கிச்சனில் ஒரு பக்கம் பிரியா அவள் கொண்டு வந்த கீரைகள் மற்றும் மூலிகைகளை வைத்து சூப் தயாரித்துக் கொண்டிருக்க,
“நான் டீ போட்டுட்டு இருக்கேன். ராகுல் தூங்க போய்ட்டான்.
அவன் எந்திரிச்சு வரும்போது அவனுக்கு என்ன வேணும்னு கேட்டு அப்புறம் போட்டுக்கலாம்.
உனக்கு டீயா காபியா?” என்று ஜீவா கேட்க,
“எனக்கு அதெல்லாம் குடிக்கிற ஹாபிட் இல்ல அண்ணா.
ராகுலும் குடிக்க மாட்டான். டெய்லியும் மார்னிங் நாங்க மூலிகை டீ தான் குடிப்போம்.
அதைத் தான் நான் இப்ப செஞ்சிட்டு இருக்கேன்.
உங்களுக்கும் சேர்த்து செய்யவா?” என்று அவனிடம் கேட்டாள் பிரியா.
அவளுக்கு ஜீவா பதில் சொல்ல அவன் வாயை திறப்பதற்குள் முந்தி கொண்ட இசை,
“டெய்லியும் இவன் போடுற டீயை குடிச்சு குடிச்சு எனக்கு சலிச்சு போச்சு பிரியா.
நானும் இனிமே உன்ன மாதிரி மூலிகை டீ எல்லாம் குடிச்சு ஹெல்தியா இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.
நீ எனக்கும் சேர்த்து டீ போடு.” என்று வேகமாக சொல்ல,
“அப்ப எனக்கும் சேர்த்து அந்த டீயே போட்டுடு மா.”
என்ற ஜீவா அவன் காய்ச்சிய பாலை பிறகு ஏதாவது செய்து குடித்துக் கொள்ளலாம் என்று நினைத்து மூடி ஓரமாக வைத்து விட்டான்.
மும்மரமாக பிரியா டீ போட்டுக் கொண்டு இருக்க, அவள் ட்ராக் சூட்டில் இருந்ததால் மேலும் கீழும் அவளைப் பார்த்து ரசித்த இசை,
“நீ ஜாகிங் போனியா?” என்று கேட்க,
“ம்ம்.. ஆமா நைட்டு எவ்ளோ லேட்டா தூங்கினாலும், எனக்கு மார்னிங் 5 o'clock ஷார்ப்பா முழிப்பு வந்துரும்.
டெய்லியும் ஜாகிங் போய் பழகிருச்சு.
தூங்குறதுக்கு முன்னாடி சோகமா இருந்தாலும், மார்னிங் எந்திரிச்ச உடனே இப்படி ஜாகிங் போயிட்டு சுத்தமான காத்தை சுவாசிச்சிட்டு வந்தா மனசு நிம்மதியா இருக்கும்.
அதான் தூங்கி எந்திரிச்ச உடனே கிளம்பி போயிட்டேன்.” என்றாள் அவள்.
“என் கிட்ட சொல்லியிருந்தா நானும் உன் கூட வந்து இருப்பேன்ல?”
என்று கேட்க நினைத்த இசை, “வேண்டாம், நம்ம அப்படி கேட்டா..
உடனே நான் எதுக்கு உன் கிட்ட கேட்கணும்?
நீ யாரு எனக்குன்னு கேட்டு அவ நம்மள அசிங்கப்படுத்துவா..
அதுக்கு நம்ம கேட்காமலே இருக்கலாம்.” என்று நினைத்து அந்த எண்ணத்தை கைவிட்டான்.
அப்போது அவனுக்கு அவள் ஹாஸ்பிடலுக்கு சென்று அம்மாவை பார்த்துவிட்டு வந்ததாக சொன்னது ஞாபகம் வர,
“நீ ஹாஸ்பிடல் போனில.. அம்மா எப்படி இருக்காங்க?” என்று விசாரித்தான்.
“அம்மா இன்னும் அப்படியே தான் இருக்காங்க.
அவங்களுக்கு எப்ப சரியாகும்ன்னு தான் நானும் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.
அந்த நாள் சீக்கிரம் வந்தா நல்லா இருக்கும்.” என்று பிரியா சொல்ல,
“அந்த ஹாஸ்பிட்டல் நல்ல ஹாஸ்பிடல் தான்.
அங்க ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டு நிறைய பேர் சீக்கிரம் க்யூராகி நல்லபடியா வீட்டுக்கு போய் இருக்காங்க.
அம்மாவுக்கும் எல்லாமே சீக்கிரம் சரியாயிடும்.” என்று இசை சொல்ல, ம்ம்.. என்றாள் அவள்.
பின் எதையோ யோசித்த இசை, “ஆமா, அந்த நெடுமரம் இருந்தானா அங்க?” என்று தன் முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு இசை கேட்க,
குழப்பமாக அவனைப் பார்த்த பிரியா, “நெடுமரமா அப்படின்னா?
மரம்ன்னா, tree தானே? நீ எந்த மரத்தை பத்தி கேக்குற?” என்று கேட்க,
“அவன் தான் அந்த நெட்ட கொக்கு..
ஹாஸ்பிடல்ல இருப்பானே..
அவன பத்தி தான் கேட்கிறேன்.
நீ போகும்போது ஹாஸ்பிடல்ல அவன் இருந்தானா?” என்று மீண்டும் கேட்டான் இசை.
வெளி மாநிலத்தில் பிறந்து வளர்ந்து அங்கேயே படித்ததால்,
தமிழ் தாய் மொழியாக இருந்தாலும் இப்படி வட்டார வழக்கு வார்த்தைகள் எல்லாம் அவளுக்கு தெரியவில்லை.
அதனால் மீண்டும் குழப்பமாகவே அவனைப் பார்த்த ப்ரியா,
“என்ன டா மரம், கொக்குன்னு உளறிட்டு இருக்க?
நான் ஹாஸ்பிடலுக்கு போகும்போது டாக்டர் கார்த்திக் மட்டும் தான் அங்க இருந்தாரு.
அவர தான் நான் பார்த்தேன்.
நான் போன உடனே அம்மாவை செக் பண்ணி பாத்துட்டு அவங்க ஹெல்த் கண்டிஷன் எப்படி இருக்குன்னு சொல்லிட்டு தான் அவர் கிளம்புனாரு.” என்றாள்.
அவர்கள் பேசிக் கொள்வதை வைத்து அந்த ஹாஸ்பிடலில் இருக்கும் டாக்டரை இசைக்கு பிடிக்கவில்லை என்று புரிந்து கொண்ட ஜீவா,
“அந்த டாக்டர் ஹைட்டா இருப்பாரா மா?” என்று அவளிடம் கேட்க,
“ம்ம்.. ஆமா அண்ணா கார்த்திக் நல்லா ஹைட்டு தான்.
எப்படியும் 6.5 feet இருப்பாரு.
அது எப்படி உங்களுக்கு தெரியும்?” என்று கேட்டாள் அவள்.
“நாங்க யாராவது நல்லா ஹைட்டா இருந்தாங்கன்னா,
அவங்கள மரம் மாதிரி இருக்காங்க..
கொக்கு மாதிரி நெட்டையா இருக்காங்கன்னு சும்மா விளையாட்டுக்கு சொல்லுவோம்.
அதான் அவன் அந்த டாக்டரை அப்படி சொல்றான்.
இது கூட புரியலையா உனக்கு?
ஆமா நீ எந்த ஊரு..??
உங்க ஊருல இப்படி எல்லாம் நீங்க பேசிக்க மாட்டீங்களா?” என்று ஜீவா சாதாரணமாக கேட்க,
அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திருதிருவென விழித்த பிரியா இசையை பார்த்தாள்.
ஏற்கனவே அவனிடம் இவள் தன் குடும்பத்தில் பிரச்சனை அதனால்தான் யாருக்கும் தெரியாமல் அங்கே இருந்து தப்பித்து ஓடி வந்து விட்டேன் என்று அவனிடம் சொல்லி இருந்ததால்,
“அவ எந்த ஊர்ல இருந்து வந்திருந்தா என்ன இப்போ?
இனிமே ப்ரியா இங்க நம்ம கூட தான் இருக்க போறா..
சோ இதுதான் அவ ஊரு.” என்று உடனே சொல்லி சமாளித்தான் இசை.
அதுவும் சரிதான் என்று நினைத்த ஜீவா அதற்கு மேல் அதைப் பற்றி கேட்கவில்லை.
அடுத்த இரண்டு நிமிடத்தில் மூலிகை டீயை தயாரித்து அதை ஒரு சிறிய பீங்கான் கப்பில் ஊற்றி அவர்கள் இருவருக்கும் கொடுத்த பிரியா,
தனக்கும் ஒரு கப்பில் ஊற்றிக் கொண்டு சென்று சேரில் அமர்ந்தாள்.
“ஏதோ ஒரு வேகத்துல இவ கிட்ட மூலிகை டீ போட சொல்லியாச்சு..
இவளும் உடனே போட்டுக் கொண்டு வந்து குடுத்துட்டா..
ஆனா நானெல்லாம் க்ரீன் டீ கூட குடிச்சதில்லையே டா..
இதை எப்படி குடிக்கிறது?
இது வேற பாக்கவே நல்லா கருகருன்னு கசாயம் மாதிரி இருக்கே..!!”
என்று உள்ளுக்குள் புலம்பிய இசை, வேறு வழியில்லாமல் அவளுக்காக தன் கண்களை மூடிக் கொண்டு கடகடவென ஏதோ கசப்பான மருந்தை குடிப்பதை போல குடித்தான்.
அதை கவனித்த பிரியா “அட.. டீயை இப்படித்தான் குடிப்பியா?
சூடா இருக்கு பாத்து குடி..!!” என்று அக்கறையுடன் சொல்ல,
“பரவால்ல பரவால்ல.. எதுவா இருந்தாலும் நான் ஒரே கல்புல தான் அடிப்பேன்.”
என்று வீம்பிற்கு சொன்ன இசை அதை ஒரே மூச்சில் குடித்து தீர்த்தான்.
அந்த டீ செம சூடாக இருந்ததால் அவனது தொண்டை குழி முதல் அடி வயிற்றுப் பகுதி வரை கப கபவென்று உள்ளுக்குள் எரிந்தது.
அதனால் அவன் பெருமூச்சு விட, அவனது மூக்கில் இருந்து கூட சூடான புகை வந்தது.
அதைப் பார்த்து புன்னகைத்த பிரியா, “என்ன டேஸ்ட் கேவலமா இருக்கும்னு நினைச்சு பயந்துட்டியா?
எதுக்கு அப்படி சூடா குடிக்கிற லூசு..
உனக்கு பிடிக்கலைன்னா குடிக்காம இருக்க வேண்டியது தானே!” என்று சொல்ல,
“முதல்ல நானும் அப்படி நினைச்சு தான் வேகமாக குடிச்சேன்.
ஆனா அது என்ன தான் சூடா இருந்தாலும்,
உள்ள போக போக டேஸ்ட் நல்லா தான் இருந்துச்சு.
லைட்டா துளசி ஃப்ளேவர் இருந்த மாதிரி தெரிஞ்சது.
ஆனா கசக்கல. பட் இதோட டேஸ்ட் ரொம்ப டிஃபரண்டா இருக்கு.
பேருக்கு தான் நான் chef, பட் என்ன விட உனக்கு நிறைய டிஷ் நல்லாவே சமைக்க தெரியும் போல..!!” என்றான் இசை.
“ஆமாமா நானும் அதான் சொல்லலாம்னு இருந்தேன்.
மூலிகை டீ இவ்ளோ டேஸ்டா இருக்கும்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க.
இது கிரீன் டீயை விட நல்லா இருக்கு.
இந்த சின்ன வயசுலயே உங்க வீட்ல உனக்கு நிறைய விஷயத்தை சொல்லிக் கொடுத்து நல்லா வளர்த்திருக்காங்க மா.” என்று ஜீவா அவளை பாராட்ட,
அவனைப் பார்த்து விரக்தி புன்னகை சிந்திய பிரியா தன் குடும்பத்தினர்களை பற்றி நினைத்துப் பார்த்தாள்.
ஜீவா சொன்னதைப் போலவே அவளது அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா என்று அனைவரும் அவளையும் ராகுலையும் நல்ல முறையில் வளர்க்க அரும்பாடுபட்டார்கள்.
தங்களுக்கு தெரிந்த ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் அவர்கள் இவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள்.
அதை நினைத்து பார்த்த பிரியா பெருமிதத்துடன்,
“ஆமா அண்ணா, மத்தவங்க வீட்டுல எப்படியோ தெரியல..
எங்க வீட்ல சில விஷயத்துல ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருப்பாங்க.
எங்க மேல அவங்க எவ்ளோ பாசம் காட்டுனாங்களோ அதைவிட,
அதிகமா எங்களுக்கு நிறைய விஷயங்களை கத்துக்கொடுக்கனும்னு எங்க சின்ன வயசுல இருந்தே எங்களுக்கு நிறைய விஷயத்தை சொல்லிக் கொடுத்து வளர்த்தனாங்க.
எங்க தாத்தா அலோபதி டாக்டர். எங்க பாட்டி சித்தா டாக்டர்.
அந்த காலத்திலேயே எங்க பாட்டிய லவ் பண்ணி தாத்தா கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.
பேசிக்காவே எங்க ஃபேமிலி டாக்டர் ஃபேமிலி தான்.
சோ நாங்க சாப்பிடுற விதத்துல இருந்து, எங்க ஃலைப் ஸ்டைல் வரைக்கும் எல்லாத்தையும் பார்த்து பார்த்து எங்க தாத்தாவும் பாட்டியும் டிசைன் பண்ணாங்க.
இந்த ஹெர்பல் ஐட்டம்ஸ் பத்தி எல்லாம் எங்க பாட்டிக்கிட்ட இருந்து தெரிஞ்சுகிட்டது தான்.” என்றாள்.
அந்த காலத்திலேயே ஒருவர் டாக்டருக்கு படித்திருக்கிறார் என்றால் கண்டிப்பாக அவர்களது குடும்பம் சாதாரணமானதாக இருக்காது என்று நினைத்த ஜீவா,
பிரியாவை பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் ” இப்ப உங்க தாத்தா பாட்டி எல்லாம் எங்க இருக்காங்கம்மா?” என்று முதலில் இருந்து ஆரம்பிக்க,
“எங்க அம்மாவை தவிர மத்த எல்லாரும் இறந்துட்டாங்க.” என்று ஒரே சென்டென்சில் அவன் கேட்ட கேள்விக்கு full stop வைத்து பதில் சொன்னாள் பிரியா.
அவள் சொன்னதை கேட்டவுடன் ஜீவாவிற்கு அவளிடம் என்ன பேச வேண்டும் என்றே தெரியவில்லை.
தேவை இல்லாமல் அவள் குடும்பத்தினரை பற்றி பேசி அவளை தான் கஷ்டப்படுத்தி விட்டதாக நினைத்து வருத்தப்பட்டு,
“சாரி மா, உன்ன பத்தி எங்களுக்கு எதுவுமே தெரியாதுல்ல..
அதான் ஒரு கியூரியாசிட்டில கேட்டுட்டேன்.
நீ தப்பா நினைச்சுக்காத. இனிமே உன் ஃபேமிலில இருக்குறவங்கள பத்தி பேசி நான் உன்னை ஹர்ட் பண்ண மாட்டேன்.” என்று மனதார மன்னிப்பு கேட்க,
“பரவால்ல விடுங்க அண்ணா, செத்துப்போனவங்கள நினைச்சு நம்ம வருத்தப்படறதுனால அவங்க உயிரோட திரும்பி வரவா போறாங்க?
அவங்க என்னையும் ராகுலையும் எந்த இடத்தில வச்சு பாக்கணும்னு ஆசைப்பட்டாங்களோ,
அந்த இடத்துல நாங்க இருக்கணும்னு நான் நினைக்கிறேன்.
அதுதான் நான் அவங்களுக்கு செய்ற சரியான பதில் மரியாதையா இருக்கும்.
நான் அவங்களோட ஆசைய நிறைவேற்றும் போது கண்டிப்பா எங்களுக்காக அவங்க சந்தோஷப்படுவாங்க.
மத்தபடி நாங்க அவங்கள நினைச்சு அழுதுகிட்டு ஃபீல் பண்ணி மூளையில உட்கார்ந்துட்டு இருக்கணும்னு அவங்க நினைக்க மாட்டாங்க..
நான் சின்ன பொண்ணா இருக்கும்போதே, எப்பயும் எதுக்காகவும் உடைஞ்சு போகாம ஸ்ட்ராங்கா இருக்கிறது எப்படின்னு எங்க வீட்ல அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பாங்க.
அதைக் கேட்டு வளர்ந்ததுனாலையோ என்னமோ,
எவ்ளோ கஷ்டம் வந்தாலும் இந்த வாழ்க்கையை வாழறதுக்கு நம்ம ஓடிட்டே இருக்கணும்..
இதை நினைச்சு ஃபீல் பண்ணிட்டு உட்கார்ந்து இருக்க டைம் இல்லன்னு ஒரு கட்டத்துக்கு மேல தோனிடும்." என்றாள் பிரியா.
“பார்றா.. பொண்ணுங்களால இவ்ளோ அழகா, ஸ்ட்ராங்கா, இன்டெலிஜெண்டா இருக்க முடியுமா?
நெஜமாவே நீ எனக்கு காட் கொடுத்த கிஃப்ட் தான் பிரியா..
உன்னை யாருக்காகவும் எதுக்காகவும் நான் மிஸ் பண்ணவே மாட்டேன்.” என்று நினைத்த இசை அவளை பெருமிதத்துடன் பார்த்தான்.
இந்த உலகத்தில் உள்ள அனைத்து பெண்களும் பிரியாவை போலத்தான் இருக்க வேண்டும்.
அவர்களுக்கு எல்லாம் இவள் முன்மாதிரியாக இருப்பாள் என்று அவனுக்கு தோன்றியது.
- தொடரும்...

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-14
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.