விக்ராந்த் தனது ஆட்களுடன் அவன் தம்பியை ஏமாற்றிவிட்டு தப்பிச் சென்ற நவநீதகிருஷ்ணனை தேடி சென்றான்.
டீக் கடைக்காரர் மலையின் மீது உள்ள முருகன் கோவிலில் சென்று பார்க்கச் சொன்னதால், அவனது கார் அதீத வேகத்தில் கோவிலை நோக்கி பறந்து கொண்டிருந்தது.
அப்போது காரில் அமர்ந்திருந்த விக்ராந்த்தின் முகம் வழக்கத்தை விட இறுக்கமாக இருந்ததால்,
அவன் அருகில் அமர்ந்திருந்த அஜய் “ஏன் ஒரு மாதிரி இருக்க?
அதான் இவ்ளோ தூரம் அந்த ஆள தேடி வந்துட்டோம்ல!
அப்புறம் என்ன? எப்படியாவது அவன புடிச்சிடலாம் மச்சான், நீ freeஆ விடு!” என்று சொல்ல,
“அதெல்லாம் ஒன்னும் இல்ல டா. இவன கண்டுபிடிக்கிறது எல்லாம் நமக்கு ஒரு விஷயமா சொல்லு?
மனோ மட்டும் முன்னாடியே இதை பத்தி நம்ம கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா,
அவன் எஸ்கேப் ஆகி எங்கயோ போய் ஓடி ஒளிஞ்சிகிறதுக்கு முன்னாடியே நம்ம அவனை ஈசியா புடிச்சிருக்கலாம்.
எனக்கு அதெல்லாம் கூட இப்ப பிரச்சனை இல்ல.
என் மைண்டுக்குள்ள வேற என்னமோ என்ன போட்டு டிஸ்டர்ப் பண்ணிட்டே இருக்கு..
அதே என்னன்னு எனக்கு கரெக்டா சொல்ல தெரியல. பட் ஏதோ ஒன்னு தப்பா நடக்கிற மாதிரியே ஒரு ஃபீல்.
அதான் என்னன்னு புரிய மாட்டேங்குது. ஒருவேளை நம்ம இந்த பக்கம் வந்த உடனே நமக்கு வேண்டாதவங்க யாராவது மனோவ எதாவது பண்ண பிளான் பண்ணுவாங்களோ?
அவன் நான் கால் பண்ணா எடுக்க மாட்டான்.
நீ ஒரு தடவை அவனுக்கு கால் பண்ணி அவன் எப்படி இருக்கான்னு கேக்குறியா?” என்று அவனிடம் கேட்டான் விக்ராந்த்.
“நீ உன் தம்பியையும், உன் தங்கச்சியையும் பத்தி ரொம்ப யோசிக்கிற விக்கி..
அதான் உனக்கு இப்படி எல்லாம் தோணுது.
மோனிஷாவையும் நம்ம கூட வரக் கூடாதுன்னு சொல்லி வீட்டிலயே இருக்க வச்சுட்ட..
அதனால நான் போய் மனோஜ பாத்துட்டு வரேன்னு அவ கிளம்பி அங்க தான் போயிருக்கா.
நீ அவளுக்கு வேணா கால் பண்ணி பேசி பாரு.” என்று அஜய் சொல்ல,
உடனே விக்ராந்த் தனது மொபைல் ஃபோனை எடுத்து மோனிஷாவிற்கு கால் செய்தான்.
ஆனால் அந்த இடத்தில் டவர் சரியாக கிடைக்காததால் அவனது அழைப்பு செல்லவில்லை.
மேலும் பதட்டமடைந்த விக்ராந்த் “என்னமோ மனசே சரியில்ல டா!
இந்த ஆளு பிரச்சனைய சீக்கிரம் முடிச்சிட்டு கிளம்பி ஊருக்கு போகணும்.
நான் மனோவ பார்த்து ரொம்ப நாள் ஆகுது.
அவன் தான் என் மேல இருக்கிற கோவத்துல என்ன பாக்க வர மாட்டேங்கிறான்.
இப்ப மோனியும் அங்க இருக்கிறதுனால அவள ஷாக்கா வச்சு அங்க போய் அவனை பார்த்துட்டு வந்தா பரவால்லன்னு தோணுது.”
என்று தொடர்ந்து அஜய்யிடம் ஏதேதோ சொல்லி புலம்பிக் கொண்டே இருந்தான்.
ஏதோ தவறாக நடக்கப்போகிறது என்று உணர்த்திய விக்ராந்தின் இதயம், இந்த நேரத்தில் ஷாலினியை பற்றி யோசிக்க மறந்து விட்டது.
அங்கே இயற்கை எழில் சூழ மலைக்கு மேலே இருந்த முருகன் கோவிலில் ஊர் மக்கள் அனைவரும் கூடி திருமண மேடைக்கு முன்னே அமர்ந்து இருந்தார்கள்.
விஷ்ணுவும், ஷாலினியும் மணமேடையில் திருமண கோலத்தில் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தபடி அமர்ந்து இருந்தார்கள்.
பாட்டியும் தாத்தாவும் அவர்கள் அருகில் நின்று கொண்டு இருக்க,
“நான் கிளம்பும்போதே சொல்லலாமுன்னு நெனச்சேன்.
நீ இன்னைக்கு செமையா இருக்க டி.
உன்ன ஹாஸ்பிடல்ல ஃபர்ஸ்ட் டைம் மீட் பண்ணும்போது இப்படி ஒரு நாள் உன் பக்கத்துல உன் புருஷனா உட்கார்ந்து இருப்பேன்னு நான் கொஞ்சம் கூட நினைச்சு பாக்கல.
அவ்ளோ தான் இதுக்கு மேல என் வாழ்க்கையில ஒண்ணுமே இல்லைன்னு நினைச்சு சாகுற நிலைமையில உன் கிட்ட கவுன்சிலிங் வந்தேன்.
அதுவும் என் ஃபிரண்டு வலுக்கட்டாயமா என்ன கூட்டிட்டு போனதுனால வந்தேன்.
எனக்கு நீ கவுன்சிலிங் குடுத்து, என்ன மறுபடியும் மனுஷனா மாத்தி, எனக்குள்ள வாழ்ற ஆசைய கொண்டு வந்த..
அதுல உன் கூட பேசி பழகி கடைசில எனக்கு உன் கூட வாழனும்னுற ஆசையே வந்துருச்சு.
ஆனா ஸ்டார்டிங்ல ஒரு டாக்டர் நீ ஜஸ்ட் டிப்ளமோ படிச்சிருக்கிற ஒழுங்கான வேலை இல்லாத பைத்தியக்காரன் மாதிரி இருக்கிற என்ன திரும்பி கூட பாக்க மாட்டேன்னு தான் நெனச்சேன்.
ஆனா எனக்கு உன் மேல ஃபீலிங்ஸ் இருக்குனு புரிஞ்சுகிட்டு எப்பிடி டி நீயா வந்து உன் பேஷன்ட் என் கிட்ட ப்ரொபோஸ் பண்ண?” என்று விஷ்ணு ஷாலினியிடம் மெல்லிய குரலில் கேட்டான்.
வெட்கத்துடன் அவனைப் பார்த்து புன்னகைத்த ஷாலினி “நான் உன் டாக்டரா இருந்ததுனால தான் எனக்கு உன்ன நல்லா புரிஞ்சுக்கறதுக்கான ஆப்பர்சூனிட்டியே கிடைச்சது.
ஒரு பொண்ண லவ் பண்ணி, அவ உன்ன ஏமாத்திட்டு போனதுக்கு அப்புறம் நீ எந்த அளவுக்கு mentally and physically suffer ஆகி இருந்தன்னு நான் உன் பக்கத்துல இருந்து பாத்திருக்கேன் விஷ்ணு.
உன்ன பார்க்கும்போது எல்லாம் எனக்கு அப்ப ஆச்சரியமா இருக்கும்.
ஒரு பையன் ஒரு பொண்ண இந்த அளவுக்கு எல்லாம் லவ் பண்ணி இருப்பானான்னு நெனச்சாலே அந்த பொண்ணு எவ்ளோ லக்கியா இருந்திருக்கணும்..
ஆனா ஏன் அவ இவ்ளோ முட்டாளா இருந்து உன்ன விட்டுட்டு போனான்னு நினைப்பேன்.
எப்பயும் நாங்க சில different and rare cases பத்தி ரிப்போர்ட் ரெடி பண்றதுக்கு patient-ஓட கேஸ் ஹிஸ்டரிய அனலைஸ் பண்ணுவோம்.
மத்த எல்லாரையும் விட எப்பயுமே நீ எனக்கு ரொம்ப ஸ்பெஷலா இருந்த.
அதான் நீ என் பேஷன்ட்ன்றதை தாண்டி உனக்காக உன்ன பத்தி நான் நிறைய விஷயம் விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டேன்.
உன்ன பத்தி தெரிஞ்சுக்க தெரிஞ்சுக்க என் மனசுக்குள்ள உன் மேல ஃபீலிங்ஸ் வர ஆரம்பிச்சிருச்சு.
நீ அந்த பொண்ண மறந்துட்டு டிப்ரஷன்ல இருந்து வெளிய வந்து நார்மலானதுக்கு அப்புறம்,
உனக்கு என் மேல ஒன் சைட் லவ் இருக்குன்னு மனுஷனோட மனசு மூளை எல்லாத்தையும் படிக்க தெரிஞ்ச டாக்டர் எனக்கு கண்டுபிடிக்கிறது கஷ்டமா என்ன?
அதான் இதுக்கு மேலயும் உன்ன கஷ்டப்படுத்த வேண்டாம்னு நானே ப்ரொபோஸ் பண்ணிட்டேன்.
ஆனா இப்ப யோசிச்சு பார்த்தா எனக்கு அத நெனச்சு கொஞ்சம் ஃபீலிங்கா தான் இருக்கு.
உனக்கு நான் ரொம்ப ஈஸியா கிடைச்சுட்டேன்.
அதான் என் அருமை உனக்கு தெரிய மாட்டேங்குது.
இன்னும் கொஞ்ச நாள் உன்னை என் பின்னாடி அலைய விட்டு நீயா எனக்கு ப்ரொபோஸ் பண்ணதுக்கு அப்புறம் வெயிட் பண்ணி நான் ஓகே சொல்லி இருக்கணும்.” என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.
“கண்டிப்பா என்னைக்காவது ஒரு நாள் நான் உன் கிட்ட என் மனசுல இருக்குறத சொல்லி இருப்பேன் தான்.
ஆனா அந்த நாள் வராமயே போயிடுமோன்னு நினைச்சு ஒவ்வொரு நாளும் inferiority complexல ஃபீல் பண்ணி மறுபடியும் டிப்ரசன்குள்ள போயிருப்பேன்.
அப்புறம் மறுபடியும் நான் சூசைட் அட்டெம்ப்ட் எல்லாம் ட்ரை பண்ணி இருந்தா நீ தான் என்னை காப்பாத்திருக்கணும்.
சோ எப்படிப் பார்த்தாலும் நீயே வந்து தானா என்ன லவ் பண்றத சொல்லி இருப்ப.
பட் நீ எனக்கு ஈசியா கிடைச்சுட்டதா மட்டும் சொல்லாத டி.
பொறந்ததுல இருந்து யாருமே இல்லாம அனாதை ஆசிரமத்தில வளர்ந்து, கஷ்டத்தை மட்டுமே பாத்துட்டு இருந்த எனக்கு என் லைஃப்ல வந்த ஃபர்ஸ்ட் லவ்வும் கஷ்டத்தை மட்டும் தான் குடுத்துச்சு.
உன்ன பார்த்ததுக்கு அப்புறம் தான் ஷாலு நான் உண்மையான சந்தோசம்னா எப்படி இருக்கும்னே ஃபர்ஸ்ட் டைம் அனுபவிச்சு பாத்தேன்.
என் வாழ்க்கைய மாத்த கடவுள் அனுப்பி வச்ச தேவதை டி நீ..
எனக்கு நீதான் சாமி. என்ன விட உன் அருமை இந்த உலகத்துல வேற யாருக்கு தெரியும்னு நீ நினைக்கிற?” என்று உணர்ச்சிவசப்பட்டு கண்கள் கலங்க கேட்டான் விஷ்ணு.
அவனுக்கு அவனது கடந்த கால வாழ்க்கை எல்லாம் அப்படியே ஒரு நொடி மனதில் ஒரு படமாக வந்து சென்றது.
அவன் எமோஷனல் ஆனதால் அவளுக்கும் கஷ்டமாக இருக்க,
அவன் கைகளை பிடித்துக் கொண்ட ஷாலினி “உன்னை விட யாராலையும் என்ன இந்த அளவுக்கு லவ் பண்ண முடியாதுன்னு எனக்கு நல்லா தெரியும் விஷ்ணு.
இதுவரைக்கும் நம்ம ரெண்டு பேரும் நிறைய கஷ்டப்பட்டுட்டோம்.
இனிமே நம்ம லைஃப் கண்டிப்பா நல்லா இருக்கும்.
உன் கூட இருக்கிற வரைக்கும் எப்பயும் நான் சந்தோஷமா தான் இருப்பேன்.
உன்னையும் சந்தோஷமா பாத்துக்குவேன்.
நமக்குன்னு ஒரு ஃபேமிலி இல்லைன்னு நினைச்சு இனிமே நம்ம ஃபீல் பண்ணவே கூடாது.
நீயும், நானும் சேர்ந்து புதுசா நமக்காக ஒரு குட்டி ஃபேமிலியை கிரியேட் பண்ணலாம்.” என்ற ஷாலினி அவனது தோள்களில் சாய்ந்து கொண்டாள்.
அப்போது சில மந்திரங்களை சொல்லி முடித்து இருந்த ஐயர் அவர்கள் இருவரின் கைகளிலும் சில மலர்களை கொடுத்து,
அக்னி குண்டத்திற்கு முன்னே பிடித்து வைத்திருந்த சிறிய மஞ்சள் விநாயகரிடம் மலர்களை தூவி மந்திரங்களை சொல்லி ஆசிர்வாதத்தை வாங்கிக் கொள்ளச் சொன்னார்.
அவர்கள் இருவரும் சேர்ந்து மலர்கள் தூவி விநாயகரை வணங்கி தங்களது வாழ்க்கை இனியாவது எப்போதும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்க வேண்டும் என்று பிராத்தித்து கொண்டார்கள்.
பின் சில நிமிடங்கள் தொடர்ந்து சில மந்திரங்களை சொன்ன ஐயர் ஒரு இளம் வயது பெண்ணை அழைத்து அவளிடம் அட்சதை தட்டை கொடுத்து அதில் தாலியை வைத்து அனைவரிடமும் சென்று ஆசிர்வாதம் வாங்கிவிட்டு வரும்படி சொல்லி அனுப்பினார்.
அந்தப் பெண்ணும் தட்டை எடுத்துக் கொண்டு அங்கிருந்த பெரும் கூட்டத்திற்குள் ஆசிர்வாதம் வாங்குவதற்காக நுழைந்தாள்.
இன்னும் சில நிமிடங்களில் தங்களுக்கு திருமணம் நடக்கப்போகிறது என்பதனால் விஷ்ணுவும் ஷாலினியும் ஒருவரின் கையை மற்றொருவர் இறுக்கமாக பிடித்துக் கொண்டு சந்தோஷம் கலந்த பதட்டத்துடன் அமர்ந்து இருந்தார்கள்.
அனைவராலும் ஆசிர்வாதம் செய்யப்பட்ட தாலி மீண்டும் ஐயரின் கைகளுக்கே வந்து சேர,
தாத்தாவும், பாட்டியும் ஒரு சேர அந்த தாலியை எடுத்து எல்லாம் வல்ல முருகனை வேண்டிக் கொண்டு அதை ஷாலினியின் கழுத்தில் கட்டச் சொல்லி விஷ்ணுவிடம் கொடுத்தார்கள்.
இந்த ஒரு நொடிக்காக விஷ்ணு எத்தனை வருடங்களாக காத்திருக்கிறான் என்று அவனுக்கு மட்டும் தான் தெரியும்.
அதனால் கொஞ்சம் சந்தோஷத்தோடு சேர்த்து பதட்டமும் அவனுக்கு கூடி விட,
திக் திக் இதயத்தோடு நடுங்கிய கைகளுடன் அந்த புது மஞ்சள் தாலியை தன் கைகளில் வாங்கிய விஷ்ணு ஷாலினியின் முகத்தைப் பார்த்தவாறு அவள் கழுத்தின் அருகே கொண்டு சென்றான்.
தன் இரு கைகளையும் கூப்பி அவனை தன் கணவனாக ஏற்க தயாராக இருந்த ஷாலினி கண்கள் கலங்க அவனைப் பார்க்க,
அவனும் கண்கள் குளமாகி அவனது கண்ணீர் வடிந்து கன்னத்தை தொட, தனது நீண்ட நாள் கனவை இன்று நிறைவேற்றினான்.
ஷாலினியின் கழுத்தில் தாலியை கட்டி அவளை தன் மனைவியாக்கினான் விஷ்ணு.
அங்கே இருந்த நூற்றுக்கணக்கான மக்களும், தாத்தா பாட்டியும், அவர்கள் மீது அர்ச்சதை தூவி தங்களது ஆசீர்வாதத்தை மழையாக பொழிந்தார்கள்.
அவள் தனது மனைவியாகி விட்டாள் என்ற பேரானந்தத்தில் திழைத்து இருந்த விஷ்ணு ஐயர் கொடுத்த குங்குமச் சிமிழில் இருந்த குங்குமத்தை எடுத்து அவள் நெற்றி வகுட்டில் வைத்துவிட்டு ஆசை தீர அவளது நெற்றியில் முத்தமிட்டான்.
அந்த அழகிய காதல் காட்சி அங்கே இருந்த ஃபோட்டோகிராபரால் candid moments ஃபோட்டோவாக capture செய்யப்பட்டது.
- மீண்டும் வருவாள் 💕

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-13
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.