மஞ்சம்-84

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அர்ஜுன் இப்போது கிளாரா மற்றும் பிரிட்டோவின் திருமணத்திற்காக தான் உடல்நிலை சரியில்லாத போதிலும் ரஷ்யாவில் இருந்து இந்தியா வந்திருக்கிறான் என்று நினைத்த தேன்மொழி “இப்ப கூட நீ எனக்காக வரலல்ல!” என்று நினைத்து வந்த கோபத்தில் அவனை ஆத்திரம் பொங்க முறைத்துப் பார்த்தபடி உள்ளே சென்றாள்.

பிரிட்டோ, கிளாரா இருவரையும் பார்த்து அவர்கள் தன்னை திருமணத்திற்கு அழைக்கவில்லை என்று அர்ஜுன் குறை சொல்லிக் கொண்டிருந்ததால், அவர்கள் இருவரும் வேகமாக அவன் அருகில் சென்றார்கள்.

“chief! எங்க மேரேஜ்க்கு சீஃப் கெஸ்ட்டே நீங்க தான். உங்கள கூப்பிடாம நாங்க எப்படி மேரேஜ் பண்ணுவோம்?

நான் தான் ஆல்ரெடி உங்களுக்கு கால் பண்ணி சீக்கிரம் மேரேஜ் பண்ற ஐடியால இருக்கிறேன்னு சொன்னேன்ல.. நாங்க இன்னைக்கு தான் டேட் ஃபிக்ஸ் பண்ணோம். உங்களுக்கு உடம்பு சரியில்ல நீங்க ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கீங்கன்னு நான் கால் பண்ணும் போது மிஸ்ஸஸ் பிரதாப் சொன்னாங்க. அதான் உங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நினைச்சு as usual உங்களுக்கு அப்டேட் கொடுக்கும்போது டெக்ஸ்ட் பண்ணிட்டேன். நீங்க அத இன்னும் பாக்கலையா” என்று பிரிட்டோ அவசரமான குரலில் கேட்க,

“நான் கூட உங்களுக்கு 2 த்ரீ டைம்ஸ் கால் பண்ணேன் சீஃப். நீங்க தான் ஆன்சர் பண்ணல.” என்று தன் பங்கிற்கு சொன்னாள் கிளாரா. உடனே எழுந்து நின்ற அர்ஜூன் “ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்.. பதறாதீங்க ரெண்டு பேரும். இங்க உங்கள சுத்தி என் ஆளுங்க இத்தனை பேர் இருக்காங்க.. இங்க என்ன நடக்குதுன்னு எனக்கா தெரியாது? நீ பண்ண டெக்ஸ்ட் மெசேஜ், கிலாராவோட கால்ஸ் எல்லாத்தையும் பாத்துட்டு தான் கிளம்பி வந்தேன். Anyways congratulations both of you!” என்று சொல்லிவிட்டு லேசாக புன்னகைத்தவன், தனது இரண்டு கைகளையும் விரித்து அவர்களை அணைப்பதற்காக வரவேற்றன்.‌ ‌

உடனே “Thanks Chief” என்று கோரசாக சொன்ன பிரிட்டோவும், கிளாராவும் அவனை அணைத்துக் கொண்டார்கள். அவர்கள் அன்பை பார்க்க தேன்மொழிக்கு ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் “கூட சண்டை போட்டுட்டு வந்து பொண்டாட்டி இங்க நான் குத்துக்கல்லு மாதிரி நின்னுட்டு இருக்கேன். என்ன இன்னும் நீ ஒழுங்கா பாக்க கூட இல்ல. அவங்க ரெண்டு பேரையும் ஹக் பண்ணி கங்கிராஜுலேஷன்ஸ் மட்டும் சொல்ல தெரியுமா உனக்கு?

என் மேல உனக்கு true love இருந்துச்சுன்னா, நீ என்னை இத்தனை நாளா மிஸ் பண்ணி இருந்தா நான் வந்த உடனே எந்திரிச்சு ஓடி வந்து என்ன ஹக் பண்ணி ‌ அப்படியே எல்லாரும் முன்னாடியும் தூக்கி சுத்தி ஐ லவ் யூ ஹனி பேபின்னு சொல்லி இருக்கணும்ல! சரியான கல்நெஞ்சக்காரன். இவ்வளவு தூரம் வந்தும் கூட, நானே தான் இவன் கிட்ட இறங்கி போகணும்னு எதிர்பார்க்கிறான். ம்ம்ஹும்..!!” என்று நினைத்து தனது உதட்டை சுழித்தாள்.


பின் அவன் தன்னை கண்டுக் கொள்ளாதபோது தான் மட்டும் எதற்காக அவனைப் பற்றியே யோசித்து உருக வேண்டும்? என்று நினைத்த தேன்மொழி கையில் உள்ள ஆடைகள் அடங்கிய பைகளுடன் அர்ஜுனை பார்க்காததைப் போல அப்படியே பாபாலா செய்தபடி தனது ரூமை நோக்கி நடக்க தொடங்கினாள். பிரிட்டோ, கிளாரா இருவருக்கும் அவர்களுக்குள் நடக்கும் பிரச்சினையைப் பற்றி தெரியும் என்பதால் அவர்கள் தேன்மொழியை எதையும் சொல்லி தடுக்கவில்லை.

ஆனால் அர்ஜுனுக்காக சுட சுட வாழைக்காய் பஜ்ஜி, உளுந்து வடை, மசாலா போண்டா என அனைத்தையும் சுட்டு எடுத்துக் கொண்டு கிச்சனில் இருந்து வெளியே வந்த விஜயா தேன்மொழி அர்ஜுன் இங்கே வந்திருக்கும் போது அவன் அருகில் அமர்ந்து பேசாமல் அவள் பாட்டிற்கு ரூமிற்கு செல்வதை கவனித்து விட்டு, “ஏய் தேனு நில்லு. மாப்பிள்ளை அவ்வளவு தூரத்தில இருந்து இப்ப தான் இங்க வந்திருக்காரு. பக்கத்துல இருந்து அவரை கவனிக்காம நீ எங்க உன் ரூமுக்கு போற?” என்று கேட்டபடி ஹாலிற்கு வந்து தன் கையில் இருந்த ஸ்னாக்ஸ் அடங்கிய தட்டை காஃபி டேபிளில் வைத்தாள்.

அதனால் அப்படியே உள்ளே செல்லாமல் பாதியில் நின்ற தேன்மொழி “போச்சு! அர்ஜுன் கிட்ட இருந்து கூட தப்பிச்சிடலாம். ஆனா இந்த அம்மா கண்ணுல இருந்து மட்டும் தப்பிக்கவே முடியாது.” என்று நினைத்து தன் அம்மாவை திரும்பி பார்த்தவள், “நாங்க ஷாப்பிங் முடிச்சு இப்ப தான் மா வீட்டுக்கு வந்தோம். அதான் வாங்கிட்டு வந்த திங்ஸ் எல்லாத்தையும் முதல்ல கொண்டு போய் உள்ள வச்சுட்டு வந்துடலாம்னு போனேன்.” என்றாள்.

“அதான் வாங்கிட்டு வீட்டுக்கு வந்துட்டீங்க இல்ல? அத கொண்டு போய் உள்ள வைக்கிறது தான் இப்போ உனக்கு ரொம்ப முக்கியமா? நானும் ஒரு மணி நேரமா மாப்பிள்ளை வந்திருக்காரு சீக்கிரம் கிளம்பி எல்லாரும் வீட்டுக்கு வாங்கன்னு சொல்லலாம்னு உனக்கு மாத்தி மாத்தி ஃபோன் போட்டுக்கிட்டே இருக்கேன்.. நீ எடுக்கவே இல்ல. சரி ஆதவனை விட்டாவது நீங்க எங்க இருக்கீங்கன்னு பார்த்து கூட்டிட்டு வர சொல்லலாம்னு பார்த்தா, நீங்க வரும்போது வரட்டும்.

உங்கள தொந்தரவு பண்ண வேண்டாம்னு மாப்பிள்ளை சொல்லிட்டாரு. இங்க வா.. இங்க வந்து மாப்பிள்ளை பக்கத்துல உட்காரு. உங்க ரெண்டு பேரையும் ஒண்ணா பார்த்தே எனக்கு ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு. இனிமே என்நேரமும் நீ மாப்பிள்ளை கூடயே தான் இருக்கணும். இந்த வேலை செய்றேன், அந்த வேலை செய்றேன்னு எங்கயும் போயிட்டு இருக்க கூடாது. எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன். நீங்க சாப்பிடுங்க மாப்பிள்ளை. உங்களுக்கு என்னென்ன பிடிக்கும்னு சொல்லுங்க நான் செஞ்சு தரேன்.” என்று அர்ஜுன், தேன்மொழி இருவரிடமும் சொன்னாள் விஜயா.

“பரவால்ல.. என் பேரன்ட்ஸ் எனக்கு ஆப்பு வைக்கிறதுலையே குறியா இருந்தாலும், என் மாமியார் எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்றாங்க. என் பொண்டாட்டியை விட எனக்கு இவங்கள ரொம்ப பிடிச்சிருக்கு. I love you அத்தை!” என்று தன் மனதிற்குள் நினைத்த அர்ஜுன் மரியாதையுடன் விஜயாவை பார்த்து “இந்த வயசுல நீங்க எதுக்கு அத்தை சமைச்சு கஷ்டப்படுறீங்க? இத்தனை பேருக்கு உங்க ஒருத்தரால எப்படி சமைக்க முடியும்? வேலைக்கு ஆளுங்க வச்சுக்கலாம் இல்ல ஈசியா இருக்கும்!” என்றான்.

“அதெல்லாம் எனக்கு சின்ன வயசுல இருந்தே நிறைய வேலை செஞ்சு பழக்கம் இருக்கு மாப்பிள்ளை. நான் சமையல் வேலைக்கு எல்லாம் நிறைய தடவை போயிருக்கேன். எத்தனை பேருக்குன்னாளும் ஒத்த ஆள நின்னு நானே சீக்கிரமா சமைச்சு முடிச்சிடுவேன். இவ வேலைக்கு போக ஆரம்பிச்சதுக்கு அப்புறம் ‌ என்ன எங்கயும் வெளிய வேலைக்கு போக கூடாதுன்னு சொல்லி வீட்ல இருக்க வச்சுட்டா.

உங்க வீட்ல வேலைக்கு நிறைய பேர் இருக்காங்க. அதனால உங்களுக்கு அதெல்லாம் சாதாரணமா தெரியுது. ஆனா எனக்கு எல்லாம் எங்க வீட்டு சமையல் கட்டுக்குள்ள இன்னொரு ஆளை விடுறது சுத்தமா பிடிக்காது. இதோ.. இவளே சமைக்கிறேன்னு கிச்சனுக்குள்ள போயிட்டு வந்தா அங்க இருக்கிற மசாலா டப்பா எல்லாத்தையும் வேற வேற இடத்துல மாத்தி வச்சுட்டு வந்துருவா. அத எல்லாத்தையும் மறுபடியும் கண்டுபிடிச்சு அதோட இடத்தில வைக்கிறதுக்கே தினமும் எனக்கு அரை மணி நேரம் ஆயிடும். பொண்ணுக்கு கல்யாணம் ஆனவுடனே மறு வீட்டுக்கு மாப்பிள்ளையோட வீட்டுக்கு வந்தா ஆக்கி போட்டு சீர் செய்றது எல்லாம் முறை தான். உங்க கல்யாணத்துக்கு தான் இதனால எதுவும் செய்ய முடியாமல் போயிடுச்சு. இப்பயாவது நான் ஆசைப்பட்டதை எல்லாம் செஞ்சுக்குறேனே!” என்று விஜயா சொல்ல,

தன் அம்மாவை பார்த்து முறைத்த தேன்மொழி “அத என் பெயரை டேமேஜ் பண்ணாம கூட சொல்லி இருக்கலாம் மா.” என்று தன் பற்களை கடித்துக் கொண்டு சொல்ல, அவளைப் பார்த்து நக்கலாக சிரித்த அர்ஜுன் விஜயாவிடம் “நீங்க சொல்றது எல்லாம் எனக்கு புரியுது அத்தை. ஆனா நீங்க மட்டும் எதுக்கு தனியா செஞ்சு கஷ்டப்படணும்? இவளையும் உங்க கூட சேர்ந்து சமைக்க சொல்லுங்க. என் பொண்டாட்டி சமச்சத அவ கையால வாங்கி சாப்பிடணும்னு தான் ஆசை ஆசையா நான் இருக்கிற வேலையை எல்லாம் விட்டுட்டு இவ்வளவு தூரம் வந்து இருக்கேன்.” நின்றான்.

“சரிங்க மாப்ள. நாளைக்கு உங்களுக்கு மறு வீட்டு விருந்து வைக்கிறேன். என்னோட கவனிப்பு எப்படி இருக்குன்னு நாளைக்கு பாருங்க. நைட்டுக்கு ஏற்கனவே டிஃபன் செய்ய ஆரம்பிச்சாச்சு. நீங்க இதெல்லாம் சாப்பிடுங்க. அப்புறம் சூடா இட்லி, தோசை எல்லாம் சுட்டுக்கலாம். நான் போய் சப்பாத்திக்கு மாவு பிசைஞ்சு வைக்கிறேன்.” என்ற விஜயா கிச்சனுக்கு சென்று விட்டாள்.

அவள் கொண்டு வந்து டேபிளில் வைத்துவிட்டு சென்ற ஸ்நாக்ஸை எடுத்து சாப்பிட்ட ஆருத்ரா “வாவ் இது ரொம்ப டேஸ்டா இருக்கு. பாட்டி எது செஞ்சாலும் சூப்பர் தான். டாடி நீங்க கண்டிப்பா பாட்டி சமைக்கிறது எல்லாத்தையும் டேஸ்ட் பண்ணி பாருங்க. இதுவரைக்கும் நான் சாப்பிட்ட எல்லா food-ஐயும் விட மம்மியும், பாட்டியும் சமைக்கிறது தான் செம டேஸ்டா இருக்கு.” என்று சொல்ல, “எனக்கு தான் தெரியுமே.. உங்க மம்மி சமைச்சு கொடுத்து ஆல்ரெடி நான் சாப்பிட்டு இருக்கேன். ரொம்ப நேரம் கழிச்சு சாப்பிட்டதுக்கே அவ்வளவு டேஸ்டா இருந்துச்சு. சமைச்ச உடனே சாப்ட்டா இன்னும் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்.” என்ற அர்ஜுன் ஓரக்கண்ணால் தேன்மொழியை பார்த்தபடி ஒரு வாழைக்காய் பஜ்ஜியை எடுத்து ரசித்து ருசித்து கடித்து சாப்பிட்டான்.

அவன் சாப்பிடுவது என்னவோ பஜ்ஜியாக இருந்தாலும், அவனது கூர்மையான காந்த பார்வை தேன்மொழியின் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக ஸ்கேன் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அதனால் கூச்சத்தில் மெலிந்த தேன்மொழி “என்ன இவன் இத்தனை பேர் இருக்காங்க.. எல்லார் முன்னாடியும் எப்படி என்ன முழுங்கற மாதிரி பார்க்கிறான்!” என்று நினைத்தவள், அவனுடன் தான் இனி ஒரே அறையில் இருக்கப் போகிறோம் என்று நினைத்தாலே அவளுக்கு பயத்தில் வியர்த்து கொட்டியதால் அருகில் இருந்த தண்ணீரை எடுத்து கடகடவென்று குடித்தாள்.

பின் “அம்மா வரத்துக்குள்ள எப்படியாவது நம்ம ரூம்குள்ள ஓடி போயிரணும்.” என்று நினைத்த தேன்மொழி “பிரிட்டோ.. கிளாரா.. என்ன நீ வேடிக்கை பாத்துட்டு இருக்கீங்க? போய் ரெஃபரன்ஸ் வாங்கிட்டு வந்து நீங்களும் சாப்பிடுங்க. நானும் போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வரேன்.” என்று சொல்லிவிட்டு வேகமாக எழுந்து தனது ரூமிற்கு ஓடி சென்று கதவை தள்ளி சாற்றிவிட்டு அதன் மீது சாய்ந்து மூச்சு வாங்கினாள்.

அவள் செல்லும்போது அவளுடைய நீண்ட கூந்தல் காற்றில் அங்கும் இங்கும் அசைந்தாடும் அழகை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த அர்ஜுன் “நீ இங்கே இருக்கிற வரைக்கும், நானும் உனக்காக இங்க தான் இருக்க போறேன் ஹனி பேபி. இனிமே உன்னால என் கிட்ட இருந்து ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது.” என்று நினைத்து குறும்பாக தனக்குள் சிரித்துக் கொண்டு “நானும் போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வரேன். ஆபீஸ்ல இருந்து அப்படியே கிளம்பினதனால கோட் சூட்டிலேயே வந்துட்டேன். முதல்ல டிரஸ் சேஞ்ச் பண்ணனும்.” என்று சொல்லிவிட்டு எழுந்து தேன்மொழியின் ரூமை நோக்கி நடக்க தொடங்கினான்.

தேன்மொழி உள்ளே டோரை லாக் செய்து இருந்ததால் அவன் வெளியில் இருந்து கதவை தட்டி “ஏய் ஹனி பேபி.. நான் தான் வருவேன் தெரியும்ல.. அப்புறம் எதுக்கு டோர லாக் பண்ண? Open the door my love!” என்று ரொமான்டிக்காக சொன்னான். கதவின் மீது சாய்ந்து கொண்டிருந்த தேன்மொழி “ஹய்யோ.. எல்லாருக்கும் கேட்கும்னு தெரியும் போதே இவன் இப்படி எல்லாம் பேசுறானே.. இதுல நான் தனியா இவன் கிட்ட சிக்கனா என்ன நடக்குமோ.. இத்தனை நாளா கோபப்பட்டு நான் இவன் கிட்ட பேசின வாய்க்கெல்லாம் மொத்தமா இன்னிக்கு என்ன இவ வெச்சு செய்ய போறான். எனக்கு நல்லா தெரிஞ்சிருச்சு.” என்று நினைத்து சிணுங்கியவள் வேறு வழியில்லாமல் கதவை திறந்தாள்.

அவள் அதை திறந்தது தான் தாமதம். அவள் முகத்தை கண்டவுடன் சட்டென தனது ட்ராலி பேக் உடன் உள்ளே சென்ற அர்ஜுன் அடுத்த கணமே டோரை லாக் செய்துவிட்டு பாலை காணும் பூனை போல ஆசையுடன் திரும்பி அவளைக் கண்டான்.

- மீண்டும் வருவாள் 💕
 

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-84
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: jansi