மஞ்சம்-90

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
ஆருத்ரா தூங்க செல்வதற்கு முன் ஓரளவிற்கு வேகமாக ஆதவனின் அசைன்மெண்டை எழுதி கொடுத்து விட்டாள். அதனால் மகிழ்ந்த ஆதவன் மீதம் உள்ளதை விரைவாக எழுதி முடித்தான். தன் அம்மாவுடன் சேர்ந்து கணவன் வந்த சந்தோஷத்தில் டின்னருக்கே தடபுடலாக சமைத்த தேன்மொழி அனைவரையும் அவர்கள் புதிதாக வாங்கியுள்ள டைனிங் டேபிளில் அமர வைத்து உணவு பரிமாறினாள்.

“நம்ப தானே இருக்கோம்.. நம்மளே சாப்பாடு பரிமாறி சாப்பிட்டுக்கலாம்.‌ லேட் ஆகுது நீங்களும் உட்காருங்க.‌ எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்.‌” என்று சொல்லி தேன்மொழி மற்றும் விஜயாவையும் தங்களுடன் அமர வைத்து சாப்பிட சொன்னான் அர்ஜூன். அவன் அருகில் அமர்ந்த தேன்மொழி அவனுக்கு பிடித்த உணவுகளை பார்த்து பார்த்து அவனுக்கு பரிமாறியபடி சாப்பிட தொடங்கினாள்.

அப்போது தேன்மொழியின் மொபைல் ஃபோனிற்க்கு ஏதோ நோட்டிபிகேஷன் வந்தது. அதை கவனித்த தேன்மொழி சாப்பிட்டு கொண்டே ‌ ஃபோனை எடுத்து பார்த்தாள். உதயா தான் அவளுக்கு “என்ன பண்ணிட்டு இருக்க? ஆன்லைன்ல ஆளையே காணோம்! ரொம்ப பிசியா? சாப்டியா?” என்று அடுத்தடுத்து அவளுக்கு மெசேஜ் அனுப்பி கொண்டே இருந்தான்.

அவள் அதை ஓப்பன் செய்யும்போது அடுத்தடுத்து மெசேஜ் சவுண்ட் வந்தது மட்டுமல்லாமல், டிஸ்ப்ளே பிக்சரில் அவனுடைய போட்டோ இருப்பதையும் ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுன் “ஃபோட்டோவ பாத்தா ஏதோ பையன் மாதிரி இருக்கு! இந்த டைம்ல எந்த பையன் இவளுக்கு மெசேஜ் பண்றான்?” என்று நினைத்து பொறாமையில் பொங்கியவன் “சாப்பிடும்போது மொபைல் ஃபோன் யூஸ் பண்ண கூடாது. நீ இப்படி பண்ணிட்டு இருந்தா உன்ன பார்த்து ஆருத்ராவும் இந்த பிஹேவியரை பழகிக்க மாட்டாளா? டீச்சரா இருந்தாலும், பேரண்டா இருந்தாலும் முதல்ல அவங்க தான் ரெஸ்பான்சிபலா இருக்கணும்.” என்று சொல்லிவிட்டு அவள் கையில் இருந்த மொபைல் ஃபோனை பிடுங்கினான்.

உடனே விஜயாவும் தன் பங்கிற்கு “நல்லா சொல்லுங்க மாப்ள! அப்பையாவது இவளுக்கு அறிவு வருதான்னு பார்க்கலாம். ஏழு கழுதை வயசாகுது.. இன்னும் வயசுக்கு தகுந்த பொறுப்பு வரல. கல்யாணம் ஆயிடுச்சு.. குழந்தை எல்லாம் இருக்கின்ற எண்ணமே இல்லாம இவளே குழந்தைத் தனமா நடந்துக்கிறா.” என்று சொல்ல, தன் அம்மாவையும் அர்ஜுனையும் மாறி மாறி முறைத்த தேன்மொழி “இந்த அர்ஜுனன அப்புறம் பாத்துக்கலாம். எனக்கு பசிக்கிறதுனால பேசுறதுக்கு எனர்ஜி இல்ல. சண்டை போடறதுக்கு ஸ்ட்ரென்த் முக்கியம்.” என்று நினைத்து அவள் பாட்டிற்கு தனது உணவில் ஃபோக்கஸ் செய்து ‌ அதை ஒரு பிடி பிடிக்க தொடங்கினாள்.

ஃபோனையே பார்த்துக் கொண்டு தன் வீட்டில் அமர்ந்திருந்த உதயா “என்ன இவ மெசேஜ பாத்துட்டு ரிப்ளை பண்ண மாட்டேங்குறா?” என்று நினைத்தவன், “ஓய் தேனு.. என்ன பண்ற? ஆன்லைன்ல தானே இருக்க... என்ன ஆச்சு? மெசேஜ் பாத்துட்டு ரிப்ளை பண்ண மாட்டேங்குறா?”‌ என்று கேட்டு அவளுக்கு அடுத்தடுத்து மீண்டும் மெசேஜ் அனுப்பினான்.

அதை பார்த்த அர்ஜூன் முதலில் சென்று டிஸ்ப்ளே பிக்சரில் இருந்த உதயாவின் ஃபோட்டோவை பார்த்தான். “நம்ம அளவுக்கு இல்லைனாலும் இவனும் கொஞ்சம் பாக்குற மாதிரி தான் இருக்கான்.” என்று நினைத்த அர்ஜுனுக்கு உதயா தேன்மொழியிடம் பேசுவதே பிடிக்கவில்லை.

அதுவும் இப்படி திருமணம் ஆன ஒரு பெண்ணிற்கு இவன் எந்த தைரியத்தில் இரவு நேரத்தில் மெசேஜ் செய்து பேசுகிறான்? என்று நினைத்து எரிச்சல் அடைந்த அர்ஜுன் ‌“ஆமா, என் ஹனி பேபி இப்ப பிஸியா தான் இருக்கா. ஆக்சுவலி நாங்க எல்லாரும் இப்ப சாப்பிட்டுட்டு இருக்கோம்.” என்று ஒற்றை கையில் சாப்பிட்டபடி டைப் செய்து அவனுக்கு ரிப்ளை அனுப்பினான்.‌

அதை படித்து பார்த்து குழப்பமடைந்த உதயா “என்னது ஹனி பேபியா? தேன்மொழியோட ஃபோனை வேற யாராவது வச்சிருக்காங்களா? அவள போய் யாரு இப்படி எல்லாம் கூப்பிடுறது?” என்று நினைத்து எரிசலடைந்தவன், “ஓகே, பட் நீங்க யாருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்டு ரிப்ளை அனுப்பினான்.

“இந்த டைம்ல அவ ஃபோன் அவ ஹஸ்பேண்ட்டை தவிர வேற யார் கிட்ட இருக்கப்போகுது? This is Arjun Prathap. Proud husband of Thenmoli Arjun. 😎” என்று டைப் செய்து அவனுக்கு உடனே ரிப்ளை அனுப்பினான் அர்ஜூன். அந்த மெசேஜை பார்த்தவுடன் தன் கையில் இருந்த ஃபோனை நழுவ விட்டான் உதயா. அர்ஜுன் தேன் மொழியை பற்றி நியூஸில் வந்தவுடன் உடனே கூகுளில் எல்லாம் தேடி அர்ஜுனை பற்றி தெரிந்து கொண்டான் உதயா.

ரஷ்யாவில் இருக்கும் அவன் எப்போது இந்தியா வந்தான்? என்று நினைத்து குழம்பியவன், இப்போது அவன் தன்னிடம் பேசிக் கொண்டு இருக்கிறான் என்பதையே பெரிய விஷயமாக நினைத் தான். அர்ஜுனின் பின்புலத்தை பற்றி யோசிக்கும்போது, அவனுக்குள் இப்படியான அதிர்ச்சி எழுவது நியாயம் தான்.

என்னவோ அர்ஜூன் தேன்மொழியின் மீது தனக்கு இருக்கும் உரிமையை பற்றி விளக்க வேண்டுமென்றே தன்னிடம் இப்படி பேசுகிறான் என்று உதயாவிற்கு தோன்ற, அவன் அவளை தன் மனைவி என்று அழுத்தி சொல்வதை நினைக்கவே அவனுக்கு பற்றி கொண்டு வந்ததால் அடுத்து அர்ஜுனிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் “ஓ ஓகே ஓகே சார். தேன்மொழி பிஸியா இருக்கும்போது நான் மெசேஜ் பண்ணி டிஸ்டர்ப் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன். நான் அப்புறமா அவ கிட்ட பேசிக்கிறேன். Sorry for the disturbance. you guys carry on.” என்றான்.

அதைப் பார்த்து அர்ஜுன் திருப்தியாக புன்னகைக்க, அவனை கவனித்த தேன்மொழி “யார் கிட்ட பேசிட்டு இருக்கீங்க? உதயா தான் என்னமோ மெசேஜ் பண்ணி இருந்தான். அவனுக்கா ரிப்ளை பண்ணிட்டு இருக்கீங்க? எனக்கு வந்த மெசேஜ்க்கு நீங்க எதுக்கு ரிப்ளை பண்றிங்க? உங்க ஃபோனை எப்பயாவது நான் எடுத்து பார்த்திருக்கேனா?” என்று கேட்டு உடனே பொங்க, “இப்ப எதுக்கு நீ கத்துற? உன் ஃபிரண்டு கிட்ட நான் பேச கூடாதா? அதுவும் ஏதாவது பொண்ணா இருந்தா கூட நீ இப்படி கேட்கிறதுல ஒரு நியாயம் இருக்கு. என் அந்த பையன் கிட்ட நான் பேசுறதுல உனக்கு என்ன பிராப்ளம்? நீ சாப்பிட்டுட்டு இருக்கேன்னு மட்டும் தான் நான் சொன்னேன். அது ஒரு தப்பா உனக்கு?” என்று அவளிடம் கேட்டான் அர்ஜூன்.

“ஆமா தப்பு தான். எனக்கு வந்த பர்சனல் மெசேஜ நீங்க ஏன் பாக்குறீங்க?” என்று கேட்ட தேன்மொழி மீண்டும் சண்டை போடுவதைப் போல அவனிடம் ஏதோ பேசத் தொடங்க, “ஏய் வாய மூடு டி. மாப்பிள்ளை கிட்ட என்ன மரியாதை இல்லாம நாலு பேர் முன்னாடி இப்படி எல்லாம் சத்தமா பேசி சண்டை போட்டுட்டு இருக்க? யார் கிட்ட எப்படி பேசணும்னு முதல்ல கத்துக்கோ.” என்று உடனே சொல்லி அவளை அதட்டினாள் விஜயா.

உடனே தேன்மொழியின் முகம் வாடி போய்விட அமைதியாகி அவள் தன் தலையைக் கூட தூக்காமல் தட்டை பார்த்தபடி கோபத்தை சாப்பாட்டின் மீது காட்டியபடி அவசர அவசரமாக அதை சாப்பிட தொடங்கினாள். அதை கவனித்த அர்ஜுன் “விடுங்க அத்தை.. என் பொண்டாட்டி என் கிட்ட எப்படி வேணாலும் பேசலாம்.‌ ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் ரிலேஷன்ஷிப்புல ரெஸ்பெக்ட் ஒருத்தர் மேல இன்னொருத்தருக்கு மனசுக்குள்ள இருந்தா போதும். லைஃப்லையும் அது இருக்கணும்னு எதிர்பாத்தா, போர் அடிச்சுடும். சும்மா அவ நீங்க வாங்க போங்கன்னு என் கிட்ட வேற யார் கிட்டயோ பேசுற மாதிரி பேசிட்டு இருந்தா எனக்கு சுத்தமா பிடிக்காது.” என்றான்.

உடனே கணவன் மனைவிக்குள் ஆயிரம் இருக்கும்‌. அவர்களுக்கு நடுவில் நாம் சென்றால் நன்றாக இருக்காது என்று நினைத்து விஜயா அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. எது எப்படி இருந்தாலும் தனக்காக என்று வரும்போது அர்ஜுன் எதிரில் யார் இருந்தாலும் எப்போதும் தன் பக்கம் நிற்பதை நினைத்து சந்தோஷப்பட்ட தேன்மொழி அவனை ஓரக் கண்ணால் பார்த்து லேசாக புன்னகைத்தாள்.

சாப்பிட்டு முடித்தவுடன் அர்ஜுன் தேன் மொழியுடன் அவனுடைய ரூமிற்கு செல்ல, ஆருத்ராவை விஜயாவுடன் அவளுடைய ரூமில் படுத்துக்கொள்ள சொல்லி விட்டாள் தேன்மொழி. அதனால் ஹாலில் ஒரு டேபிள் ஃபேன் வைத்து வேறு வழியில்லாமல் படுத்துக் கொண்டான் ஆதவன். அனைத்தையும் கவனித்தபடி தேன்மொழியுடன் உள்ளே சென்று அறை காதவை தாழிட்ட அர்ஜுன், “யாருக்குமே பத்தலைன்னு நல்லா தெரியுது. அப்புறம் ஏன் பிடிவாதமா இந்த வீட்ல தான் இருப்பேன்னு அடம் பிடிக்கிற?” என்று கேட்க, பெட் சீட்டை சரி செய்து கொண்டிருந்த தேன்மொழி அவனை திரும்பி பார்த்து “மிடில் கிளாஸ் ஃபேமிலில பொண்ணு எடுக்கும்போது இத பத்தி எல்லாம் யோசிச்சி இருக்கணும். உங்க வீட்ல இருக்குறவங்க நமக்கு எதை பத்தியும் யோசிக்காமல் கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. இப்ப நீங்க இங்க இடம் இல்லைன்னு ஃபீல் பண்ணா அதுக்காக நாங்க உங்கள மாதிரி பேலஸ் கட்ட முடியாது மிஸ்டர் அர்ஜுன்.” என்றாள்.

“சப்பா.. நான் ஒன்னு யோசிச்சு சொன்னா எப்படி தான் இவ அதை கரெக்டா தப்பா புரிஞ்சுக்கிறாளோ தெரியல!” என்று நினைத்தவன், “அட லூசு.. நான் என்ன என்னால இங்க இருக்க முடியாதுன்னா சொன்னேன்? நீயும் தானே இன்னைக்கு மம்மி கிட்ட பேசுன.. நாளைக்கு ஈவினிங் அவங்க, ஜனனி, ஆகாஷ், லிண்டா எல்லாருமே கிளம்பி இந்தியா வர்றாங்க.

பிரிட்டா, கிலாரா மேரேஜ் மட்டும் இவ்ளோ சீக்கிரமா வேகமா உனக்கு அரேஞ்ச் பண்ண தெரிஞ்சுதுல.. மேரேஜ்க்கு வர்றவங்கள எங்க ஸ்டே பண்ண சொல்றதுன்னு யோசிக்க மாட்டியா? நம்ம வீட்ல இருக்குறவங்க யாருமே மோஸ்ட்லி ஹோட்டல்ஸ்ல எல்லாம் ஸ்டே பண்ண மாட்டாங்க. வீட்டுக்கு வெளியே நிக்கிற பாடிகார்ட்ஸ் பக்கத்துல ஏதோ வீடு காலியா இருக்குன்னு அங்க ரெண்டுக்கு ஸ்டே பண்ணிட்டு இருக்காங்க.

அதே மாதிரி வர்றவங்க எல்லாரையும் ஒவ்வொரு இடத்துல ஸ்டே பண்ண வைப்பியா? வீட்ல இருக்குற எல்லாருக்கும் தனித்தனி பாடிகார்ட்ஸ் இருக்காங்க. அவங்கள எங்க வச்சு மெயின்டைன் பண்ணுவ? என் டாடி எல்லாம் வந்தாருன்னா கண்டிப்பா அவர் இங்க தங்க மாட்டாரு. மத்தவங்கள பத்தியும் யோசிக்கனும் ஹனி பேபி.” என்று நிதானமாக சொன்னான் அர்ஜுன்.

“அட ஆமா.. நான் அந்த ஆங்கில்ல யோசிக்கவே இல்ல. நீ என் ஹஸ்பண்ட், சோ என்ன கல்யாணம் பண்ணதுக்காக நான் எங்க இருக்கனோ நீயும் அங்க இருக்கலாம். அதுக்காக வயசானவங்கள கஷ்டப்படுத்த முடியாது பாட்டியும் வந்தாலும் வருவாங்க. இப்ப என்ன பண்றது அர்ஜுன்? நாளைக்கு ஈவினிங்குள்ள எப்படி வீடு பார்க்க முடியும்?” என்று தேன்மொழி பாவமாக தன் முகத்தை வைத்துக் கொண்டு அவனிடம் கேட்க, “நீ இந்தியாவுக்கு போறேன்னு கிளம்பின உடனே எனக்கு உன் மேல கோபம் வந்தாலும், அங்க போய் நீ தங்க போற இடம் safe-ஆ இருக்கணும்னு ஆல்ரெடி இங்க நமக்கு ப்ராப்பர்ட்டீஸ் இருந்தாலும் புதுசா உன் பேர்ல முதல்ல இங்க சென்னையில‌ ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கினேன்.

அப்புறம் நமக்குன்னு பிரைவேட் பேசி இருந்தா நல்லா இருக்கும்னு ஒரு sea facing Villa வாங்கி இருக்கேன். நாளைக்கு நம்ம அந்த ரெண்டு பிளேஸையும் நேர்ல போய் பாக்கலாம். உனக்கு அதுல எங்க இருக்க புடிச்சிருக்கோ நம்ம அங்க ஷிப்ட் ஆகிக்கலாம்.” என்றான் அர்ஜுன்.

- மீண்டும் வருவாள் 💕

எங்களுடைய ஆடியோ நாவல்களை தேனருவி தமிழ் நாவல்ஸ் youtube சேனலில் கேட்டு மகிழுங்கள்.
(என்னை மறக்காமல்
பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-90
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: jansi