அத்தியாயம் 42
திலீப் ரிஷியிடம் “இந்த பொண்ணு பேசினா எல்லாமே தெரிஞ்சிடுமே.. அதுக்கு என்ன பண்ணப் போறோம் பாஸ்?” என்று கேட்க, தன் அருகில் அமர்ந்து இருந்த நித்திலாவை பார்த்தபடி சில நொடிகள் எதையோ யோசித்த ரிஷி “அவ பேசினா தானே பிரச்சனை.. இனிமே அவ பேச மாட்டா.” என்றான்.
“அது எப்படி அவ பேசாம இருப்பா சார்?” என்று நிரஞ்சனா கேட்க, “அவ உண்மையா இருந்தா பேசமாட்டாள்ல..!!” என்றான் ரிஷி. “ஆனா இந்த பொண்ணு ஊமை இல்லையே.. எப்படி இவ பேசாம நம்ம பாத்துக்குறது?” என்று திலீப் கேட்க, இவர்கள் மூவரும் என்ன பேசுகிறார்கள் என புரியாமல் மாறி மாறி அனைவரின் முகத்தையும் குழப்பமான முகத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் நித்திலா.
அவள் கையை பிடித்துக் கொண்ட ரிஷி “நான் இப்ப சொல்ல போறத நீ careful-ஆ கேக்கணும் ஓகேவா?” என்று கேட்க, “ம்ம்... கேட்கிறேன்.” என்றாள் அவள்.
“இப்ப நம்ம எங்க போறோம்னு தெரியுமா?” என்று ரிஷி கேட்க,
“தெரியலையே.. நானும் தூங்கி எந்திரிச்சதுல இருந்து கேட்டுகிட்டே இருக்கேன். நீ தான் சொல்லவே மாட்டேங்கறியே டிம்பிள்.. அப்புறம் எனக்கு எப்படி தெரியும்?” என அப்பாவியாக கேட்டாள் அவள்.
“ஆமா ஆமா, இப்ப சொல்றேன் நல்லா கேட்டுக்கோ. இப்ப ஸ்ட்ரெயிட்டா நம்ம நம்மளோட ஆஃபீஸ்க்கு போக போறோம்.
அப்புறம் அங்க இருந்து வீட்டுக்கு போய் எல்லாரையும் மீட் பண்ற மாதிரி சுச்சுவேஷன் கூட வரலாம். என் ஃபேமிலி மெம்பர்ஸ்சை உனக்கு நான் இன்னைக்கு இன்டர்வியூஸ் பண்ண போறேன்.
நீ அவங்க முன்னாடி குட் கேர்ள்லா இருக்கணும். ஓகேவா?” என்று ரிஷி கேட்க,
“நான் குட் கேர்ள் தான். ஆனா குட் கேர்ள்லா இருக்கறதுனா எப்படி?” என்று கேட்டுவிட்டு திருதிருவென அவனைப் பார்த்து முடித்தாள் நித்திலா.
“சுத்தம்!” என்று வெளிப்படையாக புலம்பிவிட்டு திலீப் பெருமூச்சு விட, “நான் சொல்றேன் அம்மு.. நீ என்ன பண்ணனும் பண்ண கூடாதுன்னு எல்லாத்தையுமே நான் சொல்றேன்.
நான் சொல்றது எல்லாத்தையும் நீ கரெக்டா ஃபாலோ பண்ணா தான் நீ குட் கேர்ள். ஓகேவா?” என்று ரிஷி அவள் கண்களை பார்த்துபடி கேட்டான். அதற்கு “ஓகே!” என்றுவிட்டு தலையாட்டினாள் அவள்.
“முதல் விஷயம், நீ எப்பவும் நிரஞ்சனா சிஸ்டர் கூட தான் இருக்கணும். எங்க போனாலும் அவங்க கூட தான் போகணும்.
வேற யாராவது உன்னை எங்கேயாவது தனியா வர சொல்லி கூப்பிட்டாங்கன்னா நீ போகவே கூடாது.” என்று ரிஷி சீரியஸாக தன் முகத்தை வைத்துக் கொண்டு செல்ல, “ம்ம்.. போக மாட்டேன். யார் கூப்பிட்டாலும் என் டிம்பிளை விட்டுட்டு எங்கே போக மாட்டேன்.” என்றுவிட்டு சிரித்த நித்திலா இப்போது ரிஷியின் கன்னங்களில் அவன் சிரிக்காததால் குழி விழவில்லை என்றாலும் அவன் கன்னத்தில் தன் ஆள்காட்டி விரலை வைத்து அழுத்தி விளையாடிக் கொண்டிருந்தாள்.
“இப்படி சின்ன குழந்தை மாதிரி எல்லாத்தையும் விளையாட்டா பார்க்கிறவ கிட்ட நான் என்ன சொல்லி புரிய வைக்கிறது? இவளை எப்படி அந்த பிசாசுங்க கிட்ட இருந்து காப்பாத்துறது?” என்று நினைத்து உள்ளுக்குள் வருத்தப்பட்டாலும் வெளியில் தன் முகத்தை சாதாரணமாக வைத்திருந்த ரிஷி,
“இப்ப நான் சொல்ல போறது தான் மோஸ்ட் இம்பார்டன்ட்டான விஷயம். நீ யார் கிட்டயும் பேசவே கூடாது.” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த நித்திலா “யார் கிட்டயும்னா?” என்று கேட்க, “இப்போல இருந்து நீ யார் கிட்டயுமே எப்பயுமே பேசவே கூடாது.
என் ஃபேமிலில இருக்கிறவங்களுக்கு உன்ன மாதிரி எனக்கு ஒரு கியூட்டான ஃபிரிண்ட் இருக்கிறது தெரிஞ்சா சுத்தமா பிடிக்காது. சோ அவங்க ஏதாவது சொல்லி உன்ன திட்டிக்கிட்டே இருப்பாங்க.
உன்னை என் கிட்ட இருந்து பிரிச்சு அனுப்ப பாப்பாங்க. அதனால நீ யார் கிட்டயும் பேசாம அமைதியா இருந்தா எந்த பிரச்சனையும் வராது. அதுக்கு தான் சொல்றேன்.” என்ற ரிஷி அவளுக்கு புரியும்படி விளக்கினான்.
“நான் யார் கிட்டயும் பேசக் கூடாதுன்னா எனக்கு ஏதாவது வேணும்னா நான் எப்படி மத்தவங்க கிட்ட கேட்கிறது? அப்ப இனிமே நான் சாக்லேட் வேணும், பிஸ்கட் வேணும், பிரியாணி சாப்பிடணும்னு எல்லாம் கேக்கவே கூடாதா?
நான் ஏதாவது பேசினாலே என்னை எல்லாம் அடிப்பார்களா? என்ன ரிசி? நான் பாவம் தானே.. எனக்கு ஏன் இப்படி எல்லாம் பனிஷ்மென்ட் கொடுக்குற?” என்று சோகமாக கேட்டாள் நித்திலா.
“இல்ல இல்ல அப்படி இல்ல. நீ பேசக் கூடாதுன்னா, பேசவே கூடாதுன்னு இல்ல. மத்தவங்க முன்னாடி நீ யார் கிட்டயும் எதுவும் பேசக் கூடாது.
நானே உன் பக்கத்துல இருந்தாலும், நம்ம கூட உன் திலீப் அண்ணாவையும், நிரஞ்சனா அக்காவையும் தவிர வேற யார் இருந்தாலும் நீ வாய தொறந்து பேசவே கூடாது.
உனக்கு ஏதாவது எங்க கிட்ட கேட்கணும்னா, யாரும் இல்லாதப்ப மெதுவா கேளு. இல்லனா தனியா கூட்டிட்டு போய் பேசு.
மத்தவங்க கிட்ட நான் உன்னால வாய் பேச முடியாதுன்னு சொல்ல போறேன். சோ நீ உனக்கு பேச்சு வராத மாதிரி நடிக்கணும்.
உனக்கு பேசவே தெரியாதுன்ற மாதிரி இருக்கணும். நான் சொல்றது உனக்கு புரியுதா அம்மு?” என்று ரிஷி கேட்க, அவள் எல்லாம் புரிந்தது என்பதைப் போல வேக வேகமாக தன் தலையை ஆட்டினாள்.
“தலைய மட்டும் வேகமா ஆட்டுறா. அங்க போய் என்ன பண்ண போறாளோ!” என்று நினைத்த ரிசி அவள் தலையை இரண்டு பக்கத்திலும் இருந்து பிடித்துக் கொண்டு “ஓவரா மண்டையை ஆட்டாத. ஏற்கனவே தலையில் அடிபட்டு நட்டு லூசாயிடுச்சு.
மறுபடியும் நீ இப்படி ஆட்டிக்கிட்டே இருந்தா உனக்கு தலை வலி தான் வரும். சைலண்டா, இனிமே இருக்கிற இடம் தெரியாம இருக்கிறது எப்படின்னு நீ பழகிக்கணும்.
எல்லாம் நம்ம வீட்டுக்கு போற வரைக்கும் தான். அங்க போய்ட்டா நீ உனக்கு புடிச்ச மாதிரி ஜாலியா இருக்கலாம்.
உன்னை யாரும் எப்பயும் டிஸ்டர்ப் பண்ணவே மாட்டாங்க. ஓகே?” என்று கேட்க, “ஓகே டிம்பிள்!” என்ற நித்திலா அவனை அணைத்துக் கொண்டாள்.
அடுத்த அரை மணி நேரத்தில் அவர்களது கார் ஒரு பெரிய 18 மாடி கட்டிடத்தின் முன்னே சென்று நின்றது.
ரிஷி வீல் சேரில் காரில் இருந்து கீழே இறங்க, அவன் அருகில் சென்று நின்று கொண்ட நித்திலா ரிஷி அவளை பேசக் கூடாது என்று சொல்லி இருப்பதால் தன் மனதிற்குள்ளேயே “இந்த பில்டிங் என்ன இவ்வளவு பெருசா இருக்கு!" என நினைத்துக் கொண்டாள்.
முத்தங்கள் தொடரும் 💋
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

Author: thenaruvitamilnovels
Article Title: வரம் 22
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.