Chapter-1

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
163
0
16
www.amazon.com
அத்தியாயம் 1: என்னை விடுங்க..‌ நான் போகணும்

சென்னையின் பரபரப்பான சாலையில் மஞ்சள் வெயில் தனது கதிர்களால் பூமியை அழகாக்கும் மாலை நேரத்தில் தனது யூனிபார்ம் சாரியை சரி செய்தவாறு ஒரு ஸ்கூல் பஸ்ஸில் இருந்து இறங்கிய‌ 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருத்தி அவள் தோளில் கிடந்த ஹேண்ட் பேக்கை இறுக்கமாக பிடித்துக் கொண்டு “இந்த டிரைவர் அண்ணா எப்ப பாத்தாலும் லேட்டா தான் ஸ்கூல்ல இருந்து கிளம்புறாரு. இந்நேரம் டியூஷனுக்கு புள்ளைங்க எல்லாம் வந்திருப்பாங்க. அவங்களை எல்லாம் லேட்டா வரக் கூடாதுன்னு டெய்லியும் திட்டிட்டு இப்ப எல்லாம் நான் தான் லேட்டா போறேன்.‌ என்னைக்காவது நீங்க முதல்ல சீக்கிரமா வாங்க. அப்புறம் எங்களை குறை சொல்லலாம் மேடம்னு ‌ அதுங்க சொல்லப்போகுதுங்க. இன்னைக்கே அந்த அசிங்கம் நடக்கக் கூட சான்ஸ் இருக்கு.” என்று புலம்பியவாறு தனது கைக் கடிகாரத்தில் நேரத்தை பார்த்தபடி சாலையோரமாக நடந்தாள். அதில் நேரம் மாலை 5 மணி என்று காட்டியது.‌ அதனால் வேக எட்டுகள் வைத்து அவள் தன் வீட்டை நோக்கி மூச்சு வாங்க நடந்து கொண்டு இருந்தாள்.


காலையில் பள்ளிக்குச் செல்ல கிளம்பும்போது அரைகுறையாக தனது முகத்தில் அவள் ஸ்பான்ஞ்சை வைத்து தட்டி விட்டிருந்த டால்கம் பவுடர் எல்லாம் எப்போதோ மாயமாகி போயிருக்க, காலையில முதலே பள்ளி வளாகம் முழுவதும் சுற்றி அலைந்து திரிந்து வேலை பார்த்து வியர்த்து வடித்து இப்போதும் வேகமாக நடப்பதால் வியர்வை சொட்டும் முகத்துடன் சென்று கொண்டிருந்த அந்த பெண் அப்போதும் ஒப்பனை இல்லா பேரழகியாகவே ஜொளித்தாள். அதனால் அவளை கடந்து செல்லும் கண்கள் அனைத்தும் ஆண்கள் பெண்கள் என வித்தியாசம் இல்லாமல் ஒரு நொடியேனும் அவளை பார்க்காமல் செல்லவில்லை. ஆனால் இது வழக்கமாக அவள் செல்லும் பாதை என்பதால் எப்போதும் போல அவள் கேஷுவலாக தனது வீட்டிற்கு செல்லும் தெருவிற்குள் நுழைய, அப்போது எதிரில் அசுர வேகத்தில் வந்த கார் ஒன்று அவளை இடிப்பதை போல வந்து அவள் முன்னே நின்றது.‌


அதனால் பதறிப்போன அந்த இளம் பெண் பயத்தில் வியர்த்து வடிந்து மூச்சு வாங்க தன் நெஞ்சை பிடித்துக் கொண்டு “அறிவில்லையா உங்களுக்கு? இது என்ன ஹைவேஸ் ரோடுன்னு நெனச்சீங்களா? இந்த பக்கம் எத்தனை சின்ன குழந்தைங்க ஓடி விளையாடுவாங்க தெரியுமா? கொஞ்சம் கூட பொறுப்பில்லாம எப்படி இப்படி எல்லாம் வண்டி ஓட்டுறீங்க?” என்று கோபத்தில் கத்திக் கொண்டு இருக்க, கருப்பு நிற பேண்ட் சர்ட் மற்றும் கூலர்ஸ் அணிந்திருந்த இளம் பெண் ஒருத்தி காரில் இருந்து கிழே இறங்கி அவள் அருகில் செல்ல, அவளை பின் தொடர்ந்து அவளைப் போலவே கருப்பு நிறத்தில் ஏதோ யூனிபார்ம் போல அணிந்திருந்த பார்ப்பதற்கே ஆஜானுபாகுவாக தடிமாடுகளைப் போல இருந்த மூன்று நான்கு பாடிகார்டுகள் காரில் இருந்து கீழே இறங்கினார்கள்.


அவளது சாதாரண வாழ்க்கையில் இப்படியானவர்களை எல்லாம் அந்த பெண் பார்த்ததே இல்லை என்பதால், பயத்தில் அவளுக்குள் ஒரு எச்சரிக்கை உணர்வு தோன்ற, இரண்டடி பின்னே சென்று “நான் உங்க நல்லதுக்காக தான் சொன்னேன். மத்தபடி எனக்கு நீங்க என்ன இடிக்கிற மாதிரி வந்ததுனால பெருசா கோபம் எல்லாம் வரல. பொதுவாவே நான் soft nature girl. சாரி சொல்றதுக்கு இத்தனை பேர் எதுக்கு? நீங்க ஏதோ முக்கியமான வேலையா போறீங்கன்னு நினைக்கிறேன். பத்திரமா போங்க. நானும் சீக்கிரம் வீட்டுக்கு போகணும் பாய்.” என்று சொல்லிவிட்டு இரண்டடி பின்னே சென்றாள். அப்படியே கொஞ்சம் சென்று அந்த காரைக் கடந்து வேகமாக நடந்து விரைவில் எப்படியாவது தனது வீட்டிற்கு சென்று விட வேண்டும் என்பது அவளது எண்ணம்.


ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பு கொடுக்காமல் அவளை விட மின்னல் வேகத்தில் இரண்டே எட்டில் அவள் அருகில் சென்ற ‌ கருப்பு யூனிஃபார்மில் இருந்த பெண் அவள் கையைப் பிடித்து தன் பக்கம் இழுத்து “சாரி மேடம். இப்படி பண்றத தவிர எனக்கு வேற ஆப்ஷன் இல்ல.” என்று சொல்லி அவளது பேண்ட் பாக்கெட்டில் இருந்த மயக்க மருந்தில் நனைத்து வைக்கப்பட்டிருந்த கைக் குட்டையை எடுத்து அவள் முகத்தில் வைத்து அழுத்தினாள். அதனால் பயத்தின் உச்சத்திற்கே சென்ற அந்த இளம் பெண் “ஏய்.. யாரு டி நீ..‌ எதுக்கு இப்படி பண்ற? நான் வீட்டுக்கு போகணும் என்ன விடு.” என்று சொல்லி அவளிடம் இருந்து விலக போராடினாள். ஆனால் அவளது இரும்பு பிடிக்கு முன்னே இந்த எளிய பெண்ணால் எதுவும் செய்து தன்னை தற்காத்துக் கொள்ள முடியவில்லை.


வெறும் ஐந்தே நொடிகளில் அவளை மயக்கமாக்கி தன்னுடன் வந்தவர்களின் உதவியுடன் அவளை காரில் தூக்கி போட்டுக் கொண்டு கண் இமைக்கும் நொடியில் அந்த இடத்தில் இருந்து மாயமானாள். தனக்கு இப்போது என்ன நடந்தது, அடுத்து என்ன நடக்கும்? என்று எதைப் பற்றியும் அறிந்திருக்காத அந்த இளம் பெண் காருக்குள் மயங்கி கருப்பு உடை அணிந்திருந்த பெண்ணின் மடியில் கிடந்தாள். அப்போது அந்த பெண்ணின் மொபைல் ஃபோன் ரிங்காக, அதை எடுத்துப் பார்த்த யூனிபார்ம் அணிந்திருந்த பெண் அவளது மொபைல் ஃபோனை சுவிட்ச் ஆப் செய்து கார் ஜன்னல் வழியாக ‌ தூக்கி வெளியே எரிந்து விட்டாள்.‌


தன் மகள் இவ்வளவு நேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால் அவளுக்கு கால் செய்திருந்த விஜயா “என்ன ஆச்சு இவளுக்கு? பஸ் ஏறிட்டேன், பத்து நிமிஷத்துல வீட்டுக்கு வந்துருவேன்னு இப்ப தானே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கால் பண்ணா.. அதுக்குள்ள ஃபோன் சுவிட்ச் ஆஃப்னு வருது...!! எப்ப பாத்தாலும் ஃபோனை எடுத்து இவளுக்கு நல்லா நோண்ட மட்டும் தெரியும். ஆனா சார்ஜ் போடத் தெரியாது. வீட்டுக்கு வரட்டும் அவளுக்கு இருக்கு. பேருக்கு தான் டீச்சர். இவ மத்த பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கணும். ஆனா ஏழு கழுதை வயசாகுது. இன்னும் இதுக்கே புத்தி வர மாட்டேங்குது. டியூசனுக்கு வந்த புள்ளைங்க எல்லாம் படிக்காம இங்க அரட்டை அடிச்சிட்டு இருக்குங்க. இவளை எல்லாம் டீச்சர்ன்னு நம்பி எப்படி தான் இத்தனை பிள்ளைகளை பெத்தவங்க டியூசனுக்கு அனுப்புறாங்களோ தெரியல!” என்று புலம்பியபடி அங்கே டியூஷன் படிக்க வந்திருந்த இருபத்திற்கும் மேலான மாணவர்களை பார்த்து “ஏய் பிள்ளைங்களா.. உங்க மேடம் சீக்கிரம் வந்துருவாங்க. நீங்க சத்தம் போடாம படிங்க.” என்று சொல்லி அங்கே இருந்த பெரிய மாணவி ஒருத்தியை அழைத்து “இந்தா மா.. கலா.. பேசுற புள்ளைங்க பேர எல்லாம் போர்டுல எழுதி வை. உங்க மேடம் வந்த உடனே அவங்களுக்கு தண்டனை கொடுக்க சொல்லு.” என்று சொல்லிவிட்டு தனது வேலைகளை பார்க்க சென்று விட்டாள். ஆனால் பாவம் அந்த அப்பாவி தாய்க்கு தன் மகள் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு எங்கேயோ அவளை விட்டு தூரமாக சென்று கொண்டு இருக்கிறாள் என்று தெரியவில்லை.


தனது அதிநவீன தொழில் நுட்பங்கள் கொண்ட மொபைல் ஃபோனை எடுத்த கருப்பு நிற யூனிஃபார்ம் உடை அணிந்திருந்த பெண் “மிஷன் சக்சஸ் பிரிட்டோ. நாங்க அந்த பொண்ணை தூக்கிட்டோம். இப்ப சிட்டிக்கு அவுட்டர்ல இருக்கிற நம்ம பிரைவேட் ஹே ஹேலிபோர்ட் கிட்ட வந்துட்டோம். அங்க எல்லாம் ரெடியா இருக்கா? இவங்கள உடனே இங்க இருந்து கூட்டிட்டு போய் ஆகணும். நாங்க கிளம்பும்போது எங்களை யாராவது நோட் பண்ணி ஃபாலோ பண்ணிட்டு வர சான்ஸ் இருக்கு.” என்று நிறைய ஆங்கில வார்த்தைகளுடன் கொஞ்சம் தமிழ் கலந்து சொல்ல, மறுமுனையில் பேசிய பிரிட்டோ அவளைப் போலவே ஆங்கிலம் கலந்த தமிழில் “அங்க எல்லாமே பக்காவா ரெடியா இருக்கு. நீங்க அந்த பொண்ணை நம்ம பிரைவேட் ஜெட்ல ஏத்துனதுக்கு அப்புறமா ஆல்ரெடி நம்ம கார்ல செட் பண்ணி வச்சிருக்கிற boomஐ blast பண்ணிட்டு கிளம்பிருங்க. இந்த கார் வந்த டயர் மார்க் தவிர, அந்தப் பொண்ணை தேடி வர்றவங்க யாருக்கும் வேற எதுவும் கிடைக்கக் கூடாது. கிடைக்கவும் கிடைக்காது கிளாரா.” என்று சொல்லிவிட்டு வில்லத்தனமாக சிரித்தான். ‌


தனது பாஸ் அவளுக்கு கொடுத்த வேலையை வெற்றிகரமாக முடித்த சந்தோஷத்திலும் நிம்மதியிலும் இருந்த கிளாரா இன்னும் சில முக்கியமான விஷயத்தை பற்றி பிரிட்டோவிடம் பேசிவிட்டு அவனது அழைப்பை துண்டித்தாள்‌. இப்போது அவள் கண்கள் அவளது மடியில் அப்பாவியாக மயக்கத்தில் கிடந்த அந்த இளம் பெண்ணின் மீது பதிந்தது‌. அவளைக் காண இவளுக்கும் கொஞ்சம் பாவமாகத்தான் இருந்தது. அதனால் “I am sorry madam. நீங்க எங்க பாஸுக்கு முக்கியமானவங்களா இல்லைனா, இப்படி உங்கள கஷ்டப்படுத்தி நாங்க வலுக்கட்டாயமா கடத்திக்கிட்டு போக வேண்டிய சிச்சுவேஷன் வந்திருக்காது. நான் என் bossக்காக எத்தனையோ இல்லிகளான வேலையெல்லாம் பண்ணி இருக்கேன்.
அது மத்தவங்களுக்கு தப்பா இருந்தாலும், அதுக்குள்ள எங்களுக்குன்னு ஒரு நியாயம் இருக்கும். உங்க விஷயத்துலயும் எங்க பக்கம் ஒரு நியாயம் இருக்கு. ஆனா உங்க சைடுல இருந்து பார்க்கும்போது அது அநியாயமா தான் தெரியும். ஒரு பொண்ணா உங்கள பத்தி யோசித்து பார்த்தா, நான் பண்றது தப்புன்னு தான் தோணுது. ஆனா எனக்கு வேற வழி இல்ல. பட் கண்டிப்பா நான் உங்களுக்கு ப்ராமிஸ் பண்றேன்‌. உங்க lifeஓட turning point இதுதான். இன்னையில இருந்து, இந்த பெரிய ஜர்னில நான் உங்களுக்கு சப்போர்ட்டிவா உங்க கூடவே இருப்பேன்.” என்று தன் மனதிற்குள் அந்த பெண்ணிடம் சொன்னாள்.


அவர்களது காரை பின் தொடர்ந்து 2, 3 கார்கள் மின்னல் வேகத்தில் காற்றை கிழித்துக் கொண்டு பறந்து வந்தது‌. அதில் வந்தவர்கள் அனைவரும் கிளாராவையும், இப்போது அவள் கடத்திக் கொண்டு செல்லும் பெண்ணையும் பத்திரமாக இங்கே இருந்து அழைத்துச் செல்ல அவர்களது முதலாளியால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள்.

இப்படி இவர்கள் ஒரு புறம் தடயமே இல்லாமல், அந்த பெண்ணை கடத்திக் கொண்டு சென்று கொண்டு இருக்க, அவளது அம்மா வாசலை பார்த்தவாறு “எங்க இந்த புள்ளைய இன்னும் காணோம்? மணி ஆறாக போகுது.
அப்பவே பஸ் ஏறுனவ, ஏன் இன்னும் வரல? என் மனசுக்கு வேற என்னமோ தப்பா நடக்கிற மாதிரியே தோணுதே! ஏதோ சரியில்லைன்னு உள்ள கிடந்து அடிச்சிக்குதே..
அம்மா மீனாட்சி..
நான் பெத்த புள்ளைய உன் பிள்ளையா நினைச்சு நீதான் பத்திரமா வீடு கொண்டு வந்து சேர்க்கணும். அவளுக்கு போனும் போக மாட்டேங்குது. இப்ப நான் என்ன பண்ணுவேன்? அவளை எங்க போய் தேடுவேன்?” என்று வாசலில் நின்று புலம்பி கொண்டிருந்தாள்‌.

- மீண்டும் வருவாள்‌..


எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-1
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.