CHAPTER-11

Oviya Blessy

Member
Jan 4, 2025
46
0
6
ந‌ட‌ந்த‌ அனைத்தும் யாரோ திட்ட‌மிட்டு செய்துக்கொண்டிருக்கிறார்க‌ள் என்ப‌தை புரிந்துக்கொண்ட‌ அர்ஜுன், ச‌ந்ராவை அழைத்துக்கொண்டு தூர‌மாக‌ சென்றுவிட‌லாம் என்று முடிவு செய்தான். ஆனால் ச‌ந்ராவோ அத‌ற்கு ச‌ம்ம‌திக்காம‌ல் போக‌, அர்ஜுன் அவ‌ளுடைய‌ வீடே பாதுக்காப்பு கிடையாது என்று அவ‌ளிட‌ம் எடுத்து கூறினான்.

அப்போது ச‌ந்ரா, "நாம‌ ஓடி ஒளிய‌ கூடாதுன்னு ம‌ட்டுந்தா சொன்னேன். ஆனா என் வீட்டுக்கு போக‌ணுன்னு சொல்ல‌ல‌." என்று கூற‌, அவ‌னோ மேலும் குழ‌ப்ப‌த்துட‌ன் அவ‌ளை பார்த்து, "அப்பிடின்னா?" என்று கேட்க‌,

மேலும் ச‌ந்ரா, "இப்ப‌ நாம‌ எங்க‌ போக‌ணுன்னு நா சொல்றேன். என்கூட‌ வா. இந்த‌ பிர‌ச்ச‌னைய‌ அங்க‌ இருந்துதா நாம‌ ச‌மாளிக்க‌ணும்." என்று அவ‌ன் க‌ர‌ம் ப‌ற்றி அழைத்து செல்ல‌, அவ‌னும் குழ‌ப்ப‌மும் கேள்வியுமாக‌ அவ‌ளுட‌ன் சென்றான்.

அங்கிருந்து அவ‌னை காருக்கு அருகில் கொண்டு வ‌ந்து நிறுத்திய‌வ‌ள், "சீக்கிர‌ம் வ‌ண்டிய‌ எடு அர்ஜுன். நாம‌ சீக்கிர‌மா போயாக‌ணும்." என்றாள்.

அர்ஜுன், "ஆனா ச‌ந்ரா எங்க‌ போக‌ணும்? அத‌ சொன்னாதான‌ போக‌ முடியும்?" என்று கேட்க‌,

ச‌ந்ரா, "உன்னோட‌ வீட்டுக்கு." என்றாள்.

அதை கேட்டு புரியாம‌ல் அவ‌ளை பார்த்த‌வ‌ன், "என்னோட‌ வீட்டுக்கா? அது ம‌ட்டும் என்ன‌ இங்கிருந்து ரொம்ப‌ தூர‌மா? அதுவும் உன் வீட்டுக்கு ப‌க்க‌த்துல‌தா இருக்கு. அதுவும் அந்த‌ கொல‌க்கார‌னுக்கு ந‌ல்லா தெரிஞ்சிருக்கும். அங்க‌யும் ந‌ம‌க்கு சேஃப் இல்ல‌." என்றான்.

ச‌ந்ரா, "நா இங்க‌ இருக்குற‌ உன் வீட்ட‌ சொல்ல‌ல‌ அர்ஜுன். இது என் அப்பா உனக்காக குடுத்தது. நா உன்னோட‌ உண்மையான‌ வீட்ட‌ சொல்றேன்." என்றாள்.

அதை கேட்டு ஒரு நிமிட‌ம் அதிர்ந்த‌வ‌ன், "உ..உண்மையான‌ வீடா? என்ன‌ சொல்ற‌?" என்று கேட்க‌,

ச‌ந்ரா, "உன்னோட‌ அப்பா விக்னேஷ் குமார், உன‌க்காக‌ க‌ட்டுன‌ வீடு." என்று கூற, அதை கேட்டதும் அதிர்ந்து நின்ற அர்ஜுன், "என் அப்பாவ உனக்கு தெரியுமா?" என்று கேட்க,

ச‌ந்ரா, "ந‌ல்ல‌வே தெரியும். உன் அப்பா என் அப்பாவோட‌ கிளோஸ் ஃபிர‌ண்ட் அன்டு பிஸ்ன‌ஸ் பார்ட்ன‌ருங்குற‌தும் தெரியும். அன்டு அவ‌ரு எவ்ளோ பெரிய‌ கோடீஸ்வ‌ர‌ன் இங்குற‌தும் தெரியும்." என்றாள்.

அதை கேட்டு மேலும் அதிர்ந்த‌வ‌ன், "இதெல்லா உன‌க்கெப்பிடி.." என்று கேட்கும் முன், "எனக்கு எல்ல‌ா தெரியும் அர்ஜுன். உன் ஃபிர‌ண்டுதா சொன்னான்." என்றாள் சந்ரா.

அர்ஜுன், "இன்னும் வேற‌ என்னெல்லா சொன்னான்?" என்று அதிர்ச்சியுட‌ன் கேட்க‌,

ச‌ந்ரா, "நீீ அவ‌ர எழ‌ந்த‌துக்கு அப்ற‌ம் அந்த‌ சொத்தெல்லா தூக்கி போட்டுட்டு என் அப்பாவோட‌ க‌ம்ப‌னியில‌ சாதார‌ண‌ எம்ப்லாயீயா வேல‌ பாத்துகிட்டிருக்குற‌ வ‌ரைக்கும் என‌க்கு எல்லாமே தெரியும்." என்று கூற‌, மேலும் அதிர்ச்சிய‌டைந்தான் அர்ஜுன்.

அவ‌னின் இந்த‌ அதிர்ச்சியையும் பார்த்த‌வ‌ள், "ஏ அர்ஜுன் என‌க்கு இத‌ தெரிஞ்சுக்க‌ உரிமை இல்லையா?" என்று கேட்க‌,

அர்ஜுன், "இ..இல்ல‌ இல்ல‌ அப்பிடியெல்லா இல்ல‌. நா ஜ‌ஸ்ட் எதிர்பாக்க‌ல‌ அவ்ளோதா." என்றான் த‌டுமாற்ற‌த்துட‌ன்.

அப்போது ச‌ந்ரா, "அப்பிடின்னா என‌க்கு முழு உண்மையும் சொல்லு. மொத‌ல்ல‌ காருல‌ ஏறு." என்றாள்.

அதை கேட்ட‌ அர்ஜுனும் ச‌ரியென்று த‌லைய‌சைத்த‌ப‌டி காரில் ஏறி ஓட்டுந‌ர் இருக்கையில் அம‌ர்ந்தான். அதை தொட‌ர்ந்து ச‌ந்ராவும் அவ‌ன் அருகில் அம‌ர்ந்துக்கொள்ள‌, இருவ‌ரும் அங்கிருந்து புற‌ப்ப‌ட்ட‌ன‌ர்.

அந்த‌ ப‌ய‌ண‌ம் அமைதியாக‌வே அமைய‌, செல்லும் வ‌ழியில் அர்ஜுன் அமைதியாக‌வே வ‌ர‌, அதை க‌வ‌னித்த‌ ச‌ந்ராவும் அவ‌ளே பேச்சை ஆர‌ம்பித்தாள்.

"அர்ஜுன்!" என்று அழைக்க‌,

அவ‌ள் என்ன‌ கேட்க‌ வ‌ருகிறாள் என்ப‌தை அறிந்த‌வ‌ன் சாலையை பார்த்த‌ப‌டியே, "ம்ம்" என்றான்.

ச‌ந்ரா, "ப்ளீஸ் எங்கிட்ட‌ எதையும் ம‌றைக்க‌ ட்ரை ப‌ண்ணாத‌. நாம‌ ஒருத்த‌ர‌ ப‌த்தி ஒருத்த‌ர் ந‌ல்லா புரிஞ்சுக்க‌ணுன்னு நீதான‌ சொன்ன‌?" என்று கூற‌,

அத‌ற்கும் அர்ஜுன் சாலையை பார்த்த‌ப‌டியே, "நா உங்கிட்ட‌ எதையும் ம‌றைக்க‌ முய‌ற்சி ப‌ண்ண‌ல‌ ச‌ந்ரா. உன‌க்கு என்ன‌ கேக்க‌ணுமோ கேளு." என்றான் சாத‌ர‌ண‌மாக‌.

அத‌ற்கு ச‌ந்ரா, "எதுக்காக‌ அத்த‌ன‌ சொத்தையும் தூக்கி போட்டுட்டு என் அப்பாக்கூட‌ வ‌ந்த‌? அது ஏழு வ‌ய‌சுல‌ ப‌ர‌வால்ல‌. ப‌ட் இப்ப‌வும் ஏ உன் அப்ப‌வோட‌ பிஸ்ன‌ஸ்ல‌ இருந்து ஒதுங்கியே இருக்க‌?" என்று கேட்க‌,

"ஏன்னா நா என் பாஸ்கூட‌வே இருக்க‌ணுன்னு ஆச‌ப்ப‌ட்டேன்." என்று சாத‌ர‌ண‌மாக‌ ப‌தில‌ளித்தான் அர்ஜுன்.

அதை கேட்டு குழ‌ம்பிய‌வ‌ள், "இல்ல‌ என‌க்கு புரிய‌ல‌. நீ இப்பிடி எம்ப்லாயீயா அவ‌ருக்கூட‌ இருந்த‌துக்கு ப‌திலா, பார்ட்ன‌ரா அவ‌ருக்கூட‌வே இருந்திருக்க‌லாமே? உன் அப்பாவும் அத‌த்தான‌ ப‌ண்ணாரு?" என்று கேட்க‌,

அத‌ற்கு அர்ஜுன் சாலையை பார்த்த‌ப‌டி, "நீ நெனைக்கிற‌ மாதிரி என் அப்பா இல்ல‌ ச‌ந்ரா. அவ‌ரு என்னிக்குமே உன் அப்பாவ‌ பார்ட்ன‌ரா இல்ல‌, போட்டியாதா பாத்திருக்காரு." என்றான்.

அதை கேட்டு ச‌ந்ரா ச‌ற்று அதிர்சியுட‌ன் அவ‌னை ப‌ர்க்க‌, அவ‌னோ ச‌ற்றும் அவ‌ள் ப‌க்க‌ம் திரும்பாம‌ல், "அவ‌ருக்கு எப்ப‌வுமே ந‌ம்ப‌ர் ஒன்னுல‌ இருக்க‌ணும். அதுக்காக‌தா க‌ன்ஸ்ட்ர‌க்ஷ‌ன் ம‌ட்டும் ப‌ண்ணிகிட்டிருந்த‌வ‌ரு, உங்க‌ அப்பாவுக்கு போட்டியா ஜுவ‌ல்ல‌ரி பிஸ்ன‌ஸ் ஸ்டார்ட் ப‌ண்ணாரு." என்றான்.

அதை கேட்ட‌ ச‌ந்ரா சிறிது யோசித்த‌ப‌டி, "செரி பிஸ்ன‌ஸ்னு வ‌ந்துட்டா, அதுல‌ எந்த‌ உற‌வும் பாக்க‌ கூடாதுன்னு நீயும் சொல்லுவ‌ல்ல‌? அப்ற‌ம் என்ன‌?" என்று கேட்க‌,

அர்ஜுன், "ஆனா பாஸ் அப்பிடியெல்லா இல்ல‌. என் அப்பாவ‌ எப்ப‌வுமே அவ‌ரு போட்டியா பாத்த‌தில்ல‌. பிஸ்ன‌ஸ்க்கு உள்ளையும் செரி வெளியையும் செரி. ந‌ண்ப‌னா ம‌ட்டுந்தா பாத்தாரு. அத‌னால‌தா என் அப்பாக்கு க‌டைசி வ‌ரைக்கும் ச‌ப்போர்ட்டிவ்வா இருந்தாரு." என்று சாலையை பார்த்த‌ப‌டியே கூற‌,

அதை கேட்டு மேலும் யோசித்த‌வ‌ள், "அப்போ உன் அப்பா கெட்ட‌வ‌ருன்னு சொல்றியா?" என்று கேட்க‌,

அத‌ற்கும் அர்ஜுன் திரும்பாம‌ல், "இல்ல‌. அவ‌ரு ந‌ல்ல‌வ‌ருதா. என‌க்கு ஒரு ந‌ல்ல அப்ப‌வா, என் அம்மாவுக்கு ஒரு ந‌ல்ல‌ ஹ‌ஸ்ப‌ண்டா, உன் அப்பாவுக்கு ஒரு ந‌ல்ல‌ ந‌ண்ப‌னா க‌டைசி வ‌ரைக்கும் இருந்திருக்காரு. ஆனா பிஸ்ன‌ஸ்னு வ‌ந்துட்டா ம‌ட்டும், அவ‌ருக்கு வேற‌ எதுவும் க‌ண்ணுக்கு தெரியாது. அவ‌ரு ந‌ம்ப‌ர் ஒன்ல‌ இருக்க‌ணும்னு ம‌ட்டுந்தா யோசிப்பாரு. அதுக்கு எதிரா இருக்குற‌ எல்லாத்தையும் போட்டியாதா பாத்தாரு." என்றான்.

ச‌ந்ரா, "அப்போ என் அப்பா மாதிரி சில‌ இல்லீக‌ல் ஸ்ம‌க்லிங்கெல்லா..." என்று த‌ய‌ங்கி கேட்க‌,

அர்ஜுன், "அத‌ நீ த‌ய‌ங்காம‌ கேக்க‌லாம் ச‌ந்ரா. உன‌க்கு அத‌ தெரிஞ்சுக்க‌ உரிம‌ இருக்கு." என்றான் அவ‌ளை பாராம‌லே.

அத‌ற்கு ச‌ந்ரா, "உன் அப்பாவும் ஸ்ம‌க்லிங்கெல்லாம் ப‌ண்ணுவாரா?" என்று கேட்க‌,

அர்ஜுன், "இல்ல‌ ச‌ந்ரா. அதுக்கு என் அம்மா ச‌ம்ம‌திக்க‌ல‌. எதுவா இருந்தாலும் நியாய‌மான‌ வ‌ழியில‌தா ச‌ம்பாதிக்க‌ணுன்னு நென‌ச்சாங்க‌. என் அப்பாவும் என் அம்மா மேல‌ இருக்குற‌ ல‌வ்ல‌, அந்த‌ மாதிரி எந்த‌ த‌ப்பும் ப‌ண்ண‌ல‌. அத‌னால‌யே என் அப்பா ந‌ம்ப‌ர் ஒன் எட‌த்த த‌க்க‌ வெச்சுக்க‌ நெறைய‌ ஹார்ட்வொர்க் ப‌ண்ணாரு. அதனாலையே என்ன‌மோ அந்த‌ பிளேஸ‌ எழ‌ந்திர‌ கூடாதுன்னு நென‌ச்சாரு." என்றான்.

அதை கேட்டு த‌லை குனிந்த‌ ச‌ந்ரா, "அதுல‌எந்த‌ த‌ப்பும் இல்ல‌ அர்ஜுன். அவ‌ரு நெனைக்கிற‌து நியாந்தா. அப்போ என‌க்கும் ஒரு அம்மா இருந்திருந்தா, என் அப்பாவையும் இந்த‌ மாதிரி இல்லீக‌ல் பிஸ்ன‌ஸ் ப‌ண்ண‌ விட்டிருக்க‌ மாட்டாங்க‌ல்ல‌?" என்று கூற‌,

அதை கேட்டு அவ‌ள் ப‌க்க‌ம் திரும்பிய‌வ‌ன், "லீக‌லோ இல்லீக‌லோ. என் அப்ப‌வோட‌ ஆச‌ ரொம்ப‌ பெருசா இருந்துச்சு. ஆனா உன் அப்பா அப்பிடி இல்ல‌. என் அப்பாவுக்காக‌ எத்த‌னையோ டென்ட‌ர் விட்டு குடுத்திருக்காரு. அத‌னால‌தா என் அப்பா க‌டைசி வ‌ரைக்கும் ந‌ம்ப‌ர் ஒன்லையே இருந்தாரு." என்று கூறி மீண்டும் சாலையை பார்த்த‌வ‌ன், "என் அப்பா வேணுன்னா உன் அப்பாவ‌ போட்டியா நென‌ச்சிருக்க‌லாம். ஆனா உன் அப்பா எப்ப‌வுமே என் அப்பாவுக்கு போட்டியா இருக்க‌ கூடாதுன்னு நென‌ச்சாரு. அத‌னால‌தா அவ‌ருக்காக‌ நெறைய‌ விஷ‌ய‌ங்க‌ள‌ விட்டு குடுத்தாரு." என்று கூற‌, அதை கேட்டுக்கொண்டிருந்த‌ ச‌ந்ராவிற்கு இதில் யார் சரி யார் த‌வ‌றென்றே யூகிக்க‌ முடிய‌வில்லை. அப்ப‌டியிருக்க‌ இவ‌ன் ஏன் இவ்வாறு த‌ன் த‌ந்தை பிஸ்ன‌ஸை விட்டுவிட்டு இங்கு... என்று அவ‌ளுக்கு குழ‌ப்ப‌ம் முளைத்த‌து.

உட‌னே அவ‌னை பார்த்து, "செரி இதுக்கும் நீ அந்த‌ பிஸ்ன‌ஸ் வேணான்னு சொல்ற‌துக்கும் என்ன‌ ச‌ம்ம‌ந்த‌ம்? உன் அப்பா ந‌ல்ல‌வ‌ருன்னு நீயே சொல்ற‌, அன்டு அவ‌ரு எந்த‌ இல்லீக‌ல் பிஸ்ன‌ஸ்கூட‌ ப‌ண்ண‌ல‌. அப்பிடி இருக்கும்போது, அத‌ விட்டுட்டு என் அப்பாக்கூட‌ இல்லீக‌லுக்கும் ஹெல்ப் ப‌ண்ணிக்கிட்டு, அவ‌ருக்கூட‌ இருக்க‌ணுன்னு ஏ ஆச‌ப்ப‌ட்ட‌?" என்று ம‌ன‌தில் இருப்ப‌தை கேட்க‌,

அர்ஜுன், "என் அப்பா ந‌ல்ல‌வ‌ராவே இருந்தாலும், அவ‌ரு போன‌துக்கு அப்ற‌ம் என்ன‌ எடுத்து வ‌ள‌த்த‌து என் பாஸ்தா. அதுக்காக‌ ப‌திலுக்கு அவ‌ரு எதையும் எதிர்பாக்க‌ல‌. இன்ஃபேக்ட் என்னையும் என் அப்பாவோட‌ பிஸ்ன‌ஸ‌ பாத்துக்குற‌துக்காக‌, என்ன‌ ஒரு முழு பிஸ்ன‌ஸ்மேன‌ அவ‌ருதா செதுக்குனாரு. என்னோட‌ 7 வ‌ய‌சுல‌ இருந்து என்ன‌ இந்த‌ அள‌வு செதுக்கி உருவாக்குன‌ அவ‌ருக்கே நா போட்டியா மாறி நிக்க‌ விரும்ப‌ல‌. அதுதா நா அவ‌ருக்கு ப‌ண்ற‌ கைமாறுன்னு என‌க்கு தோனுச்சு. அதான‌ல‌தா என் அப்பாவோட‌ பிஸ்ன‌ஸெல்லா இன்னும் பாஸோட‌ க‌ன்ட்ரோல்லையே இருக்கு." என்றான்.

ச‌ந்ரா, "இதுக்கு அப்பா எப்பிடி ஒத்துகிட்டாரு?" என்று கேட்க‌,

அர்ஜுன், "அவ‌ருக்கு என்னோட‌ ம‌ன‌சுல‌ இருக்குற‌து தெரியாது. அவ‌ர‌ பொறுத்த‌வ‌ரைக்கும் நா இன்னும் த‌னியா பிஸ்ன‌ஸ் ப‌ண்ற‌ அள‌வுக்கு ரெடி ஆக‌ல‌ அவ்ளோதா. ஆனா எப்ப‌வும் எங்கிட்ட‌ என் அப்பாவோட‌ பிஸ்ன‌ஸ்ஸ நாந்தா பாத்துக்க‌ணுன்னு சொல்லிகிட்டே இருப்பாரு. அதுக்காக‌ நீ சீக்கிர‌மாவே ரெடியாக‌ணுன்னும் சொல்லிகிட்டே இருப்பாரு." என்றான்.

அதை கேட்ட‌ ச‌ந்ராவிற்கு த‌ன் த‌ந்தையின் ந‌ல்ல‌ ம‌ன‌தை ஏற்க‌ன‌வே அறிந்திருப்ப‌தால், அது அவ‌ளுக்கு பெரிதாக‌ தெரிய‌வில்லை. த‌ன் த‌ந்தைக்காக‌ த‌ன்னுடைய‌ அனைத்தையும் தூக்கி போட்டு, த‌ன் உண்மையான‌ அடையாள‌த்தையே ம‌றைத்து வாழும் அர்ஜுன்தான் பெரும் அதிச‌ய‌மாக‌ தெரிந்தான். அவ‌னுடைய‌ இந்த‌ ப‌ண்புக‌ள் ஏனோ அவ‌ளின் ம‌ன‌தை அவ‌ளுக்கே தெரியாம‌ல் அவ‌னிட‌ம் கொண்டு சென்ற‌து.

அப்போது தீடீரென்று கோவில் ம‌ணிக‌ளின் ஒலி அவ‌ளை திடுக்கிட‌ செய்ய‌, அப்போதே வெளியில் பார்த்த‌வ‌ள், தாங்க‌ள் மீண்டும் அதே காட்டிற்கு வ‌ந்திருப்ப‌தை பார்த்து அதிர்ந்து, திரும்பி அர்ஜுனை பார்க்க‌, அவ‌னோ சாத‌ர‌ண‌மாக‌ காரை ஓட்டிக்கொண்டிருந்தான்.

அவ‌னை கேள்வியுட‌ன் பார்த்த‌வ‌ள், "இங்க‌ எதுக்காக‌ வ‌ந்திருக்கோம் அர்ஜுன்?" என்று கேட்க‌,

அர்ஜுன், "நீதான‌ என் வீட்டுக்கு போக‌ணுன்னு சொன்ன? அதுக்கு இந்த‌ வ‌ழியாதா போக‌ணும்." என்றான்.

அதை கேட்டு அதிர்ச்சியுட‌ன் திரும்பி ஜ‌ன்ன‌ல் வ‌ழி தெரியும் அந்த‌ ச‌ங்க‌ர‌ன் கோவிலை பார்த்த‌வ‌ளுக்கு ஏனோ மீண்டும் அதே அச்சுறுத்தும் நினைவுக‌ள் அவ‌ள் மூளையை ஆக்கிர‌மிக்க‌ முய‌ற்சிக்க‌, ச‌ட்டென‌ திரும்பி அர்ஜுனை பார்த்த‌வ‌ள், "இன்னும் எவ்ளோ நேர‌ம் ஆகும் அர்ஜுன்?" என்று கேட்க‌,

அர்ஜுன், "இன்னும் 15 டூ 20 மினிட்ஸ்ல‌ போயிர‌லாம் ச‌ந்ரா." என்றான்.

அதை கேட்ட‌ அவ‌ளுக்கோ ம‌ன‌தில் ஒருவித‌ ப‌ய‌ம் எழ‌, "அப்பிடின்னா அர்ஜுனோட‌ அந்த‌ வீடு, இந்த‌ எட‌த்துக்கு ப‌க்க‌த்துல‌தா இருக்கா?" என்று ம‌ன‌திற்குள் யோசிக்க‌, அப்போதே மீண்டும் அந்த‌ நினைவுக‌ள் அவ‌ள் சிந்த‌னையை ஆக்கிர‌மிக்க‌, இர‌த்த‌ க‌ரையும், க‌த‌ற‌ல் ச‌த்த‌மும், க‌ல‌வ‌ர‌முமாக‌ ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ள் அவ‌ளை ஆட்கொண்ட‌து. அதில் ப‌ய‌ங்க‌ர‌ த‌லை வ‌லியுட‌ன் த‌ன் த‌லையை அழுந்த‌ ப‌ற்றிக்கொண்ட‌வ‌ள், க‌ண்க‌ளை திற‌க்க‌ கூட‌ சிற‌ம‌ப்ப‌ட்டுக்கொண்டு அந்த‌ நினைவுக‌ளை விர‌ட்ட‌ முய‌ற்சிக்க‌, அடிக்கின்ற‌ காற்றுக்கு அந்த‌ கோவிலின் ம‌ணிக‌ளோ விடாம‌ல் அடித்துக்கொண்டு இவ‌ளை பாடாய் ப‌டுத்திய‌து.

அப்போதே அன்னிச்சையாய் அவ‌ளை க‌வ‌னித்த‌வ‌ன், ச‌ட்டென‌ காரை நிறுத்திவிட்டு, "ச‌ந்ரா! ச‌ந்ரா என்ன‌ ஆச்சு?" என்று அவ‌ள் த‌லையை ப‌ற்றியிருக்கும் க‌ர‌ங்க‌ளை ப‌ற்றி, "ஆர் யூ ஓகே?" என்று ப‌த‌ற்ற‌த்துட‌ன் கேட்க‌,

அவ‌ன் குர‌லில்தான் த‌ன்னிலைய‌டைந்த‌வ‌ள், மெல்ல‌ அவ‌னை பார்த்து, "யா ஐய‌ம் ஓகே அர்ஜுன்." என்றாள்.

அதை கேட்டு குழ‌ம்பிய‌வ‌ன், "இப்ப‌ என்ன‌ ஆச்சு உன‌க்கு? ஏ இப்பிடி த‌லைய‌ புடிச்சுகிட்டிருக்க‌?" என்று கேட்க‌,

அத‌ற்கு அவ‌ள், "இல்ல‌ ஒன்னும் இல்ல‌. என‌க்கு கொஞ்ச‌ம் த‌ல‌ வ‌லிக்கிற‌ மாதிரி இருந்துச்சு அத‌னால‌தா." என்று ச‌மாளித்தான்.

அதை கேட்டு மேலும் ப‌த‌றிய‌வ‌ன், "செரி நாம சீக்கிர‌மே வீட்டுக்கு போய‌ரலாம். இன்னும் கொஞ்ச‌ தூர‌ந்தா. அங்க‌ போய் ப‌டுத்து ரெஸ்ட் எடுத்தா எல்லாம் செரியாயிரும்." என்று கூறி காரை ஸ்டார்ட் செய்தான்.

அடுத்த‌ இருப‌து நிமிட‌ங்க‌ளில் அவ‌ர்க‌ளின் கார் ஒரு பிர‌ம்மாண்ட‌ அட‌ர் நீல‌ நிறை கேட்டிற்குள் நுழ‌ந்து, உள்ளே ஒரு ஆட‌ம்ப‌ர‌மான‌ வீட்டு வாச‌லில் வ‌ந்து நின்ற‌து. அந்த‌ வீட்டின் வாச‌ல் க‌த‌வின் அருகில் வி.கே ஹ‌வுஸ் என்று எழுத்துக்க‌ள் பொறிக்க‌ப்ப‌ட்ட‌ பெய‌ர் க‌ல்வெட்டு இருந்த‌து. அதை பார்த்துக்கொண்டே ச‌ந்ரா காரைவிட்டு கீழே இற‌ங்க‌, அவ‌ளை தொட‌ர்ந்து கீழே இற‌ங்கிய‌ அர்ஜுன் அவ‌ளுக்கு முன்னே செல்ல‌, அப்போது அவ‌ர்க‌ள் வ‌ருவ‌தை பார்த்த‌ ஒரு வேலைக்கார‌ பெண் ஓடி வ‌ந்து அர்ஜுனிட‌ம், "இந்தாங்க‌ சார் சாவி." என்று நீட்டினாள்.

அதை சிறு புன்ன‌கையுட‌ன் வாங்கிய‌வ‌ன், த‌ன்னை கேள்வியுட‌ன் பார்க்கும் ச‌ந்ராவை பார்த்து, "நா வீக்கென்ட் ஆனா இங்க‌தா வ‌ருவேன். சோ அத‌னாலையே இங்க‌ வேல‌ செய்யிற‌வ‌ங்க‌, இந்த‌ வீட்ட‌ வார‌ம் வார‌ம் சுத்த‌ப்ப‌டுத்தி வெச்சிருப்பாங்க‌. சோ கிளீன் ப‌ண்ற‌ வேல‌ இல்ல‌. உள்ள‌ வா ." என்றான் புன்ன‌கையுட‌ன்.

பிற‌கு ச‌ந்ராவும் சுற்றி முற்றி பார்த்த‌ப‌டியே அவ‌னுட‌ன் செல்ல‌, வாச‌ல் க‌த‌வை த‌ன் சாவிக்கொண்டு திற‌ந்த‌ப‌டி அவளை உள்ளே அழைத்து சென்றான் அர்ஜுன்.

க‌த‌வை திற‌ந்த‌ நொடி அவ‌ள் க‌ண்க‌ள் அந்த‌ வீட்டின் அழ‌கை சுற்றி பார்க்க‌ துவ‌ங்க‌, சிறிதும் குறை கூற‌ முடியாத‌ அள‌வுக்கு க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ இல்லை அழ‌காக‌ செதுக்க‌ப்ப‌ட்ட‌ அந்த‌ வீட்டின் அழ‌கிலும் க‌ட்டிட‌ க‌லையிலும் அச‌ந்து நின்றாள் சந்ரா. அவ‌ளின் விய‌ப்பை பார்த்து புன்ன‌கைத்த‌ அர்ஜுன், "என்ன‌ அப்பிடி பாக்குற‌? இது ஒரு பில்டிங் க‌ன்ஸ்ட்ர‌க்ட்ட‌ரோட‌ வீடு. அப்போ கொஞ்ச‌ம் அழ‌காதான‌ இருக்கும்?" என்று கிண்ட‌லாக‌ கூற‌,

அதை கேட்டு த‌ன் பார்வையால் அந்த‌ வீட்டை அள‌ந்த‌ப‌டியே, "உன்னோட‌ வீடு உண்மையில‌யே ரொம்ப‌ ரொம்ப‌ அழ‌கா இருக்கு அர்ஜுன்." என்று திகைப்புட‌ன் கூற‌,

அதை கேட்ட‌ அவ‌னோ அவ‌ளின் க‌ர‌ம் ப‌ற்றி, த‌ன் விர‌ல்க‌ளை அவ‌ள் விர‌ல்க‌ளுட‌ன் கோர்க்க‌, அதில் திடுக்கிட்ட‌வ‌ள் அவ‌ன் செய‌லில் கேள்வியுட‌ன் அவ‌னை பார்க்க‌, அப்போது அர்ஜுன் அவ‌ள் விழி பார்த்து "ந‌ம்ப‌ வீடுன்னு சொல்லு." என்று கூறி மேலும் உள்ளே அழைத்து சென்றான்.

அவ‌ன் வார்த்தைக‌ளில் ஏனோ ச‌ந்ராவின் காதுக‌ளை அவ‌ளாலே ந‌ம்ப‌ முடிய‌வில்லை. அவ‌னை விய‌ப்புட‌ன் பார்த்த‌ப‌டியே அவ‌னுட‌ன் சென்றாள்.

- ஜென்மம் தொடரும்...
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-11
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.