
இரவு 11 மணி அளவில் சாலையில் மிதமான வேகத்தில் ஒரு கார் எந்த சரணமும் இன்றி சென்று கொண்டிருந்தது.
அமைதியான அந்த இரவு நேரத்தில் அவர்கள் ஊருக்கு வெளியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்ததால் அங்கே பெரிதாக வாகன போக்குவரத்து இல்லை.
30களின் தொடக்கத்தில் இருந்த ஒரு இளைஞன் காரை ஓட்டிக் கொண்டு செல்ல,
அவனுக்கு பின்னே இறுக்கமான முகத்துடன் தனக்கென ஸ்பெஷலாக டிசைன் செய்யப்பட்ட பின் சீட்டில் சாய்ந்து தன் கண்களை மூடி அமர்ந்து இருந்தான் ஒருவன்.
அந்த இரவு நேரத்திலும் கூட, இந்த மோசமான இருண்ட உலகத்தை பார்க்க விரும்பாமல் அவன் ஒரு பெரிய கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு இருந்தான்.
அது அவனுடைய பாதி இருக்கமான முகத்தை மறைத்து இருந்தாலும், அதையும் தாண்டி சவரம் செய்யப்படாத அவனுடைய குறுந்தாடியுடன் அவனுடைய பாதிமுகம் காரின் எரிந்து கொண்டிருந்த மெல்லிய லைட் வெளிச்சத்தில் கூட பிரகாசமாக மின்னியது.
கார் ஓட்டிக் கொண்டு இருந்தவன் மிரர் வழியாக தனக்கு பின்னே அமர்ந்திருந்தவனை பார்த்து “பாஸ்.. எங்க போறதுன்னு தெரியாம நானும் ரொம்ப நேரமா சிட்டிய சுத்தி ட்ரைவ் பண்ணிக்கிட்டே இருக்கேன்.
உங்களுக்கு மூடு சரி இல்லனா சொல்லுங்க.. அப்படியே பக்கத்துல எங்கயாவது ஒரு ட்ரிப் போயிட்டு வரலாம்.
பட் எனக்கு என்னமோ ஒரு தடவையாவது நீங்க டாக்டர் சொன்னத ட்ரை பண்ணி பாக்கலாம்ன்னு தோணுது.
நீங்க இதுவரைக்கும் தனு மேடம் கூட எப்பயும் கிளோசாவே இருந்ததில்லை.
இதுல உங்களுக்கு இப்படி ஆனதுக்கு அப்புறமா அவங்க சுத்தமா உங்கள கண்டுக்கவே மாட்டேங்கிறாங்க.
சுச்சுவேஷன் ஆல்ரெடி அவுட் ஆஃப் கண்ட்ரோல்ல போயிட்டு இருக்கு பாஸ்.
இதுக்கு மேலயும் நம்ம டிலே பண்ண முடியாது. டாக்டர் சொன்னத ட்ரை பண்ணி பாக்குறதுல என்ன தப்பு இருக்கிற மாதிரி எனக்கு தெரியல.
உங்களுக்கு ஓகேன்னு சொன்னீங்கன்னா, நான் உங்க டேஸ்டுக்கு தகுந்த மாதிரி எல்லாத்தையும் அரேஞ்ச் பண்ணி கொடுக்கிறேன்..” என்று மெல்லிய குரலில் செல்ல,
தனது தலையை மட்டும் லேசாக உயர்த்தி அவனை பார்த்த ரிஷி “இந்த விஷயத்துல என்ன விட நீ ரொம்ப curious-ஆ இருக்குற மாதிரி தெரியுது!
எனக்கு தெரியாம பார்ட் டைமா இந்த வேலை தான் பாத்துட்டு இருக்கியா?
நீ இவ்ளோ கான்பிடன்ட்டா பேசுறத பாத்தா உனக்கு நிறைய கிளைண்ட்ஸ் இருப்பாங்க போலயே!” என்று நக்கலாக கேட்டான்.
“ஐயையோ பாஸ்.. சத்தியமா நான் அப்படியெல்லாம் இல்ல.
என் வைஃப் முன்னாடி மட்டும் இப்படி எல்லாம் நீங்க சும்மா விளையாட்டுக்கு பேசினா கூட, அவ கோச்சிக்கிட்டு என்ன டைவர்ஸ் பண்ணிட்டு போய்டுவா..
என் ஃபிரண்ட்ஸ் ஒன்னு ரெண்டு பேருக்கு அடிக்கடி ஸ்டிரஸ் ஆனா இப்படி போற ஹாபிட் இருக்கு!
எப்பயாவது கம்பெனி கொடுக்க என்னையும் வர சொல்லி கூப்பிடுவாங்க.
பட் நான் நிரஞ்சனாவை தவிர இன்னொருத்திய என் கனவுல கூட நினைச்சு பார்க்க மாட்டேன்.
சோ ஒரு தடவை கூட, அவங்க கூட அந்த மாதிரி இடத்துக்கு எல்லாம் நான் போனதே இல்லை பாஸ்.
டாக்டர் வேற இதை தவிர வேற ஆப்ஷன் இல்லைன்னு சொல்லிட்டாரு.
இதை விட்டா மறுபடியும் உங்களுக்கு ஃபீலிங்ஸ் வர வைக்கிறதுக்கு வேற என்ன பண்றதுன்னு எனக்கும் தெரியல பாஸ்.
அதான் ட்ரை பண்ணி பார்க்கலாம்னு சொன்னேன். அதுக்காக எல்லாம் நீங்க என்னை தப்பா நினைக்க கூடாது!” என்றான் திலீப்.
அவன் சொன்னதற்கு எந்த பதிலும் சொல்லாமல் மௌனம் காத்த ரிஷி எதையோ தீவிரமாக யோசித்தான்.
அவனுக்குள் ஆயிரம் என்ன ஓட்டங்கள் இருந்தாலும், அவனுடைய மன கண்களில் அவன் அம்மா இறப்பதற்கு முன்பாக,
“உன் தங்கச்சியை நான் உன்னை நம்பி தான் விட்டுட்டு போறேன் ரிஷி.
இந்த பிணம் தின்னி கூட்டத்துக்கு நடுவுல உன்னால மட்டும் தான் அவளை காப்பாத்த முடியும்.
இந்த அம்மா கண்ண மூடுறதுக்குள்ள உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சிரணும்னு நினைச்சேன்.
ஆனா இவ்வளவு சீக்கிரமா உன்னை விட்டுட்டு போகணும்னு விதி இருந்திருக்கு போல..
இதுக்கு மேல என்னால அதை மாத்த முடியாது. என்ன நடந்தாலும், உன் தங்கச்சியையும், நானும் உங்க தாத்தாவும் நாங்க கட்டி காப்பாத்தின இந்த சொத்தையும் நீ எப்போதும் கை விட்டுடக் கூடாது.
என் பையன் நீ எல்லாத்தையும் பத்திரமா பாத்துக்குவேன்ற நம்பிக்கையில தான் நான் கண்ண மூட போறேன்.
எனக்கு அப்புறம் நீ தான் எல்லாமாவும் இருந்து நம்ம பிசினஸ் சாம்ராஜ்யத்தை காப்பாத்தணும்.
உனக்கு அப்புறம் இது உன் குழந்தை வரைக்கும் தொடரனும்.” என்று சொல்லிவிட்டு அனைத்தையும் அவன் கட்டிக் காப்பான் என்று அவனிடம் இருந்து சத்தியம் வாங்கிக் கொண்டது வேறு அவன் மனசுக்குள் ஓடிக் கொண்டே இருந்தது.
அனைத்தையும் நினைத்துப் பார்த்தவனுக்கு இறுதியாக வெளிநாட்டில் படித்துக் கொண்டு இருக்கும் தனது தங்கையின் அழகிய சிரித்தமுகம் ஞாபகம் வர,
“ஓகே” என்ற ஒற்றை வார்த்தை மட்டும் வெறுமையான குரலில் அவன் வாயில் இருந்து வந்தது.
அவன் அதை மெதுவாக சொல்லி இருந்ததால், அரைகுறையாக அதை கேட்டிருந்த திலீப் “இப்ப என்ன பாஸ் சொன்னீங்க?
உங்களுக்கு ஓகேவா? இப்பவே என் ஃபிரண்டுக்கு கால் பண்ணி நான் லொகேஷன் கேட்கவா?
உங்களுக்கு இது எல்லாம் பிடிக்காதுன்னு எனக்கு தெரியும்.
சோ உங்களுக்காக பிரஷ்ஷா ஏதாவது பொண்ணு கிடைக்கிறதுக்கு சான்ஸ் இருக்கான்னு நான் அவங்க கிட்ட கேட்டுப் பார்க்கிறேன்.
அப்படி இருந்தா இன்னும் ரொம்ப நல்லது பாஸ்.” என்று உற்சாகமான குரலில் சொல்ல,
அதற்கும் ஒற்றை வார்த்தையில் “ம்ம்..!!” என்று பதில் சொன்னான் ரிஷி.
இத்தனை நாட்கள் போராட்டத்திற்கு பிறகு தனது பாஸ் ஒரு வழியாக இன்று இதற்கு ஓகே சொல்லி விட்டதால் இனி தங்களுக்கு நல்ல காலம் தான் என்று நினைத்து சந்தோஷப்பட்ட திலீப் உடனே காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு தனது நண்பன் ஒருவனுக்கு கால் செய்தான்.
திலீப் அவனிடம் “மச்சான் இப்பவே எனக்கு ஒரு பிரஷ்ஷானா பொண்ணு வேணும்.
பாக்குறதுக்கு அவ நல்லா டின் பீர் மாதிரி கும்முனு இருக்கணும்.
அவள பாத்தாலே மூடு வரணும். ஒரு 20ல இருந்து 30 வயசுக்குள்ள இருக்கிற பொண்ணா இருக்கணும்.
அந்த மாதிரி ஏதாவது பொண்ணை உன்னால அரேஞ்ச் பண்ணி தர முடியுமா?
எவ்ளோ செலவானாலும் பரவால்ல. எனக்கு தெரிஞ்ச ஒருத்தருக்கு இன்னைக்கு நைட்டு ஒரு பொண்ணு வேணும்.” என்று கேட்க,
“அது எல்லாம் ஒன்னும் பெரிய விஷயம் இல்ல டா. கேட்டா உடனே அரேஞ்ச் பண்ணி கொடுத்துடுவானுங்க.
நமக்கு இந்த மாதிரி விஷயத்துக்கு எல்லாம் எல்லா பக்கமும் ஆள் இருக்கு.
ஆனா எனக்கு என்ன டவுட்னா.. உனக்கு தெரிஞ்சா எவனோ ஒருத்தனுக்காக நீ பொண்ண உஷார் பண்ணி கொடுக்க சொல்றியா..
இல்ல உன் ஃபிரண்டுக்குன்னு சொல்லி புது ஃபிகரா தனியா தள்ளிட்டு போய் நீயே யாருக்கும் தெரியாம அவ கூட என்ஜாய் பண்ணனும்னு கேக்குறியா?” என்று கிண்டலாக கேட்டான் லைனில் இருந்தவன்.
“டேய் நேரம் காலம் தெரியாம லூசுத் தனமா பேசாத டா.
நான் ஒன்னு உன்ன மாதிரி கிடையாது. எனக்கு என் பொண்டாட்டி போதும்.
இப்ப யாருக்காக நான் இதை கேட்கிறேனோ, அவர பத்தி டீடெயில்ஸ் என்னால சொல்ல முடியாது.
நீ எனக்கு பர்சனலா இத அரேஞ்ச் பண்ணி குடு. அந்த பொண்ண நாங்க சொல்ற இடத்துக்கு தான் கூட்டிட்டு வரணும்.
எல்லாமே சீக்ரட்டா நடக்கணும். அந்த பொண்ணுக்கே வரப்போறவர் யாருடைய தெரியவே கூடாது.
அந்த பொண்ணை அரேஞ்ச் பண்ணி கொடுக்கிற உங்களுக்கும் தெரிய கூடாது.
இது ரொம்ப ரொம்ப கான்ஃபிடன்ஷியல். அதான் வெளிய போய் வேற யார் கிட்டயும் கேட்காம நான் உன் கிட்ட ஹெல்ப் கேட்கிறேன்.
பணத்த பத்தி எல்லாம் பிரச்சன இல்ல. எவ்ளோ செலவானாலும் பரவால்ல.
பட் நாளைக்கு விடிகிற வரைக்கும் அந்த பொண்ணு எங்க கண்ட்ரோல்ல தான் இருக்கணும்.
விடிஞ்சதும் உங்க ஆளுங்க அந்த பொண்ண கூட்டிட்டு போகலாம்.” என்று திலீப் தன் நண்பனிடம் சீரியஸாக சொல்ல,
அவன் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று சொல்கிறான் என்றாலே கண்டிப்பாக அது அவனுக்காக இருக்காது என்று புரிந்து கொண்ட அவனுடைய நண்பனும்,
“ஓகே டா, ஒன்னும் பிரச்சனை இல்ல. நீ எங்கன்னு லோகேஷன் மட்டும் அனுப்பு.
நீங்க சொல்ற டைம்க்கு அங்க பொண்ணு இருக்கும். அதுக்கு நான் பொறுப்பு.
பேமெண்ட் டீடெயில்ஸ் எல்லாம் நான் புரோக்கர் கிட்ட கேட்டுட்டு உனக்கு சென்ட் பண்றேன், bye.” என்று சொல்லிவிட்டு அந்த அழைப்பை துண்டித்தான்.
அனைத்தையும் பேசி முடித்து ஒரு பெண்ணுடைய ஃபோட்டோவை பார்த்து அவளை தனது boss-ற்க்காக கன்ஃபார்ம் செய்த திலீப்,
ரிஷி அவளுடன் முதல் முறையாக தனது இரவை கழிப்பதற்காக 10 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து அவளை வாங்கினான்.
பின் திரும்பி ரிஷியை பார்த்து “பாஸ்.. நம்மளோட பிரைவேட் கெஸ்ட் ஹவுஸ்க்கு அந்த பொண்ணை கூட்டிட்டு வர சொல்றதா?” என்று திலீப் கேட்க,
வழக்கம்போல அதற்கும் “ம்ம்..!!” என்று மட்டுமே சொன்னான் ரிஷி.
அவன் மனம் மாறுவதற்குள் எப்படியாவது அனைத்தையும் ஏற்பாடு செய்து இன்று தனது பாஸை குணமடைய செய்து விட வேண்டும் என்று குறியாக இருந்த திலீப்,
“எல்லாத்தையும் அரேஞ்ச் பண்ணிட்டேன் பாஸ். இப்ப வர போற பொண்ண உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்.
நாளைக்கு மார்னிங் ஆகும்போது, நம்மளுக்கு இருக்கிற எல்லா ப்ராப்ளமும் ஒரேடியா சால்வ் ஆகிடும்.” என்று உற்சாகமான குரலில் சொல்லிவிட்டு காரை ஸ்டார்ட் செய்து அங்கே இருந்து கிளம்பினான்.
ஜன்னல் வழியாக வெளியில் தெரிந்த காட்சிகளை பார்த்துக் கொண்டு இருந்த ரிஷி,
“அவ கடைசியா என் கிட்ட பேசி இன்னையோட 100 டேஸ் ஆகிடுச்சு.
இந்த 100 டேஸ்ல என் லைஃப்ல இப்படி எல்லாம் நடக்கும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.
எனக்கு இதெல்லாம் ஏன் நடந்துச்சுன்னு இப்ப வரைக்கும் என்னால் நம்ப முடியல.
எது மாறினாலும் நீ மாற மாட்டேன்னு நான் நினைச்சேன் தனு.
நமக்கு மேரேஜ் ஆகும்போதுல இருந்து, நீயும் நானும் சாகுற வரைக்கும் நம்ம லைஃப் எப்படி எல்லாம் இருக்கணும்னு உன் கூட நான் வாழ போற ஒவ்வொரு நாளையும் நான் டிசைன் பண்ணி வெச்சிருந்தேன்.
பட், என்னோட லைஃப் கொலாப்ஸ் ஆனதுக்கப்புறம் என் கூட இருக்கறதுனால உனக்கு எந்த பிரயோஜனமும் இருக்காதுன்னு நெனச்சு நீ ஒரு பிளான் பண்ணி உன் பேரன்ட்ஸ் உனக்கு அரேஞ்ச் மேரேஜ் பண்ண போறாங்கன்னு சிம்பிளா சொல்லிட்டு என்னை விட்டு போய்ட்டில்ல!” என்று நினைத்து தனக்குள் விரத்தியுடன் புன்னகைத்துக் கொண்டான்.
பின் தன்னுடைய மொபைல் ஃபோனை போனை எடுத்து பார்த்தான்.
அவனுடைய லாக் ஸ்கிரீனில் ஒரு அழகான இளம் பெண்ணை அவன் தன் தோள்களில் சுமந்து கொண்டு பீச்சின் மணலில் சிரித்த முகமாக நடந்து செல்ல,
அவனைப் போல அவனை அணைத்துக் கொண்டு அவன் மீது இருந்த அந்த இளம் பெண் விரிந்த புன்னகையுடன் அவனுடன் நெருக்கமாக இருந்தாள்.
இத்தனை வருடங்களாக அவன் பார்த்து ரசித்த அந்த பெண்ணின் முகத்தை இப்போது பார்த்தாலே அவனுக்கு வெறுப்பாக இருந்தது.
அதனால் உடனே தனது லாக் ஸ்கிரீனில் இருந்த ஃபோட்டோவை மாற்றிய ரிஷி,
தனது ஃபோனில் இருந்த அவளுடைய அத்தனை ஃபோட்டோக்களையும் இருந்த கோபத்தில் டெலிட் செய்து தள்ளினான்.
ஆனால் அவன் இதயம் முழுவதும் இணைந்திருக்கும் அவளையும், அவனுடைய மூளை முழுவதும் ஞாபகங்களாக ஆக்கிரமித்திருக்கும் அவள் நினைவுகளையும் என்ன செய்து அழிப்பது என்று அவனுக்கு தெரியவில்லை.
அவன் இவ்வாறாக தனுவின் ஞாபகங்களில் தன்னை மறந்து இருக்க, சில நிமிட பயணத்திற்கு பிறகு தங்களுடைய காரை ஒரு பங்களா வீட்டின் முன்னே கொண்டு சென்று நிறுத்தினான் திலீப்.
கார் வரும் சத்தம் கேட்டவுடன் ஏற்கனவே தாங்கள் இங்கே வரப்போகும் செய்தியை அவன் வாட்ச்மேனிற்க்கு கால் செய்து இன்ஃபார்ம் செய்து இருந்ததால்,
உடனே வேகமாக வந்து செக்யூரிட்டி டீமெல் இருக்கும் இருவர் பெரிய கேட்டை கார் வருவதற்காக திறந்து விட்டார்கள்.
நேராக உள்ளே சென்று காரை பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திய திலீப், காரில் இருந்த ரிசியை வீல் சேர் உதவியுடன் கீழே இறக்கி மெதுவாக தள்ளிக் கொண்டு சென்றான்.
தரைத்தளத்தில் உள்ள ஒரு ரூமிற்கு ரிஷியை அழைத்து சென்ற திலீப், “நீங்க ஒரு 10 மினிட்ஸ் இங்க வெயிட் பண்ணுங்க பாஸ்.
என் ஃபிரண்டு சொன்ன ஆளுங்க பக்கத்துல வந்துட்டாங்களாம்.
அவங்க கிட்ட இருந்து கால் வந்ததுச்சு. எல்லாம் ரெடியானதும் நான் உங்கள வந்து உள்ள கூட்டிட்டு போறேன்.” என்று அவனிடம் சொல்லிவிட்டு அவனுக்கு துணையாக அங்கே ஒரு வேலையாளை விட்டுவிட்டு சென்றான்.
பின் அங்கே வேலை பார்ப்பவர்களுக்கு கூட தெரியாமல் ஒரு மாஸ்கை அணிந்து கொண்டு அந்த பங்களாவின் பின் பக்க வாசலுக்கு சென்று அங்கே இருந்த சீக்ரெட் டோரை திறந்துவிட்டு சிலரை உள்ளே அழைத்து வந்தான் திலீப்.
பின் அனை
த்தையும் அரேஞ்ச் செய்துவிட்டு அடுத்த பத்தாவது நிமிடத்தில் “பாஸ் எல்லாம் ரெடி, வாங்க போகலாம்!” என்று சொல்லி ரிஷி இருந்த ரூமிற்கு சென்று அவனை அழைத்துக் கொண்டு வேறொரு ரூமிற்கு சென்றான் திலீப்.
தொடரும்..
Author: thenaruvitamilnovels
Article Title: வரம் 1
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: வரம் 1
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.