Chaoter 31

Bhavani Varun

Member
Jan 23, 2025
44
0
6
“சனா!!! சனா!! என்னடா இவ்ளோ நேரம் தூங்கிட்டு இருக்க?? உடம்பு ஏதும் சரி இல்லையா?? என்ன ஆச்சு??” என்று புலம்பிக் கொண்டே லக்ஷ்மி சனந்தாவை எழுப்ப, சனந்தா மெதுவாக துயில் கலைந்து பார்க்கவும் லக்ஷ்மி அவள் அருகில் அமர்ந்து கொண்டிருக்க, சனந்தா எழுந்து லக்ஷ்மியை அணைத்து கொண்டு, குட் மார்னிங் மா!! என்று விரிவாக புன்னகைக்கவும், அதை பார்த்து லக்ஷ்மிக்கு மன நிறைவாக இருந்தது.

“எவ்வளவு நாள் ஆச்சு சனா, இப்படி சிரிச்சு பார்த்து…. எப்ப பார்த்தாலும் படிக்கிறது அடுத்து வேலை இப்படியே தான் ஓடிக்கிட்டு இருப்ப…. ஆனா, இன்னிக்கு தான் இவ்ளோ மனசார சிரிச்சி பார்க்குறேன் உன்னை” என்று லக்ஷ்மி கூற, “என்ன மா நான் சிரிக்கவே மாட்டேன்ற மாதிரி பேசுறீங்க” என்று சனந்தா முறையிட, “அப்படி இல்ல சனா… ஏதோ நீ சந்தோஷமா இருக்க அப்படின்றது உன்னோட சிரிப்புல என்னால புரிஞ்சுக்க முடியுது அதை தாண்டா நான் அப்படி சொன்னேன்” என்று லக்ஷ்மி கூறவும், நேற்றிரவு விக்ரமுடன் நடந்த உரையாடலை நினைத்துக் கொள்ள சனந்தா இன்னும் விரிவாக புன்னகைத்தாள்.

“என்ன?? என்ன ஆச்சு??” என்று லக்ஷ்மி கேட்க, “ஒன்னும் இல்ல நான் குளிச்சிட்டு ரெடியாயிட்டு வரேன் ஹாஸ்பிடலுக்கு வேற போகணும்ல” என்று சனந்தா பேச்சை மாற்றி குளிக்க சென்றாள். “ஏதோ சந்தோஷமா இருந்தா எனக்கு சந்தோஷம் தான்” என்று லக்ஷ்மி அவருடைய வேலையை காண சென்றார்.

“சரவணா என்ன ஆச்சு இவனுக்கு?? இன்னிக்கு ஒரு மார்க்கமா சுத்திட்டு இருக்கானே??” என்று வள்ளி கேட்க, “யார் விக்ரமா??? எங்க அவன ஆளையே காணோம்?” என்று சரவணன் கேட்க, “குளிக்க போய் இருக்கான் டா.. காலையில் எந்திரிச்சு என்னன்னு தெரியல அவன் பாட்டுக்கு தனியா சிரிச்சிட்டு ஆடிட்டு இருந்தான்… என்னென்னமோ பண்ணிட்டு இருக்கான்.. அவன் பாட்டு போட்டு தனியா சிரிச்சிட்டு இருந்தான்…. அது மட்டும் இல்ல அவனுக்கு பெருசா காஃபி பிடிக்காதுல…. அதனால சும்மா அவனை கிண்டல் பண்ணலாம்னு எனக்கு போட்ட காஃபிய குடுத்தா அத வாங்கி குடிச்சிட்டான் டா… அது கூட தெரியல டா அவனுக்கு என்ன தான் ஆச்சு?” என்று வள்ளி குழப்பத்துடன் கேட்டார்.

“எனக்கும் தெரியலையே மா… நீங்க சொல்லி தான் இதெல்லாம் தெரியுது…. வரட்டும் என்னன்னு பார்ப்போம்” என்று சரவணன் சமாளித்து அனுப்பினான். “இவன் ஒரு வேள நேத்து சனா கிட்ட பேசி இருப்பானோ…. அந்த குஷியில சுத்திட்டு இருக்கானோ… அவன கேட்டா தான் தெரியும்” என்று அவனுக்குள் நினைத்துக் கொண்டான் சரவணன்.

விக்ரம் குளித்து முடித்து தயாராகி உணவருந்துவதற்கு வந்து சரவணன் அருகில் அமரவும் சரவணன் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, “என்ன ஏன்டா பார்த்துட்டு இருக்க?? என்ன வேணும் உனக்கு??” என்று விக்ரம் கேட்க, ஒன்னும் இல்லை என்பது போல் தலையை அசைத்தான் சரவணன்.

“நான் குளிச்சு முடிச்சுட்டு வந்ததிலிருந்து இப்ப வந்து உட்கார வரைக்கும் என் மூஞ்சிய பார்த்துட்டு இருந்த…. என் மூஞ்சில என்ன எழுதி இருக்கு??” என்று விக்ரம் கேட்க, “ஏதாவது எழுதி இருக்கான்னு தான் பார்த்தேன்…. ஒன்னும் எழுதலையே…. ஆனா, ஒன்னு மட்டும் தெரியுது மூஞ்சி நல்ல பிரகாசமா இருக்கு” என்று சரவணன் நக்கலாக கூற, விக்ரம் அவனையும் அறியாமல் வெட்கத்துடன் புன்னகைத்து, “சாப்பிடுற வேலையை பாரு கிளம்பலாம் நம்ம” என்று பல்லை கடித்துக் கொண்டு கூறினான்.

இருவரும் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் வள்ளிக்கு புரிந்தது ஆனால் என்னவென்று அவர் காதில் விழவில்லை. விக்ரம் சந்தோஷமாக இருக்கிறான் என்பது மட்டும் அவருக்கு புரியவும் வள்ளி அமைதியாகிவிட்டார்.

“அம்மா!!!!, அப்பா எங்க மா??” என்று விக்ரம் கேட்க, “எப்பா!!! இப்ப தாண்டா உங்க அப்பாவ காலையில் இருந்து வீட்ல காணோம்னு கேக்குற நீ” என்று வள்ளி கேலியாக கூறவும், “ப்ச்… சொல்லுங்கம்மா” என்று விக்ரம் கேட்க, “ஒன்னும் இல்லடா எல்லாரும் சேர்ந்து காட்டுக்குள்ள போய் இருக்காங்கனு கூட போவோம்ன்னு போனாரு….. நேத்து சரவணா போனான்…. இன்னிக்கு அப்பா போயிருக்காரு” என்று வள்ளி கூறவும், “அப்படியா சரி சரி” என்று விக்ரம் கூறினான்.

விக்ரம் மற்றும் சரவணன் உணவருந்தி விட்டு ஆஃபீஸுக்கு புறப்பட்டனர். “என்ன மச்சான் ஒரே குஷியா இருக்க???” என்று சரவணன் கேலியாக பேச ஆரம்பிக்கவும், “மூடிட்டு வண்டியை ஓட்டு டா” என்று விக்ரம் வெட்க புன்னகையுடன் கூறினான்.

“ஐயோ!!! டேய்…. கண்ணாடிலையே பார்க்க முடியல…. வெட்கம் எல்லாம் படாத சகிக்கல உன் மூஞ்சிக்கு” என்று சரவணன் விக்ரமை கிண்டல் செய்து கொண்டிருக்க, “நீ என்னை ஓட்டனும்னா வந்துருவடா முதல்ல…. ம்ம்.. நேத்து பேசினேன் அவ கிட்ட…. என்ன நினைச்சேனோ எல்லாம் சொல்லி இருக்கேன் அவளுக்கும் புரிஞ்சுது தான்னு நினைக்கிறேன்…. ஆனா, என்ன இருந்தாலும் அவ இங்க இல்லாதது ஏதோ ஒரு மாதிரி குறையாவே தான் இருக்குடா” என்று விக்ரம் கூறினான்.

“அப்படி ஒன்னும் எங்களுக்கு எல்லாம் இல்லையே” என்று சரவணன் வேண்டுமென்றே வம்பிழுக்க, “உங்களுக்கு இல்லன்னா பரவால்லடா… எனக்கு இருக்குடா… நான் அவளை மிஸ் பண்றேன் டா போதுமா” என்று விக்ரம் அவனுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்தான்.

“சரி சரி இன்னும் ஒரு நாள் தானே எப்படியும் நாளைக்கு சாயந்திரம் போல வந்துருவா அப்புறம் என்னடா உனக்கு?” என்று சரவணன் கேட்க, “இன்னும் ஒரு நாள் இருக்கு மச்சான்” என்று விக்ரம் கூறவும், சரவணன் விக்ரம் கூறிய தோரணையை கண்டு புன்னகைத்தான்.

“சரி நான் சொன்னது ஞாபகம் இருக்குல அபி கிட்ட இப்போதைக்கு எதையும் காட்டிக்காத…. அவனே எப்ப சொல்றான்னு பார்க்கலாம்” என்று விக்ரம் கூறவும், “சரிடா நான் எதுவும் பேசல” என்று சரவணன் கூறினான். இருவரும் அவர்களது ஆஃபீஸ்க்கு சென்று அவர்களது வேலையை காணவும் அபிலாஷ் வந்து சேர்ந்தான்.

“என்னடா அவளை விட்டுட்டு வந்துட்டியா??” என்று அபிலாஷ் கேட்க, விக்ரம் தலையை மட்டும் அசைத்தான். “ஆமா, இன்டர்ன் எங்க??? காலையில வந்து சைன் போடவே இல்லையே?” என்று சரவணன் கேட்க, “மெடிக்கல் திங்க்ஸ் வாங்கிட்டு வர போயிருக்காங்க” என்றான் அபிலாஷ்.

“அதான் போன வாரம் தானே ஒரு லோடு வந்தது இப்போ என்னடா??” என்று விக்ரம் கேட்க, “இது சர்ஜிகல் திங்ஸ் நேர்ல போனா தான் கொடுப்பாங்க” என்று அபிலாஷ் கூறவும், “அது நீ போய் சைன் போட்டா தானே கொடுப்பாங்கன்னு சொன்னா இப்ப என்கிட்ட??? இப்ப இன்டர்ன அனுப்பி இருக்கே??” என்று விக்ரம் கேட்க, “இல்ல மச்சான்…. அது….. ஒன்னும் இல்ல…. நான் போன வாட்டி போனப்பயே இன்டர்னோட டீடைல்ஸ் எல்லாம் கொடுத்துட்டு வந்தேன்….. அதனால அந்த பையன் போனாலும் இப்போ கொடுப்பாங்க” என்று அபிலாஷ் கூறவும், விக்ரம் தலையை அசைத்தான்.

“அப்புறம் மச்சான் உன்கிட்ட முக்கியமான விஷயம் சொல்லுனும் டா….. அது சனந்தாக்கு ஆப்ரேஷன் நடந்த ஹாஸ்பிடல் இருந்து தகவல் வந்துச்சு… நான் அவளோட ர்ப்போர்ஸ் ரிக்வெஸ்ட் பண்ணிருந்தேன்ல….. அவளுடைய ரிப்போர்ட் எல்லாமே ஏதோ மாறி மாறி இருக்கு ஒரே குழப்பமா இருக்கு ப்ராப்பர் ரிப்போர்ட்ஸ் எடுக்கவே முடியலன்னு சொன்னாங்க” என்று அபிலாஷ் கூறினான்.

விக்ரம் மற்றும் சரவணன் அதிர்ச்சியாகினர். “இதுல என்ன இருக்கு??? ஆக்சிடென்ட் ஆச்சு அப்ப என்ன ஆப்ரேஷன் பண்ணினாங்களோ அத ரிப்போர்ட்டா குடுக்கறதுல என்ன குழப்பம்” என்று சரவணன் கேட்க, “அது தான் எனக்கும் புரியல யாரு மறைக்குறாங்கன்னு தெரியல…. சனந்தா வீட்ல மறைக்கிறாங்களா இல்ல ஹாஸ்பிடல்லான்னு எனக்கு சரியா தெரியல மச்சான்” என்று அபிலாஷ் கூறினான்.

“சனந்தா வீட்டில மறைக்க எதுவும் இல்ல…. ஏன்னா அவங்க என்கிட்ட பேசின வரைக்கும் ஆக்சிடென்ட் ஆச்சு அப்போ அபர்ணாவும் கூட இருந்தா, அப்புவுடைய ஆர்கன் வெச்சு தான் சனந்தா உயிர் பொழச்சான்னு அவங்களே ஒத்துக்கிட்டாங்களே…. அவங்க முதல் நாளிலிருந்தே இத தான் சொல்லிட்டு இருக்காங்க…. அதனால தான் நான் எவ்வளவு கோபப்பட்டு பேசினாலும் அவங்களும் அமைதியா இருக்காங்க” என்று விக்ரம் கூறினான்.

“அப்போ ஹாஸ்பிடல்ல ஏதாவது குளறுபடி நடந்து இருக்குமா??” என்று சரவணன் கேட்க, “அது தான் விசாரிக்க சொல்லி இருக்கேன் டா” என்று அபிலாஷ் கூறினான். “இது என்னடா அடுத்து புது குழப்பமா இருக்கு” என்று சரவணன் முறையிட, “அதான் ஒன்னும் புரியல அபர்ணாக்கும் சனாவுக்கும் ஒரே பிளட் குரூப் அதனால அவ பிளட் எல்லாம் எடுத்து சனாக்கு யூஸ் பண்ணிட்டாங்க…. அது போக லிவர் யூஸ் பண்ணாங்க அப்படின்னு தான் ஹாஸ்பிடல்ல இருந்து விக்ரமுக்கு சொன்னாங்க…. ஆனா, இங்க பார்த்தா எந்த தகவலும் தெளிவா இல்லயே” என்று அபிலாஷ் கூறினான்.

“எதுக்கும் சனா கிட்ட என்ன ஆப்ரேஷன்னு கேட்டுட்டா என்ன??” என்று சரவணன் கேட்க, “அப்புறம் அவளுக்கு சந்தேகம் வராதா…. ஏற்கனவே அவளுக்கு நிறைய சந்தேகம் இருக்கு… இதுல நம்ம கேட்டா இன்னும் அவ்வளவு தான” அபிலாஷ் கூற, “நான் வேணா பிரகாஷ் சார் கிட்டையே விசாரிக்கிறேன் டா… நீ எதுவும் அவ கிட்ட கேட்காத” என்று விக்ரம் கூறவும், இருவரும் ஆமோதித்தனர்.

விக்ரம் வெளியில் சென்று பிரகாஷ் அவர்களுக்கு ஃபோன் செய்ய, “என்ன விக்ரம் என்ன ஆச்சு?? தகவல் ஏதாவது தெரிஞ்சதா??” என்று பிரகாஷ் கேட்கவும், “இல்ல சார் எனக்கு தான் ஒரு இன்ஃபர்மேஷன் தெரியணும்…. தப்பா எடுத்துக்காதீங்க எங்களுக்கு கொஞ்சம் இந்த விஷயம் மட்டும் சொல்லுங்க…. சனந்தாக்கு என்ன ஆப்ரேஷன் பண்ணாங்க??” என்று விக்ரம் கேட்க, “ம்ம்… ஏதோ முக்கியம் அதனால தான் கேட்குறேன்னு புரியுது விக்ரம்…. அபர்ணாவோட லிவர் எடுத்து டிரான்ஸ்பிளான்ட் பண்ணாங்க… அப்புறம் பிளட் எல்லாமே அபர்ணா உடையது தான் ஏத்துனாங்க…. அதுக்கப்புறம் ஹார்ட் வால்வ் அனிமல் வால்வ் வெச்சு மாத்தினாங்க” என்று பிரகாஷ் கூறினார்.

விக்ரம் சற்று அமைதியாக விட, “என்ன ஆச்சு ஏதாவது பிரச்சனையா?” என்று பிரகாஷ் கேட்க, “இல்ல சார் சனந்தா இங்க வந்ததுக்கு அப்புறமா அவங்க மெடிக்கல் டீடைல்ஸ் எங்களுக்கு சரியா வரல ஆக்சிடென்ட் ஆயிருக்குனு மட்டும் தான் வந்தது…. அதனால இங்க இருக்குற டாக்டர் அவங்களுடைய ரிப்போர்ட்ஸ் ரிக்வெஸ்ட் பண்ணி இருந்தாரு…. ஆனா எதுவும் தெளிவாவே இல்ல லிவர் ஆப்ரேஷன் மட்டும் போட்டு இருக்கு, அதுவும் என்னென்னு தெளிவா போடல… அதே மாதிரி ஓபன் ஹார்ட் சர்ஜரின்னு மட்டும் தான் போட்டு இருக்கு அதுவும் என்னன்னு தெளிவா இல்ல அப்படின்னு டாக்டர் சொன்னாரு… அது தான் எதுக்கும் உங்க கிட்ட கேட்டு கன்ஃபார்ம் பண்ணிப்போம்னு தான் உங்களுக்கு ஃபோன் பண்ணேன்” என்று தயக்கத்துடன் விக்ரம் கூறினான்.

“அது ஒன்னும் பிரச்சனை இல்லப்பா உனக்கு ஏதாவது வேணும்னா நீ எங்க கிட்டயே ஓபனா கேட்கலாம்… எங்களுக்கு தெரிஞ்ச பதிலை நாங்க கண்டிப்பா சொல்லுவோம்” என்று பிரகாஷ் கூறவும், “சரிங்க சார் ரொம்ப நன்றி பதில் சொன்னதுக்கு” என்று கூறி விக்ரம் ஃபோனை வைத்து, பிரகாஷிடம் பேசிய அனைத்தையும் அபிலாஷ் மற்றும் சரவணன் இருவரிடமும் கூறினான்.

“சரி மச்சான் நீ உன் சைடுல இருந்து ஹாஸ்பிடல்ல என்ன தகவல் வாங்க முடியும்னு பாரு… இந்த பக்கம் நான் என்ன பண்ண முடியும்னு பார்க்கிறேன்” என்று விக்ரம் கூற, சரி என்று கூறி அபிலாஷ் அவனது வேலையை காண சென்றான்.

“என்னடா இது ஒன்னு விட்டா ஒன்னு எல்லாமே குழப்பத்திலேயே இருக்கு” என்று சரவணன் முறையிட, “எனக்கு மட்டும் என்னடா தெரியும் நானும் உன் கூட தானே இருக்கேன்…. சரி ஓகே என்ன வந்தாலும் அத ஃபேஸ் பண்ணி தான் ஆகணும்” என்று விக்ரம் கூறினான்.

கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல
 

Author: Bhavani Varun
Article Title: Chaoter 31
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.