மஞ்சம்-99

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அர்ஜுன் தேன்மொழி இருவருக்கும் ‌ விஜயா மறு வீட்டு விருந்து கொடுத்து அவர்களை கவனித்துக் கொண்டு இருந்தாள். தேன்மொழி அழைத்ததால் அங்கே வந்திருந்த உதயா அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். தங்கள் வீட்டு மாப்பிள்ளை என்பதால் அர்ஜுனை விஜயா கவனித்துக் கொள்வதை காணவே உதயாவிற்கு பற்றி கொண்டு வந்தது.

அனைவருக்கும் உணவுகளை பரிமாறிக் கொண்டு இருந்த விஜயா “உன் மாமியார் வீட்டுக்காரங்க எப்ப இங்க வர்றாங்க? வேற வீடு பார்க்க போறேன்னு சொல்லிட்டு இருந்தீங்களே.. எல்லாம் பார்த்தாச்சா? உங்களுக்கு வீடு புடிச்சிருக்கா?” என்று தன் மகளிடம் விசாரிக்க, “ம்ம்.. இப்ப தான் ஜனனி கிட்ட இருந்து எனக்கு கிளம்பிட்டோம்னு மெசேஜ் வந்துச்சு மா. நைட்டு அவங்க வந்துருவாங்க. உன் மாப்பிள்ளை வீடு இல்ல பெரிய பேலஸே என் பேர்ல சென்னைக்கு சென்டர்ல வாங்கி வச்சிருக்காரு. நீ வீட்ல சமைக்கிறேன் எங்களுக்கு விருந்து வைக்கிறேன்னு சொல்லாம இருந்திருந்தா உன்னையும் நான் கூட்டிட்டு போய் இருப்பேன். ஆதி வேற காலேஜ் போய்ட்டான். இன்னைக்குள்ள நம்ம வீட்ல இருக்குற எல்லா பொருளையும் அங்க மாத்திடலாம். எனக்கு தெரிஞ்சு இங்க இருந்து எதையும் நம்ம எடுத்துட்டு போய் அங்க யூஸ் பண்ணனும்னு அவசியமே இல்ல. எல்லாமே அங்க இருக்கு. சும்மா நமக்கு முக்கியமான திங்ஸை மட்டும் பேக் பண்ணி எடுத்துட்டு அங்க போயிட்டா போதும்.” என்றாள் தேன்மொழி.

“அது சரி.. நீங்க தானே அங்க தங்க போறீங்க! அங்க நாங்க எதுக்கு? எனக்கு என் புருஷன் கட்டுன இந்த வீட்ல இருக்கிறது சந்தோசமே! நீங்க இந்தியாவுல இருக்கிற வரைக்கும் அங்க போய் குடும்பமா தங்கி இருங்க. நானும் ஆதவனும் அப்பப்ப அங்க வந்துட்டு போறோம். பொண்ண கட்டி குடுத்த வீட்ல போய் நிரந்தரமா தங்கிட்டு இருக்கிறது எல்லாம் சரிப்பட்டு வராது.” என்று விஜயா சொல்ல, தன் அத்தையை பார்த்து லேசாக புன்னகைத்த அர்ஜுன் “நீங்க இப்படி எல்லாம் யோசிக்கவே கூடாது அத்தை. நான் உங்கள அத்தேனு கூப்பிட்டாலும் எனக்கும் நீங்க அம்மா மாதிரி தான். அண்ட் சொல்லப்போனா இது உங்க மாப்பிள்ளையோட வீடு இல்ல. மகளோட வீடு. அந்த வீட்டை நான் தேன்மொழி பேர்ல தான் வாங்கி இருக்கேன். உங்க பொண்ணு வீட்ல தங்கறதுக்கு நீங்க இவ்ளோ யோசிக்க வேண்டிய அவசியமே இல்ல. அது உங்க வீடு.” என்றான்.

“என் பொண்ணுக்காக கல்யாணம் ஆன புதுசுலையே நீங்க இவ்வளவு செய்றதுல எனக்கு சந்தோசம் தான் மாப்பிள்ளை. நீங்க உங்க பொண்டாட்டிக்கு ஆசைப்பட்டதை செய்ங்க. அதுல நான் குறுக்க வரமாட்டேன்.. ஆனா நீங்க என்ன சொன்னாலும் எனக்கு அங்க வந்து தங்கறதுக்கு ஒரு மாதிரி இருக்கு!” என்று விஜயா மீண்டும் ஆரம்பிக்க, அர்ஜுன் அவளை சமாதானப்படுத்துவதற்காக மீண்டும் எதையோ பேசுவதற்காக தன் வாயை திறந்தான்.

அதை கவனித்த தேன்மொழி “என்னம்மா அவர் இவ்வளவு தூரம் சொல்லும்போது நீங்க குறுக்க குறுக்க பேசினா நல்லாவா இருக்கு? உன் மாப்பிள்ளை என் பேர்ல ஒரு பெரிய பங்களா வாங்குனது இல்லாம, பெரிய அப்பார்ட்மெண்ட் வீடே வாங்கி வச்சிருக்காரு. இது எல்லாம் என் பேர்ல இருந்த, அதை என் குடும்பத்தில இருக்கிறவங்களே யூஸ் பண்ணலன்னா, அது எல்லாத்துக்கும் நான் ஓனரா இருந்து என்ன பிரயோஜனம் சொல்லுங்க? நாங்க ரெண்டு பேரும் நீங்களும், ஆதவனும் அங்க தான் தங்கனும்னு முடிவு பண்ணியாச்சு. இந்த வீட்ல எனக்கும், என் வீட்டுக்காரர் பேச்சுக்கும் மரியாதை இருந்துச்சுன்னா யாரும் நாங்க சொல்றதுக்கு மறுத்து பேசக் கூடாது.” என்று சொல்லி விஜயாவின் வாயை அடைந்து விட்டாள்.‌

கிளாரா சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போது அவளையே கவனித்துக் கொண்டு இருந்த பிரிட்டோ “உனக்கு இன்னிக்கி என்ன ஆச்சு பேபி? பாக்குறதுக்கே ரொம்ப டயர்டா இருக்க.. உடம்பு ஏதாவது சரி இல்லையா? எதுவா இருந்தாலும் வாயைத் திறந்து சொல்லு டி.. அப்பதானே எனக்கு தெரியும்! நம்ம வேணா சீஃப் கிட்ட சொல்லிட்டு ஹாஸ்பிடலுக்கு போயிட்டு செக்கப் பண்ணிட்டு வந்துடலாமா?” என்று அக்கறையுடன் கேட்க, அவனையே பாவமாக பார்த்துக் கொண்டிருந்த கிளாரா “முதல்ல எல்லாம் நீ என்ன இவ்வளவு லவ் பண்றேன்னு நினைக்கும் போது எனக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கும் பிரிட்டோ. பட் இப்ப இவ்ளோ லவ் பண்ற ஒருத்தன விட்டுட்டு போக போறேன்னு நினைக்கும் போது, நீ என்னை லவ் பண்ணாமயே இருந்திருக்கலாம்னு தோணுது. இதுக்கு மேல நான் என்ன சொன்னாலும் நீ என்னை விட்டு போக மாட்டேன்னு எனக்கு தெரியும். அட்லீஸ்ட் உன் லைஃப்ல நான் இல்லாம போய்ட்டா, நீ மூவ் ஆண் ஆகுற மைண்ட் செட்டுக்கு வரணும். Daily அந்த God கிட்ட நான் அதுக்கு தான் pray பண்ணிட்டு இருக்கேன்.” என்று நினைத்தவள், “டோன்ட் வரி, அவ்ளோ சீக்கிரம் ‌உன்ன விட்டுட்டு போக மாட்டேன். எனக்கு வரவர இந்தியன் ஃபுட் சாப்பிட புடிச்சிருக்கு. பட் இன்னும் இதை ப்ராப்பரா எனக்கு சாப்பிட தெரியல. அதான் நான் கஷ்டப்பட்டு சாப்பிட ட்ரை பண்றது உனக்கு அப்படி தெரியுது.‌” என்றாள்.

அவள் உடல்நிலையை பற்றி பேசும்போது, அவள் தேவையில்லாமல் இறப்பைப் பற்றி பேசுகிறாள் என்று நினைத்து வழக்கம் போல அவள் மீது கோபப்பட்ட பிரிட்டோ “பார்த்து சாப்பிடு. ஒன்னும் அவசரம் இல்ல.” என்று சொல்லிவிட்டு தன் முகத்தை திருப்பிக் கொண்டான். அப்போது வெளியில் இருந்து வந்த பாடிகார்டு ஒருவன் யாரிடமும் எதுவும் சொல்லாமல் ஹாலில் மாற்றப்பட்டு இருந்த பெரிய டிவியில் ஒரு பென்டிரைவை சொருகி அதில் இருந்த வீடியோவை ப்ளே செய்தான்.

மும்மரமாக அர்ஜூனுடன் பேசியபடி சாப்பிட்டுக் கொண்டு இருந்த தேன்மொழி திடீரென்று டிவியில் இருந்து ஏதோ பாடல் கேட்பது போல இருந்ததால், தன் தலையை தூக்கி நிமிர்ந்து பார்த்தாள். அதில் “the wedding tale of Arjun and Thenmoli” என்று வர, பேக்ரவுண்டில் ஒரு இதமான பியானோ மியூசிக் ஓடிக்கொண்டு இருக்கும் போது அர்ஜுன் தேன்மொழியின் திருமண புகைப்படங்கள் ஸ்கிரீனில் மிதந்து சென்று கொண்டிருந்தது.

அதை விழிகள் விரிய பார்த்த தேன்மொழி “இது நம்ம வெட்டிங் வீடியோவா? அதுக்குள்ள அரேஞ்ச் பண்ணிட்டியா? என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல! இத பாக்குறதுக்கு நான் எவ்வளவு வெயிட் பண்ணிட்டு இருந்தேன் தெரியுமா?” என்று உற்சாகமான குரலில் கேட்க, “அந்த சூட் மொத்தமா கவர் பண்ணது எல்லாமே நம்மளோட ad agency team members தான். நீ இந்த வீடியோவை பார்ப்பதற்கு ரொம்ப நாளா ஈகரா வெயிட் பண்ணிட்டு இருக்கேன்னு எனக்கு தெரியும். அதான் நம்ம மறு வீட்டு விருந்து டேக்கு இது என்னோட ஸ்பெஷல் கிஃப்ட்.” என்று அர்ஜுன் சொல்லிக்‌ கொண்டு இருக்கும்போது சட்டென அவன் கன்னத்தில் முத்தமிட்ட தேன்மொழி “தேங்க்யூ” என்றாள்.

அதை எதிர்பார்த்து இருந்திருக்காத அர்ஜுன் வெட்கப்பட்டு லேசாக புன்னகைக்க, “கடவுள் அருளால என் மாப்பிள்ளையும் பொண்ணும் எப்பயும் இதே மாதிரி சந்தோஷமா இருக்கணும். அவங்களுக்குன்னு ஒரு குழந்தை சீக்கிரமா பிறக்கணும். அப்ப தான் இவங்க கல்யாண வாழ்க்கை முழுமைய அடஞ்ச மாதிரி இருக்கும்.” என்று நினைத்த விஜயா எதையும் கண்டும் காணாததைப் போல நடித்துவிட்டு ஆருத்ரா சாப்பிட தெரியாமல் ஒரு மீன் வருவல் துண்டுடன் போராடிக் கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு அவள் அருகில் சென்று அதை அவளுக்கு சாப்பிட உதவி தொடங்கினாள்.

அங்கே உள்ள அனைவரும் தங்களுக்கான உலகத்தில் பிசியாக இருக்க, அங்கே அவர்களுக்கு நடுவில் தான் மட்டும் தனித்து விடப்பட்டதை போல உணர்ந்த உதயா “இதை எல்லாம் பாக்குறதுக்கா இவ்வளவு தூரம் சலூன் எல்லாம் போய் டிப் டாப்பா நான் ரெடியாகி வந்தேன்? எல்லாம் என் நேரம். நான் இருக்க வேண்டிய இடத்துல இப்ப இந்த அர்ஜூன் இருக்காரு. அதைவிட கொடுமை அவங்க ரெண்டு பேரும் ரொமான்ஸ் பண்றது எல்லாம் பார்த்துக்கிட்டு நான் சும்மா இருக்க வேண்டியதா தான் இருக்கு.” என்று நினைத்து உள்ளுக்குள் புலுங்கிக் கொண்டு இருந்தான். துக்கத்தில் அவன் தொண்டை அடைக்க, உணவு கூட உள்ளே செல்ல மறுத்தது.

அப்போது டிவியில் வேறு அந்த திருமண வீடியோ ஓடிக் கொண்டு இருந்ததால் அவன் தன் கண்களால் அதை பார்த்து தொலைய வேண்டியதாக இருந்தது. அர்ஜுன் பெரிய பணக்காரன் என்பதால் அவன் வசிக்கும் வீடு மாளிகையைப் போல இருக்கும் என்று அவன் ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தான். ஆனால் வீட்டில் திருமணம் நடந்தது என்று தேன்மொழி சொன்னது இப்போது அவனுக்கு ஞாபகம் வந்ததால், சாதாரணமாக வீட்டிற்குள் நடந்த திருமணம் ஸ்டார் ஹோட்டலில் நடந்ததைபோல இவ்வளவு கிராண்டாக நடந்து இருக்கிறது! என்று ஆச்சரியம் நிறைந்த கண்களுடன் உதயா அந்த வீடியோவை பார்க்க தொடங்கினான்.

அந்த வீட்டில் உள்ள ஒரு சில இடங்களை வீடியோவில் கவர் செய்து இருந்தார்கள். அர்ஜூனின் குடும்பத்தினர்கள், நெருங்கிய உறவுக்காரர்கள், அவனது பிசினஸ் பார்ட்னர்களில் ஒரு சிலர் மட்டுமே அந்த திருமணத்திற்கு வந்திருந்தாலும், சுற்றியுள்ள அலங்காரங்கள், விதவிதமாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்த உணவு வகைகள் என அனைத்தையும் பார்த்த உதயாவிற்கு “வீட்டுக்குள்ள நடந்த கல்யாணத்தையே இவ்வளவு கிராண்டா பண்ணி இருக்காங்க.. இதுல அர்ஜுன் தேன்மொழிக்கு வில்லா வாங்கி குடுத்ததோ, அப்பார்ட்மெண்ட் வாங்கி கொடுத்ததோ கண்டிப்பா பெரிய விஷயம் இல்ல. இது எல்லாத்தையும் பார்த்து தான் இவ மனசு மாறிடுச்சு போல இருக்கு. காசு எல்லாத்தையும் மாத்தும்னு சொல்லுவாங்களே! அதுக்கு தேன்மொழி மட்டும் விதிவிலக்கா என்ன? அவள அர்ஜூன் மாத்தல. அவர் கிட்ட இருக்கிற financial background தான் மாத்திருக்கு. இப்படி ஒரு ஆள் ஹஸ்பண்டா இருக்கும்போது அவ எதுக்கு என்னை எல்லாம் கண்டுக்கப்போறா? இனிமே ஒரு சாதாரண ஃபிரண்டா கூட நான் அவளுக்கு தேவைப்பட மாட்டேன்.” என்று தோன்றியது.

திருமணம் நடக்கும்போது அதன் முன் பாதியில் தனது குடும்பத்தினர்கள் இங்கே இல்லை என்பதால் சோகமாக இருந்த தேன்மொழி என்ன மாதிரியான எக்ஸ்பிரஷங்களை எல்லாம் கொடுக்கிறாள் ‌ என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டு சொல்லிக் கொண்டிருந்த அர்ஜுன் “ஓய்.. அங்க பாரு அந்த சீன்ல உன் face செம காமெடியா இருக்கு. ஐயர் மாலை மாட்ட சொல்லும்போது கூட நீ என்ன பார்த்து முறைச்சிகிட்டு தாண்டி இருக்க. உன்ன பாத்தா இந்த ஆங்கில்ல பயங்கரமா இருக்கு. சரியான சீரியல் வில்லி மாதிரி இருக்க.” என்று சொல்லிவிட்டு சிரிக்க, “என்ன பாத்தா உனக்கு சீரியல் வில்லி மாதிரி இருக்கா? நீ தாண்டா குறுகுறுன்னு அப்படியே வில்லன் மாதிரி என்ன பாக்குற. இப்படி இருக்கிற ‌rugged face-ஐ பார்தா எல்லாருக்கும் தான் பயமா இருக்கும். அதான் மறுபடியும் இவனையே நம்ப கல்யாணம் பண்ணிக்க போறோமே.. நம்ம லைஃப் எப்படி இருக்குமோ.. இந்த ஹிட்லர் நம்மள எப்படி எல்லாம் டார்ச்சர் பண்ண போறானோன்னு நெனச்சு நான் பயத்துல அப்படி பார்த்துட்டு இருக்கேன்." என்றாள் தேன்மொழி.

அதற்கு அர்ஜுன் பதிலுக்கு அவளை கிண்டல் செய்ய, அவர்கள் இருவரும் இப்படியே பேசி சிரித்து சாப்பிட்டபடி அந்த வீடியோவை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அங்கே இருக்க முடியாமல் அரைகுறையாக சாப்பிட்டு முடித்த உதயா முக்கியமான வேலை இருப்பதாக சொல்லி கிளம்பி விட்டான். அங்கே இருந்த அனைவரும் பிசியாக இருந்ததால் அவன் செல்வதை யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

- மீண்டும் வருவாள் 💕

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியி
ல் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-99
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: jansi