மாறன் தன் காதல் தேடல் தவிப்பை நங்கைக்கு உணர்த்த அவளின் கண்ணீர் துளியின் ஈரம் அவன் மயக்கத்தை தெளிய வைத்தது மெல்ல அவள் கைகளை தளர்த்தி அவள் இதழ்களை விடுவித்தான்.
அப்போது தான் நங்கைக்கு மூச்சையும் விட அனுமதித்தான் போலும் அவன்.
நங்கை அப்படியே அசையாது சிலை என நின்று கொண்டிருந்தாள்.
கண்ணில் வரும் நீர் மட்டும் நிற்கவே இல்லை கன்னி அவளுக்கு.
அவள் கண்ணீரை காண முடியாதவன் வேறு புறம் தன் முகத்தை திரும்பிக் கொண்டான்.
மாறனின் இதயம் எப்போதும் தன்னவனின் கண்ணீரை கண்டால் மட்டும் அவ்வப்போது துடிப்பதை மறந்து வேலை நிறுத்தம் செய்ய துவங்குகிறது.
சுயம் உணர்ந்தவன் தன் தலையில் அடித்துக் கொண்டு ஸ்….
என்ன மாறா உனக்கு என்ன ஆச்சு உனக்கு என்ன காரியம் பண்ணிட்டேன் என்று தன் நெற்றியை தன் கைகளால் தேய்த்தான்.
அவசரப்பட்டுட்டியே மாறா.
ச்ச.. என்று தன்னையே நொந்து கொண்டான்.
என்ன மன்னிச்சிடு மோகினி என்று கூறியபடி திரும்பிப் பார்க்க அங்கு நங்கை இல்லை.
அவள் தான் எப்போதோ அவ்விடம் விட்டு சென்று இருந்தாலே.
மாறனுக்கு தன் மீதே ஆத்திரம் பொங்கியது.
கோபத்தில் தனலென எறிந்தவன் தன் கைகளை அங்கு இருந்த பாறையை நோக்கி ஓங்கி குத்தினான்.
கைகளில் சதை பெயர்ந்து மல மல என ரத்தம் வலிய துவங்கியது.
அந்த வழியெல்லாம் மாறனுக்கு சற்றும் உரைக்கவில்லை அவன் மனதில் இப்பொழுது இருப்பதெல்லாம் ஒன்றே ஒன்று மட்டும்தான்.
தன் மோகினி தன்னை பற்றி என்ன நினைத்து இருப்பாள் இனி எப்படி அவள் முகத்தில் முழிப்பது என்பது மட்டும் தான்.
தன் காயத்தை சற்றும் உணராத மாறன் அங்கிருந்து புறப்பட்டான் நங்கை அவன் கண்களில் படவே இல்லை அந்த கோயில் முழுக்க அவளை தேடி அலைந்தான் ஆனாலும் பயனில்லை.
எங்கோ சென்று மறைந்தாள் மோகினி.
சத்யா அங்கிருந்து கையில் பிரசாதம் வாங்கிக்கொண்டு அதை சாப்பிட்டபடி வர எதிரே மாறன் வருவதைக் கண்டு அதிர்ந்தாள்.
விழிகள் விரிய வாயில் சர்க்கரை பொங்கலுடன் ஆ என்று அதிர்ச்சியில் உடைந்தபடி பார்க்க
சற்று தன்னை சுதாரித்தவள் ஆத்தாடி மல குரங்கு.
இவன் எங்க இங்க வந்தா கண்ணுல சிக்கனும் இன்னைக்கு நமக்கு சங்கு தான்.
எஸ்கேப் என்ற படி தட தடவென ஓடி அங்கே ஒரு தூணின் பின் மறைந்து கொண்டாள் சத்யா.
அங்கிருந்து தலையை மட்டும் வெளியே நீட்டி அங்கும் இங்கும் மாறனை தேட அவனை காணவில்லை என்றதும் அப்பாடா தப்பிச்சோண்டா சாமி நல்ல வேலை போய்ட்டான் என்று வடிவேல் பாணியில் சொன்னவள் தன் அருகே நிழலாட நங்கையக்கா என்று சந்தோஷமாக திரும்பினாள்.
அதிர்ச்சியில் அவள் இதயமே நின்று விடும் என்றானது.
மாறன் தன் கைகளை கட்டிக் கொண்டு அவளை முறைத்தபடி அவள் முன்னே மழையென நின்று கொண்டிருந்தான் மாறன்.
ஐயோ ஆத்தாடி சிக்கினோம் டா சமாதி கட்டிடுவான்.
சத்யா சமாளி சத்யா சமாளி என்று உந்தியது அவளின் மன ஓசை.
ஹாய் சார் என்று பல்லைக் காட்ட
மாறன் நர நர வென தன் பல்லை கடித்தான்.
ஹே குட்டிசாத்தான்
ஈ ஈ ஈ …என்று பல்லை காண்பித்தாள் சத்யா.
என்கிட்ட வசமா மாட்டிகிட்டியா இனி உன்னால தப்பிக்க முடியாது என்று கோபத்தோடு கூற
சார் சார் ப்ளீஸ் சார் மன்னிச்சுக்கோங்க சார் என்று கெஞ்சினாள்.
சரி உன்ன மன்னிக்கிறேன் ஆனா அதுக்கு நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்.
எதே…. என்று கூறியவள் மனதிற்குள் என்ன மலை கொரங்கு சஸ்பென்ஸ் எல்லாம் வைக்குது.
ஹே குட்டி சாத்தான் நீ மைண்ட் வாய்ஸ் வெளியேவே பேசிட்டு இருக்க என்றான் மாறன்.
ஹையையோ..என்றவள் சமாளிப்பாக இதோ பாருங்க சார்
அதெல்லாம் முடியாது.
அப்படின்னா இந்த இடத்தை விட்டு உன்னால ஒரு அடி கூட நகர முடியாது.
வேற வழி இல்ல. ஒத்துக்குவோம் என்று எண்ணியவள் சரி சொல்லுங்க இப்ப நான் என்ன பண்ணனும்.
என் பேரு மாறன் தமிழ் மாறன் என்றான்.
நான் சத்யா என்றதும் மீண்டும் சத்யா என்ற பெயரை கேட்டவுடன் உச்ச தலையில் நங்கூரம் பாய்ந்தது போன்று உணர்ந்தான்.
அதை சத்யாவிடம் வெளி காட்டிக் கொள்ளாமல்
கடுப்பாகி என்ன பேரு இது சத்தியா சொத்தையான்னு நான் குட்டிச்சாத்தான் என்று உன்னை கூப்பிடுறேன் அதுதான் உனக்கு பொருத்தமா இருக்கும் என்றவன் சரி விஷயத்துக்கு வரேன்.
எனக்கு இந்த ஊர்ல ஒரு பொண்ணு பத்தின டீடெயில்ஸ் வேணும்.
ஐயோ சார் நான் அந்த மாதிரி பொண்ணு இல்ல என்க
அடச்சை நான் சொல்றத முதல்ல பொறுமையா கேளு.
சரி சொல்லுங்க என்றாள்.
அந்த பொண்ண நான் லவ் பண்றேன். ஓ அப்பாடா நான் கூட பயந்துட்டேன் பாஸ்சு என்று பெருமூச்சு விட்டாள்.
பாருடா
ரோபோக்கு எல்லாம் லவ் ஃபீல் என்றிட ஹே நீ இப்போ என்ன சொன்ன
ஒன்னும் இல்ல சார்…என்று வழிந்தாள்.
திடீரென அவள் கையில் இருந்த கைபேசியை பிடுங்கி தன் என்னை அதில் பதிய வைத்தவன் அவள் எண்ணில் இருந்து தன் கைபேசிக்கு மிஸ்டு கால் மூலம் அழைப்பு விடுத்து அதை பதிவேற்றிக் கொண்டான்.
குட்டி சாத்தான் என்று.
குட்டிச்சாத்தான் சரி எல்லாம் டீடெயிலும் உனக்கு போன்ல சொல்றேன் இப்ப போ என்றதும் ஈ என்று விட்டு மலகொரங்கு பை என்று ஓடியே விட்டாள்.
சத்யாவின் குரும்புத்தனத்தில் இதழ் விரித்து,புன்னகைத்தான் ஃபன்னி கேர்ல் என்றபடி தன் கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு அங்கிருந்து சென்றான்.
இந்த நங்கை அக்கா எங்க போனாங்கன்னு தெரியல என்று புலம்பி கொண்டிருக்க சத்யா என்று அழைப்பில் திரும்பினாள்.அக்கா நீங்க இங்க தான் இருக்கீங்களா?
இவ்வளவு நேரம் எங்க போயிருந்தீங்க.
இல்ல சத்யா கோயில் பிரகாரத்தை சுத்திட்டு இருந்தேன் அதுதான் கொஞ்சம் லேட்டாயிடுச்சு.
சரி வாங்கக்கா போகலாம். ஆல்ரெடி ரொம்ப லேட் ஆயிடுச்சு என்றபடி காரை நோக்கி அவளை இழுத்துக்கொண்டு போனால் சத்யா.
காரை விரைந்து இயக்கிக் கொண்டே நங்கையின் முகம் பார்த்து சத்யா
அக்கா என்ன ஆச்சு ஏன் என்னமோ போல இருக்கீங்க முகம் எல்லாம் இப்படி வாடி போய் இருக்கு என்றிட ஒரு நிமிடம் மாறன் நினைவு வந்து போனது நங்கைக்கு. என்னதான் மாறும் அவளிடம் அத்துமீறி நடந்து கொண்டு இருந்தாலும் அவனின் உண்மையான அன்பும் அவன் பரிதவிப்பும் நங்கையின் மனதில் வேரூன்றியது.
கண்களில் கண்ணீர் துளி ததும்ப புன்னகைத்தவள் அதெல்லாம் ஒன்னும் இல்ல சத்யா கொஞ்ச நேரம் நீ காணாமல் போகவும் லைட்டா பயந்துட்டேன் மத்தபடி ஒன்னும் இல்ல என்றபடி காரின் ஜன்னல் புறம் தன் முகத்தை திருப்பிக்கொண்டாள்.
இதையெல்லாம் கவனிக்கும் நிலையில் சத்யா இல்லை அவளின் சிந்தனை முழுவதும் வீட்டுக்கு குறித்த நேரத்துக்கு சென்று ஆகவேண்டும் என்பது மட்டும் தான்.
அதிவேகத்தில் கார் பாய்ந்தது.ஒரு வழியாக வீடு வந்து சேர அதே மதில் சுவற்றில் ஏறி குதிக்க அங்கே சோம்மு அண்ணா பார்த்துவிட்டார்.
இருவரும் திரு திரு என்று விழிக்க
ஐயோ அக்கா இனி என்ன பண்றது எனக்கு ஒன்னும் புரியல சத்யா இதுக்கு தான் நான் அப்பவே வரலன்னு சொன்னேன் கேட்டியா இப்போ மாதங்கி மேம்க்கு இந்த விசயம் மட்டும் தெரிஞ்சுச்சுன்னா நிச்சயமா என்னை சும்மாவே விட மாட்டாங்க.
அக்கா பயப்படாதே அக்கா பாத்துக்கலாம்.
அண்ணா என்று சத்யா அழைக்க
அம்மாடி இந்த பக்கட்டு போகாதீங்க அந்த பக்கம் ஆளுங்க எல்லாம் இருக்காங்க இப்படியா சுத்தி போங்க என்று சோமு கூற இருவரும் அதிர்ந்தனர்.
ஒருவரை ஒருவரை பார்த்துக் கொண்டு இன்ப அதிர்ச்சியில் ரொம்ப தேங்க்ஸ் அண்ணா என்றபடி அங்கிருந்து போக அவர்கள் போவதை பார்த்து மெலிதாக புன்னகைத்தார் சோமு.
சோமுவுக்கு எப்போதும் நங்கை மீது ஒரு நல்ல அபிப்பிராயம் இருக்கிறது அவள் இங்கே கஷ்டப்படுவதை எல்லாம் இவரும் கண்ணால் தானே பார்க்கிறார்.
பாவம் என்றபடி தன் வேலையை தொடர்ந்தார் சோமு.
அக்கா நீ ரூமுக்கு போ நான் அங்க ஒரு அட்டனன்ஸ் போட்டுட்டு வந்துடறேன் நின்றவள் வீட்டிற்குள் செல்ல
ஹே நில்லு சத்தியா,என்ற வித்யாவின் ஓசையில் திரும்பினாள்
சத்யா எவ்ளோ நேரம் எங்க போய்ட்டு வர என்ற கேள்வியில் உறைந்து நின்றாள்.
வசமா மாட்னோம் என்று எண்ணியவள்.
பதில் எதுவும் கூறாமல் செல்ல,
என்ன சத்தியா நான் பாட்டுக்கு கேட்டுக்கிட்டே இருக்கேன் நீ பதில் சொல்லாமல் போற.
உனக்கெல்லாம் பதில் சொல்லணும்னு எந்த அவசியமும் இல்லை என்று அங்கிருந்து நகர
சரி சத்யா கார் எங்க.
ஏன்,?????
நான் கார சர்வீஸுக்கு விட்டு இருக்கேன்.
ஓ அப்படியா. சர்வீஸ் சென்டர் என்ன
நம்ம வீட்டு பின்னாடியா இருக்கு.
திவ்யாவை புரியாமல் பார்த்தால் சத்யா.
இல்ல காரு நம்ம வீட்டுக்கு பின்னாடி தான் நிக்குது அதனால தான் கேட்டேன்.
செத்தோம்…
தொடரும் ...
Shahiabi.writter ✍🏻

Author: shahiabi தனிமையின் காதலி
Article Title: Chapter -13
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.