அத்தியாயம் 92
கிலாரா மயங்கி விழுந்ததால் அவளை எழுப்பும் முயற்சியில் இறங்கி இருந்தான் அர்ஜுன். தண்ணீர் எடுப்பதற்காக தேன்மொழி சென்று இருக்க, அவளைப் பின் தொடர்ந்து சென்ற உதயா ஒரு தேங்காய் முடியில் தண்ணீர் பிடித்துக் கொண்டு அவளை அழைத்தான். உடனே தேன்மொழி அவனை திரும்பிப் பார்க்க, “கோவிலுக்குள்ள பிளாஸ்டிக் அலோ பண்ண மாட்டாங்க. இங்க இது தான் கிடைச்சது. நான் தண்ணீர் புடிச்சிட்டு வந்துட்டேன். இந்தா எடுத்துட்டு போ. நான் நடந்தது எல்லாத்தையும் பாத்துட்டு தான் இருந்தேன்.” என்றான் உதயா.
அவனை பார்த்தவுடன் மகிழ்ந்த தேன்மொழி “தேங்க்ஸ் உதயா” என்று சொல்லிவிட்டு அவன் கையில் தண்ணீருடன் இருந்த இருந்த தேங்காய் முடியை வாங்கிக் கொண்டு அவசர அவசரமாக கிளாராவின் அருகில் சென்றாள். அவள் கையில் தண்ணீர் இருப்பதை பார்த்தவுடன் அதை வேகமாக வாங்கி கிலாராவின் முகத்தில் தெளித்த அர்ஜுன் “come on Clara wake up! Don't panick us.” என்று பதட்டமான குரலில் சொன்னான்.
உதயாவும் அவர்களுக்கு அருகில் நின்று என்ன நடக்கிறது என பார்த்துக் கொண்டு தான் இருந்தான். லேசாக கண் திறந்த கிளாரா அவளுக்கு அரைகுறையாக தமிழ் தெரியும் என்றாலும், அவசரத்தில் இருக்கும்போது தாய்மொழி தானே வாய்க்க வரும்.. அதனால் அர்ஜுனை பார்த்தவுடன் “where is britto chief?” என்று சோர்வான குரலில் கேட்க, “அவன் இன்னும் வெளிய தான் இருக்கான்.” என்று ஆங்கிலத்தில் அவளுக்கு பதில் சொன்னான் அர்ஜூன்.
கிலாராவின் தோள்களை பிடித்து அவள் அமர்வதற்காக உதவிய தேன்மொழி “நான் போய் பிரிட்டோவ வர சொல்லட்டுமா?” என்று கேட்க, அவள் கையைப் பிடித்துக் கொண்டு வேண்டாம் என தலையாட்டிய கிளாரா “வேண்டாம் தேன்மொழி! அவனுக்கு எனக்கு இப்படி ஆனது தெரிஞ்சா ரொம்ப பயந்துருவான்.” என்று மெல்லிய குரலில் சொன்னாள்.
“உன் பாடி எதை கண்டிஷன்ல இருக்குன்னு மறந்துட்டியா? நீ டைமுக்கு சாப்பிட்டு டேப்லட் சாப்பிடணும் கிலாரா. அத்தை எங்கள தானே சாமி கும்பிடணும்னு விரதம் இருந்து கோவிலுக்கு வர சொன்னாங்க. உனக்கு என்ன? ஆருத்ரா டான்ஸ் கிளாஸ் போவதற்கு முன்னாடி சாப்பிடும்போது நீயும் அவ கூட சேர்ந்து சாப்பிட்டு இருக்க வேண்டியது தானே!” என்று அர்ஜுன் கோபமாக கேட்க, அவனைப் பார்த்து விரக்தி புன்னகை சிந்திய கிளாரா “இந்த ஒரு தடவை நான் சாப்பிடாம விட்டுட்டா கண்டிப்பா செத்துட மாட்டேன்னு எனக்கு தெரியும் chief. பட் இந்த கடவுளுக்கு உண்மையாவே சக்தி இருந்தா, நான் இப்படி fasting இருந்து அவங்க கிட்ட கடைசி வரைக்கும் நான் என் பிரிட்டோ கூட சந்தோஷமா வாழனும்னு வேண்டிக் கிட்டா, அது நடந்துருச்சுன்னா நான் அட்லீஸ்ட் ஒரு 50 or 60 ஏஜையாவது கிளாஸ் பண்ணுவேன்ல.. அந்த ஒரு சின்ன ஆசை தான்.” என்று கனத்த இதயத்துடன் சொன்னாள்.
அவளுக்கு இந்த நிலைமை வந்ததற்கு தானும் ஒரு காரணம். தன்னை காப்பாற்றுவதற்காக இவளும் பிரிட்டோவும், தங்களுடைய வாழ்க்கையை பணயம் வைத்திருக்கிறார்களே என்று நினைத்த அர்ஜூனிற்கு துக்கம் தொண்டையை அடைத்தது. அவன் மனதிலும் கிளாரா இறுதிவரை பிரிட்டோ உடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் தான் இருந்தது. தன்னை அப்படி பரிதாபமான நிலையில் பார்த்துக் கொண்டிருந்த கிலாராவை பார்ப்பதற்கே அவனால் முடியாமல் போக, சட்டென்று அவளை விருகமாக அணைத்துக் கொண்ட அர்ஜுன், “don't worry Clara, trust me. You will have a long life. உன்னை காப்பாத்துறதுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன். ஆல்ரெடி நானும் பிரிட்டோவும் நிறைய டாக்டர்ஸ் கிட்ட உன்ன பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு தான் இருக்கோம். அகைன் நம்ம ரஷ்யா போனதுக்கு அப்புறம் உனக்கு ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணி இருக்கலாம். உன்ன அப்படியே ஈஸியா என்ன விட்டு போக விட்ற மாட்டேன்.” என்று உடைந்த குரலில் சொன்னான்.
அவனது கண்கள் கலங்கி ஒரு துளி கண்ணீர் அர்ஜுன் அவளை அனைத்து இருந்ததால் கிலாராவின் முதுகில் விழுந்தது. அதை உணர்ந்த கிளாரா “இப்ப தான் chief நடந்தது எல்லாத்தையும் மறந்துட்டு ஹாப்பியா இருக்காரு. என்னால அவர் மூட் ஸ்பாயில் ஆக கூடாது. எங்க chief-காக தான் நாங்க இவ்ளோ தூரம் கஷ்டப்பட்டு எல்லாத்தையும் பண்ணி இருக்கோம். அவரும் தேன் மொழியும் எப்பயும் ஹாப்பியா இருந்தா எனக்கு அதுவே போதும்.” என்று நினைத்தவள், துளிர்த்து வர காத்திருந்த தனது கண்ணீரை வெளியில் வர விடாமல் சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டு அவனை விட்டு பிரிந்து, “I am alright chief, don't worry. பட் ப்ளீஸ் எனக்காக இதை பிரிட்டோ கிட்ட மட்டும் சொல்லிடாதீங்க.” என்றாள்.
உடனே அவள் கையைப் பிடித்துக் கொண்டு எழுந்து அவள் நிற்பதற்காக உதவிய அர்ஜுன் பிரிட்டோவிடம் எதுவும் சொல்ல மாட்டேன் என்பதைப் போல தலையசைத்தான். அவளை கை தாங்கலாக பிடித்துக் கொண்ட தேன்மொழி “அதான் நம்ம சாமி கும்பிட்டு வந்துட்டோமே.. இதுக்கு மேல சாப்பிடலாம் தப்பு இல்ல. அங்க பாருங்க பிரசாதம் கொடுக்குறாங்க. சக்கரை பொங்கல்.. நீங்க வாங்க நம்ம போய் வாங்கிட்டு வந்து சாப்பிடலாம்.” என்று சொல்ல, அர்ஜுன் அனைவரின் முன்னிலையிலும் குறிப்பாக தேன்மொழியை அருகில் வைத்துக் கொண்டு கிளாராவை கட்டிப்பிடித்து உனக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று சொன்னதை இப்போதும் தவறாக புரிந்து கொண்ட உதயா என்னவோ அவன் தான் கொஞ்சம் கூட தன் கணவனின் செயல்களை புரிந்து கொள்ள தெரியாமல் முட்டாளாக இருக்கும் தேன் மொழியை காப்பாற்ற வந்த ஆபத் பாண்டவன் போல அவனாகவே தன்னை பில்டப் செய்து நினைத்துக் கொண்டு “நீ எங்க கூட்டத்துல போற? இங்கேயே இரு. நானே உங்க ரெண்டு பேருக்கும் போய் லைன்ல நின்னு பொங்கல் வாங்கிட்டு வரேன்.” என்று சொல்லிவிட்டு கெத்தாக தனது வேட்டியை மடித்து கட்டியபடி சென்றான்.
அவன் பேசிய பிறகு தான் அங்கே உதயா நின்று கொண்டிருப்பதையே கவனித்த அர்ஜுன் “கரெக்டா இங்கே எப்படி இவன் வந்தான்?” என்று யோசிக்க தொடங்கினான். தேன் மொழியையும், கிளாராவையும் தனியாக விட்டுவிட்டு செல்ல அவனுக்கு விருப்பமில்லை என்பதால் இவனே சென்று லைனில் நின்று பிரசாதத்தை வாங்கி வரட்டும் என நினைத்து அவர்களுடன் மீண்டும் அந்த மண்டபத்தில் அமர்ந்து கொண்டான்.
தனது இரண்டு கைகளிலும் பாக்குமட்டை தட்டில் சுட சுட பொங்கலை வாங்கிக் கொண்டு வந்த உதயா அதை கிலாரா மற்றும் தேன்மொழியின் கைகளில் கொடுத்துவிட்டு “இந்தாங்க சூடா இருக்கு பார்த்து சாப்பிடுங்க.” என்றான். அதை வாங்கிக் கொண்ட கிலாரா “தேங்க்ஸ் ப்ரோ” என சொல்லிவிட்டு ஃபார்மாலிட்டிக்காக அவனைப் பார்த்து புன்னகைத்தாள். உடனே பெருந்தன்மையாக அவனும் “பரவால்ல மேடம். நீங்க சாப்பிட்டுருங்க நான் இன்னொரு தடவை லைன்ல போய் பொங்கல் வாங்கிட்டு வரேன்.” என்றான்.
“என் பொண்டாட்டி முன்னாடி ஸ்கோர் பண்றதுக்குன்னே ஹெவி பர்பாமன்ஸ் பண்றதுக்கு கரெக்டா வந்திருக்கான் போல இவன்!” என்று நினைத்த அர்ஜூன் “அது எல்லாம் ஒன்னும் தேவை இல்ல. இப்ப நாங்க வீட்டுக்கு தான் போறோம். என்னோட mother in law மேரேஜ்க்கு அப்புறம் நாங்க இப்ப தான் வீட்டுக்கு வந்திருக்கிறதுனால எங்களுக்கு விருந்து அரேஞ்ச் பண்ணி இருக்காங்க. நீங்க வேணா எங்க கூட வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிட்டு போங்களேன்!” என்றான்.
அவன் பேசப் பேச “நான் லவ் பண்ண பொண்ணை அவ கிட்ட நான் ப்ரொபோஸ் பண்றதுக்கு முன்னாடியே கடத்திக்கிட்டு போய் கல்யாணம் பண்ணிட்டு இப்ப என்னையே உங்க கல்யாண விருந்து சாப்பிட கூப்பிட்டு நக்கல் பண்றியா டா நீ?” என்று நினைத்து கோபத்தில் பொங்கிய உதயா, “இல்ல பரவால்ல சார். நான் ஆபீஸ்ல ஹாஃப் டே தான் பர்மிஷன் போட்டு இருக்கேன். சோ கிளம்பனும்.” என்றான்.
“அவரே இவ்வளவு தூரம் கூப்பிடுறாரு.. எங்களுக்காக நம்ம வீட்டுக்கு சாப்பிட வரமாட்டியா நீ? ஆமா இன்னைக்கு என்ன ஸ்பெஷல்? அதிசயமா கோயிலுக்கு வந்திருக்க.. அதுவும் வேட்டி சட்டை எல்லாம் போட்டு இருக்க!” என்று தேன்மொழி அவனைப் பார்த்து கேட்க, “நீதான் உனக்கு மேரேஜ் ஆனதுக்கப்புறம் எல்லாத்தையும் மறந்துட்டியே தேன்மொழி.. அப்புறம் இன்னைக்கு என்ன ஸ்பெஷல்னு உனக்கு எப்படி ஞாபகம் இருக்கும்?” என்று அவளைப் பார்த்து கிண்டலாக கேட்டுவிட்டு சிரித்தான் உதயா.
அர்ஜுன் தனது கூர்மையான விழிகளால் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தேன் மொழியின் அருகில் சென்று நின்று கொண்டான் உதயா. அவனை குறுகுறுவென்று பார்த்த தேன்மொழி “அச்சச்சோ மறுபடியும் என் கூட சண்டை போட உனக்கு ஒரு ரீசன் கிடைச்சிடுச்சா? இந்த தடவை நான் என்ன பண்ணேன்?” என்று கேட்க, “பெருசா ஒன்னும் இல்ல. இன்னைக்கு என் பர்த்டே. அதை நீ மறந்துட்ட. எப்பயும் போல இன்னிக்கு வீட்ல ஈவினிங் பர்த்டே பார்ட்டி இருக்கு. அதுக்கு உன்ன இன்வைட் பண்றதுக்கு தான் நைட் மெசேஜ் பண்ணேன்.
உனக்கு பதிலா அர்ஜுன் சார் தான் எனக்கு ரிப்ளை பண்ணாரு. சரி மார்னிங் உன் கிட்ட பேசலாம்னு கால் பண்ணேன். நீ எடுக்கல. நான் பண்ண மெசேஜ் கூட இப்ப வரைக்கும் நீ பார்க்கவே இல்லை. உன்னோட ப்ரையாலிடிஸ் இப்ப மாறி போயிடுச்சுல்ல தேன்மொழி... அதனால இத்தனை வருஷமா உன் கூட இருந்த உன் ஃபிரண்ட் உனக்கு பெருசா தெரியலைன்னு நினைக்கிறேன். அதை யோசிச்சு தான் நானே இனிமே உன்ன டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு விட்டுட்டேன்.
மனசே கஷ்டமா இருந்துச்சு. அதான் ஆபீஸ்ல பர்மிஷன் போட்டுட்டு இங்க கோயிலுக்கு வந்தேன். அதுவும் நல்லதா போச்சு.. அடீஸ்ட் என் பர்த்டே அன்னைக்கு நான் ஆசைப்பட்ட மாதிரி உன்னை நேர்ல பாத்துட்டேனே எனக்கு அதுவே போதும்.” என்றான் உதயா.
அவன் பேச பேச அவன் கண்கள் கலங்க, துக்கத்தில் அவன் தொண்டை அடைத்தது. தன்னை விட்டு வெகு தூரமாக தேன்மொழி சென்று விட்டாள். இப்போது அவளுக்கு என்று ஒரு குடும்பம், ஒரு தனி வாழ்க்கை இருக்கிறது என்பதை இத்தனை நாட்களுக்கு பிறகும் கூட, அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. தனக்காக இருந்த ஒன்றை இடையில் வந்து தட்டி பறித்தவனாகவே அவன் அர்ஜுனை பார்த்தான்.
என்னவோ அர்ஜுன் மட்டும் குறுக்கே வரவில்லை என்றால், கண்டிப்பாக தேன்மொழி அவன் காதலை ஏற்றுக் கொண்டு இருந்திருப்பாள் என்பது அவன் எண்ணம். அதனால் உதயாவின் வாழ்க்கையில் வந்த பெரிய வில்லனாக இருந்தான் அர்ஜுன்.
- மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதி
லிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-92
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.