மாற்றங்கள் காண்கிறேன்.
அதனோடு நானும் இணைந்து கொஞ்சம் மாறுகிறேன்.
மாற்றத்தை விரும்புகிறேன்.
ஆனால் நிலையற்ற இவ்வுலகில், நிலையானது யாதென்று தெரியாமல் மாற்றத்தில் கொஞ்சம் மயங்காமல் இருக்கிறேன்.
தயக்கங்களும், ஏக்கங்களும் கொஞ்சம் மயக்கங்களும் கூட, மாற்றங்களை கண்டு மாறாமல் இருப்பதே சிறந்ததென்று உணர்ந்தேன் யான்.
உணர்வது யாதாகினும், எதிர்பார்ப்பதும் ஆசைப்படுவதும் தானே மனிதனின் இயல்பு..!!
இது இன்னது என்று யோசித்து, என்னது அதில் புதிதாக இருக்கிறது என்று தேடி, இறுதியில் அப்படியே காலத்தை கடத்தி, எதையும் பெறாமல் இருக்க, பிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவிலான பயணத்தில் ஏதோ ஒன்றை செய்து விட்டு தான் செல்வோமே..!!
இனி ஒரு பிறப்பு கண்டிப்பாக பிறக்கத்தான் போகிறோம் என்று உரக்கத்தான் சொன்னவன் யாரோ?
இந்த பிறப்பில் என்ன செய்தோம்? அடுத்த பிறப்பை பற்றி யோசிக்க?
இப்படி, இப்படியும் அப்படியுமாக எப்படியாவது யோசித்து, காலம் கடப்பதற்குள் ஏதாவது செய்து விடுவது என்று முடிவெடுத்திருக்கிறேன் நான்.
- நர்மதா சண்முகம்

Author: thenaruvitamilnovels
Article Title: மாற்றங்களும் நானும்
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.