ஒரு ட்ராபிக் சிக்னலை கடந்த அர்ஜூன் மிதமான வேகத்தில் காரில் சென்று கொண்டிருக்கும்போது, அவர்களுக்கு லெஃப்ட் சைடில் இருந்த சாலையில் இருந்து திடீரென்று வேகமாக அவர்களது காரை இடிப்பதை போல வந்தது ஒரு லாரி.
தன் அம்மாவிடம் ஃபோனில் பேசிக் கொண்டு இருந்த தேன்மொழி அதை கவனித்து விட்டு “அர்ஜுன்” என்று சத்தமாக அலறினாள். அவள் கையில் இருந்த ஃபோன் காருக்குள் விழுந்தது. கூகுள் மேப்பை பார்த்தபடி கார் ஓட்டிக் கொண்டிருந்த அர்ஜுன் தேன்மொழி சத்தம் எழுப்பிய பிறகு தான் தங்களை இடிப்பது போல ரோட் சைடில் இருந்து ஒரு லாரி வேகமாக வந்து கொண்டிருப்பதை அவன் கவனித்தான்.
அவன் வேகமாக முன்னே செல்லலாம் என்று பார்த்தால் அங்கே டிராபிக்கில் ஏராளமானவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். அதனால் வேகமாக இந்த லாரியை கடந்து முன்னே செல்வது சாத்தியமற்ற ஒன்று என்ற நினைத்த அர்ஜுன், என்ன ஆனாலும் பரவாயில்லை என நினைத்து எதைப்பற்றியும் யோசிக்காமல் உடனே காரை அவனால் முடிந்த அளவிற்கு சீரான வேகத்தில் ரிவர்ஸ் எடுத்தான்.
நல்லவேளையாக அவன் அப்படி ரிவர்ஸ் எடுக்கும்போது, பெரிய வாகனங்கள் எதுவும் அவனை குறிப்பிட்ட தூரத்தில் பின்தொடர்ந்து வரவில்லை என்பதால், அவனால் தன்னுடைய காரை எந்த பிரச்சனையும் இன்றி ரிவர்ஸ் எடுக்க முடிந்தது. அவர்கள் பின்னே சென்றவுடன் எந்த இடையூறும் இல்லாமல் அந்த லாரி அவர்களைக் கடந்து நேராக இருந்த ரோட்டில் வேகமாக செல்ல தொடங்கியது.
இது நேஷனல் ஹைவேஸ் ரோடு கூட இல்லை. இங்கு எதற்கு இவ்வளவு வேகமாக ஒரு லாரி சென்று கொண்டிருக்கிறது? என்று யோசித்த அர்ஜுனுக்கு இது தற்செயலாக நடந்த ஒன்றா, இல்லை என்றால் யாரோ திட்டமிட்டு தங்கள் இருவரையும் கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறார்களா? என்ற கேள்வி எழுந்தது. இதே மாதிரியாக தங்கள் மீது நடந்த ஒரு கொலை முயற்சியில் தான் அவன் சியாவை இழந்திருந்தான்.
அதை இப்போது நினைத்து பார்க்கும்போது அவனையும் மீறி அவன் மனதை பயம் ஆக்கிரமிக்க, காரை ஓரங்கட்டிய அர்ஜுன் தேன்மொழியை அணைத்துக் கொண்டு, “நீ நல்லா இருக்கியா? உனக்கு எதுவும் அடிப்படலையே!” என்று கலங்கிய கண்களுடன் கேட்டான். அந்த காரில் ஏசி ஓடியும் பதட்டத்தில் அவனுக்கு வியர்த்து கொட்டியது.
அவன் தன்னை அணைக்கும் வரை பயத்தில் நடுக்கிக் கொண்டு இருந்த தேன்மொழி, தன்னை நினைத்து அவன் கவலைப்படுகிறான் என்று உணர்ந்த உடன் பெருமூச்சு விட்டு நார்மல் ஆகி தானும் அவனை அணைத்துக் கொண்டு, “ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ் அர்ஜுன். I am okay. நீ பதட்ட படாத.” என்று நடுங்கும் குரலில் சொன்னாள்.
அப்போது தான் அவளுக்கு தான் தன்னுடைய மொபைல் ஃபோனை பதட்டத்தில் தூக்கி கீழே போட்டது ஞாபகம் வந்தது. உடனே அவனை விட்டு விலகி தனது மொபைல் ஃபோனை எடுத்து பார்த்தாள். திடீரென்று தேன்மொழி அர்ஜூனின் பெயரைச் சொல்லி அப்படி சத்தமாக அலறியதால் அங்கே ஏதோ பிரச்சனை என்று நினைத்து அவர்களுக்கு மேல் பதட்டத்தில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு லைனில் இருந்த விஜயா கண்ணீருடன் “ஏய் தேனு.. இந்தா டி தேன்மொழி.. என்னாச்சு? எதுக்கு மாப்பிள்ளை பேர சொல்லி அப்படி கத்துனவ? அவருக்கு என்ன ஆச்சு? ரெண்டு பேரும் பத்திரமா இருக்கீங்களா?” என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தாள்.
ஃபோனை காதில் வைத்த தேன்மொழிக்கு தனது அம்மாவின் குரலை கேட்ட பின்னப்பு தான் போன உயிர் மீண்டும் வந்ததைப் போல இருந்தது. தங்களுக்கு என்ன ஆகுமோ என்று எண்ணி பயந்ததில் அவள் கண்களே கலங்கி இருக்க, உடனே கண்ணீரை துடைத்துவிட்டு தன்னை நிதானப்படுத்திக் கொண்டு “ஒன்னு இல்ல மா. நீங்க பயப்படாதீங்க. நாங்க ரோட்ல போயிட்டு இருக்கும்போது திடீர்னு குறுக்க ஒரு நாய் வந்துருச்சு. எங்க அவர் அதை கவனிக்காம அந்த நாய் மேல காரை ஏத்திடுவாரோன்னு பயந்து சத்தமா கத்திட்டேன். அந்த நாய் ரோடை கிராஸ் பண்ணி போயிடுச்சு. இப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கு.” என்றாள்.
அவள் பேசிக் கொண்டு இருக்கும்போதே கொஞ்சம் இடைவெளி விட்டு அவர்களை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த பாடிகார்டுகள் இப்போது அர்ஜுனனின் அருகே வந்து அவன் கார் கதவை தட்டி “என்ன ஆச்சு chief? நீங்க ரெண்டு பேரும் ஓகேவா? நம்ம ஆளுங்கள அனுப்பி அந்த லாரி எங்க இருந்து வந்ததுன்னு நான் இப்பவே விசாரிக்க சொல்றேன்.” என்று அவனிடம் சொல்ல, தேன்மொழி அவள் அம்மாவிடம் பேசிக் கொண்டிருப்பதால் இவர்கள் சத்தம் போட்டு நடந்ததை காட்டி கொடுத்து விடுவார்கள் என்று நினைத்த அர்ஜுன் ஷூ என்று தனது உதட்டின் மீது ஒற்றை விரலை வைத்து சொன்னான்.
உடனே அவர்கள் அமைதியாகிவிட, மெல்லிய குரலில் தேன்மொழிக்கு கூட தெரியாமல் “அந்த லாரி யாரோடது, இந்த டைம்ல அது எதுக்கு இங்க வந்துச்சுன்னு யாருக்கும் தெரியாம இன்ட்ரஸ்டிகேசன் பண்ணுங்க. இப்ப நான் பக்கத்துல இருக்குற ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்க்கு போயிட்டு இருக்கேன். அங்கேயும் எல்லாமே கரெக்டா இருக்கானு ஒன்ஸ் செக் பண்ணுங்க. சுத்தி நம்ம ஆளுங்கள போடுங்க. நீங்க கேப் விட்டு எல்லாம் எங்களை ஃபாலோ பண்ண வேண்டாம்.. ரெண்டு கார் எங்களுக்கு முன்னாடியும், ரெண்டு கார் எங்களுக்கு பின்னாடி வாங்க.” என்று அவர்களுக்கு instruction கொடுத்த அர்ஜூன் காரை மெல்ல ஸ்டார்ட் செய்து அங்கிருந்து கிளம்பினான்.
தன் அம்மாவிடம் பேசிவிட்டு ஃபோனை வைத்த தேன்மொழி, “இங்க என்ன நடக்குது அர்ஜுன்? ஒரு செகண்ட் எனக்கு உயிரை போயிடுச்சு தெரியுமா? இந்த ரோட்ல லாரி எல்லாம் போய் நான் பார்த்ததே இல்லை. திடீர்னு ஒரு லாரி இவ்வளவு ஸ்பீடா எங்க இருந்து வந்துச்சு? எனக்கு என்னமோ இப்ப நடந்தது coincidence மாதிரியே தெரியல.
யாரோ நம்மள கொல்றதுக்கு பிளான் பண்ணி அந்த லாரிய செட் பண்ண மாதிரி இருக்கு. நமக்கு ஏதாவது ஆயிட்டா நம்ம ஃபேமிலில இருக்குறவங்க என்ன பண்ணுவாங்க அர்ஜூன்? எனக்கு அதை நினைச்சாலே பயமா இருக்கு. இதுக்கு தான் நீ தேவையில்லாத வேலைய எல்லாம் எதுக்கு செஞ்சிட்டு இருக்கேன்னு கேட்டு நான் உன் கூட சண்டை போட்டேன். பாத்தியா நான் நினைச்சு பயந்த மாதிரியே ஆயிடுச்சு!” என்று சொல்லிவிட்டு தன் முகத்தை மூடிக் கொண்டு கதறி அழுதாள்.
காரை ஓட்டிக் கொண்டு இருந்த அர்ஜுன் “எனக்கும் இவ சொல்றது கரெக்ட்னு தான் படுது. எப்படி யோசித்தாலும் இந்த ரோட்ல லாரி வர்றத்துக்கு சான்சே இல்ல. பட் இவ சொல்றது உண்மைன்னு நான் இப்ப சொன்னா இவ இன்னும் பயப்படவா.” என்று நினைத்தவன், “ஓய் ஹனி பேபி இப்ப எதுக்கு டி இப்படி அழுகிற? ஏன் இந்த ரூட்ல லாரி எல்லாம் வரவே கூடாதுன்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா என்ன? பேபி ஷார்ட் கட்னு கூட அந்த டிரைவர் இந்த பக்கம் வந்திருக்கலாம். ரோட்டில டிராவல் பண்ணும்போது இந்த மாதிரி எல்லாம் அடிக்கடி நடக்கும். இங்கே எனக்கு எவன் டி எதிரியா இருக்கப் போறான்? நீ தேவை இல்லாம யோசிச்சு பயந்துட்டு இருக்க.” என்று சொல்ல, “போதும் அர்ஜுன், சும்மா ஏதாவது சொல்லி என்னை சமாளிக்க பார்க்காத. இது ஜஸ்ட் coincidence-ஆ இருந்தா நீ எதுக்காக அந்த அளவுக்கு பயந்த? ஒரு செகண்ட் எனக்கு ஏதாவது ஆகிட்டா என்ன பண்றதுன்னு உனக்குள்ள பயம் வந்துச்சு தானே! ரீசன் இல்லாம நீ எதுக்கு பயப்படணும்? நீ எல்லாமே வேண்டாம்னு விட்டுட்டு வந்ததுக்கு அப்புறம் கூட பிரச்சனை நம்மள தேடி வருது. இதுக்குள்ளேயே நீ இருந்தா, எப்படி நம்மளால நிம்மதியா வாழ முடியும்? சத்தியமா சொல்றேன்.. எனக்கு நீ ஒரு செகண்ட் என்ன விட்டுட்டு எங்கேயாவது தனியா போனாலும், திரும்ப உன்னை என் கண்ணால பாக்குற வரைக்கும் பக்கு பக்குனு தான் இருக்கு. இந்த பயம் நான் சாகுற வரைக்கும் தீராதுன்னு நினைக்கிறேன் அர்ஜுன். எவ்ளோ சந்தோஷமா இருந்தாலும் உள்ளுக்குள்ள நிம்மதியா இருக்கவே முடியல. எனக்கு வெளிய போகணும், உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னுன்ற ஆசையே போயிடுச்சு. நீ யுடர்ன் போடு. நம்ப அகைன் வீட்டுக்கே போகலாம். எப்படியும் இன்னிக்கி வீடியோ செக் பண்றதுனால பேக்கிங் வொர்க் நிறைய இருக்கும். நம்ம அதை போய் பார்க்கலாம்.” என்று சொல்லிவிட்டு தனது கண்ணீரை துடைத்தான் தேன்மொழி.
அவனுக்கும் இந்த நேரத்தில் மீண்டும் வீட்டுக்கு செல்வது தான் சரி என்று தோன்றியது. ஆனால் இப்போது அவள் பேச்சிற்கு அவன் செவி சாய்த்தால், அவள் பயம் நியாயமானது என்ற எண்ணம் அவள் மனதில் எழும்பும் என்று நினைத்த அர்ஜுன் “இந்த சின்ன விஷயத்துக்காக எல்லாம் நம்ம எதுக்காக பிளானை கேன்சல் பண்ணனும்? ஒரு அரை மணி நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் இந்த ரோட்ல நான் போக போறேன்னு எனக்கே தெரியாது. இதுல நம்ம இந்த டைம்ல இந்த ரோட்ல போக போறோம்னு கண்டுபிடிச்சு எவனோ ஒருத்தன் பிளான் பண்ணி நம்மள கொல்லப் பார்க்கிறானா? நீ ரொம்ப யோசிச்சு எல்லாத்துக்கும் பயந்துட்டு இருந்தா வாழவே முடியாது தேன்மொழி.
இப்ப நம்ம ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் போக தான் போறோம். நான் உன் கூட இருக்கேன். என்ன நடந்தாலும் பாத்துக்கலாம். நீ என்னை நம்பி என் கூட வா.” என்று சொல்லி அவளை சமாதானப்படுத்திய அர்ஜுன் அவளுடன் ஷாப்பிங் சென்றான். கிளம்பி வரும்போது அவளிடம் இருந்த சந்தோஷம் இப்போது தேன்மொழியில் முகத்தில் சுத்தமாக இல்லை. இருப்பினும் இவ்வளவு தூரம் கிளம்பி வந்ததற்காக ஏதோ தோன்றியதை வாங்கிக் கொண்டு அவனுடன் அங்கே இருந்து கிளம்பினாள் தேன்மொழி.
திரும்பி வரும் வழியில் “வேற எங்கேயாவது போகணுமா? இன்னும் நீ முழுசா நார்மலான மாதிரி எனக்கு தெரியவே இல்ல. நாம எங்கையாவது ஐஸ்கிரீம் பார்லர் போய் சில்லுனு ஒரு ஐஸ்கிரீம் சாப்பிடலாமா?” என்று அர்ஜுன் கேட்க, “இல்ல அர்ஜூன். நம்ம வீட்டுக்கே போகலாம். போற வழியில டான்ஸ் கிளாஸ்ல இருந்து ஆருத்ராவை பிக்கப் பண்ணனும்.” என்றாள் தேன்மொழி.
கொஞ்ச நேரம் ஆனால் அவளே தானாக சரியாகி விடுவாள் என்று நினைத்த அர்ஜுன் வீட்டை நோக்கி பயணித்தான். தேன்மொழியின் வீட்டிற்கு அருகில் தான் அவள் சொன்ன டான்ஸ் கிளாஸ்வும் இருந்தது. அங்கே சென்று வாசலில் காரை நிறுத்திவிட்டு அவர்கள் இருவரும் ஆருத்ராவை அழைத்து வர உள்ளே சென்றார்கள்.
- மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதிலி
ப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-97
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.