வும் மெதுவாய் நிமிர்ந்து அவ‌னை பார்க்க‌, ச‌ட்டென்று அவ‌ளை தூக்கியிருந்தான் அவ‌ன்.

அடுத்த‌ நொடியே அவ‌ன் கைக‌ளுக்குள் வ‌ந்திருந்த‌வ‌ள் திடுக்கிட்டு அவ‌னை பார்க்க‌, அவ‌னோ அவளை தூக்கிக்கொண்டு ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்தான். அதில் மெல்ல‌ மெல்லிய‌தாய் இத‌ழ் வ‌ளைத்த‌வ‌ளுக்கோ, அவ‌ன் அக்க‌றை தெளிவாய் புரிய‌, அப்ப‌டியே குறுகி அவ‌னுள் புதைந்து ஒன்றினாள்.

அவ‌னும் அதை க‌ண்டுக்காது அவ‌ளை தூக்கி பிடித்து த‌ங்க‌ள் அறைக்குள் நுழைந்தான். அப்ப‌டியே அந்த‌ தாம‌ரை மெத்தையை நெருங்கிய‌வ‌ன், அதில் மெதுவாய் அவ‌ளை ப‌டுக்க‌ வைக்க‌, அவ‌ன் வில‌க‌லில் அவ‌ள் திடுக்கிட்டு நிமிர‌, த‌ன் மெத்தையில் இருந்தாள் அவ‌ள்.

அதில் அவ‌ள் சுற்றி பார்த்துவிட்டு அவ‌ன் ப‌க்க‌ம் திரும்பும் முன், அவ‌ள் எதிரே த‌ண்ணீரை நீட்டிய‌து அவ‌ன் க‌ர‌ம். அதில் அவ‌ள் நிமிர்ந்து அவ‌னை பார்க்க‌, அவ‌ள் இத‌ழுள் மாத்திரையை புக‌ட்டினான். அதில் அவ‌ள் திடுக்கிட்டு துப்ப‌ போக‌, அத‌ற்குள் நீரை புக‌ட்டியிருந்தான். அதில் அவ‌ளும் க‌ண்க‌ளை இறுக்கி மூடி விழுங்க‌, அவ‌ள் தொண்டையில் த‌ண்ணீருட‌ன் சேர்ந்து இற‌ங்கிய‌து அந்த‌ மாத்திரை.

ஆனால் அவ‌ன் இத‌ழின் இத‌ம் ப‌டாத‌தால் என்ன‌வோ, அவ‌ள் தொண்டை ஏக்க‌மாய் ஏறி இற‌ங்க‌, மெதுவாய் விழி திற‌ந்தாள். அத‌ற்குள் அவ‌ன் அந்த‌ க்ளாஸை வில‌க்கிவிட்டு வில‌கி சென்றிருக்க‌, அவ‌னையேதான் பார்த்தாள் அவ‌ள்.

இப்போது வ‌ரை அவ‌ன் ஒரு வார்த்தைக்கூட‌ பேசாதிருக்க‌வும் இவ‌ளுக்கு என்ன‌வோ போலிருக்க‌, என்ன‌தான் ஆயிற்று இவ‌னுக்கு என்று புரியாது அவ‌னையே பார்க்க‌, அவ‌னோ மெத்தையின் ம‌று ப‌க்க‌ம் வ‌ந்து, அங்கு ட்ராய‌ரிலிருந்த‌ த‌ன‌க்கான‌ மாத்திரையை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு த‌ண்ணீரை குடித்தான்.

அவ‌ன் வெறும் வ‌யிற்றில் மாத்திரை போட‌வும் திடுக்கிட்டு எழ‌ முய‌ன்ற‌வ‌ள், அப்போதே கிச்ச‌னில் அவ‌ன் பாலை குடித்துவிட்டு க்ளாஸை உடைத்த‌து க‌ண்முன் வ‌ர, அப்படியே‌ அமைதியாய் ப‌டுத்துவிட்டாள்.

அவ‌னும் அப்ப‌டியே அவ‌ள் அருகில் சாய்ந்துக்கொள்ள‌, மெதுவாய் திரும்பி அவ‌னை பார்த்தாள். அவ‌னோ வான‌ம் பார்த்த‌ப‌டி படுத்து, க‌ர‌த்தை த‌லைக்கு பின்னால் வைத்து விழி மூடினான்.

அவ‌னின் இந்த‌ அமைதியை முத‌ல் முத‌லாய் பார்ப்ப‌வ‌ளுக்கு, இது ஏனோ பிடிக்க‌வே இல்லை. அதில் அவ‌ள் முழுதாய் அவ‌ன் ப‌க்க‌ம் திரும்பி ப‌டுக்க‌, அதில் அவ‌ள் க‌ர‌ம் மெத்தையில் வைத்திருந்த‌ அவ‌னின் க‌ர‌த்தை உர‌சி வில‌கிய‌து. அதில் அவ‌ளும் மெல்ல‌ பார்வையை இற‌க்கி அதை பார்க்க‌, அவ‌னின் இதே க‌ர‌ம் ச‌ற்று முன் கிச்ச‌னில் த‌ன் விர‌ல்க‌ளுள் நுழைந்து பிடித்த‌து க‌ண்முன் வ‌ந்த‌து. அதில் அவ‌ள் இப்போதும் மெதுவாய் அவ‌ன் க‌ர‌த்திற்குள் விர‌ல்க‌ளை நுழைக்க‌ போக, ச‌ட்டென்று க‌ர‌த்தை வில‌க்கிக்கொண்டான் அவன்.

அதில் அவ‌ள் திடுக்கிட்டு நிமிர‌, அந்த‌ க‌ர‌த்தையும் சேர்த்தே த‌ன் த‌லைக்கு பின்னால் வைத்து உற‌ங்கினான் அவ‌ன். அதில் இவ‌ள் ம‌ன‌ம் வ‌லிக்க‌, கண்களில் நீர் தேங்கியது. அவ‌ன் கோபப்பட்டு கத்தினால்கூட ப‌ர‌வாயில்லை. ஏனென்றே கூறாமல் அவன் காட்டும் இந்த‌ ஒதுக்க‌ம் அவளுள் க‌ண்ணீரைதான் கிள‌ப்பிய‌து.

அத‌ற்குமேல் அவ‌னை தொடாது த‌ன் இரு க‌ர‌த்தையும் க‌ன்ன‌த்த‌டியில் வைத்து ப‌டுத்த‌வ‌ள், அவ‌னையே க‌ண்ணீருட‌ன் பார்த்திருக்க‌, அவ‌னோ எதையும் க‌ண்டுக்கொள்ளாது ம‌ருந்தின் வீரிய‌த்தில் அப்ப‌டியே உற‌ங்கியிருந்தான்.

அதில் க‌ல‌ங்கிய‌ப‌டியே இருந்த‌ இவ‌ளின் க‌ண்க‌ளும் ம‌ருந்தின் வீரிய‌த்தில் மெல்ல‌ இமை மூட‌, மிச்ச‌ மீதி கண்ணீரும் வெளியேறி அப்ப‌டியே உற‌க்க‌த்திற்கு சென்றிருந்தாள்.

அப்ப‌டியே ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அவளின் ஈர இமைகள் இப்போது காய்ந்து லேசாகியிருக்க, அவ்விமைகள் மெதுவாய் அசைந்து பிரிய‌ முய‌ன்ற‌து. அப்படியே ஈர‌த்தில் ஒட்டியிருந்த‌ இரு இமைக‌ளும் முழுதாய் பிரிய‌, அவ‌ள் முக‌த்திலிருந்த‌ கூந்த‌லை மெதுவாய் வில‌க்கிய‌து அவ‌ன் விர‌ல்க‌ள்.

அதில் புரியாது புருவ‌ம் குறுகிய‌ப‌டியே அவ‌ள் இமைக‌ள் பிரிய‌, அத‌ன் ந‌டுவே எந்த‌ பாவ‌னையுமின்றி தெரிந்தது அவ‌ன் முக‌ம்.

அதில் அவ‌ள் திடுக்கிட்டு எழுந்த‌ம‌ர‌, வரும்போது கட்டியிருந்த அதே திருமண புடவையையில் இப்போது இருந்தாள். அதில் அவள் அதிர்வாய் தன் புடவையை தொட்டு பார்த்து நிமிர, ஏதோ ஒரு காருக்குள் இருந்தாள். அதில் அவ‌ள் ப‌த‌ற்ற‌மாய் சுற்றியும் பார்த்து, "ந..நாம‌ எங்க..‌" என்று திண‌ற‌, அப்ப‌டியே சுழ‌ன்ற‌ அவ‌ள் பார்வை சென்ற‌ திசையில் காரின் க‌த‌வு திற‌க்க‌ப்ப‌ட்ட‌து.

அதில் அவ‌ள் திடுக்கிட்டு இருக்கையில் சாய‌, அங்கே அவ‌ள் முன்னிருந்த‌தோ அவ‌ளின் வீடு. அதில் அவ‌ள் அக‌ல‌ விழி விரித்து திரும்பி இவ‌னை பார்க்க‌, அவ‌னோ எந்த‌ பாவ‌னையும் இன்றி செல் என்று க‌ண் அசைத்தான்.

அதில் விய‌ப்பாய் மீண்டும் திரும்பி த‌ன் வீட்டை பார்க்க‌, "என் ம‌ன‌சு மாறுற‌துக்குள்ள‌ போயிரு." என்று காதருகே கேட்டது அவன் குரல்.

அதில் அவ‌ள் திடுக்கிட்டு திரும்ப, அவ‌ளின் க‌ன்ன‌ம் உர‌ச வில‌கிய‌து அவ‌ன் முக‌ம். அந்த‌ முக‌த்தில் இப்போதும் எந்த‌ பாவ‌னையும் இல்லாதிருக்க‌, அப்படியே அந்த‌ இருக்கையில் சாய்ந்த‌வ‌ன், "இங்க‌ வ‌ர்ற‌துக்காகதான‌? அத்த‌ன‌ தெடவ என்னவிட்டு ஓடுன?" என்று கேட்டான்.

அதில் இவள் புருவங்கள் தவிப்பாய் விரிந்து கண்கள் கலங்க, "கெள‌ம்பு." என்றான் ஒரே வார்த்தையில். அதில் திடுக்கிட்ட அவள் இதயம், வெகுவாய் பிழிய கண்ணீர் பெருகியது. அதே கண்ணீருடன் உணர்வற்ற அவன் விழிகளை பார்த்து, நா எங்கையும் போக‌ மாட்டேன் என்று கூற‌ துடித்த‌ இத‌ழ்க‌ளை அவ‌ள் பிரிக்கும் முன், "மீரா!" என்று அவ‌ளின் தாய் குர‌ல்.

அதில் திடுக்கிட்டு அவ‌ள் திரும்பி பார்க்க‌, அவ‌ளின் தாயும் த‌ந்தையும் க‌ண்ணீருட‌ன் அந்த வீட்டு வாச‌லில் நின்றிருந்த‌ன‌ர்.

அதில் ச‌ட்டென்று இவ‌ள் விழிக‌ள் விரிந்து இத‌ய‌ம் ப‌ல‌மாய் அடிக்க‌, நடுங்கிய இதழ்கள் பிரிந்து, "ம்மா!" என்றாள் தழுதழுத்த குரலில். அதில் அவருமே தன் மகளை பார்த்த ஆனந்த கண்ணீருடன் வா என்று கையை நீட்டி அழைக்க, அடுத்த நொடி அனைத்து உண‌ர்வுக‌ளையும் உத‌றி வீசிய‌வ‌ள், வேக‌மாய் காரைவிட்டு இற‌ங்கி அவ‌ர்க‌ளிட‌ம் ஓட‌, சட்டென்று அவ‌ள் க‌ர‌ம் ப‌ற்றிய‌து அவ‌ன் க‌ர‌ம்.

அதில் அவ‌ள் திடுக்கிட்டு நின்று திரும்பி அவ‌னை பார்க்க‌, "இப்ப என்னவிட்டு போயிட்டன்னா, இனி எப்பவுமே என்கிட்ட வர முடியாது." என்றான் அவன்.

அதில் அதிர்ந்து விழி விரித்தவளின் க‌ண்ணீர் கன்னம் தாண்ட, கொஞ்சமாகவே இருந்தாலும் அவ‌னுடன் இருந்த‌ ஒவ்வொரு த‌ருண‌ங்க‌ளும் அவ‌ள் இதயத்தில் அல்லவா பதிந்திருந்தது. அவன் தன்னை பார்த்துக் கொண்ட விதம், வலியே இல்லாமல் மருந்து போட்டது, தன் வாந்தியை ஏந்தியது, உணவு ஊட்டியது, தன்னை பத்திரமாய் அணைத்து கொண்டது, யாரிடமுமே உணாராத பாதுகாப்பு, யாரிடமுமே உணராத அதீத அன்பு என்று அனைத்தையும் கொடுத்தவனை விட்டு அவளால் எவ்வாறு வர முடியும்?

அதில் கண்ணீர் பெருக திரும்பி தன் தாய் தந்தையை பார்க்க, அவர்களோ வாடா என்பதுப்போல் கண்ணீருடன் கைகளை நீட்டினர். அதில் இவள் மனம் தவிக்க, திரும்பி இவனையும் பார்த்தாள். அவனோ எப்போதோ கரத்தை விட்டிருந்தான். இனி முடிவு இவளுடையதுதான்.

- நொடிக‌ள் தொட‌ரும்...
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-14
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.