முதல் பகுதி
ரம்யமான இரவு வேலை நிலா மகள் ஊர்வலத்தில் விண்மீன்கள்
தோரணமாய் காந்தள் மலர்களும் முல்லை கொடிகளும் அலங்காரமாய்
..... மலர்களின் வாசனையை பூசி கொண்டு நடமாடும் தென்றலும் இரவை மேலும் அழகாக்கிட

வான்தேவதையோ என்று நினைக்க தோன்றும் விதத்தில் இயற்க்கையை ரசித்து கொண்டிருந்தாள் நம் கதையின் நாயகி நங்கை...

திடீரென சப்தம் கேட்டு மலர் கொடிகளுக்கு இடையே தன்னை மறைத்து கொண்டால்.... சில கொடிகளை விளக்கி சப்தம் வந்த திசையை நோக்கினால் அங்கே ஆறடி உயரத்தில் அழகான உடல் கட்டுடன் கம்பீரமாக நின்றிந்தான் ஓர் ஆண்மகன்...

அவளுக்கோ உள்ளுக்குள்ளே ஒரு வித பதற்றமும் பயமும்... நடு இரவில் இப்படி வந்து மாடிகிட்டோமே
எப்படியாவது நம்மல பாக்கறது குள்ள இங்கே இருந்து போய் விடவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லி கொண்டால்.... இது எல்லா பெண்களுக்கும் சராசரி பயம் இல்லையா....

அங்கிருந்து அவள் நகர முற்பட இலை அசைவினால் பின் திரும்பி பார்த்தவன்.. ஏதோ காட்டு விலங்கு என அதை அடிக்க நினைத்து மரக்கிளை ஒன்றை உடைத்து... புதர்போல் மண்டி இருக்கும் அந்த மலர் கொடியை மெல்ல விளக்கினான்... ஓங்கி அடிக்க கையை உயர்த்தி படி



கொடியை விளக்கி பார்த்தவன் கண்கள் விரிய ஆச்சரியத்தோடு வியந்தான். அழகோவியம் அவள்

மனதிற்குள் "யார் இவள்" இந்த நேரத்தில் இங்கு என்ன செய்கிறாள்".... ஒரு வேளை இவள் கதைகளில் கேட்ட ஆண்களை மயக்கி கொன்று விடும் மோகினியின்😈 இனத்தை சேர்ந்தவலா... இல்லை வரம் தரும் தேவதையா 🧚🏼‍♀️ சற்று குழப்பத்தோடு அவளை ஆழப்பார்தவன்...

தன்னை சுதாரித்து கொண்டு யார் நீ இங்கே இந்த நேரத்தில் என்ன பண்ற என்று கேட்டான்...

அவள் இப்போது வரை மூடி கொண்ட கண்களை திறக்கவே இல்லை..

உன்னை தான் கேக்கறே...பொண்ணே என்றான் சற்று சத்தமாக... அவன் சத்தத்தில் அதிர்ந்தவள் அங்கிருந்து எப்படி ஆவது ஓடி விட வேண்டும் என்பதிலே குறியானல்...

வாய் திறந்து பேசவில்லை அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை... நங்கை

அவனை புறக்கணித்து ஓட முயல அவள் கைகளை இறுக பற்றி கேட்டுக் கிட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு போற..அதற்கும் அவளிடம் பதில் வராமல் போகவே கோபத்தில் முகம் இறுக அவள் கைகளுக்கு மேலும் அழுத்தம் கொடுத்தான்... ஆண் மகன் அவனின் பிடித்தாலாமல் ஆ..... என்ற வாரே அவன் புறம் திரும்பினாள்....


அவன் முகத்தை அப்பொழுதுத்தான் நிமிர்ந்து பார்த்தாள்...
அவள் பார்க்கும் முதல் ஆணின் முகம்
பெண் அவள் சற்று மயங்கி தான் போனால்

இத்தனை வசீகர முகம்..... எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும்... கட்டு கட்டாக தேக அமைப்பு.... அடர்ந்த பிருவங்கள் மாநிறம் என்றாலும் பஞ்சம் இல்லா அழகு என்று ஒரு ஆண் மகனுக்கு தேவையான அத்தனை அடையாளங்களும் பொருந்தி இருக்க....பாவம் பெண் அவள்....

அவனின் உள்ளம் படபடத்தது.....கூறிய அகன்ட இருவிழிகள்... துறவிக்கும் காதல் பிறக்கும்👁️

நீண்ட மிருதுவான செவ்வண்ண கூந்தல்.... ரோஜா குவியலோ என்று என்ன தோன்றும் கன்னங்கள்.... என அவள் தோற்றம் எந்த ஆண் மகனையும் சற்று அசைத்து தான் பார்க்கும்...

இருவரும் ஒருவருக்கு ஒருவர் தன்னுள்ளே வர்ணித்து கொள்ள....
அவனை அறியாமல் அவள் கைகளுக்கு மேலும் அழுத்தம் கொடுத்தான்...


நங்கையின் கண்களில் இருந்து ஒற்றை துளி ... கண்ணீரில்...... சுய நிலைக்கு வந்தவன்.

Sorry sorry nga நீங்க பதில் சொல்லாம போகும் பொழுது கொஞ்சம் கோபம் வந்துடுச்சு... அதான்... sorrynga என்ற படி கைகளின் பிடியை தளர்த்தி....I am மாறன் என்றான்....


ஆம் இவன் தான் நம் கதையின் நாயகன் தமிழ் மாறன்....😊
முன் கோபி ஆனால் பெண்களை மதிப்பவன் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவன்..... அசோக் construction ownern ஒற்றை மகன்....
மாடலிங், சினிமா துறையில் இயக்குனராக இருக்கின்றான்
......

12 வருடத்திற்கு பின் இந்தியா வந்துள்ளான்....

தொடரும் .....

அன்புடன் shahiabi.writter ✍🏻
 

Author: shahiabi தனிமையின் காதலி
Article Title: Chapter -1
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.