அத்தியாயம் 11: உயிரே, உன் உயிரென நான் இருப்பேன்
பிரியாவும், இசையும், மழை நிற்கும் வரை வெகு நேரமாக மழையில் விளையாடி கொண்டு இருந்தனர்.
அப்போது மழையின் வேகம் சற்று குறைந்து இருக்க,
இன்னும் சற்று நேரம் இப்படியே இருந்தால் தங்களுக்கு ஏதேனும் உடல்நல குறைபாடு ஏற்பட்டு விடக்கூடும் என்று நினைத்து பயந்த இசை,
“ஓய் பிரியா வா.. உள்ள போலாம்.
நைட் டைம் வேற...
மழையில நினைசஞ்சது சேராம கோல்ட் வந்துற போது."
என்று சொல்ல, அதைக் கேட்டு பிரியாவும் சரி என்று தன் வீட்டிற்குள் நுழைந்தாாள்.
“நீ இங்க வெயிட் பண்ணு.
நான் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன்." என்ற பிரியா உள்ளே செல்ல போக,
அவளை தடுத்து நிறுத்திய இசை, “வேணா. பாத் ரூம்ல ஹீட்டர் இருக்கு.
அத போட்டு குளிச்சிட்டே வந்துரு.
மழையில நெனஞ்சா சுடு தண்ணியில குளிக்கணும்னு எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க." என்றான்.
அவன் சொன்னதை ஆமோதிப்பதை போல் தன் தலையை ஆட்டிய பிரியா, குளிப்பதற்காக தன் அறைக்கு சென்றாள்.
அவள் குளித்துவிட்டு வருவதற்குள் தானும் குளித்துவிட்டு, கையில் ஒரு ஹேர் டிரையருடன் பிரியாவின் வீட்டிற்குள் வந்தான் இசை.
குளித்துவிட்டு ஒரு டி-ஷர்ட்டும் ஷார்ட்ஸும் அணிந்து இருந்த பிரியா, ஒரு டவலை வைத்து தன் நீண்ட கூந்தலை உலர்த்திக் கொண்டு இருந்தாள்.
அப்போது, “இந்த ஹேர் டிரையர் யூஸ் பண்ணு." என்று சொன்னபடி கையில் ஹேர் டிரையருடன் அவள் அருகே சென்றான் இசை.
இசையின் குரல் கேட்டு அவன் பக்கம் அவள் திரும்ப,
அவளுடைய நீண்ட கூந்தலும் அவளது அசைவுக்கேற்ப திரும்பி சாட்டை போல் அவளுடைய முகத்தில் வந்து அடித்தது.
அந்த கார்க்கூந்தலில் சொட்டி கொண்டு இருந்த நீர், இசையின் முகத்தில் பட்டு தெரிந்தது.
அதை தன் ஒரு கையால் துடைத்த இசை, தோகையை விரித்து மழையில் ஆடும் மயிலை போல்,
தன் தலை மயிரை விரித்தாடும், அவன் மயிலை பார்த்து சிலையாய் சமைந்து நின்று விட்டான்.
“நானே உன் கிட்ட கேட்கலாம்னு இருந்தேன்.
பரவால்ல.. நீயே எடுத்துட்டு வந்துட்ட தேங்க்ஸ்." என்று சொன்ன பிரியா அவன் கையில் இருந்த ஹேர் டிரையரை வாங்கி தனது நீளமான கூந்தலை உலர்த்த தொடங்கினாள்.
அப்போது இசை தன் அம்மாவை பற்றி பேசியது அவளுக்கு ஞாபகம் வர,
“ஆமா, நீ மட்டும் தான் இங்க இருக்க..
ஏன் உன் ஃபேமிலி உன் கூட இல்லையா..??" என்று தனக்கு முன்னே இருந்த கண்ணாடியில் தெரிந்த அவன் முகத்தை பார்த்தப்படியே கேட்டாள்.
“இல்ல பிரியா. இங்க இருந்து ரெண்டு தெரு தள்ளி தான் என் வீடு இருக்கு.
நான்தான் சொன்னேன்ல.. நான் காலேஜ் படிக்கும்போதுல இருந்தே யாழினிய லவ் பண்றேன்னு...
ஏன்னே தெரியல.. யாழினிய கண்டாலே எங்க அப்பாவுக்கு சுத்தமா பிடிக்கல.
ஆனா எங்க அம்மா மட்டும், என் சந்தோஷத்துக்காக அவளை ஏத்துக்கிட்டாங்க.
ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி யாழினி ஆக்சிடென்ட்ல இறந்துட்டா.
அதுக்கப்புறம் கொஞ்ச நாளிலேயே என் அம்மாவும் கொரோனா வந்து இறந்துட்டாங்க.
எனக்கு இந்த உலகத்துல ரொம்ப பிடிச்சவங்க ரெண்டு பேரும் என்னை விட்டுப் போனதுனால என்னால அந்த இழப்பை தாங்கிக்கவே முடியல.
அவங்க இல்லாத அந்த வீட்ல இருக்கவும் புடிக்கல.
எனக்கு ஒரு அண்ணா, ஒரு தங்கச்சி, இருக்காங்க.
நான் அங்க இல்லைன்னாலும் என் அண்ணா எல்லாத்தையும் பார்த்துப்பாண்ற நம்பிக்கையில அங்க இருந்து நான் வெளியில வந்துட்டேன்.
இப்ப நம்ம இருக்கிறோமே இந்த வீடு எங்க அம்மாவோடது தான்...
நாங்க தனியா பெரிய வீடு கட்டிட்டு அங்க போறதுக்கு முன்னாடி சின்ன வயசுல இங்க தான் இருந்தோம்.
எனக்கு இங்க இருக்கும்போது எல்லாம் என் அம்மா கூட இருக்கிற மாதிரியே இருக்கும்.
நாங்க கேட்டரிங் காலேஜ்ல படிக்கும்போது யாழினி நானும் அவளும் சேர்ந்து ஒரு ஹோட்டல் ஸ்டார்ட் பண்ணி அத ஒண்ணா நடத்தணும்னு ஆசைப்பட்டா.
அதான் நான் இங்க ஹோட்டல் ஸ்டார்ட் பண்ணேன்." என்று அனைத்தையும் சுருக்கமாக ஒன்று விடாமல் அவளிடம் சொன்னான் இசை.
அவனை பாவமாக பார்த்த பிரியா “வருத்தபடாத.
எங்கேயோ இருந்து உன் அம்மாவும், யாழினியும், நீ நல்லா இருக்கணும்னு உன்ன பிளஸ் பண்ணிட்டு இருப்பாங்க.
நீ நினைக்கிற மாதிரி இந்த ரெஸ்டாரன்ட் நல்லபடியா போகும்.
அது என் பொறுப்பு. அண்ட் உன்னோட பர்சனல் லைஃப்ல இன்டர்பியர் ஆகுறேன்னு நினைக்காத,
என்ன தான் உன் அண்ணாவும் தங்கச்சியும் உங்க அப்பா கூட இருந்தாலும்,
உங்க அப்பா அவர் கூட இல்லாத உன்ன நெனச்சு தான் எப்படியும் அதிகமா கவலைப்படுவாரு.
சோ உனக்கு அங்க தங்க பிடிக்கலைனாலும் பரவால்ல.
நீ சும்மா அடிக்கடி அங்க போய் அவங்கள பாத்துட்டு வா." என்று அக்கறையாக சொன்னாள்.
“அட நீ வேற ஏன் பிரியா...
நான் அவர்கிட்ட பேசியே ரொம்ப நாள் ஆகுது.
அவர் கூட பேச கூடாதுன்னு எல்லாம் இல்ல.
ஆனா, என்னான்னு தெரியல... என்னால அவர் கிட்ட முன்னாடி மாதிரி நார்மலா பேச முடியல.
பட் நீ சொன்னதுக்காகவது கண்டிப்பா அங்க ஒரு தடவையாச்சும் போயிட்டு வரேன்." என்றவன் சிறு தயக்கத்துடன்,
“நான் இப்படி கேக்குறதுனால உன் கிட்ட அட்வான்டேஜ் எடுத்துகிறேன்னு நினைக்காத.
நீ இங்கே வந்ததுல இருந்து எனக்கு இதை உன்கிட்ட கேட்கணும்னு தோணிக்கிட்டே இருக்கு.
பட் நீ கோவிச்சிக்குவியோன்னு தான் நான் கேட்கல.
இப்ப அத கேட்கட்டுமா..??" என்று இசை தயக்கத்துடன் கேட்க, “ம்ம்.... கேளு...!!” என்றாள் அவள்.
“இந்த சின்ன வயசிலயே நீயும், உன் தம்பியும், உடம்பு சரியில்லாத அம்மாவ கூட்டிக்கிட்டு தெரியாத ஊருக்கு ஏன் தனியா வந்து இருக்கீங்க..??
உங்க கூட உன் அப்பாவோ, இல்ல உன்னோட ரிலேட்டிவ்ஸோ, யாருமே ஏன் வரல..??" என்று தயங்கி தயங்கி கேட்டான் இசை.
அவனைப் பார்த்து ஒரு விரக்தி புன்னகை சிந்திய பிரியா,
“என்ன பத்தி சொல்லனும்னா அது ஒரு பெரிய ஸ்டோரி.
உன் கிட்ட எப்பவாவது அதை சொல்லியே ஆகணும்னு எனக்கு தோணுச்சுன்னா,
கண்டிப்பா நான் அதை உன்கிட்ட சொல்லுவேன்.
இப்போ நீ கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லணும்னா, ரெண்டு நாளைக்கு முன்னாடி என் அப்பா ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துட்டாரு.
பட் நேத்து நைட்டு தான் எனக்கு அது ஆக்சிடென்ட் இல்ல ஒரு ஃப்ரீ பிளான்ட் மர்டர்.
அதுவும் என் ரிலேட்டிவ்ஸ் தான் அத பண்ணி இருக்காங்கன்னு எனக்கு தெரிய வந்துச்சு.
எங்க அப்பா சாகறதுக்கு முன்னாடி எங்க அம்மா நல்லா தான் இருந்தாங்க.
அவர் திடீர்னு இறந்ததை எங்க அம்மாவால அக்சப்ட் பண்ணிக்க முடியல.
அதனால தான் அந்த அதிர்ச்சியில இப்படி ஆயிட்டாங்க.
நாங்க அந்த ஊரிலயே இருந்தா எங்க உயிருக்கும் ஆபத்துன்னு தான் யார்கிட்டயும் சொல்லாம நான் என் தம்பியையும், அம்மாவையும், கூட்டிக்கிட்டு தூரமா இருக்குற இந்த ஊருக்கு வந்துட்டேன்.
அண்ட் சாரி நான் உன் கிட்ட என் மொபைல் பஸ்ல தொலைஞ்சு போச்சுன்னு பொய் தான் சொன்னேன்.
அத வச்சு நாங்க எங்க இருக்கோம்னு எங்களை யாரும் ட்ரேஸ் பண்ணிட கூடாதுன்னு வர வெளியில நானேதான் அதை தூக்கி போட்டு வந்தேன்.
அப்போ உன் மேல நம்பிக்கை இல்ல.. அதான் பொய் சொன்னேன்.
இப்ப எனக்கு உன்கிட்ட பொய் சொல்ல புடிக்கல.
அதான் உண்மைய சொல்லிட்டேன்.
இதுக்கு மேல என்ன பத்தி வேற எதுவும் என் கிட்ட கேட்காத இசை.
எல்லாத்தையும் உன் கிட்ட வெளிப்படையா சொல்ற நிலைமையில நான் இல்ல.
நானும் என் குடும்பமும் இதுவரைக்கும் எங்க வாழ்க்கையில பார்த்தது எல்லாம் வெறும் துரோகம் மட்டும்தான்.
அதனாலையோ என்னமோ என்னால பார்க்கிறவங்க எல்லாரையும் சந்திக்கப்படாம இருக்க முடியல." என்று ஒளிவு மறைவு இல்லாமல் நேர்மையாக பதில் சொன்னாள்.
“சாரி பிரியா. நீ இவ்ளோ கஷ்டத்த மனசுல வச்சுக்கிட்டு அது எல்லாத்தையும் மறந்துட்டு கொஞ்ச நேரமாவது நார்மலா இருக்கலமன்னு நெனச்சு இருக்க..
நான் இப்ப தேவை இல்லாம அத பத்தி கேட்டு உனக்கு எல்லாத்தையும் ஞாபகப்படுத்தி விட்டுட்டேன்.
உங்களுக்கு யாரும் இல்லைன்னு நினைக்காத.
நான் இருக்கேன். உனக்கு துணையா நானும் எனக்கு துணையா நீயும் இருக்கிறதுக்காக தான் கடவுள் உன்னையும் என்னையும் இன்னைக்கு மீட் பண்ண வச்சு இருக்கிறார் போல.
நீங்க இங்க இருக்கிற வரைக்கும் யாராலயும் எந்த ஆபத்தும் உனக்கு வராம நான் பாத்துக்குறேன்.
நீ உன் மொபைல தூக்கி போட்டுட்டு வந்ததும் நல்லது தான்.
நீ பொய் சொன்னதுல ஒன்னும் தப்பில்ல.
என்ன தான் இருந்தாலும், உனக்கு நான் ஸ்டேஞ்சர் தானே...
இப்ப நீ மனசு விட்டு இவ்வளோ பேசுறதே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.
அட்லீஸ்ட் இந்த அளவுக்காவது உனக்கு இப்ப என் மேல நம்பிக்கை வந்துருக்கே...!!" என்று இசை சொல்ல,
“நீ எதுக்கு இப்ப என்கிட்ட சாரி சொல்ற..??
என் குடும்பத்தை இந்த மாதிரி பண்ணவங்க தான் என்கிட்ட சாரி கேக்கணும்.
நான் அவங்களை என் கால்ல வந்து விழுந்து மன்னிப்பு கேட்க வைப்பேன்.
ஆனா எப்பயும் அவங்கள நான் மன்னிக்க மாட்டேன்.
முதல்ல நான் கொஞ்சம் ஸ்டேபில் ஆகணும்.
இப்போதைக்கு அம்மாவ சரி பண்றது மட்டும் தான் எனக்கு பெருசுன்னு தோணிச்சு.
அதான் எதுவும் பண்ணாம அமைதியா இருக்கேன்.
என்னோட டைம் வர்றதுக்காக நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.
அதுவரைக்கும் அவங்க எங்கள கண்டுபிடிக்க கூடாது.
அப்பா செத்துட்டாருன்னு உக்காந்து அழுதுட்டு இருக்க நிலைமையில எல்லாம் நாங்க இப்ப இல்ல.
எங்க அப்பாவும், அம்மாவும், எங்களை அவ்வளவு கோழையாவும் வழர்க்கல.
மனசுக்குள்ள எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அதை ஒரு ஓரமா வச்சுட்டு நார்மல் லைஃப் வாழ்றது எப்படின்னு எங்க அப்பா, அவர் உயிரோட இருக்கும்போதே எனக்கு சொல்லிக் குடுத்திருக்காரு.
எங்க அம்மா இதுக்கு முன்னாடி எப்படி இருந்தாங்கன்னு நீ பாத்ததில்லை இல்ல..??
அவங்க ஒரு lioness மாதிரி கெத்தா இருப்பாங்க தெரியுமா..??
எத்தனையோ ப்ராப்ளேம்ஸ் வந்தும், எங்க அம்மா கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்து கூட நாங்க பாத்ததில்லை.
அப்படி ராணி மாதிரி இருந்தவங்க.. எப்படி திடீர்னு இந்த ஒரு விஷயத்துனால இவ்ளோ அஃபெக்ட் ஆனவங்கன்னு இப்ப வரைக்கும் என்னால நம்பவே முடியல.
நானும் ராகுலும் எங்க எமோஷன்சை எப்படி கண்ட்ரோல் பண்றதுன்னு எங்க அம்மாவையும், பாட்டியையும், பாத்து தான் கத்துக்கிட்டோம்.
அதான் எங்களால அம்மாவை இப்ப இந்த நிலைமையில பாக்கவே முடியல." என்று கண்ணீர் தேங்கிய கண்களுடன் சொன்ன பிரியா வைராக்கியமாக அந்த கண்ணீரை தன் கண்களில் இருந்து வழிந்து வெளியே வரவிடவில்லை.
“உங்க அம்மா அப்பா உன்னையும், ராகுலையும், ரொம்ப நல்லா வளர்த்து இருக்காங்க.
நீ சொன்னதை கேட்ட உடனே எனக்கு அவங்க மேல ஒரு பெரிய மரியாதையே வந்துருச்சு.
வாழ்க்கைக்கு எது தேவையோ, அது எல்லாத்தையும் உங்களுக்கு சொல்லிக் குடுத்திருக்காங்க.
டோன்ட் வரி அம்மா சீக்கிரம் சரியாயிடுவாங்க.
நீ என்ன செய்யணும்னு நினைச்சாலும் சரி, நான் அத செய்றதுக்கு உன் கூட சப்போர்ட்டிவா நிப்பேன்." என்று தீர்க்கமான குரலில் சொன்னான் இசை.
“எங்க உயிருக்கே ஆபத்திற்குன்னு சொல்றேன்.
நீ எனக்கு சப்போர்ட் பண்றேன்னு சொல்றியே...
அதனால உனக்கு ஏதாவது ஆயிடுமோன்னு பயமா இல்லையா..???" என்று ஆச்சரியமான குரலில் பிரியா கேட்க,
“நானெல்லாம் எப்பவோ செத்துட்டேன் பிரியா..
ஒருவேளை நான் சூசைட் பண்ணிக்கிட்டா என் ஃபேமிலியால அத தாங்க முடியாதேன்னு யோசிச்சு தான் நான் இத்தன நாளா நடைபிணமா வந்துட்டு இருந்தேன்.
இப்ப நீ இங்க வந்து நீ தான் எனக்கு மறு ஜென்மம் குடுத்து வாழனுன்ற ஆசையவே எனக்குள்ள விதைச்சி இருக்க.
இந்த உசுரு உன்னோடது...
நான் இத சும்மா பேச்சுக்கு சொல்லல.
உனக்காக இந்த உயிரை குடுக்கனும்னா, சந்தோசமான தூக்கி குடுத்துட்டு போயிடுவேன்." என்று தன் நெஞ்சில் கை வைத்து அவனுடைய இதயத்தை சுட்டிக்காட்டி அவளிடம் சொன்னான் இசை.
அவனுடைய ஆழ்ந்த கண்களில் உண்மை பிரகாசமாக ஜொலித்தது.
அவன் பேசிய டயலாக்ஸ் சினிமாண்டிக்காக இருந்தாலும்,
அவன் பேசியது பொய் என்று பிரியாவிற்கு தோன்றவில்லை.
அவன் கண்களில் தெரிந்த உண்மையை அவளுடைய எக்ஸ்பீரியன்ஸ் சரியாக அவளுக்கு காட்டி கொடுத்தது.
அதனால் ஏதோ ஒரு இனம் புரியாத புதிய பாசத்துடன் அவனைப் பார்த்து புன்னகைத்த பிரியா,
“எனக்காக யாரோட உயிரும் போகறத என்னால அலோ பண்ண முடியாது.
நீயே எனக்காக அதை செய்யணும்னு நினைச்சாலும், எந்த பிரச்சனை வந்தாலும், உன்ன அப்படி செய்ய விட மாட்டேன்.
நான் உன்னை அதில இருந்து காப்பாத்துவேன்.
அண்ட் தேங்க்யூ சோ மச். நீ ஆல்ரெடி எங்களுக்கு நிறைய ஹெல்ப் பண்ணிட்ட இசை.
நீ மட்டும் இல்லைனா, நான் இன்னும் இங்க நிறைய கஷ்டப்பட்டு இருப்பேன்.
உன்கிட்ட என்ன மேஜிக் இருக்குன்னு தெரியல, உன் கூட இருக்கும்போது நான் மனசுல இருக்குற எல்லா கஷ்டத்தையும் மறந்திடுறேன்." என்று தன் மனதில் இருந்து உண்மையாக அவனிடம் சொன்னாள்.
அவள் சொன்னதைக் கேட்டு மகிழ்ந்த இசை, “உன் கூட இருக்கும்போது எனக்கும் அப்படி தான் இருக்கு.
அப்ப நானும் தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்." என்று அவனும் சிறு புன்னகையுடன் சொன்னான்.
“ஓகே ஓகே இப்படியே நம்ம மாத்தி மாத்தி தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு இருந்தா, பொழுதே விடிஞ்சிடும்.
நமக்கு நிறைய வேலை இருக்கு.
வா போய் பாக்கலாம்." என்ற பிரியா அவனது லேப்டாப்பை எடுத்து கொண்டு அமர்ந்தாள்.
இசையும் அவள் அருகே சென்று அமர்ந்தான்.
மெனு கார்டை டிசைன் செய்து முடித்த பிரியா ஏற்கனவே அவர்களின் மெனுவில் இருந்த ஐட்டங்களை அப்படியே அதில் சேர்த்தவள்,
பின் அவனைப் பார்த்து, “நம்ம நிறைய காம்போ மீல்ஸ் இன்ட்ரோடுயூஸ் பண்ணனும் இசை.
அந்த காம்போலையும் நிறைய வெரைட்டி இருக்கணும்.
இப்போ ஒருத்தன் கையில ஒரு 200 ரூபாய் மட்டும் கொண்டுட்டு வந்து நல்ல வெரைட்டியா சாப்பிடணும்னு நினைச்சாலும் அதுக்கு தகுந்த மாதிரி நம்ம கிட்ட combos availableஆ இருக்கணும்.
At the same time premium customersஐ satisfy பண்ற மாதிரி மெனுல 600ல இருந்து 1000 வரைக்கும் கூட நம்ம காம்போ மீல்ஸ், ஆஃபர்ஸ், ஃப்ரீ டிஷ்ன்னு எல்லாமே தரணும்." என்று தனக்கு தோன்றிய அனைத்து யோசனைகளையும் அவனிடம் ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டு இருந்தாள்.
“மத்தது எல்லாம் ஓகே. ஆனா இப்போ எப்படி நம்ம free டிஷ் கொடுக்க முடியும்..??
நமக்கு லாஸ் ஆயிடாதா..???" என்று அப்பாவித்தனமாக இசை அவளிடம் கேட்க,
“எதுவுமே தெரியாம எந்த தைரியத்துல இவன் ரெஸ்டாரன்ட் ஸ்டார்ட் பண்ணினானோ!”
என்ற நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்ட பிரியா,
“நம்ம குடுக்குற ஃப்ரீ டிஷ்க்கான பிரைஸையும் மெயின் டீச்சோட ஆட் பண்ணிடனும்.
அண்ட் ஆல்ரெடி நம்ம affordable priceல காம்போ டிஷ் கொடுக்கிறதுனால, அது கூட குடுக்கிற free dish ஆக்சுவலி ஃப்ரீயே இல்லைன்னு யாரும் யோசிக்க மாட்டாங்க." என்று லாஜிக்காக பதில் சொன்னாள்.
இப்படியே இவர்கள் இருவரும் மாறி மாறி தங்களுடைய புதிய மெனுவையும், அதன் டிசைனையும், இன்டீரியர் டெக்கரேஷனை மாற்றுவதற்காக ஆன்லைனில் சில வால் ஸ்டிக்கர்களையும்,
குறைந்த விலையில் கிடைக்கும் ஷோ பீசுகளையும் செக் செய்து அவற்றை ஆர்டர் செய்து கொண்டு இருந்தனர்.
கிட்டத்தட்ட அனைத்து வேலைகளையும் அவர்கள் செய்து முடித்து விட, மெனு கார்டை ஃபைனல் செல்வது மட்டும்தான் பாக்கியாக இருந்தது.
இசை, சொல்ல... சொல்ல... பிரியா அதை டைப் செய்து கொண்டு இருந்தாள்.
கடந்த மூன்று நாட்களாக அதிகபட்ச மன உளைச்சலையிலும் அலைச்சலிலும் இருந்த பிரியாவால் இப்போது சரியாக வேலை செய்ய முடியவில்லை.
அதனால் அவளுடைய கண்கள் தூக்கத்திற்காக ஏங்க, தப்பு தப்பாக டைப் செய்து கொண்டு இருந்தாள்.
அதை கவனித்த இசை, “இது மட்டும் தானே பெண்டிங் இருக்கு,
இதை நான் பார்த்துக்கிறேன்.
நீ போய் தூங்கு." என்று அக்கறையுடன் சொன்னான்.
“இட்ஸ் ஓகே. எனக்கு எதுவா இருந்தாலும், அத நானே செஞ்சா தான் திருப்தியா இருக்கும்." என்று ஸ்ட்ரிக்ட்டாக சொல்லி விட்டாள் அவள்.
அவள் என்ன சொன்னாலும் இந்த நிலைமையிலும் அவளை வேலை வாங்குவது அவனுக்கு பிடிக்கவில்லை அதனால்,
“தன் கையில் இருந்த நோட் பேடை அவளிடம் கொடுத்த இசை,
“நீ சொல்லு, நான் டைப் பண்றேன்.
எனக்கு தமிழ் டைப்பிங்-ம் தெரியும்.
நான் ஏதாவது மிஸ்டேக் பண்ணா மட்டும் நீ பார்த்து சொல்லு." என்று உறுதியாக சொல்லிவிட்டான்.
அதனால் வேறு வழி இன்றி அதற்கு ஒப்புக்கொண்டாள் பிரியா.
பிரியா, சொல்ல.. சொல்ல.. இசை டைப் செய்து கொண்டு இருந்தான்.
இப்படியே சில நிமிடங்கள் நகர்ந்தன.
அப்போது பிரியா ஏற்கனவே சொன்னதை டைப் செய்து முடித்த விட்டப் இசை,
“ம்ம்... மசால் தோசை - அறுபது ரூபாய், நெக்ஸ்ட்..??" என்று தன்னுடைய லேப்டாப்பை பார்த்து கொண்டே அவளிடம் கேட்டான்.
சில நொடிகள் கடந்து இருந்தும், பிரியாவிடம் இருந்து எந்த பதிலும் வராததால் அவளை திரும்பி பார்த்தான் இசை.
இருந்த கலைப்பில் ஏற்கனவே நன்கு தூங்கி இருந்த பிரியா, தன்னை அறியாமல் அவன் அவளை பார்த்துக் கொண்டு இருக்கும் போதே இசையின் தோள்களில் தூங்கி விழுந்தாள்.
அவளது நீண்ட கூந்தல், அவளுடைய முகத்தை மறைத்து இருந்தது.
அவளுடைய கூந்தலை மெல்ல நகர்த்தி அவளின் காதிற்கு பின்னே தள்ளிய இசை,
“இவ தூங்கும்போது க்யூட்டா குழந்தை மாதிரி இருக்கா." என்று நினைத்தவன்,
ஆர்வக்கோளாறில் அவளுக்கு பிளையிங் கிஸ் கொடுத்தான்.
பின் அவளுடைய தூக்கம் கலைந்திடாத வண்ணம், அவளை தன் கையில் ஏந்திக் கொண்டு அவளுடைய அறையை நோக்கி பூமிக்கே வலிக்காத அளவிற்கு மெல்ல நடந்து சென்றான்.
அவன் விரல் தன் மீது பட்ட உடனேயே பிரியாவின் உறக்கம் தானாக கலைந்து விட்டது.
இருப்பினும் அடுத்து அவன் என்ன செய்யப் போகிறான் என்று உணர்ந்து கொண்டவள்,
தனக்கு இருந்த அதீத கலைப்பின் காரணமாக தானாக எழுந்து தன் அறைக்கு செல்வதற்கும் அவளுக்கு சோம்பேறி தனமாக இருந்ததால்
“இப்ப என்ன அவனே தூக்கிட்டு போகட்டும்." என்று நினைத்தவள், தூங்கிக் கொண்டு இருப்பவளை போல் நடித்தாள்.
இசை தன்னை தூக்கி கொண்டு நடப்பது பிரியாவிற்கு மிகவும் பிடித்து இருந்தது.
அதனால் தன்ன கண்களை மூடிக்கொண்டு அதை ரசித்தாள்.
பிரியாவை தூக்கிக் கொண்டு வந்து அவளுடைய அறையில் படுக்க வைத்த இசை,
அவளுக்கு வேர்க்கக் கூடாது என்பதற்காக ஒரு டேபிள் ஃபேனையும் கொண்டு வந்து அவள் அருகே அங்கே வைத்துவிட்டு அதை ஆன் செய்தான்.
தன்னுடைய கண்களை மூடி இருந்தாலும், இவை அனைத்தையும் பிரியா கவனித்துக் கொண்டு தான் இருந்தாள்.
அவளை அங்கே படுக்க வைத்த பின்பும் காற்றில் ஆடும் அவளுடைய கூந்தலை பார்த்து அவளை அணு அணுவாக ரசித்தபடியே அங்கேயே நின்று கொண்டு இருந்தான் இசை.
இன்று காலையில் இருந்து இப்போது வரை நடந்த அனைத்தையும் ஒரு நொடி அவன் நினைத்துப் பார்த்தான்.
இப்போதும் கூட இதெல்லாம் அவனுக்கு ஒரு கனவு போலத்தான் தோன்றியது.
ஒருவேளை இது கனவாக இருந்தால் ஒருபோதும் அவன் கண் விழித்து இந்த கனவை ஒரு முடிவுக்கு கொண்டு வர விரும்பவில்லை.
அதனால் “கடவுளே.. இப்போ நான் பாக்குறது எல்லாம் கனவா இருந்தா கூட பரவால்ல..
இந்த கனவாவது என் வாழ்க்கையில எப்பையும் நிலைச்சு இருக்கட்டும்.
நான் இந்த கனவு முடிஞ்சு எந்திரிக்க விரும்பல.”
என்று கடவுளிடம் வேண்டிக் கொண்ட இசை இந்த கனவுக்குள்ளேயே தன்னை சிறைபிடிக்க பிரார்த்தித்தான்.
பின் பிரியாவை பார்த்தவன், “நான் எப்பயும் உன்னை பத்திரமா பாத்துப்பேன் பிரியா." என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
-தொடரும்...
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
facebook.com

Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-11
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.