தூங்கி எழுந்த தேன்மொழி ரெஃப்ரெஷ் ஆகி விட்டு வந்து கட்டிலில் அமர்ந்தாள்.
அப்போது தனது நர்ஸ் உடையில் இருந்து வேறொரு சாதாரண உடைக்கு மாறி இருந்த நான்சி “வாங்க மேடம்.. நான் உங்க கிட்ட சொல்லிட்டு போலாம்னு தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.” என்றாள்.
“நீங்க கிளம்ப போறீங்களா? எப்பயும் நீங்க இங்கயே தான் என் கூட என் கூட இருப்பீங்கன்னு நினைச்சேன்.
இப்ப நீங்களும் இங்க இருந்து கிளம்பிட்டா நான் மட்டும் எப்படி தனியா இருக்கிறது?” என்று தேன்மொழி பயந்த குரலில் கேட்டாள்.
“டோன்ட் வரி மேடம். இப்ப சாருக்கு டிரெஸ்ஸிங் பண்றதுக்கு ஒரு மேல் நர்சும், இங்க உங்க கூட இருந்து சாரை ஈவினிங் வரைக்கும் பாத்துக்க ஒரு ஃபீமேல் நர்சும் வருவாங்க.
நான் தான் ரொம்ப நாளா சாரை பாத்துக்குறேன். சோ நைட் உங்க கூட இங்க என்னை ஸ்டே பண்ணிக்க சொல்லி நைட் ஷிப்ட்ல போட்டுட்டாங்க.
சோ நான் எங்க மெடிக்கல் டீம் தங்கி இருக்கிற காட்டேஜுக்கு போக போறேன். ரெஸ்ட் எடுத்துட்டு ஈவினிங் வரேன்.” என்று நான்சி சொல்ல,
“ஆமா.. நைட்டு ஃபுல்லா இவ தானே தூங்காம இருந்து அவரை பாத்துக்கிட்டா.. போய் ரெஸ்ட் எடுக்கட்டும்.” என்று நினைத்த தேன்மொழி ஆருத்ராவை நோக்கி சென்றாள்.
அப்போது அவள் மண்டையில் திடீரென்று ஒரு கேள்வி பளிச்சிட்டது.
அதனால் வெளியில் சென்று கொண்டு இருந்த நான்சியின் கையைப் பிடித்து “நான் உங்க கிட்ட ஒரே ஒரு கொஸ்டின் கேட்கிறேன். அதுக்கு மட்டும் உண்மையா பதில் சொல்றீங்களா ப்ளீஸ்?” என்று கெஞ்சலாக கேட்டாள்.
குழப்பமான முகத்துடன் அவளை பார்த்த நான்சி “உங்களுக்கு ப்ராப்பரா ஆன்சர் பண்ண கூடாதுன்னு நான் நினைக்கல.
பட் சில விஷயங்களை உங்க கிட்ட சொல்ல கூடாது, தேவை இல்லாம உங்க கிட்ட பேசவே கூடாதுன்னு எனக்கு ஆல்ரெடி நிறைய ரூல்ஸ் போட்டு இருக்காங்க மேடம்.
அதை மீறி என்னால எதுவும் பண்ண முடியாது. ப்ளீஸ் என்னை தப்பா நினைச்சுக்காதீங்க மேடம்.” என்று சொல்ல,
“எனக்கு உங்க சிச்சுவேஷன் புரியுது. நான் கேட்க போறது அவ்ளோ ஒன்னும் க்ரிட்டிக்கலான கொஸ்டின் இல்ல.
ரொம்ப சிம்பிள் தான். இந்த ஃபேமிலில இருக்கிற ஒரு சிலர் மட்டும் தான் பார்க்க இந்தியன்ஸ் மாதிரி இருக்காங்க.
மத்தவங்க எல்லாரும் foreigners தான். நீங்க பேசுற இங்கிலீஷ் கூட கொஞ்சம் டிஃபரண்டா இருக்கு.
நான் எந்த இடத்துல இருக்கேன்னு கேட்டா கண்டிப்பா நீங்க சொல்ல மாட்டீங்கன்னு எனக்கு தெரியும்..
பட் அட்லீஸ்ட் இது எந்த ஊருன்னாவது சொல்லுங்களேன் ப்ளீஸ்! உங்களால பர்டிகுலரா அப்படி எந்த பிளேஸையும் சொல்ல முடியலனா அட்லீஸ்ட் எந்த ஸ்டேட்டுன்னாவது சொல்லுங்க.
நான் எங்க இருக்கேன்? என்ன சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியாம எனக்கு பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு. அதான் அட்லீஸ்ட் இதையாவது தெரிஞ்சுக்கலாமேன்னு கேட்கிறேன்.” என்று தன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கேட்டாள் தேன்மொழி.
“எனக்கு புரியுது மேடம். நான் எந்த ஸ்டேட்னு கூட சொல்ல கூடாதுன்னு தான் நினைக்கிறேன். பட், நீங்க இவ்வளவு தூரம் கேட்கிறனால அட்லீஸ்ட் எந்த கண்ட்ரினு சொல்லலாம்னு நினைக்கிறேன்.
எப்படியும் உங்களால இந்த பேலசை தாண்டி வெளிய கூட போக முடியாது.
சோ நீங்க இத தெரிஞ்சுக்கிறதுனால எதுவும் மாறப் போறது இல்ல. அந்த தைரியத்துல சொல்றேன்.” என்று நான்சி இழுக்க, தான் இருக்கும் இடத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் இருந்த தேன்மொழி “ம்ம்.. ப்ளீஸ்.. சீக்கிரம் சொல்லுங்க..!!” என்று அவளை அவசரப்படுத்தினாள்.
“உங்களுக்கு யூரோப்பியன் கண்ட்ரிஸ் பத்தி தெரியுமா?” என்று நான்சி அவளிடம் கேட்க,
“நானே ஒரு டீச்சர். எனக்கு இது கூடவா தெரியாது? மத்த கண்ட்ரிஸ் பத்தி, கான்டினென்ட்ஸ் பத்தி எல்லாம் எங்க ஊர்ல சோசியல் சயின்ஸ் புக்ல ஸ்கூல் படிக்கும்போதே வந்துரும்.
அதை எதுக்கு இப்ப கேக்குறீங்க? நம்ம இருக்கிற இடத்துக்கும் யூரோப்பியன் கண்ட்ரிஸ்க்கும் என்ன சம்பந்தம்?” என்று தேன்மொழி கேட்க,
“ஏன்னா நீங்க இப்ப இருக்கிறதே யூரோப்ல தான்.” என்று சொல்லி அவள் மீது பெரிய ஒரு atom bombஐ தூக்கி போட்டாள் நான்சி.
அதனால் அதிர்ச்சியின் உச்சகட்டத்திற்கே சென்று விட்ட தேன்மொழி “என்னங்க சொல்றீங்க அப்ப இவங்க எல்லாரும் என்ன நாடு விட்டு நாடு கடத்திக் கொண்டு வந்திருக்கிறார்களா?
இப்படி எல்லாம் கூட நடக்குமா? என்னால நம்பவே முடியல. நீங்க சொல்றது உண்மையா?” என்று நம்ப முடியாமல் கேட்டாள்.
“நீங்க நம்பினாலும் நம்பாம போனாலும் இது தான் உண்மை மேடம்.
இன்னும் கரெக்டா சொல்லனும்னா நீங்க இப்ப இருக்கிறது ரஷ்யால.
பட் அதுக்காக வார் நடக்கிற சமயத்துல நம்ம இங்க இருக்கோமேன்னு நினைச்சு பயப்படாதீங்க.
இந்த பேலஸ் ரொம்ப சேஃப் தான். இங்க எல்லாம் யாரும் எதுவும் பண்ண முடியாது. அர்ஜுன் சாரை மீறி எதுவும் பண்ணனும்னு யாரும் நினைச்சு கூட பாக்க மாட்டாங்க.
அந்த தைரியம் இந்த உலகத்தில இருக்கிற யாருக்கும் இல்ல.
இன்னைக்கு உங்களுக்கு அது புரியாம இருக்கலாம். ஒரு நாள் உங்களுக்கு எல்லாமே புரியும் போது, நீங்க மிஸ்ஸஸ் அர்ஜுனா இருக்கிறத நெனச்சு கண்டிப்பா பெருமைப்படுவீங்க.
ஓகே மேடம், எனக்கு லேட் ஆகுது நான் கிளம்புறேன். Bye, see you later.” என்ற நான்சி அந்த அறையை விட்டு வெளியேறினாள்.
அவள் சென்ற பிறகு நேராக சென்று பொத்தென்று ஓரமாகக் கிடந்த சோஃபாவில் அமர்ந்த தேன்மொழி “என்ன சொல்லிட்டு போறா அவ?
இப்ப நான் இருக்கிறது ரஷ்யாவா? இதுவரைக்கும் நான் சென்னையை விட்டு கூட வெளியே போனதில்லையே..
என்னை போய் இவங்க ரஷ்யா வரைக்கும் கடத்திக் கொண்டு வந்திருக்காங்க..!!
ஐயோ கடவுளே.. இந்தியாவுக்குள்ள வேற ஏதாவது ஒரு ஸ்டேட்ல கடத்திக் கொண்டு போய் வச்சாலே அவங்கள கண்டுப் பிடிக்கிறதுக்கு எத்தனை நாளாகுமோ மாசம் ஆகுமோ தெரியல...
இவனுங்க இப்படி என்னை கண்ட்ரி விட்டு கன்ட்ரி கடத்திட்டு வந்திருக்காங்களே... எங்க அம்மாவும் தம்பியும் எப்படி என்ன கண்டுப் பிடிப்பாங்க?
முதல்ல இவங்க அங்க இருந்து இங்க என்ன கடத்திட்டு வந்ததை யாரும் பாக்காம இருப்பாங்களா? அது எப்படி நடந்திருக்கும்?” என்று யோசித்து தன் தலையை பிய்த்துக் கொண்டு இருந்தாள்.
அப்போது அவளுக்கு கிளாரா அவர்கள் அனைவரும் ஜெட்டில் இங்கே வந்ததாக சொன்னது ஞாபகம் வர,
“அடப்பாவிங்களா.. அப்ப என்ன பிரைவேட் ஜெட்ல இங்க கடத்திட்டு வந்திருக்கீங்களா?
அதெல்லாம் பெரிய பணக்காரங்க தானே வெச்சிருப்பாங்க..
அது சரி.. வீட்டுக்குள்ளேயே இவ்ளோ பெரிய தங்க கோயில் கட்டி வச்சிருக்கிறவங்க.. இவங்களுக்கு பிரைவேட் ஜெட் வாங்குறது என்ன பெரிய விஷயமா?” என்று யோசித்த தேன்மொழி “இப்ப ஒரு விஷயம் மட்டும் நல்லா புரியுது.
நம்மளால ஜென்மத்துக்கும் இங்க இருந்து தப்பிச்சு போக முடியாது. அர்ஜுன் சார் கோமால இருந்து சரியாகி வந்ததுக்கு அப்புறம், அவராவே மனசு வந்து என்ன புரிஞ்சுகிட்டு இங்க இருந்து அனுப்பி வச்சா தான் உண்டு.
ஆனா அதெல்லாம் எப்ப நடக்கிறது? நான் எப்ப இங்க இருந்து போறது?” என்று தோன்ற, இப்போதே அவளுக்கு அதை எல்லாம் நினைத்து தலை சுற்றுவதை போல இருந்தது.
அதனால் அப்படியே எதையெதையோ யோசித்தபடி அவள் அமர்ந்திருக்க, திடீரென உறக்கத்தில் இருந்து கண் விழித்த ஆருத்ரா தன் அருகில் தேன்மொழி இல்லாததால் “மம்மீ.. மம்மீ.. எங்க போனீங்க மம்மீ..??” என்றபடி சுற்றி முற்றி அவளைத் தேடிப் பார்த்துவிட்டு அழத் தொடங்கி விட்டாள்.
அதனால் உடனே பதறி அடித்துக் கொண்டு எழுந்து நின்ற தேன்மொழி “ஐயையோ இப்ப இந்த பொண்ணு எதுக்கு அழுகுது?” என்று முணுமுணுத்தபடி வேகமாக ஆருத்ராவின் அருகில் சென்றாள்.
அவளை கண்டவுடன் நிம்மதி அடைந்த ஆருத்ரா உடனே அவளை அணைத்துக் கொண்டு “நான் கண்ண தொறந்து பார்க்கும் போது நீங்க என் பக்கத்துல இல்லைன்ன உடனே நான் பயந்துட்டேன் தெரியுமா?
நீங்க எங்க போனீங்க? ஏன் என்னை தனியா விட்டுட்டு போனீங்க?” என்று கண்ணீருடன் கேட்க,
“இல்லை இல்லை அழாத டா பாப்பா... நான் எங்கயும் போகல. இங்க தான் இருக்கேன்.
நீ நல்லா தூங்கிட்டு இருந்த. அதான் நான் குளிக்கப் போனேன். அதுக்குள்ள நீ ஏன் பயந்து அழுகுற?
எப்ப இங்க வந்து தூங்கின? நீ வந்தது கூட எனக்கு தெரியல.” என்று அவள் சொல்ல, தான் ஒரு நொடி அவளை free ஆக விட்டாலும், அவள் எங்கையாவது சென்று விடுவாளோ என்று நினைத்து பயந்து அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்ட ஆருத்ரா “நேத்து நைட்டு ரொம்ப மழை பெய்தது.
பெரிய பெரிய இடியா இடிச்சது. எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு. என்ன பண்றதுனே தெரியல. அதான் நான் இங்க ஓடி வந்துட்டேன்.
ப்ளீஸ் எப்பயும் என் கூடவே இருங்க. மறுபடியும் என்னையும் சித்தார்த்தையும் இங்க தனியா விட்டுட்டு போயிடாதீங்க.
நீங்களே பாருங்க டாடியும் இன்னும் தூங்கிட்டு தான் இருக்காரு. நீங்க தானே அவரை எழுப்பனும்..!! சோ எப்பயும் எங்க கூடவே இருங்க.” என்று கலங்கிய கண்களுடன் சொன்னாள்.
“ம்ம்.. எனக்கு புடிச்சாலும் பிடிக்கலைனாலும் நான் உங்க கூட இங்க இருந்து தானே ஆகணும்.
எனக்கு வேற வழி இல்லையே.. அந்த கடவுள் உனக்காகத் தான் என்னை இங்க அனுப்பி வச்சிருக்கிறாருன்னு நானா தான் நெனச்சு என் மனச சமாதானப்படுத்துகிறேன்.” என்று நினைத்த தேன்மொழி,
“நான் இங்க உன் கண்ணு முன்னாடி தானே இருக்கேன்..
அப்புறம் ஏன் நான் எங்கயாவது போயிட்டா என்ன பண்றதுன்னு நினைச்சு பயப்படுற? டைம் என்னன்னு தெரியல.
இப்ப தானே தூங்கி எந்திரிச்சுருக்க நீ.. உன் ரூம் எங்க இருக்குன்னு சொல்லு. நம்ம ரெண்டு பேரும் அங்க போகலாம்.
நீ ரெஃப்ரெஷ் ஆகிட்டு, வேற ட்ரஸ் போட்டு ரெடியாகிட்டு முதல்ல போய் சாப்பிடு.” என்று தேன்மொழி ஆருத்ராவிடம் சொல்லிக் கொண்டு இருக்கும்போது அர்ஜுனை பார்த்துக்கொள்ள வருவார்கள் என்று நான்சி சொல்லிவிட்டு சென்ற வேறு இரண்டு நர்சுகள் அங்கே வந்தார்கள்.
அதனால் அவர்கள் அர்ஜுனை கவனித்துக் கொள்வார்கள். இனி அவள் இங்கே இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்த தேன் மொழி ஆருத்ராவுடன் அந்த அறையை விட்டு வெளியேறினாள்.
“உங்களுக்கு என் ரூம் எங்க இருக்குன்னு கூட தெரியாதா?” என்று ஆருத்ரா அவளிடம் கேட்க, “ம்ம்.. தெரியும் தெரியும்.. நானும் இங்க தானே இருந்திருப்பேன்..
அது எப்படி தெரியாம இருக்கும்? பட் நான் இங்க இருந்து போய் ரொம்ப நாளாச்சுல.. அதான் கொஞ்சம் கொஞ்சம் மறந்திருச்சு.” என்று தேன்மொழி சொல்லி சமாளிக்க,
“ஓகே ஓகே டோன்ட் வரி நான் உங்களை கூட்டிட்டு போறேன் மம்மீ.” என்ற ஆருத்ரா தேன்மொழியின் கையைப் பிடித்து அவளை தனது அறைக்கு அழைத்துச் சென்றாள்.
- மீண்டும் வருவாள்..
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்:
facebook.com

Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-12
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.