மஞ்சம்-94

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அர்ஜுன் தேன்மொழியை அவன் வாங்கியுள்ள பீச் ஹவுஸுற்க்கு அழைத்து சென்றான். அங்கே “ஹனி பேலஸ்” என்று போடப்பட்ட இருப்பதை பார்த்துவிட்டு சிரித்த தேன்மொழி “எல்லாத்துலயும் உனக்கு விளம்பரம் தானா?” என்று கேட்டாள்‌. “ச்சீ போ.. நீ வந்து பார்க்கும்போது இந்த நேம் ஆர்ச் இங்க இருக்கணும்னு ஆசையா ஓவர் நைட்ல எல்லாத்தையும் உனக்கு தெரியாம சர்ப்ரைஸா ரெடி பண்ண பாரு! எனக்கு இந்த அசிங்கம் தேவை தான்.” என்று சொல்லிவிட்டு தனது முகத்தை திருப்பிக் கொண்ட அர்ஜுன் காரை பார்க்கிங் ஏரியாவில் சென்று நிறுத்தினான்.

உடனே அங்கே வேலை பார்ப்பவர்கள் ஓடி வந்து அவர்களின் கார் கதவை திறக்க, கோபத்தில் சிவந்திருந்த அவனுடைய முகத்தை பார்த்து சிரித்த தேன்மொழி, “அந்த மாதிரி டிசைன் பண்ணா மட்டும் இல்ல, இப்படி வேலை செய்வதற்கு நமக்கு நிறைய பேர் இருந்தாலும் கூட, நீங்க எனக்காக போய் கார் டோரை ஓப்பன் பண்ணி அப்படியே என்னை குயின் மாதிரி ட்ரீட் பண்ணி கையைப் பிடிச்சு கூட்டிட்டு போனீங்கன்னா அதைக் கூட பார்த்து நான் சப்ரைஸ் அவன்.” என்று கிண்டலாக சொல்ல, “அதான் ஆல்ரெடி டோரை ‌ஓப்பன் பண்ணிட்டாங்க இல்ல..‌ அப்புறம் என்ன? இறங்கி கீழே வா.” என்ற அர்ஜுன் தன் பக்கம் இருந்த கார்க் கதவை திறந்து கீழே இறங்கி சென்றான்.

“பார்றா.. இது கூட நல்லா இருக்கே.. இவனை கடுப்பேத்தி பார்க்கிறது இவ்வளவு ஆனந்தமாய் இருக்கும்னு எனக்கு இன்னைக்கு தான் தெரியுது. என்னை எப்படி எல்லாம் டென்ஷன் பண்ணி இருப்பான் இவன்.. இன்னிக்கி என்னோட டர்ன். முடிஞ்ச அளவுக்கு இவன வச்சு செய்யணும்.” என்று நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்ட தேன்மொழி, அவனை பின் தொடர்ந்து ஓட்டமும் நடையுமாக சென்றபடி “ஓய் என்ன நீ உனக்கு என் மேல பாசம் இல்லையா? இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்தா மட்டும் பத்தாது. என்னை safe-ஆ‌ கையை பிடிச்சு கூட்டிட்டு போக மாட்டியா? இந்த பேலஸ் வேற பெருசா இருக்கு. எத்தனை ராஜா மந்திரி எல்லாம் இங்க வாழ்ந்திருப்பாங்களோ தெரியல.. இந்த இடத்துல நான் தொலைஞ்சு போயிட்டா என்ன பண்றது? எனக்கு வேற இருட்டுன்னா பயம். அப்புறம் நான் என் புருஷன் என்ன இங்க விட்டுட்டு போய்ட்டான்னு சொல்லி புலம்பி கதறி கதறி அழுதுட்டு இருப்பேன். பரவாயில்லையா உனக்கு?” என்று கிண்டலாக கேட்டுவிட்டு அவன் கன்னத்தை பிடித்து கிள்ளி விளையாடினாள்.

உடனே அவளது கையை பிடித்துக் கொண்ட அர்ஜுன், “கையை வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா நீ? உனக்கு என்ன இன்னும் சின்ன குழந்தை என்ன நினைப்பா?” என்று தனது கணீர் குரலில் கேட்க, உடனே ஓரடி பின்னே சென்ற தேன்மொழி “நீ ஒத்துக்கலைன்னாலும் உன்னை விட நான் சின்ன பொண்ணு தான். நீ இப்படி எல்லாம் மிரட்டனா எனக்கு பயமா இருக்காதா? எனக்கும் அத்தைக்கும் நடுவுல இப்ப சண்டை சால்வு ஆகிடுச்சு. இப்ப நாங்க ரெண்டு பேரும் மறுபடியும் முன்னாடி மாதிரி தான் பேசிட்டு இருக்கோம். ஞாபகம் இருக்குல்ல? இன்னொரு தடவை என்னை மிரட்டுற மாதிரி பேசினா நான் எங்க அத்தை கிட்ட போய் சொல்லுவேன். அவங்க இங்க வந்து உன்னை அடிப்பாங்க.” என்றாள்.

“போச்சு டா.. இன்னைக்கு இவ என்ன பேசியே கொல்லனும்னு முடிவு பண்ணிட்டா.” என்று நினைத்த அர்ஜுன், இதற்கு மேல் தெரியாமல் கூட இவளிடம் பேசி தன் வாயை கொடுத்து வம்பு இழுத்துக் கொள்ளக் கூடாது என நினைத்து அமைதியாக அவள் கையை பிடித்தவாறு அந்த அரண்மனை போன்ற வீட்டுக்குள் நடக்க தொடங்கினான்.

அர்ஜுன் அமைதியாக இருப்பதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தேன்மொழி வேண்டுமென்றே அவனை சீண்டுவதற்காக “அர்ஜுன்.. வெளிய பேலன்ஸுன்னு போட்டு இருந்துச்சு.. ஆனா இங்க உள்ள வந்து பார்த்தா அப்படி ஒன்னும் தெரியலையே! பாகுபலி வர்ற அளவுக்கு கூட வேண்டாம்.. நீ 23வது புலிகேசி படம் பாத்திருக்கியா? அதுல ஒரு பேலஸ் வரும் இல்ல.. அந்த அளவுக்கு கூட இது இல்லையே!

அட்லீஸ்ட் பேலஸ்னா ஒரு சிம்மாசனம் ஆவது இருக்கணும்ல.. நீங்க என்னென்னா லோக்கல் ஷாப்ல சோஃபா வாங்கி போட்டு இருக்காங்க! ச்சே.. பேலஸீக்கான கான மரியாதையே போச்சுப்பா..!! சும்மா பங்களா ஓன்னை கட்டிட்டு அதுக்கு பேலஸ்னு பேர் வச்சிக்கிறது. சும்மா சொல்லிட்டா அது பேலஸ் ஆயிடுமா? நீயே சொல்லு!” என்று கேட்க,

அவளை முறைத்து பார்த்த அர்ஜுன் அவள் கையை உதறிவிட்டு “தெரியாம இந்த வில்லாவுக்கு பேலன்ஸ்னு பேர் வச்சிட்டேன் போதுமா.‌.. நம்ம இங்க இருந்து வெளியே போறதுக்குள்ள அந்த ஆர்ச் என்ட்ரன்ஸ்ல இருக்காது. இரு டி இப்பவே கால் பண்ணி அதை இடிக்க சொல்றேன்.” என்று கோபமாக சொல்லிவிட்டு உடனே தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த மொபைல் ஃபோனை எடுத்தான்.

“அய்யய்யோ என்ன இவன் இந்த அளவுக்கு கோவப்படுறான்! விட்டா இவனே இருக்கிற கடுப்புல நேரா போய் காரை விட்டு ஏத்தி அந்த ஆர்ச்சை இடிச்சு தள்ளிடுவோம் போல! இனிமே இவன் கிட்ட லிமிட்டா‌‌ தான் பேசணும். நம்ம கொஞ்சம் ஓவரா போனா, இவன் ரொம்ப ஓவரா ரியாக்ட் பண்றான்.” என்று நினைத்த தேன்மொழி அர்ஜுன் யாருக்கோ கால் செய்து ஹலோ என்று சொல்வதற்குள், அவன் ஃபோனை வெடிக்கென பிடுங்கி “சாரி ராங் நம்பர். தெரியாம கால் போயிடுச்சு கோச்சுக்காதீங்க.” என்று சொல்லிவிட்டு அந்த அழைப்பை துண்டித்தாள்.

அவளை தனது பார்வையாலேயே பஸ்பமாக்க விரும்புபவனை போல கூர்மையான விழிகளால் பார்த்த அர்ஜுன், “என்னை பார்த்தா உனக்கு எப்படி டி தெரியுது? இந்த உலகத்துல நான் எத்தன பேத்த கதற விட்டு இருக்கேன் தெரியுமா? நீ என்னையே போட்டு பாக்குறியா? அப்படியே ஒன்னு வெச்சன்னா, அப்ப தெரியும் இந்த அர்ஜுன பத்தி.” என்றபடி அவளை அடிப்பதற்காக கை ஓங்கினான்.

உடனே தன்னுடைய கன்னங்கள் இரண்டிலும் கை வைத்துக் கொண்டு தரையில் குத்தவைத்து அமர்ந்து கொண்ட தேன்மொழி “ஐயோ அம்மா.. கோபப்படாத அர்ஜூன் எனக்கு பயமா இருக்கு. எதுக்கு இப்படி பூச்சாண்டி மாதிரி என்னை பயமுறுத்துற?” என்று கேட்க, “எது பூச்சாண்டியா? அடிங்கு.. உனக்கு திமிரு ஓவர் ஆயிடுச்சு டி.” என்று லேசான புன்னகையுடன் சொன்ன அர்ஜுன் அவளை அடிப்பதற்காக மீண்டும் கை ஓங்கினான்.

“ஏய்.. ஏய்.. கூப்பிடாத நான் சும்மாதான் சொன்னேன். ஒரு வேகத்துல நிஜமாவே அடிச்சுராத. எனக்கு வலிக்கும்.” என்ற தேன்மொழி எழுந்து முன்னே சென்று வேகமாக ஓட தொடங்கினாள். “ஏய் குட்லி நில்லு டி. எங்க டி ஓடுற? நெஜமாவே எங்கேயாவது ஓடிப் போய் தொலைஞ்சு போயிராத.” என்றபடி அர்ஜுன் அவள் பின்னே ஓட தொடங்கினான்.

அவர்கள் இருவரும் அந்த விசாலமான பங்களா வீட்டில் ஓடி விளையாடி கொண்டு இருந்தார்கள். அவனது வேகத்திற்கு அர்ஜுன் ஒரு நிமிடத்தில் கண்டிப்பாக அவளை பிடித்திருப்பான். ஆனால் அவனுக்கு அவளுடன் இப்படி ஓடி ஆடி சந்தோஷமாக விளையாட வேண்டும் என்று ஆசையாக இருந்தது. அதனால் வேண்டுமென்றே அவளை ஓடவிட்டு மெதுவாக பின்னே ஓடி சென்று கொண்டிருந்தான்.

அவனது எண்ணம் புரியாமல் என்னமோ ஒலிம்பிக்கில் ஓடுவதைப் போல மூச்சு வாங்க பின்னங்கால் பிடரி அடிக்க வேகமாக ஓடினாள். அர்ஜுனும் தான் என்னவோ வேகமாக அவளை துரத்துவதைப் போல பாவலா செய்தான்.

அர்ஜுனை நேரில் பார்த்த பிறகு அவன் தன்னை விட handsome-ஆக இருப்பதாக நினைத்து தாழ்வு மனப்பான்மையில் பொங்கிக் கொண்டு இருந்த உதயா ‌“சேச்சே.. அப்படி எல்லாம் ஒன்னும் இருக்காது.‌ அவருக்கு என்னை விட ரொம்ப வயசு அதிகம். அப்புறம் அவர் எப்படி என்ன விட ஹாண்ட்ஸாமா இருக்க முடியும்? அவர் வெளிநாட்டில இருந்ததுனால வெயில்ல சுத்தாம நல்லா கலரா இருக்காரு. நான் சென்னையிலேயே இருந்து வெயில்ல ஓடி ஆடி பைக்ல சுத்திட்டு இருந்ததுனால கொஞ்சம் கருத்து போயிட்டேன். அவ்ளோ தான் வித்தியாசம்.” என்று நினைத்து தன் மனதை தானே தேற்றிக் கொண்டு தன்னுடைய அழகை மேம்படுத்துவதற்காக அருகில் உள்ள பியூட்டி சலூனுக்கு சென்றான்.

தேன்மொழி சலிக்காமல் ஓடிக் கொண்டே இருக்க, அவள் பின்னே மெதுவாக ஓடிச் சென்ற அர்ஜுனிற்க்கு ஒரு கட்டத்திற்கு மேல் டயர்டாக இருந்தது. அதனால் அவன் வேகமாக ஓடி சென்று பின்னே இருந்து அவளை பிடித்து நிறுத்தி அப்படியே அவளை தூக்கிக் கொண்டு சுற்றியவன், “மாட்டுனியா? இதுவரைக்கும் ஓடிப் போய் நான் எத்தனை பேர் புடிச்சிருக்கேன் தெரியுமா? நீ என்னமோ பெரிய அத்லெட் மாதிரி அவ்ளோ வேகமா ஓடுற? சரி உன் ஆசையை எதுக்கு கெடக்கணும்னு தான் இவ்வளவு நேரம் உன்ன துரத்திட்டு வர்ற மாதிரி நான் நடிச்சேன். என்ன மேடம் என்ஜாய் பண்ணீங்களா?” என்று கேட்க, “நீங்க வேணும்னே மெதுவா வரீங்கன்னு எனக்கு ஆல்ரெடி தெரியும் சார். இருந்தாலும் எனக்கு உங்க கூட ஓடிப் பிடிச்சு விளையாட கொஞ்சமா பிடிச்சு இருந்துச்சு. அதான் சும்மா விளையாடிட்டு இருந்தேன்.” என்ற தேன்மொழி அவனுடைய குறுந்தாடியை பிடித்து ஆட்டினாள்.

“ஏய் கைய எடு டி. எனக்கு என் தாடியை யார் தொட்டாலும் பிடிக்காது.” என்ற அர்ஜுன் அவளை தூக்கிக் கொண்டு ஒரு அறையை நோக்கி நடக்க, “ஐயோடா.. நான் தொட்ட புடிக்காதுன்னா வேற எவ தொட்டா உனக்கு பிடிக்கும்?” என்று தனது இரண்டு புருவங்களையும் உயர்த்தியபடி தேன்மொழி அவன் கண்களை நேருக்கு நேராக பார்த்து கேட்டாள்.

” அதான் யார் தொட்டாலும் பிடிக்காதுன்னு சொல்றேன்ல.. அப்புறம் என்ன லூசு மாதிரி வேற எவளவோ ஒரு தின்னு பேசிட்டு இருக்க?” என்று அவன் கேட்க, “அப்ப நானும் மத்த யாரோ ஒருத்தரும் ஒன்னு தானா உனக்கு? எனக்கு கூட தான் என் தலை முடியை யார் தொட்டாலும் பிடிக்காது.‌ நீ தூக்கம் வரலனா என் தலை முடியை பிடிச்சு விளையாடிட்டு இருக்கல..‌ அதுக்காக நான் உன்னை இந்த மாதிரி திட்டினேனா?” என்று பதிலுக்கு அவனிடம் கேட்டாள் தேன்மொழி.‌

“நான் எப்ப டி உன்னை திட்டினேன்? நீ அப்படி பண்ணது எனக்கு பிடிக்கலைன்னு சொன்னேன் அவ்வளவு தான்.” என்று அர்ஜுன் சொல்ல, “நீ இப்படி பேசுறது எனக்கும் பிடிக்கல. முதல்ல என்னை இறக்கிவிடு எனக்கு நடக்க தெரியும். நானே நடந்து வருவேன்.” என்ற தேன்மொழி வலுக்கட்டாயமாக அவனுடைய கைகளில் இருந்து இறங்க முயற்சி செய்தாள்.

ஆனால் அவளை இறக்கிவிடாமல் வலுக்கட்டாயமாக தன்னுடன் சேர்த்து இறுக்கி பிடித்துக் கொண்ட அர்ஜூன் ‌ அவளுடன் திறந்திருந்த ஒரு ரூமிற்குள் நுழைந்தான். அந்த ரூமை பார்த்த தேன்மொழி அப்படியே வாயடைத்து போய் விட்டாள்.‌

- மீண்டும் வருவாள் ‌💕

(என்னை மறக்காமல் பி
ரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-94
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: jansi