மஞ்சம்-76

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
டிவி நியூஸில் தேன்மொழியின் பெயரில் அர்ஜுன் ஒரு ஆதரவற்றோர் இல்லத்தை இரண்டே நாட்களில் உருவாக்கி இருப்பதாக ஓடிக் கொண்டிருந்தது. அதை விஜயாவின் அருகில் நின்று ஷாக் ஆகி பார்த்துக் கொண்டிருந்த தேன்மொழி “அவன் அந்த ஃப்ளவர் பொக்கேவை எனக்காக ஆர்டர் பண்ணும்போது, இப்படி தேவை இல்லாம செலவு பண்றதுக்கு யாருக்காவது டொனேஷன் பண்ணா அவங்களாவது நல்லா இருப்பாங்கன்னு சும்மா ஒரு பேச்சுக்கு தான் சொன்னேன். அதுக்காக வெறும் ரெண்டு நாள்ல இவ்வளவு பெரிய விஷயத்தை எப்படி இவனால பண்ண முடிஞ்சது?

இந்த பில்டிங்கை பார்த்தாலே கோடி கோடியா செலவு பண்ணி ரெடி பண்ண மாதிரி இருக்கு. இப்போ கன்ஸ்ட்ரக்ஷன் ஃபீல்டில நிறைய இம்ப்ரூவ்மெண்ட் வந்துருச்சு.. ரெடிமேட் பில்டிங்ஸ் எல்லாம் ப்ரொவைட் பண்றாங்களே! அந்த மாதிரி ஏதேனும் டெக்னாலஜியை யூஸ் பண்ணி இவ்ளோ சீக்கிரத்துல எல்லாத்தையும் பண்ணி முடிச்சு இருப்பாங்க போல!

இந்த அர்ஜுன் நிஜமாவே ரொம்ப வித்தியாசமானவனா இருக்கான்.. நம்ம எவ்ளோ ட்ரை பண்ணி இவன புரிஞ்சுக்க நெனச்சாலும், கடைசியில இவன் out of syllabusல தான் ஏதாவது ஒன்னு பண்றான்.” என்று நினைத்தாள்.

அப்போது அதே டிவி நியூஸ் பார்த்துவிட்டு தேன்மொழியின் வீட்டின் அருகில் உள்ளவர்கள் எல்லாம் “ஏய்.. தேனு.. டிவில உன்ன காட்றாங்க பாரு.. இவர் தான் உன் வெளிநாட்டு புருஷனா! நான் கூட நீ மட்டும் தனியா இங்க வந்திருக்கிறதுனால, உன் புகுந்த வீட்டுக்காரங்க உன்னை அடிச்சு வீட்டை விட்டு துரத்தி விட்டுட்டாங்கன்னு நெனச்சேன். ஆனா உனக்காக உன் புருஷன் பெரிய பெரிய வேலையெல்லாம் பண்றாரு போலயே! எப்ப அவரை எங்க கண்ணுல காட்ட போற?

உங்க அம்மா உன் புருஷன் பெரிய பணக்காரன்னு சொல்லும்போது கூட நாங்க எல்லாம் நம்பல. ஆனா இப்பதானே தெரியுது அது எல்லாமே உண்மைன்னு! அவர் உன்ன பாக்குறதுக்கு இங்க வருவாரா? அவர் வந்தா எங்க கிட்ட காட்டுவியா?” என்று ஆளாளுக்கு எதை எதையோ கேட்டு அவளை சூழ்ந்து கொண்டார்கள்.

அப்போது அவளது மொபைல் ஃபோன் ரிங் ஆக, “கால் பண்றது அர்ஜுனா தான் இருக்கும்.” என்று நினைத்த “என் ஹஸ்பண்ட் கால் பண்றாரு.” என்று சொல்லிவிட்டு அந்த கூட்டத்திற்குள் இருந்து வெளியே வந்து தனது மொபைல் ஃபோனை திக் திக் இதயத்துடன் எடுத்துப் பார்த்தாள். அவளுக்கு ஏதோ ஒரு தெரியாத எண்ணில் இருந்து கால் வந்திருந்தது.

இதுவரை அர்ஜுன் அவளுக்கு நேரடியாக தனது ஃபோனில் இருந்து கால் செய்தது இல்லை என்பதால், “கண்டிப்பா இது அர்ஜுனா தான் இருக்கும்.” என்று நினைத்த தேன்மொழி அவசர அவசரமாக தனது ரூமிற்குள் சென்று டோரை லாக் செய்துவிட்டு கதவின் மீது சாய்ந்து மூச்சு வாங்க காலை அட்டென்ட் செய்து “ஹலோ!” என்றாள்.

“உன் கிட்ட நான் லாஸ்ட்டா பேசி ஒரு வாரம் கூட இருக்காது. பட் என்னவோ ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் பேசுற மாதிரி இருக்கு. ஏண்டி இப்படி என்ன படுத்துற? ‌ நான் உன் கிட்ட ப்ரொபோஸ் பண்ணும்போதே என்ன சொன்னேன்.. இந்த லைஃப்ல இன்னும் எனக்கு எத்தனை நாள் மிச்சம் இருக்குன்னு தெரியல.. ஆனா இருக்கிற ஒவ்வொரு நாளையும் உன் கூட சேர்ந்து சந்தோஷமா வாழனும்னு ஆசைப்படறேன்னு சொன்னேனே..

அதெல்லாம் மறந்து போச்சா உனக்கு? நான் இல்லாம எப்படி டி உன்னால இருக்க முடியுது?” என்று உடைந்த குரலில் அர்ஜுன் கேட்க, கண்கள் கலங்க “நீ எப்பவுமே என் கூட இருப்பேன்னு எனக்கு ப்ராமிஸ் பண்ண.. அத நீதான் மறந்துட்ட அர்ஜுன்.. அன்னைக்கு நீ சொல்லும்போது எனக்கு எதுவும் பெருசா தெரியல. உண்மைய சொல்லப் போனா நீ என்ன சொல்றன்னே எனக்கு புரியல.. நம்ம ஃபர்ஸ்ட் நைட்ல திடீர்னு நீ எங்கயோ போயிட்ட..

திரும்பி வரும்போது நான் உன்ன அப்படி பாப்பேன்னு இமாஜின் கூட பண்ணி பாக்கல அர்ஜூன். அந்த செகண்ட் எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும்? அத பத்தி இங்க யாருக்கும் எந்த கவலையும் இல்லல்ல! இப்ப நான் பண்ற எல்லாத்தையும் நமக்காக தானே பண்றேன்.. அது உனக்கே புரியலைன்னா, வேற யாருக்கு புரியும் அர்ஜுன்! எதுக்காக இப்படி எல்லாம் பண்ற?

நீ இப்படியே பண்ணிட்டு இருந்தா எப்படி நம்மளால சந்தோஷமா வாழ முடியும்? அத்தை கால் பண்ணி நீ மயங்கி விழுந்தத பத்தி சொல்லும்போது எனக்கு அப்படியே உசுரே போற மாதிரி இருந்தது. அவங்க மறுபடியும் கால் பண்ணி உனக்கு எதுவும் இல்லைன்னு சொல்ற வரைக்கும், நான் நானாவே இல்ல.‌ என்னால தான் உனக்கு ஏதோ ஆயிடுச்சோன்னு கில்ட்டி ஃபீலிங்ல எனக்கு செத்துரலாம் போல இருந்துச்சு..

இப்ப நான் சொல்றேன் நல்லா கேட்டுக்கோ அர்ஜுன்.. உனக்கு மட்டும் ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா, அத பாக்குறதுக்கு நான் உயிரோட இருக்க மாட்டேன். இதுக்கப்புறம் எல்லாமே உன் இஷ்டம் தான். பட் நான் சொன்னத மட்டும் மறக்காதே.. நான் சொன்னதுக்கு நீ ஓகே சொல்லாத வரைக்கும், நான் ரஷ்யா கிளம்பி வரவே மாட்டேன்.” என்று உணர்ச்சிகள் பொங்க சொன்னாள் தேன்மொழி.

பேசி முடித்த பிறகும் அவள் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தாள். “ஏய் அழாத டி.. நான் இப்படி எல்லாம் பண்ணலாவது நீ திரும்பி வருவேன்னு நினைச்சு தான் பண்ணேன்.. பட் உன்னை அழ வைக்கணும்னு நினைக்கல.. ஏய்.. குட்லி.. ப்ளீஸ் எனக்காக வா! நான் என் ஹனி பேபியை எவ்ளோ மிஸ் பண்றேன் தெரியுமா?” என்று அர்ஜுன் அவளிடம் கேட்க,

“நீ என்னை அவ்ளோ மிஸ் பண்ற ஆளா இருந்தா, நான் உனக்கு முக்கியம்னு நினைச்சிருந்தா, என் பேச்சை கேட்டு இனிமே தேவையில்லாத வேலைக்கு எல்லாம் போக மாட்டேன்னு நீ எனக்கு ப்ராமிஸ் பண்ணி கொடுத்திருக்கணும்.

அதை விட்டுட்டு ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு சாப்பிடாம அடம் பிடிக்கிற குழந்தை மாதிரி சின்ன பிள்ளைத்தனமா பண்ணிட்டு மயக்கம் வந்து இப்ப படுத்திருக்க! உன் கண்டிஷனை பார்த்து மத்த பயந்துபோய் என்ன இப்போ உடனே கிளம்பி ரஷ்யா வர சொல்றாங்க! இதானே உன் பிளான்! நீ என்ன வேணாலும் பண்ணு அர்ஜுன்.. நான் என் டிஷன்ல ஸ்ட்ராங்கா இருக்கேன்.

அதைத் தாண்டி நீ என்ன ரஷ்யா வர வைக்கணும்னு நினைச்சா, ஆல்ரெடி என்னை கடத்திட்டு தானே போனீங்க.. அந்த மாதிரி மறுபடியும் என் விருப்பம் இல்லாம வலுக்கட்டாயமா கடத்தி கூட்டிட்டு போங்க.‌ நானா என் முழு சம்மதத்தோட கிளம்பி வர மாட்டேன்.” என்று தன் கண்ணீரை துடைத்துவிட்டு உறுதியாகச் சொன்னாள் தேன்மொழி.

“இவ எந்த அளவுக்கு எமோஷனலி வீக்கா இருக்காளோ.. அந்த அளவுக்கு அவ டெசிஷன்ல ஸ்ட்ராங்கா இருக்காளே.. இப்ப என்ன பண்றது? டாடி கொடுத்த டைம்ல இன்னும் மூணு நாள் தான் பேலன்ஸ் இருக்கு.” என்று யோசித்தேன் அர்ஜுன், “அப்போ என்ன ஆனாலும் பரவால்ல நீ இப்படி எல்லாம் இருப்பேன் சொல்ல வர்றியா? அப்ப நானும் அப்படியே தான் இருப்பேன்.. எனக்கு இப்பவே குளுக்கோஸ் ட்ரிப்ஸ் எல்லாம் போட்டுவிட்டு போயிருக்காங்க.. அந்த அளவுக்கு நான் வீக்கா இருக்கேன். ஆல்ரெடி நான் சொன்ன மாதிரி நீ சமைச்சு கொடுத்தா மட்டும் தான் நான் சாப்பிடுவேன். உனக்கு உன் ஹஸ்பண்ட் மேல கொஞ்சமாவது லவ் இருந்தா, மம்மி அரேஞ்ச் பண்ண ஜெட்ல கிளம்பி ரஷ்யா வா. இன்னைக்கு நைட் நம்ம டின்னர் ஒன்னா சாப்பிடலாம்.” என்றான்.

“நீ எல்லாம் திருந்தவே மாட்ட அர்ஜுன்.. உங்க ஃபேமிலில இருக்கிற எல்லாருக்கும் உங்க இஷ்டத்துக்கு மத்தவங்கள ஆட்டி வச்சே பழகிருச்சு. அதான் நீயும் இப்படி இருக்க.. உன் ஹெல்த் ஸ்பாயில் ஆனா கூட பரவால்ல.. பட், நீ உன் பிடிவாத விடமாட்ட அப்படித் தானே!” என்று தேன்மொழி கோபமாக கேட்க, “உன்ன விட மாட்டேன்.. யாருக்காகவும், எதுக்காகவும் என்னால உன்ன விட முடியாது ஹனி. இந்த விஷயத்துல நீ என் என் மேல கோவப்பட்டா கூட பரவால்ல.. இங்க வந்து என் பக்கத்துல இருந்து என் மேல எவ்வளவு நாள் வேணாலும் கோவமா இரு. பட் ப்ளீஸ் தூரமா இருந்து என்ன டார்ச்சர் பண்ணாத டி! இப்படி எல்லாம் நான் யார் கிட்டயும் கெஞ்சினதே இல்லை தெரியுமா! என்னையே நீ இந்த அளவுக்கு சேஞ்ச் பண்ணிருக்க.. இது போதாதா உனக்கு? பிராமிசா உன்ன ஹாப்பியா வச்சிக்கிறதுக்கு நான் என்ன வேணாலும் பண்ணுவேண் டி. Trust me!” என்று கெஞ்சும் குரலில் சொன்னான் அர்ஜுன்.

“ஆமாமா என்ன வேணாலும் பண்ணுவ.. பட் நான் சொல்றத மட்டும் கேக்க மாட்ட! நீ என்ன ரொம்ப படுத்தற அர்ஜுன்!” என்று கோபமாக சொன்ன தேன்மொழி அதற்கு மேல் இவனிடம் பேசி பயனில்லை என நினைத்து அந்த அழைப்பை துண்டித்து விட்டாள்‌. அவள் மூளை ஜெட் வேகத்தில் இவனை என்ன செய்து சமாளிப்பது என்று யோசிக்க தொடங்கியது.

அப்போது அவள் மூலையில் திடீரென்று ஒரு ஐடியா பளிச்சிட, தன் கண்களின் ஓரத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு நார்மலான தேன்மொழி சாதாரணமாக வெளியில் சென்றாள். ஹாலில் நின்று கொண்டு இருந்தவர்கள் எல்லாம் இப்போது ஓர் அளவிற்கு கலைந்து அவரவருடைய வீட்டிற்கு சென்று இருந்தார்கள்.

அதனால் எந்த இடையூறும் இல்லாமல் நேராக கிச்சனுக்கு சென்ற தேன்மொழி சமைக்க தொடங்கினாள். அது மாலை நேரம் என்பதால் அப்போது ஆதவன் சரியாக காலேஜில் இருந்து வீட்டிற்கு வர, அவனைப் பார்த்தவுடன் வேகமாக அவன் அருகில் சென்ற ஆருத்ரா “மாமா வந்துட்டீங்களா? நான் உங்களுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். இன்னிக்கி ஒரு நியூ மூவி ரிலீஸ் ஆயிருக்கு.. உங்களுக்கு தெரியுமா? அந்த மூவிக்கு நீங்க, நானு, மம்மி, பாட்டி எல்லாரும் ஒன்னா தியேட்டருக்கு போலாமா?” என்று ஆர்வமான குரலில் கேட்டாள்.

ஓரமாக நின்று நடப்பதை பிரிட்டோ உடன் அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த கிளாரா “இங்க என்ன நடந்துட்டு இருக்குன்னு தெரியாம இவ தியேட்டருக்கு போலாமான்னு கேட்டுட்டு இருக்கா! ஜானகி மேடம் மிஸஸ் அர்ஜுன் என்ன ஆனாலும் இன்னைக்கு ரஷ்யா வந்து சேரனும்னு ஒரே பிடிவாதத்தில இருக்காங்க. தேன்மொழி மேடம்க்கு கிளம்புற ஐடியா இருக்கிற மாதிரியே தெரியல.. இப்ப நம்ம ரஷ்யா கிளம்பு போறோமா இல்லையா? இவங்க சண்டைக்கு நடுவுல நான் என் திங்ஸை பேக் பண்றதா வேண்டாம்ன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கேன்..!!” என்று சலிப்புடன் சொல்ல, “விடு, இப்ப chief நார்மலா தான் இருக்காரு. அடுத்து என்ன நடக்குதுன்னு வெயிட் பண்ணி பார்க்கலாம்.” என்றான் பிரிட்டோ.

அர்ஜுனுக்காக மீண்டும் ரஷ்
யா செல்வாளா தேன்மொழி?

-மீண்டும் வருவாள் 💕
 

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-76
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.