மஞ்சம்-85

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
தேன்மொழியின் ரூமிற்குள் நுழைந்த அர்ஜுன் டோரை லாக் செய்துவிட்டு அவளை குறும்புடன் பார்த்தபடி அவள் அருகில் சென்றான். அவன் தன் அருகில் வர வர பின்னோக்கி சென்ற தேன்மொழி “இப்ப உன்னை யார் இங்க வர சொன்னது? உனக்கு ஸ்டே பண்றதுக்கு வேற இடமே கிடைக்கலையா? இந்த சின்ன வீட்ல எப்படி உன்னால இருக்க முடியும்? கிளாரா, பிரிட்டோ மேரேஜ்க்கு தானே நீ வந்த.. எங்கேயாவது ஹோட்டல்ல ரூம் போட்டு ஸ்டே பண்ண வேண்டியது தானே!” என்று அவனிடம் தன் கோபம் இன்னும் குறையவில்லை என்று உணர்த்துவதற்காக எப்படியோ அவனுடைய ஆளுமை பொருந்திய கண்கள் தன்னை தாக்கினாலும் ஒரு வழியாக தன்னை நிலைப்படுத்திக் கொண்டு திக்கித் திணறி கேட்டாள்.

தன் உதட்டை கோனலாக வளைத்து அவளைப் பார்த்து புன்னகைத்த அர்ஜுன் இரண்டே எட்டில் அவள் அருகில் சென்று அவளுடைய இடுப்பில் கை வைத்து அவளை தன் பக்கம் இழுந்து “என் மாமியார் வீடு இங்க இருக்கும்போது நான் எதுக்கு டி வேற எங்கயோ போய் ஸ்டே பண்ணனும்? என் அத்தை சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கு இல்ல? நாளைக்கு உனக்கும் எனக்கும் அவங்க விருந்து வைக்கப் போறாங்களாம். ஆனா எனக்கு இப்ப இருக்கிற பசிக்கு உடனே விருந்து சாப்பிடணும்னு தோணுது. அதான் உன்ன பாக்குறதுக்காக ஆசையா ஓடோடி வந்துட்டேன் டி என் பொண்டாட்டி!” என்று உற்சாகமான குரலில் அவளுடைய கீழ் உதட்டை இழுத்து அவளை கொஞ்சி விளையாடியபடி சொன்னான்.

அதில் ஒரு நொடி கிறங்கிப் போனாலும் “இல்ல தேன்மொழி இவன் எப்பயும் இப்படித் தான் உன்னை நடிச்சு ஏமாத்துறான். இதை எல்லாம் பார்த்து நீ மயங்க கூடாது. நீ இப்ப தான் ஸ்ட்ரோங்கா இருக்கணும். இல்லைனா எப்பயுமே உன்னால இவன மாத்தவே முடியாது.” என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்ட தேன்மொழி அவன் கையை தட்டிவிட்டு “நீ அவங்களோட மேரேஜை அட்டெண்ட் பண்றதுக்காக தானே உடம்பு சரி இல்லைனாலும் பரவாயில்லைன்னு உடனே கிளம்பி வந்த! அப்புறம் என்னமோ எனக்காக வந்த மாதிரி எதுக்கு என் கிட்ட நடிக்கிற? இந்த நடிப்பை எல்லாம் பார்த்து இனிமே நான் ஏமாற மாட்டேன் அர்ஜுன்.

நான் கோபமா இந்தியாவுக்கு போறேன்னு சொன்னதுக்கு அப்புறம் கூட நீ என்ன கண்டுக்காம கிளம்பி ஆபீஸ்க்கு போய் ரெண்டு நாளா வீட்டுக்கு வராமயே இருந்தியே.. அப்பயே எந்த அளவுக்கு நீ என்ன லவ் பண்றன்னு எனக்கு நல்லா தெரிஞ்சு போச்சு.” என்று ஆத்திரம் பொங்க சொன்னாள்.

பொதுவாகவே பெண்களின் மீது ஆண்களுக்கு ஆசை 60 நாள். பின் 30 நாள் இருக்கும் அவ்வளவு தான், அதற்கு மேல் அவர்கள் பெண்களை மதிக்க மாட்டார்கள், கண்டுகொள்ள மாட்டார்கள் என்று எல்லாம் மற்றவர்கள் சொல்லி அவள் கேள்விப்பட்டு இருக்கிறாள். ஆனால் தங்களுக்கு அபிஷியலாக திருமணமாகி இன்னும் முழுவதாக இரண்டு மாதங்கள் கூட முடியவில்லை. அதற்குள் இவன் தன்னைப் பிரிந்து தயாராக இருக்கிறான் என்று நினைக்கும் போது தேன்மொழிக்கு இதயம் கனத்தது. அதனால் தான் தன் வார்த்தைகளை ஊசியைப் போல அவன் மீது இறக்கிக் கொண்டிருந்தாள் அவள்.

அது அவனுக்கும் புரிந்தது. இனி இவளிடம் தான் கோபப்பட்டால், பதிலுக்கு அவளும் தன் மீது கோபப்படுவாள். இருவருக்கும் இடையிலான தூரம் அதிகரித்துக் கொண்டே இருக்குமே தவிர, எதுவும் முடிவுக்கு வராது என்று நன்கு இத்தனை நாட்களில் புரிந்து கொண்ட அர்ஜுன் “இல்ல அர்ஜூன் அவ என்ன சொன்னாலும் இன்னைக்கு நீ கோபப்படவே கூடாது. அவளை நீ கன்வின்ஸ் பண்றதுக்கு தான் வந்திருக்க. வந்த வேலையை மட்டும் பாரு.” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு அவளை பேசவிடாமல் செய்ய வேண்டும் என் நினைத்து ‌ சட்டென அவள் அருகில் சென்று அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

ஆனால் அப்போதும் இவனிடம் அடங்கி செல்லக் கூடாது என்று உறுதியாக இருந்த தேன்மொழி “என்ன விடு அர்ஜுன். முதல்ல நான் கேட்ட கொஸ்டினுக்கு ஆன்சர் பண்ணு. என் மேல ட்ரு லவ் இருந்திருந்தா, எப்படி உன்னால என்ன இக்னோர் பண்ண முடியுது? ஒருவேளை நிஜமாகவே கோபப்பட்டு உன் லைஃப்ல இருந்து நான் ஒரேடியா போய்ட்டா என்ன ஆகும்னு உனக்கு கவலையே இல்லையா?” என்று கலங்கிய கண்களுடன் உடைந்த குரலில் கேட்டாள்.

அவள் தொடர்ந்து அவனைவிட்டு விலக்கித் தள்ள முயற்சி செய்தாள். ஆனால் அவனுடைய இரும்பு பிடியில் இருந்து அவளால் விலகவே முடியவில்லை. அதனால் என்னவோ வாழ்க்கையே வெறுத்துப் போனது போல உடனே அவள் அவன் முதுகில் சரமாரியாக அடித்தபடி தேம்பி தேம்பி அழுதாள். அவள் அவனைவிட உயரம் குறைவாக இருந்ததால் , அவள் முகம் சரியாக அவன் நெஞ்சில் புதைந்திருக்க, அவள் கண்ணீர் அவன் சட்டையை நினைத்தது.

இவள் இப்படி நடந்து கொள்வது எல்லாம் தன் மீது இவளுக்கு இருக்கும் அதீத காதலின் வெளிப்பாடு தான் என்று உணர்ந்த அர்ஜுன் அவளை இன்னும் நன்றாக தன்னுடன் சேர்த்து இறுக்கமாக அணைத்துக் கொண்டு அவள் நெற்றியில் முத்தமிட்டு விட்டு, “ஆமா நான் உன் மேல கோவப்பட்டேன் தான். உன்னை ignore பண்ணேன் தான். பட் அதனால எனக்கு உன் மேல true லவ் இல்லைன்னு எல்லாம் சொல்லாத ஓகேவா? எனக்கு கேட்க கஷ்டமா இருக்கு ஹனி பேபி. உண்மைய சொல்லனும்னா, நான் உன்ன ரொம்ப லவ் பண்றதுனால தான் அப்ப உன்ன விட்டு கொஞ்ச தூரமா இருந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன்.

இன்னும் உன்ன பத்தி நான் தெரிஞ்சுக்கிறதுக்கு நிறைய இருக்கு. அதே மாதிரி தான் உனக்கும் இன்னும் என்ன பத்தி தெரிஞ்சுக்க நிறைய இருக்கு. எனக்கு கோபம் வந்தா அத கண்ட்ரோல் பண்ண தெரியாது தேன்மொழி. நான் சொல்ல வருத புரிஞ்சுக்காம நீ மறுபடியும் மறுபடியும் உனக்கு தோன்றது தான் சரின்னு பேசிகிட்டு இருந்தேன்.

என்ன இவ இப்படி இருக்கான்னு எனக்கு அப்படி ஒரு கோபம் உன் மேல. நான் அங்கேயே இருந்து, ஆல்ரெடி நீ சோகமா இருந்தா. இதுல நான் வேற மறுபடியும் உன்ன ஏதாவது சொல்லி ஹர்ட் பண்ணட்டா என்ன பண்றதுன்னு நான் என் ஸ்டடி ரூமுக்கு போய்ட்டேன். கோபம் குறைஞ்ச உடனே நானா வந்து உன் கிட்ட பேசி இருப்பேன். பட் அதுக்குள்ள என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம நீ போய் எங்க டாடி கிட்ட பேசி இந்தியா போகிற அளவுக்கு பிளான் பண்ணிட்ட. சோ இன்னும் என் கோபம் அதிகமாயிடுச்சு. அதானா வீட்டுக்கு வராம ஆபீஸ்ல இருந்துட்டேன்.

என் டிசைன் இப்படி தாண்டி. என்னால இப்படித்தான் இருக்க முடியும். உன்னை இம்ப்ரஸ் பண்றதுக்காக உன் முன்னாடி மட்டும் என்னால உனக்கு புடிச்ச மாதிரி நடிக்க முடியாது. எனக்கு அது தெரியவும் தெரியாது. நான் உன்ன இக்னோர் பண்ணாலும், உன் மேல கோவமா இருந்தாலும், நானா உன் கிட்ட வந்து பேசவே கூடாதுன்னு நினைச்சாலும் ஒவ்வொரு செகண்டும் நான் உன்ன பத்தி மட்டும் தான் நினைச்சுட்டு இருந்தேன். நீ இல்லாம நான் எந்த அளவுக்கு suffer ஆனோன்னு எனக்கு மட்டும் தான் தெரியும். நான் சொன்னாலும் அதை உன்னால புரிஞ்சுக்க முடியாது.” என்று உடைந்த குரலில் சொன்னான் அர்ஜுன்.

அவன் கண்களும் கூட லேசாக கலங்கியது. அர்ஜுன் அவளைப் பிரிந்திருக்கும் போது சில நேரங்களில் எல்லாம் எங்கே சியா தன்னை விட்டு மொத்தமாக பிரிந்து சென்றதைப் போல, தேன்மொழியும் சென்று விடுவாளோ ‌ என்று எல்லாம் எப்படி எப்படியோ யோசித்து பயந்திருக்கிறான். அதைப்பற்றி அவன் யாரிடமும் சொன்னதில்லை.

அர்ஜுன் பேசியதை கேட்ட பிறகு மனம் உருகிய தேன்மொழி அவனை தானும் அணைத்துக் கொண்டு “சுத்தமாவே உனக்கு என் மேல பாசம் இல்லைன்னு நான் சொல்ல வரல அர்ஜுன். நான் ஆசைப்படுற மாதிரி நீ இருந்தா நல்லா இருக்குமேன்னு தான் தோணுது. நான் சொன்னத மட்டும் நமக்காக யோசித்து நீ கேட்டிருந்தா இந்த பிரச்சனையே வந்திருக்காது. நானும் உன்னை பிரிஞ்சு இந்தியா வந்திருக்க மாட்டேன். நீ இல்லாம எனக்கு மட்டும் இங்க என்ன சந்தோஷமாவா இருந்துச்சு? என்ன பாக்குறவங்க எல்லாரும் நிஜமாவே உனக்கு மேரேஜ் ஆயிடுச்சா? உன் ஹஸ்பண்ட் ஏன் உன் கூட வரலைன்னு எத்தனை கொஸ்டின் கேட்டாங்க தெரியுமா? அதுக்கு எல்லாம் என்னென்னமோ பொய் சொல்லி பதில் சொல்லும் போது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா அர்ஜுன்?” என உடைந்த குரலில் கேட்டாள்.

“எனக்கு எல்லாமே தெரியும் ஹனி பேபி. பிரிட்டோ இங்க இருந்து எல்லாத்தையும் எனக்கு அப்டேட் பண்ணிட்டு தான் இருந்தான். அதான் உன் ஹஸ்பண்ட் யாரு, நீ சொன்னா அவன் உனக்காக என்ன வேணாலும் செய்வான்னு எல்லாருக்கும் தெரியும்னு உடனே அந்த ஹோமை பில்ட் பண்ணி அத பத்தி எல்லா மீடியாவையும் பேச வச்சேன்.” என்று அர்ஜுன் சொன்னவுடன் நிமிர்ந்து அவனை காதலுடன் பார்த்த தேன்மொழி “சரி எல்லாமே ஓகே தான் அர்ஜுன். நான் முன்னாடியில இருந்து உன்கிட்ட ஒன்னே ஒன்னு தான் கேட்டுட்டு இருக்கேன். இதையெல்லாம் பண்ற நீ எனக்காக அதை மட்டும் பண்ணா என்ன? உன் கூட சேர்ந்து எந்த பிரச்சனையும் இல்லாம சந்தோஷமா வாழனும்னு ஆசைப்படுறது அவ்ளோ பெரிய குத்தமா? ப்ளீஸ் அர்ஜூன்.. எனக்காக நமக்காக இது எல்லாத்தையும் விட்டுட்டு ஒரு நிம்மதியான லைஃப் வாழறதுக்கு ரெடியா இருக்கேன்னு இப்பயாவது சொல்லு.” என்று காதல் ஏக்கங்களை கண்களில் தேக்கி வைத்து அவனை பார்த்து சொன்னாள்.


“நம்ம எங்க இவளை சுத்த விட்டாலும் கடைசில கரெக்டா இங்க தான் வந்து நிற்கிறா. அவளுக்கு என்ன வேணுமோ அதுல தெளிவா தான் இருக்கா.” என்று நினைத்த அர்ஜுன் அவளை என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் குழம்பினான். முதலில் அவளை திசை திருப்ப முடிகிறதா என்று பார்க்க வேண்டும் என்று மனதிற்குள் திட்டமிட்ட அர்ஜுன் அவளை தூக்கிக் கொண்டு போய் கட்டிலில் போட்டுவிட்டு அவள் அருகில் சென்றான்.

தான் எதிர்பார்க்கும் பதிலை அவனிடம் இருந்து வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் உள்ளுக்குள் இருந்தாலும், தன் கணவனின் அருகாமையில் தடுமாறிய தேன்மொழி பயந்த விழிகளுடன் அவனைப் பார்த்தாள். என்ன தான் அவர்கள் இருவரும் இப்போது காதலிக்க தொடங்கி இருந்தாலும், இவன் அருகில் வந்தால் இயல்பாகவே அவளுக்குள் ஒரு லேசான பயம் வருவதை அவளால் தடுக்க முடியவில்லை.

அவள் கண்கள் பதட்டத்துடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தது. அவள் அருகில் சென்ற அர்ஜுன் அந்த மையிட்ட விழிகளில் தீராத மயக்கம் கொண்டவனை போல அவளையே இமைக்க மருந்து பார்த்தான். அவர்கள் இருவரின் கண்களும் ஒன்றோடு ஒன்று கலந்தன.


- மீண்டும் வருவாள் 💕
 

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-85
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: jansi