Chapter-13

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
163
0
16
www.amazon.com
மாத்திரையின் விளைவால் எப்படியோ காலை வரை நிம்மதியாக உறங்கி இருந்த விஜயா தன் கண்களை திறந்து பார்த்தவுடன் நடந்த அனைத்தையும் மறந்துவிட்டு “ஐயையோ பொழுது விடிஞ்சு ரொம்ப நேரம் ஆயிடுச்சு போல..

தேனு ஸ்கூலுக்கு போகணுமே.. அவ எந்திரிச்சாளோ இல்லையோ தெரியல..!!” என்று புலம்பியபடி தனது அறையை விட்டு வெளியே வந்தாள்.

அப்போது ஹாலில் கயிற்று கட்டிலை போட்டு உதையாவும், ஆதவனும் அருகருகில் உறங்கிக் கொண்டு இருப்பதை கண்டாள்.

அதனால் “உதையா தம்பி இங்க வந்து எதுக்கு தூங்கிட்டு இருக்காரு?” என்று யோசித்த விஜயாவிற்கு அப்போது தான் தேன்மொழியை காணவில்லை என்ற ஞாபகமே வந்தது.

அதனால் உடனே அந்த பழைய கால வீட்டில் உள்ள தூண் ஒன்றில் சாய்ந்து தரையில் அமர்ந்து தன் நெஞ்சிலும் தலையிடும் அடித்துக் கொண்டு “ஐயோ தேனு.. நீ எங்க டி இருக்க?

இன்னும் எங்களால உன்ன கண்டுபிடிக்க முடியலையே.. உனக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் என்ன பண்ணுவேன்?

நான் பெத்த மகளே.. உனக்கு என்னடியாச்சு?” என்று சத்தமாக சொன்னபடி அழ தொடங்கினாள்.

அதனால் ஆதவனும், உதையாவும் ‌ பதறி அடித்துக் கொண்டு தூக்கத்தில் இருந்து எழுந்து அமர்ந்தார்கள்.

பின் உடனே விஜயாவின் அருகே சென்று அவர்கள் இருவரும் அவளை சமாதானப்படுத்த முயற்சி செய்ய, அவர்களிடமும் தேன் மொழியை பற்றி பேசி தொடர்ந்து அழுது கொண்டே இருந்தாள் அவள்.

அதனால் உடனே அனைவரும் கிளம்பி போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தார்கள்

“ஏற்கனவே நம்ம கொடுத்த கம்ப்ளைன்ட்ட அந்த இன்ஸ்பெக்டர் பெருசாவே எடுத்துக்கல. இப்போ நம்ம தூங்கி எந்திரிச்சு அப்படியே போய் நின்னா, நம்மளை எல்லாம் அவன் ஒரு ஆளவே மதிக்க மாட்டான்.

நீங்க ரெண்டு பேரும் குளிச்சு ரெப்ரெஷ் ஆகிட்டு வெயிட் பண்ணுங்க.

நான் வீட்டுக்கு போயிட்டு வர்ற வழியில உங்களுக்கு சாப்பாடு வாங்கிட்டு வந்துடறேன்.

நம்ம சாப்பிட்டுட்டு கிளம்பி போலீஸ் ஸ்டேஷன் போகலாம்.” என்று உதையா சொல்ல,

“நீங்க வேணா போய் சாப்பிட்டுட்டு வாங்க தம்பி.

என் பொண்ண பார்க்காம என் தொண்டையில ஒரு சொட்டு தண்ணி கூட இறங்காது.” என்று உறுதியாக சொல்லிவிட்டாள் விஜயா.

“தேன்மொழிய தேடி கண்டுபிடிக்கிறதுக்கு முதல்ல நம்ம உயிரோட நல்லா இருக்கணும் மா.

சரியா சாப்பிடாம கொள்ளாம இருந்து நமக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா, அவளை யார் தேடி போறது சொல்லுங்க?

சொன்னா கேளுங்கம்மா. போய் குளிச்சிட்டு ரெடி ஆகுங்க. நான் போய் நம்ம எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு வரேன்.

ஆதி போ.. அம்மாவ கூட்டிட்டு போய் ஏதாவது சொல்லி சமாதானப்படுத்து.” என்ற உதையா தன் முகத்தை கழுவி ரெப்ரெஷ் ஆகிவிட்டு தன் பைக்கை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

ஆருத்ராவை தயார் செய்து அவள் ஏதோ சின்ன குழந்தை போல அவள் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு ஹாலிற்கு வந்தாள் தேன்மொழி.

அங்கே ஜனனி தன் இரண்டு பெண் குழந்தைகளையும் தொட்டிலில் படுக்க வைத்து அவர்களை தூங்க வைக்க இனிமையான பாடல் ஒன்றை பாடிக் கொண்டு இருந்தாள்.

“மம்மீ எங்களுக்கு இந்த சாங் சுத்தமா பிடிக்கல. அதுவும் உங்க வாய்ஸ்ல கேட்கவே ரொம்ப கேவலமா இருக்கு.

ப்ளீஸ்.‌. இப்படி எல்லாம் பாடி எங்களை டார்ச்சர் பண்ணாதீங்க. ஐயோ எங்களால இதையெல்லாம் கேட்க முடியலயே‌... தயவு செஞ்சு வாய மூடுங்க...!!” என்று கோரசாக சொல்வதைப் போல அவளது இரண்டு குழந்தைகளும் ஒன்றுடன் மற்றொன்று போட்டி போட்டு அழுது கொண்டு இருந்தது.

அந்த சத்தம் கேட்டு அங்கே ஜானகியுடன் வந்த பாட்டி “குழந்தைங்க அழுதா ரெண்டு பேரையும் ஒரே இடத்துல வச்சு
சமாதானப்படுத்த முடியாது.

ஒருத்தி அழுகிறதை பார்த்தே இன்னொருத்தியும் அழுவான்னு நாங்களும் உன் கிட்ட சொல்லி சொல்லி பார்த்துட்டோம். ஆனா கேட்க மாட்டேங்கிற நீ..!!” என்று சொல்லிவிட்டு ஒரு குழந்தையை மட்டும் தூக்கி தன் தோள்களில் போட்டுக் கொண்டு “சரி மா.. சரி மா.. அழாத.. பாட்டி வந்துட்டேன்.

நான் உன்னை வெளிய கூட்டிட்டு போகவா? நம்ம ரெண்டு பேரும் வேடிக்கை பார்க்க வெளிய போலாமா?”‌ என்று குழந்தையிடம் கேட்டபடி கார்டன் ஏரியாவை நோக்கி சென்றார்.

அதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த தேன்மொழி “என்னால இந்த பேலசை ‌ விட்டு வெளியே போக முடியலைன்னாலும், அட்லீஸ்ட் கார்டன் ஏரியா வரைக்குமாவது போய் இங்க எது எங்க இருக்கு, இங்க யார் யார் இருக்காங்க?

அவங்க எல்லாரும் என்ன பண்றாங்கன்னு கண்டு பிடிக்கலாம்.

வெளிய இருந்து எனக்கு எந்த ஹெல்ப்பும் கிடைக்கலைன்னா கூட பரவால்ல.

முதல்ல இங்க இருக்கிறவங்க யாரையாவது நான் பேசி கன்வின்ஸ் பண்ணி அவங்கள எனக்கு சப்போர்ட் பண்ண வைக்கணும்.

அவங்களை வச்சுத் தான் என்னால இங்க இருந்து தப்பிச்சு போக முடியும்.

அதுக்கு எனக்கு இருக்கிற ஒரே ஒரு ஆப்ஷன் இந்த குழந்தைங்க மட்டும் தான்.

இவங்கள யூஸ் பண்ணித் தான் யாருக்கும் தெரியாம நான் இந்த இடத்தை விட்டு வெளிய போக முடியும்.” என்று நினைத்தாள்.

அதற்கு முதலில் ஆருதராவை தன் வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று அவளுக்கு தோன்ற, தன் அருகில் இருந்த ஆருத்ராவின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டு “டைனிங் ஏரியா எங்க இருக்குன்னு சொல்லு.

நம்ம ரெண்டு பேரும் இப்பவே அங்க போய் சாப்பிடலாம். மம்மீ உனக்கு எல்லாத்தையும் ஊட்டி விடுறேன்.” என்று சொல்ல,

“நெஜமாவா மம்மீ.. நீங்க எனக்கு ஊட்டி விட போறீங்களா?” என்று ஆர்வமான முகத்துடன் ஆருத்ரா கேட்க,

“ஆமா டா பாப்பா.. மம்மீ இன்னைக்கு மட்டும் இல்ல.. இனிமே டெய்லியும் உனக்கு நான் தான் சாப்பாடு ஊட்டி விடப் போறேன்.

நீ வா நம்ம சாப்பிட போலாம். தினமும் டைமுக்கு சாப்பிடணும். அது ரொம்ப ரொம்ப இம்பார்ட்டன்ட்.” என்று சொல்லி ஆருத்ராவிடம் டைனிங் ஏரியா எங்கே இருக்கிறது என்று கேட்டு அவளை அங்கே அழைத்துச் சென்றாள் தேன்மொழி.

அவர்களை கவனித்துக் கொண்டு இருந்த ஜானகி தானும் பின் தொடர்ந்து சென்று டைனிங் ஹாலை வந்தடைந்தாள்.

அங்கே ஏற்கனவே ஆபீஸ் செல்ல தயாராகி அமர்ந்திருந்த ஆகாஷ் லிண்டா உடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.‌

அவர்களின் அருகில் சித்தார்த்தும் அமர்ந்திருந்தான். தனது திட்டத்தை மனதில் வைத்திருந்த தேன்மொழி அவனைப் பார்த்து அழகாக புன்னகைத்து “குட் மார்னிங் சித்தார்த்!” என்றாள்.

இத்தனை நாட்களாக தனது அம்மா இறந்து விட்டதாக நினைத்து வருத்தப்பட்டு கொண்டு இருந்த சித்தார்த்துக்கு இப்போதும் அவளை தனது தாயாக ஏற்றுக் கொள்வதில் கொஞ்சம் குழப்பம் இருந்தது.

ஆனால் அந்த குழப்பத்தை தாண்டி அவன் அவனுடைய அம்மாவின் மீது வைத்திருந்த பாசம் பெரிது என்பதால், அதற்காகவே தானும் தேன்மொழியை பார்த்து பதிலுக்கு புன்னகைத்து “குட் மார்னிங்.” என்றான்.

ஆருத்ராவுடன் டைனிங் டேபிளில் அமர்ந்த தேன்மொழி சர்வன்ட்ஸ் அவர்கள் இருவருக்கும் உணவுகளை பரிமாறிய பிறகு தானே ஆருத்ராவின் பிளேட்டில் இருந்த உறவுகளை எடுத்து அவளுக்கு ஊட்டி விடத் தொடங்கினாள்.

அந்த காட்சியை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு இருந்த சித்தார்த்துக்கு “நிஜமாவே இவங்க தான் நம்ம மம்மீயா?

அம்மா மட்டும் தான் பாசமா எனக்கும் ருத்ராவுக்கும் இப்படி சாப்பாடு ஊட்டி விடுவாங்க.

இவங்கள பாக்கும்போது அம்மாவை பாக்குற மாதிரி தான் இருக்கு. அப்ப ஏன் அம்மா எனக்கு மட்டும் ஊட்டி விடல?

நான் அவங்க மேல சந்தேகப்பட்டு இது நம்ம அம்மாவே இல்லைன்னு சொன்னதுனால அவங்க என் மேல கோவமா இருக்காங்களா?” என்று தோன்ற, அவனது அம்மாவின் பாசம் அவனுக்கும் வேண்டும் என்ற ஆசை இருந்ததால் சோகத்தில் அரைகுறையாக சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றான்.

அனைத்தையும் கவனித்தபடி அமைதியாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்த ஜானகி “இந்த தேன் மொழிய என்னால புரிஞ்சுக்கவே முடியல.

ஒரே நாள்ல எப்படி இப்படி மாறிட்டா? நேத்து நைட் அர்ஜுன் ரூம்ல இருந்த சிசிடிவி கேமராவை நான் செக் பண்ணி பார்த்த வரைக்கும், இவளுக்கு அர்ஜுன் மேல எந்த கோபம் இருக்கிற மாதிரி தெரியல.

Infact இவளுக்கும் அவனுக்கும் நடுவுல ஏதோ ஒரு கலெக்ஷன் இருக்கிற மாதிரி தான் எனக்கு ஃபீல் ஆகுது.

அது உண்மைன்னு ப்ரூவ் பண்ற மாதிரி இவளும் நேத்து ரைட் ரொம்ப நேரம் மனசு விட்டு அவன் கிட்ட என்னமோ பேசிட்டு இருந்திருக்கா.

ஆருத்ரா அவ கூட நல்லா ஒட்டிக்கிட்டதால, ஐ திங்க் இவனுக்கும் இப்ப அவ மேல பாசம் வர ஆரம்பிச்சிருக்கும்.

இவ டீச்சர் தானே.. குழந்தைகளை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு இவளுக்கு எப்படியும் நல்லா தெரிஞ்சிருக்கும்.

அதான் இவளும் ஈசியா ஆருத்ராவை சமாளிக்கிறா. ஆனா சித்தார்த் பெரிய பையனா இருக்கறதுனால அவன் கிட்ட மட்டும் கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்றா போல!

எது எப்படி இருந்தாலும் நம்ம இன்னும் கொஞ்ச நாளைக்கு இவளை கிளோஸ்சா வாட்ச் பண்ணிட்டு தான் இருக்கணும்.” என்று நினைத்தாள்.

சாப்பிட்டு முடித்திருந்த ஆகாஷ் எழுந்து நின்று “நான் ஆபீஸ்க்கு கிளம்புறேன்.

இம்போர்ட்டண்ட் மீட்டிங்ஸ் நிறைய இருக்கு.” என்று சொல்லிவிட்டு அங்கே இந்த லிண்டாவை கட்டிப்பிடித்து அவளது இதழ்களில் லேசாக ஒரு முத்தம் வைத்து “Bye பேபி..

நான் ஆபீஸ் போயிட்டு ஃப்ரீயா இருக்கும்போது உனக்கு கால் பண்றேன். லவ் யூ” என்று சொல்ல,

தானும் அவனை அன்புடன் அணைத்துக் கொண்ட லிண்டா “பாய் பேபி லவ் யூ டூ..!!” என்று சொல்லி அவனது இதழ்களில் அழுத்தமாக தனது இதழ்களை ஒத்தி எடுத்தாள்.

தேன்மொழி அந்த காட்சியை “என்ன டா நடக்குது இங்க? குழந்தைகளுக்கு முன்னாடி என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்பதைப் போல ஆச்சரியமாக பார்க்க, அவளையும் ஜானகியையும் சாதாரணமாக பார்த்த ஆகாஷ் “பாய் மாம், பாய் அண்ணி..!!” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து என்ட்ரன்ஸ்சை நோக்கி நடக்க தொடங்கினான்.

அப்போது தான் தூங்கி எழுந்திருந்த ஆகாஷ் லிண்டாவின் ஒரே மகனான மகிழன் தன் கண்களை தேய்த்தவாறு அங்கே வந்து ஒரு சாரை இழுத்து போட்டு அமர்ந்து “எனக்கு பசிக்குது.” என்றான்.

“பிரஸ் பண்ணாம சாப்பிடக் கூடாதுன்னு மம்மீ எத்தனை தடவை உன் கிட்ட சொல்லி இருக்கேன்? Be a good boy மகிழ்..!!

போய் ரெப்ரெஷ் ஆகிட்டு குளிச்சிட்டு வந்து சாப்பிடு. இத எல்லாம் நான் என்கரேஜ் பண்ணவே மாட்டேன்.” என்று லிண்டா உறுதியாக சொல்லிவிட, அரை தூக்கத்தில் இருந்த மகிழன்

“பாருங்க பாட்டி மம்மீய.. எனக்கு பசிக்குதுன்னு சொல்றேன் என்ன சாப்பிட வரமாட்டேங்குறாங்க..!!” என்று சொல்லிவிட்டு சினுங்கினான்.

“நீ எதுவா இருந்தாலும் உங்க அம்மா கிட்ட டீல் பண்ணிக்கோ. இதுல எல்லாம் நான் தலையிட மாட்டேன்.

நான் முன்னாடியே சாப்பிட்டுடேன். எனக்கு நிறைய வேலை இருக்கு. நான் என் ரூமுக்கு போறேன்.” என்ற ஜானகி அங்கிருந்து எழுந்துசென்று விட்டாள்.

‌ அதனால் வேறு வழியில்லாமல் லிண்டாவின் பேச்சை கேட்டு குளிப்பதற்காக எழுந்து சென்றான் மகிழன்.

‌ - மீண்டும் வருவாள்..

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்:

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-13
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.