மஞ்சம்-82

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அத்தியாயம் 82

தேன்மொழி அர்ஜுனிற்க்கு கால் செய்தாள். அதை எடுக்கலாமா வேண்டாமா? எடுத்து அவளிடம் என்ன பேசுவது? அவள் தன்னிடம் கோபமாக பேசினால் என்ன சொல்லி அவளை சமாளிப்பது? என்று எல்லாம் யோசித்து குழம்பிக் கொண்டிருந்த அர்ஜுன் கையில் தனது மொபைல் ஃபோனை வைத்துக் கொண்டு அவளது அழைப்பை ஏற்காமல் தனது ரூமிற்குள் குட்டி போட்ட பூனை போல குறுக்கும் நடுக்கமாக நடந்து கொண்டிருந்தான்.

இப்படி அவன் யோசனையில் மூழ்கி இருக்கும்போது அவனுக்கு வந்த அழைப்பு கட்டாகிவிட்டது. அதனால் அவன் பெருமூச்சு விட, “என்ன பண்ணிட்டு இருக்கான் இவன்? நான் கால் பண்ணா எடுக்க கூட முடியாலயா இவனால?” என்று நினைத்து எரிச்சல் அடைந்த தேன்மொழி மீண்டும் அவனுக்கு கால் செய்தாள்.

இம்முறையும் அவன் அந்த அழைப்பை ஏற்காமல் இருந்தால் அவளுக்கு தன் மீது இருக்கும் கோபம் அதிகமாகிவிடும் என நினைத்த அர்ஜுன் அவளது காலை அட்டென்ட் செய்து “ஹலோ” என்று மெல்லிய குரலில் சொல்ல, மறுமுனையில் கோபமே உருவாக தனது மொபைல் ஃபோனை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்த தேன்மொழி “நீ என்ன தான் நெனச்சிட்டு இருக்க அர்ஜுன்? என்னால உன்னை கொஞ்சம் கூட புரிஞ்சுக்கவே முடிய மாட்டேங்குது.

திடீர்னு அவ்ளோ பெரிய ஆசிரமத்த சென்னையில கட்டிருக்க. அது கூட பரவால்ல, மத்தவங்களுக்கு நல்லது செய்றது நல்லது தான். பட் அத எதுக்காக எனக்காக கட்டுனதா சொல்லி மீடியாவுல எல்லாம் சொல்லி வச்சிருக்க? அவங்க உன் ஃபோட்டோவையும், என் போட்டோவையும் போட்டு இந்த நியூஸை ட்ரெண்ட் ஆக்கி விட்டுட்டாங்க. நீ பாட்டுக்கு எங்கேயோ ரஷ்யால இருக்க.

அதனால எல்லாரும் என்ன புடிச்சுகிட்டு அந்த நியூஸ பத்தியும் நம்மளை பத்தியும் கொஸ்டினா கேட்டேன் என்ன சாவடிக்கிறாங்க. ஈஸியா என்னை கடத்தி தூக்கிட்டு போய் உன் ஃபேமிலில இருக்குறவங்க என்ன உனக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க இல்ல... ஃபியூச்சர்ல இப்படி ஏதாவது பிராப்ளம் வந்தா இந்த மாதிரி எல்லாம் பொய் சொல்லி சமாளிக்கணும்னு எனக்கு சொல்லிக் கொடுத்து அனுப்பி வச்சாங்களா?

நானே என்னன்னமோ சொல்லி சமாளிச்சுட்டு இருக்கேன். இதுல உன்னோட publicity stunts atrocities-ல நீ அனுப்பி வச்ச ஆளுங்க எல்லாம் பர்சனலா அத்தனை கொஸ்டின் பண்றாங்க. எப்படி போய் நான் உங்க கிட்ட உண்மைய சொல்ல முடியும்? இதுக்கு முன்னாடி பப்ளிக்கா நான் ஒரு ஃபோட்டோக்கு கூட போஸ் கொடுத்ததில்லை. வீட்டு வாசல்ல அத்தனை பேர் கும்பல் கும்பலா வந்து திடீர்னு நின்னா அவங்க எல்லார் கிட்டயும் எப்படி பேசி சமாளிக்கணும்னு எனக்கென்ன தெரியும்?

நான் எவ்ளோ பயந்து போயிட்டேன் தெரியுமா? இந்த எல்லா ப்ராப்ளமும் நீ தான் ரீசன் அர்ஜுன். வலது கை கொடுக்கிறது இடது கைக்கு கூட தெரிய கூடாதுன்னு சொல்லுவாங்க. இந்த காலத்துல மத்தவங்க தான் சும்மா நாலு பேருக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தா கூட அதை வீடியோ எடுத்து போட்டு ஃபேமஸ் ஆகணும்னு ட்ரை பண்றாங்கன்னு பாத்தா, நீ எதுக்கு எல்லாத்தையும் விளம்பரம் பண்ணிட்டு இருக்க? உன் கிட்ட இப்படியெல்லாம் பண்ண சொல்லி நான் சொன்னேனா? இதுல என்னமோ நான் சொல்லித்தான் நீ எல்லாமே பண்ற மாதிரி நியூஸ்ல சொல்லிக்கிட்டே இருக்காங்க! எனக்கு இதையெல்லாம் பார்க்க பார்க்க கடுப்பா இருக்கு.” ‌ என்று அவனை பேசவிடாமல் அவள் பாட்டிற்கு மூச்சுப் பிடித்து பேசிக் கொண்டே போனாள்.

ஆயிரக்கணக்கானவர்களுக்கு நடுவில் நின்று conference Hall-ல் எத்தனையோ முறை அர்ஜுன் கம்பீரமாக பேசியிருக்கிறான். அவன் முன்னே யாரும் தங்களுடைய வாயை திறக்கக் கூட முயன்றது இல்லை. அப்படி இருந்தா அர்ஜுன் தேன்மொழி பேச தொடங்கிய பிறகு அப்படியே வாயடைத்து போய்விட்டான்.

அவள் தன்மீது சொல்லும் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என அவன் நினைத்தாலும் கூட, ராக்கெட் வேகத்தில் பேசிக் கொண்டிருக்கும் தேன்மொழியை நிறுத்தி நடுவில் அவனால் பேசவே முடியவில்லை. ஒரு கட்டத்தில் மூச்சு விடாமல் பேசிப் பேசி டயர்ட் ஆனா தேன்மொழி ‌ தன் அருகில் இருந்த தண்ணீரை எடுத்து மட மடவென குடித்துவிட்டு “என்ன சத்தத்தையே காணோம்! லைன்ல இருக்கியா இல்லையா நீ? நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன் நீ சைலன்ட்டா இருந்தா என்ன அர்த்தம்?” என்று கோபமாக கேட்க, “நான் லைன்ல தாண்டி இருக்கேன். ஆனா நீ எங்க என்ன பேச விட்ட? கொஞ்சமாவது நீ கேப் விட்டா தானே நான் என்ன சொல்ல வரேன்னு சொல்ல முடியும்!” என்று பாவமாக சொன்னான் அர்ஜுன்.

உடனே அதற்கும் கோபப்பட்ட தேன்மொழி “அப்ப என்ன சரியான வாயாடின்னு சொல்றியா நீ? நீ என்ன வேணாலும் செய்யலாம். என்ன டென்ஷன் பண்ணலாம். பட் நான் உன்னை எதுவுமே சொல்ல கூடாது. நீ ஏன் இப்படி செஞ்சேன்னு உன்ன ஒரு வார்த்தையும் கேட்கக் கூடாது! அப்படித் தானே!” என்று தன் குரலை உயர்த்தி கேட்க, “நீ பேசுனது ஒரே ஒரு வார்த்தையா டி?” என்று அவளிடம் தன் குரலை தாழ்த்தி கேட்டான் அர்ஜுன்.

“அது என்ன ஒரு வார்த்தையா? பேச்சுக்கு அப்படி சொன்னா, ஒரு வார்த்தை தான் பேசுவாங்களா? நீ மட்டும் உன் கிட்ட யாராவது ஏதாவது கேட்டா எஸ் ஆர் நோ னு மட்டும் தான் ஆன்சர் பண்ணுவியா? உனக்கெல்லாம் பேச தெரியாதோ! நா மட்டும் தான் பேசுறனா? என்னை பேச வைக்றதே நீதானே அர்ஜுன்! சும்மா எதையாவது உளறிட்டு இருக்குறதுக்கு நான் என்ன பைத்தியக்காரியா?” என்று கேட்டாள் தேன்மொழி.

“யாருக்கு தெரியும்?” என்று மைண்ட் வாய்ஸ் என நினைத்து அர்ஜுன் கொஞ்சம் சத்தமாக முணுமுணுத்து விட, அதைக் கேட்டு கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்ட தேன்மொழி “என்ன லூசுன்னு சொல்லிட்டல.. ஆமா நான் லூசு தான் டா. உன்ன போய் இப்படி பைத்தியக்காரத்தனமா லவ் பண்றேன்ல.. அதனால நீ என்ன ஒரு பைத்தியம் புடிச்சவ மாதிரி தான் ட்ரீட் பண்ணுவ. நீ இப்படியே இரு. என்னமோ பண்ணு. எனக்கென்ன? உனக்கு கால் பண்ணேன் பாத்தியா.. அதான் நான் பண்ண தப்பு. Get lost! இனிமே நான் உனக்கு கால் பண்ணவே மாட்டேன்.” என்று சொல்லிவிட்டு தேன்மொழி தனது அழைப்பை துண்டித்து விட்டாள். அவனிடம் ஆத்திரம் பொங்க அப்படி பேசியதில் அவளுக்கு மூச்சு வாங்கியது. அதனால் சில நொடிகளுக்கு பிறகு மீண்டும் தண்ணீர் குடித்து தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டாள்.

அவள் high pitch-ல் தொடர்ந்து பேசியதால் தனது காது தலிப்பதை போல உணர்ந்த அர்ஜூன் ஃபோனை காதில் இருந்து எடுத்துவிட்டு “பேசுறது என் ஹனி பேபி தானா? இல்ல வேற யாராவது ஒருத்தியா? இந்தியா போன உடனே இவ என்ன இப்படி டோட்டலா மாறிட்டா! என் கிட்ட இப்படி எகிறி எகிறி பேசுற அளவுக்கு எங்க இருந்து இவளுக்கு இவ்ளோ பெரிய வருது?

நான் கோமால இருந்து எந்திரிச்ச உடனே என்ன பாத்து தெரிஞ்சு பயந்து ஓடிட்டு இருந்தாளே அவளா இவ? என்னாலயே நம்ப முடியலையே! இங்கே இருக்கிற வரைக்கும் நீங்க வாங்க போங்கன்னு என் கிட்ட மரியாதையா பேசிட்டு இருந்தா. அப்புறம் அர்ஜுன்னு பேர் சொல்லி கூப்பிட ஆரம்பிச்சா. அப்படியே அது வாடா போடான்னு மாரி இப்ப இந்த அளவுக்கு வந்துருச்சே.. இன்னும் அவ என்ன Bad words சொல்லி திட்டுறது மட்டும் தான் பாக்கி. போற போக்கை பார்த்தா அதுவும் சீக்கிரம் நடந்துரும் போல!

இல்ல அர்ஜூன் இல்ல.. இதை இப்படியே விடக் கூடாது. இப்படியே விட்டா எது நடக்குதோ இல்லையோ உன் சொந்த வீட்டிலேயே உனக்கு மரியாதை இல்லாம போய்விடும். உன் பொண்டாட்டி உன்னை நாலு செவத்துக்குள்ள நாக்கு பிடுங்கி கிட்டு சாகுற அளவுக்கு கூட கேள்வி கேட்கலாம் தப்பு இல்ல. அவளுக்கு உரிமை இருக்கு. பட் இவ இப்படி எல்லாம் மாறினது மத்தவங்களுக்கு தெரியறதுக்குள்ள இவளை நம்ப மாத்திடனும். இல்லனா உன் ஃபேமிலில யாரும் உன்னை மதிக்க மாட்டாங்க.” என்று நினைத்த அர்ஜுன் மீண்டும் அவள் கால் செய்து எங்கே தன்னை திட்டுவாளோ என நினைத்து பயந்து ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்துவிட்டு ரெஃப்ரெஷ் ஆவதற்காக சென்றான்.


அர்ஜுனிடம் கோபப்பட்டு பேசிவிட்டு முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த தேன்மொழி தனது மொபைல் ஃபோனில் இருந்த அர்ஜுனனின் போட்டோவை பார்த்தபடி ‌“ஏன் நீ இப்படி இருக்க? நான் கோச்சிக்கிட்டு இனிமே பேச மாட்டேன்னு சொல்லிட்டு காலை கட் பண்ணா, இது தான் சாக்கு.. இனிமே இவ நம்ம கிட்ட பேசவே வேண்டாம்ன்னு நினைச்சு அப்படியே விட்டுவிடுவியா? அப்படி எல்லாம் சொல்லக் கூடாது. என்னால உன் கிட்ட பேசாம இருக்க முடியாது அப்படி இப்படின்னு சொல்லி எனக்கு நீ மெசேஜ் ஆவது அனுப்பி கிட்டே இருக்கணும்ல! மெசேஜ்க்கு ரிப்ளை வரலைனா, கால் பண்ணிக்கிட்டே இருக்கணும். நீ எத்தனை தடவை கால் பண்றியா அவ்ளோ நீ என்னை மிஸ் பண்றேன்னு நான் நினைச்சுக்குவேன். பட் நீ என்ன கண்டுக்கவே மாட்டேங்கறியே அர்ஜுன்! அங்கேயே இருந்து நான் உன் கூட சண்டை போட்டு இருக்கணும் போல. இங்க கிளம்பி வந்து தப்பு பண்ணிட்டேன்.” என்று தனியாக புலம்பிக்கொண்டு இருந்தாள்‌.

அப்போது அவளை பார்க்க அங்கே வந்த பிரிட்டோ அவளது ரூமின் வாசலில் நின்று கொண்டு “may I come in mam!” என்று கேட்க, அவனுக்கு பின்னே கிளாராவும் நின்று கொண்டு இருப்பதை கவனித்த தேன்மொழி “என்ன இவங்க ரெண்டு பேரும் ஒண்ணா நம்ம கிட்ட ஏதோ பேச வராங்க.. ஒருவேளை அவனுக்காக சப்போர்ட் பண்ணி நம்ம கிட்ட பேச சொல்லி இவங்கள அர்ஜுன் அனுப்பி வச்சிருப்பானா?” என்று யோசித்தபடி அவர்களை உள்ளே வர சொன்னாள்.

கிளாரா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, தேன்மொழியை மரியாதையுடன் பார்த்த பிரிட்டோ “மேம்.. நாங்க ரெண்டு பேரும் இங்க இந்தியாவுல இருக்கும்போதே மேரேஜ் பண்ணிக்கலாம்னு இருக்கோம். கிலாராவோட ஹெல்த் கண்டிஷன் பத்தி chief உங்க கிட்ட சொல்லி இருப்பாருன்னு நினைக்கிறேன்.

நான் இருக்கும் மேலயும் டைம் வேஸ்ட் பண்ண ரெடியா இல்ல. நாங்க மேரேஜ் பண்ற ஐடியால இருக்கறத பத்தி ஆல்ரெடி chief கிட்ட பேசிட்டோம். பட் இந்தியால தான் பண்ண போறோம்னு டிசைட் பண்ணத இன்னும் அவர் கிட்ட டிஸ்கஸ் பண்ணல. நீங்களும் அவரும் என்ன ஐடியால இருக்கீங்கன்னு எங்களுக்கு தெரியல. அதான் அவர்‌ கிட்ட பேசுறதுக்கு முன்னாடி உங்க கிட்ட இத பத்தி ஒரு வார்த்தை கேட்டுட்டு போலாம்னு வந்தோம்.” என்றான்.

பிரிட்டோவின் முகத்தில் அவன் கிளாராவை திருமணம் செய்து கொள்ள போவதற்காக அப்பட்டமான சந்தோஷம் தெரிந்தாலும் கூட அதையும் தாண்டி, அவள் இன்னும் சில காலம் தான் உயிரோடு இருப்பாள். அது எத்தனை நாள் அல்லது வருடம் என யாருக்கும் தெரியாது என்பதால் சோகமும் ஒட்டிக் கொண்டிருந்தது.

“நம்ம பிரச்சனைய பத்தியே யோசிச்சிட்டு இருந்துட்டு இவங்கள பத்தி நம்ம யோசிக்காம விட்டுட்டோமே! கிளாரா இருக்கிற வரைக்கும் அவங்க கூட சேர்ந்து சந்தோஷமா வாழனும்னு பிரிட்டோ ஆசைப்படுறதுல எந்த தப்பும் இல்ல. அர்ஜுன் இங்க வந்தாலும் சரி வரலைன்னாலும் சரி. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்.” என்று நினைத்த தேன்மொழி “நீங்க கிறிஸ்டியன் வெட்டிங் தானே பண்ணுவீங்க.. நான் லோக்கல்ல இருக்கிற சர்ச்சில பேசி பார்க்கிறேன். மேரேஜ் அங்க பண்ணாலும் கூட நல்ல நாள் பார்த்து பண்ணா பெட்டரா இருக்கும்னு எனக்கு தோணுது. அம்மா கிட்ட நான் கேட்டு சொல்றேன். உங்க ரெண்டு பேரோட மேரேஜ் கண்டிப்பா சீக்கிரம் நடக்கும். Congratulations both of you.” என்று சொல்லிவிட்டு கிளாராவை அனைத்து அவளுக்கு திருமண வாழ்த்து தெரிவித்தாள்.

- மீண்டும் வருவாள்
 

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-82
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: jansi