Chapter-1

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
164
0
16
www.amazon.com
அத்தியாயம் 1: He is a Bad man




சென்னையில் உள்ள வேளச்சேரி பைபாஸ் ரோட்டில் ஒரு பெரிய கண்டெய்னர் வேன் அசுர வேகத்தில் சென்று கொண்டிருந்தது. நம்பர் பிளேட் இல்லாத உயர்தர ஸ்போர்ட்ஸ் பைக்கில் ஹெல்மெட் அணிந்து தீப்பொறிகள் பறக்க 4, 5 பேர் வேகமாக அதை பின் தொடர்ந்து ‌சென்று கொண்டிருந்தார்கள். அப்போது நேரம் சரியாக இரவு 11:15. தங்கள் தலை முதல் கால் வரை மறைத்து இருக்கும் படியான ஒரு பிளாக் கலர் சூட் அணிந்து இருந்த அவர்கள் அனைவரும் தங்களிடம் இருந்த பெரிய பெரிய பைகளை ‌ தூக்கி அந்த பெரிய சைஸ் வேனிற்குள் எறிந்தார்கள். அவர்களைப் போலவே ஆடை அணிந்திருந்த இருவர் அதை வாங்கி பத்திரப்படுத்தினார்கள். ப்ளூடூத் வழியாக மற்றவர்களிடம் “சீக்கிரம் வாங்க. 200 மீட்டர்ஸ் டிஸ்டன்ஸ்ல உங்கள போலீஸ் டீம் ஃபாலோ பண்ணிட்டு வந்துட்டு இருக்காங்க. சிக்குனா நம்ம எல்லாரும் சட்னி தான்.. இதுவரைக்கும் நம்ம பண்ண எல்லாத்துக்கும் சேர்த்து மொத்தமா செஞ்சு விட்டுருவாங்க.” என்று சொல்லி எச்சரிக்கை செய்தான் Charles.


முன்னே இருந்த இருவரும் தங்களது பைகளை உள்ளே தூக்கி போட்டுவிட்டு அப்படியே ஆக்ஸிலரேட்டரை ‌ முறுக்கி அவர்களது பைக்கின் வேகத்தை கூட்டி அதைக் காற்றில் பறக்கச் செய்து தாங்களும் அதனுடன் சேர்ந்து பறந்து அப்படியே லாபகமாக அந்த வேனிற்குள் குதித்தார்கள்.‌ அப்போது போலீஸ் அவர்களை நெருங்கிவிட, இறுதியாக அவர்களை பின் தொடர்ந்து பைக்கில் சென்றவன் போலீஸ்காரர்களை திரும்பி பார்த்துவிட்டு “அஜய், துருவ், சோனியா.. மோனி.. சீக்கிரம் போங்க. போலீஸ் பக்கத்துல வந்துட்டாங்க.” என்று மற்றவர்களை எச்சரிக்கை செய்தான். அதனால் அவர்கள் நால்வரும் உடனே தங்களது பைக்கின் வேகத்தை கூட்டி மற்ற இருவரும் செய்ததைப் போலவே தாங்களும் தங்களிடம் இருந்த பெரிய கருப்பு கலர் பைகளை தூக்கி அந்த வண்டிக்குள் எரிந்துவிட்டு தாங்களும் பறந்து சென்று உள்ளே குதித்தார்கள்.


இதற்கெல்லாம் அவர்கள் அனைவரும் பயிற்சி எடுத்திருந்ததால் உள்ளே உதிக்கும் போது அவர்களுக்கு எதுவும் ஆகவில்லை.‌ இப்படியே அவர்கள் அனைவரும் அதற்குள் தங்களது பைகளுடன் குதித்து விட, கடைசியாக ஒருவன் மட்டும் போலீசர்களுக்கு தண்ணீர் காட்டியடி தனது ‌ ஸ்போர்ட்ஸ் பைக்கை ‌ வளைத்து வளைத்து சென்று கொண்டிருந்தான். அவர்களை துரத்திக் கொண்டு தனது ஆட்களுடன் சைரன் ஒலித்துக் கொண்டிருந்த ஜிப்பில் சென்ற இன்ஸ்பெக்டர் ராகவன் “இந்த bad boys திருடனுங்க கும்பல இன்னைக்கு புடிச்சே ஆகணும். ஒருவேளை இவனுங்கள புடிக்க முடியலைன்னா, அட்லீஸ்ட் இவனுங்க எல்லாரையும் சுட்டுக் கொன்னாவது இவங்க யாருன்னு மக்கள் முன்னாடி காட்டணும். பல வருஷமா இவனுங்க நம்ம டிபார்ட்மெண்டுக்கு தண்ணி காட்டிட்டு இருக்கானுங்க. இன்னைக்கு எப்படியாவது இவங்கள புடிச்சுடனும். இல்லனா நம்ம போலீசா இருக்கிறதே அவமானம்.” என்று தனது ஆட்களிடம் சொல்லிவிட்டு அவன் கையில் இருந்த துப்பாக்கியை வைத்து தன் முன்னே சென்று கொண்டிருந்தவனை சுட முயற்சிதான்.


தனது பைக்கின் சைடு மிரர் வழியாக அவனது துப்பாக்கியை நோட்டமிட்ட நமது bad boy ராகவனின் ஒவ்வொரு துப்பாக்கி குண்டில் இருந்தும் லாபகமாக தப்பித்தான். அதனால் எரிச்சல் அடைந்த ராகவன் “Shit.. Shit.. Shit.. இப்பலாம் ‌ போலீஸ்காரனுங்களை விட பொறுக்கி பசங்களும், திருட்டுப் பயலுகளும் தான் நல்லா டிரைனிங் எடுத்துட்டு வர்றானுங்க.‌ எத்தனை தடவை தான் இவனை சுடுறது? சனியன் புடிச்சவன் சாகவே மாட்டிங்கிறான்..!!” என்று வெளிப்படையாகவே புலம்பிவிட்டு தன் அருகில் அமர்ந்திருந்த கான்ஸ்டபிலிடம் இருந்த துப்பாக்கியை பிடுங்கி மீண்டும் பைக்கில் தனியாக சென்று கொண்டிருந்த நம் Bad Boyஐ குறிவைத்தான்.



அதனால் தங்களது தலைவனுக்கு ஏதேனும் தவறாக நடந்து விடுமோ என்று நினைத்து பயந்த அவனது குழுவினர்கள் “Come on.. BB.. அந்த இன்ஸ்பெக்டர் ராகவன் உங்களுக்கு ரொம்ப பக்கத்துல வந்துட்டான். அந்த பணம் போனா போகட்டும். ஆல்ரெடி நம்ம கிட்ட நிறைய இருக்கு அதுவே போதும்.‌ அதையெல்லாம் கரெக்டா உள்ள தூக்கி போடணும்னு ட்ரை பண்ணி டைம் வேஸ்ட் பண்ணாம நீங்க சீக்கிரம் உள்ள வாங்க...!!” என்று அவனை அவசரப்படுத்தினார்கள்.


அதனால் ராகவனை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு “எனக்கு எமனோட விளையாடுறதுனா ரொம்ப பிடிக்கும். இன்னைக்கு அந்த எமன் இவன் ரூபத்துல வந்திருக்கான். இப்படி அவன் எவன் ரூபத்துல வந்தாலும், இந்த BBஐ அவனால தூக்க முடியுதான்னு பார்க்கலாம். இப்பதான் கேம் ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு. ஐ லைக் இட்.” என்று சொல்லிவிட்டு லேசாக சிரித்த BB என்கின்ற BAD BOYS குழுவின் தலைவனான Big Boss ஏற்கனவே ‌அவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு வங்கியில் கொள்ளையடித்து கொண்டு வந்து தனது பைக்கில் ஒரு பையில் போட்டு கட்டி வைத்திருந்த பணப்பையை எடுக்க முயற்சி செய்தான். அவனது பெரிய பையின் ஒரு முனை பைக்கின் சக்கரத்தில் மாட்டிக் கொண்டிருந்ததால் அவன் இழுக்கும்போது அது வரவில்லை.


ஆனால் அப்போதும் அதை அவன் விடுவதாக தெரியவில்லை. தொடர்ந்து அதை எடுக்க அவன் ஒரு பக்கம் தன் உயிரைக் கொடுத்து பைக்கை ஓட்டியபடி முயற்சி செய்து கொண்டு இருக்க, இன்ஸ்பெக்டர் ராகவன் “இன்னைக்கு உன்ன நான் கொல்லாம விட மாட்டேன் டா! இப்படி ஒரு சுச்சுவேஷன்ல உன்ன விட்டுட்டு அவங்க எல்லாரும் போகாம இருக்காங்கண்ணா, கண்டிப்பா நீ இந்த டீம்ல ஒரு முக்கியமான ஆளா தான் இருக்கணும். ஒருவேளை டீம் லீடரா கூட இருக்கலாம். என்ன ஆனாலும் உன்னை விட மாட்டேன்.” என்று நினைத்து தனது ஜிப்பில் வேகமாக சென்று அவனிடம் இருந்த அனைத்து துப்பாக்கிகளில் உள்ள குண்டுகள் ஒவ்வொன்றாக தீர்ந்து கொண்டு இருந்த போதும், தொடர்ந்து அவனை குறி வைத்தான்.



அவர்களது தலைவனான பிக் பாஸை பற்றி அவர்களுக்கு நன்றாக தெரியும் என்பதால் அந்தப் பணப்பை அவன் கையில் கிடைக்கும் வரை அவன் தப்பிக்க மாட்டான் என்று நினைத்து அவனது டீமில் உள்ள அனைவரும் பயந்து கொண்டு இருந்தார்கள். கலங்கிய கண்களுடன் சோனியா “ப்ளீஸ் பிக்பாஸ் இந்த மாதிரி எமர்ஜென்சி சிச்சுவேஷன்ல கூட நீங்க இவ்ளோ பிடிவாதமா இருக்காதீங்க. எங்களுக்கு நீங்க ரொம்ப முக்கியம். எனக்கு பயமா இருக்கு. நம்ம கிட்ட இல்லாத பணமா? இதுல விட்டா கூட இன்னொன்னுல எடுத்துக்கலாம். அது போனா போகட்டும் விட்ருங்க. உங்கள கெஞ்சி கேட்கிறேன் தயவு செஞ்சு உள்ள வாங்க...!!” என்று கெஞ்ச, “டேய் ஏன் டா இப்படி எல்லாம் பண்ற! எப்ப பார்த்தாலும் லாஸ்ட் மினிட்ல எங்க எல்லாரையும் டென்ஷன் பண்றதே உனக்கு வேலையா? எப்படியும் அந்த ராகவன் கிளம்பும்போது டிராபிக் போலீஸ அலர்ட் பண்ணி இருப்பான். இங்க இருந்து செக் போஸ்ட்டை தாண்டி நம்ம எல்லாத்தையும் பத்திரமா கொண்டு போகணும்‌‌.

நமக்கு எத்தனை வேலை இருக்கு.. கொஞ்சம் கூட அந்த சீரியஸ்னெஸ் இல்லாம இப்படி இவன் கூட போய் chasing game விளையாடிட்டு இருக்க..!! இப்ப நீ உள்ள வரலனா, நான் வெளிய வந்துருவேன் பாத்துக்கோ..!!” என்று அவனை மிரட்டினான் அஜய். “நீங்க ‌யாரும் வெளிய வரக் கூடாது. என்னை காப்பாத்துறேன் மயிர புடுங்குறேன்னு நினைச்சு யாராவது வெளிய வந்தீங்கன்னா, யாரா இருந்தாலும் சரி.. நானே சுட்டு கொன்றுவேன். நான் என்ன சொல்றன்னோ அதை தான் செய்வேன். அது உங்களுக்கே நல்லா தெரியும். அவசரப்பட்டு உயிரை விட்டுராதீங்க.” என்று பற்களை கடித்துக் கொண்டு அவர்களை தனது கடுமையான குரலில் எச்சரித்த பிக் பாஸ் அவனது ஸ்போர்ட்ஸ் பைக்கின் ஆக்சிலரேட்டரை வேகமாக முறுககினான்.


அவர்கள் எதிர்பார்த்ததை போலவே கண்ட்ரோல் ரூமிற்கு ‌ இவர்கள் பேங்கில் கொள்ளையடித்துவிட்டு தப்பித்து செல்வதை ‌ பற்றி தெரிவித்த ராகவன் அடுத்த செக் போஸ்டில் அவர்களை மடக்கி பிடிக்கும் படி மற்ற காவல் ஆய்வாளர்களுக்கு தகவல் கொடுத்து கொண்டு இருக்க, தன் பின்னே இருந்த பணப்பையின் ஸ்ட்ராபை எடுத்து தனது தோள்களில் மாட்டிய பிக் பாஸ் அதனுடன் சேர்ந்து தன் பைக்கில் மேலே பறந்தான். அதனால் “மாட்டுன டா..!!” என்று நினைத்த இன்ஸ்பெக்டர் ராகவன் அவன் கையில் இருந்த துப்பாக்கியால் சரமாரியாக பிக் பாஸை நோக்கி சுட்டான். வண்டியின் டயரில் மாட்டிக் கொண்டிருந்த பையுடன் சேர்ந்து காற்றில் பறந்த பிக் பாஸ் அந்த பை பாதி கிழிந்த நிலையில், அதில் இருந்த பணம் நகைகள் எல்லாம் கீழே கொட்ட கொட்ட சென்று தாவி தனது ஆட்கள் இருந்த பெரிய கண்டெய்னருக்குள் விழுந்தான். அவன் உள்ளே குதிப்பதற்கும், ராகவனின் குண்டு அவனது தோள்களிலும் கால்களிலும் பாய்வதற்கும் சரியாக இருந்தது‌.


அவர்கள் அனைவருமே புல்லட் ப்ரூப் சூட் அணிந்திருந்தார்கள். இருப்பினும் சரியாக அந்த சூட் மறைக்காத அவனது உடலில் ராகவனின் குண்டு பாய்ந்ததால் காயமடைந்தான் பிக் பாஸ். அவன் கைகளிலும் கால்களிலும் இருந்து ரத்தம் வரத் தொடங்கி இருக்க, “ஐயோ பாஸ் ரத்தம் வருது! ஃபுல் பாடி புல்லட் ப்ரூப் சூட் ரெடி பண்ணனும்னு உங்க கிட்ட நான் எத்தன தடவ சொன்னேன்! அது ரெடி ஆகுறதுக்குள்ள எதுக்காக இவ்ளோ சீக்கிரமா இந்த அட்டம்ட்டை பண்ணலாம்னு பிளான் பண்ணீங்க? இப்ப பாருங்க.. உங்களயே சுட்டுட்டான் அந்த போலீஸ்கார நாயி..!!” என்று பதட்டுத்துடன் சொன்னான் துருவ்.


மற்றவர்களும் அவன் உடம்பில் இருந்து அதிக ரத்தம் வெளியாவதைக் கண்டு பயந்து போய் அவன் காயத்தைப் பார்க்கும் முயற்சியில் இருக்க, சிறிதும் பதட்டம் இல்லாமல் தனது வலியை காட்டிக் கொள்ளாமல் “டேய் வாய மூடிட்டு போய் டோர லாக் பண்ணுங்க டா. இன்னும் அந்த போலீஸ்காரன் பக்கத்துல வந்து நாலு தடவ எல்லாரையும் பார்த்து சுட்டா தான் அடுத்து என்ன பண்றதுன்னு யோசிப்பீங்களா..??” என்று தனது கணீர் குரலில் கோபமாக கேட்டான் பிக் பாஸ். அதனால் அஜய் வேகமாக சென்று அந்த கண்டைனரின் இரும்பு கதவை லாக் செய்தான். பின் அவன் “எல்லாம் முடிஞ்சுது. டிரைவிங் Speed ஐ இன்க்ரீஸ் பண்ணு.” என்று டிரைவரிடம் ப்ளூடூத்தில் சொல்ல, உடனே அவன் அதன் வேகத்தை பல மடங்கு அதிகரித்து காற்றைக் கிழிந்து கொண்டு பறந்தான்.


அழுத விழிகளோடு பிக் பாஸுன் அருகே சென்று அமர்ந்த சோனியா “பாஸ்.. ரொம்ப ரத்தம் போயிட்டு இருக்கு. இப்படியே விட்டா உங்களுக்கு ஏதாவது ஆயிடும். ப்ளீஸ் லெட் மி ஹெல்ப் யூ.” என்று சொல்லிவிட்டு அவன
து ஸ்பெஷல் சூட்டை கழட்ட தொடங்கினாள்.

தொடரும்..

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-1
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.