CHAPTER-12

Oviya Blessy

Member
Jan 4, 2025
46
0
6
அர்ஜுனும் ச‌ந்ராவும் வீடு வ‌ந்து சேர்வ‌த‌ற்குள் இராவாகி விட‌, வீட்டிற்குள் நுழைந்த‌ ச‌ந்ராவோ விழி விரிய‌ அந்த‌ வீட்டின் க‌ட்ட‌மைத்தான் பிர‌ம்மிப்புட‌ன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அதை பார்த்த‌ அர்ஜுனும் புன்ன‌கையுட‌ன், "இது பில்டிங் க‌ன்ஸ்ட்ர‌க்ட‌ரோட‌ வீடு. சோ கொஞ்ச‌ம் அழாக‌தான‌ இருக்கணும்?" என்று கிண்ட‌லாக‌ கூற‌,

அத‌ற்கு அவ‌ளோ பிர‌ம்மிப்புட‌ன், "உண்மையில‌யே உன்னோட‌ வீடு ரொம்ப‌ அழ‌கா இருக்கு அர்ஜுன்." என்று கூறிய‌ அடுத்த‌ நொடியே அவ‌ளின் கை விர‌ல்க‌ளுட‌ன் த‌ன் விர‌ல்க‌ளை கோர்த்து, "ந‌ம்ப‌ வீடுன்னு சொல்லு." என்று அழுத்த‌மாக‌ கூறி அவ‌ளை மேலே த‌ன்னுடைய‌ அறைக்கு அழைத்து சென்றான்.

அங்கே அர்ஜுனுடைய‌ அறையோ அந்த‌ வீட்டின் அழ‌கிற்கு ச‌ற்றும் குறையாம‌ல் அழ‌காவே இருந்த‌து. அதையும் ச‌ந்ராவின் க‌ண்க‌ள் சுற்றி பார்த்துக்கொண்டிருக்க‌, அப்போது அர்ஜுன், "நா வீக்கென்டுல‌ இங்க‌ வ‌ரும்போது, இங்க‌தா த‌ங்குவேன்." என்று கூறிய‌ப‌டி த‌ன் மெத்தையில் அம‌ர்ந்தான்.

அப்போது த‌ன் அறையை சுற்றி பார்வையை சுழ‌ல‌விட்ட‌ப‌டி நின்றிருந்த‌வ‌ளின் க‌ர‌ம் ப‌ற்றி ச‌ட்டென‌ இழுத்து த‌ன் அருகில் அம‌ர‌ வைத்த‌வ‌ன், அதில் திடுகிட்டு அவ‌ன் அவ‌ளை பார்க்க‌, "புடிச்சிருக்கா?" என்றான் அர்ஜுன்.

அதில் மேலும் திடுகிட்ட‌வ‌ள், "எ..என்ன‌?" என்று த‌டுமாற்ற‌த்துட‌ன் கேட்க‌,

அர்ஜுன், "இந்த‌ ரூம் புடிச்சிருக்கான்னு கேட்டேன்." என்றான்.

அத‌ற்கு அவ‌ள், "ம்ம்" என்று புன்ன‌கைத்தாள்.

அர்ஜுன், "செரி வா நீ த‌ங்க‌ போற‌ ரூம‌ காட்டுறேன்." என்று கூறி எழ‌,

அதை கேட்ட‌தும் இவ்வ‌ள‌வு நேர‌ம் இருந்து புன்ன‌கையை முற்றிலுமாக‌ இழ‌ந்த‌வ‌ள், முக‌மே வாடிய‌ப‌டி அதிர்ச்சியுட‌ன் அவ‌னை பார்க்க‌, அவ‌னோ திரும்பி அவ‌ளை பார்த்து, "என்ன‌ ஆச்சு? வா." என்ற‌ழைத்தான்.

அத‌ற்கு அவ‌ளும் போலியான‌ புன்ன‌கையுட‌ன் அவ‌னுட‌ன் சென்றாள். இப்பொழுது அவ‌ள் என்ன‌ எதிர்பார்த்தாள், எதற்காக‌ ஏமாந்தாள் என்று அவ‌ளுக்கே தெரிய‌வில்லை. அவ‌ளின் அனும‌தி பெறாம‌லே அவ‌ளின் ம‌ன‌ம் அவ‌னிட‌ம் செல்வ‌தை அவ‌ளாலும் த‌டுக்க‌ முடிய‌வில்லை.

பிற‌கு அந்த‌ அறைக்கு அருகில் உள்ள‌ ம‌ற்றொரு அறைக்குள் அவ‌ளை அழைத்து சென்ற‌வ‌ன், "இந்த‌ ரூம் உன‌க்கு ஓகேவா பாரு." என்று கூற‌,

அதை கேட்ட‌ ச‌ந்ராவின் க‌ண்க‌ளோ அந்த‌ அறையை ச‌ற்றும் பார்க்க‌ விரும்பாத‌ப‌டி, அவ‌னையே பார்த்த‌வ‌ள் ம‌ன‌திற்குள், "அப்ற‌ம் எதுக்கு அர்ஜுன், அந்த‌ ரூம் புடிச்சிருக்கான்னு கேட்ட‌?" என்று ம‌ன‌தில் எண்ணுவ‌தாக‌ நினைத்து வாய் திற‌ந்தே கேட்டுவிட்டாள்.

அதை கேட்டு திரும்பிய‌வ‌ன், அவ‌ளின் வாடிய‌ முக‌த்தை பார்த்துவிட்டு, "ஒன்னும் பிர‌ச்ச‌னை இல்ல‌. உன‌க்கு அந்த‌ ரூம்தா புடிச்சிருக்கின்னா, நீ அங்க‌யே த‌ங்கிக்க‌லாம்." என்று கூற‌, அதை கேட்டு அவ‌ளின் இத‌ழ்க‌ள் புன்ன‌கைக்க‌, "நா இங்க‌ த‌ங்கிக்கிறேன்." என்றான் அர்ஜுன்.

அதை கேட்டு மீண்டும் முக‌ம் வாடிய‌வ‌ள், "இல்ல‌ ப‌ர‌வால்ல‌. நா இங்க‌யே த‌ங்கிக்கிறேன்." என்றாள் வாட‌லுட‌ன்.

அதை கேட்டு அவ‌ளை ஆழ‌மாக‌ பார்த்த‌வ‌ன், "ஆர் யூ ஷ்யோர்?" என்று கேட்க‌, அவ‌ளும் போலியான‌ புன்ன‌கையுட‌ன், "ம்ம் ஷ்யோர்." என்றாள்.

அர்ஜுன், "செரி வா போய் சாப்ப‌ட‌லாம்." என்று கூற‌,

அத‌ற்கும் ச‌ந்ரா, "ம்ம்" என்று ம‌ட்டும் கூறி அவ‌னுட‌ன் சென்றாள்.

பிற‌கு அர்ஜுன் கீழே கிச்ச‌னுக்கு செல்ல‌, அங்கு அர்ஜுன் இங்கு வ‌ரும் செய்தி கேட்ட‌வுட‌னே உண‌வை ஆட‌ர் செய்து வைத்திருந்தார் அந்த‌ வீட்டின் தோட்ட‌க்கார பெண். அந்த‌ உண‌வுக‌ள் அனைத்தும் வ‌ந்துவிட‌, இருவ‌ரும் சென்று உண‌வு உண்ட‌ன‌ர். அப்போது ச‌ந்ராதான் ச‌ற்று அதிக‌மாக‌வே உண்டுக்கொண்டிருந்தாள். அவ‌ள் 15 நாட்க‌ள் உண‌வு த‌ண்ணி இல்லாம‌ல் த‌வ‌ம் இருந்த‌தால், இப்போது அவ‌ளின் ப‌சி அட‌ங்க‌வே இல்லை. ஏற்க‌ன‌வே லிங்ஜேஷ்வ‌ர‌னின் க‌ல்ல‌றைக்கு செல்லும் வ‌ழியிலேயே ஒரு ஹோட்ட‌லில் காரை நிறுத்தி இருவ‌ரும் ம‌திய‌ உண‌வை முடித்துவிட்டுதான் சென்ற‌ன‌ர். ஆனாலும் இப்போது ஏனோ ச‌ந்ராவிற்கு ப‌சி அட‌ங்க‌வே இல்லை.

அவ‌ள் இப்ப‌டி வேக‌மாக‌ நிறைய‌ உண்ப‌தை ஒரு நிமிட‌ம் இர‌ச‌னையாய் பார்த்துக்கொண்டிருந்த‌வ‌ன், அன்னிச்சையாய் அவ‌ள் அவ‌னை பார்க்கும்போதுதான் த‌ன்னில‌ய‌டைந்து பார்வையை திருப்பினான். அப்போது அவ‌ளுக்கு புரையேறிவிட‌, உட‌னே அவ‌ள் த‌லையை த‌ட்டிவிட்டு த‌ண்ணீரை புக‌ட்டிய‌வ‌ன், "பாத்து மெதுவா சாப்புடு ச‌ந்ரா." என்று கூற‌,

அவ‌ளும் அத‌ன் பிற‌கு பொறுமையாக‌வே சாப்பிட்டாள். அதையும் பார்த்து இர‌ச‌னையுட‌ன் புன்ன‌கைத்த‌வ‌ன் ம‌ன‌திற்குள், "என‌க்காக‌தான‌ நீ இவ்ளோ க‌ஷ்ட்ட‌ப்ப‌ட்ட‌? ஆனா ஏ ச‌ந்ரா?" என்று எண்ணிய‌ப‌டி அவ‌ளை ச‌ந்தித்த‌ முத‌ல் நாளிலிருந்து அனைத்தையும் நினைத்து பார்த்துக்கொண்டே உண்ணு முடித்தான். ச‌ந்ராவும் சாப்பிட்டு முடித்த‌தும் அர்ஜுன், "ஸ்டொம‌க் ஃபுல்லா?" என்று கேட்க‌,

அவ‌ளும் "ம்ம்" என்றாள்.

அத‌ற்கு அர்ஜுன், "அப்பாடா! ந‌ல்ல‌வேள‌ ப‌சியில‌ பிளேட்டு ட‌ம்ள‌ரையும் சேத்து சாப்பிட்டிருவ‌ன்னு நென‌ச்சேன்." என்று கிண்ட‌ல் செய்ய‌, அதை கேட்டு சிணுங்கிய‌ப‌டி, "ச் என்ன‌ அர்ஜுன்.." என்று கூற‌,

அத‌ற்கு சிரித்துக்கொண்ட‌வ‌ன், "சும்மா சொன்னேன். இன்னும் சாப்புடுற‌தா இருந்தாக்கூட‌ சாப்புடு. ஆட‌ர் ப‌ண்ணிக்க‌லாம்" என்றான்.

ச‌ந்ரா, "இல்ல‌ போதும்." என்று கூறி எழ‌, அர்ஜுனும் சாப்பிட்டு அங்கிருந்து எழுந்தான்.

பிற‌கு இருவ‌ரும் கை க‌ழுவிவிட்டு த‌ங்க‌ள் அறைக்கு செல்ல‌, முத‌ல் அர்ஜுனின் அறையை அடைந்த‌தும், "ஓகே குட் நைட்." என்றான் அர்ஜுன்.

அத‌ற்கு ச‌ந்ராவும் க‌டின‌ப்ப‌ட்டு புன்ன‌கைத்த‌ப‌டி, "ம்ம் குட் நைட்." என்றாள்.

பிற‌கு அர்ஜுன் அறைக்குள் சென்றுவிட‌, ச‌ந்ராவும் த‌ன்னுடைய‌ அறைக்கு சென்றுவிட்டாள். அங்கு சென்று மெத்தையில் அம‌ர்ந்த‌வ‌ள், "என‌க்கு என்ன‌ ஆச்சு? நா அர்ஜுன்கிட்ட‌ என்ன‌ எதிர்பாக்குறேன்?" என்று புரியாம‌ல் குழ‌ம்பிப்போய் யோசித்துக்கொண்டே மெத்தையில் சாய்ந்தாள்.

அப்போது திடீரென்று அவ‌ளுக்கு இரும‌ல் வ‌ர‌, அப்போதே சாப்பிட்டு முடித்துவிட்டு த‌ண்ணீர் குடிக்காம‌ல் வ‌ந்துவிட்ட‌து நினைவிற்கு வ‌ந்த‌து. அத‌னால் உண்ட‌ உண‌வின் கார‌ம் தொண்டையில் உண‌ர‌, த‌ன் அறையிலேயே த‌ண்ணீரை தேடினாள். ஆனால் அது இல்லாத‌தால் உட‌னே இருமிக்கொண்டே ச‌மைய‌ல‌றையை நோக்கி சென்றாள்.

அங்கு சென்று த‌ண்ணீரை எடுத்து குடித்த‌வ‌ளுக்கு, "ந‌ல்ல‌வேள‌ ப‌சியில‌ பிளேட்டு ட‌ம்ள‌ரையும் சேத்து சாப்பிட்டிருவ‌ன்னு நென‌ச்சேன்." என்று அர்ஜுன் ச‌ற்று முன்பு கூறிய‌து நினைவிற்கு வ‌ர‌, அதை எண்ணி புன்ன‌கைத்த‌வ‌ள், "உன‌க்கு காம‌டிக்கூட‌ ப‌ண்ண‌ தெரியுமா அர்ஜுன்?" என்று த‌ன‌க்குத்தானே சொல்லி சிரித்துக்கொண்டாள். பிற‌கு அவ‌னை ச‌ந்தித்த‌ முத‌ல் நாளிலிருந்து அனைத்தையும் நினைத்து பார்த்த‌வ‌ளுக்கு, அன்று த‌ய‌க்க‌த்துட‌ன் த‌ன்னுட‌ன் ப‌ழ‌கிய‌ அர்ஜுனுக்கும் இன்று த‌ன்னுட‌ன் ச‌க‌ஜ‌மாக‌ ப‌ழ‌கும் அர்ஜுனுக்கு வித்தியாச‌ம் ந‌ன்றாக‌வே தெரிந்த‌து. அவ‌ற்றை எண்ணி பார்த்து புன்ன‌கைத்துக் கொண்டிருந்த‌வ‌ளுக்கு காரில் வ‌ரும்போது அவ‌ன் அவ‌னை ப‌ற்றி கூறிய‌ அனைத்தும் நினைவிற்கு வ‌ர‌, "நீ ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ன் அர்ஜுன்." என்று ம‌ன‌திற்குள் கூறிக்கொண்டாள்.

அப்போதே அவ‌ளுக்கு அந்த‌ காரின் ஜ‌ன்ன‌ல் வ‌ழியாய் தெரிந்த‌ கோவிலும் அத‌ன் ச‌த்த‌மும், அத‌னால் த‌ன‌க்குள் தோன்றிய‌ மாற்ற‌ங்க‌ளும் குழ‌ப்ப‌ங்க‌ளும் அந்த‌ ப‌ய‌ங்க‌ர‌ நினைவுக‌ளும்கூட‌ மீண்டும் அவ‌ள் நினைவிற்கு வ‌ந்து இம்சிக்க‌ ஆர‌ம்பிக்க‌, அதில் மீண்டும் த‌ன் த‌லையை பிடித்துக்கொண்டு அவ‌ற்றை புற‌க்க‌ணிக்க‌ முய‌ற்சித்த‌வ‌ள், என்ன‌ செய்தும் முடியாம‌ல் த‌லை வ‌லி ஒரு ப‌க்க‌ம் அந்த‌ இர‌த்த‌ க‌ரையும் க‌த‌ற‌ல் ச‌த்த‌மும் ஒரு ப‌க்க‌ம் என்று பாடாய்ப்ப‌டுத்தி எடுக்க‌, ஒரு க‌ட்ட‌த்திற்குமேல் முடியாம‌ல் ம‌ய‌ங்கி கீழே விழுந்தாள்.

அப்போதே த‌ண்ணீர் எடுக்க‌ த‌ன் அறையிலிருந்து ஜாடியுட‌ன் கீழே இற‌ங்கி வ‌ந்த‌ அர்ஜுன், ச‌மைய‌ல‌றைக்குள் நுழ‌ந்த‌தும் அதிர்ச்சிய‌டைந்து, "ச‌ந்ரா!" என்று அழைத்த‌ப‌டி அவ‌ள் அருகில் சென்று அவ‌ள் க‌ன்ன‌ங்க‌ளை உலுக்க‌, அவ‌ளோ அசைவில்லாம‌ல் கிட‌ப்ப‌தை பார்த்து ப‌த‌றி, உட‌னே சென்று த‌ண்ணீரை எடுத்து அவ‌ள் முக‌த்தில் தெளித்தான். அதில் மெல்ல‌ ம‌ய‌க்க‌ம் தெளிந்து க‌ண்விழிக‌ளை அசைத்த‌ப‌டி, க‌ண் இமைக‌ளை மெல்ல‌ பிரித்த‌ப‌டி அர்ஜுனை பார்த்து, "அர்ஜுன்!" என்றாள் மெதுவாக‌.

அப்போதே நிம்ம‌திய‌டைந்த‌வ‌ன், அவ‌ளை த‌ன் மார்போடு அணைத்த‌ப‌டி பெருமூச்சுவிட்டான். பிற‌கு அவ‌ளை வில‌க்கி அவ‌ள் முக‌ம் ப‌ற்றி, "ஆர் யூ ஓகே? என்ன‌ ஆச்சு உன‌க்கு?" என்று ப‌த‌றி கேட்க‌,

அத‌ற்கு ச‌ந்ரா சோர்வுட‌ன், "தெரிய‌ல‌ திடீர்னு த‌ல‌ சுத்திருச்சு." என்று கூறி ச‌மாளித்தாள்.

அர்ஜுன், "ஐ திங்க் நீ அந்த‌ கோவில்ல‌ ரொம்ப‌ நாள் த‌வ‌ம் ப‌ண்ணாதால‌ இப்பிடி ஆயிருக்க‌லாம். எந்த‌ நினைவும் இல்லாமே ஒரே நிலையில‌ இருந்திருக்க‌. அத‌னால‌தா த‌ல‌ சுத்திருக்கும்னு நெனைக்கிறேன். செரி நீ வா போய் ரூமுல‌ ரெஸ்ட் எடுக்க‌லாம்." என்று கூற‌, ச‌ந்ராவும் மெல்ல‌ எழுந்து நின்றாள்.

பிற‌கு அவ‌ளை கைத்தாங்க‌லாக‌ அழைத்து சென்று அவ‌ள் அறையில் ப‌டுக்க‌ வைத்த‌வ‌ன், பிற‌கு கீழே வ‌ந்து ஒரு ஜாடியில் த‌ண்ணீரை எடுத்து வ‌ந்து அவ‌ள் அறையில் வைத்துவிட்டு, "த‌ண்ணிய‌ இங்க‌ வெக்கிறேன். வேற‌ எதாவ‌துன்னா என்னையே கூப்புடு." என்று கூற‌, அவ‌ளும் "ம்ம்" என்றாள்.



பிற‌கு அவள் அருகில் வ‌ந்த‌வ‌ன், அவ‌ளுக்கு போர்வையை ச‌ரியாக‌ போர்த்திவிட்டு, "ந‌ல்லா தூங்கி ரெஸ்ட் எடு. அப்ப‌தா மைன்ட் ஃபிர‌ஷா இருக்கும். ம்ம்?" என்று கூற‌,

அத‌ற்கு அவ‌ளும் சிறு புன்ன‌கையுட‌ன், "ம்ம்" என்றாள்.



பிற‌கு அவ‌ள் க‌ன்ன‌ம் ப‌ற்றி மெல்லிய‌தாக‌ புன்ன‌கைத்த‌வ‌ன், பிற‌கு எழுந்து செல்ல‌, ச‌ந்ராவின் ம‌ன‌ம்தான் அவ‌ன் அருகாமையை மேலும் வேண்டும் என்று விரும்பிய‌து. அது ஏக்க‌மாக‌ அவ‌ள் பார்வையிலேயே தெரிய‌, செல்லும் அர்ஜுனையேதான் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவ‌னோ அறை க‌த‌வை மூடிவிட்டு த‌ன் அறைக்கு சென்றுவிட்டான். சென்று த‌ன் மெத்தையில் சாய்ந்த‌வ‌னுக்கோ ம‌ன‌மெல்லாம் ச‌ந்ராவின் இந்த‌ நிலைக்கு தான் தான் கார‌ண‌ம் என்றே கூறிய‌து. த‌ன‌க்காக‌தான் இவள் இவ்வளவு கஷ்டப்பட்டாள். இனியாவது இவளின் கஷ்டங்கள் அனைத்தும் தனக்கே வர வேண்டும் என்று வேண்டிக்கொண்டான்.

சிறிது நேர‌த்தில் அவ‌ன் மெல்ல‌ க‌ண் அச‌ற‌, அப்போதே ச‌ந்ராவின் அல‌ற‌ல் ச‌த்த‌ம் கேட்டு திடுகிட்டு எழுந்த‌வ‌ன், ச‌ற்றும் யோசிக்காம‌ல் அவ‌ள் அறை நோக்கி ஓடினான்.

வேக‌மாக‌ சென்று அவ‌ள் அறை க‌த‌வை திற‌க்க‌, அங்கு ச‌ந்ராவோ முக‌மெல்லாம் வேர்த்து ந‌டுந‌டுங்கிய‌ப‌டி எழுந்து அம‌ர்ந்திருந்தாள். அதை பார்த்து அதிர்ந்து ப‌த‌றிய‌வ‌ன், உட‌னே சென்று அவ‌ள் அருகில் அம‌ர்ந்து, "ச‌ந்ரா என்ன‌ ஆச்சு?" என்று அவ‌ளின் கூந்த‌லை வில‌க்கி அவ‌ள் முக‌ம் பார்க்க‌ முய‌ற்சிக்க‌, அவ‌ளோ ப‌ட்டென்று அவ‌னை க‌ட்டிக்கொண்டுவிட்டாள். அதில் திடுக்கிட்ட‌வ‌ன் பிற‌கு அவ‌ளின் நிலை க‌ண்டு ப‌த‌றி, அவ‌னும் அவ‌ளை அணைத்துக்கொண்டு, "ரிலேக்ஸ் ச‌ந்ரா. என்ன‌ ஆச்சு?" என்று கேட்க‌,



அவ‌ளோ அவ‌னை இறுக‌ அணைத்த‌ப‌டி, "அ..அந்த‌ க‌..க‌ன‌வு ரொம்ப‌ ப‌ய‌ங்க‌ர‌மா இருந்த‌து அர்ஜுன். அ..அது ரொ..ரொம்ப‌ ப‌ய‌ங்க‌ர‌மா இருந்த‌து." என்று கூறி ந‌டுங்கிக்கொண்டிருந்தாள்.



அவ‌ள் நிலை க‌ண்டு மேலும் அவ‌ளை இறுக‌ அணைத்த‌வ‌ன், "ஒன்னும் இல்ல‌. அது வெறும் க‌ன‌வுதா. நீ ரிலேக்ஸா ரெஸ்ட் எடு." என்று கூறி அவ‌ள் பின்ன‌ந்த‌லையை அழுந்த‌ கோதிவிட‌, அவ‌னின் அருகாமையே அவ‌ளின் ப‌ய‌த்தை கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ குறைத்த‌து. அதை உண‌ர்ந்த‌ அர்ஜுனும், "செரி நீ ரிலேக்ஸா தூங்கு." என்று அவ‌ளை த‌ன்னிட‌மிருந்து பிரிக்க‌ முய‌ல‌, அவ‌ளோ அவ‌னை ச‌ற்றும் விடாம‌ல் ப‌ற்றிய‌ப‌டி அவ‌னை மேலும் அணைத்துக்கொண்டு, "ப்ளீஸ் அர்ஜுன். என்ன‌விட்டு போகாத‌. ப்ளீஸ் அர்ஜுன் என‌க்கு ப‌ய‌மா இருக்கு." என்று ந‌டுங்கிய‌ குர‌லில் கூற‌,




அவ‌ள் நிலையை புரிந்துக்கொண்ட‌வ‌ன், "செரி நா எங்க‌யும் போக‌ல‌. இங்க‌தா இருக்கேன்." என்று அவ‌ளை அணைத்துக்கொள்ள‌, அவ‌ளோ அவ‌னை இறுக‌ அணைத்த‌ப‌டி, "ப்ளீஸ் என் ப‌க்க‌த்துலயே இரு. இல்ல‌ன்னா அந்த‌ க‌ன‌வு திரும்ப‌ வ‌ந்திரும்." என்று கூறி ந‌டுங்க‌,

அர்ஜுன், "செரி நா எங்க‌யும் போக‌ல‌. இங்க‌ சோஃபாவுல‌தா இருக்கேன்." என்று கூறி மெதுவாக‌ வில‌க‌ முய‌ற்சிக்க‌, அவ‌ளோ அவ‌னை மேலும் அணைத்த‌ப‌டி, "இ..இல்ல‌ அர்ஜுன். நீ இப்பிடி என் ப‌க்க‌த்துலையே இரு. இல்ல‌ன்னா அந்த‌ க‌ன‌வு திரும்ப‌ வ‌ந்திரும்." என்று கூறி ந‌டுங்க‌,



அத‌ற்கு அவ‌ளை அணைத்தப‌டியே அர்ஜுன், "இல்ல‌ இல்ல‌ ச‌ந்ரா. அப்பிடியெல்லா ஒன்னும் ஆகாது. நாந்தா சொல்ற‌ல்ல‌? நீ ரிலேக்ஸா தூங்கு. நா சோஃபால‌தா இருக்கேன்." என்று கூறி அவ‌ளை மெல்ல‌ வில‌க்க‌, அவ‌ளோ அவ‌னை ச‌ற்றும் விடாம‌ல், "அர்ஜுன் ப்ளீஸ். என‌க்கு ப‌ய‌மா இருக்கு. என்ன‌விட்டு போகாத‌." என்று க‌த‌றினாள்.

அதை கேட்டு ப‌த‌றிய‌ அர்ஜுன், இவ‌ள் அந்த‌ க‌ன‌வால் மிக‌வும் ப‌ய‌ந்திருக்கிறாள் என்று புரிந்து, "செரி நா உன் ப‌க்க‌த்துலையே இருக்கேன். நீ அப்பிடியே தூங்கு. எத‌ ப‌த்தியும் யோசிக்காம‌ தூங்கு." என்று அவ‌ள் முதுகை த‌ட்டி கொடுத்தான்.



அதை கேட்ட‌ ச‌ந்ராவோ அவ‌னின் அணைப்பிலிருந்த‌ப‌டியே, "நீ நெஜ‌மாதான‌ சொல்ற‌? நா தூங்குன‌தும் என்ன‌விட்டு போயிர‌ மாட்ட‌ல்ல‌?" என்று அவ‌னை இறுக‌ ப‌ற்றிய‌ப‌டி குழ‌ந்தையை போல் கேட்க‌, அவ‌ளின் இந்த‌ நிலை அவ‌னுக்கு வ‌ருத்த‌த்தை கொடுத்தாலும் அவ‌ளின் இந்த‌ அணைப்பு ஏனோ அவ‌ன் ம‌ன‌திற்கு பிடித்தே இருந்த‌து.

அப்போது அவ‌ளை மேலும் அணைத்துக்கொண்ட‌ அர்ஜுன், "நா எங்க‌யும் போக‌ மாட்டேன். ப்ராமிஸ்." என்றான்.

அதை கேட்ட‌ பிற‌கே நிம்ம‌திய‌டைந்த‌வ‌ள், அவ‌ன் மார்பில் முக‌ம் புதைத்து அமைதிய‌டைந்தாள். பிற‌கு அவ‌ன் அவ‌ள் கூந்த‌லை மெல்ல‌ வ‌ருடிவிட‌, அந்த‌ வ‌ருட‌லில் அப்ப‌டியே நிம்ம‌தியாக‌ உற‌ங்கியும்விட்டாள் ச‌ந்ரா. அவ‌ள் உற‌ங்கிவிட்ட‌தை உறுதி செய்த‌வ‌ன், அவ‌ளை மெல்ல‌ த‌ன்னிலிருந்து வில‌க்கி மெத்தையில் ப‌டுக்க‌ வைக்க‌, அவ‌ளோ உற‌க்க‌த்திலும் அவ‌னுடைய‌ ச‌ட்டையை இறுக‌ ப‌ற்றியிருந்தாள்.

அதை பார்த்து புன்ன‌கைத்த‌வ‌ன், த‌ன் ச‌ட்டையை ப‌ற்றியிருக்கும் அவ‌ளின் விர‌ல்க‌ளை மெல்ல‌ வில‌க்க முய‌ல‌, அவ‌ளோ அவ‌னின் க‌ழுத்தை க‌ட்டி இழுத்து உற‌ங்கினாள். அதில் திடுக்கிட்ட‌வ‌னின் பார்வை அவ‌ளின் க‌ல‌ங்க‌மில்லா முக‌த்தில் விழ‌, அவ‌ள் உற‌ங்கும் அழ‌கிலும் அவ‌ளின் திடீர் நெருக்க‌த்திலும் த‌ன்னை முழுவ‌துமாய் தொலைத்த‌வ‌ன், த‌ன்னை ம‌ற‌ந்து, உல‌கை ம‌ற‌ந்து, கண் இமைப்ப‌தையும் ம‌ற‌ந்து அவ‌ளையே இர‌சித்துக்கொண்டிருந்தான். இப்ப‌டி எவ்வ‌ள‌வு நேர‌ம் இர‌சித்துக்கொண்டிருந்தான் என்று அவ‌னுக்கே தெரிய‌வில்லை. பிற‌கு அவ‌ளின் சிறு அசைவிலே திடீரென்று த‌ன்னிலைய‌டைந்த‌வ‌ன், அவ‌ள் அசைவினால் அவ‌ளின் முக‌த்தில் ப‌ட‌ர்ந்த‌ கூந்த‌லை த‌ன் விர‌ல்க‌ளால் வில‌க்கி காதோர‌ம் ஒதுக்கிவிட்டு, மீண்டும் அவ‌ளின் முக‌த்தை பார்த்து இர‌சித்த‌ப‌டி மெல்ல‌ புன்ன‌கைத்த‌வ‌ன், அவ‌ளைவிட்டு வில‌க‌வே ம‌ன‌மில்லாம‌ல் வில‌கி, அங்கிருந்த‌ சோபாவில் சென்று ப‌டுத்துக்கொண்டான்.

அப்போதுமே அவ‌னின் பார்வை உற‌ங்கும் அவ‌ளின் அழ‌கை ஆராய்வ‌திலேயே இருக்க‌, அவ‌ளை பார்த்துக்கொண்டே ப‌டுத்திருந்த‌வ‌ன், அப்ப‌டியே உற‌ங்கியும்விட்டான்.

அடுத்த‌ நாள் காலை...

"வா ச‌ந்ரா!" என்ற‌ குர‌ல் கேட்டு திடுக்கிட்டு விழித்தாள் ச‌ந்ரா.

"சீக்கிர‌மா வா ச‌ந்ரா!" என்று மீண்டும் அந்த‌ குர‌ல் கேட்க‌, அதில் திடுக்கிட்டு எழுந்து அம‌ர்ந்த‌வ‌ள், அது யாருடைய‌ குர‌ல் என்று குழ‌ப்ப‌த்துட‌ன் யோசிக்க‌ ஆர‌ம்பிக்க‌, அப்போதே அங்கு சோஃபாவில் உற‌ங்கிக்கொண்டிருக்கும் அர்ஜுனை பார்த்தாள்.

அப்போதே நேற்று ந‌ட‌ந்த‌ அனைத்தும் அவ‌ள் நினைவிற்கு வ‌ர‌, நேற்று த‌ன்னை அச்சுறுத்தும் அதே நினைவுக‌ள்தான் க‌ன‌வாய் வ‌ந்து த‌ன்னை ப‌ய‌முறுத்திய‌து என்று நினைவுக்கூர்ந்த‌வ‌ள், "என் க‌ண்ணுக்கு தெரியிற‌ அதெல்லாம் என்ன‌? அது எதுக்காக‌ திரும்ப‌ திரும்ப‌ என் க‌ண்ணுக்கு தெரியுது? அதோட‌ அந்த‌ கோவிலுக்கு போன‌துக்கு அப்ற‌ந்தா என‌க்கு இந்த‌ மாதிரியெல்லா ந‌ட‌க்குது. அப்பிடின்னா அந்த‌ கோவிலுக்கும் இதுக்கும் எதாவ‌து ச‌ம்ம‌ந்த‌ம் இருக்குமா?" என்று யோசித்த‌வ‌ள், "அப்பிடியே இருந்தாலும் அதுக்கும் என‌க்கும் என்ன‌ ச‌ம்ம‌ந்த‌ம்? எதுக்காக அதெல்லா என் க‌ண்ணுக்கு தெரிஞ்சு, என் நிம்ம‌திய‌ எடுக்குது?" என்று யோசித்துக்கொண்டிருக்க‌, "ச‌ந்ரா!" என்று மீண்டும் அந்த‌ குர‌ல் ஒலித்த‌து.

அதை கேட்டு மீண்டும் திடுக்கிட்ட‌வ‌ள், "இது யாரோட‌ குர‌ல்?" என்ற‌ப‌டி அர்ஜுனை பார்க்க‌, அவ‌னோ அமைதியாக உற‌ங்கிக்கொண்டிருந்தான்.

"அப்பிடின்னா அந்த‌ குர‌ல் என‌க்கு ம‌ட்டுந்தா கேக்குதா?" என்று யோசித்த‌ப‌டி எழுந்து, அந்த‌ அறையின் ஜ‌ன்ன‌ல் வ‌ழியே சென்று பார்க்க‌, அங்கு தெரிந்த‌ காட்சியை பார்த்து அதிர்ந்த‌வ‌ள், ச‌ற்றும் யோசிக்காம‌ல் கீழே சென்றாள்.

ம‌ன‌தில் ப‌ல‌ குழ‌ப்ப‌ங்க‌ளுட‌ன் த‌ன் அறையில் அம‌ர்ந்திருந்த‌ ச‌ந்ராவிற்கு "வா ச‌ந்ரா!" என்ற‌ குர‌ல் திடுக்கிட‌ செய்ய‌, அது யாருடைய‌ குர‌ல் என்றும் யோசிக்குமோதே, "ச‌ந்ரா!" என்று மீண்டும் அந்த‌ குர‌ல் ஒலித்த‌து.

அதை கேட்டு மீண்டும் திடுக்கிட்ட‌வ‌ள், "இது யாரோட‌ குர‌ல்?" என்ற‌ப‌டி அர்ஜுனை பார்க்க‌, அவ‌னோ அமைதியாக உற‌ங்கிக்கொண்டிருந்தான்.

"அப்பிடின்னா அந்த‌ குர‌ல் என‌க்கு ம‌ட்டுந்தா கேக்குதா?" என்று யோசித்த‌ப‌டி எழுந்து, அந்த‌ அறையின் ஜ‌ன்ன‌ல் வ‌ழியே சென்று பார்க்க‌, அங்கு தெரிந்த‌ காட்சியை பார்த்து அதிர்ந்த‌வ‌ள், ச‌ற்றும் யோசிக்காம‌ல் கீழே சென்றாள்.

அங்கே வீட்டிற்கு வெளியில் கேட்டின் முன்பு அவ‌ளின் வ‌ருகைக்காக‌ காத்திருந்த‌வ‌ர், அவ‌ள் வெளியில் வ‌ந்த‌தும் புன்ன‌கைத்த‌ப‌டி, "வா ச‌ந்ரா" என்றார்.

அவ‌ரை பார்த்த‌தும் வ‌ண‌ங்கிய‌வ‌ள், "சாமிஜி நீங்க‌ இங்க‌?" என்று கேட்க‌,

சாமிஜி, "அந்த‌ ஈச‌ன் கூறிய‌தால் நான் இங்கு வ‌ந்தேன்." என்றார்.

ச‌ந்ரா, "ந‌ல்ல‌வேள‌ வ‌ந்தீங்க‌ சாம்ஜி. நானே உங்க‌ள‌ ப‌க்க‌ வ‌ர‌லான்னு நென‌ச்சேன். இப்பெல்லா என‌க்குள்ள‌ என்ன‌ ஆகுதுன்னு என‌க்கே தெரிய‌ல‌. அந்த‌ கோவிலுக்கு போயிட்டு வ‌ந்த‌துல‌ இருந்து சில‌ நினைவுக‌ள் என்ன‌ தூங்க‌ விட‌ல, ந‌ட‌க்க‌ விட‌ல‌, நிம்ம‌தியாவே இருக்க‌ விட‌ல‌. அதெல்லா என்ன‌, எதுக்காக‌ என் க‌ண்ணுக்கு தெரியுது, ஏ ஒழுங்கா தெரிய‌ மாட்டிங்குது எதுவுமே என‌க்கு புரிய‌ல‌. அத‌ ப‌த்தி யோசிச்சாலே த‌ல‌ பய‌ங்க‌ர‌மா வ‌லிக்குது." என்று ம‌ன‌தில் உள்ள‌ அனைத்தையும் க‌ட‌க‌ட‌வென்று கொட்டி தீர்த்தாள்.

அதை சிறு புன்ன‌கையுட‌ன் அமைதியாக‌ கேட்டுக்கொண்டிருந்த‌வ‌ர், "அனைத்தும் அறிவேன் ச‌ந்ரா. அத‌ற்கு கார‌ண‌மும் அறிவேன்." என்றார்.

அதை கேட்ட‌வ‌ள், "சொல்லுங்க‌ சாமிஜி. அது என்ன‌ன்னு த‌ய‌வுசெஞ்சு சொல்லுங்க‌." என்று அவ‌ச‌ர‌மாக‌ கேட்க‌,

சாமிஜி, "உன் பூர்வ‌ ஜென்ம‌ம் உன்னை அழைக்கிற‌து." என்றார்.

ச‌ந்ரா, "என்ன‌ சொல்லுறீங்க‌ சாமிஜி? பூர்வ ஜென்மமா?" என்று புரியாம‌ல் கேட்க‌,

சாமிஜி, "ஆம் ச‌ந்ரா. உன் பூர்வ‌ ஜென்ம‌த்தை ப‌ற்றி நீ அறிய‌ வேண்டிய‌ த‌ருண‌ம் வ‌ந்துவிட்ட‌து. அதைத்தான் ஈச‌ன் உன‌க்கு காட்டுக்கிறான்." என்றார்.

அதை கேட்டு மேலும் குழ‌ம்பிய‌வ‌ள், "என‌க்கு ஒன்னுமே புரிய‌ல‌ சாமிஜி. அப்போ என்ன‌ தொல்ல‌ ப‌ண்ணிகிட்டிருக்குற‌ அந்த‌ விஷ‌ய‌ங்க‌ளெல்லாமே என்னோட‌ பூர்வ‌ ஜென்ம‌மா?" என்று அதிர்ச்சியுட‌ன் கேட்க‌,

சாமிஜி, "ஆம். உன் பூர்வ‌ ஜென்ம‌ம் முழுதாக‌ உன‌க்கு ஞாப‌க‌ம் வ‌ந்தாள் ம‌ட்டுமே, உன்னை அச்சுறுத்தும் அந்த‌ நினைவுகள் உன்னை விடும். அதுவ‌ரையில் உன்னை அந்த‌ க‌ன‌வு தொட‌ர்ந்து துர‌த்திக்கொண்டேதான் இருக்கும்." என்றார்.

அதை கேட்டு மேலும் அதிர்ந்து குழ‌ம்பிய‌வ‌ள், "அப்பிடி என்னோட‌ பூர்வ‌ ஜென்ம‌த்துல‌ என்ன‌ ந‌ட‌ந்த‌து சாமிஜி? அதோட‌ அந்த‌ ச‌ங்க‌ர‌ன் கோவிலுக்கும் அதுக்கும் என்ன‌ ச‌ம்ம‌ந்த‌ம்?" என்று கேட்க‌,

சாமிஜி, "அது ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் நடந்த கதை." என்றார்.

- ஜென்ம‌ம் தொட‌ரும்...
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-12
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.