மஞ்சம்-86

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அவள் கண்கள் பதட்டத்துடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தது. அவள் அருகில் சென்ற அர்ஜுன் அந்த மையிட்ட விழிகளில் தீராத மயக்கம் கொண்டவனை போல அவளையே இமைக்க மருந்து பார்த்தான். அவர்கள் இருவரின் கண்களும் ஒன்றோடு ஒன்று கலந்தன.



அர்ஜுன் அவளை முத்தமிடுவதற்காக நெருங்கி அவள் அருகில் சென்றான். பதட்டத்தில் தேன்மொழிக்கு வியர்த்து கொட்ட, படபடவென்று வேகமாக துடிக்கும் அவளுடைய இதய துடிப்பின் சத்தம் அவளுக்கே கேட்டது. அவள் மெல்ல நகர்ந்து நகர்ந்து பின்னே சென்று அந்த கட்டிலின் முனைக்கு வந்து சேர்ந்து விட்டாள். இதற்கு மேல் அவளால் நகர முடியாமல் போக, அவள் அருகில் சென்ற அர்ஜுன் அவளது முகத்தின் அருகில் குனிந்து “என்ன விட்டுட்டு உன்னால எங்கேயும் போக முடியாது.” என்று ஹாக்கி வாய்ஸில் சொன்னான்.

அவனுடைய சூடான மூச்சுக்காற்று அவள் முகத்தில் பட்டுக் கொண்டிருக்க, பெட்ஷீட் துணியை இறுக்கமாக தன் இரு கைகளாலும் பிடித்துக் கொண்ட தேன்மொழி “இப்ப நீங்க என்ன பண்ண போறீங்க?” என்று திக்கி திணறி கேட்டாள். தன்னிடம் பேசும் போது அவளுடைய இதழ்கள் மெல்ல அசையும் அழகை அவ்வளவு அருகில் கண்டு ரசித்துக் கொண்டிருந்த அர்ஜுன் தன் விரல்களால் அவள் முகத்தில் கோலம் போட்டபடி “என்ன வேணாலும் பண்ணலாம் பேபி. நீ எதில இருந்து ஸ்டார்ட் பண்ணலாம்னு சொல்றியா?” என்று ஒரு கிரகத்துடன் கேட்டான்.

“அன்னைக்கு லாஸ்ட்டா நான் போட்டோல பார்க்கும்போது இவர் ரொம்ப வீக்கா இருக்குற மாதிரி தெரிஞ்சாரு. இப்பயும் physically அப்படியே இருக்கிற மாதிரி தான் இருக்காரு.‌ பட் இப்போ ஆளு ரொம்ப energetic ஆ இருக்கிற மாதிரி தெரியுறாரே!” என்று நினைத்த தேன்மொழி “நீங்க இப்ப தானே வந்தீங்க! முதல்ல போய் ரெப்ரெஷ் ஆகிட்டு டிரஸ் சேஞ்ச் பண்ணுங்க. ஆல்ரெடி நீங்க ரொம்ப ஹாட்டா இருக்கும். இதுல எவ்ளோ நேரம் கோட் சூட் எல்லாம் போட்டுட்டு இருப்பீங்க? உங்களுக்கு வேர்க்குது பாருங்க..!!” என்று சொல்லிவிட்டு அவன் நெற்றியோரம் வரைந்த வியர்வையை தன் கையால் துடைத்துவிட்டு “நான் போய் ஏசி ஆன் பண்றேன்.” என்று சொன்னபடி அவனை விலக்கிவிட்டு எழுந்து நிற்க முயற்சி செய்தாள்.

அவள் தோள்களை இறுக்கமாக பிடித்துக் கொண்ட அர்ஜுன் அவளை ஒரு இன்ச் கூட அசையப்படவில்லை. அவனுடைய கூர்மையான பார்வை அவள் உடலை தொலைத்துக் கொண்டிருந்தது. அந்த அதிக கதிர்வீச்சுகள் கொண்ட காந்த பார்வையை தாங்க முடியாமல் தேன்மொழி சட்டென தன் முகத்தை திருப்பிக் கொள்ள, அவள் முகத்தை தன் பக்கம் திரும்பிய அர்ஜுன் “கிட்டத்தட்ட நீ என்ன பாத்து 10 டேஸ் ஆகப்போகுது. சோ இப்ப என்ன நீங்க ஆசையா பாக்க வேண்டாமா? என்ன‌ டி மூஞ்சிய திருப்பிக்குற? எனக்கெல்லாம் எப்ப டா உன்ன முழுசா பாப்போம்னு இருக்கு.” என்று சொல்லிவிட்டு பெருமூச்சு விட்டான்.

அவன் அப்படி சொன்னவுடன் அவளுக்கு ஏதோ போல் இருக்க, வெட்கத்தில் சிவந்த முகத்துடன் அவனைப் பார்த்த தேன்மொழி “என்னங்க இப்படி எல்லாம் பேசுறீங்க? திடீர்னு யாராவது வந்து கதவ தட்டுனாங்கன்னா என்ன பண்றது?” என்று கொஞ்சம் கூச்சுத்துடன் கேட்டாள். அப்போது அவள் முகம் போன போக்கை பார்த்து சத்தமாக சிரித்த அர்ஜுன் “என்ன டி இத்தனை நாளா என் பேர சொல்லி கூப்பிட்டு நீ ஏண்டா இப்படி பண்ற அப்படி பண்றன்னு சண்டை போட்டு எகிறு எகிறுன்னு எகிறின.. இப்ப என்ன அப்படியே ஒரேடியா பம்புற? மறுபடியும் மரியாதை கூடுது! என்ன உனக்கு மறுபடியும் என்ன பார்த்து பயம் வந்துருச்சா?” என்று கிண்டலாக கேட்டான்.

அப்போது சட்டென அவனுடைய ஒற்றை கை அவளது மெலிடையே இறுக பற்றி அதில் தன் அழுத்த கைகூடியது. அதில் லேசாக ஆஆஆ என்று முனகிய தேன்மொழிக்கு அவனாகவே இப்போது தான் அவன் மீது கோபப்பட்டதை ஞாபகப்படுத்தி விட்டதால், மீண்டும் அனைத்தும் ஞாபகம் வந்து விட, “அதானே.. நான் எதுக்கு என் ஹஸ்பண்டை பார்த்து பயப்படணும்? எனக்கு ஒன்னும் உன்னை பார்த்து எல்லாம் பயம் இல்ல அர்ஜுன். ஆக்சுவலி நீயும் நானும் இப்ப சண்டை போட்டுட்டு இருக்கோம். இந்த சந்துல சிந்து பாடறதுன்னு சொல்லுவாங்கல்ல அந்த மாதிரி இப்ப பண்ணிட்டு இருக்க நீ. ஒழுங்கா கைய எடு டா. இல்லனா சத்தமா கத்திடுவேன். இது ஒன்னும் நம்பரும் கிடையாது சவுண்ட் ப்ரூஃப் எல்லாம் இருக்கிறதுக்கு. நான் கத்துனா இந்த வீட்ல இருக்குறவங்கள்ல இருந்து பக்கத்து வீட்டுக்காரங்க வரைக்கும் எல்லாரும் வந்துருவாங்க.” என தன் முகத்தை உருரென்று வைத்துக் கொண்டு கோபமாக சொன்னாள்.

பின் சும்மா இருக்காமல் அவளே தனது இருக் கைகளையும் அவனது தோள்களில் வைத்து அவனை தன்னை விட்டு விலக்கித் தள்ள முயற்சி செய்தாள். அவள் எவ்வளவு முயற்சி செய்தும் அவளுடைய பிஞ்சு கைகளால் அவனது இரும்பு தேகத்தை ஒரு இன்ச் கூட அசைக்கவே முடியவில்லை. இருப்பினும் தேன்மொழி தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் தன் முழு சக்தியையும் பயன்படுத்தி அவனை தன்னை விட்டு பிடித்து தள்ளும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டாள்.

“ம்ம்.. என் ஹனி பேபிக்கு எவ்ளோ ஸ்டென்த் இருக்குனு நானும் பாக்குறேன்.” என்று நினைத்த அர்ஜுன் அவளைப் பார்த்து ஒரு பொன்முறுவலை சிந்தியபடி அசையாமல் அப்படியே இருந்தான். அவனை பிடித்து தள்ளி தள்ளி கலைத்துப்போன தேன்மொழி ஒரு கட்டத்திற்கு மேல் சோர்ந்து போய் அப்படியே மூச்சு வாங்க படுத்து விட்டாள். இப்போது அவனைவிட அவளுக்கு தான் வியர்த்துக் கொட்டியது. அவள் பேக மூச்சுக்கள் வாங்கும்போது அவளுடைய மார்பு மேலே சென்று கீழே வர அவளையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுன் பெருமூச்சுவிட்டு தன் உடலின் உஷ்ணத்தை சீர்படுத்திவிட்டு “நான் தான் ஹாட்டா இருக்கேன்னு நினைச்சேன். ஆனா நீ என்ன விட ரொம்ப ஹாட்டா இருக்கியே ஹனி பேபி.. நீ இப்படி இருந்தா, உன்ன பாத்துட்டு நான் எப்படி சும்மா இருக்கிறது? இதெல்லாம் ரொம்ப மோசம். இவ்ளோ அழகான பொண்டாட்டி புருஷன் கிட்ட என் கிட்ட வராத போன்னு சொல்லலாமா? என்ன மாதிரி ஒரு ஹாட் அண்ட் ஹான்ட்சமான ஹஸ்பண்ட் கிடைச்சா நல்லா இருக்கும்னு எத்தனை பொண்ணுங்க ஏங்கிட்டு இருக்காங்க தெரியுமா? உனக்கு மட்டும் ஏன் டி தெரியவே மாட்டேங்குது? சொல்லு வாய திறந்து சொல்லு..!! நான் handsome-மா இருக்கனா இல்லையா?” என்று அவளுடைய கீழ் உதட்டை தன் இரண்டு விரல்களால் பிடித்து இழுத்தபடி கேட்டான்.

தேன்மொழிக்கும் அர்ஜுனிற்கும் திருமணம் ஆன விஷயத்தை நியூஸை பார்த்து தெரிந்து கொண்ட பிறகு தேன்மொழியுடன் படித்தவர்கள், அக்கம் பக்கத்தில் உள்ள பெண்கள் என ஏராளமானவர்கள் அர்ஜுன் மிக அழகானவனாகவும், திறமையானவனாகவும், தன் மனைவியை நேசிக்க தெரிந்தவனாகவும் இருக்கிறான் என்று எப்படி எப்படியோ அவனை பாராட்டி தள்ளினார்கள். அதையெல்லாம் கேட்டு கேட்டு பொறாமையில் பொங்கிய தேன்மொழிக்கு “என்ன இப்படி என் புருஷன் மேல எல்லாரும் கண்ணு வைக்கிறாங்க?” என்று கூட தோன்றியது.

இப்போது அதை நினைத்துப் பார்த்த தேன்மொழி “ஆமா நீங்க அப்படியே சினிமா ஸ்டார் மாதிரி handsome-ஆ இருக்கீங்கன்னு தான் எல்லாரும் சொல்லிக்கிறாங்க. அதுக்கு என்ன இப்ப? முதல்ல அந்த பக்கம் நகர்ந்து போங்க. இப்படி வந்து என் மேல விழுந்துட்டு இருந்தா எனக்கு ஹெவியா இருக்காதா? உங்க வெயிட் என்ன.. ஏன் வெயிட் என்ன? என்னால மூச்சு கூட விட முடியல. எனக்கு காது நல்லா கேட்கும். சோ எதுவா இருந்தாலும் தலை நின்னு பேசுங்க. நீங்க அழகா இருக்கீங்கறதுக்காக சும்மா இப்படி குளோசப்ல வந்து வந்து உங்க face-ஐ காட்டி என்னை அட்ராக்ட் பண்ண ட்ரை பண்ணனும்னு ஒன்னும் அவசியம் இல்லை.” என்று படபடவென பொறிந்து தள்ளினாள்.

‌“என்ன டா இவ நம்ப எந்த பக்கம் பால் போட்டாலும் கரெக்டா 6 அடிக்கிறா? அப்படியே கொஞ்சம் ரொமான்ஸ் பண்ணி இவ மூடை சேஞ்ச் பண்ணி டாடி கொடுத்த 7 டேய்ஸ் டைம் முடியறதுக்குள்ள இவளை கன்வின்ஸ் பண்ணி அப்படியே கிலாரா பிரிட்டோ மேரேஜ் முடியறதுக்குள்ள எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டு இவளை இங்க இருந்து கூட்டிட்டு போயிடலாம்னு நினைச்சேன். ஆனா நம்ம எங்க சுத்தினாலும் கரெக்டா இவ அங்க தான் வர்றா. என் மேல இருக்கிற கோபத்தை மறக்கவே மாட்டேங்குறா. இவளை என்ன பண்ணியும் நம்மளால டைவர்ட் பண்ண முடியாதுன்னு நல்லா தெரிஞ்சிருச்சு. இதுக்கு மேல இவ கால்ல விழுந்து சரண்டர் ஆகுறது தவிர வேற வழி இல்ல.” என்று நினைத்த அர்ஜுன் சட்டென்று அவள் வாய் மீது தன் கையை வைத்து பொத்தி அவளை பேசவிடாமல் செய்தான்..

அப்போதும் தன் இரு கைகளால் அவனுடைய தோள்களில் சரமாரியாக அடித்த தேன்மொழி “ம்ம்ம்.. ஏய் அர்ஜுன் மாடு.. கையை எடு டா.. நான் பேசணும்.. அர்ஜுன்.. ம்ம்ம்.. என்னால பேசவே முடியல.” என்று அப்போதும் கூட சிரமப்பட்டு முனகிக் கொண்டு இருந்தாள். ஆனால் இன்று அவளிடம் எப்படியாவது பேசி அவளை சமாதானப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த அர்ஜுன் பேசுவதற்காக தன் வாயை திறக்க, “நான் இவ்ளோ கத்துறேன். கைய எடுக்காமலேயே இருக்கியா நீ? என்ன ஒரு male dominance mind set! இப்படி எல்லாம் உன்னால இந்த தேன்மொழியை கண்ட்ரோல் பண்ணவே முடியாது அர்ஜுன்.” என்று நினைத்து கோபித்துக் கொண்ட தேன்மொழி அவன் கையைப் பிடித்து நன்றாக கடித்து வைத்து விட்டாள்.



உடனே வழியில் ஆஆஆஆ.. என்று லேசாக சத்திய அர்ஜுன் அவள் வாயில் இருந்து தன் கையை எடுத்தான். அப்போதும் அவனுடைய மொத்த உடலும் அவள் மீது கிடந்ததால், தேன்மொழியால் அவனை விட்டு விலகிச் சொல்ல முடியவில்லை. அதனால் கொதிக்கும் எரிமலையைப் போல அனல் கக்கும் பார்வையை அவனை நோக்கி அவள் வீசிக் கொண்டிருந்தாள்.

உண்மையிலேயே அவளுடைய அனல் கக்கும் பார்வையை கண்டு ஒரு நொடி ஆடிப்போன அர்ஜுன் “ஏய் ராட்சசி! உனக்கு எல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சிக்யே இல்லையா டி? இப்படி தான் கட்டின புருஷனை கடிச்சு வைப்பியா? நீ சொன்னது எல்லாத்துக்கும் ஓகே. இனிமே உனக்கு பிடிக்காதது எதையும் பண்ண மாட்டேன்னு சொல்றதுக்காக தாண்டி அவ்ளோ தூரம் ரஷ்ஷியால இருந்து இங்க கிளம்பி வந்தேன். அதை நான் சொல்லி முடிக்கிறதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்? எதுக்கு இப்படி வன்முறையில எல்லாம் இறங்குற? எனக்கு எப்படி வலிக்குது தெரியுமா? பாவமே ஆல்ரெடி நம்ம புருஷனுக்கே உடம்பு சரியில்லையே.. இவ்வளவு தூரம் டிராவல் பண்ணி வந்திருக்கானே அவனை ஏதாவது பண்ணி கவனிப்போம்னு உனக்கு கொஞ்சம் கூட எண்ணமே வரல. சரி அது கூட பரவால்ல.. நீ எல்லாம் மனுஷியா இல்ல vampire-ரா? இப்படி கிடைக்கிற?” என்று தன் கையை உதவியபடி கேட்டான்.

-மீண்டும் வருவாள் 💕
 

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-86
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: jansi