வரம் 25

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அத்தியாயம் 45

“என்ன பண்ணிட்டு இருக்க ரிஷி?” என்று ஆனந்தகுமார் கோபமாக அவனை பார்த்து கேட்க, மீட்டிங் ஸ்டார்ட் ஆக இன்னும் இரண்டு நிமிடங்கள் பாக்கி இருந்தாலும் கூட அதற்குள் முக்கியமான விஷயத்தை சொல்ல வேண்டும் என்று நினைத்த ரிஷி நேரடியாக தன் அப்பாவிற்கு பதில் சொல்லாமல் தன் முன்னே இருந்து மைக்கில,

“ஹலோ எவ்ரி ஒன்! வெரி குட் மார்னிங்! Nice to see you all after so far. I am really very happy today.

Because today I am going to introduce someone special. She is my everything now.” என்றான்.

அவன் என்ன சொல்லப் போகிறான் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அனைவரும் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, ரேகாவும், தீரஜூம் ரிசியை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தார்கள்.

“meet my lady love nitila! இவ இப்ப என்னோட மடியில இருக்கா. இதைப் பார்க்கிற உங்களுக்கு நான் தான் என்னவோ அவளை தாங்கிட்டு இருக்கிற மாதிரி தெரியலாம்.

பட் உண்மை என்னன்னா, எங்க அம்மாவை திரும்பி வந்த மாதிரி என் கூட இருந்து என் நித்திலா தான் என்னை நல்லா பார்த்துக்கிறா. நான் மிஸ் தனு கூட ரிலேஷன்ஷிப்ல இருந்ததும், எங்க ரெண்டு பேருக்கும் பிரேக்கப் ஆனதும் உங்க எல்லாருக்கும் ஆல்ரெடி தெரிஞ்சிருக்கும்.

அதுக்கு அப்புறம் தான் my sweet angel நித்திலா என் லைஃப்ல வந்தா. இவ வந்ததுக்கு அப்புறமா டோட்டலா என் லைஃப் சேஞ்ச் ஆயிடுச்சு. உங்க எல்லாருக்கும் இவளை நான் இண்ட்ரடியூஸ் பண்ணனும்னு நெனச்சிட்டு இருக்கும்போது, திடீர்னு இவளுக்கு ஒரு ஆக்சிடென்ட் நடந்துருச்சு.

அந்த மேஜர் ஆக்ஸிடென்ட்ல இவளோட vocal cord-ல அடிபட்டு அது டேமேஜ் ஆனதுனால இவளால பேச முடியாம போயிடுச்சு. இன்னும் இவ டோட்டலா ரெக்கவர் ஆகல.

இருந்தாலும் ஒரு சிலரால இப்ப இவளை எல்லாருக்கும் இண்ட்ரடியூஸ் பண்ண வேண்டிய சிச்சுவேஷன் வந்ததுனால வேற வழி இல்லாம ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருந்த என் கேர்ள் ஃபிரண்டை இப்ப நான் இங்க கூட்டிட்டு வந்திருக்கேன்.” என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தால் ரிஷி.

அவன் இவ்வளவு துணிச்சலாக இதுவரை எப்போதும் பேசியது இல்லை என்பதால் அங்கிருந்து அனைவரும் அவனை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் ரிஷியின் கைகளுக்கு மீண்டும் இந்த கம்பெனி சென்று விடக் கூடாது என்று தெளிவாக இருந்த ஆனந்தகுமார் ஏடாகூடமாக அவனிடம் நிறைய கேள்விகள் கேட்டார்.

இப்போது ரிஷி இருக்கும் நிலையை வைத்து அவனால் இவ்வளவு பெரிய பொறுப்பை சமாளிக்க முடியுமா? என்ற கேள்வியை தொடர்ந்து அவனது குடும்பத்தினர்களே எழுப்பிக் கொண்டிருந்ததால், அங்கிருந்த இன்வெஸ்டர்கள் போர்டு மெம்பர்கள் என அனைவரும் ரிசியை சந்தேக கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த நேரத்தில் அவர்கள் யாரும் எதிர்பார்த்திடாத ஒரு விஷயம் நடந்தது. ரிஷி உட்பட அனைவரும் அங்கே நடப்பவற்றை விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

தொடரும்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)
 

Author: thenaruvitamilnovels
Article Title: வரம் 25
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.