Chapter-12

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
163
0
16
www.amazon.com
கையில் ஒரு பியர் பாட்டிலை வைத்துக் கொண்டு கலங்கிய கண்களுடன் சோனியா மாடியில் நின்று பறந்து விரிந்த வானத்தை பார்த்துக் கொண்டிருக்க,

அவளைத் தேடிக் கொண்டு அங்கே சென்ற சார்லி அவளது சோகமான முகத்தை கவனித்தபடி,

“செல்லத்தை கையில வச்சுக்கிட்டு குடிக்காம எதுக்கு நிலாவ பாத்து சைட் அடிச்சிட்டு இருக்க?” என்று அவளிடம் கேட்டான்.‌

தன் கண்ணீரை அவனுக்கு தெரியாமல் துடைத்துவிட்டு வாடிய முகத்துடன் அவனை திரும்பிப் பார்த்த சோனியா,

“நான் ஒரு டைம்ல ஓவரா குடிச்சு ஆல்கஹால் அடிக்ட்டா இருக்கும்போது,

சீஃப் என் லைஃப்ல வந்தாரு. அவர்தான் எனக்கு ஒரு நம்பிக்கையையும், புது வாழ்க்கையையும் குடுத்தாரு.

இப்ப அதை அவரே மறுபடியும் எடுத்துக்கிட்ட மாதிரி இருக்கு.

அப்போ இந்த டீம்ல ஜாயின் பண்ணும் போது இனிமே குடிக்க மாட்டேன்னு நான் அவருக்கு ப்ராமிஸ் பண்ணேன்.

இப்போ அவராலையே எனக்கு மறுபடியும் குடிக்கணும்னு தோணுது.

ஆனா அவருக்கு பண்ண பிராமிசை மீர்றதுக்கும் ஒரு மாதிரி இருக்கு.

அதான் குடிக்கலாமா வேண்டாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்.” என்று சொல்ல,

“உன்ன பத்தி எனக்கு எல்லாமே தெரியும் சோனியா.

உங்கப்பன் ஒரு ஆல்கஹால் அடிக்ட்.

ஓசில சரக்கு கிடைக்குதுன்னு கேம்ப்லிங் நடக்கிற ஏரியாவுக்கு போய் நிறைய குடிச்சு காசை இழந்து கடன் வாங்கி செலவு பண்ணி கடன்காரங்க கடைசியில உன்ன மாட்ட வச்சுட்டான்.

உனக்கு ப்ராப்பர் எஜுகேஷன்னும் இல்லாம, நல்ல ஃபேமிலி பேக்ரவுண்டும் இல்லாம,

டீசண்டான வேலை எதுவும் கிடைக்காததுனால வேற வழி இல்லாம நீ பார் அட்டெண்டரா வேலைக்கு சேர்ந்த..

நீ அங்க இருக்கிறவங்கள சமாளிக்க முடியாம இருந்த ஸ்ட்ரெஸ்ல டிப்ரஷன் கண்ட்ரோல் பண்றதுக்கு வழி தெரியாம உங்க அப்பா மாதிரியே கடைசில நீயும் ஆல்கஹால் அடிக்ட் ஆகிட்ட.

அந்த மாதிரி நீ குடிச்சிருக்கும் போது நீ வொர்க் பண்ற பாருக்கு வந்தவங்க உன் கிட்ட தப்பா நடக்க பார்க்கும்போது,

அந்த போதையில இதே மாதிரி ஒரு பீர் பாட்டில எடுத்து தரையில போட்டு உடைச்சு ஒருத்தன் வயித்துலயே சொருகி அவன கொன்னுட்டு நீ தப்பிச்சு வரும்போது தானே சிஃப் உன்ன காப்பாத்தி உனக்கு ஹெல்ப் பண்ணாரு!” என்றான் சார்லி.

தன்னுடைய பிளாஷ்பேக் கதை இவனுக்கு எப்படி தெரியும் என்று நினைத்து ஆச்சரியப்பட்ட சோனியா,

“இதை எல்லாம் உனக்கு யார் சொன்னது? சீஃப் சொன்னாரா?” என்று நம்ப முடியாமல் கேட்க,

“அவர் எதுக்கு உன்ன பத்தி எல்லாம் என்கிட்ட பேச போறாரு?

In fact நானும் விக்ராந்த்தும் ஸ்கூல் டேஸ்ல இருந்தே ஃபிரண்ட்ஸ்.

பட் எங்கள பார்த்தா அப்படி எல்லாம் தெரியாது.

விக்கி ரொம்ப மாறிட்டான் சோனியா. நானே அவனை மரியாதையோடு அவர் இவர் பேசுற அளவுக்கு அவன் மாறிட்டான்.

அதுதான் உனக்கு புரிய மாட்டேங்குது.” என்றான் சார்லி.

“அவர் மாறிட்டாருன்னு எனக்கு தெரியும். நானும் மறுபடியும் அவரை மாத்தணும்னு தான் பார்க்கிறேன்.

ஆனா அதுதான் எப்படின்னு தெரியல.” என்று சோனியா சலிப்புடன் சொல்ல,

“அவன் கரெக்டா தான் இருக்கான். மாற வேண்டியது நீதான் சோனியா.

அவன் உன்ன மோனிஷா மாதிரி தான் பார்க்கிறேன்னு சொன்னது பொய்யில்ல.

நீதான் அவன் உன் மேல காட்டுற care and affectionஐ தப்பா புரிஞ்சுக்கற.” என்று அவளுக்கு உண்மையை புரிய வைக்கும் நோக்கில் சொன்னான் சார்லி.

ஆனால் இப்போதும் அனைத்தையும் தவறாகவே புரிந்து கொண்ட சோனியா அவனை முறைத்து பார்த்து,

“நீங்க என்ன ஒன் சைடா லவ் பண்றீங்கன்னு அஜய் என்கிட்ட சொல்லி இருக்காரு.

அதானே வேணுமே இப்படி எல்லாம் பேசுறீங்க!

அவர்தான் என்னை ஒதுக்கி வைப்பதற்காக பொய் சொல்றாருன்னா,

நீங்க உங்க selfishness-காக நான் அவருக்கு தங்கச்சி மாதிரின்னு எதுக்கு சொல்றீங்க?

இத கேக்கவே எனக்கு எப்படி இருக்கு தெரியுமா உங்களுக்கு?” என்று தன் பற்களை கடித்துக் கொண்டு எரிச்சலுடன் கேட்க,

அவளை அடிப்பதற்காக ஓங்கிய தன் கையை பாதியில் தடுத்து நிறுத்திய சார்லி,

“நீ இப்படி பேசுறது இப்ப எனக்கு எப்படி இருக்குனு தெரியுமா டி உனக்கு?

உனக்கு விக்ராந்த் மேல இருக்கிற ஃபீலிங்ஸ் எப்படி அவனுக்கு எப்பயும் புரியாதோ,

அவன் உன்ன ஏத்துக்க மாட்டானோ, அதே மாதிரி தான் நான் உன் மேல வச்சிருக்க லவ் உனக்கு இந்த ஜென்மத்துல எப்பயும் புரியாது.

இத்தனை வருஷமா விக்ராந்த் கூட இருக்கியே.. அவன பாத்தா உனக்கு பொய் சொல்ற ஆள் மாதிரியா இருக்கு?

அப்படியே அவன் பொய் சொன்னாலும், என்ன ரீசனுக்காக அவன் அதை சொல்லணும்னு நீ நினைக்கிற?

நீ அவனுக்கு வேணும்னு அவன் நினைச்சிருந்தா, நீயே அவன் வேணான்னு போனாலும் அவன் உன்னை விடமாட்டான்.

அதுதான் விக்ராந்த். அத புரிஞ்சுக்காம லூசுத்தனமா பேசிட்டு இருக்க?

இங்க பாரு.. எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்.

அதுக்காக நீ இப்படி அறிவில்லாம ஒளர்றதை எல்லாம் என்னால பொறுமையா கேட்டுட்டு இருக்க முடியாது.

உன் மேல இருக்கிற பாசத்துல தான் நீ தனியா நின்னு ஃபீல் பண்ணிட்டு இருக்கேன்னு உன்ன பாக்க வந்தேன்.

இப்போ நான் தனியா போய் குழம்பி ஃபீல் பண்ற அளவுக்கு என்ன ஹர்ட் பண்ணிட்டல..

ரொம்ப சந்தோசம் மா, நல்லா இரு.” என்று கோபமாக சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

இதுவரை சார்லி எந்த விஷயத்திற்காகவும் அவளிடம் கடுமையாக பேசியதே இல்லை.

அவன் தன்னை காதலிக்கிறான் என்று அவளுக்கு நன்றாக தெரியும்.

அந்த காதலின் வெளிப்பாடாக அவர்கள் துப்பாக்கியை தூக்கிக் கொண்டு வெளியில் தங்கள் உயிரை பணயம் வைத்து செல்லும்போது எல்லாம்,

அவர்கள் அனைவரும் விக்ராந்தை முதலில் எப்படியாவது பாதுகாப்பாக அந்த இடத்தை விட்டு அழைத்து செல்ல வேண்டும் என்று தான் முயற்சிப்பார்கள்.

ஆனால் சார்லி ஒருவன் மட்டும் எப்போதும் சோனியாவை பாதுகாப்பதை தன் முக்கியமான கடமையாக செய்வான்.

அது அவள் உட்பட அங்கிருக்கும் அனைவருக்கும் தெரியும்.

ஆனால் யாரும் பெரிதாக கண்டு கொள்ள மாட்டார்கள்.

என்றும் சோனியாவிற்கு பாதுகாப்பாக அவளின் அருகாமையில் அவள் கஷ்டப்படும் போதெல்லாம் இதற்கு முன் யாரும் இருந்ததில்லை என்பதால்,

சார்லி எப்போதும் அவளுக்கு கொடுக்கும் ஒருவித பாதுகாப்பான உணர்வு அவளுக்கு பிடித்த ஒன்று.

அப்படி இருக்கையில், இப்போது அவனே தன்னிடம் கடுமையாக பேசிவிட்டு சென்றது அவளுக்கு மேலும் வருத்தத்தை கொடுத்தது.

அதனால் சோகத்தோடு சோகமாக இதுவும் சேர்ந்து கொண்டதில் தயக்கத்தை தள்ளி வைத்துவிட்டு கையில் இருந்த பியர் பாட்டிலை ஓப்பன் செய்து மடமடவென அதை தன் தொண்டைக்குள் சரித்தாள் சோனியா.

பத்து நாட்களுக்கு பிறகு..

விக்ராந்தின் ஒரே தம்பியான மனோவின் பிசினஸ் பார்ட்னர் நவநீதகிருஷ்ணன் என்பவன் வெகு நாட்களாக தங்களுக்கு திருப்பி செலுத்த வேண்டிய பல கோடிகளை தராமல் மனோவை எரிச்சல் படுத்திக் கொண்டிருப்பதாக விக்ராந்திற்கு தகவல் கிடைத்தது.

அதனால் “அவன் எங்க இருக்கான்னு கண்டுபிடிங்க. நானே நேர்ல போய் அவன தூக்குறேன்.

எந்த பிரச்சனையும் இல்லாம என் தம்பி பிசினஸ் பண்ணனும் தான் நான் அந்த பிசினஸ் சர்க்கிள்க்குள்ள போகாமயே இருக்கேன்.

ஆனா இவன் நான் இருக்கும் போதே என்‌ தம்பியை ஏமாத்தணும்னு பார்க்கிறான்.

அதுக்கு பனிஷ்மென்டா அவன் பேங்க்ல லாக்கர்ல இருக்கிற அமவுண்ட்ல இருந்து அவன் போட்டு இருக்க டிரவுசர் வரைக்கும் எல்லாத்தையும் நம்ம உருவம்.”

என்ற விக்ராந்த் தனது ஆட்களிடம் நவநீதகிருஷ்ணன் எங்கே ஒளிந்து இருக்கிறான் என்று கண்டுபிடித்து வரச் சொன்னான்.

அவர்களும் வெறும் 24 மணி நேரத்தில் ஆங்காங்கே இருக்கும் தங்களது ஆட்களை வைத்து அவன் தனது குடும்பத்தினரோடு ஊட்டியில் உள்ள அவனது பரம்பரைக்கு சொத்தான தேயிலைத் தோட்டத்து பங்களாவில் பதுங்கி இருப்பதை கண்டு பிடித்து விக்ராந்திடம் தெரிவித்தார்கள்.

அதனால் நேரத்தை வீணாக்காமல் உடனே விக்ராந்த் தனது ஆட்களுடன் ஆயுதங்களையும் எடுத்து காரில் போட்டுக் கொண்டு ஊட்டியை நோக்கி காரில் பறந்தான்.

சில மணி நேர பயணத்திற்கு பிறகு அவர்களது கார்கள் வரிசையாக அணிவகுத்து ஒரு பிரம்மாண்டமான தேயிலை தோட்டத்திற்குள் நுழைந்தது.

தன் காரை விட்டு கீழே இறங்கிய விக்ராந்த் அந்த இடம் முழுவதிலும் நவநீதகிருஷ்ணனை தேடச் சொல்லி தனது ஆட்களை நாலாபுரமும் அனுப்பினான்.

ஆனால் அந்த இடம் வேறுச்சோடி காணப்பட்டது.

அங்கே அவர்கள் தேடி வந்த நவநீதகிருஷ்ணனும் இல்லை.

அவனது குடும்பத்தினர்களும் இல்லை. ஏன் அந்த தேயிலை தோட்டத்தில் வேலை பார்ப்பவர்களை கூட ஒருவரையும் அங்கே காணவில்லை.

அதனால் எரிசலடைந்த விக்ராந்த் “எப்படி டா எப்படி நம்ம வர்றது அவனுக்கு தெரிஞ்சது?

நம்ம இங்க வந்து ரீச் அகரத்துக்குள்ள அவன் எங்கயோ எஸ்கேப் ஆகி போயிட்டான்.” என்று கோபமாக அஜய்யிடம் சொல்ல,

“நம்ம இங்க கிளம்பி வரப் போறது நமக்கே இப்பதான் கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி தெரியும்.

அதுக்குள்ள நம்ம வர்ற இன்ஃபர்மேஷன் அவனுக்கு சொல்ற அளவுக்கு எல்லாம் அவன் சைடுல ஆளுங்க இருக்குறதுக்கு வாய்ப்பே இல்லை.

அப்படியே அவன் இங்கே இருந்து காணாம போயிருந்தாலும்,

இங்க வேலை பாக்குறவங்கள கூட விடாமையா கூட்டிட்டு போயிருக்க போறான்?

இங்க வேறு என்னமோ நடக்குது. அதுதான் என்னன்னு தெரியல.” என்றான் சார்லி.

“அது என்னனு நான் கண்டுபிடிக்கிறேன். எல்லாரும் கார்ல ஏறுங்க.

இந்த ஏரியா முழுக்கவும் நம்பர் தேடிப் பார்க்கலாம்.

என் கண்ணுல மாட்டாம அவன் எங்க போய் ஒளிஞ்சிட்டு இருக்கான்னு நானும் பாக்குறேன்.” என்ற விக்ராந்த் தன் காரில் ஏறி அமர,

அவனுடன் வந்தவர்களும் தங்களது கால்களில் ஏறி அமர்ந்து அந்த இடத்தை விட்டு கிளம்பினார்கள்.

புழுதி பறக்க வேகமாக அணிவகுத்து சென்ற அவர்களது கார்கள் அங்கே செல்லும் வழியில் இருந்த ஒரு சாலையோர டீக்கடையின் முன்னே நின்றது.

அந்தக் கடையில் இருந்தவனிடம் அஜய் “அண்ணா எங்க அந்த டீ எஸ்டேட் ல இருக்கிறவங்க யாரையும் காணோம்!

நாங்க ஒரு முக்கியமான பிசினஸ் விஷயமா அந்த எஸ்டேட் ஓனர்‌ கிட்ட பேசலாம்னு வந்தோம்.

கிளம்புற அவசரத்துல நாங்க இங்க வர்றதை பத்தி அவர்கிட்ட சொல்ல மறந்துட்டோம்..

இங்க வந்து பாத்தா யாரையுமே காணோம். உங்களுக்கு ஏதாவது தெரியுமா?” என்று கேட்க,

“அது ஒன்னும் இல்ல சார்.. இந்த சுற்று வட்டாரத்துல இருக்கிற பத்து கிராமத்துக்கும் ஒரே ஒரு ஆஸ்பத்திரி தான் இருக்கு.

அத நடத்துற டாக்டர் பொண்ணுக்கு இன்னைக்கு கல்யாணம்.

இந்த ஊர்ல இருக்கிற எல்லாரும் சேர்ந்து‌ தான் அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க.

அதனால இந்த கல்யாணத்தை திருவிழா மாதிரி நடத்தணும்னு எல்லாரும் மொத்தமா கிளம்பி மலைக்கு மேலே இருக்கிற முருகன் கோயிலுக்கு போயிருக்காங்க.

நீங்க வேணா அங்க போய் பாருங்களேன்! முதலாளியும் அங்க தான் இருப்பாரு.

நானும் இப்ப அங்க தான் கிளம்பி போயிட்டு இருக்கேன்.” என்றார் டீக்கடைக்காரர்.

இன்று என்ன ஆனாலும் விக்ராந்த் நவநீதகி
ருஷ்ணனை விட்டுவிடக்கூடாது என்று பிடிவாதமாக இருந்தான்.

உடனே அந்த மலைக் கோவிலுக்கு எப்படி செல்ல வேண்டும் என்று அந்த டீ கடைக்காரரிடமே விசாரித்துவிட்டு அங்கே சென்றார்கள்.

- மீண்டும் வருவாள் 💕
 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-12
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.