தேன்மொழி கிச்சனில் சமைத்துக் கொண்டிருந்தாள். ஆருத்ரா கேட்டதற்காக அனைவரும் தியேட்டருக்கு போகலாம் என முடிவு செய்த ஆதி அவளுடன் கிச்சனுக்கு சென்று “அக்கா.. இவ தியேட்டருக்கு போலாம்னு சொல்றா.. நான் டிக்கெட் புக் பண்ணவா? நானே தியேட்டருக்கு போய் படம் பார்த்து ரொம்ப நாள் ஆகுது. வரியா நம்ம எல்லாரும் ஒண்ணா போகலாம்?” என்று கேட்க, ஆர்வமுடன் தன்னை பார்த்துக் கொண்டிருந்த ஆருத்ராவின் முகத்தை பார்த்த தேன்மொழி “தியேட்டருக்கு தானே.. போலாமே.. என்னோட டெபிட் கார்டை யூஸ் பண்ணி எல்லாருக்கும் சேர்த்து டிக்கெட் புக் பண்ணிடு. நம்ம ஈவினிங் ஷோ போகலாம். கிலாராவுக்கும், பிரிட்டோவுக்கும் அரைகுறையா தமிழ் தெரியும். சோ அவங்களும் நம்ம கூட வரட்டும்.” என்றாள் தேன்மொழி.
உடனே எக்சைட்டான ஆருத்ரா “வாவ்.. தேங்க்ஸ் மம்மி.. நீங்க குக்கிங் எல்லாம் முடிச்சுட்டு சீக்கிரம் ரெடி ஆகுங்க. நம்ம எல்லாரும் இன்னைக்கு அவுட்டிங் போலாம். நானும் போய் என்ன டிரஸ் போடறதுன்னு டிசைட் பண்ணி எடுத்து வைக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு தேன்மொழியின் ரூமை நோக்கி ஓடினாள்.
அவள் துள்ளி குதித்து ஓடும்போது அவளுடைய போனிடைல் அங்கும் இங்கும் ஆடுவதை கண்டு சிரித்த ஆதி “இந்த குட்டி பொண்ணு வந்ததுக்கு அப்புறம் நம்ம வீடே நெறஞ்சு போன மாதிரி இருக்கு. இவளை பார்த்தாலே மனசுல ஒரு happiness feel ஆகுது. நான் எங்க இருந்தாலும் மாமா மாமான்னு கரெக்டா என் கிட்ட வந்துட்றா. அழகா ஸ்வீட்டா பேசுறா..!! இவ பேசுனா கேட்டுட்டே இருக்கலாம் போல. சின்ன பொண்ணா இருந்தாலும் இவங்க வீட்டுல இவள நல்லா வளர்த்து இருக்காங்க.” என்று சொல்ல,
அது உண்மை தான் என்று சொல்வதைப்போல ஆமாம் என்று தலையாட்டிவிட்டு சிரித்த தேன்மொழி “நான் இவ அப்பாவை பார்த்து மயங்கி அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு எல்லாரும் நினைச்சுட்டு இருக்காங்க. பட் உண்மை என்னன்னா என்னை முதல்ல மயக்கினதே இந்த குட்டி பிரின்சஸ் ஆருத்ரா தான். அவ யார் மேலயாவது பாசம் வச்சுட்டா, அவளுக்கு யாரையாவது புடிச்சுட்டா, அவங்க பின்னாடியே சுத்திட்டு இருப்பா..
அவ லைஃப்ல நம்ம எவ்வளவு ஸ்பெஷல்னு அவ கூட இருக்கும்போது நம்மளால ஃபீல் பண்ண முடியும். என்ன அவ மம்மி மம்மின்னு கூப்பிடும் போது முதல்ல எனக்கு ஒரு டிஃபரென்ட் ஃபீல் இருந்துச்சு. எல்லாமே புதுசா இருந்துச்சு. இப்போ அவளை பார்க்கும்போது அவ நிஜமாவே என் குழந்தை தான்னு தோணுது. இந்த மாதிரி ஒரு ஸ்வீட் பேபிய யாருக்கு தான் பிடிக்காது? அவ என் பொண்ணு டா.” என்று பெருமையாக சொன்ன தேன்மொழி சமைக்க தொடங்கினாள்.
ஆதவனும் தேன்மொழி சொன்னதைப் போல அவளுடைய கார்டை பயன்படுத்தி அனைவருக்கும் சேர்த்து தியேட்டருக்கு செல்ல டிக்கெட் புக் செய்ய சென்று விட்டான். நடக்கும் அனைத்தையும் பார்த்தபடி ஹாலில் அமர்ந்திருந்த பிரிட்டோவிற்கும், கிளாராவிற்கும் தான் தங்களுக்கு மாறி மாறி கால் செய்யும் ஜானகியை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தங்களது தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது. நடக்கும் எதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் போல விஜயா ஜாலியாக அக்கம் பக்கத்தில் இருக்கும் பெண்களிடம் தனது மருமகனை பற்றியும், அவளது புகுந்த வீட்டின் சிறப்பையும் பற்றியும் பேசி பெருமை பீத்திக் கொண்டிருந்தாள்.
தேன்மொழியின் குடும்பம் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி இருந்தது. இப்படி ஒரு குடும்பம் முன்னேறி வருவதற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை. தேன்மொழிக்கு கூட நல்ல வரன் அமைய வாய்ப்பு இல்லை என்பதால் எவனும் கிடைப்பவனுக்கு கட்டிக் கொடுத்து விடுங்கள் என்றெல்லாம் இதுவரை அவர்கள் குடும்பத்தை தாழ்த்தி பேசியவர்கள் ஏராளம். ஆனால் அந்த பேச்சுக்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பது போல இப்போது இந்தியாவில் உள்ள பெரும் பணக்காரர்களை விடவும் பெரிய இடத்தில் உள்ள பிரசாத் குரூப்ஸுன் சேர்மன் அர்ஜூன் தங்கள் வீட்டு மருமகனாக இருக்கிறான் என்று நினைக்கும் போதும், அதை மற்றவர்களிடம் சொல்லும் போதும் விஜயாவிற்கு அப்படி ஒரு சந்தோஷம் கிடைத்தது.
தங்களது வாழ்க்கை அடுத்து என்ன ஆகும்? பெற்ற பிள்ளைகளை எப்படி கரை சேர்ப்பது என்று நினைத்து நித்தமும் தவித்துக் கொண்டிருந்த அந்த தாய் உள்ளத்திற்கு இப்போது தன் தலையின் மீது இருந்த பாரம் இறங்கி ஒரு புதிய நிம்மதி கிடைத்தது. இதெல்லாம் அதன் வெளிப்பாடு தான்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் விதவிதமாக ஏராளமான உணவுகளை சமைத்து முடித்த தேன்மொழி யாருக்கோ கால் செய்து சில பொருட்களை கொண்டு வரச் சொன்னாள். அவர்களும் அதை அடுத்த அரை மணி நேரத்தில் கொண்டு வந்து அவளுடைய வீட்டில் இறக்க, அனைத்தையும் திருப்தியுடன் பார்த்த தேன்மொழி ஆதவனை அழைத்து அவனது உதவியுடன் தன் சமைத்து ரெடியாக பேக் செய்து வைத்திருந்த அனைத்து உணவுகளையும் இப்போது டெலிவரி ஆகி இருந்த ஐஸ் பாக்ஸில் எடுத்து அடுக்கினாள்.
நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கிளாரா எழுந்து அவள் அருகில் சென்று “இங்க இருக்கிற பாதி டிஷ் chiefக்கு பிடிச்சதாவே இருக்கே மேடம்.. அவர் பிடிவாதமா அங்க சாப்பிடாம இருக்கறதுனால.. அவர் மனசு மாறனும்னு சாமி கிட்ட வேண்டிக்கிட்டு அவருக்கு பிடிச்சதை எல்லாம் சமச்சு இங்க லோக்கல்ல இருக்கிறவங்களுக்கு நீங்க டொனேட் பண்ண போறீங்களா?” என்று கேட்க, “நான் சாமி கிட்ட வேண்டிக்கிட்ட மட்டும் உங்க chiefக்கு இருக்கிற பிடிவாதமும் திமிரும் குறைஞ்சிடுமா என்ன? நான் சமச்சதே உங்க chiefக்கு தான் மா. அதான் அத்தை நான் ரஷ்யா போறதுக்கு ஜெட்டெல்லா ரெடி பண்ணிட்டாங்களே.. ஒரு ஸ்டார் ஹோட்டல்ல என்ன நெருக்கமோ அது எல்லாமே அதுல அவைலபிளா இருக்கும்.
சோ இங்க இருந்து இந்த ஃபுட் எல்லாத்தையும் பத்திரமா எடுத்துட்டு போய் அந்த ஜெட்ல இருக்கிற food freezing areaல வச்சு அதை ரஷ்யாவுக்கு அனுப்பி விடுங்க. Refrigerate பண்ணி சாப்பிட்டாலும் ரெண்டு மூணு நாளைக்கு நல்லா இருக்கிற மாதிரியான டிஷஸ் மட்டும் தான் நான் செஞ்சிருக்கேன். உங்க chiefக்கு நான் சமைச்ச சாப்பாடு தானே வேணும்.. இத மூணு வேலையும் சூடு பண்ணி சாப்பிட சொல்லுங்க.
இது தீர்வதற்குள்ள மறுபடியும் நான் பிரெஷா சமைச்சு இங்க இருந்து அனுப்பி வைக்கிறேன். என் ஹஸ்பண்டுக்கு சமைக்கிறதை விட எனக்கு இந்த வீட்ல பெருசா வேற எந்த வேலையும் இல்லை. நான் இங்க இருந்து டிஃபரண்ட் டிஃபரண்டா சமைச்சு சமைத்து அவருக்கு அனுப்பி வைக்கிறேன்னு சொல்லிருங்க. இத அனுப்பிட்டு சீக்கிரம் தியேட்டர் போக கிளம்புங்க. ஈவினிங் ஷோ ஏழு மணிக்கு ஸ்டார்ட் ஆயிடும். நானும் போய் கிளம்புறேன்.” என்ற தேன்மொழி கிளம்புவதற்காக தனது ரூமிற்கு சென்று விட்டாள்.
இந்த பிரச்சனைக்கு தேன்மொழி இப்படி ஒரு சொல்யூஷனை கண்டு பிடிப்பாள் என்று எதிர்பார்த்து இருக்காத கிளாரா தனக்குள் சிரித்துக் கொண்டு “chief.. சியா மேடமை விட தேன்மொழி மேடம் தான் உங்களுக்கு perfect pair. என்ன ஆனாலும் உங்களை யாராலயும் கண்ட்ரோல் பண்ண முடியாதுன்னு நினைச்சேன். பட் தேன்மொழி மேடம் ஈசியா உங்களை ஹாண்டில் பண்றாங்க. உங்கள நினைச்சு அவங்க கவலைப்படுறதுல ஒன்னும் தப்பில்லையே! நீங்க அவங்களுக்காக அவங்க சொன்னத யோசிச்சு பார்க்கலாம்.” என்று நினைத்தவள், பிரிட்டோவிடம் தேன் மொழியின் முடிவை பற்றி சொல்லச் சொன்னாள்.
ரெஸ்ட் எடுப்பதற்காக இன்னும் அப்படியே அதே நிலையில் படுத்திருந்த அர்ஜூன் “இவளை சமாளிக்கிறது நம்ம நினைக்கிறது விட கஷ்டமா இருக்கும் போலையே! இவளை force பண்ணியும் இங்க கூட்டிட்டு வர முடியாது. இன்னும் ஜஸ்ட் த்ரீ டேஸ்ல என்ன பண்றது?” என்று நினைத்து பெருமூச்சு விட்டவன், “சரி அவ தான் இங்க வரல.. அவ சமச்ச food-டாவது இங்க வரட்டும். அத சாப்பிடறதுக்குகு தானே நான் இவ்வளவு போராட்டம் பண்ணி இருக்கேன்.. பத்திரமா அத அனுப்பி விடுங்க.. அதையாவது சாப்பிட்டு சந்தோஷப்பட்டுக்கிறேன்..” என்று பிரிட்டோவிடம் சொல்லிவிட்டு அந்த அழைப்பை துண்டித்தான்.
உடனே கிளாராவும், பிரிட்டோவும் அந்த உணவுகளை எல்லாம் காரில் கொண்டு சென்று அர்ஜுன் குடும்பத்திற்கு சொந்தமான பிரைவேட் ஜெட்டில் ஏற்றி ரஷ்யாவிற்கு அனுப்பினார்கள். அதை பின் கிளாரா ஜானகிக்கு கால் செய்து சொல்ல “ஓஹோ இந்த அளவுக்கு அவ தெளிவா யோசிக்கிறாளா? அப்பயும் சாப்பாடு தானே பிரச்சனைன்னு சாப்பாடு கொடுத்து அனுப்பி இருக்கா.. அவ மாமியார் நான் சொல்றத கேட்டு என் பேச்சை மதிச்சு கிளம்பி அவ ரஷ்யா வரணும்னு நினைக்கல..
அர்ஜுன் கூட பழகுனதுக்கு அப்புறம் இவளும் அவன மாதிரியே மாறிட்டா போல இருக்கு.. இந்த வீட்ல எல்லாருக்கும் பிடிவாதம் அதிகமாயிருச்சு. யாரும் பெரியவங்க பேச்ச கேக்குறது இல்ல. இனிமே இவளை இப்படியே விட்டா சரிப்பட்டு வராது. முதல்ல நான் இந்தியா கிளம்பி வரேன். என் பையனையும், மருமகளையும் எப்படி சேர்த்து வைக்கணும்னு எனக்கு தெரியும். எனக்கு தேன்மொழி மேல இருக்கிற கோபம் இன்னும் குறையலனு அவ கிட்ட சொல்லிருங்க.” என்று கோபமாக சொன்ன ஜானகி அந்த அழைப்பை துண்டித்து விட்டாள்.
கிளாராவும், பிரிட்டோவும் உணவுகளை அனுப்பி வைத்துவிட்டு வீடு திரும்பியவுடன் அவர்களுடன் சேர்ந்து அனைவரும் படம் பார்க்க தியேட்டருக்கு சென்றார்கள். இன்னும் படம் தொடங்க நேரம் இருப்பதால் அவர்கள் அனைவரும் லைனாக அமர்ந்து ஸ்னாக்ஸ் சாப்பிட்டபடி பேசிக் கொண்டிருக்க, ஆருத்ராவின் அருகில் அமர்ந்திருந்த தேன்மொழி “இப்பயாவது பிடிவாதத்தை விட்டுட்டு அவன் ஒழுங்கா சாப்பிடுவானா? இல்ல அத சூடு பண்ணி கொடுக்கறதுக்கு கூட நான் தான் கிளம்பி வரணும்னு அதுக்கும் ஒரு பிரச்சனை பண்ணுவானான்னு தெரியலையே! அவன் கிட்ட பேசணும்னு ஆசையா தான் இருக்கு. அவன் நினைப்பாவே இருக்கு.. இப்ப எப்படி இருக்கானோ தெரியல.. பட் இந்த டைம்ல நம்மளா அவனுக்கு கால் பண்ணி பேசினா, நம்ம கோவத்துல இருந்து இறங்கி வந்து சமாதானமான மாதிரி அவனுக்கு தோணும்.
இன்னைக்கு நான் சமைச்சு கொடுத்ததை சாப்பிட்டு அவனா கால் பண்ணி ஏதாவது சொல்றானான்னு பார்க்கலாம். பட் அவனே கால் பண்ணாலும் நம்ம அப்பையும் திமிரா தான் பேசணும். இந்த அர்ஜுன் கிட்ட நம்ம கொஞ்சம் இறங்கி போனாலும் வேலை நடக்காது. சரியான திமிரு புடிச்ச பையன். இனிமே இவன் கிட்ட நானும் இவன மாதிரி தான் இருக்க போறேன்.” என்று நினைத்துக்
கொண்டாள்.
- மீண்டும் வருவாள் 💕

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-77
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.