Chapter 10

Bhavani Varun

Member
Jan 23, 2025
45
0
6
“இது அப்புவோட டார்ச் லைட் தான… இது ஏன் இங்க இருக்கு??” என்று அபிலாஷ் கை கால் முகத்தை துடைத்துக் கொண்டே வந்து கேட்க, “புது டார்ச் இல்லடா அதனால வீட்டில் இருந்தத புதுசா வந்த பொண்ணுக்கு குடுத்தேன் அதான்” என்று ஸ்ரீனிவாசன் கூறினார்.

“அப்பா யாருக்கு எதை குடுக்கணும்…” என்று அபிலாஷ் பேசுவதற்குள் சரவணன் குறுக்கிட்டு, “வேலைய முடிச்சிட்டீங்களா… வந்து உட்காருங்க” என்று சரவணன் கூறவும் அவனை முறைத்துக் கொண்டே வந்து அமர்ந்தான் அபிலாஷ்.

“என்னடா என்ன ஆச்சு??” என்று வள்ளி கேட்க, “அது ஒன்னும் இல்லம்மா வேலை எல்லாம் செஞ்சுட்டு வந்து இருக்கான்ல அதான் கலைப்புல ஏதாவது பேசிட்டு இருப்பான் அவனை விடுங்க” என்று சரவணன் கூறினான். விக்ரமும் இவர்களுடன் சேர, அனைவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டே மாலை பொழுதை கழித்தனர்.

“இவரை எப்பயோ பார்த்த மாதிரி ஞாபகம் இருக்கு…. அதுவும் இல்லாம அவரை பார்த்தா எனக்கு ஏன் ஒரு மாதிரி இருக்குன்னு தெரியலையே” என்று சனந்தா மொட்டை மாடியில் நின்று விக்ரமும் சனந்தாவும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டிருந்த நிகழ்வை நினைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாள்.

“நியாயமா பார்த்தா எனக்கு தான் அவர் மேல கோபம் வரணும்… பார்த்தப்ப கூட என்னை வரவேற்கவே இல்ல…. அடுத்து என்னடான்னா ஏதோ ஒரு ரூம்ல தங்கிக்கட்டும் என்ன இப்போன்னு பேசுறாரு…. ஆனா, எனக்கு ஏன்னு தெரில அவர் மேல கோபம் வரமாட்டேங்குது…. நானும் அவர பார்த்துட்டே இருக்குறேன் என்ன நடக்குதோ ஒன்னும் புரியல… நான் இங்க வேற விஷயமா வந்தா இங்க என்னடான்னா அந்த பொண்ண பார்த்த உடனே வேற தலை எல்லாம் சுத்துது என்னென்னமோ யோசனை வருது…. இவரை பார்த்தாலே வேற மாதிரி இருக்கு…. இந்த ஆறு மாசத்தை எப்படி கடக்க போறேன்னு தெரியல” என்று மனதிற்குள் பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தாள் சனந்தா.

“சரிங்க மா நான் கிளம்புறேன் இப்பவே இருட்டுருச்சு” என்று அபிலாஷ் கூற, “எங்க போற?? சாப்பிட்டுட்டு போ… மதியம் கூட ஒண்ணுமே சாப்பிடல அந்த பொண்ணு மயக்கம் போட்டு விழுந்துதுன்னு எல்லாரும் போயிட்டீங்க ஒன்னுமே சாப்பிடாம…. அதனால இருந்து சாப்பிட்டு தான் போகனும்… சாப்பாடு எல்லாம் எடுத்து வெக்கிறேன்” என்று கூறி வள்ளி உள்ளே செல்லவும் வள்ளிக்கு உதவி செய்ய ஸ்ரீனிவாசனும் உள்ளே சென்றார்.

சரவணனுக்கு இவர்களிடம் பேச விருப்பம் இல்லாததால் சனந்தாவை அழைப்பதற்காக மாடிக்கு செல்லவும், “என்னடா பேச மாட்டியா?? அப்படியே போற??” என்று விக்ரம் கேட்க, “அவனாவது பேசாம இருக்குறதாவது… இப்ப வந்த பொண்ணுக்கு அவ்வளவு கரிசனம் காட்டுறான்னா உன்னையும் என்னையும் எல்லாம் எப்படி விட்டுடுவான் மச்சான்… அவனே பேசுவான் கோபம் தணிஞ்சதும்” என்று அபிலாஷ் கூறினான்.

“நீங்க சொன்னாலும் சொல்லலனாலும் அது தான் உண்மை… எனக்கு கோபம் குறைஞ்சதுன்னா நானே நார்மலா பேசிட போறேன்… சரியா” என்று கூறி மொட்டை மாடிக்கு சென்றான் சரவணன்.

“என்ன, இங்கேயே நின்னுட்ட கீழ வரவே இல்லையே?” என்று சரவணன் சனந்தாவை பார்த்து கேட்க, “ம்ம்… தெரியல ரொம்ப நல்லா இருக்கு… இங்க இருந்து பார்க்க ஊரும் அழகா இருக்கு… சுத்தி இருக்குற மலை, இயற்கை ரொம்ப அழகா இருந்துது… இருட்டின அப்புறம் கூட ஒரு மாதிரி நிம்மதியா இருக்கு, அதனால தான் இங்கே கொஞ்ச நேரம் இருந்துட்டேன்” என்று சனந்தா கூறினாள்.

“வீட்டுக்கு ஃபோன் பேசணும்னு சொன்னியே பேசிட்டியா??” என்று சரவணன் கேட்க, “ம்ம்… அம்மா அப்பா கிட்ட பேசிட்டேன் என்று சனந்தா கூறவும், “அவங்கள மிஸ் பண்றியா?” என்று சரவணன் கேட்டான்.

சனந்தாவுக்கு அவளையும் மீறி அவள் கண்களில் நீர் நிறைந்து, ம்ம்ம்… ஆமா!!! என்று தலையை அசைத்தாள். “புரியுது…. கொஞ்ச நாள் தானே அதுக்கப்புறம் எப்படியும் போயிருவ… அதுவும் இல்லாம நடுவில எல்லாம் டைம் கிடைக்கும் போது நானே கூட உன்னை கூட்டிட்டு போறேன் உங்க வீட்டுக்கு இங்க தானே கோயம்புத்தூர் இருக்கு” என்று சரவணன் ஆறுதல் கூறினான். ரொம்ப தேங்க்ஸ்!!! என்று சனந்தா மனதார கூறினாள்.

“ம்ம்…. சரி கீழே எல்லாரும் சாப்பிட உட்கார்ந்து இருக்காங்க… அதுக்கு தான் கூப்பிட வந்தேன்… வா போலாம்” என்று சரவணன் அழைக்க, சனந்தா அவனுடன் கீழே சென்றாள்.

ஸ்ரீனிவாசன் அபிலாஷ் விக்ரம் மூவரும் அமர்ந்திருக்க வள்ளி அவர்களுக்கு பரிமாறிக் கொண்டிருக்கவும் சரவணன் மற்றும் சனந்தா உள்ளே வந்தனர். “வாமா வா உட்காரு சாப்பிடுவ வா” என்று வள்ளி அழைக்க, சனந்தா ஒரு அடி எடுத்து வைக்கவும் விக்ரம் எழ முயன்றான். அதை கவனித்த சனந்தா, “இல்லமா… சாரி…. ஆன்ட்டி… இல்ல எனக்கு பால் மட்டும் போதும் நான் லேட்டா தானே சாப்பிட்டேன்” என்று சனந்தா கூறி, “நான் வெளில உக்காந்துட்டு இருக்கேன் அப்புறமா வந்து நான் பால் வாங்கிக்கிறேன்” என்று கூறி சனந்தா வெளியே சென்று அமர்ந்து கொண்டாள்.

அதை உணர்ந்த விக்ரம், அவனுக்கு சங்கடமாகி போனது. சரவணன், விக்ரமை முறைத்துக் கொண்டே அவனுக்கு அருகில் அமர்ந்து கொண்டு விரைவாக உணவருந்தி விட்டு சனந்தாவுடன் சென்று அமர்ந்து கொண்டான்.

“கொஞ்சமாவது சாப்பிடலாம்ல நைட்ல பசிக்கும்ல” என்று சரவணன் கூற, “இல்ல பரவால்ல சார்… இதெல்லாம் பழகிருச்சு எங்களுக்கு… எங்க சீனியர்ஸ் கூட எல்லாம் சேர்ந்து போகும் போது, ஃபுட் ஆஃபீஸ் போகும் போது எப்போ சாப்பிட்டு வருவோம்னு தெரியாது…. அதனால பழகிருச்சு சார்” என்று சனந்தா கூறவும், ம்ம்… என்று சரவணன் தலையை அசைத்தான்.

“ஆங்… சார் நான்” என்று சனந்தா ஆரம்பிக்கவும், “ஒன்னு என்னை பேர் வெச்சு கூப்பிடு… இல்லைன்னா அண்ணான்னு கூப்பிடு” என்று சரவணன் கூறவும், சனந்தா மெல்லிய புன்னகையுடன், “நான் உங்கள பேர் வெச்சே கூப்பிடுறேன்… நான் பெருசா யார் கிட்டயும் அவ்வளவு சீக்கிரம் பழகமாட்டேன்… அதுவும் நான் உங்கள அண்ணான்னு கூப்பிடுறனா அப்படித் தான் நான் உங்களை நடத்தணும், சும்மா கூப்பிட கூடாது… அதுக்கு கொஞ்ச நாள் ஆகும்… அதனால நான் உங்கள பேர் வெச்சே கூப்பிடுறேன்” என்று சனந்தா கூறவும், “சரி ஓகே!!! உன் இஷ்டம்… இப்ப என்னமோ கேட்க வந்தியே கேளு” என்று சரவணன் கூறினான்.

“அது ஒன்னும் இல்ல எனக்கு ஒரு சில திங்ஸ் வாங்கணும்… நான் நினைச்சேன் எப்படியும் ஒரு சார்ஜர் பாயின்ட் இருக்கும் இன்டெக்ஷன் இருந்தா போதும் சமைக்க யூஸ் பண்ணிக்கலாம்னு… அதுக்கு ஏத்த மாதிரி சும்மா சின்ன சின்ன பாத்திரம் மட்டும் தான் கொண்டு வந்தேன்… இன்டெக்ஷன் கொண்டு வந்தேன்… ஆனா, இங்க அப்படி இல்ல… சோ, எனக்கு சமைக்கிறதுக்கு திங்ஸ் எல்லாம் வேணும்… நான் அடிக்கடி வந்துட்டு ஆன்ட்டிய டிஸ்டர்ப் பண்ண முடியாது இல்லையா… அதான்” என்று சனந்தா கூறினாள்.

“நான் நாளைக்கு உன்னை கீழ ஊட்டிக்கு கூட்டிட்டு போறேன் அங்க என்ன வேணுமோ வாங்கிக்கோ… எப்படியும் உனக்கு இன்னும் ரெண்டு நாள் இருக்கு டீச்சிங் ஸ்டார்ட் பண்ண… அதுக்குள்ள உனக்கு என்ன வேணுமோ எல்லா வாங்கிகிட்டு செட்டில் பண்ணிக்கலாம்” என்று சரவணன் கூறவும், ரொம்ப தேங்க்ஸ் சரவணன்!!! என்று புன்னகைத்தாள் சனந்தா.

சனந்தா மற்றும் சரவணன் இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்க, சரவணன் பேசுவதை கேட்டு சனந்தா சிரித்துக் கொண்டிருந்தாள்.

“நீங்க ரொம்ப ஃபன்னி பர்சனா இருக்கீங்க… உங்க கிட்ட பேசிட்டு இருந்தா டைம் போறதே தெரியல சிரிக்க வெச்சுட்டே இருக்கீங்க சரவணன்” என்று கூறவும், “நான் எல்லாம் காமெடியனா ஆக வேண்டியது மா… என் நேரம் இங்க வந்து தவிச்சிட்டு இருக்கேன் இவங்க கூட சேர்ந்து” என்று சரவணன் கூறவும், “சொல்லுவ டா சொல்லுவ… ஏன் சொல்ல மாட்ட” என்று விக்ரம் மற்றும் அபிலாஷ் கூறிக் கொண்டே வந்து அவர்களுக்கு எதிரில் அமர்ந்து கொண்டனர்.

“மச்சான் மச்சான் உங்க ஊரு எனக்கு ரொம்ப புடிச்சிருச்சு டா… நான் இங்க தான் டா வருவேன்…. இங்க என் உயிரே போனாலும் பரவாயில்லை இங்க தான் டா இருப்பேன்…. எனக்கு அம்மா அப்பாவை புடிச்சிருச்சு டான்னு… இவ்வளவு பேசிட்டு இங்க வந்துட்டு, இப்ப சார் ரொம்ப சலிச்சிட்டு பேசுறீங்களே” என்று விக்ரம் சரவணனை பார்த்து கேட்க, “அது அப்போ… இது இப்போ” என்று கூறி சரவணன் முகத்தை திருப்பிக் கொண்டான்.

விக்ரம் வந்த அமர்ந்ததும் சனந்தா சற்று சங்கடமாக இருப்பதை கவனித்த சரவணன், “ம்ம்… உன்னோட லக்கேஜ் எடுத்து வெச்சிடலாம் வா” என்று சரவணன் சனந்தாவை அழைத்துக் கொண்டு சென்று அவளுக்கு அனைத்து உதவியும் செய்து வந்தான்.

“என்ன மச்சான் இவன் அந்த பொண்ணு வந்ததும் அந்த பொண்ணு கிட்ட அவ்ளோ அக்கறையா நடந்துக்குறான் எனக்கு ஒண்ணுமே புரியலையே” என்று அபிலாஷ் கூற, “அவன் அப்படி தான் டா தெரியும் இல்ல… அவன கண்டுக்காத விடு” என்று விக்ரம் கூறினான்.

“சரி மச்சான் நான் உன் டூ வீலர் கொண்டு போறேன் நாளைக்கு ஆஃபீஸ் கிட்ட வந்து எடுத்துக்க சரியா” என்று கூறி அபிலாஷ் புறப்பட்டான்.

“ரொம்ப தேங்க்ஸ் சரவணன் எனக்கு ஹெல்ப் பண்ணதுக்கு” என்று சனந்தா கூற, “பரவால்ல சனா… ஏதாவது ஹெல்ப் வேணும்னா கேளு” என்று சரவணன் கூற, “ஆமா உங்க வீடு எங்க?? ரொம்ப லேட் ஆயிருச்சுல உங்களுக்கு” என்று சனந்தா கேட்க, “இதோ இங்க பக்கத்துல இருக்குல அது தான் என் வீடு” என்று சரவணன் பக்கத்தில் இருக்கும் வீட்டை காட்டினான்.

“ஓ அப்படியா!!… நீங்க கீழே ஆஃபீஸ் கிட்ட இருப்பீங்க போல அப்படின்னு நினைச்சேன்… இங்க வீடு இருக்கா உங்களுக்கு?” என்று சனந்தா கேட்க, “ஆமா இதுவும் விக்ரமா அவங்க இடம் தான்… நான், இங்க எனக்கு புடிச்சிருக்கு இங்கேயே தங்கிக்கிறேன்னு சொன்னதும் அப்பா தான் இங்க கட்டிக்கோ அப்படின்னு சொன்னாரு…. அதனால ரொம்ப இல்லாம சின்ன வீடா கட்டிக்கிட்டேன்… எப்ப ஆச்சும் அம்மா அப்பா வருவாங்க அதுக்கும் யூஸ் ஆகும்” என்று சரவணன் கூறினான்.

“ஐயோ!!! அங்கிள் ரொம்ப ஸ்வீடா இருக்காரு…. நான் என்ன வொர்க் பண்றேன்னு ரொம்ப பொறுமையா உக்காந்து எல்லாமே கேட்டாரு” என்று சனந்தா கூறவும், “அவருக்கு சேவை பண்றது, யாருக்காவது உதவுறது இதெல்லாம் ரொம்ப பிடிக்கும்…. அதுவும் இல்லாம இந்த ஊருடைய நிறைய வளர்ச்சிக்கான காரணமே அவர் தான்” என்று சரவணன் கூறினான்.

“ஆங்… அப்புறம் உன்னோட ரூம்ல இருந்து வெளியில வீட்டுக்கு இந்த பக்கம் வந்தேனா வீட்டோட என்ட்ரன்ஸ் வந்துரும் அந்த பக்கம் கூட ஒரு வழி இருக்கு சோ வீட்டை சுத்தியும் நீ எப்படி வேணாலும் வெளியில வரலாம்” என்று சரவணன் கூற, “ஹப்பாடா அது ரொம்ப நல்லதா போச்சு… இல்லனா ஒவ்வொரு வாட்டியும் ரூமிலிருந்து வெளியில் வரணும்னா வீட்டு வழியா தான் வர வேண்டி இருக்கும்… நல்ல வேல ரெண்டு பக்கமும் பாதை இருக்கு” என்று சனந்தா கூறினாள்.

இருவரும் பேசிக் கொண்டே வீட்டின் வாசலுக்கு வரவும், அங்கே விக்ரம் அமர்ந்திருந்தான் இருவரையும் கவனித்துக் கொண்டு. “சனா ஏதாவது வேணும்னா இங்க தான் இருப்பேன்.. நைட்ல எப்படி டிஸ்டர்ப் பண்றதுன்னு எல்லாம் யோசிக்காத என்னை எழுப்பு நான் வரேன்” என்று சரவணன் கூறவும், “ரொம்ப தேங்க்ஸ் நீங்க சொன்னதுக்கே… நான் பார்த்துக்குறேன்… குட் நைட் சரவணன்” என்று சனந்தா கூறினாள்.

“ஒரு நிமிஷம் சரவணன்… இந்தாங்க என் ஃபோன், உங்க நம்பர் குடுங்க…. நாளைக்கு எப்போ போலாம் என்னன்னு கேட்கலாம்ல…. நீங்க ஏதாவது வேலையா போயிட்டீங்கன்னா நான் டிஸ்டர்ப் பண்ற மாதிரி இருக்க கூடாதுல சோ உங்களால எப்ப முடியுமோ அப்ப சொல்லுங்க நான் அதுக்கு ஏத்த மாதிரி நான் ரெடி ஆயிட்டு வரேன்” என்று அவளுடைய கைபேசி நீட்ட, சரவணன் அவனுடைய ஃபோன் நம்பரை அதில் டயல் செய்து அவனுடைய ஃபோனுக்கு கால் செய்து, “காலையிலேயே போலாம்…. உன் நம்பர் இப்ப என்கிட்ட இருக்கு ஏதாவதுன்னா உனக்கு அப்டேட் பண்றேன்…. குட் நைட் சனா” என்று கூரி சரவணன் சென்றான்.

சனந்தா திரும்பி அவளுடைய அறைக்கு செல்ல, எதையோ உணர்ந்தவளாக சட்டென்று விக்ரமை பார்க்க அவனோ அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். சனந்தா அவளை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மெதுவாக நடந்து செல்ல, “ஒரு நிமிஷம்!!” என்று விக்ரம் கூற, சனந்தா திரும்பி அவனை பார்த்து அமைதியாக நின்றாள்.

“அம்மா ரொம்ப டயர்டா இருக்குன்னு சொல்லி தூங்கிட்டாங்க…அதான் பால் குடுக்க சொன்னாங்க… சரவணன் கூட ரூம்ல எல்லாம் செட் பண்ணிட்டு இருந்ததுனால வந்து டிஸ்டர்ப் பண்ணல” என்று விக்ரம் கூறி பால் டம்ளரை நீட்டவும், தேங்க்யூ சார்!! என்று கூறி வாங்கி சென்றாள் சனந்தா.

“என் மனசு இவ்ளோ பாரமாவும் இருக்கு அவள பார்க்கும் போது… எனக்கு ரொம்ப சந்தோஷமாவும் இருக்கு, எக்ஸைட்டடாவும் இருக்கு அதே சமயம் கோபமும் வருது…. இதை நான் எப்படி கடந்து வர போறேன்னு எனக்கு தெரியலையே… அப்பு!!!! இப்ப நீ என் கூட இருந்தா எனக்கு எவ்ளோ நிம்மதியா இருந்திருக்கும்….. இப்ப என் கூட நீயும் இருந்து இருப்ப… இவ மேல கோபமும் இருந்திருக்காது” என்று அவனுக்குள் புலம்பிக் கொண்டிருந்தான் விக்ரம்.

இப்படி அவனுக்குள் இருக்கும் உணர்வுகளுடன் பெரிய போராட்டத்தை நடத்தி உறங்க சென்றான்.

கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல
 

Author: Bhavani Varun
Article Title: Chapter 10
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.