மஞ்சம்-88

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
நமது “தேனருவி தமிழ் நாவல்ஸ்” youtube சேனலில் ஆடியோ புத்தகங்களை இலவசமாக கேட்டு மகிழுங்கள்.

அத்தியாயம் 88

எப்படியோ ஒரு வழியாக நாப்பது நிமிட போராட்டத்திற்கு பிறகு தேன்மொழி அர்ஜுனுடன் சேர்ந்து குளித்துவிட்டு பாத்ரூமில் இருந்து வெளியே வந்தாள். அவர்கள் இருவரும் இப்போதும் ஒரே போர்வையை சுற்றிக் கொண்டு இருக்க, அதை தன் பக்கம் இழுத்த தேன்மொழி “இதை விடுங்க. நீங்க முதல்ல டிரஸ் பண்ணிட்டு வெளிய போங்க. நான் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு அப்புறமா வரேன்.” என்று சொல்லிவிட்டு ஹச் என்று தும்பினாள்.

உடனே அவளை அணைத்துக் கொண்டு “god bless you Honey baby!” என்ற அர்ஜுன் அவளது நெற்றியில் முத்தமிட்டான். உடனே “யாரு டா இவன் ஒரு சின்ன சான்ஸ் கிடைச்சா கூட ரொமான்ஸ் பண்றான்!” என்று நினைத்து அவனை குறுகுறுவென்று பார்த்த தேன்மொழி “இப்ப நான் உங்க கிட்ட என்ன சொன்னேன் நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? சீக்கிரம் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வெளிய போங்க. ஆருத்ரா இன்னும் கொஞ்ச நேரத்துல பசிக்குதுன்னு சொல்லுவா. அதுக்குள்ள நம்ம ரெண்டு பேரும் வெளியே போகலனா, அவளே என்ன பண்றீங்க மம்மி, டாடி சீக்கிரம் வெளியே வாங்கன்னு வந்து டோரை தட்டுவா. அப்புறம் ஒரே அசிங்கமா போய்டும்.” என்றாள்.

“அத எல்லாம் விடு, என்ன‌‌ டி உனக்கு பிரச்சனை? ஒரே மாதிரி பேச தெரியாதா உனக்கு? இப்படி மரியாதை கொடுத்த எல்லாம் பேசிட்டு இருக்காத எனக்கு பிடிக்காதுன்னு முன்னாடியே சொன்னேன்ல.. நீ கோவப்பட்டா வேற மாதிரி பேசுற.. இப்ப அப்படியே மரியாத பொங்குற மாதிரி பேசுற.. நீ மாறி மாறி பேசுறதுக்கு உன் அளவுக்கு எல்லாம் ஸ்பீடா என்னால adapt ஆக முடியாது. எப்பயும் ஒரே மாதிரி பேசு. அப்ப தான் நீ பேசுறது மனசுல நிக்கும்.” என்று அர்ஜுன் செல்ல, “இப்ப நான் பேசுறது யார் மனசுல நிக்கணும்?” என்று லூசுத்தனமாக கேள்வி கேட்டாள் தேன்மொழி.

“அட இங்க என்ன நம்மளை சுத்தி 10 பேர் இருக்காங்களா? நீ பேசறது எவன் மனசுல டி நிக்கணும் உனக்கு? நீ எப்படியும் என் கிட்ட மட்டும் தான் பேச போற.. அப்ப நான் என்ன தான் சொல்றேனு கூட உனக்கு புரியாதா? சரியான மக்கு டி நீ.. உன்னை எல்லாம் எவன் டீச்சர் வேலைக்கு செலக்ட் பண்ணானோ தெரியல!” என்று சொல்லிவிட்டு அர்ஜுன் கிண்டலாக அவளை பார்த்து சிரிக்க, உடனே அவன் தலையில் கொட்டிய தேன்மொழி “ஸ்டுடென்ட்ஸ் யாராவது ஓவரா வாய் பேசினா அவங்க தலையில நான் இப்படித் தான் ஸ்கூல்ல கொட்டி வைப்பேன். இப்ப உனக்கு தெரியுதா இந்த வேலைக்கு நான் eligible-ஆ இல்லையான்னு! சும்மா எங்க அம்மா தான் நான் ஏதாவது சின்னதா தப்பு பண்ணாலும் இப்படி எல்லாம் சொல்லிக் காட்டுறாங்கன்னு பாத்தா.. நீயும் இப்படியே சொல்லி என்னை அசிங்கப்படுத்துவியா? என் செல்ப் ரெஸ்பெக்டை யாராவது டேமேஜ் பண்ண ட்ரை பண்ணா அப்படியே நான் பொங்கி எழுந்துருவேன் பாத்துக்கோ!” என்று அவனை முறைத்துப் பார்த்தபடி மிரட்டும் தோரணையில் சொன்னாள்.

தன் தலையில் கை வைத்துக் கொண்டு அவளை பாவமாக பார்த்த அர்ஜுனின் மனசாட்சி “டேய் அர்ஜுன் உனக்கு உன் வாயில தாண்டா சனி. அவளே முன்னாடி நடந்தது மறந்துட்டு மறுபடியும் அப்படியே ஹஸ்பண்டுன்னு மரியாதை போங்க நம்ம கிட்ட பேச ஸ்டார்ட் பண்ணி ஒரு form-க்கு இப்ப தான் வந்தா..

சும்மா இருந்தவள நீயே சொறிஞ்சு விட்ட மாதிரி எனக்கு மரியாதை மண்ணாங்கட்டி எல்லாம் வேண்டாம்னு பெரிய இவன் மாதிரி பேசின.. அதான் உன் பொண்டாட்டி அப்படியே பாசம் போங்க மண்டையிலயே கொட்டா நல்லா வாங்கு.” என்று அவனிடம் சொல்ல, “என்ன பண்றது எல்லாம் நேரம்.” என்று நினைத்துக் கொண்டான்.

அவன் தங்கள் மீது சுற்றி வைத்திருந்த போர்வையை அவன் மைண்ட் வாய்ஸில் பேசிக் கொண்டிருந்த கேப்பில் பிடித்து இழுத்து தன் மீது சுற்றிக் கொண்டிருந்த தேன்மொழி அவனை ஆடைகள் இன்றி அப்படி பார்க்க கூச்சமாக இருந்ததால் திரும்பி நின்று கொண்டு “சீக்கிரம் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வெளியே போ.” என்று சொல்லிவிட்டு தனது கபோர்ட்டில் அவளுக்கான ஆடைகளை தேட தொடங்கினாள்.

இன்று இவளிடம் வாய் பேசியதும் போதும் அதற்கு வாங்கிக் கட்டிக் கொண்டதும் போதும் என்று நினைத்த அர்ஜுன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அவனுடைய டிராலி பேக்கில் இருந்து ஒரு சாதாரண டி-ஷர்டையும், பேண்ட்டையும் எடுத்து ‌ போட்டுக்‌ கொண்டு “ஓய் நான் வெளிய போறேன்.. நீ வந்து டோர லாக் பண்ணிக்கோ.” என்று சொல்ல, “அது எல்லாம் எனக்கு தெரியும். நீ முதல்ல வெளியே கிளம்பு காத்து வரட்டும்.” என்று திமிராக சொன்ன தேன்மொழி கதவுக்கு அருகில் நின்று கொண்டிருந்த அர்ஜுனை வெளியில் தள்ளி டோரை செய்தாள்.

அவனை வெளியில் துரத்தி அனுப்பிய பிறகு தான் அவளுக்கு நிம்மதியாகவே இருந்தது. “கொஞ்ச நேரமாவது சும்மா இருக்கிறானா இவன்? இவனை சமாளிக்கிறதுக்கு 30, 40 ஸ்டூடண்ட்சை ஒரே கிளாஸ் ரூம்ல வச்சு ஈசியா சமாளித்துவிடலாம்.” என்று புலம்பியபடி ஆடைகளை மாற்றிக் கொண்ட தேன்மொழி ஹேர் டிரையரில் தலை காய வைக்க தொடங்கினாள்.

அப்போது தான் அர்ஜுனும் தலைக்கு குளித்தது அவளுக்கு ஞாபகம் வர, அவசர அவசரமாக முகத்தில் கொஞ்சம் மேக்கப் போட்டு வைத்துக் கொண்டு ஹேர் டிரெயருடன் வெளியில் சென்ற தேன்மொழி அர்ஜுன் ஹாலில் அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு அவன் அருகில் சென்றாள். அவளை நிமிர்ந்து பார்த்த அர்ஜுன் “இன்னைக்கு நைட்டு நம்ம எல்லாரும் டின்னருக்கு வெளிய போலாமா? நாங்க எல்லாரும் அத பத்தி தான் பேசிட்டு இருக்கோம்.” என்று கேட்க, அருகில் இருந்த பிளக் பாயிண்ட் இல் ஹேர் டிரையரை செருகிய தேன்மொழி ‌ அவனது தலை முடியை காய வைத்தபடி “நான் சமைச்சத சாப்பிடறதுக்கு தானே சார் ரஷ்யாவுல இருந்து இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க.. அப்புறம் பெரிய பொய் சாப்பிடுறேன்னு சொன்ன என்ன அர்த்தம்? உங்களுக்கு இப்ப தான் உடம்பு சரி இல்லாம போச்சு. அதுக்குள்ள outside food எல்லாம் வேண்டாம்.” என்றாள்.

அவர்கள் பேசியதை கேட்டபடி அங்கே வந்த விஜயா “ஆமா மாப்ள.. நான் தான் ஓரளவுக்கு சாப்பிடறதுக்கு தேவையானது எல்லாத்தையும் ஏற்கனவே ரெடி பண்ணிட்டேன்னு சொன்னேனே.. நாங்களே சமைச்சிடுறோம் ஒன்னும் பிரச்சனை இல்ல.” என்று சொல்ல, பல மணி நேரங்கள் பயணம் செய்து வந்ததாலும், இங்கே வந்து தேன்மொழியுடன் சேர்ந்து ஹார்டுவேர்க் வேறு சிறப்பாக செய்து நன்கு கலைத்துப் போயிருந்த அர்ஜுன் “ஓகே அத்தை, எனக்கும் டயர்டா இருக்கு. எல்லாரும் சாப்பிட்டு தூங்கலாம். நாளைக்கு எங்கையாவது வெளிய போறதுக்கு ப்ளான் பண்ணலாம்.” என்று சொல்லி விட்டான்.

அவனுடைய தலை‌ முடியை முழுவதாக ஹேர் டிரையர் உதவியுடன் உலர்த்திய தேன்மொழி ‌ பிலக்கில் இருந்து அதை ‌ அதைப் பிடுங்க போக, அவள் கையைப் பிடித்து தடுத்த அர்ஜுன் “உன் hairல‌ இருந்து சுட்டு சுட்டா தண்ணி வடியுது. முதல்ல உன்னோட hair-ஐ தான் காய வைக்கணும்.” என்று சொல்லி தேன்மொழியை இழுத்து தன் மடியில் அமர வைத்து ஹேர் டிரையர் மூலமாக அவள் கூந்தலை உலர்த்த தொடங்கினான்.

அதனால் கூச்சத்தில் நெளிந்த தேன்மொழி “ஓய்.. என்ன பண்ற நீ? நடு ஹால்ல உட்கார்ந்திட்டு இப்படித் தான் பண்ணுவாங்களாம்? எல்லாரும் நம்மள தான் பாக்குறாங்க அர்ஜுன்.” இன்று கிசுகிசுக்க, “பாத்தா பாக்கட்டும்.. இதுல என்ன டி இருக்கு? தலை காய வைக்க ஹெல்ப் பண்றது எல்லாம் ஒரு விஷயமா? அங்க நம்ம வீட்ல பப்ளிக்கா sometimes French kiss கூட பண்ணுவாங்களே.. அதை எல்லாம் நோட் பண்ணதில்லையா நீ! முக்கியமா நம்ம கிட்ஸ் இதையெல்லாம் பார்த்து வளரனும். அப்ப தான் மேரேஜ் லைஃப்ன்னா என்னனு அவங்களுக்கும் புரியும்.” என்று சாதாரணமாக சொன்னான் அர்ஜுன்.

“அது ரஷ்யால வேணா ஓகேவா இருக்கலாம். இது இந்தியா அதுவும் தமிழ்நாடு. அம்மாவே நம்மள இப்படி பார்த்தா என்ன நினைப்பாங்க? என் தம்பி வயசு பையன்‌. இதை எல்லாம் பார்த்து கெட்டுப் போயிட மாட்டானா? என்னை விடு முதல்ல.. நானே ஹேர் dry பண்ணிக்கிறேன்.” என்ற தேன்மொழி அவனை விட்டு விலகி எரிந்து கொள்ள முயற்சி செய்ய, அவள் இடுப்பில் கை வைத்து நன்றாக அவளை லாக் செய்து பிடித்துக் கொண்ட அர்ஜுன், மற்றொரு கையால் அவளுடைய தலை‌ முடியை உலர்த்தியபடி “நான் ஆராதனாவே பாக்கலாம்னு சொல்றேன். உனக்கு உன் தம்பி தான் இப்ப பிரச்சனையா? நியாயமா அவங்க எல்லாம் உன் ஹஸ்பண்ட் கூட நீ ஹாப்பியா இருக்கிறதை பார்த்து சந்தோஷம் தான் படணும்.” என்றான்.

“அச்சோ ஆள விடு டா சாமி.. உன் கிட்ட பேசி எல்லாம் என்னால ஜெயிக்க முடியாது. கிச்சன்ல நிறைய வேலை இருக்கு நான் போறேன்.” என்ற தேன்மொழி தனது நீண்ட கூந்தலின் நுனியில் கொண்டை போட்டவாறு வலுக்கட்டாயமாக அர்ஜுனிடம் இருந்து விலகி கிச்சனுக்கு ஓடி விட்டாள்.

“இரு டி, இன்னைக்கு நைட்டு நீ என் கூட தானே தூங்குவ உன்ன வச்சிக்கிறேன்!” என்று நினைத்த அர்ஜுன் ஆராதனாவை அழைத்து தன் அருகில் அமர வைத்துக் கொண்டு “ஆமா நீ புதுசா டான்ஸ் கிளாஸ் எல்லாம் போயிட்டு இருக்கேன் கேள்விப்பட்டேன்.. எப்படி போகுது உன் கிளாஸ்? ஏதாவது புதுசா கத்துக்கிட்டியா?” என்று கேட்க, “எஸ் டாடி, நான் அங்க போய் நமஸ்காரம் அப்புறம் இன்னொரு டான்ஸ் அது பேரு என்னமோ சொன்னாங்க எனக்கு மறந்திருச்சு. ஆனா பரதநாட்டியம் கத்துகிறதுல நிறைய லெவல் இருக்குன்னு சொன்னாங்க. அதுல பர்ஸ்ட் லெவல் நான் ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருக்கேன் இப்போ! என் டான்ஸ் டீச்சர் மம்மியோட ஃபிரண்டாம். அவங்கள மாதிரியே என் டீச்சரும் ரொம்ப ஸ்வீட். எனக்கு சூப்பரா டான்ஸ் சொல்லிக் கொடுக்குறாங்க.” என்றாள் ஆராதனா.

இப்படியே அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, சாப்பாடு தயாரான பிறகு தங்களை வந்து அழைக்குமாறு ஆதவனிடம் சொல்லிவிட்டு பிரிட்டோவும், கிளாராவும் தங்களது ரூமிற்கு சென்று விட்டார்கள். தனது காலேஜ் அசைன்மென்ட்களை ஹாலில் ஒரு ஓரமாக அமர்ந்து எழுதிக் கொண்டிருந்த ஆதவன் நடக்கும் அனைத்தையும் கவனித்துவிட்டு “இதுவரைக்கும் நான் லவ் பண்றது, கல்யாணம் பண்றத பத்தி எல்லாம் யோசிச்சதே இல்ல. பட் அக்காவையும் மாமாவையும் பார்த்ததுக்கு அப்புறம் தான் நெஜமாவே அதெல்லாம் நடந்தால் நல்லதா இருக்கும் போல லைஃப்னு தோணுது.

மாமாவுக்கு தேனு கிடைச்ச மாதிரி எனக்கும் ஃபியூச்சர்ல ‌ஒரு பொண்ணு கிடைச்சா நல்லா தான் இருக்கும். பட் இப்போதைக்கு எல்லாம் அவசரப்பட்டு லவ்ல விழுந்திடக் கூடாது. அப்புறம் ஸ்போர்ட்ஸ்ல ப்ராப்பரா கான்சன்ட்ரேட் பண்ண முடியாது. ஆல்ரெடி ஸ்டடிஸ் அண்ட் ஸ்போர்ட்ஸ் இரண்டையும் மேனேஜ் பண்றதே பெரிய விஷயமா இருக்கு.. இதுல நடுவுல ஒரு பொண்ணை வேற மேனேஜ் பண்ணனும்னா நம்மளால எல்லாம் சாத்தியமா முடியாதுப்பா!” என நினைத்து பெருமூச்சு விட்டான்.

- மீண்டும் வருவாள் 💕

அடுத்தடுத்த படைப்புகள் தொடர்பான அப்டேட்டுகளை பெற “Thenaruvi Tamil novels” facebook குரூப்பில் இப்போதே இணையுங்கள். ♥️

(என்னை மறக்காமல் பி
ரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-88
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: jansi