Chapter-10

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
163
0
16
www.amazon.com
அத்தியாயம் 10: மேகமோ அவள்...!!!



இது கோடை காலம் என்பதால் அந்த இரவு நேரத்திலும் வெட்கை அதிகமாக இருந்ததால், கையில் லேப் டாப் உடன் வெளியே சென்று பால்கனியில் அமர்ந்தாள் பிரியா.

இசை அங்கே வருவதற்குள் அவன் லேப்டாப்பில் அவள் ஏதோ செய்து கொண்டு இருப்பதை கவனித்தவன்‌‌ ஷாக் ஆகி,

“நான் என் லேப்டாப்பை பாஸ்வேர்ட் போட்டு லாக் பண்ணி வச்சிருந்தேனே...

நீ எப்படி பாஸ்வேர்ட் தெரியாம ஓப்பன் பண்ண?" என்று அவளைப் பார்த்து கேட்டபடியே அவள் அருகே இருந்த சேரில் வந்து அமர்ந்தான்.

அவனை கேஷுவலாக ஒரு பார்வை பார்த்த பிரியா,

“இதுல என்ன பெரிய சீம ரகசியமா நீங்க வச்சு இருக்க போறீங்க..??

அதான் நீ வர்றதுக்குள்ள ஹேக் பண்ணிட்டேன்." என்று ஆசால்ட்டான குரலில் சொன்னாள்.

அவள் சொன்னதைக் கேட்டு இன்னும் அதிர்ந்த இசை,

“என்னது ஹேக் பண்ணிட்டியா?

அதுவும் இவ்ளோ சீக்கிரமாவா?

உனக்கு இதெல்லாம் தெரியுமா..??" என்று ஆச்சரியமான குரலில் கேட்டான்.

“ம்ம்ம்... கொஞ்சம் தெரியும்.

அத விடு, ரெஸ்டாரன்ட்டோட அக்கௌன்ட்ஸ் எல்லாத்தையும் எப்படி மெயின்டைன் பண்றீங்க?

எக்ஸெல் சீட்ல ரெகார்ட் இருக்கா?" என்று லேப்டாப்பில் எதையோ பார்த்தபடி அவள் கேட்க,

“நாங்க ப்ராப்பரா அதுக்கான அக்கவுண்ட்ஸ் எல்லாம் மைண்டைன் பண்ணுது இல்ல பிரியா.

மளிகை சாமான் வாங்க போறப்ப மட்டும் எதெல்லாம் இல்லைன்னு பார்த்து அத மட்டும் எழுதிட்டு போய் கரெக்டா வாங்கிட்டு வருவோம்.

நம்ம கிட்ட முதல்ல எவ்வளவு காசு இருந்துச்சு, இப்ப இந்த மாசம் எவ்ளோ கையில மீதி இருக்கின்றத வச்சு இந்த மாசம் பிராஃபிட்டா லாசான்னு டிசைட் பண்ணிப்போம். அவ்ளோ தான்.” என்றான் அவன்.

“ஓகே Fine, இதுக்கு முன்னாடி எப்படியோ..

இனிமே அப்படி எல்லாம் இருக்க கூடாது.

இங்க சாப்பிட வர்றவங்க எல்லாருக்கும்‌ பில் அமௌன்ட் எவ்ளோ ஆச்சுன்னு சிஸ்டம்ல என்ட்ரி பண்ணதுக்கு அப்புறமா தான் பில் பிரிண்ட் பண்ணி குடுக்கணும்.

அது என் டிபார்ட்மெண்ட் நான் அத பாத்துக்குறேன்.

நீ நாளைக்கே போய் நம்ம ரெஸ்டாரன்ட் பேர்ல ஒரு ஆபீஸியல் பிசினஸ் அக்கவுண்ட், ஒரு நல்ல பேங்க்ல ஓப்பன் பண்ற." என்று சொல்லிக் கொண்டு இருந்த பிரியா திடீரென்று ஏதோ ஞாபகம் வந்தவளாக அவனை திரும்பிப் பார்த்து,

“Wait a minute...

முதல்ல இந்த ரெஸ்டாரண்டுக்கு நீ FSSAI சர்டிபிகேட் வாங்கி இருக்கியா?

GST pin இருக்கா..???" என்று கேட்டாள்.

“ம்ம்... அதெல்லாம் இருக்கு.

என் பெயர்ல தான் வாங்கி வச்சிருக்கேன்.

அந்த டாக்குமெண்ட்ஸ் எல்லாத்தையும் கொண்டு வரவா?" என்று அவன் கேட்க,

“போய் சீக்கிரம் அத கொண்டு வா.

இங்க டேக் அவே ஆப்ஷன் இல்ல தானே?

உன் pan கார்டுயும் கொண்டு வா..

swiggy, zomatoன்னு என்னென்ன ஃபுட் டெலிவரி ஆப் இருக்கோ அது எல்லாத்துலயும் நம்ம இனிமே ஃபுட் டெலிவரி பண்ண போறோம்." என்ற பிரியா அதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்னவென்று கூகுளில் தேடிக் கொண்டு இருந்தாள்.

“இத்தனை நாளா இத பண்ணனும்னு நமக்கு தோணாம போச்சே டா..!!!"

என்று நினைத்த இசை அவளிடம் என்னென்ன வேண்டும் என்று அனைத்தையும் கேட்டுவிட்டு தனது அனைத்து ஆவணங்களையும் கொண்டு சென்று அவளிடம் கொடுத்தான்.

அதை சரி பார்த்த பிரியா,

“இவன் நமக்கு நிறைய ஹெல்ப் பண்ணி இருக்கான்.

அதுக்கு பதிலா நம்மளும் இவனுக்கு நம்மளால முடிஞ்ச எல்லாம் நேசிக்கணும்." என்று நினைத்து அவர்களது உணவகத்தின் பெயரில் ஒரு ஆன்லைன் பிசினஸ் அக்கவுண்ட்டை கிரியேட் செய்தாள்.

பின் அவள் இசையிடம் சொன்னது போல அனைத்து ஆன்லைன் ஃபுட் டெலிவரி appsகளிளும் தங்களுக்கான ஒரு அக்கவுண்ட்டை தொடங்கி அதில் தங்கள் உணவுகளை டெலிவரி செய்வதற்கான அனைத்து புரோசிஜரையும் சில நிமிடங்களிலேயே செய்து முடித்து விட்டாள்.

அவளுடைய விரல்கள் பந்தயத்தில் ஓடும் குதிரை போல வேகமாக அந்த லேப்டாப்பின் கீபோர்ட்டில் உள்ள பட்டன்களை அழுத்திக் கொண்டு இருந்தன.

பின் அபிசியலான அனைத்து வேலைகளையும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திலேயே முடித்துவிட்ட பிரியா,

இசையை அழைத்து அதில் இருந்தவற்றை காட்டி அதை எப்படி பயன்படுத்துவது என்று அவனுக்கும் சொல்லிக் கொடுத்தாள்.

சில சமயங்களில் லேப்டாப் ஸ்கிரீன், சில சமயங்களில் வெண்ணிலவை போன்று பளிச்சென்று இருந்த அவள் முகம், என இரண்டையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு இருந்தான் இசை.

அப்போது காற்று பலமாக வீச தொடங்கியது.

மழை வருவதற்கான அறிகுறியாக காற்றல் ஈரப்பதம் கூடியது.

இசை, பிரியாவின் அருகில் அமர்ந்து இருந்ததால் காற்றில் பறந்த அவளுடைய நீண்ட கூந்தல் அவ்வப்போது இசையின் முகத்தில் வந்து முத்தமிட்டு சென்றது.

பிரியா பயன்படுத்தும் காட்டுப் பூக்களால் செய்த இயற்கை ஷாம்பு, அவன் நாசிகளில் நுழைந்து அவனுக்கு ஓருவித கிரகத்தை கொடுத்தது.

தங்களது brandஐ மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் எவ்வளவு அவசியம் என்று அறிந்து வைத்து இருந்த பிரியா,

அதைப்பற்றி இசைக்கு விவரித்தபடி அவன் மொபைல் எண்ணை பயன்படுத்தி இருக்கும் அனைத்து சோசியல் மீடியாவிலும் தங்களுடைய உணவகத்தின் பெயரில் ஒரு அக்கவுண்ட் ஓப்பன் செய்தாள்.

பின் google adsக்கு கணிசமான ஒரு தொகையை செலுத்தி யாரேனும் ரெஸ்டாரன்ட்களை பற்றி இந்த ஊரில் இருந்து சேர்ச் செய்தால், தங்களது ரெஸ்டாரன்ட்டின் பெயர் முன்னே வரும்படி செய்தாள்.

பிரியாவின் ஒவ்வொரு செய்கைகளும் மிகவும் பிரபஷனலாக இருந்தது.

அதை கவனித்த இசை, இத்தனை நாள் தான் ஆர்வக்கோளாறில் ரெஸ்டாரண்ட் நடத்த வேண்டும் என்று எதைப்பற்றியும் தெரிந்து கொள்ளாமல்,

தன் போக்கிற்கு எவ்வளவு முட்டாள் தனமாக இதை நடத்தி இருக்கிறோம் என்று அவனுக்கு இப்போது புரிந்தது.

அதனால் பிரியா எது சொன்னாலும் அதை தெய்வ வாக்காக எடுத்துக் கொண்ட இசை அதை அப்படியே ஏன், எதற்கு, என்று கேள்வி கேட்காமல் செய்தான்.

இசை தன் பேங்க் அக்கௌன்ட் டீடைல்ஸை பிரியாவிடம் கொடுத்திருந்ததால் அந்த அக்கவுண்டை ஆன்லைனில் லாகின் செய்து பார்த்த ப்ரியா, அதில் இருந்த பேலன்ஸை செக் செய்தாள்.

அதில் வெறும் 30 ஆயிரம் மட்டும் தான் வைப்பு தொகையாக இருந்தது.

அதைக் கண்ட பிரியா இசையின் முகத்தை திரும்பி பார்க்க,

அவளைப் பார்த்து வெட்கமின்றி சிரித்த இசை,

“அதான் நான் நம்ம ரெஸ்டாரன்ட் லாஸ்ல போகுது...

பெருசா இன்கம் இல்லைன்னு ஏற்கனவே சொன்னேன்ல...!!!" என்று தன்னிலை விளக்கம் கொடுத்தான்.

அவன் பேசியதை எல்லாம் கண்டு கொள்ளாத பிரியா அவன் பேங்க் ஸ்டேட்மென்ட்டை செக் செய்துவிட்டு,

“இந்த ரெஸ்டாரண்ட்ல நீ யாரு...????" என்று கேட்டாள்.

“இதென்ன கேள்வி..??

நானும், ஜீவாவும், தான் இந்த ரெஸ்டாரன்ட்டோட ஆல் இன் ஆல் அழகுராஜாக்கள்." என்று அவன் அணிந்து இருந்த டிஷர்டில் இல்லாத காலரை தூக்கிவிட்டுக் கொண்டு பிரியாவிடம் கெத்தாக சொன்னான் இசை.

“ஓ... இந்த ரெஸ்டாரண்டுக்கு நீ ஓனர்ன்றத இப்பவே மறந்துடு.

அதான் இப்போ அஃபிஷியலா நம்ப ரெஸ்டாரண்டுக்குன்னு ஒரு பிசினஸ் அக்கௌன்ட் ஓப்பன் பண்ணி ஆச்சுல்ல..

சோ ட்ரான்ஸாக்ஷன் எல்லாமே இனி அதுல தான் நடக்கணும்.

ஆன்லைன் பேமெண்ட் பண்றதுக்காக நான் கூகுள் pay டவுன்லோடு பண்ணி பிசினஸ் அக்கௌன்ட் கிரியேட் பண்ணிட்டேன்.

சோ நம்ம இங்க செலவு பண்ற ஒவ்வொரு ரூபாயும், எர்ன் பண்ற ஒவ்வொரு ரூபாயும், கணக்குல வரும்.

நீ இப்போ எனக்கு ஒரு சேலரி அமௌன்ட் டிசைட் பண்ணி இருக்கில்ல...

அதே மாதிரி உனக்கும் ஜீவா, அண்ணாவுக்கும் ஒரு சேலரி அமௌன்ட் டிசைட் பண்ணி நீங்க மாச மாசம் அத மட்டும் தனியா எடுத்துக்கோங்க.

கம்பெனி அக்கவுண்ட்ல இருந்து என்ன எமர்ஜென்சின்னாளும் அமௌன்ட் withdraw பண்ணாத.

அத பிசினஸ் டெவலப்மென்ட்காக மட்டும் தான் யூஸ் பண்ணனும்.

அது நம்ம காசு தானே என் எடுத்தா என்னான்னு தோணும்.

ஆனா அத செய்யக்கூடாது.

இந்த ரெஸ்ட்ரிக்ஷன்ஸ் எல்லாத்தையும் நீ ஃபாலோ பண்ணி தான் ஆகணும்." என்று தீர்க்கமான குரலில் என்று அவள் சொல்ல,

சிறிதும் யோசிக்காமல் அவள் சொன்னது அனைத்திற்கும் சரி சரி என்று தலையாட்டினான் இசை.

பின் பிரியாவை ஆர்வமான கண்களுடன் பார்த்தவன்,

“நீங்க தானே மேனேஜர் மேடம்..

சோ, இந்த லேபருக்கு எவ்ளோ சேலரின்னு நாங்களே சொல்லிருங்க." என்று பவ்வியமான குரலில் சொன்னான்.

“அது உன் பர்பாமென்ஸை பாத்துட்டு தான் சொல்ல முடியும்.

இப்போதைக்கு ஒரு 10,000ன்னு வச்சுக்கோ.

மந்த் எண்டுல எவ்வளவு ப்ராபிட் வந்து இருக்குன்னு பாத்துட்டு சேலரிய பத்தி டிஸ்கஸ் பண்ணலாம்." என்று கண்டிப்பான குரலில் சொன்னாள்.

இசை‌ நன்றி சொல்வதைப் போல் தன் இரு கைகளையும் கூப்பி அவளை கும்பிட்டவன்,

“எங்க மேனேஜர் அம்மாவுக்கு ரொம்ப பெரிய மனசு தான்.

தேங்க்ஸ் மேடம்." என்றான்.

அவனைப் பார்த்து லேசாக சிரித்த பிரியா அவன் கையில் ஒரு நோட் பேடையும், பேனாவையும், கொடுத்து,

“இப்போ நீங்க இங்க ஃபாலோ பண்ற மெனு அண்ட் அதோட பிரைஸ் எல்லாத்தையும் இதுல லிஸ்ட் அவுட் பண்ணு.

அதுல நிறைய கரெக்ஷன் இருக்கு.

நம்ப புதுசா காம்போ மீல்ஸ் நிறைய இன்ட்ரொடியூஸ் பண்ணனும்.

அத பத்தி டிஸ்கஸ் பண்ணி நியூ மெனு கார்டு கிரியேட் பண்ணி பிரிண்ட் பண்ணிட்டு வந்து நாளைக்கே டேபிளில்ல வைக்கணும்.

நீ இத எழுது. அதுக்குள்ள நான் மெனு கார்டோட பேக்ரவுண்ட் டிசைன் பண்றேன்."

என்ற பிரியா லேப்டாப்பை தூக்கி தன் மடியில் வைத்து கொண்டு மெனு கார்டின் டிசைனையும் அவர்கள் பயன்படுத்தப்போகும் புது நேம் போர்டின் டிசைனையும் ரெடி செய்து கொண்டு இருந்தாள்.

அப்போது ஒரு பலமான இடி சத்தம் கேட்க,

அதை தொடர்ந்து வானில் கரு மேகங்கள் சூழ்ந்து கொண்டு சிறு சிறு மழை துளிகள் அவர்கள் விழ தொடங்கின.

அதனால் அவசர அவசரமாக அங்கு இருந்த டேபிளில் தாங்கள் பரப்பி வைத்து இருந்த அனைத்து முக்கியமான டாக்குமென்ட்களையும் பிரியாவும், இசையும், எடுத்துக் கொண்டு இருந்தனர்.

பிரியாவின் கைகளில் ஏற்கனவே இசையின் லேப்டாப் இருந்தது.

அதனால் அவள் இன்னொரு கைகளில் தன்னால் முடிந்த வரை வேகமாக டாகுமென்ட்களை எடுத்துக் கொண்டு இருக்க,

அப்போது பிரியாவின் கையில் இருந்த ஒரு பேப்பர் காற்றில் பறக்க, அதை அவர்கள் இருவருமே எட்டிப் பிடிக்க முயல,

அந்த பேப்பர் பிரியாவின் தலைக்கு மேல் பறந்து சென்றது.

பிரியாவின் அருகே சென்ற இசை குதித்து அந்த பேப்பரை பிடிக்க முயற்சி செய்ய,

அதை கவனிக்காத பிரியா அவளும் மேலே ஒரு கையை உயர்த்திய படி குதிக்க,

அவர்கள் இருவரின் கைகளும் இணைந்து அந்த பேப்பரை பிடித்து பறந்து செல்லாமல் பிடித்து விட்டது.

அவர்கள் இருவரின் உடலும் ஒன்றோடு ஒன்று ஒரு நொடி ஒட்டி உரசி பிரிந்தது.

அதனால் அதிர்ச்சி அடைந்த பிரியா, தன் கையில் இருந்த லேப்டாப்பை கீழே நழுவ விட;

அதை கவனித்த இசை லேப்டாப் கீழே விழுவதை தடுக்க பிரியாவை தன்னுடன் சேர்த்து இறுக்கி அணைத்தான்.

பாவம் அந்த லேப்டாப் அவர்களின் இடையே மாட்டிக் கொண்டு தவித்தது.

அந்த லேப்டாப்பை போல் வருணபகவானிற்கும் அவர்களுடைய நெருக்கம் பிடிக்கவில்லை போலும்,

அதனால் தன்அ மழையின் அளவை உடனே ஹை ஸ்பீடில் சற்று கூட்டிவிட,

சட்டென ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து வேகவேகமாக அங்கே இருந்த அனைத்து பொருட்களையும் எடுத்து கொண்டு பிரியாவும், இசையும், பிரியாவின் வீட்டிற்குள் நுழைந்தனர்.

தங்கள் கையில் இருந்த அனைத்து பொருட்களையும் ஹாலில் வைத்து விட்டு, இரவில் பொழியும் இதமான மழையை ரசிப்பதற்காக வாசலில் வந்து நின்று கொண்டான் இசை.

அவனைப் பார்த்தவுடன் பிரியாவிற்கும் அங்கே சென்று அவன் அருகில் நின்று மழையை ரசிக்க வேண்டும் போல் தோன்றியது.

அதனால் அவளும் அவன் அருகே சென்று நின்று கொண்டாள்.

ஒரு நொடி பிரியாவை பார்த்துவிட்டு பின் தனக்கு முன்னே தெரிந்த இரவு நேரத்தில் இதமான லேசான வெளிச்சத்தில் தெரியும் மழை பொழியும் அழகை பார்த்து ரசித்த இசை,

தன் கையை மழைச்‌ சாரலில் நீட்டி மகிழ்ந்தான்.

அப்போது அதே கையால் சற்று நேரத்திற்கு முன் அவன் பிரியாவை இறுக்கி அணைத்தது அவனுக்கு ஞாபகம் வர,

அந்த உணர்வும், மழையும், குளிர்ந்த காற்றும், அவனை சிலிர்க்க செய்தது.

அவன் தாபம் நிறைந்த கண்களுடன் பிரியாவை திரும்பி பார்க்க,

அவளைக் கண்டு கொள்ளாத பிரியா குழந்தை போல் தன் இரு கைகளையும் மழையில் நீட்டி விளையாடி கொண்டு இருந்தாள்.

அதனால் நம் கலியுக கண்ணன் இசையோ, மங்கை அவளின் அருகாமையால் உள்ளம் மகிழ்ந்து பெய்து கொண்டு இருக்கும் மழையை ரசித்து கொண்டு இருந்தான்.

அப்போது பிரியா தன் கையில் சிறிது மழை நீரை பிடித்து இசையின் முகத்தில் தெளிக்க,

இசையும் அவள் செய்ததை போலவே செய்தான்.

இப்படியே இவர்கள் மாறி மாறி ஒருவரின் மீது ஒருவர் தண்ணீரை ஊற்றி விளையாடியதில் பாதி நினைத்து விட்டனர்.

பின் இவ்வளவு நினைந்த பின் இனி முக்காடு எதற்கு என்று யோசித்த அவர்கள் இருவரும்,

தங்கள் கைகளை கோர்த்துக்‌ கொண்டு மழையில் ஒன்றாக இறங்கி விளையாட தொடங்கினர்.

அப்போது இசை தண்ணீரில் வழுக்கி கீழே விழுந்து விட,

தன் ஆழ் மன வேதனைகள் அனைத்தையும் மறந்துவிட்டு அவனை பார்த்து குழந்தை போல் வாய்விட்டு சிரித்தாள் பிரியா.

தரையில் விழுந்து கிடந்த இசை, அப்படியே தன் ஒரு கையை முட்டுக்‌கொடுத்து படுத்துக் கொண்டவன், அவள் அழகை பார்த்து ரசிக்க தொடங்கினான்.

மழை நேரத்தில் சட்டென்று வந்து பிரகாசிக்கும் வானவிலாக ஜொலித்தாள் இசையின் பிரியா.

மேகமோ அவள்..

மாய பூ திரள்.. தேன் அலை

சுழல் தேவதை நிழல்....

அள்ளி சிந்தும்

அழகின் துளிகள் உயிரில்..

பட்டு உருளும் வசமில்லா

மொழியில் இதயம் எதையோ

உலரும் ...

இல்லை அவளும்

என்றே உணரும் நொடியில்

இதயம் இருளும் அவள் பாத

சுவடில் கண்ணீர் மலர்கள்

உதிரும்...!! என்ற பாடல் அவன் மனதில் அவளை பார்க்கும் போது ஓடியது.

தொடரும்..‌
 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-10
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.