அர்ஜுன் ஆபீஸில் இருந்து வீட்டுக்கு வராததால் அவனுக்கு கால் செய்த ஜானகி “என்ன டா மறுபடியும் உங்க பொண்டாட்டி வீட்டுக்கு வரணும்னு அதுவரைக்கும் வீட்டுக்கு வரமாட்டேன்னு போராட்டம் பண்ண ஆரம்பிச்சிட்டியா? கல்யாணம் ஆனவுடனே எப்படித் தான் எல்லாருக்கும் பெத்தவங்க எல்லாம் மறந்து போயிடுறாங்களோ தெரியல!” என்று கோபமாக சொல்ல, “ஆஹா மம்மி இப்ப ஏன் பொங்குகிறீங்க? மேரேஜ் ஆனதுக்கப்புறம் எப்படி wife-ஐ லவ் பண்ணனும்னு நாங்க எல்லாருமே டாடியை பார்த்து தான் கத்துக்கிட்டோம். அப்ப நீங்க என் கிட்ட கேட்ட கொஸ்டினை ஞாயமா நீங்க ஃபர்ஸ்ட் டாடி கிட்ட தான் கேட்கணும்.
நீங்களே சொல்லுங்க.. நீங்க வந்ததுக்கப்புறமா டாடி எல்லாரையும் விட உங்களுக்கு தானே high priority கொடுக்குறாரு! இப்பவே பாட்டிக்கு கால் பண்ணி முதல்ல இந்த பிராப்ளமை நம்ம சால்வ் பண்ணலாமா? டாடிக்கு யார் இம்பார்டன்ட்னு இன்னிக்கு நம்ம கண்டுபிடிச்சிடலாம். அதுக்கப்புறம் எங்க பிரச்சனைக்கு நீங்க வாங்க.” என்று கிண்டலாக சொன்னான்.
“டேய் நீயும் உன் பொண்டாட்டியும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிட்டு நடுவுல இருக்கிற எங்க எல்லாரையும் கஷ்டப்படுத்திட்டு இருக்கீங்க.. ஏன் இப்படி பண்றேன்னு கேட்டா, இந்த வயசுல போய் எனக்கும் என் மாமியாருக்கும் முன்னாடி உள்ள சண்டை மூட்டி விட பாக்குறியா நீ? ஆனாலும் உன் அளவுக்கு எல்லாம் உங்க அப்பா ஒன்னும் எனக்காக எதுவும் பண்ணல சரியா?
நீ உங்க பாட்டி கிட்ட என்ன வேணாலும் போய் சொல்லிக்கோ. நான் ஒன்னும் தேன்மொழி மாதிரி எங்க அத்தை என் மேல கோவமா இருந்தாலும் பரவால்லன்னு எனக்கு என்னனு இருக்க மாட்டேன். அவங்களுக்காக நான் எவ்வளவு செஞ்சிருக்கேன் தெரியுமா? உன் பொண்டாட்டி தான் நான் சண்டை போட்டுட்டு அவ கூட பேசாம இருந்தும், என்ன சமாதானப்படுத்த எதுவுமே பண்ண மாட்டேங்குறா. புருஷன் கூடையும் சண்டை போடுறா. மாமியாரும் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டா போல.. எல்லாம் அவங்க மாமா சப்போர்ட் இருக்கிற தைரியம் தான்.” என்று ஒரு மாமியாருக்கு உரித்தான தோரணையில் தேன்மொழியை ஜானகி குறை சொல்ல,
“மாம் எப்படி மாம் அவ மேல கோவமா இருக்கிற மாதிரி இன்னும் நடிக்கிறீங்க? உங்களுக்கு அவளை பிடிக்கும் தானே.. உங்களுக்கு அவ கிட்ட ஏதாவது பேசணும் கேட்கணும்னா டைரக்டா நீங்களே கேளுங்க! உங்களுக்கு கோபம் வந்தா ஏண்டி இப்படி பண்றேன்னு டைரக்டா அவளையே கேட்டு திட்டுங்க. என் வேலையை அவ ரொம்ப நாளா கோபத்துல இருந்தா. இப்ப தான் இந்தியா வந்து நான் அவளை சமாதானப்படுத்தி இருக்கேன்.” என்றான் அர்ஜூன்.
“அடப்பாவி அதுக்குள்ள இந்தியா போயிட்டியா? என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல? நான் தான் இந்தியா போகணும்னு உன் கிட்ட சொல்லிட்டு இருந்தேன்ல என்கிட்ட நீ ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நானும் கிளம்பி வந்து இருப்பேன்ல?” என்று ஜானகி கேட்க, “என்ன மாம் இப்ப தான் என் பொண்டாட்டிய குறையா சொல்லிட்டு இருந்தீங்க.. இப்ப என்னன்னா இந்தியா வந்து அவளை பார்க்க துடிக்கிறீங்க? அவ்ளோ பாசமா அவ மேல?” என்று கிண்டலாக கேட்டான்.
“ஆமா ஆமா ரொம்ப பாசம் தான். ஆனா எனக்கு மட்டும் தான் இருக்கு. அவளுக்கு என் மேல இருக்கிற மாதிரி தெரியல. And moreover நான் இந்தியா போகணும்னு காமனா தான் சொன்னேன். நான் ஒன்னும் அவளை பார்க்க வரேன்னு சொல்லவே இல்லையே.. எனக்கு என் பேத்திய பாக்கணும். ருத்ராவை பாக்காம நாளே ஓட மாட்டேங்குது. நான் அவள் ரொம்ப மிஸ் பண்றேன்.
பிரிட்டோவும், கிளாராவும் நேத்தே எனக்கு கால் பண்ணி அவங்க மேரேஜ்க்கு வர சொல்லி என்னை இன்வைட் பண்ணாங்க. நானே கிளம்பி அங்க வர்ற ஐடியால தான் இருந்தேன். அதுக்குள்ள நீ அவசரப்பட்டு கிளம்பி போயிட்ட.” என்று ஜானகி கோபித்துக் கொள்ள, “ஓகே ஓகே மாம் ரிலாக்ஸ், நீங்க நாளைக்கு வாங்க. நான் ஆகாஷை டிராவல் அரேஞ்ச்மெண்ட்ஸ் பண்ண சொல்றேன்.” என்றான் அர்ஜுன்.
அப்படியே அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, அதை கவனித்தபடி அவன் அருகில் சென்று தேன்மொழி “அத்தை கிட்டையா பேசிட்டு இருக்கீங்க?” என்று கேட்க, “ம்ம்.. ஆமா, மம்மி கிட்ட தான் பேசிட்டு இருக்கேன். என் மம்மி உன்ன ரொம்ப மிஸ் பண்றாங்களாம். அதான் இவ்வளவு நேரமா சொல்லி புலம்பிட்டு இருக்காங்க.” என்றான் அர்ஜுன்.
“டேய் நான் எப்ப டா அப்படி சொன்னேன்?” என்று லைனில் இருந்த ஜானகி கேட்க, “நான் அத்தைக்கு இன்னைக்கு மார்னிங் கூட ரெண்டு மூணு தடவை கால் பண்ணேன். அவங்க எடுக்கவே இல்ல. இன்னும் என் மேல கோவமா இருக்காங்க போல. ஃபோன குடுங்க நான் அவங்க கிட்ட பேசுறேன்.” என்றாள் தேன்மொழி.
“அப்படியா? எங்க மம்மி என்னமோ இவ்வளவு நேரம் நீ அவங்களை சமாதானப்படுத்த ட்ரை பண்ணவே இல்லைன்னு என்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிட்டு இருந்தாங்க! ஆனா நீ என்னமோ கால் பண்ணி அவங்க தான் எடுக்கலைனு சொல்ற.. உங்க ரெண்டு பேர்ல யார் சொல்றது உண்மை?” என்று அர்ஜுன் கேட்க, “இல்லையே நான் அவங்களுக்கு கால் பண்ணேன். மெசேஜ் கூட பண்ணேன். அவங்க எதுக்குமே ரெஸ்பான்ஸ் பண்ணல. என் கால் ஹிஸ்டரி வேணா செக் பண்ணி பாருங்க.” என்றாள்
தேன்மொழி.
உடனே அர்ஜுன் “என்ன மாம் அப்ப பொய் சொன்னது நீங்க தானா?” என்று சிரித்துக் கொண்டே கேட்க, “டேய் இப்ப என்ன அடுத்து என் மருமகளுக்கும் எனக்கும் நடுவுல சண்டை முட்டி விட பாக்குறியா? இரு டா, அங்க வந்து உன்னை வச்சிக்கிறேன். அவ கால் பண்ண உடனே அட்டென்ட் பண்ணி பேசி சமாதானம் ஆகிட்டா என்னோட மாமியார் கெத்து என்ன ஆகிறது? அதான் வெயிட் பண்ணினேன்.
நான் காலை அட்டென்ட் பண்ணலேன்னாலும் அவ திரும்பத் திரும்ப கூப்பிட்டு என்னை சமாதானப்படுத்த ட்ரை பண்ணணும்ல! அத்தை மேல பாசம் இருக்கிற மருமகளா இருந்தா அதை தான் பண்ணனும். நீ சும்மா அவளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு என் கிட்ட வந்து பேசாத.” என்று ஜானகி சொல்லிக் கொண்டிருக்கும்போது ஃபோனை ஸ்பீக்கரில் போட்டு விட்டான் அர்ஜுன்.
அதனால் அவள் பேசியதை கேட்டுவிட்டு சிரித்த தேன்மொழி “ஐயோ அத்தை, ரொம்ப சாரி அத்தை. எனக்கு தான் சரியா சாரி கூட கேட்க தெரியல. இனிமே கத்துகிறேன். என்ன மன்னிச்சிடுங்க. உங்க பையனுக்காக தான் நான் எல்லாமே பண்ணேன். அப்படி நான் ஸ்ட்ராங்கா இருந்ததுனால தான் இப்ப அவர் இறங்கி வந்திருக்காரு. நான் கேட்டதுக்கும் ஓகே சொல்லிட்டாரு. மத்தபடி உங்க பேச்சை கேட்காம இருக்கணும்னு எல்லாம் நான் பிடிவாதமா ரஷ்யா வராம இருக்கல. சாரி அத்தை, இனிமே உங்க பேச்சை மீறி எதுவுமே பண்ண மாட்டேன். Trust me.” என்று சொல்ல, அர்ஜுன் இனி ரிஸ்க்கியான வேலைகள் எதையும் செய்ய மாட்டேன் என்று தேன்மொழிக்கு சத்தியம் செய்து கொடுத்து இருப்பதை கேள்விப்பட்டு ஜானகிக்கு தங்களால் செய்ய முடியாததை அவள் செய்து காட்டியதில் சந்தோஷமாக தான் இருந்தது.
அதனால் உடனே அவளை மன்னித்து விட்டாள். அதன் பிறகு அவர்கள் மூவரும் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார்கள். அதை கிச்சனில் இருந்தவாறு பார்த்து மகிழ்ந்தாள் விஜயா. தானே தேர்ந்தெடுத்து தேன்மொழிக்கு ஒரு மாப்பிள்ளையை பார்த்து கல்யாணம் செய்து வைத்திருந்தாலும் கூட அவளுக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமைந்திருக்காது என்று அவளுக்கு தோன்றியது.
இப்படி தேன்மொழி அர்ஜுன் உடன் பிசியாக இருந்ததால் தன்னுடன் விளையாட யாருமே இல்லையே என்று நினைத்து வெகுநிடமாக அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த ஆருத்ரா போரிங்காக உணர்ந்ததால் தன்னுடைய அசைன்மெண்டை எழுதிக் கொண்டிருந்த ஆதவனின் அருகில் சென்று அமர்ந்து “மாமா நீங்க என்ன பண்றிங்க?” என்று கேட்க, “நானா.. அசைன்மென்ட் எழுதிட்டு இருக்கேன் பாப்பா.” என்றான் அவன்.
“அசைன்மென்ட்டா? அப்படின்னா என்னது?” என்று அவள் புரியாமல் கேட்க, “அதுவா, இது பெருசா ஒன்னும் இல்ல.. நமக்கு ஏதாவது ஒரு சில டாபிக் கொடுத்து அது சம்பந்தமா எழுதிட்டு வர சொல்லுவாங்க. சம்டைம்ஸ் நமக்கு டெக்ஸ்ட் புக்லயே எல்லாமே இருக்கும். அப்படி இல்லைனா ஆன்லைன்ல அது சம்பந்தமா ரிசர்ச் பண்ணி நம்ம எழுதிட்டு போய் காலேஜ்ல சைன் வாங்கணும்.” என்றான் ஆதி.
“ஓஹோ அப்படியா? நானும் பார்க்கிறேன் நீங்க ரொம்ப நேரமா எழுதிக்கிட்டு இருக்கீங்களே.. இன்னுமா நீங்க எழுதி முடிக்கல? இதை எப்ப சப்மிட் பண்ணனும்?” என்று ஆருத்ரா விசாரிக்க, “நாளைக்கு இதை சப்மிட் பண்ணனும். உங்க மம்மி டாடிக்கு மேரேஜ் நடந்துச்சுல அதனால நான் ரஷ்யா வந்ததுல காலேஜ்ல கொடுத்த வொர்க் எதையுமே பண்ண முடியாம போயிடுச்சு. அதான் இப்ப ஒக்காந்து ஓவர் நைட்ல எழுதிட்டு இருக்கேன்.” என்றான் ஆதி.
“இப்படி எழுதிக்கிட்டே இருந்தா உங்களுக்கு கை வலிக்காதா?” என்று ஆருத்ரா கேட்க, “ஆமா ரொம்ப வலிக்குது. அதுக்கு என்ன பண்ண முடியும்? நான் தான் எழுதி ஆகணும். இதுக்கு முன்னாடியே அக்கா கிட்ட எழுதுறதுக்கு ஏதாவது ஹெல்ப் கேட்டா கூட, அதெல்லாம் என்னால பண்ண முடியாது. நீயே எழுதிக்கோன்னு சொல்லிடுவா.. இப்ப மாமா வேற இங்க வந்துட்டாரு. இரண்டு பேரும் எப்பயும் பிஸியாவே பேசிட்டு இருக்காங்க. அதான் தேனு கிட்ட நோட்ஸ் எடுத்துக் கொடுக்க கூட ஹெல்ப் கேட்க முடியல.” என்று சோகமாக சொன்னான் ஆதவன்.
“அச்சச்சோ அப்படியா? இங்க எல்லாரும் எதோ ஒரு வேலை செஞ்சுட்டு இருக்காங்க. நான் மட்டும் தான் வெட்டியா இருக்கேன். சோ நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன். எத எப்படி எழுதணும்னு சொல்லுங்க. நான் கரெக்டா எழுதி கொடுக்கிறேன்.” என்று ஆருத்ரா செல்ல, “பார்றா.. இந்த குட்டி பொண்ணு நமக்கு எழுதி கொடுக்க போறாளா?” என்று நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்ட ஆதி “ஓய்.. உன்ன மாதிரி சின்ன பிள்ளைகளோட ஹாண்ட் ரைட்டிங் டிப்ரண்டா இருக்கும். நீ எழுதி கொடுத்தா, பாக்க நல்லா இல்ல வேற யாரோ எழுதிக் கொடுத்த மாதிரி இருக்குன்னு உடனே கண்டுபிடிச்சு கேக்க மாட்டாங்களா?” என்று அவளிடம் கேட்டான்.
உடனே தன் புருவத்தை உயர்த்தி அவனைப் பார்த்த ஆருத்ரா “என் ஹாண்ட் ரைட்டிங் நல்லா இருக்காதுன்னு உங்களுக்கு யார் சொன்னது? நான் சின்ன வயசுல இருந்தே calligraphy கிளாசஸ் அட்டெண்ட் பண்ணிட்டு இருக்கேன். எல்லா பாண்ட் ஸ்டைலும் எனக்கு எழுத தெரியும். உங்களோட ஹாண்ட் ரைட்டிங் மாதிரியே நான் எழுதி காட்டுறேன் குடுங்க.” என்று சொல்லிவிட்டு வெடிக்கென அவன் கையில் இருந்த எக்ஸாம் பேடயும் அவன் வைத்திருந்த புக்கையும் பிடுங்கி அதில் அவன் எழுத நிறுத்தி இருந்த இடத்தில் இருந்து மீண்டும் எழுத தொடங்கினாள்.
அவன் அமைதியாக அமர்ந்து அவள் என்ன செய்கிறாள் என்று பார்த்தபடி இருக்க, ஒரு சிறிய பரக்ராப் வரை எழுதி முடித்த ஆருத்ரா அதை அவனிடம் காட்டி “இங்க பாருங்க! நல்லா இருக்கா இல்லையா? எனக்கு தெரிஞ்சு நான் உங்கள மாதிரியே தான் எழுதி இருக்கேன்.” என்றாள்.
அதை தன் கையில் வாங்கி பார்த்து வாய் அடைத்துப் போன ஆதவன் “ஓய் ருத்ரா.. என் ஹாண்ட் ரைட்டிங்கை விடவே உன்னோடது நல்லா இருக்கு. நான் ஹாப்பி மூடுல இருந்தா இப்படித்தான் எழுதுவேன். ரொம்ப நேரமா எழுதிக்கிட்டே இருந்தா அப்புறமா கிறுக்கி தள்ள ஆரம்பிச்சிடுவேன். பட் நீ ரொம்ப சூப்பரா எழுதுற.” என்று அவளை பாராட்டினான். அதில் மகிழ்ந்த ஆருத்ரா “நான் ரொம்ப ஸ்பீடா எழுதுவேன். எது எல்லாத்தையும் எழுதணும்னு சொல்லுங்க. எனக்கு தூக்கம் வர்ற வரைக்கும் நான் உங்களுக்கு எழுதி கொடுக்கிறேன். எனக்கும் சும்மாவே இருக்க போர் அடிக்குது.” என்று சொல்லிவிட்டு எழுத தொடங்கினாள்.
- மீண்டும் வருவாள் 💕

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-89
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.