தேன்மொழியின் வீட்டை சுற்றி ஏராளமானவர்கள் சூழ்ந்து கொள்ள, “உன்ன பாக்குறதுக்கு தான் எல்லாரும் வந்திருக்காங்க. நீ போய் பேசினா மட்டும் தான் அக்கா இந்த கூட்டம் குறையும்.” என்று ஆதவன் தேன்மொழியிடம் சொல்ல, “டேய் என்னப் போய் கேமரா முன்னாடி நின்னு பேச சொன்னா நான் எப்படி டா பேசுறது? எனக்கு பயமா இருக்கு.” என்று அவனிடம் புலம்பி கொண்டிருந்தாள் தேன்மொழி.
நடப்பதை கவனித்தவாறு அங்கே வந்த ஆருத்ரா “என்ன மம்மி உங்கள இன்டர்வியூ எடுக்குறதுக்கு நிறைய பேர் வந்துருக்காங்கலாமாம்! விஜயா பாட்டி சொன்னாங்க. நீங்க அவங்க கிட்ட போய் பேசாம இங்க ஏன் வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க?” என்று கேட்க, “அது வந்து.. அவங்க திடீர்னு வந்து என்னை கேமரா முன்னாடி நின்னு பேச சொன்னா நான் எப்படி பேசுறது? அதான் என்ன பண்றதுன்னு தெரியாம யோசிட்டு இருக்கேன்.” என்றாள் தேன்மொழி.
“இதுல நீங்க யோசிக்கிறதுக்கு என்ன இருக்கு மம்மி? இது மாதிரி டிவில எல்லாம் வந்தா உடனே நீங்க ஃபேமஸ் ஆயிருவீங்க. உங்களுக்கு செலிபிரிட்டி ஆகணும்னு ஆசையே இல்லையா? நீங்க பேசலனா போங்க. நான் போய் அவங்க கிட்ட பேசுறேன். உங்கள பத்தியும் டாடிய பத்தியும் அவங்க ஏதாவது கேட்டா நானே சொல்றேன்.” என்ற ஆருத்ரா வேகமாக வாசலை நோக்கி செல்ல, ஓடிச் சென்று அவளை பிடித்து நிறுத்திய தேன்மொழி வேகமாக அவளை உள்ளே இழுத்து வந்து “ஓய்.. என்ன பண்ணிட்டு இருக்க நீ? அவ்ளோ தைரியமா நீ பாட்டுக்கு அத்தனை பேர் முன்னாடி போய் பேசுறேன்னு நிக்கிற! அப்படி எல்லாம் உடனே உன்ன மீடியா முன்னாடி காட்டக்கூடாது. அதுக்கப்புறம் நீ வெளிய போனா எல்லாரும் உன்ன அர்ஜுனோட பொண்ணுன்னு தெரிஞ்சு வச்சுக்கிட்டு உன்னை ஏதாவது பண்ண ட்ரை பண்ணா நாங்க என்ன பண்றது? அவங்க எல்லாரும் இங்க இருந்து போகிற வரைக்கும் நீ ரூமை விட்டு வெளியே வரவே கூடாது.” என்று ஆருத்ராவிடம் சொன்ன தேன்மொழி “இவ அப்பாவை மாதிரியே இவளுக்கும் தைரியம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. இவளை கண்டுக்காம விட்டா நமக்கு தெரியாம வெளிய ஓடிப் போனாலும் போய்டுவா.
இவன கூட்டிட்டு போய் நீ ரூம்ல உக்காரு. நான் வெளியே போய் முதல்ல அவங்க கிட்ட என்ன பேசணுமோ பேசி அனுப்பி வச்சிட்டு வர்றேன்.” என்று ஆதவனிடம் சொல்லிவிட்டு வெளியில் சென்றாள்.
ஆதவன் ஆருத்ராவை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றுவிட, வெளியில் சென்ற தேன்மொழியின் அருகில் இரண்டு தூண்களைப் போல இரு பக்கமும் பிரிட்டோவும், கிளாராவும் நின்று கொண்டு இருந்தார்கள். ஏற்கனவே அவர்கள் எதிர்பார்த்ததை போலவே வெளியில் வந்திருந்த அனைவரும் அர்ஜூனை பற்றியும், தேன்மொழிக்கும் அவனுக்கும் நடுவில் காதல் எப்படி மலர்ந்தது என்பது பற்றியும் எக்கச்சக்கமான கேள்விகளை அவளிடம் கேட்டார்கள்.
இங்கே வந்ததில் இருந்து இது மாதிரியான கேள்விகளுக்கு எல்லாம் பொய் சொல்லி பழகி இருந்த தேன்மொழி சரளமாக அனைத்து கேள்விகளுக்கும் சலிக்காமல் பதில் சொன்னாள். அனைத்தையும் தனது மொபைல் கேமராவில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த பிரிட்டோ “தேன்மொழி மேடம் நல்லா பொய் சொல்றாங்க.” என நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டான்.
ஒரு ரிப்போர்ட்டர் பெண் “மிஸ்டர் அர்ஜுனுக்கு ஆல்ரெடி மேரேஜ் ஆயிடுச்சு. அவருக்கு குழந்தைங்க எல்லாம் இருக்காங்க. அவர் வைஃப் இறந்துட்டாங்கன்னு நாங்க கேள்விப்பட்டோம். அது உண்மையா?” என்று கேட்க, “இது நம்ம லிஸ்டிலேயே இல்லாத கொஸ்டினா இருக்கே.. இதுக்கு நம்ம என்ன ஆன்சர் பண்றதுன்னு தெரியலையே.. இவங்க ஏற்கனவே எல்லாமே தெரிஞ்சு தான் கொஸ்டின் பண்றாங்க. நான் இல்லைன்னு பொய் சொன்னா, அதை கண்டுபிடிச்சு ஏன் அப்படி பொய் சொன்னேன்னு மறுபடியும் இன்னொரு பிரச்சனைய கிளப்புவாங்க. அதுக்கு உண்மையையே சொல்லிடலாம்.” என்று நினைத்த தேன்மொழி “ஆமா அது உண்மை தான். நாங்க ஃபேஸ்புக்ல லவ் பண்ணிட்டு இருக்கும்போதே அர்ஜுன் அத பத்தி எல்லாம் என் கிட்ட சொல்லிட்டாரு. இதுவரைக்கும் அவர் என் கிட்ட எதையுமே மறைச்சதில்லை. அப்படி அவர் என் கிட்ட வெளிப்படையாக இருக்கிறது தான் எனக்கு ரொம்ப புடிச்சி இருந்துச்சு. எனக்கே தெரியாம நான் அவரை லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணதுக்கு அதுவும் ஒரு ரீசண் தான்.” என்றாள்.
உடனே இன்னொரு தன் கையில் இருந்த மைக்கை அவள் முன்னே நீட்டி “ஆனா மேடம் நாங்க கேள்விப்பட்ட வரைக்கும் அர்ஜுன் சார் ஃபேஸ்புக்ல அவ்வளவு ஆக்டிவா இருக்க மாட்டாருன்னு தான் எல்லாரும் சொல்றாங்க. அப்புறம் எப்படி நீங்க ரெண்டு பேரும் facebookல பேசி இந்த அளவுக்கு லவ் பண்ணி இருக்க முடியும்?” என்று கேட்க, “அடப்பாவிகளா எப்படி டா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க? அவரோட facebook ஐடி என்னன்னு கூட எனக்கு தெரியாது. டேய் அர்ஜூன்.. இது எல்லாமே நீ பண்ணா வேலை தானே.. வேணுமே இப்படி எல்லாம் கொஸ்டின் கேட்க சொல்லி இவங்கள அனுப்பிவிட்டு இருக்கியா? நீ மட்டும் என் கையில கிடைச்சினா உன்னை சும்மாவே விட மாட்டேன் டா.” என்று நினைத்த தேன்மொழி “அவர் யாருக்கும் தெரியாம இன்னொரு fake ID வைத்திருக்கிறாரு.
அதுல தான் நாங்க ரெண்டு பேரும் chat பண்ணுவோம். என்ன நீங்க இப்படி எல்லாம் பர்சனல் கொஸ்டின்ஸா கேக்குறீங்க? எனக்கும் அவருக்கும் நடுவுல ஆயிரம் இருக்கும். அதை நான் எதுக்குங்க பப்ளிக்ல சொல்லணும்? இங்க எதுக்கு நீங்க வந்திங்களோ அத பத்தி மட்டும் பேசுங்க. அன்வாண்டட் கொஸ்டின்ஸ் எல்லாத்தையும் அவாய்ட் பண்ணுங்க.” என்று கோபமாகவே சொல்லி விட்டாள்.
உடனே அவன் “சாரி மேடம்” என்று சொல்லி விட, அதற்கு மேல் அங்கே கூடியிருந்த மீடியா ஆட்கள் அனைவரும் அர்ஜுன் புதுசாக கட்டி இருக்கும் ஆசிரமத்தை பற்றி பேச தொடங்கினார்கள். “உண்மையை சொல்லணும்னா அவர் இப்படி பண்ணப்போறாருன்னு எனக்கு எதுவுமே தெரியாது. நான் இந்த மாதிரி கஷ்டப்படுறவங்களுக்கு ஏதாவது பண்ணா நல்லா இருக்கும்னு மட்டும் தான் அவர்கிட்ட ஒரு வார்த்தை சொன்னேன். அதை சீரியஸா எடுத்துக்கிட்டு வெறும் ரெண்டு நாள்ல இந்த அளவுக்கு பண்ணுவாருன்னு நானே எதிர்பார்த்தல. உங்க எல்லார மாதிரியும் நானும் நியூஸ்ல வந்தது பார்த்து தான் அவர் பண்ணுதை தெரிஞ்சுகிட்டேன்.” என்று அந்த கேள்விக்கு மட்டும் உண்மையாக பதில் சொன்னாள் தேன்மொழி.
மீடியா ஆட்களை கையாள்வது தேன்மொழிக்கு புதிய விஷயம் என்பதால் அவள் இவர்களை சமாளிக்க திணறுகிறாள் என்று புரிந்து கொண்ட பிரிட்டோ “ஆல்ரெடி நீங்க மிஸ்ஸஸ் அர்ஜுன் கிட்ட நிறைய கேட்டுட்டீங்க. அவங்களும் பதில் சொல்லிட்டாங்க. இன்னைக்கு இது போதும். இங்க நின்னுகிட்டு மத்தவங்கள டிஸ்டர்ப் பண்ணாம முதல்ல எல்லாரும் கிளம்பி போங்க.” என்று சொல்லி அங்கே இருந்த மீடியா ஆட்களை தன்னுடன் வந்த பாடிகார்டுகளை வைத்து சமாளித்து அனுப்பி வைத்தான்.
அவர்கள் சென்ற பிறகு தேன்மொழியிடம் நன்றி சொல்வதற்காக வந்திருந்த சிலர் அவளை பார்த்து மனதார நன்றி சொல்லிவிட்டு தங்களிடம் இருந்த சில பொருட்களை “எங்களால உனக்கு கொடுக்க முடிஞ்சது இது தான் மா. நீயும், உன் புருஷன் புள்ளைங்க எல்லாரும் நல்லா இருக்கணும்.” என்று சொல்லி அவளிடம் கொடுத்துவிட்டு சென்றார்கள்.
அவள் என்ன தான் தனக்கு எதுவும் வேண்டாம் என்று சொன்னாலும் அவர்கள் வலுக்கட்டாயமாக பேரன்பின் காரணமாக பூக்கள், பழங்கள் ஸ்வீட் பாக்ஸ் என அவர்கள் சக்திக்கு முடிந்தவற்றை அவளுக்கு வாங்கிக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு சென்றார்கள். எப்படியோ ஒரு வழியாக அனைவரிடமும் பேசி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைப்பதற்கு தேன்மொழிக்கு இரண்டரை மணி நேரத்திற்கு மேலானது. வந்தவர்கள் கொடுத்துவிட்டு சென்ற பொருட்கள் அந்த வீட்டின் பாதி ஹால் வரை நிரம்பியிருந்தது.
அதை பார்த்த விஜயா “இவ்வளவையும் வச்சுக்கிட்டு நம்ம என்னடி பண்றது?” என்று கேட்க, “அதுதான் எனக்கும் தெரியல மா.” என்று தேன்மொழி சொல்லி அவள் வாயை மூடுவதற்குள் வெளியில் இருந்து வந்தவர்கள் எல்லாம் கிளம்பி சென்ற பிறகு, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் உள்ளே வந்து தேன்மொழி இடம் நடந்ததை பற்றி விசாரிக்க தொடங்கினார்கள்.
ஆருத்ரா சொன்னதைப் போலவே ஒரே நாளில் இப்போது தேன்மொழி செலிபிரிட்டி ஆகி விட்டாள். இப்போது உள்ளே வந்து அவளிடம் பேசிக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் அவளுக்கு நன்றாக தெரிந்தவர்கள் என்பதால், என்ன செய்தும் அவளால் அவர்களை உள்ளே வரவிடாமல் தடுக்க முடியவில்லை. உள்ளே வந்தவர்கள் அவளுடன் ஃபோட்டோ எடுக்க வேண்டும் என அனப்பிடித்து செல்பி எடுத்துக் கொண்டு சென்றார்கள்.
அதுவரை gift-ஆக அந்த பொருட்களை என்ன செய்வது என்று யோசித்து குழம்பிக் கொண்டிருந்த தேன்மொழி இப்போது அங்கே வந்த பக்கத்து வீட்டுக்காரர்களிடம் அனைத்தையும் பிறித்துக் கொடுத்து அனுப்பி விட்டாள். அனைத்தையும் முடித்து பெருமூச்சு விட்டுவிட்டு சென்று அவள் சோஃபாவில் அமர்ந்த பிறகு தான் அப்பாடா என்று அவளுக்கு இருந்தது. அத்தனையையும் சமாளித்ததில் அவளுக்கு அப்படி ஒரு சோர்வு.
இதற்கிடையில் நடந்ததை எல்லாம் வழக்கம்போல கடமையை கண்ணாக பிரிட்டோ அனைத்தையும் அர்ஜுனுக்கு அனுப்பி வைத்தான். இரவு தாமதமாக தூங்கியதால் கிட்டத்தட்ட மதியம் மூன்று மணி அளவில் தான் தூங்கி எழுந்தான் அர்ஜுன். அவன் உடனே தனது மொபைல் ஃபோனை எடுத்து பார்க்க, பிரிட்டோவிடம் இருந்து அவனுக்கு ஏராளமான மெசேஜ்கள் வந்திருந்தது.
அதை அவசரமாக படித்து பார்த்த அர்ஜூன் “அடச்சே.. இப்படி ஒரு பிராப்ளம் வரும்னு நான் யோசிக்கவே இல்லையே.. இவ அந்த வீட்ல இருந்தா எப்படி என்னால வாசல்ல நிறைய பாடிகார்ட்ஸ் போட முடியும்? டாடி வாங்கி கொடுத்த வில்லாவுக்கும் போக மாட்டேன்னு அடம் பிடிக்கிறா.. நானே புதுசா ஏதாவது நல்ல லொகேஷன்ல வீடு வாங்கி தரேன்னு சொன்னாலும் கேட்க மாட்டா.. டாடி கொடுத்த டைம்ல இன்னும் ஒரு நாள் தான் இருக்கு.
அதுக்குள்ள எத்தனை சமாளிக்கிறது நான்? டேய் அர்ஜுன் இருந்தாலும் நீ ரொம்ப பாவம் டா..!! யார் யாருக்கோ எப்படி எப்படியோ உன்னால ப்ராப்ளம் வந்திருக்கு. ஆனா உனக்கு இப்படி ஒரு பிராப்ளம் வந்திருக்கவே கூடாது டா! இதையெல்லாம் போய் மத்தவங்க கிட்ட சொல்லி வெளிப்படையா ஃபீல் பண்ண கூட முடியாது. உன் பொண்டாட்டிய கூட உனக்கு சமாளிக்க தெரியவில்லையான்னு உன்ன தான் எல்லாரும் கேவலமா நினைப்பாங்க.” என்று நினைத்து ரெப்ரெஷ் ஆவதற்காக எழுந்து சென்றான்.
அவன் இப்போது ஆன்லைனில் இருப்பதால் தான் அனுப்பிய மெசேஜ் அவனுக்கு டெலிவரி ஆகிவிட்டது. என்று கவனித்த தேன்மொழி “இப்ப தான் சாருக்கு பொழுது விடியுது போல இருக்கு.. என்னை இங்க நிம்மதி இல்லாம இருக்க வச்சுட்டு அங்க அவர் மட்டும் இஷ்டத்துக்கு ஜாலியா தூங்கிட்டு இருக்காரா.. இன்னைக்கு இருக்கு அவருக்கு.” என நினைத்து அர்ஜுனுக்கு கால் செய்தாள்.
வாஷிங் ஏரியாவை நோக்கி நடந்த அர்ஜுன் தனது மொபைல் ஃபோன் ரிங் ஆகவும் திரும்பி வந்து அதை எடுத்து பார்த்தான். தேன்மொழியின் நம்பரை பார்த்தவுடன் இப்போது இவள் என்ன சொல்வாளோ என்று நினைக்கவே அவனுக்கு பயமாக இருந்தது. இப்படி ஒரு நாள் தன் வாழ்க்கையில் வரும், தன் பொண்டாட்டியை கண்டெல்லாம் தன் அச்சப்பட்டு அவளை சமாளிக்க யோசித்து திணற வேண்டும் என்றெல்லாம் அவன் கனவிலும் கூட
யோசித்ததில்லை.
- மீண்டும் வருவாள் 💕

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-81
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.