ரிஷி கேட்டுக் கொண்டதற்காக கௌதம் அவனது ஹாஸ்பிடலில் வேலை செய்யும் பெண் டாக்டர் ஒருத்தியை வரவழைத்து நித்திலாவிற்கு வெர்ஜினிட்டி டெஸ்ட் எடுக்கச் சொன்னான்.
அந்தப் பெண்ணும் அது தொடர்பான வேலைகள் அனைத்தையும் செய்ய முயற்சி செய்ய, தலையில் அடிபட்டு மூளை குழம்பியா நிலையில் இருக்கும் நித்திலா,
“ஓய் நீ என்ன டி பண்ற? நீ போ அந்த பக்கம். எனக்கு உன்ன பிடிக்கவே இல்லை.” என்று சொல்லி நிரஞ்சனாவை பயத்தில் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.
“ஒன்னும் இல்ல நித்திலா பயப்படாத. அவங்க டாக்டர் தான். உன்ன செக் பண்ண வந்துருக்காங்க.” என்று ஏதேதோ சொல்லி அவளை சமாதானப்படுத்திய நிரஞ்சனா டாக்டரை அவளது வேலையை பார்க்க உதவினாள்.
அவளது உதவியோடு ஒரு வழியாக அனைத்து பரிசோதனைகளையும் செய்து முடித்த அந்த டாக்டர் பெண்மணி நித்திலாவின் டெஸ்ட் ரிப்போர்ட் தயார் செய்து கௌதமின் கையில் அதை கொடுத்துவிட்டு வெளியில் சென்று விட்டாள்.
தனது ரூமில் ரிஷி என்ன நடக்குமோ என்று யோசித்தபடி பதட்டத்துடன் வீல்சாரில் அமர்ந்திருக்க, கௌதம் அவனிடம் சென்று நித்திலாவின் டெஸ்ட் ரிப்போர்ட் கொடுத்தான்.
கொஞ்சம் கூட பொறுமை இன்றி வெடுக்கென்று அதை அவனிடம் இருந்து வாங்கிய ரிஷி உடனே திறந்து அதில் இருந்தவற்றை படித்து பார்த்தான்.
நல்லவேளையாக அவன் நினைத்து பயந்ததைப் போல நித்திலாவிற்கு இதுவரை தவறாக எதுவும் நடந்திருக்கவில்லை. அப்படி சொல்வதற்கு பதிலாக, ஏதேனும் நடப்பதற்கு முன்பாகவே தெய்வா தினமாக அவள் ரிஷி போன்றவனின் கண்களில் பட்டிருக்கிறாள்.
அந்த விஷயத்தில் கடவுள் நித்திலாவை காப்பாற்றி இருக்கிறார் என்று சொல்லலாம். தன் நண்பன் கௌதமை கட்டிப்பிடித்து தேங்க்ஸ் சொன்ன ரிஷி,
“நீ இன்னைக்கு பண்ண ஹெல்ப் எதையுமே நான் லாஸ்ட் வரைக்கும் மறக்க மாட்டேன் கெளதம்.
நித்திலா இந்த கண்டிஷன்ல இருக்கறதுனால அவளுக்கு தப்பா ஏதாவது நடந்திருந்தா என்ன பண்றதுன்னு எனக்கு கொஞ்சம் பயமாவே இருந்துச்சு.
இந்த ரிப்போர்ட்டை பார்த்ததுக்கு அப்புறம் தான் நிம்மதியா இருக்கு. இனிமே அவளுக்கு எதுவும் ஆகாம கண்டிப்பா நான் அவள பத்திரமா பாத்துக்குவேன்.” என்று உணர்ச்சி வசப்பட்டு பேசினான்.
தானும் பதிலுக்கு அவனை கட்டிப்பிடித்த டாக்டர் கௌதம் “அவங்களுக்கு சீக்கிரம் சரியாயிடும். நீ அவங்களுக்காக இந்த அளவுக்கு யோசிக்கிறதை பார்த்தா, உனக்கும் அவங்கள புடிச்சிருக்கிற மாதிரி தான் தெரியுது.
இனியும் அந்த தனுவை பத்தி யோசிச்சுக்கிட்டு இவங்கள ஏத்துக்கிறதுக்கு தயங்கிக்கிட்டே இருக்காத ரிஷி.
இந்த கண்டிஷன்ல நித்திலாவுக்கு உன்னோட லவ் அண்ட் சப்போர்ட் ரொம்ப முக்கியம்.
நீ அவங்கள பக்கத்துல இருந்து குழந்தை மாதிரி பாத்துக்கணும். அப்படி பார்த்துகிட்டா, கண்டிப்பா அவளோட கண்டிஷன்ல ஏதாவது இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.
எல்லாமே நல்லபடியா நடந்து சீக்கிரமா உனக்கும், நித்திலாவுக்கும் மேரேஜ் ஆகணும்னு நான் மனசார ஆசைப்படுறேன்.
சீக்கிரமா அந்த குட் நியூஸை சொல்லு மேன். I am waiting!
ஏதாவது எமர்ஜென்சினா கூப்பிடு. ஆல்ரெடி அந்த பொண்ண பாத்துக்கிட்ட டாக்டர் இங்கேயே இருக்கட்டும்.
நித்திலாவோட கண்டிஷன் ஸ்டேபிள் ஆயிடுச்சின்னா, அதுக்கப்புறம் நர்ஸ் கூட இருந்தா போதும்.” என்று சொல்லிவிட்டு அங்கே இருந்து கிளம்பினான்.
மீண்டும் ஒருமுறை அவனுக்கு நன்றி சொல்லி அவனை வழி அனுப்பி வைத்த ரிஷி வந்து நித்திலா இருந்த அறையில் அவளை பார்க்க, அவள் நிரஞ்சனாவை தன் அருகில் அமர வைத்து அவள் கையை குழந்தை போல இறுக்கிப் பிடித்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள்.
ரிஷியை பார்த்தவுடன் எழுந்து நிற்க முயற்சி செய்த நிரஞ்சனா “இவ புதுசா யாராவது வந்தாங்கன்னா, அவங்க மறுபடியும் இவளை கடத்திக் கொண்டு போய் வச்சு டார்ச்சர் பண்ணுவாங்கன்னு நினைச்சு பயப்படுறா.
இப்ப வந்த டாக்டரை கூட பக்கத்துலயே விடல. தூங்கும்போது கூட பயமா இருக்குனு என்ன விடாம பிடிச்சு வச்சுக்கிட்டு தூங்கிட்டு இருக்கா.
நெஜமாவே இவளை பாக்குறதுக்கு ஒரு நாலஞ்சு வயசு குழந்தை பாக்குற மாதிரி தான் இருக்கு சார்.” என்று மெல்லிய குரலில் சொல்ல,
நிரஞ்சனா எழுந்து கொள்ள முயற்சி செய்தபோதிலும் அவளை விடாமல் பிடித்துக் கொண்டு க்யூட்டாக தனது கை கால்களை குறுக்கியபடி உறங்கிக் கொண்டிருந்த நித்திலாவை ஒரு பார்வை பார்த்த ரிஷி,
“If you don't mind, இவளுக்கு ஓரளவுக்கு சரியாகிற வரைக்கும் மட்டும் நீங்க இவ கூட இருந்து இவளை பார்த்தீர்களா?
அந்த கேப்ல நான் மத்த இஸ்யூஸ் எல்லாத்தையும் சால்வ் பண்ணிடுவேன்.
என் ஃபேமிலி கிட்ட இவளை என் கேர்ள் ஃபிரண்டுன்னு இண்ட்ரடியூஸ் பண்ணனும்னு நான் முடிவு பண்ணிட்டேன்.
சோ இனிமே இந்த பொண்ணு என் ரெஸ்பான்சிபிலிட்டி. இவளுக்கு கடைசி வரைக்கும் சரியாகவே இல்லைன்னா கூட பரவால்ல.
தனு மாதிரி fake-ஆ இருக்கிற பொண்ணுங்களுக்கு சின்ன குழந்தை மாதிரி இன்னசெண்டா இருக்கிற இவ எவ்வளவோ பரவாயில்லை.
ஏன்னே தெரியல. எனக்கு இவ அப்படி ஆக்ஸிடெண்ட் ஆகி ரோட்ல கிடைக்கிறதை பார்த்ததுல இருந்து என்ன ஆனாலும் பரவால்ல.. இவள நல்லா பாத்துக்கணும்னு தோணுது நிரஞ்சனா.” என்றான்.
“உங்களுக்கான சரியான pair இந்த பொண்ணு தான்னு எனக்கும் தோணுது சார்.
கண்டிப்பா உங்க லைஃப் இதுக்கப்புறம் நல்லா இருக்கும். இவளுக்கு நடக்கிறது என்னன்னு புரியாம இருக்கலாம்.
ஆனா உண்மையா உங்க மேல அன்பு காட்டுவா. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு.” என்று நிரஞ்சனா சொல்ல,
தனது தாய் மற்றும் தங்கையிடம் இருந்து தவிர அந்த மாதிரியான ஒரு அன்பை இதுவரை அனுபவித்து இருக்காத ரிஷி “அப்படி நடந்தா சந்தோஷம் தான்.” என்று தனக்குள் முனுமுனித்தவாறு,
“திலீப் இந்த பொண்ண பத்தி ஏதாவது இன்ஃபர்மேஷன் கிடைச்சதுன்னா, நான் தூங்கிட்டு இருந்தாலும் பரவால்ல.
என் ரூமுக்கு வந்து சொல்ல சொல்லுங்க. என் ஃபேமிலில இருந்து யாராவது கான்டக்ட் பண்ண ட்ரை பண்ணாங்கனா, எனக்கு உடம்பு சரியில்ல நான் ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கேன்னு சொல்லிடுங்க.
Tomorrow மார்னிங் அவங்க கிட்ட நான் இங்க இருக்கிறத பத்தி inform பண்ணி அவங்கள இங்க வர சொன்னா போதும்.” என்று நிரஞ்சனாவிடம் சொல்லிவிட்டு அந்த அறை இருந்து வெளியேறினான்.
இப்போது தான் பொழுது விடிந்திருக்கிறது. ஆனால் தூக்கமின்றி கடந்த சில நாட்களாக அவன் தவித்துக் கொண்டு இருந்ததால், இப்போது என்னவோ அவன் அருகில் நித்திலா இருக்கும் மனநிறைவில் அவனது சோர்வான உடலும், கண்களும் தூக்கத்திற்காக ஏங்கியது.
தனக்கு கிடைத்திருக்கும் இந்த ஒருநாள் காலக்கெடுவிற்குள் தான் செய்து முடிக்க வேண்டியது ஏராளமாக இருக்கிறது என்பதால் அதற்குள் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க நினைத்த ரிஷி அவனது ரூமிற்கு சென்று படுத்தான்.
காலை 12 மணியனவில் தனது ஆட்களுடன் அந்த கெஸ்ட் ஹவுஸிற்க்குள் நுழைந்த திலீப் நிரஞ்சனாவை சந்தித்து இப்போது நித்திலா விஷயத்தில் ரிஷி எடுத்திருக்கும் முடிவைப் பற்றி தெரிந்து கொண்டான்.
அவன் கையில் இப்போது நித்திலாவின் உண்மையான அடையாளங்கள் தொடர்பான அனைத்து விவரங்கள் அடங்கிய ஃபைல் இருந்தது. அதை ரிஷியிடம் கொடுப்பதற்காக அவனது ரூமிற்கு சென்றான் திலீப்.
தூக்கத்தில் இருந்த ரிஷியை எழுப்பி தன் கையில் இருந்த ஃபைலை அவனிடம் கொடுத்த திலீப்,
“நான் எதிர்பார்த்ததை விட இந்த பொண்ணோட பேக்ரவுண்ட் டீசண்டா தான் இருக்கு பாஸ்.
இவங்களோட உண்மையான ஐடென்டிட்டி என்னன்னு தெரிஞ்சதுனால இனிமே நித்திலா நேமை யூஸ் பண்ணி நடிக்க வேண்டிய அவசியம் இருக்காதுன்னு நினைக்கிறேன்.
கிட்டதட்ட ஒரு நாலு மாசத்துக்கு முன்னாடி இந்த பொண்ணு மிஸ்ஸிங்ன்னு அவங்க ஃபேமிலில இருக்கிறவங்க போலீஸ் கம்ப்ளைன்ட் ஃபைல் பண்ணி இருக்காங்க.
டாக்டர் ரிப்போர்ட்ஸ் படி இவங்க காணாம போனதுக்கு அப்புறம் தான் இவங்களுக்கு ஆக்சிடென்ட் ஆயிருக்கு.
சோ அந்த ஆக்சிடென்ட்ல நமக்கு தெரியாத ஏதோ ஒரு மிஸ்டரி இருக்கு.
அந்த ஆக்சிடென்ட் எப்ப எங்க நடந்துச்சுன்னு நமக்கு எந்த க்ளுவும் கிடைக்கல.
அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா, போலீஸ் சைடுலையும், இந்த பொண்ணை கடத்தி வச்சு பிராத்தல் பண்ண ட்ரை பண்ணவங்களும் இவங்கள காணோம்னு தேடிக்கிட்டு இருக்காங்க பாஸ்.
இப்ப தான் நீங்க இந்த பொண்ண உங்க கேர்ள் ஃபிரண்டுன்னு எல்லாருக்கும் இண்ட்ரோ பண்ண டிசைட் பண்ணிட்டீங்கன்னு நிரஞ்சனா சொன்னா. .
அதுல எனக்கு சந்தோசம் தான். பட் நீங்க அப்படி பண்ணும் போது, அந்த பொண்ணோட ஃபேமிலி சைட்ல இந்தோ, அந்த பிராத்தல் கும்பலோ இவங்கள கண்டுபிடிச்சு ஏதாவது இஷ்யூஸ் வந்தா என்ன பண்றது?” என்று குழப்பமான கேட்டான்.
தன் கையில் இருந்த நித்திலாவின் உண்மையான அடையாளம் அடங்கிய ஃபைலில் உள்ள ஒவ்வொரு எழுத்தையும் உன்னிப்பாக கவனித்து அனைத்தையும் படித்துக் கொண்டு இருந்த ரிஷி லாஸ்டாக அதில் இருந்த அவளுடைய ஃபோட்டோவை கையில் எடுத்துப் பார்த்தான்.
அவன் தனது அம்மாவின் சமாதியில் வேண்டிக் கொண்டு இருக்கும்போது அவனுடைய மனக்கண்களுக்கு அரைகுறையாக அவளது உருவம் எப்படி தெரிந்ததோ அதேபோலத் தான் அந்த ஃபோட்டோவில் அவள் இருந்தாள்.
அந்த ஒரு விஷயத்தை வைத்தே “ஒருவேளை நிரஞ்சனா சொன்ன மாதிரி அம்மாவும் இந்த பொண்ணு கூட இருந்தா என் லைஃப் நல்லா இருக்கும்னு நினைச்சிருப்பாங்க போல.
அதான் அப்ப இவளோட ஒரிஜினல் ஐடென்டிட்டிய எனக்கு காட்டி இருக்காங்க.
எனக்கு இவளை ஃபர்ஸ்ட் டைம் பார்க்கும்போதே கண்டிப்பா இவ தப்பான வேலை செய்ற பொண்ணா இருக்க மாட்டான்னு தோணுச்சு.
இப்போ என்னோட டவுட்ஸ் எல்லாமே கிளியர் ஆயிடுச்சு.” என்று நினைத்தவன் சில நொடிகள் எதையோ தீவிரமாக யோசித்தான்.
“என்ன பாஸ் நான் பாட்டுக்கு பேசிகிட்டு இருக்கேன் நீங்க சைலன்டாவே இருக்கீங்க?
இந்த பொண்ணு நம்ம கூட தான் இருக்காங்கன்னு நம்ம பப்ளிக்கா எல்லாருக்கும் தெரியிற மாதிரி ஏதாவது பண்ணிட்டா,
அவங்கள அட்டாக் பண்றதுக்கு வேறு யாராவது பிரச்சனை பண்ணா கூட நம்ம அதை ஈஸியா சால்வ் பண்ணிடலாம்.
பட் அவங்க ஃபேமிலில இருந்து வந்து அவங்கள அனுப்ப சொல்லி கேட்டா என்ன பண்றது?
அப்புறம் அவங்கள வச்சு நம்ம போட்டு இருக்க பிளான் டோட்டலா ஸ்பாயில் ஆயிடுமே!” என்று திலீப் கவலையான முகத்துடன் அவனிடம் கேட்க,
சுடிதார் அணிந்து தனது நீண்ட கூந்தலை போனி டைலில் போட்டுக் கொண்டு அளவான ஓப்பனையுடன் அழகாக சிரித்தபடி அந்த ஃபோட்டோவில் நின்று போஸ் கொடுத்து கொண்டிருந்த நித்திலாவை அதுவரை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்த ரிஷி,
“இவளை நான் எப்ப காப்பாத்தினனோ அந்த செகண்ட்ல இருந்து இவ எனக்கு மட்டும் தான் சொந்தம்.
யாரையும் இவள என் கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு போக நான் விட மாட்டேன்.
இவ யாருன்னு நமக்கு தெரியும். ஆனா அவளுக்கு தெரியாதே.. இவ நம்ம கூட தான் இருக்கிறதும் யாருக்கும் தெரியாது.
சோ அவளுக்கா சரியாகுற வரைக்கும் இவளை பத்தி நம்ம யாருக்கும் சொல்ல போறது இல்ல.
இவள எனக்காகவே எங்க அம்மா அனுப்பி வச்சிருக்காங்கன்னு நான் நம்புறேன்.
லீகலா எனக்கும் இவளுக்கும் மேரேஜ் ஆகுற வரைக்கும், ஆல்ரெடி நமக்கு இருக்கிற எல்லா பிராப்ளம்ஸையும் நம்ம சால் பண்ற வரைக்கும் மத்தவங்கள பொறுத்த வரைக்கும் இவ நித்திலாவாகவே இருக்கட்டும்.
அந்த பொண்ணு அமெரிக்கால தானே இருக்கா.. so nothing to worry. இப்போதைக்கு அந்த பொண்ணு இந்தியா பக்கம் வராத வரைக்கும் நமக்கு எந்த பிராப்ளமும் இல்ல.” என்று உறுதியான குரலில் சொல்லி விட்டான்.
இந்த விஷயத்தில் நித்திலாவின் பெயரை பயன்படுத்துவதை தவிர வேறு வழியில்லை என்று நினைத்த திலீப்
இதனால் பிற்காலத்தில் என்ன பிரச்சனை வந்தாலும், ரிஷி உடன் இணைந்து அதை பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து அவன் சொன்ன அனைத்திற்கும் சரி என்றான்.

***
Author: thenaruvitamilnovels
Article Title: வரம் 9
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.