“குட் மார்னிங் மா… நைட் நல்லா தூங்குனியா?” என்ற ஸ்ரீனிவாசன் சனந்தாவை பார்த்து கேட்க, “ம்ம்… நல்லா தூங்கினேன் அங்கிள்” என்று கூறினாள் சனந்தா. “அப்படியா நிஜமாவா… உன் கண்ண பார்த்தா அப்படி தெரியலையே” என்று வள்ளி கேட்க, “புது இடம் ஆன்ட்டி போகப் போக சரியாயிடும்” என்று சனந்தா கூறி, “அங்கிள் நான் இன்னிக்கு சரவணன் கூட போய் கொஞ்சம் திங்ஸ் வாங்க வேண்டி இருக்கு அது மட்டும் வாங்கிட்டு வந்திடுறேன்” என்று கூறினாள்.
“என்னம்மா ஏதாவது வேணுமா??? வேணும்னா என்கிட்ட கேளு மா… என்ன இருக்கோ நான் குடுக்கிறேன்… அதுக்கு அப்புறமா என்ன வேணுமோ நீ போய் வாங்கிக்கோயேன்” என்று வள்ளி அக்கறையாக கேட்க, “இன்டெக்ஷன்ல வெக்கிற பாத்திரம் தான் வெச்சிருக்கேன் சமைக்கிறதுக்கு…. அதனால கொஞ்சம் சமைக்க தேவையான திங்ஸ்… அப்புறம் கொஞ்சம் வேற திங்ஸ் வேணும்” என்று சனந்தா கூறினாள்.
“ஏன் சனா நான் சமைக்கிறது எதுவும் பிடிக்கலையா உனக்கு??? இல்ல உனக்கு எப்படி வேணும்னு சொல்லு” என்று வள்ளி கேட்க, “அப்படி எல்லாம் இல்லைமா… சாரி இல்ல ஆன்ட்டி… நீங்க ரொம்ப நல்ல சமைக்கிறீங்க… ஆனா, இருக்குற நாட்கள் ஃபுல்லா உங்களையே நான் டிஸ்டர்ப் பண்ற மாதிரி இருக்கும்…. அது எனக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கும்…. அதனால தான்” என்று சனந்தா கூற, “அதுல என்னமா இருக்கு…” என்று வள்ளி பேசுவதற்குள், “இதெல்லாம் அவங்க தானே பார்த்துக்கணும்…. அவங்களே பார்த்துப்பாங்க உனக்கு எதுக்குமா இந்த வேலை” என்று விக்ரம் கூறி குளிக்கச் சென்றான்.
விக்ரம் பேசியதை கேட்டு சனந்தாவின் முகம் மாறிவிட, “அவன் எப்பவும் இப்படி இல்லம்மா… இப்ப கொஞ்ச நாளா தான் அப்படி இருக்கான்… அதுவும் அப்பு போனதுலிருந்து தான் கொஞ்சம் அப்படி கடுகடுன்னு இருக்கான்… இல்லனா அவன் ரொம்ப நல்ல தான் எல்லாரையும் பார்த்துப்பான்” என்று வள்ளி விக்ரம்காக பரிந்து பேச, “பரவால்ல ஆன்ட்டி நான் வாலன்டியர் தானே சோ, நானே எல்லாம் பார்த்துக்கணும் தான்… அவர் சொன்னதும் சரி தான் எனக்கு எதுவும் தப்பா தெரியல” என்று சனந்தா வள்ளிக்கு கூறுவது போல் அவளுக்கும் சமாதானம் சொல்லிக் கொண்டாள்.
“நான் கேட்கலாமான்னு தெரியல என்னை தப்பா எடுத்துக்காதீங்க… அபர்ணாக்கு என்ன ஆச்சு?” என்று கேட்க, “ஒரு ஆக்சிடென்ட்ல தான் இறந்துட்டா” என்று ஸ்ரீனிவாசன் கூறவும், வள்ளி கண்கலங்கி நின்றார்.
“சாரி ஆன்ட்டி ஏன்னு தெரில கேட்கணும்னு தோணிச்சு அதான் கேட்டேன்…. உங்கள கஷ்டப்படுத்தி இருக்கும்னு நினைக்கிறேன் ரொம்ப சாரி ஆன்ட்டி” என்று சனந்தா வள்ளியை அணைத்து கொண்டு கூறவும், வள்ளியும் சனந்தாவை அணைத்து கொண்டு அழுது தீர்த்தார்.
“வள்ளி!! என்னது மா இது….அந்த பொண்ணு என்ன நினைப்பா” என்று ஸ்ரீனிவாசன் கூற, “பரவால்ல அங்கிள் இருக்கட்டும் அவங்களுக்குள்ள இன்னுமும் அந்த வருத்தம் நிறைய இருக்கு” என்று கூறி சனந்தா வள்ளியின் முதுகை வருடினாள்.
“இத்தனை மாசமா அவள நினைச்சு எத்தனையோ வாட்டி அழுது இருக்கேன்…. அவ்வளவு ஏன் இவரை கூட கட்டிப்பிடிச்சு நான் அழுது இருக்கேன்…. விக்ரம கட்டிப்புடிச்சு அழுது இருக்கேன்…. அப்ப எல்லாம் எனக்கு கிடைக்காத இந்த ஒரு உணர்வு உன்ன கட்டி புடிச்சு அழும் போது எனக்கு கிடைச்சுது டா…. ஏதோ மனசு ரொம்ப நாள் கழிச்சு ரொம்ப லேசான மாதிரி இருக்கு” என்று வள்ளி கூறினார்.
“அய்யோ ஆன்ட்டி நான் தான் உங்க கிட்ட சாரி கேட்கணும்” என்று சனந்தா கூற, “இல்லடா இதை நாங்க எதிர்க் கொண்டு தான் ஆகணும்….. அது என்னமோ தெரியல இப்போ எனக்கு ரொம்ப லேசா இருக்கு ரொம்ப தேங்க்ஸ்” என்று கூறி சனந்தாவின் நெற்றியில் முத்தமிட்டார் வள்ளி கண்களை துடைத்து கொண்டு.
“சனா சாப்பாடு எடுத்து வெக்கிறேன், டிபன் சாப்பிட்டுட்டு அதுக்கப்புறம் கிளம்புங்க” என்று வள்ளி கூற, “ம்ம்… உங்களுக்கு ஏதாவது வேணுமா ஆன்ட்டி வாங்கிட்டு வரவா?” என்று சனந்தா கேட்க, வள்ளி ஒரு நொடி நின்று அவளை பார்த்து புன்னகைத்து, “எனக்கு எதுவும் வேணாம் டா” என்று கூறி சமையல் அறைக்குள் சென்றார்.
ஸ்ரீனிவாசன் புன்னகைத்துக் கொண்டே சனந்தாவின் தலையில் கை வைத்து, “இந்த மாதிரி தான் அப்பு கூட கேட்பா எப்ப வெளியில போனாலும் உங்களுக்கு ஏதாவது வேணுமா அப்படின்னு… அதான், நீ கேட்டதும் அவளுக்கு அப்பு ஞாபகம் வந்துது போல” என்று கூறி சனந்தாவின் தலையை வருடினார்.
“அங்கிள் நான் இங்க இருக்குறதுனால உங்களுக்கு அபர்ணாவ ஞாபகப்படுத்திட்டே இருக்குறேன்னு சங்கடமா இருக்கா…. இல்லன்னா சொல்லுங்க நான் ஆஃபீஸ் கிட்ட ரூம்ல கூட போய் தங்கிக்கிறேன்” என்று சனந்தா கூற, “அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா அவளுடைய இழப்பு நாங்க எதிர்பார்த்தது தான்…. அத நாங்க கடந்து வரர்துக்கு நாங்க எப்பவோ ரெடியா தான் இருந்தோம்…. இப்ப நீ வந்ததுனால எங்களுக்கு என்னமோ தெரியல அவளுக்கும் சரி எனக்கும் சரி ரொம்ப நிறைவா இருக்கு எங்க வீடு… அபர்ணா இடத்துல உன்ன வெச்சு பார்க்குறோம்னு சொல்லல மா… ஆனா, வீடு திரும்ப கலையா இருக்கு” என்று புன்னகையுடன் கூறி சென்றார் ஸ்ரீனிவாசன்.
வள்ளி மற்றும் ஸ்ரீனிவாசன் பேசியதை நினைத்து பார்க்க சனந்தாவுக்கு மன நிறைவாக இருந்தது, முகத்தில் அதே புன்னகையுடன் அவள் தான் அறைக்கு செல்ல கொல்ல பக்கம் போகவும் விக்ரம் வெறும் டவலுடன் ஈரத் தலையை துவட்டிக் கொண்டு வந்தான். சனந்தா அதிர்ச்சியில் கண்கள் விரித்து, அவனை ஒரு நொடி கண் இமைக்காமல் பார்த்து பின் சுதாரித்துக் கொண்டு தலையை குனிந்து கொண்டு வேகமாக அவளது அறைக்குள் சென்றாள்.
சனந்தா அவளது கையை மெதுவாக அவளின் இதயத்தின் மீது வைத்து பார்க்க இதயம் படபடத்தது. அவள் தன்னை ஆசுவாச படித்திக் கொண்டு பின் தயாராக சென்றாள். விக்ரமோ சிலை போல் அங்கேயே நிற்காவும் ஸ்ரீனிவாசன் பார்த்து குரல் குடுத்து, “என்ன ஆச்சுப்பா?” என்று கேட்க, தன் நிலையை அறிந்து ஒன்னும் இல்லை என்பது போல் தலையை ஆட்டி தயாராக சென்றான்.
“குட் மார்னிங் பா” என்று சரவணன் கூற, “குட் மார்னிங் சரவணா… ஆமா என்னடா இது கையில” என்று ஸ்ரீனிவாசன் கேட்க, “சனாவோட லேப்டாப், ஃபோன் சார்ஜ் போட குடுத்து இருந்தா அதான்” என்று சரவணன் கூறினான். “அப்படியா சரி வா சாப்பிடலாம்” என்று ஸ்ரீனிவாசன் கூறவும் விக்ரமும் தயாராகி வந்து சரவணன் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.
வள்ளி மூவருக்கும் இட்லியை பரிமாறினார். “சனா கூட வந்து சாப்பிட்டா சரியா இருக்கும்…. இருங்க நான் கூப்பிடுறேன்” என்று வள்ளி எழவும், சனா தயாராகி வந்து நின்றாள்.
சனந்தா ஜார்ஜெட்டில் முழுக்கை வைத்து காலர் போட்ட அனார்கலியில் வந்து நிற்கவும் விக்ரமின் மனசு சற்று தடுமாற தான் செய்தது… அவனையே அறியாமல் அவளை ரசித்துக் கொண்டிருந்தான். அதை கவனித்த சரவணன், “சனா வா சாப்பிடலாம்” என்று கூற, விக்ரம் அவளிடம் இருந்து மீண்டு தன்னை சுதாரித்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தான்.
சனாவிற்கும் அங்கே அமர்ந்து கொள்ள சற்று சங்கடமாக இருந்தது என்ன கூறுவது என்று தெரியாமல் நின்று கொண்டிருக்க, “உள்ள இட்லி வெந்திருக்கும் சூடா கொண்டு வரேன்” என்று வள்ளி கூறி சமையலறைக்குள் செல்லவும், சனந்தாவும் வள்ளியுடன் சமையலறைக்குள் சென்று, “ஆன்ட்டி நான் இங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டுக்கவா??” என்று தயக்கத்துடன் கேட்டாள் சனந்தா.
வள்ளிக்கு, விக்ரம்வை பார்த்து தான் சனந்தா சங்கடமாக உணர்கிறாள் என்பது புரிய அவளை பெரிதாக கட்டாயப்படுத்தாமல் சிங்க் பக்கத்தில் இடத்தை சுத்தம் செய்து, “இங்க ஏறி உட்கார்ந்துக்கோ” என்று வள்ளி கூறவும், “ரொம்ப தேங்க்ஸ் ஆன்ட்டி” என்று சனந்தா கூறி, மேடை மீது அமர்ந்து உணவருந்தினாள்.
“ஆன்ட்டி நீங்களும் சாப்பிடலாம்ல” என்று சனந்தா கேட்க, “சாப்பிடணும்டா…. என்ன, இவங்க சாப்பிட்டு வேலைக்கு கிளம்பிட்டாங்கன்னா நான் நிம்மதியா உட்கார்ந்து சாப்பிடுவேன்… எனக்கு அப்படி சாப்பிட தான் பிடிக்கும்” என்று வள்ளி கூறவும், “எனக்கும் அப்படி சாப்பிடணும்னு ஆசை ஆன்ட்டி… ஆனா, அதெல்லாம் காலேஜ் படிக்கும் போதே முடிஞ்சிடுச்சு… அதுக்கப்புறம் வேலை படிப்பு திரும்பி வேலைன்னு சுத்த ஆரம்பிச்சதும் நிம்மதியா உக்காந்து சாப்பிடவே இல்லை” என்று சனந்தா கூறினாள்.
“இங்க இருக்கும் போது பெருசா வேலை இருக்காதுடா…. பசங்களுக்கு சொல்லிக் குடுக்கிறது அதுக்கப்புறம் எப்போ வாச்சும் சாயந்திரம் ஆச்சுன்னா ஹாஸ்பிடல் கிட்ட கொஞ்சம் வேலை இவ்வளவு தான் உனக்கு அதனால நீ இங்க நிம்மதியா சாப்பிடலாம்” என்று வள்ளி கூறவும், “ம்ம்…” என்று தலையை அசைத்தாள் சனந்தா.
சரவணன் உணவு உண்ட தட்டை கொண்டு வந்து சின்க்கிள் போட, “என்ன இங்கேயே ஏறி உக்காந்து சாப்டுட்டு இருக்க?” என்று கேட்க, என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் சனந்தா, “சும்மா தான்”என்று கூறினாள். வள்ளி இன்னும் இரண்டு இட்லியை சனந்தாவின் தட்டில் வைக்க, “அய்யோ ஆன்ட்டி ஆன்ட்டி போதும்” என்று சனந்தா கூற, “நல்லா சாப்பிடு… இங்க நடக்கவே நிறைய தெம்பு வேணும் உனக்கு” என்று வள்ளி கூறினார்.
“ஆமா, இப்ப நம்ம கீழ நடந்து போகவே எப்படியும் ஒரு இருபது நிமிஷமாவது ஆகும்… அது நடந்து போறதுக்காவது உனக்கு தெம்பு வேணும் சாப்பிடு” என்று சரவணன் கூற, “எங்கம்மாவே பரவால்ல போல… போதும் மா அப்படின்னு சொன்னா சரி போன்னு விட்டுடுவாங்க ஆன்ட்டி… நீங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருக்கீங்க” என்று சனந்தா போலியாக முறையிட்டாள்.
“உங்க அம்மா அப்படி சொல்லிட்டு கொஞ்ச நேரத்துல வேற ஏதாவது சாப்பிட குடுப்பாங்க தானே?” என்று வள்ளி கேட்க, “அய்யோ ஆமா அன்ட்டி எப்படி இவ்ளோ கரெக்டா சொல்றீங்க?” என்று சனந்தா ஆச்சரியமாக கேட்கவும், “எல்லா அம்மாவும் அப்படித் தான் மா” என்று வள்ளி கூற, “இப்படித் தான் நான் வீட்ல அம்மா கூட கிச்சன்லேயே உட்கார்ந்து பேசிட்டு சாப்பிடுவேன்…. என்ன எப்பயாவது ஒரு வாட்டி அம்மா ஊட்டி விடுவாங்க இல்ல நான் அவங்களுக்கு ஊட்டி விட்டுட்டே பேசிட்டு சாப்பிட்டு முடிச்சிடுவோம்” என்று சனந்தா கூறினாள்.
“நேத்து தான் யாரோ அவங்க வீட்ட ரொம்ப மிஸ் பண்றேன்னு சொல்லி கண்ணுல தண்ணி எல்லாம் வந்தது இன்னைக்கு என்னடான்னா இப்படி சிரிச்சு பேசிட்டு உக்காந்துட்டு இருக்க” என்று சரவணன் கேலியாக கூற, “தெரியல ஜாலியா இருக்கு” என்று புன்னகையுடன் கூறினாள் சனந்தா.
விக்ரம் அவனுடைய தட்டை கொண்டு சமையலறைக்குள் வரவும் சனந்தா புன்னகையுடன் சரவணன் மற்றும் வள்ளியிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அவளது சிரிப்பில் மெய் மறந்து அவளை ரசித்துக் கொண்டிருந்தான்.
சனந்தா விக்ரம் வருவதைப் பார்த்து சட்டென்று அவள் கீழே இறங்கவும், “ஏய்!!! பார்த்து விழுந்து தொலைய போற” என்று சரவணன் கூற, “ஒன்னும் ஆகல” என்று கூறி தட்டு மற்றும் கையை கழுவி, “நான் போய் என்னுடைய பேக் எடுத்துட்டு வரேன்” என்று கூறி சனந்தா சென்றாள்.
விக்ரம் அமைதியாக வந்து அவனது தட்டை போட்டு விட்டு வெளியே செல்லவும், “எனக்கு என்னமோ சனா விக்ரம பார்த்து தான் இப்படி பயப்படுறான்னு நினைக்கிறேன் டா” என்று வள்ளி ஆதங்கத்துடன் கூற, “ஆமாம்… பின்ன மூஞ்சுக்கு நேரா அவ்வளவு கோபமா பேசினா யாருக்கா இருந்தாலும் அந்த பயம் வரும் தான் மா… போக போக அவன் சரியாயிடுவான்… அவனை பத்தி சனாவும் தெரிஞ்சிப்பா விடுங்க” என்று கூறி சரவணன் வீட்டின் வாசலில் திண்ணை மீது அமர்ந்து காத்துக் கொண்டிருந்தான்.
விக்ரம் அவனது உடைமைகளை எடுத்துக் கொண்டு வரவும் சரவணன் முகத்தை திருப்பிக் கொள்ள, “என்னடா பேச மாட்டியா…. கோபம் இன்னும் போலயா உனக்கு” என்று விக்ரம் கேட்க, “அது என் கோபம்…. எப்ப போகனும்னு அதை நான் தான் முடிவு பண்ணனும் நீ எல்லாம் முடிவு பண்ணாத” என்று சரவணன் கூறினான்.
“அது சரி…. இந்தா அவளோட லேப்டாப் ஃபோன் எல்லாம் இங்கேயே வெச்சுட்டேன்னா அப்புறம் எப்படி அவளுக்கு கொடுப்ப?” என்று சரவணனிடம் விக்ரம் கொடுக்க, “அதை மறந்துட்டேன் பாரு நானு” என்று அவனையே கடித்துக் கொண்டான் சரவணன்.
“ஏன் இங்க வீட்ல சார்ஜரே இல்லையா உங்க வீட்ல தான் இருக்கா… உன்கிட்ட தான் கொடுக்கணுமா என்ன?” என்று விக்ரம் குறை கூற, “அவ நைட் எல்லாம் தூங்கவே இல்ல… நைட்டெல்லாம் ஃபோன்ல பாட்டு கேட்டுட்டு லேப்டாப்ல ரீசர்ச் வேலை எல்லாம் பார்த்துட்டு ரெண்டும் சார்ஜ் முடியற அளவுக்கு அவ முழிச்சிருக்கா…. அஞ்சரை மணிக்கு போல எனக்கு ஒரு ஃபோன் பண்ணிட்டு சார்ஜ் இரண்டு பர்சன்ட் தான் இருக்குன்னு சொல்லி கொண்டு வந்து கொடுத்தா அதனால தான் ரெண்டும் சார்ஜ் போட்டு கொண்டு வந்தேன்…. அவ தூங்கவே இல்ல சரியா… இதுக்கும் ஏதாவது நொட்டம் சொல்லிக்கிட்டு இருக்காத…. ஆங்… அப்புறம் அவளை கூட்டிட்டு நான் ஊட்டிக்கு போறேன் இன்னைக்கு அவ ஒரு சில திங்ஸ் எல்லாம் வாங்கணும்னு சொன்னா… போயிட்டு வாங்கிட்டு வரோம்” என்று சரவணன் கூறினான்.
“இதெல்லாம் வேறயா… மேடம் எதுக்கு வந்தாங்க அந்த வேலையை பார்க்க மாட்டாங்களா?” என்று விக்ரம் கேட்க, “அவ வேலைய ஆரம்பிக்க இன்னும் நாள் இருக்கு சரியா… அவ இங்க செட்டில் ஆகிட்டு சீக்கிரமாக வேலைய ஆரம்பிப்பா” என்று சரவணன் சனந்தாக்கு பரிந்து பேசினான்.
“இன்னைக்கு நம்ம ஊட்டி ஆஃபீஸ்க்கு போய் சைன் போட்டுட்டு வரணும் ஞாபகம் இருக்குல” என்று விக்ரம் கேட்க, “எல்லாம் ஞாபகம் இருக்கு அப்படியே அவளையும் கூட்டிட்டு போனா தேவையானதை வாங்கிட்டு வரப் போறா அவ்வளவு தானே” என்று சரவணன் கூற, “என்னால அதெல்லாம் பண்ண முடியாது வேணும்னா நடந்து போக சொல்லு” என்று விக்ரம் கூற, சனந்தா வந்து நின்றாள். அதை சற்றும் எதிர்ப்பாக்காத விக்ரம் அதிர்ச்சியுடன் உறைந்து அவளை பார்த்தான்.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல

Author: Bhavani Varun
Article Title: Chapter 11
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.