“இப்படி நீ சைலண்டா இருந்தா என்ன அர்த்தம் அர்ஜுன்? எனக்கு உண்மை தெரியணும். இந்த தேன்மொழிக்கு உன் லைஃப்ல வேல்யூ இருக்குனு எனக்கு தெரியும். ஆனா அது நான் சியா மாதிரி இருக்கிறதுனால தானே.. இல்லனா இந்த சாதாரண தேன்மொழிய நீ எதுக்காக திருப்பி பாத்திருக்க போற?” என்று கலங்கிய கண்களுடன் தேன்மொழி அவனைப் பார்த்து கேட்க, “இவ என்ன நார்மலா பேசிட்டு இருக்கும்போது திடீர்னு எமோஷனலாகி இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கா!” என்று நினைத்து தங்களுக்குள் மீண்டும் ஒரு சண்டை வந்துவிடுமோ என நினைத்து பயந்த அர்ஜுன் “You and I are already married. தேன்மொழி. அண்ட் ஐ லவ் யூ சோ மச். இப்போ இந்த கொஸ்டின் எல்லாம் என்ன அவசியம் வந்துச்சு?” என்று சலிப்புடன் கேட்டான்.
“of course, அவசியம் இருக்கு அர்ஜுன். நீ என் இடத்தில இருந்து பார்த்தா தான் என் மனசுல என்னென்ன ஓடுதுன்னு உனக்கு புரியும். எல்லாருமே நீ எனக்கு ஹஸ்பெண்டா கிடைச்சதுக்கு நான் லக்கின்னு ஃபீல் பண்றாங்க. அது உண்மை தான் எனக்கே தெரியும். உன் சைடுல இருந்து யோசிச்சா, உன்ன விட்டுட்டு போன சியா மறுபடியும் ஏதோ ஒரு ரூபத்துல உனக்கு திரும்ப கிடைச்சதா நினைச்சு நீ சந்தோஷப்படுற.
நீ என்னை லவ் பண்ற. நமக்குள்ள எல்லாம் நல்லா தான் போயிட்டு இருக்கு. அதெல்லாம் எனக்கு புரியுது. பட் நான் கேக்குறது என்னன்னா.. நீயும் நானும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்ன்றத தாண்டி நான் யார் அர்ஜூன்? ஒரு சாதாரண பொண்ணு. இந்த சாதாரண பொண்ண சாதாரணமா பார்க்கும்போது, என் ஹஸ்பண்டுக்கு நான் எப்படி தெரிகிறேன்னு தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிறேன்.
Just because by looks நான் சியா மாதிரி இருக்கிறதுனால மட்டும் நீ என்னை லவ் பண்ணலேன்னு எனக்கே தெரியும். But my question is, நான் சியா மாதிரி இல்லனா கூட நீ என்ன திரும்பி பார்த்து இருப்பியா? அப்ப கூட இந்த தேன்மொழியோட வேல்யூ என்னன்னு உனக்கு தெரிஞ்சிருக்குமா? நீ என்ன இதே மாதிரி லவ் பண்ணி இருப்பியா?” என்று கேட்டு முதலில் இருந்து ஆரம்பித்தாள் தேன்மொழி.
இவள் தன் வாயில் இருந்து உண்மையை வாங்காமல் விட மாட்டாள் என்று புரிந்து கொண்ட அர்ஜுன் வேறு வழியில்லாமல் பெருமூச்சு விட்டுவிட்டு, “மாட்டேன். உண்மைய சொல்லனும்னா, இங்க உன் முன்னாடி இருக்கிறது வெறும் அர்ஜுன் இல்ல தேன்மொழி. நான் ஆல்ரெடி ஒருத்தியோட ஹஸ்பண்ட். எனக்கும் அவளுக்கும் இரண்டு குழந்தைங்க இருக்காங்க. நான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்ட அவ கூட ஒரு ஹேப்பியான லைஃப்-ஐ நான் வாழ்ந்திருக்கேன். என் சியா இறந்து போனதுக்கு காரணமே நான் தான்.
இப்படி இருக்கும்போது, என்னால எப்படி இன்னொரு பொண்ண திரும்பி பாக்க முடியும்னு நீ நினைக்கிற? எனக்குள்ள என் சியா மேல இருக்கிற லவ் நானே செத்தாலும் சாகாது. இந்த உலகத்தில இருக்கிற எல்லா பெண்களையும் விட அவ தான் பெஸ்டானவளா இருந்தா கூட, என்னால என் சியாவோட பிளேஸை கண்டிப்பா இன்னொருத்திக்கு கொடுக்க முடியாது. பட் என்னோட 20S-ல நான் உன்ன பார்த்திருந்தா, சியான்னு ஒருத்தி என் லைஃப்ல இல்லாம இருந்திருந்தா.. அப்ப இந்த சீன் வேற மாதிரி இருந்திருக்கும்.
எனக்கு உன்ன மாதிரி ஒரு பொண்ண பிடிக்குமா பிடிக்காதான்றது இங்க கொஸ்டின் இல்ல ஹனி. அந்த பொண்ணை ஏத்துக்கிற சுச்சுவேஷன்ல நான் இருக்கிறனா இல்லையான்றது தான் மேட்டர். நான் கோமால இருக்கும்போது எனக்கு தெரியாம என் ஃபேமிலில இருக்கிறவங்க உன்ன தவிர வேற எந்த பொண்ண கல்யாணம் பண்ணி வச்சி இருந்தாலும், அவளுக்கு டிவோர்ஸ் குடுத்து திரும்ப அனுப்பி வச்சிருப்பேன்.
அதனால தான் உன்னை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க. நான் இப்படி சொல்றது உனக்கு கஷ்டமா தான் இருக்கும்னு எனக்கு புரியுது. பட் நீ நான் உண்மையா என்ன ஃபீல் பண்றேன்னு தெரிஞ்சுக்கணும்ன்னு இவ்வளவு தூரம் கேட்கும்போது எனக்கு பொய் சொல்ல மனசு வரல. I'm sorry.” என்று உடைந்த குரலில் சொன்னான்.
அவன் பேச பேச தேன்மொழியின் கண்களில் இருந்து அறிவி போல கொட்டியது கண்ணீர். அவனுடைய முதல் மனைவி இறந்து விட்டதால் தான் இரண்டாவது மனைவியாக வாழ்வதில் என்ன சிரமம் இருக்கப்போகிறது? என்று நினைத்து தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்ட தேன்மொழி எப்போதும் தான் அவனுக்கு இரண்டாவது மனைவி என்ற எண்ணத்தை தன் மனதில் வர வைக்கவே கூடாது என்ற முடிவில் இருந்தாள்.
ஆனால் இப்போது அவன் பேசியதை வைத்து அவன் வாழ்க்கையில் இருக்கும் ஒரே ஒரு பெண்ணாக, அவன் மனதில் இருக்கும் ஒரே ஒரு பெண்ணாக, அவனுடைய அத்தனை ஆசைக்கும் சொந்தக்காரியாக அவள் மட்டும் இருக்கப் போவதில்லை என்று நினைக்கவே அவளுக்கு வலித்தது. “சியா இறந்து போயிட்டாங்க. ஆனா இன்னும் அவங்க அர்ஜுனோட மனசுக்குள்ள வாழ்ந்துட்டு தான் இருக்காங்க. என்னைக்குமே அர்ஜுனோட லைஃப்ல ஃபர்ஸ்ட் நான் தான்ற மாதிரி ஒரு விஷயம் நடக்க போறது இல்லல்ல..
பட் என் லைஃப்ல அவனைத் தவிர வேறு யாரும் இல்லையே.. இதுக்கு முன்னாடி இருந்ததும் இல்ல. ஒரு ஆண் கிட்ட இருந்து பெண்ணுக்கு கிடைக்கிற எல்லா சந்தோஷத்தையும் மொத மொதல்ல எனக்கு கொடுத்தது அர்ஜுன் தான். நான் அந்த மாதிரி எப்படி யோசிச்சாலும் எனக்கு அர்ஜுன தவிர வேற யாரும் எப்பயும் ஞாபகம் வரப்போறதுல்லை. ஆனா அவனுக்கு அப்படி இல்லையே.. அவனும் சியாவும் ரொம்ப வருஷம் சேர்ந்து வாழ்ந்து இருக்காங்க. அவன் அவங்கள லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இருக்கான்.
அவங்களுக்குள்ள எவ்வளவு ஸ்ட்ரோங் ரிலேஷன்ஷிப் இருந்திருந்தா அவங்க இறந்தத பார்த்த உடனே அதை தாங்க முடியாம இவன் கோமாவுக்கு போயிருப்பான்! அந்த மாதிரியான ஒரு லவ் எனக்கு அர்ஜுன் கிட்ட இருந்து கிடைக்குமா? அவனோட லைஃப்ல ரெண்டாவதா வந்த நான் எல்லாத்துலயும் கடைசி வரைக்கும் இரண்டாவதா தான் இருப்பனா? செத்துப்போன ஒருத்தவங்களோட என்ன கம்பேர் பண்ணி எதுக்கு அர்த்தமே இல்லாம நான் இவ்வளவு தூரம் வருத்தப்படுறேன் எனக்கு தெரியல.
ஆனா என்னை மட்டுமே லவ் பண்ண வேண்டிய என் ஹஸ்பண்ட் மனசுக்குள்ள இன்னொருத்தவங்களும் இருக்காங்கன்னு நினைக்கும்போது என்னால அதை ஏத்துக்க முடியலையே! இது எல்லாமே தெரிஞ்சு தான் நான் உன்னை கல்யாணம் பண்ணிக் கிட்டேன் அர்ஜுன். இப்போ இத காரணமா சொல்லி நான் உன் கிட்ட சண்டை போட்டா கூட அநியாயமா தான் இருக்கும். இந்த லவ் வந்துட்டாலே நல்லா இருக்குற உங்களுக்கு கூட பைத்தியம் பிடிக்கும்னு சொல்லுவாங்க. அப்படித் தான் இப்ப இருக்கு எனக்கு. இந்த சுச்சுவேஷன்ல எப்படி ரியாக்ட் பண்ணனும்னு கூட தெரியல. இனிமே இந்த மாதிரி கொஸ்டினை எல்லாம் உன் கிட்ட கேட்கவே கூடாதுன்னு இப்ப தோணுது.” என்று நினைத்து தன் கண்ணீரை துடைத்துக்கொண்ட தேன்மொழி, “நான் கேட்ட கொஸ்டினுக்கு ஹானஸ்டா ஆன்சர் பண்ணதுக்கு ரொம்ப தேங்க்ஸ்.” என்று சொல்லிவிட்டு பெட்டில் இருந்து கீழே இறங்கினாள்.
அவள் முகத்தை வைத்து கண்டிப்பாக நல்ல மனநிலையில் தேன்மொழி இருக்கவில்லை என்று உணர்ந்த அர்ஜுன் அவள் அருகில் சென்று அவளை அணைத்துக் கொண்டு, “இதுக்கு தான் எல்லா விஷயங்களையும் சும்மா போட்டு நோண்டிக்கிட்டே இருக்க கூடாது ஹனி பேபி. நீயும், நானும் இப்ப ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் இது தான் ரியாலிட்டி. உன் மேல நான் வச்சிருக்கிற லவ் உண்மை. நீ அதை மட்டும் உன் மைண்ட்ல வச்சுக்கோ.” என்று சொல்ல, அவனை தன்னை விட்டு விலக்கி நிறுத்திய தேன்மொழி “ம்ம்.. எனக்கு புரியுது. நீ சொன்னதுல எந்த தப்பும் இல்ல. எனக்கு அந்த அப்பார்ட்மெண்ட்டை போய் பார்க்கிற ஐடியா இப்ப இல்ல.
ஆருத்ராவுக்கு கொஞ்சம் திங்ஸ் பர்சேஸ் பண்ணனும். சோ ஷாப்பிங் போலாமா?” என்று கேட்டாள். கொஞ்ச நேரத்தில் தானாகவே அவள் சரியாகி விடுவாள் என்று நினைத்த அர்ஜுன் “ம்ம்.. நீ எப்ப சொல்றியோ நாம அப்ப அங்க போலாம். நான் சென்னை வந்து ரொம்ப வருஷம் ஆகுது. சோ என்ன ஷாப்பிங் போலாம்னு சொல்லு. லஞ்ச் டைம் வரைக்கும் எவ்வளவு வேணாலும் ஷாப்பிங் பண்ணலாம்.” என்று சொல்லிவிட்டு அவளுடைய தோள்களில் கை போட, “கார்ல போகும்போது ரூட் சொல்றேன். இங்கயே இனிமே நம்ம ஸ்டே பண்ணிக்கலாம். நான் அம்மாவுக்கு கால் பண்ணி சொல்லிடுறேன். ஆதவனுக்கு லொகேஷன் அனுப்பி அந்த திங்ஸ் எல்லாத்தையும் பேக் பண்ணி ரெடியா இருக்க சொல்றேன். எப்படியும் நைட்டுக்குள்ள அத்தை, ஜனனி மத்தவங்க எல்லாரும் இங்கே ரீச் ஆயிடுவாங்க. அவங்க வர்றத்துக்குள்ள நம்ம லஞ்ச் முடிச்சுட்டு இங்க வந்து ஷிப்ட் ஆயிடலாம். ஹெல்ப் பண்ண ஆளுங்க இருக்காங்கல்ல சோ பிராப்ளம் இல்ல.” என்றால் தேன்மொழி.
அப்படியே அவர்கள் இருவரும் பேசியபடி ஹாலிற்கு வந்தார்கள். “நீங்க யார் யாருக்கு நம்ம என்ன ரூம் கொடுக்க போறோம்னு டிசைட் பண்ண வேண்டாமா?” என்று அர்ஜுன் கேட்க, “எனக்கு அத பத்தி எல்லாம் பெருசா எதுவும் தெரியாது. அம்மாவும், ஆதவனும் நீங்க எங்க இருக்க சொன்னாலும் இருப்பாங்க. அது ஒன்னும் பிராப்ளம் இல்ல. மத்தவங்க அவங்களுக்கு பிடிச்ச ரூமை சூஸ் பண்ணிக்கிட்டும்.” என்றாள் தேன்மொழி.
அதற்கும் சரி என்ற அர்ஜுன் அவளிடம் எதுவும் பேசாமல் அவளை அழைத்துக் கொண்டு தனது காருக்கு சென்றான். இருவரும் அமர்ந்தவுடன் அர்ஜுன் காரை ஸ்டார்ட் செய்து கிளம்பினான். தேன்மொழி தன் அம்மாவிற்கு கால் செய்து பேசிக் கொண்டிருந்தாள். அவள் ஷாப்பிங் மாலுக்கு வழி சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு அவளுடைய அம்மாவிடம் ஃபோனில் பேசிக் கொண்டிருந்ததால் google மேப்பை பார்த்து அருகிலுள்ள ஒரு பிரபலமான ஷாப்பிங் காம்ப்ளக்ஸை நோக்கி தன் காரை செலுத்தினான் அர்ஜுன்.
இப்போது அவர்களது கார் சென்னையின் பரபரப்பான சாலையில் சரியான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. எப்போதும் அர்ஜுனின் பாதுகாப்பிற்காக அவனை பின் தொடரும் அவனுடைய பாடிகார்டுகள் இப்போதும் அவர்களுக்கு பிரைவேசி கொடுத்து கொஞ்சம் இடைவெளி விட்டு அவர்களை ஃபாலோ செய்து வந்து கொண்டு தான் இருந்தார்கள்.
ஒரு ட்ராபிக் சிக்னலை கடந்த அர்ஜூன் மிதமான வேகத்தில் காரில் சென்று கொண்டிருக்கும்போது, அவர்களுக்கு லெஃப்ட் சைடில் இருந்த சாலையில் இருந்து திடீரென்று வேகமாக அவர்களது காரை இடிப்பதை போல வந்தது ஒரு லாரி.
- மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதி
லிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-96
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.