அத்தியாயம் 1: புதிய பாதை, புதிய பயணம்..
தங்கள் சொந்த ஊரில் இருந்து தங்களின் உயிரை காப்பாற்றி கொள்ள, இரவோடு இரவாக தன் உடல் நலம் குன்றிய தாய் ரேணுகா ராணியையும், இப்போது தான் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்து இருக்கும் தன் தம்பி ராகுலையும் அழைத்து கொண்டு கிளம்பிய பிரியா ராணி, தங்கள் ஊரில் இருந்து வெகு தொலைவில் உள்ள கருரை வந்தடைந்தாள்.
அவர்கள் வந்த பேருந்தில் இருந்து தன்னுடைய தாயை தன் தம்பியின் உதவியுடன் பத்திரமாக கீழே இறக்கி கூட்டி கொண்டு வந்த பிரியா; அங்கே இருந்த ஒரு அரசு தாய்மார்கள் பாலூட்டும் அறையில் தன்னுடைய தாயை உட்காரவைத்து விட்டு தன் தம்பியை காவலுக்கு அறைக்கு வெளியே நிற்க வைத்தாள்.
பின் அங்கே இருந்த ஒரு கடைக்கு சென்ற பிரியா தண்ணீர் பாட்டிலும், சாப்பிடுவதற்கு தேவையான சில உணவு பொருட்களையும், வாங்கிக் கொண்டு அதை தன் தாயிடமும், தம்பியிடமும், கொடுத்துவிட்டு தான் சிறிது நேரத்தில் வருவதாக செல்லிவிட்டு அங்கே இருந்து கிளம்பினாள்.
தான் இருக்கும் இடத்தை சுற்றி ஆராய்ந்த பிரியா ராணி, சிறிது தொலைவில் ஒரு நெட் சென்டர் இருப்பதை கவனித்தாள். தங்களின் மொபைல் ஃபோனை வைத்து தங்களை யாரும் கண்டு பிடித்து விட கூடாது என்று அவர்கள் கிளம்பும்போதே, தங்கள் மூவரின் ஃபோனில் இருந்த சிம் கார்டையும், எடுத்து உடைத்து தூக்கி எறிந்த பின், வரும் வழியில் அவர்கள் ஒரு ஆற்றை கடந்து வரும் போது, பஸ்ஸுல் இருந்தே தங்கள் மூவரின் மொபைல் போனையும் தூக்கி தண்ணீருக்குள் எறிந்து விட்டு வந்திருந்தனர்.
அவர்களுடைய கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் தங்களுடைய தேவைக்கு அதிகமாக பணம் இருப்பு இருந்தபோதிலும், பாதுகாப்பு காரணங்களுக்காக அதை அவர்கள் பயன்படுத்த விரும்பவில்லை.
இரண்டு நாட்களுக்கு முன் அவர்கள் பிரியாவின் அம்மா ரேணுகா ராணியை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யும் போது, எதர்க்கும் தேவைப்படுமே என்று சில லட்சங்களை எடுத்து தன் ஹேண்ட் பேக்கில் எடுத்து போட்டு கொண்டு ஹாஸ்பிடலுக்கு சென்றிருந்தாள் பிரியா.
அந்த சில லட்சங்கள் மட்டுமே இப்போது அவளுடைய கைகளில் மிஞ்சி இருப்பது. மூன்று நாட்களுக்கு முன் அவளுடைய அப்பா ஆக்சிடெண்டில் இறந்துவிட்டார். அவர் இறந்த துக்கத்தில் தான் அவளுடைய அம்மாவின் உடல் நலம் பாதிக்கப்பட்டடு விட்டது.
ஹாஸ்பிடலில் தன் அம்மா மற்றும் தம்பியுடன் இருந்த பிரியாவிற்கு; தன்னுடைய அப்பாவிற்கு நடந்தது ஆக்சிடென்ட் அல்ல. அது ஒரு திட்டமிட்ட கொலை என்றும், அவளுடைய அப்பாவை கொன்றவர்களால், தங்கள் உயிருக்கும் ஆபத்து வரப்போகின்றது என்ற செய்தியும் கிடைத்தது.
அதைக் கேட்டு பதறிப் போன பிரியா; தன்னுடைய குடும்பத்தில் மிஞ்சி இருப்பவர்களின் உயிரையாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து, உடனே தன் அம்மாவை அந்த ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் கூட செய்யாமல் அங்கே இருந்து யாருக்கும் தெரியாமல் பின் வாசல் வழியாக தன் அம்மாவையும், தம்பியையும் கூட்டிக் கொண்டு அவள் கிளம்பிய போது, அவளால் அவளுடைய ஹேண்ட் பேக்கை மட்டுமே அவளால் எடுத்து வர முடிந்தது.
பின் எப்படியோ அடித்து பிடித்து ஆட்டோவை பிடித்து பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கே இருந்து ஒரு பேருந்தை பிடித்து, பின் பல பேருந்துகள் மாறி மாறி இப்போது தன் குடும்பத்துடன் இங்கு வந்து நிற்கிறாள் பிரியா.
இவை அனைத்தையும் நினைத்து கொண்டே நெட் சென்டரை சென்றடைந்த பிரியா, கம்ப்யூட்டரின் முன் அமர்ந்து கூகுள் ஆண்டவரின் உதவியை நாடினாள்.
முதலில் உடல் நலம் குன்றிய நிலையில் இருக்கும் தன்னுடைய அம்மாவை குணப்படுத்த நினைத்த பிரியா, கூகுளில், அந்த ஊரில் அருகில் உள்ள பிரபல்யமான ஒரு சித்த வைத்திய சாலையை தேடி கண்டு பிடித்தாள்.
பின் அந்த சித்த வைத்திய சாலையின் அட்ரஸ் மற்றும் ஃபோன் நம்பரை பிரிண்ட் அவுட் எடுத்து தரச் சொல்லி வாங்கிக் கொண்டு பணம் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிய பிரியா; அந்த கடைக்காரர்களிடமே ஆட்டோ ஸ்டாண்ட் எங்கே இருக்கிறது என்று கேட்டு விசாரித்துவிட்டு, அங்கே இருந்து ஆட்டோ ஸ்டாண்டை கண்டு பிடித்து, ஒரு ஆட்டோவை நிறுத்தினாள்.
அந்த ஆட்டோகாரரிடம் பேசி அந்த அட்ரசுக்கு கூட்டிப் போக சொல்லிவிட்டு, அது வரை அரசு தாய்மார்கள் பாலூட்டும் அறையில் காத்திருந்த தன் அம்மாவையும், வெளியே நின்றிருந்த தன் தம்பியையும், அழைத்து வந்து ஆட்டோவில் ஏற்றி கொண்டு சித்த வைத்திய சாலையை நோக்கி சென்றாள்.
சிறிது நேரத்தில் அந்த ஆட்டோ ஒரு சிறிய சித்த வைத்திய சாலைக்கு முன் வந்து நின்றது. ஆட்டோவில் இருந்து முதலில் கீழே இறங்கிய பிரியாவை டாக்டர் சுவாமிநாதன் சித்த வைத்திய சாலை என்ற நேம் போர்டு வரவேற்றது.
வெளியே இருந்து பார்க்கும்போதே உள்ளே நிறைய மக்கள் அங்கே கூட்டமாக இருப்பது போல் தெரிந்தது.
அதனால், “இடம் சின்னதா இருந்தாலும் டிரீட்மென்ட் நல்லா குடுப்பாங்க போல.. அதான் இவ்ளோ கூட்டமா இருக்கு." என்று நினைத்த பிரியாவிற்கு, இங்கே ரேணுகாவை அட்மிட் செய்தாள் அவள் சீக்கிரம் குணமடைந்து விடுவாள் என்ற நம்பிக்கை பிறந்தது.
ஆட்டோ காரருக்கு பணம் கொடுத்துவிட்டு தன் அம்மாவையும், தம்பியையும் அந்த மருத்துவமனைக்கு உள்ளே நப்பிக்கையுடன் அழைத்து சென்றாள் பிரியா.
பின் அவள் தன் அம்மாவையும், தம்பியையும் அங்கே இருந்த இருக்கையில் உட்கார வைத்துவிட்டு அங்கு வேலை பார்த்துக் கொண்டு இருந்த பெண்ணிடம் தன் அம்மாவின் பெயரை சொல்லி நாங்கள் டாக்டரை பார்க்க வேண்டும் என்றாள்.
அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண், ரேணுகா ராணியின் பெயரை ரிஜிஸ்டரில் என்டர் செய்துவிட்டு, “நீங்க கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க. உங்க டர்ன் வரும்போது நான் சொல்கிறேன்." என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்.
சில நிமிடத்திற்கு பிறகு அங்கே வந்த நர்ஸ் பிரியாவையும், அவளுடைய அம்மாவையும், டாக்டரை பார்க்க உள்ளே செல்லும்படி தெரிவித்தாள்.
டாக்டரின் ரூமுக்குள்ளே சென்று தன் அம்மாவை அங்கே இருந்த இருக்கையில் அமர வைத்துவிட்டு, ஒரு பக்கம் பிரியாவும், இன்னொரு பக்கம் அவளது தம்பி ராகுலும் நின்று கொண்டனர். கலங்கிய கண்களோடு டாக்டரை பார்த்து கொண்டு இருந்த ராகுலின் கையை பின்னாடி இருந்து பிடித்து மெதுவான குரலில், “ஒன்னும் ஆகாது. எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன்."என்று சொல்லி அவனை தேற்ற முயன்றாள் பிரியா.
ஒரு வழியாக தைரியத்தை திரட்டி டாக்டரிடம் பேச தொடங்கிய பிரியா.. “டாக்டர் இவங்க என் அம்மா ரேணுகா ராணி, இரண்டு நாளைக்கு முன்னாடி ஒரு ஆக்ஸிடெண்ட்ல எங்க அப்பா இறந்துட்டாரு. அதுல எங்க அம்மா ரொம்ப உடைஞ்சு போயிட்டாங்க. அந்த டிப்ரஷன்ல அவங்களுக்கு பெராலிசிஸ் வந்துருச்சு. அதுல அவங்க வாயும் பாதிக்கப்பட்டதால, அவங்களால பேச கூட முடியல.
சித்த வைத்தியம் பண்ணுன எங்க அம்மாவுக்கு கொஞ்ச லேட் ஆனாலும் கம்ப்ளீட் ஆ சரியாயிடும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அதனால தான் இங்க கூட்டிட்டு வந்தேன் டாக்டர்." என்று கலங்கிய கண்களுடன் பேசி முடித்தாள்.
அவள் பேசிய விதத்திலேயே அவர்கள் எவ்வளவு கஷ்டத்தில் இருக்கிறார்கள் என்று அந்த டாக்டரால் புரிந்து கொள்ள முடிந்தது. அதனால் அவர்களை சற்று தேற்ற நினைத்த டாக்டர், “ஒன்னும் பயப்படாத மா. உங்க அம்மாவுக்கு சரியாயிடும். உங்க அம்மாவ டாக்டர் கிட்ட காமிச்சு செக் பண்ணீங்களா..??" என்று கேட்டார் சுவாமிநாதன்.
“எஸ் டாக்டர்." என்றாள் பிரியா. “உன் பேர் என்ன மா..??" என்று டாக்டர் கேட்க, “பிரியா" என்றாள்..
“ஓகே மா உங்க அம்மாவோட மெடிக்கல் ரிப்போர்ட் இருந்தா குடுங்க." என்றார், டாக்டர் சுவாமிநாதன்.
பிரியா தன்னுடைய ஹேண்ட் பேக்கில் தேடி பார்க்க, அதில் அதிர்ஷ்டவசமாக அவளுடைய அம்மா ரேணுகா ராணியின் மெடிக்கல் ரிப்போர்ட் இருந்தது. அதை எடுத்து டாக்டரிடம் கொடுத்தாள் பிரியா.
“உங்க அம்மாவோட வாயும், ரைட் ஹன்டும் பக்கவாதத்தால பாதிக்கப்பட்டு இருக்கு மா. அவங்களுக்கு கால்ல எதுவும் பிரச்சனை இல்லையே...?? கால்ல ஏதாவது உணர்ச்சி இல்லாத மாதிரி இருக்குன்னு சொன்னாங்களா..???" என்று பிரியாவை பார்த்து கேட்டார் டாக்டர் சுவாமிநாதன்.
டாக்டர் அப்படி கேட்டவுடன் ராகுலுக்கு ஏதோ போல் ஆகி விட்டது. கண்களில் நீர் வழிய நடுங்கிய குரலில் டாக்டரை பார்த்து, “டாக்டர் அப்ப எங்க அம்மாவால முன்ன மாதிரி நார்மலா இருக்கவே முடியாதா டாக்டர்..??" என்று கேட்டான் ராகுல்.
அவனது பரிதாபமான முகத்தை பார்த்துவிட்டு டாக்டர் சுவாமிநாதனால் எதுவும் பேச முடியவில்லை. ராகுலின் அருகில் சென்று நின்ற பிரியா, அவனை ஒரு கையால் அணைத்தவாறு “அப்படி எல்லாம் ஒன்னுமில்ல. அம்மாவுக்கு சீக்கிரம் சரி ஆயிடும். அவங்களுக்கு பெருசா எதுவும் இல்ல டா. இது ஈசிலி கியூரபுல் தான்." என்று சொல்லி அவனை தேற்றிவிட்டு, தன்னையும் தேற்றிக் கொண்டாள் பிரியா.
பின் டாக்டரை பார்த்த பிரியா “டாக்டர் அவங்களுக்கு கால்ல ஏதாச்சு பிரச்சனை இருக்கா இல்லையான்னு எனக்கு தெரியல. அவங்களால பேச முடியாதனால அவங்களும் எதுவும் சொல்லல. அவங்க எக்ஸ்ட்ரீம் டிப்ரேஷன்ல இருந்தனால, நாங்க இதுக்கு முன்னாடி ஒரு ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருந்தபோது, டாக்டர் ஸ்லீப்பிங் டோஸ் கொடுத்து ஒரு நாள் முல்லுக்க அவங்களை மயக்கத்துல தான் வச்சு இருந்தாங்க.
அங்கயே அப்படியே இருந்தா, இது எல்லாம் சரிப்பட்டு வராதுன்னு தான் நான் இங்க கூட்டிட்டு வந்தேன்." என்றாள். “ஓகே பிரியா..!! இங்க நம்ம கிட்ட டேலண்டெட் ஆன பிசியோதெரபிஸ்ட் இருக்காங்க. உங்க அம்மா இங்கயே தங்கி ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டாங்கனா அவங்க சீக்கிரம் சரி ஆயிடுவாங்க." என்றார் சுவாமிநாதன்.
“ஓகே டாக்டர்..!! எத்தன மாசம் ஆனாலும் சரி; நாங்க இங்கயே தங்கி எங்க அம்மாவ குணப்படுத்திட்டு தான் இங்க இருந்து போவோம்." என்றாள் பிரியா உறுதியுடன். அவள் அருகில் நின்று கொண்டு அவளும் டாக்டரும் பேசிக் கொண்டு இருப்பதை கேட்டுக் கொண்டு இருந்த ராகுல் “பிரியா அப்ப.. நம்ம அம்மாவ இங்கயே விட்டுட்டு போகணுமா..??" என்று தயக்கத்துடன் கேட்டான்.“
“எஸ் ராகுல், நமக்கு வேற வழி இல்ல. அப்பப்ப பிசியோதெரபிஸ்ட் வந்து அம்மாவ பாத்துட்டு போறத விட, அம்மா இங்கயே தங்கி ட்ரீட்மென்ட் எடுத்து கிட்டா பெட்டர் ரிசல்ட்ஸ் கிடைக்கும்." என்றாள் பிரியா.
அவள் சொன்னதை கேட்டு, புரிந்தது என்பதை போல தன் தலையை ஆட்டிக் கொண்டே ராகுல் தன் அம்மாவை பார்த்தான். 50 வயதாகி இருந்தாலும், இத்தனை நாள் அவனுடைய அம்மா அவனுக்கு எவர்கிரீன் பியூட்டியாக தான் தெரிந்து இருக்கின்றார்.
ஆனால் இன்றோ.. இரண்டு நாட்களில் அவனுடைய அம்மாவிற்கு 10 வயது கூடி விட்டதை போல மிகவும் மெலிந்து, அவனுடைய கண்களுக்கே அவள் வேறு யாரோ போல் தெரிந்தாள். அவனுடைய அம்மாவை அவனால் இப்படி பார்க்கவே முடியவில்லை.
பேரரசி போல கம்பீரமாக இருந்த தன் அம்மாவிற்கு இப்படி ஒரு நிலை வந்துவிட்டதை இப்பொழுதும் கூட அவனால் நம்பவோ, ஏற்றுக்கொள்ளவோ, முடியவில்லை. அதற்கு மேல் அவனால் அங்கே நிற்கவும் முடியவில்லை.
அதனால், “பிரியா நீ அம்மாவ அட்மிட் பண்ணிட்டு எல்லா பார்மலிடீஸ்-ஐயும் முடிச்சுட்டு வா. நான் வெளியில வெயிட் பண்றேன்." என்று சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டான்.
ராகுலின் நிலை பிரியாவிற்கு நன்கு புரிந்ததால், எந்த கேள்வியும் கேட்காமல் அவன் போகட்டும் என்று விட்டு விட்டள். இவ்வாறு தன் பிள்ளைகள் மாறி மாறி பேசி கொண்டு இருப்பதை கூட கவனிக்காமல், ஏதோ பிரமை பிடித்தவள் போல, இந்த உலகில் இல்லாமல் வேறு எங்கேயோ இருப்பது போல இருந்தாள் ரேணுகா ராணி.
பின் சிறிது நேரம் டாக்டர் சுவாமிநாதனுடன் பேசிவிட்டு அட்மிசன் பார்மலிடீஸ் அனைத்தையும் முடித்துவிட்டு, முன்பணமாக ஐயாயிரம் ரூபாயை செலுத்தி அதற்கான ரசீதை பெற்றுக்கொண்டு அங்கே இருந்து வெளியே வந்தாள் பிரியா ராணி.
பிரியாவை பார்த்தவுடன் அவளின் அருகே வேகமாக சென்ற ராகுல், “பிரியா அம்மாவ அட்மிட் பண்ணிட்டியா..?? இவங்க அம்மாவ நல்லா பாத்துக்குவாங்கல்ல..??" என்று வருத்தம் தோய்ந்த குரலில் கேட்டான் ராகுல்.
“ஒன்னும் பிராப்ளம் இல்ல. அம்மா தங்க போற ரூம் வரைக்கும் நான் கொண்டு போய் அவங்கள விட்டுட்டு தான் வந்தேன். அங்க சாந்தின்னு ஒருத்தங்க இருந்தாங்க. அவங்க தான் அம்மாவ பார்த்துக்குவாங்கலாம். அவங்க கிட்டையும் நல்லா அம்மாவ பாத்துக்கோங்கன்னு சொல்லிட்டு தான் வந்தேன்.
அண்ட் எக்ஸ்ட்ரா அவங்க கிட்ட 500 RS குடுத்துட்டு தான் வந்து இருக்கேன். சோ அம்மாவ நல்லா தான் பாத்துப்பாங்க. டோன்ட் வரி." என்றாள் பிரியா.
ஒரு நிமிடம் அமைதியாக இருந்த ராகுல், “சரி..!! இப்ப நாம எங்க போக போறோம்..?? என்ன பண்ண போறோம்..?? என்று தன்னுடைய முகத்தை சோகமாக வைத்து கொண்டு கேட்டான். “எனக்கும் தெரியல. ஆனா ஏதாச்சு பண்ணி தான் ஆகணும்." என்றாள் பிரியா.
அவளுடைய வார்த்தையில் உறுதியும் இல்லை. அவள் செல்ல போகும் பாதை இனி எளிதாக இருக்க போவதும் இல்லை. ஆனாலும் அவள் தன்னுடைய கண்களுக்கு தெரியும் இந்த புதிய பாதையில் செல்ல தான் போகிறாள்.
அவளுக்காக இல்லை என்றாலும்; அவளுடைய அம்மாவிற்காகவும், எதுவும் அறியா தம்பிக்காகவும்.
பெரிய அரண்மனை போன்ற வீட்டில் ராணியாக பிறந்து இளவரசியாக வாழ்ந்து கொண்டிருந்த பிரியா, இப்போது நடு ரோட்டில் தன்னுடைய உடம்பு சரி இல்லாத அம்மாவையும், சிறுவனான தம்பியையும், வைத்
து கொண்டு தவித்துக் கொண்டு இருக்கிறாள். அவர்களது வாழ்க்கை மாறுமா?
தொடரும்...
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:
facebook.com

Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-1
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.