Chapter-10

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
163
0
16
www.amazon.com
உதகை மண்டலத்தின் மலையோர கிராமத்தில் தனது சிரியா கிளினிக்கில் அமர்ந்து அங்கே வந்த பேஷண்ட்களை கவனித்து கொண்டு இருந்தாள் ஷாலினி.

விஷ்ணு அவள் வாழ்வில் வசந்தமாக வந்த பிறகு பெரிதாக அவள் எதற்கும் கவலைப்பட்டதில்லை.

அவனுக்கு பிறகு அவள் அதிகம் நேசிப்பது அவளுடைய மருத்துவ தொழில் தான்.

அதை செய்யும்போது அவளுடைய முகத்தில் எப்போதும் ஒரு பிரகாசமும் பெருமிதமும் தெரியும்.

இப்போதும் அதே மலர்ந்த முகத்தோடு மணி மாலை மூன்றாகி கொண்டு இருப்பதைக் கூட கண்டுகொள்ளாமல் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் ஷாலினி.

அப்போது ஒரு 20 வயது மதிக்கத்தக்க கிழிந்த ஆடைகளில் இருந்த இளைஞன் ஒருவனை நான்கு பேர் அங்கே சிரமப்பட்டு இழுத்து வந்தார்கள்.

அவனோ “என்ன விடுங்க என்ன விடுங்க... நான் வரமாட்டேன்.

எனக்கு டாக்டரை பார்க்க பிடிக்காது.

என்ன ஒழுங்கா வீட்டுக்கு கூட்டிட்டு போங்க.

இல்லைனா உங்க எல்லாரையும் நான் அடிச்சிடுவேன்.

என்ன விடுங்க, இங்க இருந்து என்னை கூட்டிட்டு போங்க!” என்று தொடர்ந்து கத்தியபடி அவனை பிடித்திருந்தவர்களை தள்ளிவிட முயற்சி செய்து கொண்டிருந்தான்.

அவனது அம்மா தன்னுடன் வந்தவர்களிடம் “இவ்ளோ தூரம் வந்தாச்சு. எப்படியாவது டாக்டர பார்த்து இன்னைக்கு இவனுக்கு மயக்க ஊசி போட்டு விட்டுடனும்.

இன்னைக்கு சாயந்தரம் என் பொண்ணுக்கு ரிசப்ஷன் வச்சிருக்கேன்.‌

எப்படியோ கல்யாணத்தை ஓட்டிட்டேன். இந்த பைத்தியக்கார பையன் மண்டபத்துக்கு வந்தவங்க யாரையும் நிம்மதியா இருக்கவே விட மாட்டேங்குறான்.

யாரைப் பார்த்தாலும் இங்கிருந்து போங்க போங்கன்னு விரட்டுறான்.‌

யாருக்கும் தொந்தரவா இருக்க கூடாதுன்னு ஒரு ரூம்குள்ள போட்டு பூட்டுனாளும்,

கதவை அடிச்சே உடைக்கிற அளவுக்கு தட்றான்.

கொஞ்சம் கோச்சுக்காம உள்ள மட்டும் இவன எப்படியாவது கூட்டிட்டு போயிருங்க.‌

மைக்க ஊசி போட்டு போகும்போது ஆட்டோல ஏத்தி மண்டபத்துல கொண்டு போய் ஏதாவது ரூம்ல போட்டு பூட்டியடலாம்." என்று சொல்லி ஷாலினியை காண தன் புத்திஸ்வாதீனம் இல்லாத மகனை உள்ளே அழைத்துச் சென்றாள்.‌

அவனது சத்தம் கேட்டு அவன் பக்கம் திரும்பி பார்த்த ஷாலினி கலவரம் அடைந்தாள்.

அவளது உடல் அவளையும் மீறி பயத்தில் நடுங்க, தானாக எழுந்து நின்றாள் ஷாலினி.

அவளைப் பார்த்தவுடன் எங்கே தனக்கு இவர்கள் அனைவரும் சேர்ந்து ஊசி போட்டு விடுவார்களோ என்று நினைத்து பயந்த அந்த பைத்தியக்கார இளைஞன்,

“ஆஆஆ.. என்ன விடுங்க! என்ன விடுங்க! நான் போகணும்.

ஏய் நீ தான் டாக்டரா? எனக்கு நீ ஊசி போட போறியா?

நீ என்னை தொட்டினா நான் உன்னை கொன்றுவேன் டி.

ஒழுக்க அங்கிருந்து ஓடி போயிடு.” என்று உச்சஸ்ருதியில் கத்தத்தொடங்கி விட,

அவன் தன்னைப் பிடித்திருந்தவர்களையும் மீறி திமிறிக் கொண்டு தன்னை நோக்கி வந்ததால் கதி கலங்கிப்போன ஷாலினி,

“இல்ல வெளிய போ.. என் பக்கத்துல வராத..‌

நான் சொல்றதை கேளு.. ஒழுங்கா வெளிய போயிடு..

இவன கூட்டிட்டு போங்க!

எனக்கு இவன பார்த்தாலே பயமா இருக்கு.” என்று ‌ தன் கண்களை இறுக்கமாக மூடியபடி தனது காதுகள் இரண்டையும் கைகளால் அடைத்தவாறு அவனைவிட சத்தமாக பயத்தில் கத்தினாள். ‌
அவள் கத்தியதில் இன்னும் பயந்து போன அந்த பைத்தியக்கார இளைஞன், “ஐயோ பேயி.. பேயி..‌ வெள்ளை டிரஸ் போட்ட பேயி.." என்று கத்திக் கொண்டு தன்னை பிடித்திருந்தவர்களை தள்ளிவிட்டு வெளியில் ஓடினான்.‌

அவனது குரல் தனக்கு மிக அருகில் கேட்டதால் கண்களை மூடி இருந்த ஷாலினி அவன் தன் அருகில் தான் வந்து விட்டான் போல என்று நினைத்து பயந்து,

“ஐயோ ப்ளீஸ் என் பக்கத்துல வராத!” என்று தனது அடி தொண்டையில் இருந்து கத்திவிட்டு அப்படியே மயங்கி தரையில் விழுந்தாள்.

தன் மகனுக்கு டாக்டரிடம் டிரீட்மென்ட் கொடுக்க வேண்டும் என்று நினைத்து வந்த அவனது அம்மா,

இப்படி டாக்டரே தன் மகனை பார்த்து பயந்து மயங்கிவிட்டதால் இப்போது தன் மகளின் ரிசப்ஷனை எப்படி நடத்துவது? என்று புரியாமல் ஒருபுறம் குழப்பத்தில் நிற்க,

அவளுடன் வந்தவர்கள் அந்த பைத்தியக்கார இளைஞன் வெளியில் ஓடிவிட்டதால் “டேய் பைத்தியக்காரா நில்லு டா!

எங்கடா ஓடுற நில்லு! டேய் நில்லடா டேய்!” என்று அவன் பின்னே கத்திக் கொண்டு வெளியே ஓடினார்கள்.

அப்போது அங்கே ஷாலினிக்கு அசிஸ்டன்டாக வேலை பார்த்துக் கொண்டு இருந்த நர்ஸ் ஒருத்தி ஷாலினியின் முகத்தில் தட்டி,

“டாக்டர்.. டாக்டர்.. கண்ணை தொறந்து பாருங்க டாக்டர்.

ஏதாச்சும் உங்களுக்கு? ஏன திடீர்னு வாங்கிட்டீங்க?" என்று பதறி போய் அவளுக்கு மயக்கம் தெளிய வைக்க போராடிக் கொண்டிருந்தாள்.

அப்போது அங்கே ஒரு பாட்டியுடன் பைக்கில் வந்து இறங்கிய விஷ்ணு உள்ளே அனைவரும் கூட்டமாக ஒரே இடத்தில் நின்றிருப்பதை பார்த்துவிட்டு குழப்பத்துடன் உள்ளே சென்றான்.‌

அங்கே இருந்த நர்ஸ் பெண்மணி கையில் ஒரு வாட்டர் பாட்டிலை வைத்துக்கொண்டு ஷாலினியின் முகத்தில் தண்ணீர் தெளித்து,

“மேடம்.. மேடம் கண்ணை தொறந்து பாருங்க மேடம்..‌

உங்களுக்கு நான் பேசுறது கேக்குதா?” என்று கேட்டுக் கொண்டிருக்க,

தரையில் மயங்கி கிடந்த ஷாலினியை கண்டு அதிர்ந்த விஷ்ணு ஓடிச் சென்று அவளை தூக்கி அருகில் இருந்த பெட்டில் படுக்க வைத்து விட்டு அவள் முகத்தில் தட்டி,

“ஷாலினி... ஷாலினி.. என்ன ஆச்சுடி உனக்கு?

ஏன் இப்படி இருக்க? எனக்கு பயமா இருக்கு ஷாலு.

ப்ளீஸ் என்ன டென்ஷன் பண்ணாம கண்ணை திறந்து பாரு டி.

உனக்கு மட்டும் ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா, சத்தியமா நான் இப்பவே செத்துருவேன் டி.

ஒழுங்கு மரியாதையா கண்ணை தொறந்து என்ன பாரு.” என்று கண்ணீருடன் சொன்ன விஷ்ணு அவன் எத்தனை முறை அவளை எந்திரிக்கச் சொல்லியும் ஷாலினி கண் திறக்காததால் பயந்துப்போனான்.‌

உடனே அவன் மீண்டும் அவளது முகத்தில் தட்டி பார்த்துவிட்டு அவளுக்கு சீரியஸாக ஏதோ ஆகிசீரியஸாக என்று நினைத்து பயந்து தரையில் அமர்ந்து தன் தலையில் அடித்துக் கொண்டு,

“ஐயோ ஷாலினி.. என்னடி ஆச்சு உனக்கு!

நீ இல்லாம நான் என்னடி பண்ணுவேன்?

என்ன விட்டுட்டு போயிட்டியா?” என்று கதறி அழ தொடங்கி விட்டான்.

அவனை அப்படி பார்க்கவே அங்கிருந்தவர்களுக்கு பரிதாபமாக இருந்தது.

அவர்கள் அனைவரிடமும் ஷாலினி நல்ல முறையில் பழகுவதால் அவளை நினைத்தும் அனைவரும் கவலைப்பட்டார்கள்.

விஷ்ணுவை ஓரங்கட்டி விட்டு அவனுடன் வந்த பாட்டி ஷாலினியின் கையைப் பிடித்து பார்த்துவிட்டு அவளது நாடி துடிப்பு நார்மலாக இருப்பதை உறுதி செய்தவர்,

பின் அந்த நர்ஸ் வைத்திருந்த வாட்டர் பாட்டிலை வாங்கி கை நிறைய இரண்டு மூன்று முறை தண்ணீரை எடுத்து அதை வேகமாக ஷாலினியின் முகத்தில் அடித்தார்.

அதில் சுயநினைவிற்கு வந்த ஷாலினி தன் கண்களை திறந்து பார்த்தாள்.

அவளுக்கு முன்னே மேலே இருந்த சீலிங் தான் தெரிந்தது.

ஆனால் அவளுக்கு அந்த பைத்தியக்காரன் தன் அருகில் பாய்ந்து வந்த காட்சி மட்டுமே மனக்கண்களில் மீண்டும் மீண்டும் படமாக ஓட,

மீண்டும் பயத்தில் தொடங்கிய ஷாலினி தன் கை கால்களை குறுக்கிக் கொண்டு

“என்னை விட்டுடு. என்ன விட்டுடு..

என் பக்கத்துல வராத. நான் உன்னை எதுவும் பண்ண மாட்டேன்.

நீயும் என்னை எதுவும் பண்ணக்கூடாது.

ப்ளீஸ் இங்கிருந்து போயிரு!” என்று தன் கண்களை மூடிக் கொண்டு கதறி அழ தொடங்கி விட்டாள்.

இப்போதுதான் அவள் எதற்காக மயங்கி விழுந்திருக்கிறாள் என்றே விஷ்ணுவிற்கு புரிந்தது.

அதனால் அவள் அழுவதையும் தாண்டி அவளுக்கு தான் நினைத்து பயன்களைப் போல தவறாக எதுவும் நடக்கவில்லை என்று நினைத்து நிம்மதி அடைந்தவன்,

தன் கண்ணீரை துடைத்துவிட்டு எழுந்து அவள் அருகில் அமர்ந்து அவளை அணைத்துக் கொண்டு,

“ஒன்னும் இல்ல ஷாலு மா. பயப்படாத பயப்படாத!

நான் இங்கதான் இருக்கேன். இங்க யாரும் இல்ல.

யாரும் உன்னை எதுவும் பண்ண மாட்டாங்க.‌

கண்ண தொறந்து என்ன பாரு." என்றான் விஷ்ணு.

அவன் குரலை கேட்ட பிறகுதான் கொஞ்சம் சுயநினைவிற்கு திரும்பிய ஷாலினி தன் கண்களை திறந்து அவனை பார்த்தாள்.

இன்னும் அவளது இதயம் பயத்தில் படபடவென்று துடித்துக் கொண்டிருக்க,

“நெஜமாவே அவன் போயிட்டானா? மறுபடியும் இங்க அவன வர வேண்டாம்னு சொல்லி விஷ்ணு.

எனக்கு அவன பார்த்தாலே ரொம்ப பயமா இருக்கு.

அவன் என்ன ஏதாவது பண்ணிடுவான்.

ப்ளீஸ் நீ என் கூடவே இரு. என்ன தனியா விட்டுட்டு எங்கேயும் போயிடாத." என்று சொல்லிவிட்டு அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் ஷாலினி.

அவளது இதயம் வேகமாக துடிப்பதை இப்போது அவனாலும் உணர முடிந்தது.

அவளை சமாதானப்படுத்துவதற்காக அவளது முதுகில் லேசாக தேய்த்துவிட்ட விஷ்ணு,

“நான் தான் இங்கே இருக்கேன் இல்ல அப்புறம் உனக்கு என்ன பயம்?

என்ன மீறி இங்க யாரும் வந்து உன்னை எதுவும் பண்ண முடியாது ஷாலு.

ரிலாக்ஸ்.. கம் டவுன். அவன் இங்க இருந்து போயிட்டான்.

எப்பயும் திரும்ப வர மாட்டான்.” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

அப்போது அந்த பைத்தியக்காரனை தேடி வெளியில் ஓடிச் சென்றவர்கள் சரியாக அவனைப் பிடித்து உள்ளே இழுத்துக் கொண்டு வந்தார்கள்.

அதைத்தான் ஓரக்கண்ணால் கவனித்த விஷ்ணு தன் ஒற்றை கையை அவர்கள் முன்னே நீட்டி உள்ளே வரவேண்டாம் என்பதைப் போல சைக்கிள் செய்தவன்,

தன் அருகில் இருந்த நர்ஸ் பெண்மணியை பார்த்து “இந்தா மா என்ன வேடிக்கை பாத்துட்டு இருக்க?

போய் அவனுக்கு என்ன பிரச்சனைன்னு பாரு.

இந்த மாதிரி பேஷண்ட்டை எல்லாம் ஷாலினி பார்க்க மாட்டா.

அவங்களுக்கு என்ன செய்யனுமோ கேட்டு செஞ்சு அனுப்பு.

இனிமே இப்படி யாரும் உள்ள வரக்கூடாது.” என்று ஆணையிடும் தோரணையில் கத்திச் சொன்னான்.‌

விஷ்ணுவிற்கும், ஷாலினிக்கும் நடுவில் இருக்கும் உறவை பற்றி அங்கிருக்கும் அனைவருக்கும் தெரியும் என்பதால்,

உடனே அந்த நர்ஸ் அவன் பேச்சுக்கு மரியாதை கொடுத்து அவன் அம்மாவையும் வெளியில் அழைத்து சென்று அவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டாள்.

“இவனையெல்லாம் குணப்படுத்த முடியாதுன்னு எப்பயோ பெரிய டாக்டர் எல்லாம் பாத்துட்டு சொல்லிட்டாங்க கண்ணு.

என் பொண்ணுக்கு இன்னைக்கு கல்யாணம்.

இன்னும் கொஞ்ச நேரத்துல ரிசப்சன் நடக்கப்போகுது.

என்னால இந்த பையல வச்சுக்கிட்டு ஒன்னும் பண்ண முடியல.

இவனுக்கு மயக்க ஊசி மட்டும் போட்டு விடு.

இன்னைக்கு நைட்டு வரைக்கும் யாரையும் தொந்தரவு பண்ணாம இவன் மயக்கத்தில இருந்தா போதும்.” என்று அவன் அம்மா சொல்லிவிட,

அந்த நர்ஸ் மீண்டும் உள்ளே சென்று ஷாலினியிடம் கேட்டுவிட்டு ஒரே ஊசியை எடுத்துச் சென்று அந்த பைத்தியக்கார இளைஞனுக்கு போட்டு அவனை மயக்கம் அடையச் செய்தாள்.

உடனே அந்தப் பெண்ணிற்கு நன்றி சொன்ன அவன் அம்மா டாக்டர் ஃப்சை அவளிடம் கொடுத்துவிட்டு,

தன் மகனை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டாள்.

“தம்பி இன்னைக்கு மத்தியானத்துக்கு சமைக்கலன்னு சொல்லுச்சு.

அதான் உங்க ரெண்டு பேரையும் சாப்பிட கூட்டிட்டு போகலாம்னு நானே தம்பி கூட நேர்ல இங்க வந்தேன்.

ஆனா நீ இங்க வந்து பார்த்தா இப்படி கிடைக்கிறியே தாயி!

எனக்கு நீ அப்படி மயங்கி கிடக்கிறத‌ பார்த்தவுடனே மனசே திக்குன்னு அயிடுச்சு தெரியுமா?

விஷ்ணு தம்பி நீ ரொம்ப பயந்துருச்சு.

பொண்ணுங்க இவ்வளவு பலவீனமா இருக்கக்கூடாது மா.

நம்ம பார்க்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு.

நான் நாட்டுக்கோழி அடிச்சு குழம்பு வச்சிருக்கேன்.

உங்க தாத்தாவும் உன்ன ஒரு வாரமா பாக்கணும் பாக்கணும்னு சொல்லிட்டே இருக்காரு.

நீங்க ரெண்டு பேரும் வாங்க. வீட்டுக்கு வந்து ஒரு எட்டு சாப்பிட்டு போயிருங்க!” என்று பாட்டி விஷ்ணுவையும் ஷாலினியையும் தன் வீட்டிற்கு சாப்பிட வரச் சொல்லி அழைக்க,

இங்கேயே இருந்தால் மீண்டும் அவனைப் பற்றித்தான்
தனக்கு ஞாபகம் வரும் என்று நினைத்த ஷாலினி,

கொஞ்ச நேரத்திற்கு வெளியில் சென்று விட்டு வரலாம் என எண்ணி “சரிங்க பாட்டி!” என்று சொல்ல,

அந்த பாட்டியின் வீட்டை நோக்கி அவர்கள் மூவரும் பயணிக்க தொடங்கினார்கள்.
- மீண்டும் வருவாள் 💕
 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-10
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.