மஞ்சம்-78

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
ஆருத்ரா கேட்டதற்காக தேன்மொழி அனைவரையும் அழைத்துக் கொண்டு தியேட்டருக்கு சென்று இருந்தாள். அனைவரும் மும்மரமாக படத்தை பார்த்துக் கொண்டிருக்க, தேன்மொழி மட்டும் அர்ஜூனை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள். அப்போது அவள் ஃபோனிற்கு ஒரு மெசேஜ் வந்தது. அது ஒருவேளை அர்ஜுனாக இருக்குமோ என நினைத்து ஆர்வமாக அவள் ஓப்பன் செய்து பார்க்க, “என்னை நீ டோட்டலா மறந்துட்ட இல்ல தேன்மொழி! உன் கிட்ட சொல்லாம கூட உங்க வீட்ல இருந்து நான் கிளம்பி வந்தேன்.

உன் மேல நான் கோவமா இருக்கேன்னா இல்லையா, இத்தனை நாளா வந்ததுக்கு அப்புறமா நான் ஏன் உன் கிட்ட பேசலன்னு கூட நீ யோசிக்கல இல்ல! இந்த ஃப்ரெண்ட்ஷிப் எல்லாம் கொஞ்ச நாள் தானேன்னு நிறைய பேர் சொல்லி கேட்டிருக்கேன். நீயும் நானும் அப்படி இருக்க மாட்டோம்ன்னு நெனச்சேன். பட், நீ ரொம்ப மாறிட்ட..!!” என்று உதயா தான் அவளுக்கு மெசேஜ் அனுப்பி இருந்தான்.

உண்மையில் அதை பிறகு தான் அவளுக்கு உதயாவை அவள் திட்டி காலையில் தன் வீட்டை விட்டு செல்லச் சொன்னது அவளுக்கு ஞாபகம் வந்தது. அதற்கு முன் வரை அர்ஜுனை பற்றியே யோசித்துக் கொண்டிருந்த தேன்மொழி ஒரு நொடி கூட அவனை நினைத்து பார்த்திருக்கவில்லை ‌தான். ஆனால் இப்போது அதை உதயா சொல்லி கேட்கும்போது அவளுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்க, “நீ என் ஹஸ்பண்டை பத்தி தப்பா பேசினது எனக்கு சுத்தமா பிடிக்கல. அதுக்காக மட்டும் தான் நான் ரியாக்ட் பண்ணேன். மத்தபடி நான் உன் கூட பேசவே கூடாதுன்னு எல்லாம் நினைக்கல உதயா.

இங்க வந்ததுல இருந்து அடுத்தடுத்து ஏதாவது ஒன்னு நடந்துகிட்டே இருக்கு. அதை எல்லாம் ஹாண்டில் பண்றதுலயே நான் பிஸியா இருந்துட்டேன். அதான் எனக்கு உன் கிட்ட பேச டைம் கிடைக்கல. நீ தப்பா நினைச்சுக்காத. நீ எதுக்காக நான் மாறிட்டேன்னு நினைக்கிறேன்னு எனக்கு புரியல.. இங்க பக்கத்து வீட்டுக்காரங்க என்னை பார்த்துட்டு என் ஹஸ்பண்ட் பணக்காரரா இருக்கிறதுனால அவரை கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் நான் கொஞ்சம் மாறின மாதிரி இருக்கேன்னு சொல்லிட்டு இருக்காங்க. அவங்களுக்கு தான் என்ன பத்தி தெரியாது ஏதோ ஒளர்றாங்க.. நீயும் அப்படித் தான் நினைக்கிறியா?” என்று கேட்டு அவனுக்கு ரிப்ளை அனுப்பினாள் தேன்மொழி.

“நானா அப்படி நினைக்கல தேன்மொழி. நீதான் என்ன அப்படி நினைக்க வைக்கிற. உன் ஹஸ்பண்டை நீ பாக்குறதுக்கு முன்னாடியே உன் லைஃப்ல இருந்தவன் நான். என்ன பத்தி உனக்கு தெரியலல்ல.. நான் அப்படி சொன்னது உன் நல்லதுக்காக தான்னு உனக்கு புரியவில்லை இல்ல.. நீ என்ன அப்படி பேசுனது கூட எனக்கு கஷ்டமா இல்ல.

உனக்கு பேசுறதுக்கு உரிமை இருக்குன்னு நான் சாதாரணமா எடுத்துகிட்டேன். ஆனா நான் இத்தனை நாளா உன் கிட்ட பேசாம இருந்தும் கூட நீ பதிலுக்கு ஒரு வார்த்தை என் கிட்ட பேசாம, இப்படி ஒருத்தன் இருக்கிறதையே கண்டுக்காம எப்படித் தான் இருக்கியோ தெரியல.‌ எனக்கு தெரிஞ்ச தேன்மொழி இப்படியெல்லாம் இருந்ததா எனக்கு ஞாபகம் இல்ல. அப்போ நீ மாறிட்டேன்னு தானே அர்த்தம்!

நீ என்னை டிஸ்டர்பன்ஸா பார்க்க ஆரம்பிச்சிட்டேனு எனக்கு தோணுச்சு. அதான் நான் மறுபடியும் வாலண்டியரா வந்து உன் கிட்ட எதுவும் பேசல. ஃபிரண்ட்ஸ் கூட தியேட்டர் வந்தேன். இங்க உன்னை நேர்ல பார்த்ததுக்கு அப்புறம் பேசணும்னு தோணுச்சு. நீ மறுபடியும் ஏதாவது மூஞ்சில அடிச்ச மாதிரி பேசிட்டின்னா, அப்புறம் எனக்கு தான் கஷ்டமா இருக்கும். அதான் எதுக்குன்னு விட்டுட்டேன். இருந்தாலும் உன்னை பார்த்துட்டு உன் கிட்ட பேசாம இருக்க முடியல. அதான் மெசேஜ் பண்ணேன். இப்பயும் உன்ன டிஸ்டர்ப் பண்ணி இருந்தா சாரி.” என்று மின்னல் வேகத்தில் டைப் செய்து உதயா அவளுக்கு அனுப்பினான்.

அவன் அதை டைப் செய்து கொண்டு இருக்கும்போது அவன் கண்கள் கலங்கி மொபைல் ஸ்க்ரீனில் விழுந்தது கண்ணீர். அதை யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்ட உதயா தனக்கு முன்வரிசையில் அவளுடைய குடும்பத்தினருடன் அமர்ந்திருக்கும் தேன்மொழியை எட்டிப் பார்த்தான்.

அவனது மெசேஜை படித்துவிட்டு சுற்றி முற்றி அவன் எங்கேயாவது அமர்ந்திருக்கிறானா என்று தன் கண்களால் தேடிய தேன்மொழி, “நீ என்னை பார்க்கும்போதே என் கிட்ட பேசி இருக்கலாமே.. ஏன் டா இப்படி யார் கிட்டயோ பேசுற மாதிரி பேசுற? உனக்கு என் மேல கோபமே இருந்தாலும் டைரக்டா கேட்டு சண்டை போடுவது தப்பில்ல. நீ சொல்ற மாதிரி ஒருவேளை எனக்கே தெரியாம கூட நான் சேஞ்ச் ஆகி இருக்கலாம். மேரேஜ்க்கு அப்புறம் எல்லாரும் அப்படித் தான் இருப்பாங்க உதயா.

எனக்கு இப்பல்லாம் எதை பார்த்தாலும், சாப்பிட்டாலும் தூங்கினாலும் கூட அவர் ஞாபகம் நான் வருது. அவர் அங்க இருக்காரு, நான் எங்க இருக்கேன். சோ அவர் என்ன பண்ணிட்டு இருப்பாருன்னு யோசிக்கிறதிலேயே பாதி நேரம் போயிருது. நான் அவரைப் பத்தியே யோசிட்டு இருப்பதினால தான் மத்த விஷயங்கள்ல focus பண்ண மாட்டேங்கிறேன்னு நினைக்கிறேன். இன்டர்வெல்ல கேண்டீன் வா. நம்ம மீட் பண்ணலாம்.” என்று அவனுக்கு மெசேஜ் அனுப்பினாள்.

இன்னும் அர்ஜுன் மற்றும் தேன்மொழியின் உறவுக்கு நடுவில் இருக்கும் ஸ்ட்ராங்கான இணைப்பை புரிந்து கொள்ளாமல் அர்ஜுன் என்னவோ இவளை அவனுடைய வலையில் வீழ்த்தி வைத்திருக்கிறான் என்றே நினைத்துக் கொண்டிருந்த உதயாவிற்கு இவள் பேசுவதை எல்லாம் கேட்க எரிச்சலாக தான் இருந்தது.

அர்ஜுன் விஷயத்தில் தேன்மொழி பெரிய தவறு செய்கிறாள் என்று நினைத்துக் கொண்டிருந்த உதயா “எப்படி யோசித்துப் பார்த்தாலும் எனக்கு இவ அந்த வயசான ஆள் கூட வாழ்றது சரியாவே படல. இது எல்லாம் எங்க போய் முடிய போகுதுன்னு தெரியல. இப்ப நம்ம ஏதாவது போய் அவ கிட்ட சொன்னாலும் அவன் நம்மள தான் தப்பா நினைக்கிறான். சோ வாலண்டியரா நம்ம அந்த ஆள குறை சொல்லி இவஸகிட்ட பேசி இருக்கிற ரிலேஷன்ஷிப்பை கெடுத்துக்கிறதுக்கு பதிலா போகப்போக என்ன நடக்குதுன்னு வெயிட் பண்ணி பாக்குற தான் நல்லது.” என்று யோசித்தவன் இனிமேல் அர்ஜுனை பற்றி நேரடியாக தேன்மொழியிடம் பேசக்கூடாது என நினைத்து அவள் சொன்னதற்கு சரி என்று மட்டும் ரிப்ளை அனுப்பினான்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு இன்டர்வெல் வரும்போது அவர்கள் இருவரும் ஏற்கனவே சொன்னதைப் போல கேண்டினில் சந்தித்தார்கள். நடந்த எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் உதயாவிடம் தேன்மொழி நார்மலாக பேச, அவனும் அவளிடமும் மற்றவர்களிடமும் சகஜமாக பேசினான். அப்போது தேன்மொழி “அது சரி.‌ நீயும் இன்னும் எத்தனை நாள் தான் இப்படியே சுத்திட்டு இருப்ப? மேரேஜ் பண்ணி செட்டில் ஆகுற ஐடியா இல்லையா உனக்கு? ஜாப் கிடைச்சா மேரேஜ் பண்ணிக்குவேன்னு சொன்ன.. அப்புறம் பிரமோஷன் கிடைச்சா பார்க்கலாம்னு சொன்ன.. நீ இப்படியே வெயிட் பண்ணிட்டு இருந்தா வயசு தான் டா ஆகும்.‌ உங்க வீட்ல உனக்கு பொண்ணு பாக்குறாங்களா இல்லையா?” என்று சாதாரணமாக கேட்க,

“எனக்கு என்ன முப்பது, நாப்பது வயசா ஆகப்போகுது? இப்ப தான் 27 ஆவது. எனக்கு ஒன்னும் அவசரம் இல்ல தேனு. பொறுமையா எனக்கு புடிச்ச பொண்ணை ஆசை ஆசையா லவ் பண்ணி ஒருத்தர பத்தி ஒருத்தர் நாங்க நல்லா தெரிஞ்சு புரிஞ்சதுக்கு அப்புறமா தான் அவளை கல்யாணம் பண்ணிக்குவேன். எனக்கு அரேஞ்ச் மேரேஜ்ல எல்லாம் சுத்தமா இன்ட்ரஸ்ட் இல்ல.” என்றான் உதயா.

அவன் வேண்டுமென்று தன் வயதைப் பற்றி பேசியது அர்ஜுனனின் வயதை பற்றி குத்தி காட்டுவதைப் போல தேன்மொழிக்கு தோன்றியது. இருப்பினும் அவன் நேரடியாக எதுவும் சொல்லவில்லை என்பதால் நாமாக எதையாவது நினைத்து மீண்டும் பிரச்சனையை உருவாக்க வேண்டாம் என எண்ணி அவள் அமைதியாக இருந்து விட்டாள்.

அப்போது ஆருத்ரா ஐஸ்கிரீம் வேண்டும் என்று கேட்டதால் அவனிடம் பேசிவிட்டு அவளுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து அவளை அழைத்துக் கொண்டு மீண்டும் படம் பார்க்க உள்ளே சென்று விட்டாள் தேன்மொழி.

எப்படியோ அனைவரும் வெளியில் சுற்றி முடித்து இரவு லேட்டாக வீட்டிற்கு சென்று ஹோட்டலில் ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்டுவிட்டு படுத்து உறங்கி விட்டார்கள்.

அர்ஜுன் இன்னும் தன் பிடிவாதத்தை விடாமல் வெறும் பால் பழம் மட்டும் சாப்பிட்டுக் கொண்டு அப்படியே இருக்க, அவனைக் காண அவனுடைய ரூமிற்கு சென்ற ஜானகி “உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் நடுவுல மாட்டிகிட்டு நாங்க எதுக்கு டா அவதிப்படணும்? இப்படி நீ கஷ்டப்பட்டு இருக்கிறதை பார்க்கிறதுக்கா அவளை நான் உனக்கு கல்யாணம் பண்ணி வச்சேன்?

அவ தான் பிடிவாதமா இங்க வர மாட்டேன்னு இருக்கிறானா நீயும் ஏன் டா சாப்பிடாம இருந்து என் உயிரை வாங்குற? ஆல்ரெடி நீ வீக்கா இருக்கேன்னு டாக்டர் உனக்கு குளுக்கோஸ் போட்டுட்டு போயிருக்காரு. மறுபடியும் எதுக்கு சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிக்கிற? உங்க எல்லாரையும் பெத்ததுக்கு உங்க அப்பாவ கல்யாணம் பண்ணிட்டு இவ்ளோ கஷ்டப்படறதுக்கு நான் சிங்கிளாவே இருந்திருக்கலாம் போல இருக்கு. நிஜமாவே உங்களை எல்லாம் என்னால சமாளிக்க முடியல டா.” என்று அர்ஜுனிடம் புலம்ப,

தன் அம்மாவை பார்த்து குறும்பாக புன்னகைத்த அர்ஜுன் “என் டாடியை கல்யாணம் பண்ண அதனால தான் உங்களுக்கு இவ்வளவு ஹேண்ட்ஸமான பசங்க எல்லாம் இருக்காங்க.. நீங்க சிங்கிளா இருந்திருந்தா கண்டிப்பா என் டாடி மாதிரி ஒரு ஆள் கிடைக்காம போய்விட்டாரேன்னு நீங்க ஃபீல் பண்ணிட்டு இருப்பீங்க..

நான் என் ஹனி பேபிக்கு கால் பண்ணி பேசினேன் மம்மி‌. அவளுக்கு இன்னும் என் மேல இருக்கிற கோபம் போகல‌. பட் கோபம் எந்த அளவுக்கு இருக்குதோ அந்த அளவுக்கு பாசமும் இருக்கும்ல.‌‌.. அதான் என் பொண்டாட்டி சமச்சி எனக்கு இந்தியாவில இருந்து அனுப்பி வைக்கிறா.. இதே மாதிரி எனக்கு ஃபிரஷா அடிக்கடி ‌சமைச்சு கொடுக்கிறேன்னு பிரிட்டோ கிட்ட சொன்னாலாம்.

நானே இப்ப தான் ஃபர்ஸ்ட் டைம் என் பொண்டாட்டி சமச்சத சாப்பிட போறேன். அதுவும் அவ எனக்காக ஸ்பெஷலா நிறைய சமைச்சி இருக்கலாம். அதான் அதுக்குள்ள கண்டதை எல்லாம் சாப்பிட்டு ஸ்டொமக்கை ஃபீல் பண்ண கூடாதுன்னு லைட்டா பசிக்கு மட்டும் சாப்பிட்டுட்டு இருக்கேன். எப்படியும் இன்னும் கொஞ்சம் நேரத்துல ‌ food வந்துரும் மம்மி டோன்ட் வரி.” என்றான்.

“டேய் இதெல்லாம் உனக்கு அநியாயமா இல்லையா டா? அவ தான் என் பேச்சை கேக்காம பிடிவாதமா இருக்கிறானா, அவள கிளம்பி வர சொல்றத விட்டுட்டு அவ அங்க இருந்து சமைச்சு கொடுக்கிறதை இவ்ளோ நேரம் கழிச்சு இங்க இருந்து சாப்பிடுவதற்கு போய் இவ்வளவு சந்தோஷப்படுற!” என்று ஜானகி கோபமாக கேட்க, “அது எல்லாம் ஒரு டிஃபரென்ட் ஃபீல் மம்மி..‌ உங்களுக்கு சொன்னா புரியாது. நீங்க ஃப்ரீயா விடுங்க. நான் டாக்டருக்கு கால் பண்ணி கேட்டுட்டேன். என்னை பசிச்சதுன்னா, milk and bread சாப்பிட சொல்லி இருக்காரு. நான் ஒன்னும் சின்ன பையன் இல்ல... என்ன நான் பாத்துப்பேன். நீங்க போய் தூங்குங்க.” என்று சொல்லி அர்ஜுன் ஜானகியை அங்கே இருந்து அனுப்பி வைத்து விட்டான்.

- மீண்டும் வருவாள் 💕
 

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-78
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.