Chapter-12

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
163
0
16
www.amazon.com
பிரியாவை பற்றி யோசித்தவாறு கீழே வந்து தனது அறையில் உள்ள கட்டிளில் படுத்துக் கொண்டான் இசை.

அவன் அருகில் இருந்த கட்டிலில் படுத்திருந்த ஜீவா டூர் டூர் என்று நன்றாக குறட்டை விட்டபடி தூங்கிக் கொண்டிருக்க,

“இவனெல்லாம் நல்லா ஜாலியா குறட்டை விட்டு தூங்குகிறான்.

ஆனா நான் இந்த நடுராத்திரியில தூக்கம் வராம இப்படி தவிச்சுக்கிட்டு இருக்கேன்..!!”

என்று நினைத்த இசைக்கு அவன் மட்டும் அப்படி நிம்மதியாக தூங்குவது பொறாமையாக இருந்தது.

அதனால் தன் அருகில் இருந்த தலையணையை தூக்கி அவன் மீது தூக்கி எறிந்த இசை,

“டேய்.. நடுராத்திரில ஏண்டா குறட்டை விட்டு சாவடிக்கிற?

ஒழுங்கு மரியாதையா எந்திரிச்சு போய் ஹால்ல படு.”

என்று கத்த, அரை தூக்கத்தில் இருந்த ஜீவா தன் கண்களை தேய்த்தவாறு எழுந்து அமர்ந்தான்.

“டேய் நீதான் பிரியா கூட மேல போனில..

அங்க தான் சைட்ல ஒரு குட்டி ரூம் இருக்குல்ல..

அங்கேயே படுத்து தூங்கி தொலைய வேண்டியதுதானே..

இங்க வந்து ஏண்டா என்ன எழுப்பி விடுற?” என்று ஜீவா கோபமாக கேட்க,

“ம்ம்.. சொல்லுவ டா.. சொல்லுவ..

நல்லா மோட்டார் ரூம்ல மோட்டார் ஓட்ற மாதிரி டிடிஎஸ் எஃபெக்ட்ல குறட்டை விட்டுட்டு நான் ஏன் தூங்கலன்னு வேற கேக்குறியா நீ?

இதுக்கு முன்னாடி உனக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு நான் நடுராத்திரியில எந்திரிச்சு போய் தூக்கம் வரலைன்னா மாடியில படுத்துக்குவேன்.

இப்ப மழை வேற வருது.. நான் எங்க போறது?

பிரியா இங்க தங்கி இருக்கும் போது, நான் போய் அவ வீட்ல இருக்கிற ரூமை யூஸ் பண்ணா,

அவ என்ன பத்தி என்ன நினைப்பா?

சீக்கிரம் நீயும் நிஷாவும் மேரேஜ் பண்ணி செட்டில் ஆகி தொலைங்க டா..

அப்ப தான் என்னால உன் குறட்டை சத்தம் இல்லாம நிம்மதியா தூங்க முடியும்.”

என்று புலம்பி தள்ளினான் இசை.

“என்ன இவன் எப்பயும் புலம்பறதை விட, இன்னைக்கு கொஞ்சம் ஓவரா புலம்புரான்?

விட்டா இவனே நம்மளை அடிச்சு இங்க இருந்து துரத்தி விட்டுருவான் போல..!!

இனிமே இந்த வீட்ல நம்மளால நிம்மதியா தூங்க முடியாது.”

என்று நினைத்த ஜீவா, “ஆமா நான் போய் பொண்ணு கேட்டா உடனே அவங்க அப்பன் என்ன இந்தா ராசா என் பொண்ணு..

நீ இவள எப்ப வேணாலும் கல்யாணம் பண்ணிக்கோ..

நான் உங்கள எதுவும் கேட்க மாட்டேன்.

நீங்க சந்தோசமா வாழ்ந்தா மட்டும் போதும்னு சொல்லி எங்கள ஆசீர்வாதம் பண்ணி அனுப்பி வைப்பான் பாரு..!!

நிஷா முதல்ல சென்னையில இருந்து இங்க வரட்டும்.

அப்புறம் நான் அவளை மேரேஜ் பண்றத பத்தி எல்லாம் யோசிக்கிறேன்.

உனக்கு என்ன.. நான் குறட்டை விடுறது தானே பிரச்சனை..!!

மழை மட்டும் வரலனா இனிமே நான் போய் மொட்டை மாடியில தூங்கிக்கிறேன்.

இன்னைக்கு ஒரு நாள் மட்டும் எனக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்கோ மச்சான் ப்ளீஸ்..!!”

என்று ஜீவா அவனிடம் கெஞ்ச, “சரி சரி.. நீ என் ஃபிரண்டா போயிட்ட..

அதான் போனா போகட்டும்னு விடுறேன்.

மாடிக்கு எல்லாம் போக வேண்டாம். இனிமே நீ ஹால்ல படுத்துக்கோ.

உன் பெட்டை கொண்டு போய் அங்க போட்டுக்கோ.

இன்னைக்கு பிரியா இங்க வந்தனால நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன்.

சோ நான் சீக்கிரமா தூங்கி, என் கனவுல அவ வர்றாளான்னு பாக்க போறேன்.

நீ என்ன டிஸ்டர்ப் பண்ணாத. முதல்ல இடுத்த காலி பண்ணு..!!”

என்று உற்சாகமான குரலில் சொன்ன இசை போர்வையை தலை வரை இழுத்து போத்திக் கொண்டு படுத்தான்.

பல நாட்களுக்கு பிறகு அவனை இப்படி சந்தோஷமாக பார்ப்பதால் தானும் உள்ளுக்குள் சந்தோஷப்பட்ட ஜீவா,

“நம்ம இங்க இருந்து குறட்டை விட்டு இவன் தூக்கத்தை கெடுக்க வேணாம்."

என்று நினைத்து எழுந்து இசை சொன்னதைப் போலவே ஹாலில் உள்ள சோஃபாவில் சென்று படுத்துக் கொண்டான்.

மறுநாள் காலை மற்றவர்கள் அனைவரும் தூங்கி எழுந்து கொள்வதற்கு முன்பாகவே சீக்கிரமாக எழுந்து கொண்டாள் பிரியா.

அவளுக்கு முதல் வேலையாக தன் அம்மா ரேணுகாவை சென்று பார்க்க வேண்டும் என்று தான் தோன்றியது.

அதனால் ராகுலை கூட எழுப்பி தொந்தரவு செய்யாமல் வேகமாக குளித்து கிளம்பி சுவாமிநாதன் சித்த வைத்திய சாலைக்கு சென்றாள்‌.

அங்கே அவளைப் போலவே சீக்கிரமாக எழுந்து வந்து பேஷண்டுகளை செக் செய்து கொண்டு இருந்தான் நெடுமரம்.

அந்த நெடுமரம் யார் என்று யோசிக்கிறீர்களா?

அவன் பிரியாவை பார்த்து சைட் அடித்ததால் அவன் மீது இருந்த காண்டில் டாக்டர் சுவாமிநாதனின் மகன் கார்த்திகேயனுக்கு இசை வைத்த கொடூர பெயர் தான் ‌அது.

அதைச் செல்ல பெயர் என்று சொல்லும் அளவிற்கு ஒன்றும் இனிமையாக இல்லை.

அதனால் தான் அது கொடூர பெயர் என்று குறிப்பிட்டிருக்கிறேன்..

பிரியாவை அப்போது அங்கே எதிர்பார்த்து இருக்காத கார்த்திக்,

“wow.. what a pleasant surprise Priya..

இந்த அழகான அமைதியான மார்னிங் டைம்ல நான் உங்களை மீட் பண்ணுவேன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல..”

என்று விரிந்த புன்னகையுடன் சொல்ல,

அப்படியே தன் அம்மாவையும் பார்த்துவிட்டு ஜாகிங் செல்லலாம் என்ற நினைத்து ட்ராக் சூட்டில் வந்திருந்த பிரியா,

“நான் இங்க பக்கத்தில இருக்கிற ஒரு ரெஸ்டாரண்ட்ல மேனேஜரா ஜாயின் பண்ணி இருக்கேன் கார்த்திக்.

சோ இன்னைக்கு ஃபுல்லா ‌எனக்கு எப்படியும் வொர்க் நிறைய இருக்கும்.

நடுவுல அம்மாவை வந்து பாக்குறதுக்கு டைம் கிடைக்குமா கிடைக்காதோ..

அதான் அவங்கள பாத்துட்டு போலாம்னு வந்தேன்.

நான் முன்னாடி வந்தப்ப இங்க இருந்த நர்ஸ் ஒருத்தங்க விசிட்டர்ஸ் டைம்ல மட்டும் தான் பேஷண்டை பார்க்க முடியும்னு சொன்னாங்க.

இப்ப வந்தா டாக்டர்ஸ் எப்படியும் இருக்க மாட்டாங்க, அம்மாவை ஈஸியா பார்த்துட்டு கிளம்பிடலாம்னு நினைச்சேன்.

கடைசியில இங்க வந்து பார்த்தா.. நீங்க எனக்கு முன்னாடியே இங்க வந்துட்டீங்க..

ப்ளீஸ் அடீஸ்ட் இன்னைக்கு ஒரு நாளாவது என்னை இந்த டைம்ல எங்க அம்மாவ பாக்குறதுக்கு அலோ பண்ணுங்க..!!”

என்று கெஞ்சும் குரலில் கேட்டாள்.

“நீங்க உங்க அம்மாவை தானே பார்க்க வந்திருக்கீங்க..

விசிட்டர்ஸ் தேவை இல்லாம அப்பப்போ வந்து போயிட்டு இருந்தா அவங்கள எங்களால கவனிக்க முடியாது.

அதான் நாங்க அப்படி ரூல்ஸ் வச்சிருக்கோம்.

பட் இந்த டைம்ல பெருசா இங்கே யாரும் இருக்க மாட்டாங்க.

நீங்க போய் உங்க அம்மாவ பாக்குறதுனால எங்களுக்கு எந்த பிராப்ளமும் இல்ல.

இதுக்காக ப்ளீஸ்ன்னு எல்லாம் சொல்லி ஏன் இவ்ளோ ரெக்வெஸ்ட் பண்றீங்க?

நானும் பேஷன்ட்ஸை பார்க்க தான் போறேன்.

நீங்க என் கூட வாங்க. உங்க அம்மா எப்படி இருக்காங்கன்னு நானே ஒன்ஸ் செக் பண்ணி சொல்லிடறேன்.”

என்று கார்த்திகேயன் தாராள மானதுடன் சொல்ல,

“தேங்க்ஸ் கார்த்திக்” என்று நன்றியுடன் சொன்னாள் பிரியா.

அவளுடன் சேர்ந்து உள்ளே நடந்த கார்த்திக் “என்னை என் பேரை சொல்லி எத்தனையோ பேர் கூப்டு இருக்காங்க..

பட், நீங்க கூப்பிடும் போது மட்டும் டிஃபரண்டா ஒரு மாதிரி நல்லா இருக்கு.

நீங்க பேசுற தமிழ் ஒரு தனி அழகு.

மோஸ்ட்லி அதர் ஸ்டேட்ல இருக்கிறவங்க தான் இப்படி ஒரு டிஃபரண்ட் ஸ்லாங்ல தமிழ் பேசுவாங்க.

நீங்க வேற ஊர்ல இருந்து இங்க வந்ததா தானே சொன்னீங்க..

உங்க நேட்டிவ் பிளேஸ் எது?” என்று கேட்டுவிட்டு அவள் முகத்தை பார்த்தான்.

அப்பட்டமாகவே அவள் தயங்குவது அவள் முகத்தில் தெரிய,

“தேவை இல்லாம உங்க கிட்ட நான் பர்சனல் கொஸ்டின்ஸ் எல்லாம் கேட்கிறேன்னு நினைக்காதீங்க பிரியா...

ஜஸ்ட் சும்மா தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன். அவ்ளோதான்.

உங்களுக்கு விருப்பமில்லைனா நீங்க சொல்ல வேண்டாம்.” என்றான் கார்த்திக்.

உடனே தன் முகபாவனைகளை மாற்றிக் கொண்ட பிரியா,

“சேச்சே.. அப்படியெல்லாம் எதுவும் இல்ல.

ஆக்சுவலி எங்களுக்கு நேட்டிவ் தமிழ்நாடு தான்.

பட் எங்க அப்பா ஆந்திரா பக்கம் வேலை கிடைச்சு செட்டில் ஆயிட்டாரு.

நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் தெலுங்கானால தான்.”

என்று உடனடியாக ஏதோ ஒரு பொய்யை தயாரித்து அதை அவன் நம்பும்படி சொன்னாள்.

சரி என்று தலையாட்டிய ‌ கார்த்திக், அதற்கு மேல் அவளது பர்சனல் டீடைல்ஸ் பற்றி எதுவும் கேட்கவில்லை.

அதனால் அவள் நிம்மதி பெருமூச்சு விட, அவர்கள் இருவரும் ரேணுகா அட்மிட் செய்யப்பட்டிருந்த அறைக்கு சென்றார்கள்.

அவளை சோதித்துப் பார்த்த கார்த்திகேயன் பிரியாவிடம் அனைத்தும் நார்மலாக இருப்பதாக தெரிவிக்க,

அங்கே உள்ள மற்ற பேஷண்ட்களை டிஸ்டர்ப் செய்யாமல் தன் அம்மாவை பார்த்து பாய் சொல்லிவிட்டு அவனுடன் வெளியே வந்தாள் பிரியா.

“நீங்க எப்ப ஃப்ரீயா இருக்கீங்களோ அப்பா வந்து உங்க அம்மாவ பாருங்க.

நான் எங்க அப்பா கிட்ட ஒரு வார்த்தை உங்கள பத்தி சொல்லி வைக்கிறேன்.”

என்று கார்த்திக் அவளுக்கு மட்டும் ஒரு சிறப்பு சலுகையை கொடுக்க,

நட்புடன் அவனைப் பார்த்து புன்னகைத்த பிரியா,

“ம்ம்.. தேங்க்ஸ். ஆமா இந்த நேரத்துல ஹாஸ்பிடல்ல நீங்க என்ன பண்றிங்க?

இன்னும் முழுசா விடியவே இல்ல. அதுக்குள்ள பேஷண்ட்ஸை செக் பண்ண வந்துட்டீங்களா?” என்று ஆச்சரியமாக கேட்டாள்.

“நான் சைக்காலஜில PHD பண்ணிட்டு இருக்கேன் பிரியா.

சோ அது ரிலேட்டடா எனக்கு நிறைய ஒர்க் இருக்கு.

அதுவும் இல்லாம ரெகுலரா வர்ற பேஷன்ட்ஸை பாக்குறதுக்கே ஈவினிங் டைம் சரியா இருக்கும்.

அதான் வெளிய போறதுக்கு முன்னாடி இங்க அட்மிட் ஆகி இருக்கிறவங்க எல்லாம் எப்படி இருக்காங்கன்னு பாத்துட்டு போலாம்னு வந்தேன்.” என்றான் கார்த்திகேயன்.

“Great! நீங்க இவ்ளோ படிச்சிருப்பீங்கன்னு நான் நினைக்கவே இல்ல.

கண்டிப்பா உங்கள மாதிரி ஒரு டாக்டர் எங்க அம்மாவ பாத்துக்கிட்டா,

அவங்க நாங்க எதிர்பார்த்ததை விடவே ரொம்ப சீக்கிரம் கியூர் ஆயிடுவாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.” என்று பிரியா சொல்ல,

அப்படியே சில நிமிடங்கள் அவர்கள் இருவரும் பேசிவிட்டு தங்களது வேலையை பார்க்க அவரவருக்கான திசையில் கிளம்பினார்கள்.

திடீரென தூக்கத்தில் இருந்து கண் விழித்த ராகுல், எழுந்து சென்று பிரியா படுத்திருந்த மெத்தையை பார்த்தான்.

அங்கே அவள் இல்லாததால் அவனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.

கிட்டத்தட்ட 4 நாட்களுக்கு முன்புதான் அவன் தன் அப்பாவை பறி கொடுத்திருக்கிறான்.

அவன் அம்மா ரேணுகாவும் பக்கவாதம் வந்து ஹாஸ்பிடல் கிடக்கும் நிலையில்,

பிரியா இப்படி இந்த விடியற்காலை நேரத்தில் தன் அருகில் இல்லாமல் இருப்பதை பார்த்தவுடன் அவனை பயம் தோற்றிக் கொண்டது.

அதனால் உடனே எழுந்து சென்ற ராகுல் அவள் பாத்ரூமில் இருக்கிறாளா? என்று செக் செய்வதற்காக அங்கே சென்று கதவை வெளியில் இருந்து தட்டிப் பார்த்தான்.

உள்ளே இருந்து எந்த சத்தமும் வராததால்,

“ஏய் ப்ரியா உள்ள இருக்கியா?

நான் கதவை இத்தனை தடவை தட்டுறேன்ல.. எதுவும் சொல்ல மாட்டியா?”

என்று குரல் கொடுத்துப் பார்த்தான் ராகுல்.‌

அப்போதும் மறுமுனையில் இருந்து என்ன சத்தமும் வராததால்,

உடனே பாத்ரூமின் கதவை திறந்து உள்ளே சென்றான்.

அங்கே அவள் இல்லை. அதனால் அந்த வீடு முழுவதும் அவளை தேடிப் பார்த்த ராகுல்,

பிரியாவை எங்கும் காணாததால் ஒருவேளை கீழே ரெஸ்டாரண்டில் இருப்பாளோ? என்று நினைத்து கீழே சென்றான்.

ஆனால் இசை தங்கி இருக்கும் வீடு, ரெஸ்டாரன்ட் என்று அனைத்தும் பூட்டப்பட்டு இருந்ததால் இந்த நேரத்தில் பிரியா எங்கே சென்று இருப்பாள்? என்று அவனால் கணிக்க முடியவில்லை.

அப்போது அவன் மூளை “ஒருவேளை இவனுங்க ரெண்டு பேரும் நம்ம தூங்கிட்டு இருக்கும்போது யாருக்கும் தெரியாம அவளை ஏதாவது பண்ணி இங்க இருந்து தூக்கிட்டு போய்ட்டாங்களா?”

என்று விவகாரமாக யோசிக்க, அந்த ஒரு நொடியில் பயத்தில் கதி கலங்கி போன ராகுலின் கண்கள் கலங்கியது.

தன் அக்காவிற்கு அப்படி ஒரு கொடூரம் நடந்திருக்கும் என்று அவனால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

அதனால் பயத்திலும், கோபத்திலும் இசையின் வீட்டு கதவை அடித்தே உடைத்து விடுபவன் போல வெறி கொண்டு வேகமாக தட்டினான் ராகுல்.

அதில் திடுக்கிட்டு உள்ளே நன்றாக உறங்கிக் கொண்டிருந்த ஜீவாவும், இசையும் தூக்கம் கலைந்து எழுந்து வந்து கதவை திறந்தார்கள்.

அவர்கள் இருந்த கோலத்தைப் பார்த்தாலே அவன் போட்ட சத்தத்தில் தான் அவர்கள் தூங்கி எழுந்து வந்திருப்பது நன்றாகவே தெரிய,

“அப்ப இவங்க எதுவும் பண்ணலனா.. அவ எங்க போயிருப்பா?”

என்று யோசித்து குழம்பிய ராகுல் ‌ அவர்களைப் பார்த்தவாறு அப்படியே அமைதியாக நின்றான்.

அவன் பதட்டமாக இருப்பதை கவனித்த இசை அவன் அருகில் சென்று அவனது தோள்களில் கை வைத்து,

“என்ன டா ஆச்சு.. ஏன் ஒரு மாதிரி இருக்க?

ஏதாவது உடம்பு சரியில்லையா? நான் வேணா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகட்டுமா?

உங்க அக்கா எங்க?” என்று அடுக்கடுக்காக கேள்விகள் கேட்க,

“எங்க அக்காவ காணோம்.” என்று உடைந்த குரலில் சொன்ன ராகுல் இசையை கட்டிப்பிடித்துக் கொண்டு ஏதோ குழந்தை போல அழ தொடங்கி விட்டான்.

அவன் சொன்னதைக் கேட்டு முதலில் பதறிப் போன இசை பின் நேரத்தை கவனித்துவிட்டு,

“நாங்க நேத்து நைட்டு தூங்குறதுக்கே ரொம்ப லேட் ஆயிடுச்சு.

அதுக்குள்ள இவ தூங்கி எந்திரிச்சு எங்கேயும் போயிருக்க வாய்ப்பில்லையே..

என்னாச்சு இவளுக்கு? அவ தம்பிகிட்ட கூட சொல்லாம எங்க போனா இவ?"

என்று நினைத்து அவனும் பயந்தான்.

“அதான் பிரியா கிட்ட ஃபோன் இருக்கே!

டேய் மச்சான்.. உன் நம்பர தானே அவன் யூஸ் பண்றா..

நீ கால் பண்ணி எங்க இருக்கன்னு கேட்டா அவளே சொல்ல போறா..

அதுக்கு ஏன்டா இப்படி ரெண்டு பேரும் பயந்து சாகுறீங்க?

அதெல்லாம் நம்ம பிரியாவுக்கு எதுவும் ஆகி இருக்காது.

அவ ரொம்ப ஸ்ட்ராங்கான பொண்ணு டா." என்று ஜீவா சொல்ல,

உடனே வேகமாக கீழே கிடந்த பாத்திரங்கள் அனைத்தையும் தட்டி விட்டுவிட்டு உள்ளே ஓடிய இசை,

தனது மொபைல் ஃபோனை எடுத்து அவசர அவசரமாக பிரியாவிற்கு கால் செய்தான்.

டிரிங்க் டிரிங்க் என்று ஒவ்வொரு ரிங்காக செல்ல செல்ல,

அவனது இதயம் ராக்கெட் வேகத்தில் துடிக்க தொடங்கியது.

அவன் காலை அட்டென்ட் செய்த பிரியா,

தனது இனிமையான குரலில் “என்ன இந்த டைம்ல கால் பண்ணி இருக்க?

தூ
ங்கலையா நீ? நீங்க எல்லாரும் தூங்கிட்டு இருப்பீங்கன்னு தான் உங்க யாரையும் டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு நான் சத்தம் இல்லாமல் கிளம்பி வந்தேன்.

பட் நான் திரும்பி வர்றதுக்குள்ள நீயே எனக்கு கால் பண்ற!” என்று சொல்ல,

அவள் குரலை கேட்ட பிறகு தான் அவனுக்கு போன உயிர் மீண்டும் வந்ததை போல இருந்தது.

- மீண்டும் வருவாள் ❤️

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-12
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.