எப்படியாவது விரைவில் கிளாரா, பிரிட்டோ இருவருக்கும் திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று நினைத்த தேன்மொழி ஆதவன் காலேஜில் இருந்து வீட்டிற்கு வந்தவுடன் விஜயாவிடமும், அவனிடமும் அதைப்பற்றி பேசினாள். அவள் சொன்னதைக் கேட்டு கடுப்பான விஜயா “எப்படியோ உனக்கு மாப்பிள்ளை கூட கல்யாணம் ஆயிடுச்சு. நீயும் அவரும் சேர்ந்து சந்தோஷமா வாழ்றதை பார்த்தாவது நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தா, அவர் அங்க ரஷ்யால இருக்காரு. நீ இங்கே தனியா இருக்க. நியூஸ்ல மட்டும் மாப்ள ஆசிரமத்தை கட்டினத பத்தி வரும்போது உனக்கும் அவருக்கும் கல்யாணம் ஆயிருச்சுன்னு அவங்க சொல்லலைனா, இன்னமும் எல்லாரும் நிஜமாவே உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா இல்லையான்னு தான் புரளி பேசிட்டு இருந்திருப்பாங்க.
உன் வாழ்க்கையே அந்தரத்தில தொங்கிட்டு இருக்கு. உங்க கல்யாணத்தையே நான் நினைச்ச மாதிரி என்னால நடத்த முடியாம போயிடுச்சேனு நான் வருத்தத்தில இருக்கேன். உன் புருஷன் கூட சேர்ந்து வாழ்ந்து உனக்குன்னு ஒரு குழந்தை பெற்றுக்கொள்கிற யோசனை எல்லாம் உனக்கு வராது. இப்ப அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறது தான் உனக்கு ரொம்ப முக்கியமா?” என்று கேட்க,
அர்ஜுனின் உயிரை காப்பாற்றுவதற்காக கிளாரா அவளுடைய உயிரை பணயம் வைத்ததையும், இது மாதிரியாக அவர்கள் ஏராளமான சமயத்தில் அர்ஜுனுக்கு உதவியாக இருந்ததையும், கிளாராவின் உடல்நிலையை பற்றியும் மேலோட்டமாக தன் அம்மாவிடம் சொன்ன தேன்மொழி “அவங்க ரெண்டு பேரும் இல்லனா அர்ஜுன் இப்ப உயிரோடவே இருந்திருக்க மாட்டாரு. அர்ஜுன் கூட அவங்க ரெண்டு பேரும் புறக்கலைன்னா கூட, அவங்கள தன் ஃபேமிலில இருக்குறவங்களா தான் அவரு பாக்குறாரு. நானும் அப்படித் தான் நினைக்கிறேன். இது நம்ம வீட்டு கல்யாணம் அம்மா.
அப்படி நினைச்சு தான் நம்ம எல்லாத்தையும் பார்த்து பார்த்து செய்யணும். உனக்கு இதுல இஷ்டம் இல்லனா சொல்லிடு பரவால்ல. நான் என் அத்தை மாமா கிட்ட கேட்டு எல்லாத்தையும் அரேஞ்ச் பண்ணிக்கிறேன். நீங்க தான் நான் என்ன சொன்னாலும் அதுல ஒரு குறை கண்டுபிடிச்சு என்னை ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பீங்க. அவங்க என்ன சொன்னாலும் கடைசில எனக்காக நான் சொல்றத கேப்பாங்க. உங்க கிட்ட பேசுறதுக்கு நான் அவங்க கிட்டயே பேசிக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ஆதவன் தேன்மொழியிடம் ஏதோ சொல்ல வர அதற்குள் முந்தி கொண்ட விஜயா “ஏய் நில்லு டி. இப்ப எதுக்கு நீ பேசிகிட்டு இருக்கும்போதே வெடுக்குன்னு கோச்சிக்கிட்டு போறவ! நான் அவர்களை ஏதோ சும்மா வீட்ல வேலை செய்றவங்கன்னு தான் நினைச்சேன். எல்லா அம்மாவும் மொதல்ல அவங்க புள்ளைய பத்தி தான் யோசிப்பாங்க. எனக்கு அந்த வெள்ளைக்காரங்க ரெண்டு பேர பத்தியும் என்ன தெரியும்? அதான் அப்படி சொன்னேன். இதுவரைக்கும் நம்ம வீட்ல எந்த விசேஷமும் நடந்ததில்லை. உன் கல்யாணத்துலையும் இங்கே நம்ம வீட்ல எதையும் செய்ய முடியாம போயிடுச்சு. அதனால நீ சொன்ன மாதிரி இத நம்ம வீட்டு விசேஷமா நினைச்சு நம்மளே எல்லாத்தையும் எடுத்து பண்ணிடலாம். இந்த மாதிரி இருக்குறவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது எல்லாம் புண்ணியம்.” என்றாள்.
உடனே சிரித்த முகமாக தேன்மொழி தன் அம்மா பக்கம் திரும்ப, “என் ஃபிரண்டோட uncle கூட santhome Church-ல father-ஆ இருக்கிறாரு. Church wedding பண்றதுக்கு என்ன procedure-ன்னு அவர் கிட்ட கேட்க சொல்லி என் ஃபிரண்டு கிட்ட சொல்றேன். நானும் அந்த சர்ச்சுக்கு என் ஃபிரண்டு கூட ரெண்டு மூணு தடவ போயிருக்கேன். அங்க நிறைய மேரேஜ் நடக்கும். அந்த பிளேஸ் நல்லா இருக்கும் அக்கா.” என்றான் ஆதவன்.
அதற்கு சரி என்ற தேன்மொழி நேராக கிலாராவிடம் சென்று அந்த சர்ச்சின் லொகேஷனை சொல்லி “நீங்களும் பிரிட்டோவும் நேர்ல போய் அந்த சர்ச் உங்களுக்கு ஓகேவான்னு பார்த்துட்டு வந்துருங்க. உங்களுக்கு ஓகேவா இருந்துச்சுன்னா, அம்மா இந்த மாசத்துக்குள்ளயே நல்ல நாளா பார்த்து சொல்றேன்னு சொல்லி இருக்காங்க. உங்க மேரேஜை சீக்கிரம் முடிச்சிடலாம். Purchasing கூட நீங்க ஸ்டார்ட் பண்ணிடுங்க. அத்தை என் மேல கோவமா இருக்கறதுனால நான் கால் பண்ணா எடுக்க மாட்டேங்கறாங்க. சோ மாமா கிட்ட நான் கால் பண்ணி அப்புறமா இத பத்தி பேசிடலாம்ன்னு இருக்கேன்.” என்றாள்.
அர்ஜுனுக்காக கிளாரா தேன்மொழியை இந்தியாவில் இருந்து கடத்திச் சென்றதால் முன்பில் இருந்தே தேன்மொழி என்னவோ அவளை ஒரு வில்லி போல தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் என்ன செய்தாலும் குறை சொல்வது, அவள் மீது எரிந்து விழுவது என்று இருந்த தேன்மொழி இப்போது தன்னை பற்றி யோசித்து தன்னுடைய மேரேஜ் தொடர்பாக அனைத்தையும் அவளே முன்னே இருந்து அரேஞ்ச் செய்வதை பார்க்கும்போது கிலாராவின் இதயம் நெகிழ்ந்தது.
அதனால் உடனே தேன்மொழியை அணைத்துக் கொண்ட கிளாரா “என் மேல இருந்த கோபம் எல்லாத்தையும் விட்டுட்டு நீங்க எனக்காக யோசிப்பீங்கன்னு நான் நினைச்சு கூட பாக்கல மிஸ்ஸஸ் அர்ஜுன். It means a lot. thank you so much. எனக்கும் சரி, பிரிட்டோவுக்கும் சரி, எங்க chief-ஐயும், அவர் ஃபேமிலியையும் விட்டா வேற யாருமே இல்ல.
சோ சீஃப் மேல ஒரு பிரதர் ஃபீலிங் எங்களுக்கு எப்பவுமே உண்டு. அவரும் எங்களுக்காக நிறைய செஞ்சுருக்காரு. ரொம்ப வருஷமா எங்களுக்குள்ள பழக்கம் இருக்கிறதுனால அது சாதாரணம் தான்.. ஆனா இப்ப வந்த நீங்க எங்கள உங்க ஃபேமிலில ஒருத்தங்க ஏத்துக்கிட்டு எங்களுக்காக இதை எல்லாம் பண்றது பார்க்கும்போது நிஜமாவே எனக்கு ஒரு சிஸ்டர் இருக்கிற மாதிரி எனக்கு ஃபீல் ஆகுது. நான் இருக்கிற வரைக்கும் உங்களை மறக்கவே மாட்டேன் தேங்க்ஸ் மேடம்.” என்று சொன்னாள்.
“நான் இருக்கிற வரைக்கும்” என்று சொன்னவுடனேயே தேன்மொழியின் கண்கள் கலங்கி விட்டது. எப்போதுமே அவள் ஆசைப்பட்டதை போல பிரிட்டோ உடன் சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைத்த தேன்மொழி “உங்களுக்கு எதுவும் ஆகாது கிளாரா. எனக்கு நம்பிக்கை இருக்கு. நீங்களும் பிரிட்டோவும் எப்பயும் ஹாப்பியா இருப்பீங்க. எப்பயுமே எங்க பாதுகாப்புக்காக எங்க கூடவே இருக்கிற நீங்க.. எங்க ஃபேமிலில ஒரு ஆளா இல்லாம எப்படி இருப்பீங்க?
நீங்க எனக்கு சிஸ்டர் மாதிரி எல்லாம் இல்ல கிளாரா. நீங்க எனக்கு சிஸ்டர் தான். சோ இனிமே நீங்க என்ன மிஸஸ் அர்ஜுன்னு எல்லாம் கூப்பிடக் கூடாது. என் பேரை சொல்லியே கூப்பிடுங்க. இல்லனா நான் உங்க கிட்ட பேசமாட்டேன்.” என்று உரிமையுடன் கோபித்துக் கொண்டாள்.
சரி என்ற கிளாரா “எனக்கோ ஒரு நாள் எல்லாரும் சாக தான் போறாங்க. சோ அத பத்தி இனிமே யோசிச்சு நான் வருத்தப்பட போறது இல்ல. எனக்கு கிடைச்சிருக்கிற ஒவ்வொரு செகண்டையும் என் பிரிட்டோ கூட சேர்ந்து இந்த ஃபேமிலிக்காக நான் வழப்போறேன். இவங்க தான் என் ஃபேமிலி. இவங்க கூட இருக்கிறதுல தான் என் சந்தோஷமே இருக்கு.” என்று நினைத்து மகிழ்ச்சியுடன் தேன்மொழியின் குடும்பத்தினருடன் ஒன்றை பழக்க துவங்கி விட்டாள்.
மறுநாள் பிரிட்டோவும், கிளாராவும், நேரில் சர்ச்சுக்கு சென்று பார்வையிட்டு விட்டு வந்தார்கள். அவர்களுக்கு அந்த இடம் பிடித்திருந்ததால் அடுத்து ஐயரிடம் நாளை கேட்டு குறித்து சர்ச்சில் புக் செய்துவிட்டு, வழக்கம்போல ஆருத்ராவை டான்ஸ் கிளாஸுக்கு அனுப்பி வைத்த பின் கிளாராவுடன் ஷாப்பிங் சென்று விட்டாள் தேன்மொழி. அவர்களுடன் கார் ஓட்டுவதற்காகவும், அவர்களின் பாதுகாப்பிற்காகவும் சென்றிருந்தான் பிரிட்டோ.
அர்ஜுனின் அப்பா பிரதாப் தேன்மொழியை சமாதானப்படுத்துவதற்காக அர்ஜுனுக்கு கொடுக்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. அதைப்பற்றி தேன்மொழிக்கு தெரியாது என்பதால் அவள் ஒரு பக்கம் அர்ஜுனின் மீது இருந்த கோபத்தை எல்லாம் மறந்துவிட்டு கிளாராவின் திருமண ஏற்பாடுகளை செய்வதில் அவளுடன் சேர்ந்து ஜாலியாக சுற்றிக் கொண்டு இருந்தாள். இன்னும் நான்கு நாட்களில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
வெட்டிங் கவுன் ஒரே ஒரு நாள் மட்டுமே பயன்படுத்தப்படுவது என்பதால் அதை பெரும்பாலானவர்கள் வாடகைக்கு தான் எடுப்பார்கள். அதுவும் மற்ற நாடுகளில் இரு சாதாரணமாக நடக்கும் ஒன்று தான். அதனால் கிளாரா “ரெண்டல் காஸ்ட்யூம்ஸ் கிடைக்கிற ஷாப்பில போய் நம்ம செக் பண்ணலாம். அங்கே இருக்கிறதுல எது நல்லா இருக்குன்னு பாத்துட்டு சூஸ் பண்ணிக்கலாம்.” என்று சொல்ல, அதைக் கேட்காமல் “உங்க கண்ட்ரில வேணா கல்யாணத்துக்கு போடுற டிரஸ்சை வாடகைக்கு வாங்குறது நார்மலா இருக்கலாம். இங்கயுமே இப்பலாம் ஏதாவது ஈவண்டுனா ரெண்டல் காஸ்ட்யூம் யூஸ் பண்றாங்க. But marriage is something personal.. நீங்க அதுக்கு ரெண்டல் காஸ்ட்யூம் வாங்குறது எனக்கு சுத்தமா விருப்பமில்லை. சோ உங்களோட மேரேஜ் கவுண் அண்ட் பிரிட்டோ பிரதர் போடப்போறே கோட் சூட் இரண்டையும் உங்களுக்கு நானே வாங்கி தரேன்.” என்று விடாப்பிடியாக சொன்ன தேன்மொழி அவர்களை அழைத்து சென்று திருமணத்திற்கு அனைவருக்கும் தேவையான ஆடைகளை பிரசாத் கொடுத்த கார்டை பயன்படுத்தி வாங்கினாள். பயன்படுத்துவதற்கு முன்பாக அவருக்கு கால் செய்து பர்மிஷன் கேட்கவும் அவள் மறக்கவில்லை.
பர்சேசிங் எல்லாம் முடிந்து அவர்கள் மூவரும் நிறைய பைகளுடன் காரில் வீட்டிற்கு வந்து இறங்க, அவர்களது கார் இல்லாமல் அங்கே ஏற்கனவே இன்னொரு கார் அவர்களது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தது. அதைப் பார்த்த உடனேயே அது யாருடைய கார் என்று கண்டுக் கொண்ட அனைவரும் ஆர்வமான முகத்துடன் உள்ளே செல்ல, ஹாலில் உள்ள சோஃபாவில் அமர்ந்து டான்ஸ் கிளாஸ் முடித்து வீட்டிற்கு வந்திருந்த ஆருத்ராவுடன் விளையாடிக் கொண்டு இருந்தான் அர்ஜுன்.
அர்ஜுன் இல்லாத போது எல்லாம் அவனை ஏதாவது குறை சொல்லிக் கொண்டே இருக்கும் விஜயா இப்போது தன் மகளை தேடி மாப்பிள்ளை வந்திருக்கும் சந்தோஷத்தில் அவனை விழித்து விழுந்து கவனித்துக் கொண்டிருந்தாள். தன் மாமா வந்திருக்கிறார் என்பதனால் வெளியில் கூட செல்லாமல் ஆதவனும் மரியாதை நிமித்தமாக வீட்டிலேயே இருந்தான்.
அர்ஜுனை பார்த்து சில நாட்கள் கடந்து விட்டதால் அவனை கண் வாங்காமல் பார்த்தபடி கையில் சில பைகளுடன் உள்ளே சென்றாள் தேன்மொழி. அவர்கள் வரும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்த அர்ஜுன் “என்ன பிரிட்டோ என் கிட்ட கூட சொல்லாம அப்படியே மேரேஜ் பண்ணி இங்கேயே செட்டில் ஆக்கிடலாம்னு முடிவு பண்ணிட்டியா? நீ கூப்பிடலேன்னாலும் நான் உன் மேரேஜ்க்கு கண்டிப்பா வருவேன் டா.” என்று சிரித்த முகமாக சொன்னான்.
“அப்ப இவர் இவங்க மேரேஜ்காக தான் வந்திருக்காரா? நான் கூட எனக்காக தான் வந்திருக்காருன்னு ஒரு நிமிஷம் நினைச்சு சந்தோஷப்பட்டுட்டேன்.” என நினைத்த தேன்மொழி அர்ஜுனை முறைத்து பார்த்தபடி உள்ளே சென்றாள்.
- மீண்டும் வருவாள் 💕

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-83
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.