வரம் 5

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
ரிஷி தனது உரத்த குரலில் கத்தியவுடன் சடன் பிரேக் போட்டு காரை நிறுத்தினான் திலீப். உடனே தன் பக்கம் இருந்த கார் கதவை திறந்து வெளியில் எட்டிப் பார்த்த ரிஷி “டேய் அவ அந்த பொண்ணு தானே?

அவளுக்கு அடிபட்டிருக்குன்னு தெரிஞ்சும் ஏன் டா அவளை அப்படியே விட்டுட்டு வர்ற? உனக்கு எல்லாம் அறிவு இருக்கா இல்லையா?

ஒழுங்கு மரியாதையா போய் அவளை தூக்கிட்டு வா. அவளுக்கு என்ன ஆச்சுன்னு நான் பாக்கணும்.” என்று பதட்டமான குரலில் சொல்ல,

“ஓகே ஓகே பாஸ் கோவப்படாதீங்க! நான் போய் அந்த பொண்ணுக்கு என்ன ஆச்சுன்னு பாக்குறேன்.” என்று சொல்லிவிட்டு அவசரமாக அந்த காரில் இருந்து கீழே இறங்கிய திலீப் வேகமாக சென்று அரைகுறை ஆடையில் தரையில் அடிபட்டு மயங்கி கிடந்த அந்த இளம் பெண்ணை தூக்கிக் கொண்டு வந்து பின் சீட்டில் ரிசியின் அருகில் அமர வைத்தான்.

அந்த பெண்ணின் தலையில் இருந்து அதிகப்படியான ரத்தம் வெளியேறி கொண்டே இருக்க, தனது ஹேண்ட் கர்சிப்பை வைத்து அதை துடைத்த ரிஷிக்கு அவனையும் மீறி ஏனோ அவளை அப்படி பார்க்க கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது.

அந்தப் பெண்ணுக்காக ரிஷி வருத்தப்படுகிறான் என்று உணர்ந்தவுடன் “எப்படியாவது இந்த பொண்ண காப்பாத்திடனும். நம்ம பாஸுக்கு, இவ மேல ஏதோ ஒரு ஃபீலிங்ஸ் வந்துருச்சு போல இருக்கு!” என்று நினைத்து சந்தோஷப்பட்ட திலீப்,

அவள் கையைப் பிடித்து பல்சை செக் செய்து பார்த்துவிட்டு ‌“பாஸ் இப்ப இந்த பொண்ணோட பல்ஸ் லோ ஆகிக்கிட்டே இருக்கு!

இவளுக்கு ரொம்ப பிளட் லாஸ் ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன். உடனே இவளை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகலைன்னா செத்துருவா.” என்றான்.

“You bloody a### hole.. இவ இந்த நிலைமையில இருக்கிறதை பார்த்துட்டு அப்படியே விட்டுட்டு போகலாம்னு எப்படிடா உனக்கு தோணிச்சு?

சீக்கிரம் போய் காரை ஸ்டார்ட் பண்ணு. பக்கத்துல இருக்கிற ஹாஸ்பிடலுக்கு எவ்ளோ வேகமா போக முடியுமோ அவ்ளோ வேகமா போ.

இவளுக்கு எதுவும் ஆகக்கூடாது. நான் ஆகவும் விடமாட்டேன்.” என்று ரிஷி திலிப்பை பார்த்து கத்த,

அவன் தன் மீது கோபப்படுகிறான் என்பதையெல்லாம் கூட பொருட்படுத்தாமல் தனு அவனை ஏமாற்றிய பிறகு ரிஷிக்கு இன்னொரு பெண்ணின் மீது இப்படியான soft corner‌ வருவதே இந்த சூழ்நிலையில் பெரிய விஷயம் என நினைத்து மகிழ்ந்த திலீப் “டோன்ட் வரி பாஸ். இவளுக்கு எதுவும் ஆகாது.

இங்க பக்கத்துல ரெண்டு கிலோமீட்டர் போனா ஒரு ஹாஸ்பிடல் இருக்கு. இவள எப்படியாவது காப்பாத்திடலாம்.” என்று சொல்லிவிட்டு ஓடிச் சென்று காரில் ஏறி அதை ஸ்டார்ட் செய்து அங்கே இருந்து கிளம்பினான்.‌

இன்னும் இருள் விலகாமல் இருந்த அந்த அதிகாலை வேளையில் அவர்களுடைய விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார் காற்றை கிழித்துக் கொண்டு அசுர வேகத்தில் மருத்துவமனையை நோக்கி பறந்து கொண்டிருந்தது.

பார்ப்பதற்கு அப்பாவியைப் போல இருக்கும் ‌தன் அருகில் சுயநினைவின்றி அரைகுறை ஆடையில் மயங்கி கிடந்த பெண்ணை வாஞ்சையுடன் பார்த்தான் ரிஷி. அவளுக்காக அவன் இதயம் படபடவென்று வேகமாக துடித்தது.‌

“Oh.. God please.. இவளுக்கு எதுவும் ஆகக்கூடாது.” என்று அந்த சூழ்நிலையில் அவன் இதழ்கள் அவனையும் மீறி உதிர்க்க, அவனது கண்கள் அவள் உடலில் எங்கெங்கே காயங்கள் பட்டிருக்கின்றன என்று அலசி ஆராய்ந்து கொண்டிருந்தது.

அந்நேரம் அவன் மூளை அவனிடம் “இவ இப்படி பக்கா ஐட்டம் மாதிரி டிரஸ் பண்ணிட்டு இருக்கும்போது, இவள நம்ம ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனா நம்ம ஏதோ பண்ணி தான் இவளுக்கு இந்த மாதிரி ஆயிடுச்சுன்னு கண்டிப்பா எல்லாரும் நினைப்பாங்க.

முதல்ல இவளோட டிரெஸ்ஸ மாத்தணும். இப்படியே இவளை ஹாஸ்பிடலுக்கு எல்லாம் கொண்டு போக முடியாது.” என்று அவனிடம் வலியுறுத்த, “திலீப்.. பார்ட்டிசனை ஆன் பண்ணு!” என்று தனது கண்ணீர் குரலில் கட்டளையிட்டான் ரிஷி.

அவனும் “ஓகே பாஸ்!” என்று சொல்லிவிட்டு அந்த காரின் பார்ட்டிசனை ஆன் செய்தான். வீல்சேரில் அமர்ந்து இருந்த ரிஷி அவள் பக்கம் திரும்பினான்.‌

மயக்கமாக கிடந்த ‌அவளது தலையில் இருந்து ‌இன்னும் ரத்தம் நிற்காமல் கொட்டிக் கொண்டு இருந்தது. முதலில் அதை நிறுத்த வேண்டும் என்று நினைத்த ரிஷி சிரமப்பட்டு கீழே இருந்த ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸை எடுத்து அவளது தலையில் அவனுக்கு தெரிந்த மாதிரி கட்டுப்போட்டு விட்டான்.

அது அவனுடைய கார் என்பதால் அவனுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அங்கே இருக்கும் நிலையில் தனது ஆடைகளை எடுத்த ரிஷி மெல்ல அவள் பக்கம் நகர்ந்து சென்று அவளது கவர்ச்சியான கருப்பு நிற ட்ரான்ஸ்பரென்ட் பேபி டால் ஆடையை மெல்ல அவளது மேனியில் இருந்து அகற்றும் முயற்சியில் இறங்கினான்.

‌ அவன் லேசாக அவளுடைய ஆடையை விலக்கிப் பார்க்க, இப்போது அவளுக்கு ஆக்சிடென்ட் ஆனபோது ஏற்பட்ட காயங்களை தாண்டி யாரோ அவளை தங்களுடைய பேண்ட் பெல்டால் அடித்து காயப்படுத்தியதை போல அவளது வெண்ணிற மேனியில் ஆங்காங்கே சிவப்பாக தடித்துப் போயிருந்தது.

சில நிமிடங்களுக்கு முன் அவன் பார்த்து ரசித்த அவளுடைய அழகிய உடலை இப்படி சிதைத்தவர்கள் யார்? இந்த சில மணி நேரங்களுக்குள் அப்படி என்ன நடந்திருக்கும்? என்று அவளைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த ரிஷிக்கு இம்முறை அவளுடைய உடல் அழகை ரசிக்க ஏனோ மனம் வரவில்லை.

அவன் என்ன ஓட்டங்கள் முழுவதும் அவளை காப்பாற்ற வேண்டும், அவளை இப்படி செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்றுதான் இருந்தது சற்று முன் காமம் கொண்டு முதலில் அவளை பார்த்த ரிஷி இப்போது அவளுக்காக புதிதாக பிறந்த அக்கறையுடன் மெல்ல அவளது ஆடைகளை கலைய தொடங்கினான்.

அதை செய்யும்போது அவனையும் மீறி அவன் கைகள் நடுங்க, ஒரு பெண்ணின் ஆடையற்ற உடலை தன் வாழ்க்கையில் முதல்முறையாக அப்போதுதான் அவன் காண்கிறான் என்பதால் அவரையும் மீறி ஏதோ ஒன்று அவனை உள்ளுக்குள் இருந்து போட்டு வாட்ட, தொடர்ந்து அதை செய்ய தயங்கினான் ரிஷி.

அவன் பார்ட்டிசனை ஆன் செய்ய சொன்ன உடனேயே அந்த பெண்ணிற்கு உடைமாற்றத்தான் முயற்சி செய்வான் என்று தானாக புரிந்து கொண்ட திலீப்,

“பாஸ் அந்த பொண்ணுக்கு டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டீங்களா? இன்னும் 2 மினிட்ஸ்ல ஹாஸ்பிடல் வந்துரும். நமக்கு டைம் இல்ல.” என்று கார் ஓட்டியபடி குரல் கொடுத்தான்.

அதைக் கேட்டவுடன் அவனையும் மீறி ரிசியின் கைகள் அவள் உடலில் வேக வேகமாக வேலை செய்ய தொடங்கியது. மயங்கி கிடந்த அந்த பெண்ணின் உடலில் இருந்த கவர்ச்சியான ஆடை மாற்றி விட்டு தனது பேண்ட் மற்றும் சர்ட்டை அவளுக்கு அணிவித்தான் ரிஷி.

அனைத்தும் முடிந்தவுடன் பின் பெருமூச்சு விட்ட ரிஷி, “இப்ப பார்ட்டிஷனை ரிமூவ் பண்ணு.” என்று சொல்ல, அவன் சொன்னதை அப்படியே செய்த திலீப் அடுத்த இரண்டு நிமிடத்தில் அவர்களது காரைக் கொண்டு சென்று ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலின் வாசலில் நிறுத்தினான்.

அங்கே 24 மணி நேரமும் எமர்ஜென்சி கேசுகள் வரும் என்பதால் வாசலிலேயே சிலர் ஸ்ட்ரக்ச்சருடன் நின்று கொண்டு இருந்தார்கள். ஏற்கனவே பல பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டு தவிக்கும் ரிஷியை இப்படி பொது இடங்களுக்கு கூட்டி வந்து இன்னொரு பிரச்சனையில் சிக்க வைத்து விடக் கூடாது என்று நினைத்த திலீப்,

“பாஸ் நீங்க காருக்குள்ளையே இருங்க. முதல்ல நான் உள்ள போய் அந்த பொண்ணை எமர்ஜென்சி வார்ட்ல அட்மிட் பண்ணிட்டு வந்து அப்புறமா உங்களுக்கு கூட்டிட்டு போறேன்.” என்றான்.

இப்போது தனது ஆடையை அணிந்த உடன் பார்ப்பதற்கு அப்படியே அவன் தனது அம்மாவின் சமாதியில் இருக்கும்போது தெரிந்ததை போல ரிசியின் கண்களுக்கு அவள் நேர்த்தியானவளாகவும், நம்பிக்கைக்குறியவளாகவும் தெரிய, “ம்ம்.. அங்க போயிட்டு என்ன நடக்குதுன்னு எனக்கு அப்டேட் பண்ணிக்கிட்டே இரு.” என்றான்.

சரி என்ற திலீப் ‌அந்த பெண்ணை தூக்கி தனது தோள்களில் போட்டுக் கொண்டு அந்த ஹாஸ்பிட்டலுக்குள் நுழைய, பேஷன்ட் வந்திரிப்பதாக நினைத்து அவர்களும் அவசரமாக முன்னே வந்தார்கள்.‌

இரண்டு பேர் அந்தப் பெண்ணை தூக்கி ஸ்ட்ரக்சரில் படுக்க வைத்துக் கொண்டிருக்க, “இவங்க யாரு சார்? இவங்களுக்கு என்னாச்சு?” என்று அவனிடம் ஒரு நர்ஸ் கேட்டாள்.

“இவங்க என் வைஃப்போட சிஸ்டர் நித்திலா. சாப்ட்வேர் கம்பெனியில ஒர்க் பண்றாங்க.

நைட் ஷிப்ட் முடிஞ்சு ஸ்கூட்டில வீட்டுக்கு வந்துட்டு இருக்கும்போது இவங்களுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு.

நான் தான் போய் இவங்களுக்கு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிட்டு ஆக்சிடென்ட் ஆன ஸ்பாட்ல இருந்து கூட்டிட்டு வந்தேன். என் வைஃப்க்கு இன்ஃபார்ம் பண்ணிட்டேன்.

அவங்களும் இங்க தான் வந்துட்டு இருக்காங்க. ப்ளீஸ் சீக்கிரம் இவங்களுக்கு என்னாச்சுன்னு பாருங்க!

ஆல்ரெடி ரொம்ப பிளட் லாஸ் ஆயிடுச்சு.‌ பல்ஸ் வேற டவுன் ஆக்கிட்டே இருக்கு!” என்று தத்ரூபமாக திலீப் ஒரு பொய்யை உண்மை போலவே சொல்ல,

அங்கே இருந்தவர்களும் அவன் சொன்னதை நம்பி ‌ அந்த இளம் பெண்ணை அவசர சிகிச்சை பிரிவில் அட்மின் செய்தார்கள்.‌ ஒரு பெண்ணுடன் ஹாஸ்பிடலில் இருக்கும் போது துணைக்கு தங்களுடன் இன்னொரு பெண் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்த திலீப் உடனே அவனுடைய மனைவி நிரஞ்சனாவிற்கு கால் செய்து அவளை அந்த ஹாஸ்பிடலுக்கு வர சொன்னான்.

அவளும் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு அங்கே வருவதாக சொல்லிவிட, காரில் தனியாக அமர்ந்திருந்த ரிஷி அந்த பெண்ணுக்கு என்ன ஆனது? அவள் உயிர் பிழைப்பாளா? தன்னால்தான் அவளுக்கு இப்படி ஒரு நிலைமையா? என அவளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான்.‌

சில நிமிடங்களுக்கு பிறகு அங்கே நிரஞ்சனா வந்துவிட, அவளிடம் நடந்த அனைத்தையும் சொன்ன திலீப் “இப்போதைக்கு மத்தவங்கள பொருத்தவரைக்கும் இங்க இருக்கிற தான் உன் தங்கச்சி நித்திலா.

இதுவரைக்கும் யாருமே நம்ம நித்திலாவ பார்த்ததே இல்ல.

அதனால நாளைக்கு இவள கூட்டிட்டு போய் நாங்க இவ‌‌ தான் நித்திலான்னு எல்லார் கிட்டயும் இண்ட்ரடியூஸ் பண்றதுக்கு கூட சான்ஸ் இருக்கு.

சோ நீ எல்லாத்துக்கும் ரெடியா இருந்துக்கோ.‌‌ மத்தவங்க எல்லாரையும் விட நீதான் கரெக்டா பர்பாமன்ஸ் பண்ணனும்.

நீ கொஞ்சம் சொதப்புனாலும், மொத்தமா அந்த இரத்தவெறி புடிச்ச பிசாசுங்க கிட்ட நம்ம எல்லாரும் மாட்டிக்குவோம்.” என்றான்.

“எனக்கு புரியுது திலீப். ரிஷி சார் உனக்கும் எனக்கும் நிறைய ஹெல்ப் பண்ணி இருக்காரு.

அவர் மட்டும் இல்லனா நமக்கு கல்யாணமே ஆகியிருக்காது. இப்ப நித்திலா அமெரிக்கால இருக்கா.

நீ சொன்ன மாதிரி இதுவரைக்கும் அவளை யாரும் பார்த்ததும் இல்லை. இவளை பாக்குறதுக்கும் ஒரு சாயில்ல என் தங்கச்சி மாதிரி தான் இருக்கா.

அதனால யார் கிட்ட இவளை காமிச்சு நம்ம நித்திலான்னு சொன்னாலும் கண்டிப்பா நம்புவாங்க.

ரிஷி சாருக்கு ஹெல்ப் பண்றதுக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன். இந்த பொண்ணுக்கு மட்டும் எந்த பிரச்சனையும் இல்லாம இவ சரியாகி வந்துட்டா போதும்.

இவளை வச்சு எப்படியாவது இருக்கிற ப்ராப்ளம் எல்லாத்தையும் சால்வ் பண்ணிடலாம்.” என்று நிரஞ்சனா சொல்ல, இப்படி சூழ்நிலையை புரிந்து கொண்டு தனக்காகவும் தன்னுடைய பாஸுற்க்காகவும் தனது மனைவி இப்படி ஒரு ரிஸ்கை எடுக்க துணிந்ததால் மகிழ்ந்த திலீப் அவளை கட்டிப்பிடித்து “தேங்க்ஸ் பேபி!” என்றான்.

காரில் அமர்ந்திருந்த ரிஷி அவளுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் அங்கே இருப்புக் கொள்ளாமல் திலீப்பிற்கு கால் செய்து “அவ இப்ப எப்படி இருக்கா?

டாக்டர் ஏதாவது சொன்னாரா? அவளுக்கு ரொம்ப பிளட் லாஸ் ஆகி இருந்துச்சே.. பிளட் வேணும்னா சொல்லு டா..

நான் என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லி உடனே அரேஞ்ச் பண்றேன்.” என்று அக்கறையுடன் விசாரிக்க, “அந்த உன்னோட பிளட் குரூப் ஒ பாசிட்டிவாம் பாஸ்.

அது இந்த‌ ஹாஸ்பிடல் பிளட் பேங்கிலயே இருக்குன்னு அவங்களே அரேஞ்ச் பண்ணிட்டாங்க.

தலையில அடிபட்டு இருக்கிறதுனால அவளுக்கு உடனே ஒரு சர்ஜரி பண்ணனுமாம். கவுண்டர்ல பே பண்ணிட்டா சர்ஜரி உடனே பண்ணிடுவாங்கன்னு சொன்னாங்க.

நான் இப்ப அந்த பில் அமௌன்ட் செட்டில் பண்ண தான் கீழ போகலாம்னு இருந்தேன். நிரஞ்சனா இப்ப இங்க தான் இருக்கா.

டாக்டர் கேட்கும் போது அந்த பொண்ணை நிரஞ்சனாவோட சிஸ்டர் நித்திலானு பொய் சொல்லிட்டேன்.

சோ நாங்க ரெண்டு பேரும் இங்க இருந்து அவள பாத்துகிறோம்.

நீங்க அவரை நினைச்சு கவலைப்படாதீங்க. நான் போய் முதல்ல பில்லை செட்டில் பண்றேன்.

அப்ப தான் டாக்டர்ஸ் பிராப்பர ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணுவாங்க.” என்று சொல்லிவிட்டு அவனது அழைப்பை துண்டித்தான் திலீப்.

சில நிமிடங்களுக்கு பிறகு அந்த பெண்ணிற்கு சர்ஜரியை வெற்றிகரமாக செய்து முடித்த மருத்துவர்கள் அந்த ஐசியூ வார்டில் இருந்து வெளியில் வந்து நிரஞ்சனா மற்றும் திலீபிடம்,

“பேஷன்ட் ஓட கண்டிஷன் இப்ப ஸ்டேபிளா இருக்கு. அவங்களோட உயிருக்கு இனிமே எந்த ஆபத்தும் இல்ல.

பட் இன்னும் அவங்க ரெண்டு மூணு நாள் அப்சர்வேஷன்ல இருக்கணும்.

அவங்களுக்கு கான்ஷியஸ் வந்ததுக்கு அப்புறமா நீங்க அவங்கள போய் பாக்கலாம்.” என்று சொல்லிவிட்டு சென்றார்.

அதை உடனே திலீப் ரிஷிக்கு கால் செய்து சொல்ல, அந்த கணப்பொழுதில் ஏதோ ஒரு திட்டத்தை யோசித்த ரிஷி,

“அதான் இனிமே அவ உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையே.. அப்புறம் எதுக்கு இங்க இருக்கனும்?

நான் ஆல்ரெடி என் ஃபிரண்டு கௌதம் கிட்ட எல்லாத்தையும் கிளியரா பேசிட்டேன்.

நம்மளோட கெஸ்ட் ஹவுஸில வச்சு ‌ யாருக்கும் தெரியாம அவளுக்கு ட்ரீட்மென்ட் பண்றது தான் safe.

நான் கௌதம் கேட்ட கெஸ்ட் ஹவுஸில எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டு எங்க ஆம்புலன்ஸ் அனுப்ப சொல்றேன்.

நீ அந்த பொண்ண ஹாஸ்பிட்டல்ல இருந்து உடனே ஷூஃப்ட் பண்ணு.” என்று கட்டளையிட்டான்.

“பட் பாஸ்.. அவளுக்கு இன்னும் கான்ஷியசே வரல.

அதுக்குள்ள எப்படி வேற ஹாஸ்பிடலுக்கு அவளை ஷிஃப்ட் பண்றேன்னு சொன்னா இங்கே டிஸ்டார்ஜ் பண்ணுவாங்க?” என்று திலீப் கேட்க,

“அது எல்லாம் எனக்கு தெரியாது. நீ என்ன பண்ணுவியோ பண்ணு.

உன்னால ப்ராப்பரா டிஸ்டாச் பண்ணி அவளை வெளியே கூட்டிட்டு வர முடியலன்னா, யாருக்கும் தெரியாம திருட்டுத்தனமா கூட்டிட்டு வா.

எல்லாத்தையும் என்னால உனக்கு எக்ஸ்பிளைன் பண்ணிட்டு இருக்க முடியாது திலீப்.

இன்னும் உனக்கு ஒரு மணி நேரம் தான் டைம். அதுக்குள்ள அவளை எப்படியாவது அந்த ஹாஸ்பிடல்ல இருந்து safe-ஆ நம்ம கெஸ்ட் ஹவுஸ்க்கு ஷிஃப்ட் பண்ற.

நீ எல்லாத்தையும் ரெடி பண்றதுக்குள்ள கௌதமோட ஹாஸ்பிடல் ஆம்
புலன்ஸ் ஹாஸ்பிடலுக்கு வெளிய வெளியே ரெடியா இருக்கும்.” என்று அவனுக்கு இன்ஸ்ட்ரக்ஷன்களை மட்டும் கொடுத்துவிட்டு அந்த அழைப்பை துண்டித்தான் ரிஷி.

***​
 

Author: thenaruvitamilnovels
Article Title: வரம் 5
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.